Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #501
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    A BananaA Day Keeps The Acid Reflux At Bay:
    Bananashave a natural antacid effect in the body, so if you suffer from heartburn, tryeating a banana for soothing relief.


    Sponsored Links

  2. #502
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    திராட்சையின் மருத்துவ குணம்

    ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன.
    ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி திராட்சைக்கு உண்டு.
    உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் மாமருந்தாகிறது திராட்சை பழம்.
    திராட்சையை உண்பதால் உடல் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், முளை, நரம்புகள் வலுப்பெறும்.
    ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும்.
    பசி இல்லாதவர்கள் அடிக்கடி திராட்சையை சாப்பிட வேண்டும். அது பசியைத் தூண்டி விடும். குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.
    திராட்சைப் பழச் சாற்றை வெந்நீரில் கலந்து குடித்து வர சுரம், நாவறட்சி நீங்கும்.
    திராட்சைப் பழத்துடன் மிளகை அரைத்து சாப்பிட்டு வர சுரம், நாவறட்சி நீங்கும்.
    சொட்டு சொட்டாக நீர் பிரிதல், நீர் தாரை எரிச்சல் போன்றவை திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
    உடல் அசதிக்கும், பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கும் திராட்சைப் பழம் ஏற்றது.

    umasaravanan likes this.

  3. #503
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,241

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    Hi chan....

    Usefull information....nice sharing...Thank you pa...


  4. #504
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நோய் எதிர்ப்பு சக்திக்கு புளுபெர்ரி சாப்பிடுங்க!
    புளுபெர்ரி என்று அழைக்கப்படும் அவுரிநெல்லி பழங்கள் நீலநிறத்தில் காணப்படுகிறது.. இதன் பூக்கள் மணி வடிவத்தில் வெள்ளை, இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். இதன் தாயகமாக பிரிட்டிஸ், கொலம்பியா போன்ற நாடுகள் கருதப்படுகிறது. இது கொழுப்பை குறைக்க, ரத்த அழுத்தம், இதய பாதுகாப்பு, போன்றவற்றிக்கு பெரிதும் உதவுகிறது.

    நோய் எதிர்ப்பு சக்தி

    இயற்கையின் கொடையில் மிகச்சிறந்த உணவாக கருதப்படும் புளுபெர்ரி, வேறு எந்த பழங்கள், காய்கறிகளை விட அதிக அளவு ஆண்டியாக்ஸிடண்ட்களை கொண்டுள்ளது என்று ஆய்வுகளின் முடிவில் தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.. நீலநிறத்தில் காணப்படும் புளுபெர்ரி பழம் நீலநிறமாவதற்கு தேவையான ஆண்டியாக்ஸிடன்ட்களை அதிகளவு கொண்டுள்ளது. மேலும், இதில் பைபர் மற்றும் வைட்டமின் சி ஊட்டசத்துகள் நிறைந்துள்ளது. இது இதயத்தில் உண்டாககூடிய நோய்களை தடுக்கிறது.

    வயிற்று கொழுப்பை குறைக்க

    நீலநிறத்தில் காணப்படும் புளுபெர்ரி பழமானது எடை குறைப்புக்கு பெரிதும் உதவுகிறது. உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் புளுபெர்ரி பழங்களை சாப்பிடலாம். இப்பழத்தை உட்கொள்வதால் வயிற்றில் உள்ள கொழுப்புகளை அகற்றி உடலை பாதுகாக்கிது. சிலர் தொப்பையை குறைக்க முடிவதில்லை என கவலைப்படுவது உண்டு. அவர்கள் உலர்ந்த புளுபெர்ரியை சாப்பிட்டு தொப்பைக்கு டாடா காட்டிவிடலாம். ஏனெனில் இப்பழத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகள் இரத்ததில் உள்ள தேவையற்ற கொழுப்பை அகற்றி சிக்கென்று உடலை வைத்துக்கொள்ள உதவி புரிகிறது.

    உயர் இரத்த அழுத்தம் தடுக்க

    நீல மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும் பழங்கள் அனைத்திலும் அந்தோசியனின்கள் உள்ளது. உயர் இரத்த அழுத்தத்திற்கு எதிராக இந்த நிறமிகள் போராடி உடல் நலத்தை பாதுகாக்கிறது. புளுபெர்ரியை வைத்து மேற்கொண்ட ஒரு ஆய்வில் 134000 பெண்கள் மற்றும் 23000 ஆண்கள் சோதனைக்கு உட்படுத்தபட்டனர். அவர்களுக்கு வாரத்திற்கு 1/2 கப் பழங்கள் கொடுக்கப்பட்டது. அதில் அவுரிநெல்லி பழங்களை சாப்பிட்டவர்களுக்கு இரத்த அழுத்தமானது, பழங்களை உட்கொள்ளாதவர்களை விட குறைவாக உள்ளது கண்டறியப்பட்டது.

    மூளை பராமரிப்பு

    புளுபெர்ரி பழத்தில் உள்ள அந்தோசியனின்கள் மூளையின் நரம்பு சம்பந்தப்பட்ட அனைத்து தொடர்புகளையும் இணைத்து அதிகரிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. புளுபெர்ரி பழச்சாற்றை வயதானவர்கள் தினமும் எடுத்துக்கொள்ளவதால் அவர்களது ஞாபகசக்தி மாறுபடுகிறது என்று சின்சின்னாட்டி அகாடமிக் ஹெல்த் சென்டர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 12 வாரங்களுக்கு பிறகு பழச்சாற்றை பருகினவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும் திறன் மேலும் வளர்ச்சியடைந்துள்ளது என்றும் தகவல் அளித்துள்ளனர்.


  5. #505
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்..!
    அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட் இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணுகின்றனர். பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.

    ஒரு 100 கிராம் பீட்ரூட்டில் தண்ணீர் 87.7 விழுக்காடும், புரோட்டின் 17 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 0.8 விழுக்காடும், நார்ச்சத்து 0.9 விழுக்காடும், கார்போஹைட்ரேட் 8.8 விழுக்காடும் உள்ளது. மற்றும் கால்சியம் 18 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 5.5 மில்லிகிராமும், இருப்பு 10 மில்லிகிராமும், வைட்டசின் சி 10 மில்லிகிராமும் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6 நியாசின் வைட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், சல்வர், க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன.

    பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.

    கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

    பல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

    தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

    புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.

    பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டுமே பிடிக்கும். குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும். இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஆனால் இதற்கென்று பிரத்யேக மருத்துவப் பயன்கள் உண்டு.


  6. #506
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

    2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

    3. பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும்.

    4. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.

    5. பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.

    6. பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். இரத்த சோகையை குணப்படுத்தும்.

    7. பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.

    8. பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

    9. பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.


  7. #507
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பீட்ரூட்டின் பயன்கள்

    * புற்றுநோய் பரவுவதை தடுக்கும்.
    * மலச்சிக்கலைப் போக்கும்.
    * பித்தத்தைக் குறைக்கும்
    * அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும்.
    * கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்


  8. #508
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ரத்தக் கொதிப்பு எனும் சைலன்ட் கில்லர்

    பி.பி. (Blood pressure) என்ற வார்த்தையைக் கேட்டாலே பி.பி. ஏறுகிற அளவுக்கு இன்றைக்கு மிகப் பெரிய பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது பி.பி. என்கிற ‘ரத்த அழுத்த நோய்’ அல்லது ‘ரத்தக் கொதிப்பு’. கடந்த ஐம்பது ஆண்டுகளாக நம் நாட்டில் ரத்தமிகு அழுத்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இவர்களில் பெரும்பாலானோருக்கு தங்களுக்கு ரத்தமிகு அழுத்த நோய் உள்ளது என்ற உண்மை தெரியாது என்பது தான் மிகப்பெரிய சோகம்.

    டயபடீஸ் என்று சொல்லப்படுகிற நீரிழிவுக்கு இணையாக இன்றைக்கு பெரும்பாலானவர்களைப் பீடித்திருக்கிறது இந்த பி.பி. இது பற்றி விழிப்புணர்வு இல்லாமலே இந்நோய்க்கு பலியாகிறார்கள் பாமர மக்கள். இத்தனைக்கும் புற்றுநோய் போன்ற கொடிய நோய் அல்ல இது. முறையான உணவுப்பழக்கம் மற்றும் தவறாமல் மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு வந்தால் எந்தப் பிரச்னையும் இல்லாமல் நீடூழி வாழ முடியும்.தேவை ‘ரத்த அழுத்த நோய்’ குறித்த விழிப்புணர்ச்சிதான்.

    ரத்த அழுத்தம் என்றால் என்ன? அது கூடினாலோ, குறைந்தாலோ என்ன செய்யும்?

    எல்லா சந்தேகங்களுக்கும் பதிலளிக்கிறார் பொது மருத்து வரும், ஆதரவு சிகிச்சை நிபுணருமான ரிபப்ளிகா.ஒவ்வொரு முறையும் இதயம் சுருங்கி விரிந்து ரத்தத்தை உடலின் எல்லா பாகங்களுக்கும் அனுப்புகிறது. இதயம் இயங்கும்போது குழாய்களில் உள்ள ரத்தம் அவற்றின் உள்பகுதியில் ஒருவகையான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதைத்தான் ரத்த அழுத்தம் என்று சொல்கிறோம். ஆரோக்கியமாக இருக்கும் ஒரு மனிதனின் ரத்த அழுத்தம் 120/80 mmHg என்ற அளவில் இருப்பதுதான் இயல்பான நிலை.

    ரத்த நாளங்களில் உள்ள ரத்த அழுத்தம் தேவையைவிட மிக அதிகமாக உயர்ந்திருப்பதை ‘ரத்த அழுத்த நோய்’ அல்லது ‘ரத்தக் கொதிப்பு’ என்கிறோம். இதைக் கண்டுபிடித்து குணப்படுத்தாவிட்டால் ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தும். பொதுவாக இந்நோய் வெளியே தெரியாது. சில வேளைகளில் மிகப் பெரிய பாதிப்பை அல்லது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய பிறகே கண்டு பிடிக்கப்படும். எனவே, இதனை ‘சைலன்ட் கில்லர்’ என்றும் சொல்லலாம்.

    இதயம் ஒவ்வொருமுறை சுருங்கி விரியும்போதும் ரத்தக்குழாய்களில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த அழுத்தம் இரண்டு வகைப்படும். அதாவது, இதயம் சுருங்கும் போது ஒருவகையான அழுத்தத்தையும் விரியும்போது ஒரு வகையான அழுத்தத்தையும் ரத்தக் குழாய்களில் ஏற்படுத்துகிறது. இதயம் சுருங்கும்போது உண்டாகும் அழுத்தத்தை சுருங்கழுத்தம் (Systolic Pressure) என்றும் இதயம் விரிவடையும்போது ஏற்படும் அழுத்தத்தை விரிவழுத்தம் (Diastalic Pressure) என்றும் இரண்டு வகைகளாகப் பிரித்துள்ளனர். 120/80 என்பதில், 120 என்ற அளவு சுருங்கழுத்தத்தையும் 80 என்ற அளவு விரிவழுத்தத்தையும் குறிக்கிறது. ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவுக்கு மேல் இருக்கும் நிலையைத்தான் ரத்தமிகு அழுத்த நிலை (Hypertension) எனப்படுகிறது.

    ஏன் வருகிறது?

    90 சதவிகிதம் பேருக்கு காரணம் ஏதுமின்றி ரத்த அழுத்தம் வருகிறது. மீதமுள்ள 10 சதவிகிதம் பேர் சிறுநீரகங்களில் பாதிப்பு, நாளமில்லாச் சுரப்பிகள், மூளை மற்ற காரணங்களினாலும் ரத்தக் கொதிப்பு நோய்க்கு ஆளாகிறார்கள். இது தவிர சிலருக்குத் தற்காலிக ரத்த அழுத்தம் வரலாம். மனநிலையில் ஏற்படுகிற மாறுதல்கள், ஓய்வு நிலை, கர்ப்ப காலம் என இதன் பின்னணி யில் பல காரணங்கள் இருக்கலாம். வயதானவர்களுக்கும் நீரிழிவு, பருமனால் பாதிக்கப்பட்டோருக்கும் ரொம்பவும் மன அழுத்தம் தருகிற வேலையில் ஈடுபடுவோருக்கும் இந்த ரத்த அழுத்தமானது நிரந்தரமாகத் தங்கி விடுவதும் உண்டு.


  9. #509
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    என்னென்ன பரிசோதனைகள்?

    சிறுநீர் பரிசோதனை அவசியப்படும். இதன் மூலம் சிறுநீரகங்கள் பழுதடைந்துள்ளனவா என்பதை ஓரளவு அறியலாம். ரத்தத்தில் சர்க்கரை நோயும் ரத்த அழுத்தமும் சேர்ந்து இருந்தால் மாரடைப்பு உள்ளிட்ட வேறு சில நோய்களும் வரும் வாய்ப்புகள் அதிகம். தேவையைப் பொறுத்து இசிஜி, எக்கோ, ஆஞ்சியோகிராம் போன்றவையும் பரிந்துரைக்கப்படும்.

    கட்டுப்படுத்த என்ன வழி?

    உணவில் உப்பைக் குறைப்பதே முதல் அறிவுரை.
    உப்பு அதிகமுள்ள ஊறுகாய், கருவாடு, அப்பளம், சிப்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். உப்பானது, உடலில் நீரை தங்கச் செய்து இதயத்தை பலமிழக்கச் செய்யும். கை, கால்களை வீங்கச் செய்யும்.

    கொழுப்பு அதிகமுள்ள வெண்ணெய், நெய், எண்ணெய், இனிப்பு, சாக்லெட், ஐஸ்க்ரீம், க்ரீம், சீஸ் போன்றவற்றைத் தவிர்க்கவும். உடற்பயிற்சியைத் தவறவிடக் கூடாது. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது வேகமாக நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இது உடலில் கொழுப்புச் சத்து சேர்வதைத் தவிர்த்து விடுவதுடன் ரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.

    புகை மற்றும் மதுப் பழக்கங்களுக்கு உடனடி யாக விடை கொடுக்க வேண்டும். இந்த இரண்டு பழக்கங்களும் ரத்த அழுத்தத்தை அதிகரித்து, மாரடைப்புக்குக் காரணமாகலாம். ஜாக்கிரதை!

    எந்த நோய்க்குமே சுய மருத்துவம் என்பது தவறு. குறிப்பாக ரத்த அழுத்தப் பிரச்னைக்கு நீங்களாக மருந்து வாங்கி சாப்பிடுவது உயிருடன் விளையாடுவதற்கு சமமானது. மருத்துவரின் ஆலோசனையின்றி அவர் சிபாரிசு செய்யும் மருந்துகளின் அளவை நீங்களாகவே குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ கூடாது. ஒரு முறை எழுதிக் கொடுத்த மருந்தை வாழ்நாள் முழுவதும் உபயோகிக்கக் கூடாது. அடிக்கடி மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று தேவைக்கு ஏற்ப மருந்துகளை அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்ய வேண்டும்.

    ரத்த அழுத்தத்தின் அளவை அவ்வப்போது முறையாக பரிசோதிக்க வேண்டும். பரபரப்பான வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளுங்கள். மனதுக்கும் உடலுக்கும் போதுமான ஓய்வு கொடுங்கள். ரத்த அழுத்த நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிட்டால் அது மாரடைப்பு, மூளை பாதிப்புகளை ஏற்படுத்தி, உயிரிழக்கச் செய்யலாம்.


  10. #510
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    எவ்வளவு இருக்க வேண்டும்?

    இயல்பு நிலையில் இதயத்தின் சுருங்கிய அழுத்தம் 120 mmHg ஆகவும் இதயத்தின் விரிந்த இயக்க அழுத்தம் 80 mmHg ஆகவும் இருக்க வேண்டும். அதாவது, 120/80 mmHg என்றிருக்க வேண்டும். ஆனால், 140/90 mmHg க்கு அதிகமாக ரத்த அழுத்த அளவீடு இருக்குமானால் அது உயர் ரத்த அழுத்தமாகும். இதையே ஹைப்பர் டென்ஷன் என்கிறோம்


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter