Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.

  1. #521
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அறுசுவை உணவும்… அருமருந்தும்…!

    ஆரோக்கியமும், நோயும்… நாம் உண்ணும் உணவை பொறுத்தே அமைகின்றன. தவறான உணவுகளை உண்ணும்போது அஜீரணம் உண்டாகி, அதனால் உடம்பில் பிரச்சினைகள் தோன்றுகின்றன. இதனால் உடலில் நச்சுத் தன்மை அதிகரித்து நோய்கள் உடம்பை தாக்குகின்றன.
    பழங்காலத்தில் உணவு உண்ணுவதை ஒரு பூஜை போல் கருதினார்கள். சூரியன் உதயமான பின்னர் ஒருமுறையும், சூரியன் மறைந்த பின்னர்
    ஒருமுறையும் உணவு சாப்பிட்டனர். இடையில் காபி, டீ மற்றும் நொறுக்குத் தீனிகளை அவர்கள் சாப்பிடவில்லை. பலகாரங்கள், படங்களை ஏதாவது ஒரு பண்டிகையின் போது சமைத்து உண்டார்கள்.
    தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் சாப்பிடும் எண்ணை பலகாரங்கள் ஜீரணிக்க… தீபாவளி லேகியம் சாப்பிட்டனர். நாம் சாப்பிடும் உணவு சரியாக செரிக்காவிட்டால் தான் பல நோய்கள் நமக்கு வருகின்றன.
    நாம் சாப்பிடும் தவறான உணவு முறைகளால்தான் சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதைத்தான் வள்ளுவர், உணவின் பெருமைகளையும், தவறான உணவினால் வரும் நோய்களையும் விளக்கமாக கூறியுள்ளார். மேலும் நாம் சாப்பிடும் உணவானது நமது மனச் செயல்பாட்டையும் நிர்ணயிக்கிறது.
    அமைதியான வாழ்க்கைக்கு சாத்வீக குணம் நிறைந்த உணவுகளும், உணர்ச்சி நிறைந்த வாழ்க்கைக்கு ரஜோ குணம் நிறைந்த உணவுகளும், அறியாமையில் முழ்குவதற்கு தமோ குணம் நிறைந்த உணவுகளும் காரணமாகின்றன என்று ஆயூர்வேதத்தில் கூறப்படுகிறது.
    இயற்கையில் நமக்கு இரண்டு நோய்கள் உண்டு. அது பசி, நீர்வேட்கை. இதில் பசியை தணிப்பதற்கு உணவு மருந்தாகவும், நீர் தாகத்தைத் தணிக்கும் மருந்தாக தண்ணீரும் உள்ளன. பழங்காலத்தில் மனிதன் பலவிதமான உணவுகளையும், மாமிசங்களையும் மற்றும் காய்கறி, கனிகளையும் சாப்பிட்டு வாழ்ந்தான் என்றாலும், அவனுடைய உடல் உழைப்பு அனைத்தையும் சமன் செய்தது. இயற்கையைச் சார்ந்தே மனிதனுடைய உணவு அமைந்திருக்கிறது. உடம்பு உயிரைத் தாங்க வேண்டுமெனில் அதற்கு உணவு வேண்டும். இன்றைக்கு உணவு முறைகள் மாறிவிட்டன.
    நமது நாட்டில் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான உணவு வகை இருந்து வருகிறது. வடக்கே கோதுமையை உண்கிறார்கள். சோறு மற்றும் காய்கறிகளையும் சில இடங்களில் சாப்பிடுகின்றனர். மகாராஷ்டிராவில் கோதுமை, சோளம், ராகி, கம்பு இவற்றால் செய்த ரொட்டி, அடை போன்றவை முக்கிய உணவு.
    கர்நாடக மாநிலத்தில் நெல், சோளம், கம்பு, தினை, ராகி, சாமை முதலியவற்றை பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் அரிசியும், சோளமும் முக்கிய உணவு என்றாலும் நாம் அரிசியை அதிகமாக பயன்படுத்தி வருகிறோம்.
    சிறந்த உணவை சரியான வேளையில் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும், மனதில் புத்தி சாமர்த்தியமும், நற்பண்புகளும் உண்டாகின்றன. எந்த நோயும் அணுகாது. ஆயர்வேதத்தில் உணவுகள் அனைத்தும் அறுசுவையை அடிப்படையாக கொண்டுள்ளன. அறுசுவை பஞ்ச பூதங்களை ஆதாரமாகக் கொண்டுள்ளது. பிறந்தது முதல் உடலுக்கு இனிப்புச் சுவை ஏற்றதாக இருக்கிறது.

    Sponsored Links

  2. #522
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பொதுவாக இனிப்புச் சுவை உடலுக்கு பலத்தை அளிக்கும். எலும்புருக்கி நோயாளிகளுக்கு நல்லது. உடலை பருக்கச் செய்யும்.
    புளிப்புச் சுவை பசியைத் தூண்டும். இருதயத்திற்கு நல்லது. ருசியை உண்டாக்கும். உஷ்ணவீரியம் உடையது. உவர்ப்பு பசியைத் தூண்டும். வேர்வையை உண்டாக்கும். அதிகமாக உப்பை சேர்த்தால் ரத்தக் கொதிப்பு அதிகரிக்கும்.
    கசப்புச் சுவை கொழுப்பை வற்ற வைக்கும். மலம், சிறுநீரை குறைக்கும். எளிதில் ஜீரணமாகும். குளிர்ச்சியானது, தொண்டையை சுத்தம் செய்யும்.
    காரம் தோல்தடிப்பு, வீக்கம், தொண்டை நோய் ஆகியவற்றை போக்கும். கொழுப்பை உலரச் செய்யும். துவர்ப்பு வாதத்தை அதிகரிக்கும். பித்த கபங்களைக் குறைக்கும். ஆனால் எளிதில் ஜீரணமாகாது. ரத்தத்தை சுத்தம் செய்யும். கொழுப்பைக் குறைக்கும்

  3. #523
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கடுகு, கிராம்பு, ஏலக்காய் தினமும் பயன்படுத்தினால் என்ன?

    உணவு வகைகளில் பல்வேறு மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் வாசனை பொருட்களாக முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்.
    அவை, உணவுக்கு வாசனை மட்டுமல்லாமல், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருபவை. அந்த வாசனைப் பொருட்களை, தற்போதும் சமையலில் பயன்படுத்தி வந்தாலும், அவற்றின் மருத்துவ குணங்கள் குறித்து பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பதில்லை. உணவில் பயன்படுத்தும் வாசனைப் பொருட்கள் குறித்து, இந்திய பயிர் பதன தொழில் நுட்ப கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:
    பட்டை: செரிமானத்திற்கு உதவுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, திசுக்களை பலப்படுத்தும் தன்மை வாய்ந்தது. தசை பிடிப்பு, மூட்டு வலி, மாதவிடாய் பிரச்னை ஆகியவற்றை தீர்க்கவும், பல்சொத்தை, ஈறுகளில் வலி, சிறுநீரக பிரச்னைகள் ஆகியவற்றை தவிர்க்கவும் உதவுகிறது. இதில் உள்ள சின்னமிக் அமிலம் உணவை பதப்படுத்த உதவுகிறது.
    ஜாதிக்காய்: பல்வலி, தூக்கமின்மை, தசைப்பிடிப்பு, செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு, மூட்டுவலி, ஆண்மையின்மை ஆகியவற்றை குணப்படுத்துகிறது. ரத்த ஓட்டம், ஒருமனப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கிறது. ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு சத்து ஆகியவற்றை குறைக்க உதவுகிறது.
    கிராம்பு: நுரையீரல் தொடர்பான நோய், காயங்களினால் திசுக்களில் ஏற்படும் வலி ஆகியவற்றை குணப்படுத்துகிறது. குடலில் உள்ள ஒட்டுண்ணி, பூஞ்சை, பாக்டீரியாக்களை அழிக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
    இஞ்சி : மலச்சிக்கல், வயிற்று கோளாறு ஆகியவற்றை போக்குகிறது. நோய் எதிர்ப்பு தன்மை மற்றும் காயங்கள் ஆறும் தன்மையை அதிகரிக்கும் தன்மை இஞ்சியில் ள்ளது. குமட்டலை தவிர்க்க உதவும்.
    புதினா: ஜீரண உறுப்பை சீர்செய்து, மலச்சிக்கலை குறைக்கும் தன்மை இதில் உள்ளது. உணவில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சியை தடுக்கிறது. ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவை தடுக்கும் திறன் வாய்ந்தது.
    ஏலக்காய்: வாயுவை நீக்குதல், ஜீரண உறுப்புகளை திடப்படுத்துதல், சோர்வை போக்குதல், நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி குறைத்தல் போன்ற பணிகளை ஏலக்காய் செய்கிறது. ஏலக்காய் ஊறவைத்த நீர் தொண்டை உலர்வதை தடுக்கும்.
    மல்லி: செரிமானத்திற்கு உதவும் மல்லி, இதயத்திற்கு நல்லது. இருமல், காய்ச்சல், செரிமானமின்மை, வாந்தி போன்றவற்றை குணப்படுத்தும்.
    மஞ்சள்: காயங்களை குணப்படுத்த உதவுகிறது. இரும்பு சத்து அதிகம் இருப்பதால், இதை தினசரி உட்கொள்ளும் போது ரத்த சோகையை தவிர்க்கலாம். குடல் நோய்கள் மற்றும் வயிற்றுபோக்கை குணப்படுத்தும். இதன் சாறு படர்தாமரையை குணப்படுத்தும்.
    சோம்பு: வாயுவை குறைத்தல் மற்றும் பெருங்குடல் நோயை குணமாக்குதல் போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்தது சோம்பு.
    பெருங்காயம்: கக்குவான், இருமல், நுரையீரல் நோய்களை தடுக்கும். உடலில் வாயு நீக்கி, செரிமானத்தை கொடுக்கும்.
    சீரகம்: சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் மற்றும் புற்றுநோயை குணப்படுத்தும்.
    வெந்தயம்: நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது. மோருடன் சேர்த்து குடிக்கும்போது வயிற்றுப்போக்கை நீக்குகிறது.
    கடுகு: இதில் உள்ள சல்பர், அப்லோ டாக்சின் போன்றவை நச்சுத் தன்மையை நீக்கும். இருமல், நீரிழிவு, பக்கவாதம், தோல் நோய் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.
    பூண்டு: வயிற்றுபோக்கு மற்றும் வாயுவை தவிர்க்க உதவுகிறது. காயங்கள், கொப்புளங்கள் மீது பூண்டை தடவினால் விரைவில் குணமடையும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், உடல் வீக்கம், கொழுப்பு சத்து ஆகியவற்றை குறைக்கிறது. மூலத்தை குணப்படுத்துகிறது.
    ஓமம்: இதன் தைலம் ஆஸ்துமாவை குணப்படுத்தும். இதன் எண்ணெய் நுண்ணுயிர்களை அழிக்கும். வாயு தொல்லை, வயிற்றுபோக்கு, வாந்தி, வயிற்று வலி, ஜலதோஷம், புண், சிரங்கு, தொண்டை கோளாறு தீர்க்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

  4. #524
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தைராய்டு தரும் பகீர்..!

    நமது உடம்பில் பலவகையான நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. ஹார்மோன்களை உற்பத்தி செய்து உடலில் உள்ள செல்களுக்கு அதை செலுத்தி, அந்த செல்களை வேலை செய்ய வைப்பதே அவற்றின் பணி. அதில் ஒன்றுதான் தொடை பகுதியில் இருக்கும் தைராய்டு சுரப்பி.
    இந்த சுரப்பி சுரக்கும் தைராக்ஸின் ஹார்மோன்தான் நமது உடலின் சீதோஷ்ணநிலையை சீராக வைத்திருக்கும். தோலின் மென்மைத்தன்மையை பாதுகாப்பது, மாதவிடாயை ஒழுங்கு படுத்துவது, முடி வளரும் வேகம், குழந்தைகளின் வளர்ச்சி இவை அனைத்தையும் பராமரிக்கும். இந்த தைராய்டு சுரப்பியில் கட்டிகள் இருந்தால் குறைவாக சுரக்கும். அல்லது அதிகமாக சுரக்கும். இதனால் உடல் நலம் பாதிக்கும்.
    தைராக்ஸின் குறைந்தால் உடல் எடை அதிகரிப்பு, அதிக ரத்த போக்கு, முறையற்ற மாதவிடாய், தோலின் மிருதுத் தன்மை குறைவு, அதிகமான முடி உதிர்தல், மலச்சிக்கல், உடல் வலி, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இப்படி உடலில் பிரச்சினைகள் ஏற்படும்போது மருத்துவரிடம் சென்று முறையான சிகிச்சை பெறாவிட்டால், உடல் எடை அதிகரித்து இதயத்தை சுற்றியுள்ள பையில் நீர் சேர்ந்து, நாடித்துடிப்பு குறைந்து, மன அழுத்தம் முற்றிய நிலைக்குச் செல்லக் கூடும். கோமா நிலைகூட ஏற்படலாம்!
    அதிகமான தைராய்டு சுரந்தால் எடை குறையும்! இதயத்துடிப்பு அதிகமாகும், கோபம், தூக்கமின்மை, மாதவிடாய் கோளாறுகள், வயிற்று போக்கு என பல சிக்கல்கள் ஏற்படும்.
    பிரசவ காலத்தில் பெண்களுக்கு மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி பாதிக்கபட்டு, சங்கிலித்தொடர் நிகழ்வாக தைராய்டு சுரப்பியும் பாதிக்கபடலாம். அதனாலும் தைராய்டு பிரச்சினை ஏற்படலாம். பிரசவத்திற்கு பின்னர் குறிப்பிட்ட சில மாதங்கள் கழித்தும் முறைபடி மாதவிடாய் வராவிட்டால்… மருத்துவரிடம் சென்று தைராய்டு பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
    குழந்தையின்மைக்கு தைராய்டும் ஒரு காரணம் என்பதால், பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அதேபோல் மெனோபாஸ் காலத்திற்கு பின்னரும் தைராய்டு பிரச்சினை தோன்றும். ஆனால் அதற்கான அறிகுறிகள் அதிகம் தெரியாது. ஆதலால், ஐம்பது வயது கடந்த பெண்கள் தைராய்டு பரிசோதனை எடுத்துக் கொள்வது அவசியம்.

  5. #525
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வெள்ளைப்பூண்டின் மகத்துவம் மிக்க மருத்துவ குணங்கள்

    வெள்ளைப்பூண்டை உணவில் அதிகம் சேர்ப்பவர்களுக்கு மலேரியா நோய் வராது. பூண்டை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடலில் தேவையற்று சேரும் கொழுப்பு குறையும். உடல் கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டுக்குள் இருக்க, தினமும் காலையில் 4 வெள்ளைப்பூண்டுத் துண்டுகளை சாப்பிடுவது நல்லது. வலிப்பு வருகிற குழந்தைகளுக்கும், இருமல், சளி தொந்தரவு இருப்பவர்களுக்கும் பூண்டு சாறு கொடுத்துவர மெல்ல மெல்ல குணம் பெறலாம். இரைப்பு, இருமல், வயிற்றில் பூச்சி இருப்பவர்களுக்கு பூண்டு சாறுகளை சில துளிகள் உள்ளுக்குள் சாப்பிட கொடுக்க எளிதில் குணம் கிடைக்கும். டான்ஸில் என்கிற உள் நாக்கு வளர்ந்திருப்பவர்கள், அந்த வளர்ந்த உள்நாக்கு சதை வளர்ச்சியின் மீது பூண்டுசாறினை தடவி வர நல்ல குணம் கிடைக்கும். பூண்டை பாலில் வேகவைத்து சாப்பிட உடல் கொழுப்பு குறையும். ரத்தக்கொதிப்பு, மனஅழுத்தம் போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு பூண்டு நல்ல மருந்து. பூண்டில் பலவித சத்துக்கள் இருந்தாலும் அதிகமாக இருப்பது கால்சியம்தான். எனவே பூண்டை அதிகமாக சமையலில் பயன்படுத்துவதன் முலமாக நாம் நமது எலும்பிற்கு வருகின்ற பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

  6. #526
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உணவில் நெய்யை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

    இந்தியாவில் உணவின் சுவையை அதிகரிக்க சேர்க்கப்படும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் நெய். இந்த நெய்யானது வெண்ணெயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இத்தகைய நெய்யை பலர் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் இதனை சாப்பிட்டால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் என்பதால் தான். இதுப்போன்று வேறு ஏதாவது படிக்க: உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேப்பீங்களா? அப்ப நீங்க ஆரோக்கியசாலி தான்… ஆனால் உண்மையில் நெய் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவு குறையும் என்பது தெரியுமா? இதுப்போன்று நெய்யில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன. அதே சமயம் இதில் கலோரிகள் அதிகம் இருப்பது உண்மை தான். ஆனால் அளவாக சாப்பிட்டால், அனைத்துமே நல்லது தான். இங்கு நெய்யை உணவில் சேர்ப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை உங்களுக்காக நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து நெய்யின் உண்மையான நன்மைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். செரிமான மண்டலம் செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்தால், செரிமான பிரச்சனையில் இருந்து விடுபடலாம். வைட்டமின்கள் அதிகம் நெய்யில் நிறைய வைட்டமின்கள் உள்ளன. அதில்
    வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே போன்றவை குறிப்பிடத்தக்கவை. எனவே தினமும் சிறிது நெய்யை உணவில் சேர்த்து கொண்டால், உடலுக்கு வேண்டிய வைட்டமின்களைப் பெறலாம். நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நெய் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அதிலும் வளரும் குழந்தைகளுக்கு நெய்யை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, அவர்கள் நோய்வாய் படாமல் இருப்பார்கள். இதயத்திற்கு நல்லது நெய்யில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கொழுப்பைக் கரைக்கக்கூடிய வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். கொலஸ்ட்ரால் மற்றோரு ஆச்சரியமான நன்மை என்னவென்றால், நெய்யானது கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். எப்படியெனில் இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, அதிகப்படியான கொலஸ்ட்ராலை கரைத்து குறைத்துவிடும். தசைகளுக்கு நல்லது வயதானவர்கள் உணவில் நெய்யை அளவாக சேர்த்து வந்தால், தசைகள் மற்றும் மூட்டுகளில் தேய்மானம் எதுவும் ஏற்படாமல், அவைகள் நன்கு செயல்படுவதற்கு உதவும். இதனால் வயதாவதால் ஏற்படும் மூட்டு சம்பந்தமான பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். லாக்டோஸ் சகிப்புத்தன்மை நிறைய மக்களுக்கு பால் பொருட்கள் என்றால் அலர்ஜி ஏற்படும். அத்தகையவர்கள் நெய்யை பயமின்றி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் பால் பொருட்களின் மூலம் கிடைக்கக்கூடிய சில நன்மைகளானது நெய்யின் மூலம் கிடைக்கும். நெஞ்செரிச்சல் பெரும்பாலானோர் நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்படுவார்கள். குறிப்பாக கர்ப்பிணிகள் இதற்கு உள்ளாவார்கள். ஆகவே இப்படி நெஞ்செரிச்சல் ஏற்படும் போது, 1 டேபிள் ஸ்பூன் நெய்யை உணவில் சேர்த்து சாப்பிட்டால், நெஞ்செரிச்சல் உடனே தணியும்.

  7. #527

  8. #528
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பால் அருந்தாவிட்டால் என்ன?

    உலக அளவில், பெண்களில் 3 பேரில் ஒருவரும் ஆண்களில் 5 பேரில் ஒருவரும் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாகப் புள்ளி விபரம் காட்டுகிறது.
    ஆண்களைவிட பெண்களுக்கு இந்தச் சுண்ணாம்புச் சத்துப் பற்றாக்குறை பிரச்சனை அதிகமாகவே இருக்கிறது. மாதவிலக்கு நின்று போகும் காலக்கட்டத்தில் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹாரர்மோன் சுரப்பு குறைந்துவிடுகிறது. சிலருக்கு சுத்தமாக இல்லாமல் போய்விடுகிறது. அதனால் வரக்கூடிய பிரச்னையே இந்தச் சுண்ணாம்புச் சத்துப் பற்றாக்குறை.
    பால் சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்களில் சுண்ணாம்பு இருந்தாலும் கூட, பால் உணவுப் பொருட்களில் செய்யப்படும் இரசாயனக் கலப்படம் பலரையும் அச்சுறுத்தி வருகிறது.
    சுண்ணாம்பு சத்துக்குப் பால் உணவே முக்கியம் என்று விளம்பரங்கள் மக்கள் மனங்களில் பதிய வைத்துவிட்டன. சொல்லப்போனால் பாலைவிட இன்னும் அதிகமான சுண்ணாம்புச் சத்தை அள்ளித்தருகின்ற உணவுப் பொருட்கள் நம்மிடைம் நிறையவே உள்ளன. 100 கிராம் பாலில் வெறும் 194 மில்லிகிரˇம் சுண்ணாம்பு மட்டுமே உள்ளது. பாலை விட நாம் ஒரு பொருட்டாகக் கருதாத இன்னும் நிறைய உணவுப்பொருட்களில் சுண்ணாம்பு அதிகமாக இருக்கிறது. அவற்றை நம் உணவில் சேர்த்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சுண்ணாம்பு கிடைத்துவிடும்.
    உண்மையில் சுண்ணாம்புத் சத்துக்காக நாம் பாலை நம்பி இருக்கவே தேவையில்லை.
    100 கிராம் உணவில் உள்ள சுண்ணாம்பின் அளவு
    எள் – 1450 மிகி சீரகம் – 1080 மிகி
    அகத்திக்கீரை – 1130 மிகி
    ஓமம் – 1584 மிகி
    முளைக்கீரை – 800 மிகி
    கறிவேப்பிலை – 830 மிகி
    மல்லி – 630 மிகி
    கேழ்வரகு – 344 மிகி
    குப்பைமேனி – 667 மிகி

  9. #529
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    செரிமானத்தைத் தூண்டும் பெருங்காயம்

    நம்ம தமிழ்நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் `கமகமக்க’ வைக்கிற பெருமை பெருங்காயத்தை தான் சேரும். இதை, `கடவுளர்களின் மருந்து’ன்னு குறிப்பிடுறாங்க. பச்சையாக இருக்குறப்போ சகிக்க முடியாத இதனோட வாசனை, சமையல்ல சேர்த்த பிறகு ஆளை அசத்தும். ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள்ல தான் பெருங்காயச்செடி வளருது. சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும், வேரையும் கீறிவிட்டு, அதுல வழியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காயவைச்சா, அதுதான் பெருங்காயம். பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம்னு இதுல ரெண்டு வகை இருக்குது.
    காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயம், சுவை நரம்புகளைத் தூண்டி, ருசியை உண்டாக்கும் குணம் கொண்டது. தானும் எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்துல செரிக்க வைக்கும். வாயுக்கோளாறை விரைவிலேயே சரிசெய்யும் மருந்து இது. தசைகளுக்கு பலம் கொடுக்கும், சீறுநீரோட அளவைப் பெருக்கும்னு ஏகப்பட்ட மருத்துவக் குணங்கள் இருக்கு. தினமும் பெருங்காயத்தை சாப்பாட்டுல சேர்த்துக்கிட்டா, வயிற்று வலி, வயிறு உப்புசமாக இருக்குறது போன்ற தொல்லைகள் வராது. மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது

  10. #530
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    என்னென்ன பழங்களில் என்னென்ன நோய்களை வராமல் தடுக்கிறது?

    இன்றைக்கு நமக்கு வரும் பல நோய்களுக்கும் காரணம் நம்முடைய உணவுப்பழக்கம் மாறியிருப்பது தான். இயற்கை உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொண்டாலே பாதி நோய்களிலிருந்து தப்பி விடலாம். இயற்கையிலேயே கிடைக்கும் பழங்களை உட்கொண்டாலே ஆரோக்கியமாக இருக்க முடியும். காட்டில் வாழ்ந்த சித்தர்கள் நூறு வயதை கடந்தும் ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர். இதற்கு காரணம் அவர்கள் இயற்கையில் கிடைக்கும் பழங்களை உட்கொண்டது தான்.
    ஆப்பிள் : இருதய நோய், இரத்தக் கொதிப்பு, மூட்டுவலி, தலைவலி போன்றவை வராமல் தடுக்கும்.
    திராட்சை : பசியின்மை, மலச்சிக்கல், சிறுநீரக கல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும்.
    ஆரஞ்சு : காய்ச்சல், எலும்பு நோய்கள், முகப்பரு வராமல் தடுக்கும். வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பழத்தை அதிக அளவில் கொடுக்கலாம்.
    மாதுளை : வயிற்றில் பூச்சி, அஜீரணக்கோளாறு, பித்தப்பை, சிறுநீரகக்கல், புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும்.
    வாழைப்பழம் : மூட்டுவலி, சிறுநீரகக்கோளாறு, காசநோய், அலர்ஜி
    பப்பாளி : பசியின்மை, வயிற்றுப்பூச்சி, ஈரல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும், மேனியை பளபளப்பாக்கும்.
    நெல்லிக்கனி : நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தூக்கமின்மை, உடல்கொழுப்பு குறைய, இளநரை, முடி உதிர்வு நிற்க உதவும்.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter