Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #561
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    Really Very Useful.Thank U.


    Sponsored Links
    sumitra likes this.

  2. #562
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உடல்நலக் குறைவுகளுக்கு உதவும் காய்கறி, பழச்சாறுகள்!

    சாப்பிடுவதற்குக்கூட நேரமில்லாமல் மனிதன் ஓடிக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. மாறிவரும் சுற்றுச்சூழலும் மனிதர்களிடம் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அடர்த்தியான நலன்களை அள்ளித்தரும், புத்துணர்வு, சக்தியூட்டும் பழ மற்றும் காய்கறிச் சாறுகள் நல்ல தேர்வு என்று சொல்லலாம்.
    சத்துகள் நிறைந்த பழ, காய்கறிச் சாறுகள், "வைட்டமின்- தாது உப்புகளின் காக்டெய்ல்" என்று அழைக்கப்படுகின்றன.
    உடல் ஆரோக்கியத்துக்கு அதிகமாகப் பலனளிக்கும் அதேநேரம், உடம்பை எந்த வியாதியும் நெருங்காமல் தடுக்கும் பணியையும் பழச்சாறுகள் செய்கின்றன. வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் பற்றாக்குறையை உடனே சரிசெய்ய பழச்சாறு பருகுவதே சிறந்த வழி.
    மனித உடம்பில் பழ, காய்கறிச்சாறுகள் மூன்று முக்கியமான பணிகளை ஆற்றுகின்றன. அதாவது, சத்துகளை அளிப்பது, பாதுகாப்பாக இருப்பது, குணமாக்குவது.
    பழங்களும் காய்கறிகளும் அதிக அளவிலான கார்போஹைட்ரேட்டைக் கொண்டுள்ளன. அது உயிர் வாழவும், செயல்களைச் செய்யவும் தேவையான சக்தியை அளிக்கிறது. அவற்றின் மூலம் கிடைக்கும் அதிக அளவிலான வைட்டமின்கள் உடலின் வேதிமாற்றங்களைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. பழ, காய்கறிச் சாறுகளின் தாது உப்புகளும், நுண் மூலக்கூறுகளும், நரம்பு மற்றும் தசை செயல்பாட்டுக்கு முக்கியமானவை. அவை சில உடம்புத் திசுக்களின் கட்டுமானப் பொருட்களாகவும் உள்ளன.
    பழங்கள், காய்கறிகளின் பாதுகாப்பு விளைவுகள் அதிகம். அவற்றில் பைட்டோ கெமிக்கல்கள், கார்ட்டினாய்டுகள், பயோபிளேவனாய்டுகள், ஐகோபீன் போன்றவை அடங்கியுள்ளன. இவை, உடம்பை புற்றுநோய், இதயநோய்கள் போன்றவற்றிலிருந்து காக்கின்றன. பழங்கள், காய்கறிகளில் "ஆன்டிஆக்சிடன்ட்களான" பீட்டாகரோட்டின், வைட்டமின் சி, ஈ போன்றவை உள்ளன. அவை செல் தடுப்புச் சுவர்கள் சேதமடைவதிலிருந்து தடுக்கின்றன. பழைய, இறந்த செல்களை உடம்பிலிருந்து வெளியேற்றும் பணியையும் காய்கறி, பழச்சாறுகள் செய்கின்றன. உப்புப் படிவுகள், சிறுநீரகத்தில் கற்களைக் கரைக்கும் பணியையும் செய்கின்றன.
    காய்கறி, பழச் சாறுகளின் மருத்துவக் குணங்களும் பல நூற்றாண்டுகளாக அறியப்பட்டு வந்துள்ளன. உதாரணமாக பீட்ரூட், கேரட் சாறுகள் உடம்பின் அடிப்படைத் தற்காப்பு அமைப்பை வலுப்படுத்துகின்றன. பசலைக்கீரை, வெள்ளரிச் சாறுகள் நல்ல சருமம், முடி, நகங்களுக்கு உதவுகின்றன.contd..


  3. #563
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சில பாதிப்புகள், உடல்நலக்குறைவுகளுக்கு உதவும் பழ, காய்கறிச் சாறுகள் பற்றிய விவரம்:
    அசிடிட்டி: திராட்சை, பப்பாளி, கொய்யா, கேரட், பசலைக்கீரை.
    பரு: திராட்சை, பேரிக்காய், பிளம், தக்காளி, வெள்ளரி, கேரட், உருளைக் கிழங்கு, பசலைக்கீரை.
    ஒவ்வாமைகள்: இலந்தை, திராட்சை, பீட்ரூட் மற்றும் பசலைக்கீரை.
    ரத்தசோகை: இலந்தை, உலர்பழம், ஸ்ட்ராபெர்ரி, சிவப்பு திராட்சை, கேரட், பசலைக்கீரை.
    மூட்டு பாதிப்பு: புளிப்பு செர்ரி, அன்னாசி, புளிப்பு ஆப்பிள், எலுமிச்சை, வெள்ளரி, பீட்ரூட், கேரட், லெட்டூஸ்கீரை மற்றும் பசலைக்கீரை.
    ஆஸ்துமா: அனைத்து பழ மற்றும் காய்கறிச் சாறுகள்.
    சிறுநீர்ப்பை குறைபாடுகள்: ஆப்பிள், இலந்தை, எலுமிச்சை, வெள்ளரி, கேரட்.
    ஜலதோஷம்: எலுமிச்சை, ஆரஞ்சு, அன்னாசி, கேரட், வெங்காயம் மற்றும் பசலைக்கீரை.
    வாந்தி: ஆப்பிள், பேரி, திராட்சை, எலுமிச்சை, கேரட், பீட்ரூட், பசலைக்கீரை.
    சர்க்கரை நோய்: புளிப்பு வகைப் பழங்கள், கேரட், லெட்டூஸ்கீரை, பசலைக்கீரை.
    வயிற்றுப்போக்கு: அனைத்து பழச்சாறுகளும்.
    கண் குறைபாடுகள்: இலந்தை, தக்காளி, கேரட், பசலைக்கீரை.
    தலைவலி: திராட்சை, எலுமிச்சை, கேரட், லெட்டூஸ்கீரை, பசலைக்கீரை.
    இதய நோய்கள்: சிவப்புத் திராட்சை, எலுமிச்சை, வெள்ளரி, கேரட், பீட்ரூட், பசலைக் கீரை.
    உயர் ரத்த அழுத்தம்: திராட்சை, ஆரஞ்சு, வெள்ளரி, கேரட், பீட்ரூட்.
    "இன்புளூயன்சா" காய்ச்சல்: ஏப்ரிகாட், ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, கேரட், பசலைக் கீரை, பீட்ரூட், வெள்ளரி.
    சிறுநீரகக் குறைபாடுகள்: ஆப்பிள், கொய்யா, அன்னாசி, வெள்ளரி, பீட்ரூட்.
    கல்லீரல் பிரச்சினைகள்: எலுமிச்சை, பப்பாளி, திராட்சை, கேரட், தக்காளி, பீட்ரூட், வெள்ளரி.
    மாதவிலக்குப் பிரச்சினைகள்: திராட்சை, உலர் பழங்கள், செர்ரி, பசலைக்கீரை, லெட்டூஸ்கீரை, டர்னிப், பீட்ரூட்.
    அதிக உடல் எடை: அனைத்து காய்கறி மற்றும் பழச் சாறுகள்.
    வயிற்றுப் புண்: இலந்தை, திராட்சை, முட்டைக்கோஸ், கேரட்

    sumitra likes this.

  4. #564
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    எந்த நேரத்தில்? என்ன உணவு?

    நம் சுற்றுச்சூழலும், வாழ்க்கை முறையும் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல இப்போது இல்லை. நிறையவே மாறிவிட்டது. பெண்களில் நிறைய பேர் வேலைக்குச் செல்கின்றனர். இரவு ஷிப்ட் முதல் பல பணிகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலை. சங்யான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமல் போகும் போது, உடல்நிலை பாதிக்கப் படுகிறது.
    அதையும் கவனிக்க நேரமில்லை. இது நல்லதா? எந்தெந்த நேரத்தில் உணவு உண்ண வேண்டும்?
    உணவை உண்பதற்கு மணிக் கணக்கைப் பின்பற்றுவது தவறு. உணவு அருந்துவதற்குச் சரியான நேரத்தைக் குறிக்கும் வகையில் உடலில் நமக்குச் சில அறிகுறிகள் தோன்றும். இவற்றில் முக்கியமான அறிகுறி பசி. வயிற்றில் பசி தோன்றும் நேரத்தில் அதற்குத் தீவனம் போட வேண்டியது அவசியம். பசி எடுக்காமல் உணவு அருந்துவது உடலுக்கு மிகக் கொடிய விளைவுகளை ஏற்படுத்தும்.
    உண்ட உணவு வயிற்றில் ஜீரணமாகி விட்டதா என்பதை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே உண்ட உணவு செரிக்கும் முன் வேறு உணவை உட்கொள்ளலாகாது. வயிற்றில் உணவு ஜீரணமாகாத நிலையில் இருக்கும்போது மீண்டும் உணவு உட் காண்டால் முன் உண்ட உணவின் ஜீரணமாகாத அன்ன ரசம், பின்பு உண்ட உணவின் ரசத்துடன் கலந்து விரைவில் எல்லா தோஷங்களையும் சீற்றமடையச் செய்து விடும்.
    உணவு ஜீரணமடையாத நிலையில் உருவாகும் ஏப்பம் உணவின் சுவை, மணம் இவற்றுடன் வெளிவரும். ஏப்பம், சுவை இல்லாமல் சுத்தமாக வந்த பின்பு உணவை உட்கொள்ள வேண்டும். உட்கொள்ளும் வேளையில் இருதயம், உடல் துவாரங்கள், முகம், கண்கள் இவை தெளிவுற்றிருக்க வேண்டும். வாதம், பித்தம், கபம் இவை மூன்றும் தமது இருப்பிடங்களிலிருந்து சரியாக இயங்க வேண்டும். உடல் கழிவு வெளியேறிய பிறகு, வயிற்றில் பசியும், தாகமும் தோன்றி ஜீரண சக்தி நன்கு வளர்ந்திருக்க வேண்டும். உடல் லேசாக இருக்க வேண்டும். இப்படி இருக்கையில் உணவு உட்கொண்டால், பாதிப்பு ஏதும் ஏற்படாமல், ஆயுள், பலம், நிறம் இவற்றை வளர்க்கிறது. இது தான் உண்பதற்கு உகந்த காலம்.
    எண்ணெய் பசை உள்ளதும், எளிதில் ஜீரணமாகக் கூடியதும், சூடாகவும் உள்ள உணவு வகைகளை எப்போதும் உட்கொள்ள வேண்டும். "இந்த உணவு எனக்குப் பொருந்தும், இது எனக்குப் பொருந்தாது" என்று நம்மை நன்கு கவனித்துக் கொண்டு உணவை உண்ண வேண்டும்.
    மிகவும் கால தாமதமாகவோ, அளவுக்கு மீறியோ, குறைந்த அளவிலோ உணவை உட்கொள்வது கூடாது. ஜீரணத்துக்கு ஏற்ற வகையில் முதலில் கடின உணவையும், இனிப்புகளும், எண்ணெய்ப் பசையுமுள்ள உணவை உண்ண வேண்டும். புளிப்பு, உப்புச் சுவை கொண்ட உணவுகளை இடையிலும் (சாம்பார், ரசம்), காய்ந்த, திரவமான, காரம், கசப்பு, துவர்ப்புச் சுவையுள்ள உணவுகளை இறுதியிலும் (மோர்) உட்கொள்ள வேண்டும். ஜீரண சக்தி குறைந்தவர்கள் முதலில் சூடான திரவப் பொருட்களை அருந்துவது மிகவும் பயனளிக்கும்.
    மிகத் தாமதமாகவும், மிக விரைவாகவும், பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும், மனதை வேறிடத்தில் செலுத்தியபடியும் உணவு உண்டால், வயிற்றில் ஜீரணம் சரியாக நடைபெறாது.
    எண்ணெய்ப் பசையுள்ள உணவு புலன்களை உறுதிப்படுத்துகிறது. உடலை வளர்க்கிறது. கிழத் தன்மையைப் போக்குகிறது. உடலுக்கு வலிமை ஊட்டுகிறது. நிறத் தெளிவைத் தோற்றுவிக்கிறது. தோஷங்களைச் சீற்றமடையச் செய்யாமல் ஜீரணமடைகிறது. சூடான உணவு சுவையூட்டுகிறது. கபத்தை வளர்ப்பதில்லை. இரவில் உண்ட உணவு ஜீரணமாகாமலேயே மறுநாள் காலையில் உணவு உண்டால், கெட்டுப் போன பாலுடன் கலந்த நல்ல பாலும் கெடுவது போன்று பாதிப்பு ஏற்படும்.
    வயிற்றில் இரண்டு பங்கு உணவும், ஒரு பங்கு நீரும், ஒரு பங்கு காலியாகவும் இருக்கும் வகையில் உணவு உண்ண வேண்டும்.

    sumitra likes this.

  5. #565
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இதய ஆரோக்கியம் காக்க :-
    நமது உடம்பின் ‘பம்பிங் ஸ்டேஷனான’ இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிகவும் அத்தியாவசியமானது. நம் உடல் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு ஆரோக்கியமான இதயம்தான் அடிப்படை.

    ஓய்வே எடுத்துக்கொள்ளாமல் துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தைப் பாதுகாப்பதற்கான குறிப்புகள் இதோ...

    * கீரைகளில் இதயத்துக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் உள்ளன, எனவே தினமும் ஒரு கீரை சாப்பிடுவது நல்லது.

    * முழுத் தானியங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிவப்பு அரிசியும் உடலுக்கு வலுச் சேர்க்கும், இதயத்தைப் பாதுகாக்கும்.

    * ஓட்சில் நார்ச்சத்துகள் மிகுந்துள்ளன. இது கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதுடன், ரத்த ஓட்டத்தையும் சீராக்கும். இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

    * ஆப்பிள் இதயத்துக்கு மிகவும் நல்லது. இது ரத்தம் உறைவதைத் தடுக்கும்.

    * பாதாம் எண்ணெய்யில் வைட்டமின் ‘இ’ உள்ளது. இது உடலிலுள்ள கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைக்கும். இதயநோய் அண்டாமல் தடுக்கும்.

    * தினமும் ஒரு டம்ளர் மாதுளம் பழச்சாறு பருகுவது இதயநோய் வராமல் நம்மைக் காப்பாற்றும்.

    * ஸ்ட்ராபெர்ரி, புளூபெர்ரி, மல்பெர்ரி போன்ற பழ வகைகளில் அதிக அளவு வைட்டமின் ‘சி’, கால்சியம், பீட்டா கரோட்டின் சத்துக்கள் உள்ளன. தினமும் காலையில் ஓட்சுடன் புளூபெர்ரி பழம் சாப்பிட, இதயம் சீராக இயங்கும்.

    * சோயா, உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து இதயநோய் வருவதைத் தடுக்கிறது. பாலுக்குப் பதில் சோயா பாலை காலையில் அருந்தலாம். இதனால் இதயம் வலுப்பெறும்.

    * உப்பு இதயத்துக்கு எதிரானது. உப்பு அதிகம் இட்ட நொறுக்குத் தீனிகளைக் கொறிக்கும்போதெல்லாம் இதயம் பாதிக்கப்படுவதை உணருங்கள்.

    * இதயத்தைப் பாதுகாக்கும் சிறந்த வழிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது நீச்சல் பயிற்சி. நீச்சல் அடிக்கும்போது இதயம் சுறுசுறுப்பாகச் செயல் படும். அது இதயத் துடிப்புக்கு நல்ல பயிற்சியாக விளங்கும்.

    * ‘டீ’யில் உள்ள பிளேவனாய்டுகள் ரத்தக் குழாய்களை மேம்படுத்தி அவற்றை ஓய்வெடுக்க வைக்கும். இதயத்தை ஆரோக்கியமாக வைக்க தினமும் இரண்டு கப் ‘டீ’ பருகுங்கள்.

    * மில்க் சாக்லேட்டை காட்டிலும், டார்க் சாக்லேட்டையே உண்ணுங்கள். டார்க் சாக்லேட்டில் ‘கொக்கோ’ உள்ளது. இதில் பிளேவனாய்டுகள் அதிகம் உள்ளதால் அவை ரத்த உறைதலைத் தடுக்கும்.

    * தியானத்தின் மூலம் நரம்பியல் அமைப்பைச் சாந்தப்படுத்தினால் இதயத்தை அது வால்வுநோய் மற்றும் இதயச்சுவர் சிரை நோய் என்று பல நோய்களில் இருந்து காக்கும்.

    * வைட்டமின் ‘பி’ அடங்கிய உணவுகள் இதயத்துக்கு மிகவும் நல்லது. அவை இதய நோய்களை அண்டவிடாமல் தடுக்கும். அதற்கு ‘அவகேடோ’ மற்றும் கடல் உணவுகளை சில எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.

    * சில நேரங்களில் நரம்பியல் அமைப்பைச் சாந்தப் படுத்தும் காரியத்தில் ஈடுபட்டால், அது இதயத்துக்கு நன்மையை விளைவிக்கும். மீன் பிடித்தல் போன்ற செயல்கள் அப்படிப்பட்ட காரியங்கள்தான்.

    * கோதுமை பிரட் மற்றும் ஓட்ஸ் ஆகியவை இதயத்துக்குச் சிறந்த உணவாக விளங்குகின்றன. அதனால் அவற்றை உண்பதன் மூலம் இதய ஆரோக்கியத்துக்கு நன்மை செய்யலாம்.

    * பாதாம் போன்ற அனைத்து வகை பருப்புகளும் மனித உடலுக்கு நன்மையை விளைவிக்கும். இருப்பினும், உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் ‘நட்ஸ்’ வகையை தவிர்க்கவும்.

    * அன்றாட சுறுசுறுப்பான செயல்பாடு, விளையாட்டில் ஈடுபாடு போன்றவை இதயத்துக்கு நன்மை பயக்கும்.

    sumitra likes this.

  6. #566
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சூட்டுடம்புக்கு ஏற்றது புடலங்காய்

    சூட்டுடம்புக்கு ஏற்றது புடலங்காய்

    புடலங்காய் சற்று நீரோட்டமுள்ள காய். சூட்டுடம்புக்கு ஏற்றது. உடம்பின் அழலையைப் போக்கும், தேகம் தழைக்கும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த கபங்களால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும். வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றை போக்கும்.

    உடலுக்கு வலு கொடுக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும்.

    அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்கும். நன்கு பசியைத் தூண்டும். குடல் புண்ணை ஆற்றும். வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும்.

    இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலைப் போக்கும். மூலநோய்க் காரர்களுக்கு புடலங்காய் சிறந்த மருந்தாகும்.

    நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும். சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும். விந்துவைக் கெட்டிப்படுத்தும். ஆண்மைக் கோளாறுகளைப் போக்கும். உடல் தளர்ச்சியைப் போக்கி வலு கொடுக்கும்.

    பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலைக் குணப்படுத்தும். கருப்பைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வையைத் தூண்டும். இதில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்..

    இத்தகைய சிறப்புத் தன்மை கொண்ட புடலங்காயை அவ்வப்போது பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோமே.

    sumitra and shakthigandhi like this.

  7. #567
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    எந்த கீரை சாப்பிட்டால் என்ன நோய் குணமாகும்

    கொத்தமல்லி கீரை: மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.
    அரைக்கீரை: நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.

    வள்ளாரை: நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.

    அகத்திக்கீரை: மலச்சிக்கலைப் போக்கும்.

    முளைக்கீரை: பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.

    பொன்னாங்கன்னி: இரத்தம் விருத்தியாகும்.

    தர்ப்பைப் புல்: இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.

    தூதுவளை: மூச்சு வாங்குதல் குணமாகும்.

    முருங்கை கீரை: பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாட்பபிட தாது விருத்தியாகும்.

    சிறுகீரை: நீர்கோவை குணமாகும்.

    வெந்தியக்கீரை: இருமல் குணமாகும்

    புதினா கீரை: மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.

    அறுகீரை: சளிக்காய்ச்சல், டைபாய்டு குணமாகும்

    sumitra likes this.

  8. #568
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி
    உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி ( பிரச்சினை உள்ள ஆண்களுக்கு குழந்தை வரம் உண்டாக )

    உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி (குழந்தை பிறக்க)

    தற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது, இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது, இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி செய்ய நம் சித்த பெருமைக்க அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்

    தேவையான பொருள்கள் :

    1.நல்லெண்ணெய்
    2.பூண்டு
    3.மிளகு

    செய்முறை:

    நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின்(இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும், 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும், 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள். இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.

    அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம். ஏனெனில் இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில் குழந்தை பிறக்குமாம், இதனை it (18 வயதுக்கு மேல்) துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.

    sumitra and shakthigandhi like this.

  9. #569
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உணவும்… மருந்தும்..!

    நம்மிடம் ஒரு வழக்கம் உண்டு… நோய்க்கான மருந்தை சாப்பிட்டுவிட்டு, அதற்கு எதிர்மாறான உணவுகளையும் சாப்பிடுவோம். இதனால் மருந்து, மாத்திரையின் தாக்கமும் குறைந்து போய், நோயின் விளைவுகளும் அதிகமாகும். ஆதலால், நோயை தீர்க்கும் மருந்து, மாத்திரைகளை சாப்பிடும்போது, அதற்கேற்ப உணவுகளையும் சாப்பிட வேண்டும். இங்கே சில உதாரணங்களைப் பார்ப்போம், நீங்கள் வலிநிவாரணி மருந்து எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிகமாக இலைக் காய்கறிகளை சாப்பிடாதீர்கள். அவை மருந்தின் வேகத்தை மட்டுப்படுத்தும். மருந்து சாப்பிடும் அதே நேரத்தில் வைட்டமின் மாத்திரைகளைச் சாப்பிடுகிறீர்களா? வேண்டாம். வைட்டமின்களும், தாதுக்களும் சில மருந்துகளின் செயல்வேகத்தை குறைத்து விடும். மருந்தை சாப்பிடும் கஷ்டம் தெரியாமலிருக்க அதை உணவுடன் கலந்து சாப்பிட நினைக்கிறீர்களா? வேண்டாம். மருத்துவர் கூறினால் ஒழிய அவ்வாறு செய்ய வேண்டாம். அது, மருந்து செயல்படும் விதத்தை மாற்றலாம். மாத்திரைகளை வெந்நீர் அல்லது சூடான பானத்துடன் சாப்பிடும் வழக்கமுள்ளவரா? அதைத் தவிர்த்திடுங்கள். சூடானது, மாத்திரைகளின் திறனைப் பாதிக்கலாம். வயிற்றுப்போக்கால் அவதிப்படுகிறீர்களா? வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கான மருந்துகளை வேறு எந்த மருந்துகளுடனும், குறிப்பாக `ஆன்டிபயாட்டிக்கு’களுடன் எடுத்துக் கொள்ளாதீர்கள். வயிற்றுப்போக்கை அவை மோசமாக்கவே செய்யும். ஒவ்வாமையால் அவதிப்பட்டு மருந்து சாப்பிடுகிறீர்களா? அப்படியானால் நெருப்பில் சுட்ட இறைச்சி, பசலைக் கீரை, முட்டை, வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றைத் தவிருங்கள். ஞாபகத்தில் கொள்ளுங்கள்- புரதங்கள், குறிப்பாக விலங்கு புரதங்கள் ஒவ்வாமையைத் தூண்டவே செய்யும். நீங்கள் தைராய்டு பிரச்சினைக்கு மருந்து எடுத்துக்கொள்கிறீர்களா? அப்படியானால், கால்சியம் செறிந்த உணவுகள், முட்டைக்கோஸ், சோயாபீன்ஸ், போன்றவற்றைத் தவிர்த்திடுங்கள். அப்படியே சாப்பிடுவதாக இருந்தாலும், தைராய்டு மருந்து சாப்பிட்டு பல மணி நேரம் கழித்து மிகக் குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.

    sumitra likes this.

  10. #570
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்

    வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு. வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி முன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும். உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம். வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும். ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது. இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும். மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்துவிடும். சீழ் வெளியேறும். வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் முளைச்சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படலாம்.

    sumitra likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter