Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine Jan 2018! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


 1. #431
  saidevi's Avatar
  saidevi is offline Guru's of Penmai
  Real Name
  sarala devi
  Gender
  Female
  Join Date
  Mar 2014
  Location
  tn
  Posts
  5,086

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  Useful Information.Thanks for sharing friend.


  Sponsored Links

 2. #432
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,568

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:

  சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்
  வரக்கொத்தமல்லி --அரை கிலோ
  வெந்தயம் ---கால் கிலோ
  தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

  இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
  இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

  . சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.

  jv_66 and saidevi like this.

 3. #433
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,568

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  ஆவாரை cacsia auriculta

  "ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டீரோ"

  “சொல்லுதற்கு மட்டோ தொலையாத மேகநீ
  ரெல்லா மொழிக்கு மெருவகற்று - மெல்லவச
  மாவாரைப்பம்பரம் போல் லாட்டுத் தொழிலணங்கே
  யாவாரை மூலியது.”

  "மோகத்தினாலே விளைத்த சலம் வெட்டையனல்
  ஆகத்தின் பிண்ணோ டருங்கிராணி- போகத்தான்
  ஆவாரைப் பஞ்சகங் கொள் அத்தி சுரம் தாகமும் போல்
  எவாரைக் கண்மடமாதோ?"

  இது ஒரு மொத்த மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும். நமது உடலில் இருக்கும் பல மில்லியன் செல்களிலும் சேரும் கழிவுகளை நீக்க முடியாமல் போகும் போதுதான் வியாதிகள் வருகின்றன என்பது நமது கீழை நாட்டு வைத்திய தத்துவம் . இது வெற்றியடைந்தால் செல்களுக்கு அழிவில்லை. என்றும் இளமைதான்

  மதிப்புத்தேரியாமல் சாலைகளின் ஓரம் மஞ்சளாக பூப் பூத்து மண்டிக்கிடக்கிறது. இதன் அனைத்து பகுதிகளும் சிறந்த பலன் அளிக்கும் மருத்துவ குணம் உடையது. அதன் வேர் இலைகள் ,பூ ,கிளைகள் ,காய்கள் அனைத்தையும் சேர்த்து ஆவாரை பஞ்சக சூரணம் தயாரித்து அதை தொடர்ந்து உபயோகித்தால் சர்க்கரை வியாதி குணமாகிறது.

  இதன் பூக்களை காயவைத்து காலையில் ஆவரம் டீ தயாரித்து அருந்தலாம் . இதுவும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். இதனுடன் நாவற்பழத்தின் கொட்டையையும் சேர்த்து பயன் படுத்தலாம் .அதிக பயன் தரும் .

  உடலில் தேய்த்து குளித்தால் சிலர் மேனியில் வரும் மேனி வாடை போய் விடும் .சிறந்த தோல் காப்பான் .தொடர்ந்து பூசி குளித்து வர உடல் தங்கம் போல் ஆகும் .

  இது தோல் வியாதிகள் அனைத்தயும் தீர்க்கும் ஆற்றல் கொண்டது . ஆவாரம்பூ நீரிழிவு, வறட்சி, நாற்றம் ஆகியவற்றைப் போக்கும். இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகியவை நீரிழிவு, வெள்ளை, உட்கரு, புண், எலும்பைப் பற்றிய சுரம், நீர் வேட்கை போன்றவற்றை நீக்கும். பூவை வதக்கி கண் நோய்க்கு ஒத்தடமிடலாம். இதன் பூவை இனிப்புடன் கிளறி அல்வா செய்து சாப்பிட வெள்ளை, மூத்திர ரோகம், குறி எரிச்சல் நீங்கும். தகுந்த முறையில் உபயோகித்தால் நாம் முதுமையை வென்று ,நோயின் பிடியில் இருந்து தப்பி மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் .

  jv_66 and saidevi like this.

 4. #434
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,568

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  சைனஸ் பிரச்னை வராமல் எப்படித் தடுப்பது?

  1. சளி மற்றும் ஒவ்வாமை (அலர்ஜி)யால் ஏற்படும் மூக்கடைப்பு தொடர்ந்து இருக்குமானால் சிகிச்சை எடுத்துக்கொள்ளவும்.

  2. மதுப் பழக்கம், புகைப் பழக்கத்தைக் கைவிடவும். இது மூக்கில் உள்ள மெல்லிய சவ்வுகளைப் பாதித்து, வீங்கச் செய்யும்.

  3. ஒவ்வாமை இருக்குமானால், எதனால் ஏற்படுகிறது என்று கவனிக்கவும்.

  யோகா எவ்வாறு உதவுகிறது:

  1) ‘அம்’ மந்திர உட்சாடனை சைனஸ் பிரச்சனைகள் தீர உதவுவதுடன், வராமலும் தடுக்கிறது. உட்சாடனையின்போது ஏற்படும் அதிர்வுகள் சைனஸ்களில் கிருமிகள் சேராவண்ணம் தடுத்து, சைனஸ்களை ஆரோக்கியமாக்குகின்றன. இதனால் மூக்குக்கும் சைனஸ்களுக்கும் எவ்விதத் தடையும் இல்லாமல் காற்று சென்று வருகிறது. காற்று தடையில்லாமல் செல்வதால் சுரக்கப்படும் திரவங்கள் சைனஸ்களில் இருந்து எளிதாக அகற்றப்படுகின்றன.

  2) ஆசனம் மற்றும் மூச்சுப் பயிற்சிகள்: இவை அனைத்துமே உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், தளர்வு நிலையையும் அளிக்கின்றன. அது மட்டுமில்லாமல் உடலின் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிப்பதாக ஆரம்ப நிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவற்றை உடற்பயிற்சிபோல் செய்யாமல், தகுந்த விழிப்பு உணர்வுடன் மூச்சு, உடல் மற்றும் மனம் ஒருங்கிணைந்தாற்போல் இருக்குமாறு செய்ய வேண்டும். இவை மேற்கூறியது போல் சைனஸ்களின் காற்றோட்டத்தைப் பாதுகாக்கின்றன.

  3) யோகா, ரத்த ஓட்டத்தைச் சீர்செய்வதால் சைனஸ்களால் ஏற்படும் தலைபாரம், முகத்தில், கண்களில் வலி போன்றவற்றுக்கு உதவுகின்றன.

  4) ஹடயோகாவில் உள்ள ஹடகிரியைகளில் ஒன்றாகக் கருதப்படும் நேத்திக் கிரியைகள் சைனஸ் வியாதிகள் வராமல் தடுப்பதற்கும், அதில் இருந்து நிவாரணம் பெறவும் உதவுவதாகக் கூறப்படுகிறது.

  நேத்தி என்பது மூக்கு, தொண்டைப் பகுதியை, திரவம் அல்லது நூல்கொண்டு சுத்தம் செய்வது. இது சளியை அகற்றுவதுடன் சவ்வுகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, மூக்குக்கும் சைனஸ்களுக்கும் உள்ள தடையை அகற்றுகிறது. நேத்திக் கிரியைகளை சரியான முறையில் பயின்று பின்பற்றவும்!

  மிளகு, மஞ்சள், தேன்

  சளிப் பிரச்சனையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள 10 முதல் 12 முழு மிளகு எடுத்துக்கொள்ள வேண்டும். அதை உடைத்துக்கொள்ள வேண்டும், பவுடராக்கக் கூடாது. அதை 2 ஸ்பூன் தேனில் ஓர் இரவு அல்லது எட்டரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். காலையில் அதை எடுத்து மென்று தின்றால் சளி கரைந்துவிடும்.

  அல்லது மஞ்சளை இரண்டு ஸ்பூன் தேனில் கலந்து சாப்பிடலாம். அல்லது மிளகு, மஞ்சள் மற்றும் தேன் ஆகியவற்றைக் கலந்து சாப்பிடலாம். அனைத்துப் பால் பொருட்களையும் விட்டாலே சளி மிகவும் குறைந்துவிடும்.

  எந்தவித அலர்ஜியாக இருந்தாலும், தோல் அலர்ஜி என்று மட்டுமல்ல, வேப்பிலையை உருண்டை செய்து தேனில் நனைத்து முழுங்கிவர ஒவ்வாமை சரியாகும்.

  தினமும் தேன் சாப்பிடுவது சளி தொடர்பான பிரச்சனைகளுக்கு மிகவும் உதவி செய்யு

  jv_66 and saidevi like this.

 5. #435
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,568

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  சர்க்கரை நோயை தடுக்கும் கைக்குத்தல் அரிசி

  பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் கைக்குத்தல் அரிசியையே உணவிற்காக பயன்படுத்திவந்தனர். கைக்குத்தல் அரிசி எனப்படும் பாலீஸ் செய்யப்படாத அரிசியில் நார்ச்சத்தும் எண்ணற்ற வைட்டமின் சத்துக்களும், புரதச்சத்தும் அடங்கியுள்ளன. ஆனால் இன்றைக்கு அரிசியை பலமுறை பாலீஸ் செய்து எந்த சத்தும் இல்லாத வெறும் மாவுப்பொருளை மட்டுமே கொண்ட அரிசியை பயன்படுத்துகின்றனர். இதனால் உடலானது நோய்களின் கூடாரமாகிறது. பாலீஸ் செய்யப்படாத அரிசியை உணவாக உட்கொண்டால் நீரிழிவு, இதயநோய் உள்ளிட்ட நோய்களை தவிர்க்கலாம் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

  வைட்டமின் சத்துக்கள்

  பாலீஸ் செய்யப்படாத அரிசியில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி12, வைட்டமின் கே, வைட்டமின் இ, மாவுச்சத்து, புரதச் சத்துக்கள் நிரம்பியுள்ளன.
  முற்காலத்தில் உரலில் நெல்லை போட்டு உலக்கையால் அந்த நெல்லினை இடித்து அதன் உமியைப் பிரித்து சுத்தம் செய்து அந்த அரிசியை சமைத்து சாப்பிட்டனர். இந்த வகையில் எடுக்கப்படும் அரிசியில் தவிடு நீக்கப்படுவது இல்லை. இவ்வாறு அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் ஜீரணிக்கச் செய்யும்.

  நீரிழிவு வராது

  தவிடு நீக்காத அரிசியை சாப்பிடுவதால் அதன் பலன்கள் அனைத்தும் சரிசமமாக உடலுக்கு சேர்கிறது. இந்த அரிசியை உண்பதால் உணவு எளிதில் சீரணமடையும். மலச்சிக்கலைப் போக்கும், சிறுநீரை நன்கு பிரிக்கும். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் நீரிழிவு நோயின் தாக்கம் இருக்காது. இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். பித்த அதிகரிப்பை குறைக்கும். உடலில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்கும். சருமத்தைப் பாதுகாக்கும். வாத பித்த, கபத்தை அதனதன் நிலையில் வைத்திருக்கும்.

  இந்த தவிடு நீக்காத அரிசி இந்தியாவில் கேரளாவிலும், இலங்கையிலும் மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் இந்த அரிசியை பயன்படுத்துவது தற்போது வெகுவாக குறைந்துவிட்டது.

  jv_66 and saidevi like this.

 6. #436
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,568

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  சத்து நீக்கப்பட்ட அரிசி

  தமிழ்நாட்டில் அனைவருமே கண்ணைப் பறிக்கும் வெண்மையான அரிசியையே விரும்புகிறோம். இரண்டு மூன்று முறை பாலீஷ் செய்யப்பட்ட இவ்வகையான அரிசியில் உள்ள எல்லா வைட்டமின் சத்துக்களும் வெளியேற்றப்பட்டு விடுகிறது. இதில் நாவிற்கு சுவை மட்டுமே உண்டு. ஆனால் மாவுச்சத்தைத் தவிர வேறெந்த சத்துக்களும் கிடைப்பதில்லை.

  நோய்கள் அதிகரிப்பு

  இந்த அரிசியை சமைத்து உண்பதால் மாவுச் சத்து அதிகம் உடலில் சேருகிறது. ஆரம்பத்தில் அந்த மாவுச்சத்தைக் கட்டுப்படுத்த உடலில் இன்சுலின் சுரப்பு அதிகமாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இன்சுலின் சுரப்பு குறைவதால் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

  கைக்குத்தல் அரிசி தற்போது அதிகம் கிடைப்பதில்லை. உமி நீக்கி பாலீஷ் செய்யாத அரிசியை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். நாவிற்கு ருசி, தொண்டைவரை, ஆனால் பலன் ஒன்றுமில்லை. ஆரோக்கிய உடலுக்கு கைக்குத்தல் அரிசி சிறந்தது. பாலீஷ் செய்த வெள்ளை அரிசி சத்தற்றது. எனவே அவற்றை சாப்பிடுவதை குறைத்து தவிடு நீக்காத அரிசியை வாங்கி உண்பதே ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

  jv_66 and saidevi like this.

 7. #437
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,568

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  உயிர்ச்சத்து… வைட்டமின் A

  வைட்டமின் என்ற வார்த்தையை பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை சாதாரணமாகபயன்படுத்துவதைப் பார்க்கிறோம். ஆனால், அவர்களில் அதன் முக்கியத்துவத்தைஉணர்ந்தவர்கள் எத்தனை பேர்?
  உடல் உயிரால் இயங்குகிறது என்றால், அந்த உயிர் வைட்டமின்களால்இயக்கப்படுகிறது எனலாம். எனவேதான் அதனை உயிர்ச்சத்து (Vitamin) என்றுமருத்துவ உலகம் மதிப்புடன் அழைக்கிறது. நாம் உட்கொள்ளும் உணவுகளில் உள்ளசத்துக்கள் நீரிலும், கொழுப்பிலும் கரைந்து, ரத்தத்தில் கலந்து நம்உயிருக்கு ஆதாரமாகின்றன. இவற்றைத்தான் வைட்டமின்கள் என்கிறோம். 1901ம்ஆண்டு பேராசிரியர் ஹப்கின்ஸ் என்பவர் உடலில் இத்தகைய உயிர்ச்சத்துக்கள்இருப்பதைக் கண்டுபிடித்தார்.
  இவற்றில் பி மற்றும் சி வைட்டமின்கள் நீரில் கரையும் பண்புள்ளவை. ஏ, டி,இ, கே ஆகிய வைட்டமின்கள் கொழுப்பில் கரையும் தன்மை கொண்டவை..

  saidevi likes this.

 8. #438
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,568

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  நவீன மருத்துவத்தின் தந்தையாக கருதப்படும் ஹிப்போ கிரேட்ஸ் என்பவர்மாலைக்கண் நோயாளிகளுக்கு விலங்குகளின் கல்லீரலைக் கொடுத்து குணமாக்கிஉள்ளார். இதன் பின்னர்தான், விலங்குகளின் கல்லீரலில் வைட்டமின் ‘ஏ’ அதிகஅளவு இருப்பது கண்டறியப்பட்டது.
  பின்னர் 1917ம் ஆண்டு மெக்கெல்லம் மற்றும் டேவிஸ் என்ற இருவரும்வெண்ணெயில் இருந்து எடுக்கப்படும் ஒருவித பொருளானது எலிகளின்வளர்ச்சியைத் தூண்டுவதாக கண்டறிந்தனர். இதற்கு ஸ்டன்பேக் என்பவர்கரோட்டினாய்ட்ஸ் என்று பெயரிட்டார். 1931 ம் ஆண்டு காரர் என்பவரால்வைட்டமின் ஏயின் மூலக்கூறுகள் கண்டறியப் பட்டன. 1937ம் ஆண்டு கான் மற்றும்மோரிஸ் என்ற இருவரும் வைட்டமின் ‘ஏ’-யை பிரித்தறிந்து நிறுவினர்.
  வைட்டமின் ‘ஏ’ கீழ்க்காணும் நிலைகளில் காணப்படுகிறது
  ரெட்டினல் (Retinal)
  ரெட்டினால் (Retinol)
  ரெடினோயிக் அமிலம் (Retionic acid)
  பி கரோட்டின் (B-Carotene)
  வைட்டமின் ‘ஏ’-யின் குணங்கள் என்ன? நம் உடலின் நலத்திற்கு எந்த வகையில் எல்லாம் உதவுகிறது?
  · பார்வைக் குறைபாட்டைப் போக்கி கண் பார்வையை தெளிவுபடுத்தும்.
  · மாலைக் கண் நோயைப் போக்கும் அல்லது வராமல் தடுக்கும்.
  · வண்ணங்களைப் பிரித்தறிவதற்கு ‘ஏ’-வைட்டமின் உதவுகிறது.
  · எலும்பு வளர்ச்சிக்கு வைட்டமின் ‘ஏ’ உதவுகிறது.
  · இயல்பான உடல் வளர்ச்சிக்கு வைட்டமின் ‘ஏ’ சத்து முக்கியமானது. இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சிக்கு வைட்டமின் ‘ஏ’ உதவுகிறது.
  · எபிதீலியல் செல்களின் செயல்பாடுகளை சீராக்குகிறது. உணவு மண்டலம் மற்றும்கழிவு நீக்க மண்டலத்தின் குழாய்களில் “மியூகஸ்” என்னும் சுரப்பிற்கு இந்தவைட்டமின் காரணமாகிறது.
  · இரும்புச்சத்தை அதிகரிக்க உதவுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் ‘ஏ’ உதவுகிறது.
  · கொழுப்புப் பொருட்களின் வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுகிறது.
  · வைட்டமின் ‘ஏ’-ல் உள்ள கரோட்டினாய்டு என்ற பொருள் ஆக்ஸிஜன் ஏற்றத்தைத்தடுப்பதற்கு பயன்படுகிறது. இதன் மூலம் புற்றுநோய் மற்றும் இதய நோய்போன்றவை தடுக்கப்படுகின்றன.
  · தோல் நோய்கள் வராமல் தடுக்கிறதுநவீன மருத்துவத்தின் தந்தையாக கருதப்படும் ஹிப்போ கிரேட்ஸ் என்பவர்மாலைக்கண் நோயாளிகளுக்கு விலங்குகளின் கல்லீரலைக் கொடுத்து குணமாக்கிஉள்ளார். இதன் பின்னர்தான், விலங்குகளின் கல்லீரலில் வைட்டமின் ‘ஏ’ அதிகஅளவு இருப்பது கண்டறியப்பட்டது.
  பின்னர் 1917ம் ஆண்டு மெக்கெல்லம் மற்றும் டேவிஸ் என்ற இருவரும்வெண்ணெயில் இருந்து எடுக்கப்படும் ஒருவித பொருளானது எலிகளின்வளர்ச்சியைத் தூண்டுவதாக கண்டறிந்தனர். இதற்கு ஸ்டன்பேக் என்பவர்கரோட்டினாய்ட்ஸ் என்று பெயரிட்டார். 1931 ம் ஆண்டு காரர் என்பவரால்வைட்டமின் ஏயின் மூலக்கூறுகள் கண்டறியப் பட்டன. 1937ம் ஆண்டு கான் மற்றும்மோரிஸ் என்ற இருவரும் வைட்டமின் ‘ஏ’-யை பிரித்தறிந்து நிறுவினர்.
  வைட்டமின் ‘ஏ’ கீழ்க்காணும் நிலைகளில் காணப்படுகிறது
  ரெட்டினல் (Retinal)
  ரெட்டினால் (Retinol)
  ரெடினோயிக் அமிலம் (Retionic acid)
  பி கரோட்டின் (B-Carotene)
  வைட்டமின் ‘ஏ’-யின் குணங்கள் என்ன? நம் உடலின் நலத்திற்கு எந்த வகையில் எல்லாம் உதவுகிறது?
  · பார்வைக் குறைபாட்டைப் போக்கி கண் பார்வையை தெளிவுபடுத்தும்.
  · மாலைக் கண் நோயைப் போக்கும் அல்லது வராமல் தடுக்கும்.
  · வண்ணங்களைப் பிரித்தறிவதற்கு ‘ஏ’-வைட்டமின் உதவுகிறது.
  · எலும்பு வளர்ச்சிக்கு வைட்டமின் ‘ஏ’ உதவுகிறது.
  · இயல்பான உடல் வளர்ச்சிக்கு வைட்டமின் ‘ஏ’ சத்து முக்கியமானது. இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சிக்கு வைட்டமின் ‘ஏ’ உதவுகிறது.
  · எபிதீலியல் செல்களின் செயல்பாடுகளை சீராக்குகிறது. உணவு மண்டலம் மற்றும்கழிவு நீக்க மண்டலத்தின் குழாய்களில் “மியூகஸ்” என்னும் சுரப்பிற்கு இந்தவைட்டமின் காரணமாகிறது.
  · இரும்புச்சத்தை அதிகரிக்க உதவுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் ‘ஏ’ உதவுகிறது.
  · கொழுப்புப் பொருட்களின் வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுகிறது.
  · வைட்டமின் ‘ஏ’-ல் உள்ள கரோட்டினாய்டு என்ற பொருள் ஆக்ஸிஜன் ஏற்றத்தைத்தடுப்பதற்கு பயன்படுகிறது. இதன் மூலம் புற்றுநோய் மற்றும் இதய நோய்போன்றவை தடுக்கப்படுகின்றன.
  · தோல் நோய்கள் வராமல் தடுக்கிறது


 9. #439
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,568

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  தினமும் உணவில் உலக சுகாதார நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட வைட்டமின் ‘ஏ’ ன் அளவு
  பெரியவர்கள் ஆண்கள் – 600 mcg
  பெரியவர்கள் பெண்கள் – 600 mcg
  கர்ப்பிணிப் பெண்கள் – 600 mcg
  பாலூட்டும் தாய்மார்கள் – 950 mcg
  குழந்தைகளுக்கு 12 மாதம் வரை – 350 mcg
  1 முதல் 6 வயது வரை – 400 mcg
  7 முதல் 19 வயது வரை – 600 mcg
  வைட்டமின் ‘ஏ’ சத்து மிகுந்துள்ள பொருட்கள்
  ஈரல், முட்டையின் வெள்ளைக் கரு, பால், நெய், வெண்ணெய், மீன் போன்றவிலங்கின பொருட்களிலும், மஞ்சள் மற்றும் பச்சை நிற காய்கறிகள், பழங்கள்தக்காளி உள்ளிட்ட தாவரப் பொருட்களிலும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது.


 10. #440
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,568

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  வைட்டமின் ‘ஏ’- எந்தப் பொருட்களில் எத்தனை சதவீதம் உள்ளது.
  காரட் – 93 %
  பிரகோலிட் இலை – 93 %
  சர்க்கரை வள்ளிக்கிழங்கு – 79 %
  வெண்ணெய் – 76 %
  பசலிக்கீரை – 52 %
  பரங்கிக்காய் – 41 %
  முட்டை – 16 %
  பப்பாளி – 6 %
  மாம்பழம் -4 %
  பட்டாணி – 4 %
  வைட்டமின் ‘ஏ’ சத்து குறைந்தால்..
  உலக அளவில் 2.5 முதல் 5 லட்சம் குழந்தைகள் வரை வைட்டமின் ‘ஏ’ சத்துக்குறைவினால் பாதிக்கப் பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கணக்கிட்டுள்ளது.தென்கிழக்கு ஆசியாவில் உள்ள வளரும் நாடுகளில் வைட்டமின் ஏ சத்துக்குறைவால், பிறக்கும்போதே கண்பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் குழந்தைகள்பிறப்பதாக மேலும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter