Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #611
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நிக்கோடினிக் அமிலம் (நியாசின்)
    ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றின் அளவை நிலைப்படுத்துவதற்கு நியாசின் பெரிதும் உதவுகிறது. இந்த அமிலத்தின் அளவு உடலில் குறையும்போது அதிகப்படியான டென்ஷன், சத்துக் குறைபாடு, எரிச்சல், ஞாபகமறதி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
    முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டின் ஈரல், பாதாம் மற்றும் பருப்பு வகைகள், முழு தானியங்கள் போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் அமிலத்தின் அளவை அதிகமாக்கலாம். நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு 18 மில்லி கிராம் வரை தேவை.


    Sponsored Links
    sumitra likes this.

  2. #612
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பேத்தொடெனிக் அமிலம்
    உடம்புக்குத் தேவையான சத்துகளை உற்பத்தி செய்ய பெத்தொடேனிக் அமிலம் தேவை. மூளை மற்றும் நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளுக்கு மிகவும் உதவுகிறது. கவனமின்மை, பல்வலி, வாந்தி மற்றும் சத்து குறைபாடு போன்ற பாதிப்புகள் இந்த அமிலத்தின் குறைவினால் ஏற்படும். முழுதானியங்கள், பருப்பு வகைகள், முட்டை மஞ்சள் கரு ஆகிய உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த அமிலக் குறைபாட்டை சரிசெய்துவிடலாம் நாள் ஒன்றுக்கு நபருக்கு 6 மில்லிகிராம் தேவை.

    sumitra likes this.

  3. #613
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ஆஸ்கார்பிக் அமிலம்
    வைட்டமின் சி தான் அஸ்கார்பிக் அமிலம். பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களில் முக்கியமான வைட்டமின் இது. இந்த வைட்டமின், தசை வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை உடம்புக்கு உருவாக்கிக் கொடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
    மேலும் இரும்புச் சத்தை உணவிலிருந்து உறிஞ்சுவதற்கும், கேன்சர் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கவும் பயன்படுகிறது. இந்த அமிலத்தன்மை குறையும்போது, ஈறுகளில் ரத்தம் வடிதல், ரத்தசோகை போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. மிளகை அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இந்த இழப்பைச் சரிசெய்யலாம். மேலும் ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, முருங்கைக்கீரை, தக்காளி, கிவி பழம், முந்திரி, நெல்லிக்காய் போன்ற உணவுகளிலும் இந்த அமிலம் நிறைந்துள்ளது. ஒரு நாளைக்குத் தேவையான அளவு 40 மில்லி கிராம்.

    sumitra likes this.

  4. #614
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ஃபோலிக் அமிலம்
    ரத்த சிவப்பணுக்களைத் தூண்டுவதற்கும், அவற்றின் முதிர்ச்சித் தன்மைக்கும் ஃபோலிக் அமிலம் பயன்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பக் காலத்தில் அவசியம் தேவைப்படக்கூடிய அமிலம் இது. இந்தக் காலகட்டத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் உதவக்கூடியதும்கூட. காசநோய், கேன்சர் நோய்களுக்கான மருந்து தயாரிப்பிலும், அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பால், முட்டை, ஈரல், ஈஸ்ட், கீரை, ஓட்ஸ் மற்றும் பச்சைக் காய்கறிகள், கோதுமை, முந்திரிப் பருப்பு போன்ற உணவுகளின் மூலமும் இந்த அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்க முடியும். சாதாரண மனிதர்களுக்கு ஒரு நாளைக்கு 200 மைக்ரோகிராம் தேவை. கர்ப்பிணிப் பெண்களுக்கு 500 மைக்ரோகிராம் வரை தேவைப்படும்.

    sumitra likes this.

  5. #615
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ஹைட்ரோ குளோரிக் அமிலம்
    இந்த அமிலம் மட்டும்தான் நம் வயிற்றிலேயே சுரக்கக்கூடியது. இரைப்பையில் அமில காரத் தன்மையை நிலைநிறுத்தி உணவைச் செரிமானம் செய்வதற்கு உதவுகிறது.
    அமிலம் இரைப்பையில் குறைந்தால் செரிமான கோளாறுகள், வயிற்று உப்பசம், அதீத தூக்கம், அடிக்கடி பசி, தொற்றுநோய் போன்றவை ஏற்படும். அமிலம் இரைப்பையில் அதிகமானால் வயிற்றுபுண், ஆரோக்கிய பிரச்னைகள் ஏற்படும். இந்த அமிலம் நிலைத்தன்மையில் இருப்பது அவசியம். மிளகு, வினிகர் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நிலைப்படுத்தமுடியும். சிலருக்கு இயல்பாகவே இந்த அமிலம் குறைவாக இருக்கும். அவர்கள் மருத்துவரின் ஆலோசனைபடி மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
    குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள், நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு, அமிலத் தேவைகளின் அளவுகள் மாறுபடும். மருத்துவரின் தகுந்த ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்’

    sumitra likes this.

  6. #616
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ரத்தக் கொதிப்பைத் தவிர்க்கும் உணவு வகைகள்!
    முருங்கைக் கீரையை நீர் நிறைய விட்டு வேகவைத்து, பூண்டு, சிறிய வெங்காயம், வெந்தயம் போட்டு சாதாரணமாக ரசம் செய்வதுபோல செய்து, காலை உணவுடன் பருகலாம்.
    மதிய உணவில் சமைக்காத சிறிய வெங்காயத் தயிர் பச்சடி, வாழைத்தண்டு தயிர்ப் பச்சடி, வெள்ளரிப் பச்சடி சேர்த்துக்கொள்ளலாம்.
    கொதிப்புக்குக் காரணமாக ரத்தக் கொழுப்பைக் குறைக்க/கரைக்க, புளியை உபயோகத்துக்கு ஏற்ப எடை குறைக்கும் தன்மையுடைய கோக்கம் புளி அல்லது குடம் புளியைப் பயன்படுத்தலாம்.
    வெந்தயத் தூள், கறிவேப்பிலை பொடியை சுடுசோற்றில், முதல் உருண்டையில் பிசைந்து சாப்பிடலாம்.
    பச்சைத் தேநீர் (கிரீன் டீ) ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்தது என்பதால், ரத்தக் கொதிப்பு நோயாளிக்கு வரக்கூடிய மாரடைப்பைத் தடுக்க உதவுமாம்.
    மஞ்சள் தூள், லவங்கப்பட்டை மணம்ஊட்டிகள் இதயம் காக்கும் என வெள்ளைக்கார விஞ்ஞானிகள் இப்போது ஆமோதிக்கிறார்கள்!
    வேகவைக்காத சின்ன வெங்காயம், வெந்த வெள்ளைப் பூண்டு இல்லாமல் உங்கள் அன்றாட உணவு இருக்க வேண்டாம்!

    Last edited by chan; 27th Oct 2014 at 04:14 PM.

  7. #617
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ரத்தக் கொதிப்பு நோயாளிகள் அவசியம் பின்பற்றவேண்டியவை!
    45 நிமிடங்களில் 3 கி.மீ நடைப்பயிற்சி.
    30 நிமிட உடற்பயிற்சி/சைக்கிள் ஓட்டல்.
    25 நிமிடங்கள், யோகாவில் சூரிய வணக்கமும் ஆசனங்களும்.
    15 நிமிடங்கள் பிராணாயாமம். அதிலும் குறிப்பாக, சீதளி பிராணாயாமம்.
    20 நிமிடங்கள் தியானம்.
    6-7 மணி நேரத் தூக்கம்.
    மேலே சொன்னவற்றில் கடைசி பாயின்ட் கட்டாயம். சாய்ஸில் விடவே கூடாது. முந்தைய பயிற்சிகளில் நீங்கள் எத்தனை பின்பற்ற முடியுமோ, அத்தனை நல்லது!


  8. #618
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சிறுநீரகக் கல் உருவாவது எப்படி?
    உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரை, இந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர்.
    “கிட்னி ஸ்டோன்’ என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில் ஏற்படலாம்; சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம்; சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு பொறுத்து, வலியின் தீவிரம் இருக்கும் எனக் கருதுவது தவறு. பெரிய கல், வலியே இல்லாமல் வளரலாம்; கண்ணுக்கே தெரியாத சிறிய கல், அதிக வலி கொடுக்கலாம். கல் உருவாவதால் ஏற்படும் வலியை, பிரசவ வலியோடு ஒப்பிடலாம். எவ்வளவு பெரிய பலசாலியையும் ஆட்டிப் போட்டு விடும் இந்த வலி. சிறுநீர் செல்வதில் சிரமம் ஏற்படுவதில் துவங்கி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்திலிருந்து அலை போல வலி உருவாகி, பிறப்புறுப்பு வரை பரவும். சிரமப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்துடன் காணப்படும். சிலருக்கு சொட்டு சொட்டாகவும் வெளியேறும். இதனால் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல் உண்டாகும். வெப்ப பகுதிகளில் வசிப்போருக்கு, உடலில் நீர்சத்து குறையும் போது, இதுபோன்று கற்கள் அடிக்கடி ஏற்படும். 40 – 60 வயதுள்ள ஆண்களிடையே இந்த உபாதை அதிகம் காணப்படுகிறது. பரம்பரையாகவும் இது ஏற்படலாம். கல் உருவாகி, சிகிச்சை எடுத்து கொண்டோரில் 50 சதவீதத்தினருக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கல் தோன்ற வாய்ப்பு உண்டு. உடலில் உள்ள மொத்த ரத்தமும், சிறுநீரகம் வழியே செல்கிறது. ரத்தத்திலிருந்து நீரையும், ரசாயனங்களையும், சிறுநீரகம் பிரிக்கிறது. ரசாயனங்கள் கல் ஆகாமல் இருக்க, சிறுநீரகமும் சில கரைப்பான்களை சுரக்கிறது. அதையும் மீறி தோன்றும் சிறு கல்கள், ஒன்றாகச் சேர்ந்து பெரிய கல்லாக உருவாகி விடுகின்றன. சிறுநீரகத்தில் கரைப்பான்கள் சுரப்பதில், பரம்பரையாகத் தடை கொண்டவர்களுக்கு, கல் உருவாவது சகஜம். அடிக்கடி தொற்று ஏற்பட்டாலோ, சிறுநீர் அடர்த்தியாக இருந்தாலோ, அடிக்கடி வெகுநேரம் சிறுநீரை அடக்குபவர்களுக்கோ கூட, கரைப்பான்கள் சுரப்பதில் பிரச்னை ஏற்படும். மூட்டு வீக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் உப்பு அதிகம் சுரப்பதாலும், சிறுநீரகத்தில் கல் உருவாகும்.
    எந்த அறிகுறியும் தெரியாத சிறுநீரகக் கல்லை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் அல்லது எக்ஸ்-ரே எடுத்து பார்த்து அறிந்து கொள்ளலாம். வலி போன்ற பொதுவான அறிகுறிகளைச் சொன்னாலே, கல் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க, இது போன்ற பரிசோதனைகளை எடுக்குமாறு, டாக்டர் பரிந்துரைப்பார். சில நேரங்களில், ஐ.வி.பி., என்ற, நரம்பில் சாயம் ஏற்றி, கல் இருக்கும் இடத்தையும், அதன் அளவையும் கண்டறியும் பரிசோதனையும் செய்யப்படுகிறது. கற்களை நீக்க, பெரும்பாலான நேரங்களில் கடுமையான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. நாள் ஒன்றுக்கு, நான்கைந்து லிட்டர் தண்ணீர் குடிப்பவருக்கு, சிறுநீரகத்தில் கல் இருந்தாலும், சிறுநீர் மூலம் வெளியேறி விடும். வலி ஏற்பட்டால், வலி நிவாரணி மாத்திரைகள் சாப்பிடலாம். கல்லில் உள்ள ரசாயனங்கள் குறித்து அறிந்து கொண்டால், அதை வைத்து, மருந்து, உணவுக் கட்டுப்பாடுகளை டாக்டர் பரிந்துரைப்பார். தொடர்ந்து கடும் வலி, மிகப்பெரிய கல் ஆகியவை இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அதை அகற்ற முடியும். கல் வளர்ந்து கொண்டே இருப்பது, தொடர் தொற்று ஆகியவை, சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதால், இதுபோன்ற நிலைகளில், அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சிறுநீரகத்தை திறந்து, அறுவை சிகிச்சை மேற்கொள்வது இல்லை. கல் இருக்கும் இடத்தில், உடலின் மேற்புறம், மின் அலைகள் உருவாக்கப்படுகிறது. இந்த அதிர்வலைகள், கல்லைத் தாக்கி, அதை உடைக்கின்றன. பொடியான கற்கள், சிறுநீர் வழியே வெளியேறி விடும். சிறுநீர் பாதையை கல் அடைத்து கொண்டால், செயற்கை குழாய் பொருத்தி கல்லை அகற்றலாம். வேறு சிகிச்சை முறைகளும் உள்ளன. இந்த உபாதை, 21ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருத வேண்டாம். 7,000 ஆண்டுக்கு முன்னால் இறந்த மனிதர்களிடமும் இது காணப்பட்டது. தற்போது சிறு வயதினர், குறிப்பாக குழந்தைகளிடம் இந்த உபாதை காணப்படுகிறது. சீனாவில், பால் பவுடரில் உள்ள மெலாமைன் என்ற பொருளால், குழந்தைகளுக்கு சிறுநீரகக் கல் உருவாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில், குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருப்பது, உடல் பயிற்சி இல்லாமல் இருப்பது, காற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது போன்ற காரணங்களால், கல் உருவாகிறது.
    சிறுநீரகக் கல் உருவாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள் உள்ளன.
    * பச்சை டீ அல்லது பால் கலக்காத டீ குடிப்பது நல்ல பலனைத் தரும். அதில் உள்ள ஆன்டியாக்சிடன்ட் தன்மை, சிறுநீரகத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும்.
    * சாத்துக்குடி, எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. அவற்றில் உள்ள அமிலம், சிறுநீரில் கலப்பதால், கல் உருவாகும் வாய்ப்பைத் தடுக்கிறது.
    * வாழைத் தண்டு சாப்பிடுவது, அதன் சாறை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிப்பது ஆகியவை நல்ல பலனைத் தரும்.
    * மட்டன், மீன் சாப்பிடுவதைக் குறைப்பதும் கல் உருவாவதை தடுக்கும்.
    * தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது மிக மிக நல்லது. கூடவே, தினமும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். தூங்க செல்வதற்கு முன், ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு தூங்குவதுநல்லது.

    umasaravanan likes this.

  9. #619
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சீறுநீரக கல்
    அந்தக் காலத்தில் எல்லாம் இப்படி ஒரு நோயே இல்லை.
    பல்வேறு நோய்களைக் குறித்து பேசும்போது வெளிப்படுத்தப்படும் இத்தகைய அங்கலாய்ப்பு, கிட்னியில் ஏற்படும் கல் அடைப்பு பற்றிய உரையாடலின் போதும் பலரிடம் வெளிப்படுகிறது.
    இது உண்மைதானா?
    நிச்சயமாக இல்லை என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
    7000 ஆண்டுகள் பழமையான எகிப்து மம்மிகளின் கிட்னிகளில், கல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
    அப்படியானால், கிட்னிக்குள் கல் உருவாகும் தன்மை, மனித இனத்தின் தொடக்கம் முதலே இருந்து வந்துள்ளது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
    தற்போது ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுவதாகவும், இவர்களில் 5 லட்சம் பேர் வரும்போதே அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நிலையில் வருவதாகவும் கூறப்படுகிறது.
    ஆனால் தற்போதைய அனைத்து மருத்துவ முறைகளிலும், சிறுநீரகத்தில் கல் உருவாவதை தடுப்பதற்கும், உருவான பின்னர் கரைப்பதற்கும் எளிய சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. இந்த நோய் எந்த அளவிற்கு பரவலான நோயாக மாறி இருக்கிறதோ அந்த அளவிற்கு எளிதில் குணப் படுத்தக்கூடிய நோயாகவும் உள்ளது.
    கிட்னி கல் என்றால் என்ன?
    சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரியற் பொருட்கள். இவை இரண்டும் தகுந்த விகிதத்தில் இருப்பதால்தான் அவை படிகங்களாகவோ,
    (crystals) திடப்பொருள்களாகவோ, சிறுநீர்த் தாரைகளில் படியாமல் இருக்கின்றன. சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் இவற்றின் விகிதங்களை மாற்றி இவற்றைச் சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் கற்களாக உருவாகின்றன.
    கிட்னியில் கற்கள் உருவாவதற்கான காரணங்கள்
    கிட்னியில் கல் உருவாவதற்கான காரணங்களை அறுதியிட்டுக் கூறமுடியவில்லை.
    இந்நோய் சுலபமாக ஏற்படுவதற்கான உடல் கூறு கொண்டவர்களுக்கு, உணவுப்பொருள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் உணவுப் பழக்கம் மட்டுமே இதற்கு காரணம் என்று கூறமுடியாது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
    கால்சியம், பாஸ்பேட் மூலகங்கள் அடங்கிய கற்களே மிகுதியாக காணப்படுகின்றன. இம்மூலகங்கள் சிறுநீரில் கூடுதலாக வெளிப்படும் நோய்களில் இவை தோன்றுகின்றன. பாரா தைராய்டு மிகுதி நோயும் (Hyperparathyroidism), சிறுநீர்ப் பாதையில் தொற்றுகள் (Urinary tractinfections), , சிறுநீரக நோய்கள் (Cystic kidney diseases) போன்ற நோய்களும் இவ்வகைக் கற்கள் ஏற்பட முக்கியமான காரணங்களாகும்.
    யூரிக் அமிலம், புரதச் சத்து சிதைப்பிற்கு பின்பு உண்டாகும் கழிவுப் பொருளாகும். இது ரத்தத்தில் 6 மிலி கிராம் அளவில் இருக்க வேண்டும். பிறவி நொதிக்குறைகள் சிலவற்றில் யூரிக் அமிலம் இந்த அளவை தாண்டும்போது மிகுதியான யூரிக் அமிலம் சிறுநீரில் வரும். அப்போது அது கற்களாக படிவதுண்டு.
    நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது. அதிகப்படியாக கால்சியம் நாம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ எடுக்கும்போது அவை சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறுகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் கால்சியம் மூலகங்கள் oxalate மற்றும் phosphate உடன் சேர்ந்து சிறுநீர் தாரைகளில் படிகங்களாக படிந்து பின் கற்களாக மாறுகின்றன.
    சில சிறுநீர் பெருக்கி மருந்துகள் (Diuretics) கால்சியம் கலந்த antacid மருந்துகள் கல் உருவாகக்கூடிய வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
    பிறவியிலேயே ஏற்படும் சில நொதிக் குறைகளில் சிறுநீரில் ஆக்ஸாலிக் அமிலம், சிஸ்டீன் போன்ற வேதியல் பொருள்கள் மிகுதியாக வெளிவரும். இவைகளும் கிட்னியில் கல் உருவாக ஏதுவாகிறது.
    கிட்னி கற்கள் யாருக்கு வரும்-
    பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களக்கு இந்த நோய் வருகிறது. பெண்களைப் பொறுத்தவரை, 50 வயதைத் தாண்டும்போது இந்த நோய் வருகிறது. ஒருவருக்கு ஒருமுறை கிட்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. நோயாளியின் பெற்றோர்களுக்கோ அல்லது முன்னோர்களுக்கோ, இந்த பாதிப்பு இருந்தாலும், இந்நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
    contd..


    umasaravanan likes this.

  10. #620
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கிட்னி கல் – அறிகுறிகள்
    சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க்குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது தாங்கமுடியாத வலி ஏற்படும்.
    சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும்.
    சில நேரங்களில் சிறுநீர் ரத்தத்துடன் கலந்து வெளியேறும்.
    நீர்த்தாரையில் எரிச்சல் உண்டாகும்.
    அளவில் சிறியதான கற்கள் சிறுநீர் மூலமாகவே வெளியேறிவிடும். தண்ணீர் அதிகம் அருந்தினால் சிறுநீர் கல் தானாகவே கரைந்து வெளியேறும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் கல்லை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும்.
    சிறுநீரக கற்களை எக்ஸ் கதிர், கணினி அச்சு வெட்டு, நுண் ஒலி துருவு படங்கள் ஆகியவற்றின் மூலம் அறியலாம். சிறுநீரக கற்கள் உள்ள நோயாளி தாமாகவே வெளிக்கொணரும் கற்களைஆராய்ந்து அதில் கால்சியம், பாஸ்பேட், ஆக்ஸலேட்களும் மிகுதியாக இருப்பதை அறியலாம். இவற்றை கொண்டு கற்கள் உருவாவதற்கான காரணங்களை அறிந்து அவற்றை அகற்ற வேண்டும்.
    ஆராய்ச்சியின் முடிவுகள்
    Eric taylor MD மற்றும் அவருடைய சக ஆராய்ச்சியாளர்களும் நடத்திய மிகப் பெரிய ஆய்வின் சாராம்சம் :
    மூன்று பிரிவுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
    ஒன்று :-Health professionals follow up study
    45,821 ஆண்களிடையே 18 வருட காலம் நடத்தப்பட்ட ஆய்வு
    இரண்டு :- Nurses Health study I
    94,108 வயது முதிர்ந்த பெண்களிடையே 18 வருட காலம் நடத்தப்பட்ட ஆய்வு.
    மூன்று :- Nurses Health study II
    1,01,837 இளம் பெண்களிடையே 14 வருட காலம் நடத்தப்பட்ட ஆய்வு
    Dr. Taylor குழு இந்த மூன்று பிரிவானவர்களில் ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் எட்டு விதமான அளவுகோல்களை வைத்து ஆய்வு மேற்கொண்டனர். DASH (Dietary Approaches to Stop Hypertension) என்பது இந்த ஆய்வின் பெயர்.
    இதில் உள்ள 8 அளவுகோள்கள் யாதெனில்,
    1. அதிகமான பழங்கள் அன்றாட உணவில் சேர்ப்பது.
    2. அதிகமான காய்கறிகள் அன்றாடம் உட்கொள்வது.
    3. அதிகமான பருப்பு மற்றும் விதை (Nuts & Legumes) வகைகள் உட்கொள்வது.
    4. குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்கள் உட்கொள்வது.
    5. முழுமையான தானிய வகைகள் (மேல் தோல் நீக்கப்படாத தானிய வகைகள்) சேர்த்தல்
    6. குறைந்த அளவிலான உப்பு சேர்த்தல்.
    7. குறைந்த அளவிலான இனிப்பு வகைகள் உட்கொள்ளுதல்.
    8. குறைந்த அளவிலான இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உட்கொள்ளுதல்.
    இப்படிப்பட்ட உணவு முறைகளை கடைபிடித்தவர்களிடையே அதிக ரத்த அழுத்தம் (Hypertension), நீரிழிவு (Diabetes) , சிறுநீரக கற்கள் (Kidney stone) உருவாவது போன்ற நோய்கள் வரும் வாய்ப்பு குறைவான அளவே உள்ளது என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்துள்ளனர்.
    நாம் இந்த ஆய்வின் மூலம் அறிந்துகொள்ள வேண்டியது :–
    மேற்கொண்ட உணவுப் பழக்கங்களை பின்பற்றினால், சிறுநீரக கல் உருவாகும் நிலை தடுக்கப்படும் என்பதே.
    சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க வந்த பின் திரும்ப வராமல் தடுக்க அறுவை சிகிச்சைக்குப் பின் திரும்பவும் கல் உருவாகாமல் தடுக்க மேற்கண்ட உணவு முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். அதாவது,
    *நார்ச்சத்து அதிகமான காய்கறிகள், பழ வகைகள், முழு தானிய வகைகள் மற்றும் பீன்ஸ் இவைகளை அதிகமாக ஆகாரத்தில் சேர்க்க வேண்டும்.
    *முக்கியமாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். 8 முதல் பத்து தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும்.
    *பாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளில் கால்சியம் அதிகம் இருப்பதால் அவற்றை குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    *வைட்டமின் டி சத்துள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
    *மீன், உணவுக்காக வளர்க்கப்படும் லெகான் கோழிகள் போன்றவை சிறுநீரில் அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்யும். எனவே இவற்றை உட் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
    *பொரிக்கப்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
    *திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, ராச்ப்பெர்ரி போன்ற பழவகைகளையும், பூசணிக்காய், வாழைத்தண்டு, போன்ற நீர்ச்சத்து மிகுந்த காய்களையும் நம் அன்றாட உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    *வாட்டர் மிலன், ஆப்பிள், எலுமிச்சை பழச்சாறுகள் சிறுநீரக கற்களைக் கரைக்கும் தன்மை கொண்டவை.
    * புரோட்டீன் அதிகமுள்ள இறைச்சி போன்ற பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.
    * சாக்லேட், காஃபி, கீரைகள், டீ போன்றவற்றில் ஆக்ஸலேட் அதிகம் உள்ளது. இவற்றை தவிர்க்க வேண்டும்.

    umasaravanan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter