Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #661
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சிலேத்தும நாடி:

    சிலேத்துவம் அதிகரித்தால் உடல் கரையும், வற்றும், வெளுக்கும், குளிர்ந்து நடுங்கும், உணவு சாப்பிடப் பிடிக்காது. விக்கல், வாந்தி, இருமல், மேல் மூச்சு, வியர்வை போன்றவை இருக்கும். நெஞ்சு மற்றும் விலாப்பகுதியில் வலி இருக்கும். உமிழ்நீர் அதிகமாக சுரக்கும். இருமினால் ரத்தம் வெளியாகலாம். சிறுநீர் குறைவாகப் போகும்.

    உடல் அறிகுறிகள்:

    உடல் அடிக்கடி வியர்க்கும். முகம், கண்விழி, நாக்கு, பல், மலம், சிறுநீர் ஆகியவை வெளிர் நிறத்தில் இருக்கும். கண்களில் பீளை கட்டும்.

    மனித உடலில் உள்ள மொத்த நாடிகள்:

    தலையில் 15000
    கண்களில் 4000
    செவியில் 3300
    மூக்கில் 3380
    பிடரியில் 6000
    கண்டத்தில் 5000
    கைகளில் 3000
    முண்டத்தில் 2170
    இடையின் கீழ் 8000
    விரல்களில் 3000
    லிங்கத்தில் 7000
    மூலத்தில் 5000
    சந்துகளில் 2000
    பாதத்தில் 5150
    மொத்தம் 72000


    Sponsored Links

  2. #662
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    குழந்தை வரம் தரும் இயற்கை மூலிகைகள்

    இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள்.

    ஆண்மை குறைபாடோ, மலட்டுத்தன்மையோ இந்த குறைபாடுகளை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் எளிதில் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

    * காதலின் சின்னம் ரோஜா மலர். இதிலிருந்து தயாரிக்கப்படும் குல்கந்து இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குல்கந்து உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.

    * பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த லேகியத்தை தினசரி சாப்பிட்டு வர உடல் வலிமை பெறுவதோடு பொலிவடையும் அதோடு தாது விருத்தி ஏற்படும். பூசணிக்காயின் விதைகள் ஆண்மை குறைபாட்டினை நீக்கும். இந்த விதைகளை சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியடையும்.

    * சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும். மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும். 48 நாட்கள் இந்த பொடியை குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்


  3. #663
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை:-


    நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.

    நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அதுகொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாகஇருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகுஎலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலைசெடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ளபறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்லஉதாரணம்.

    நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம்விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும்பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்என்கிறார். சென்னை அரும்பாக்கம் ரத்னா மருத்துவ மனையின்இயக்குனர் டாக்டர் திருத்தணிகாசலம்.

    1.நீரழிவு நோயை தடுக்கும்
    2.பித்தப் பை கல்லைக் கரைக்கும்
    3.இதயம் காக்கும்
    4.இளமையை பராமரிக்கும்
    5.ஞாபக சக்தி அதிகரிக்கும்
    6.மன அழுத்தம் போக்கும்
    7.கொழுப்பை குறைக்கும்
    8.கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி

    நிறைந்துள்ள சத்துக்கள்:

    100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.

    கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
    நார்சத்து- 9 மி.கி.
    கரையும் கொழுப்பு - 40 மி.கி.
    புரதம்- 25 மி.கி.
    ட்ரிப்டோபான்- 0.24 கி.
    திரியோனின் - 0.85 கி
    ஐசோலூசின் - 0.85 மி.கி.
    லூசின் - 1.625 மி.கி.
    லைசின் - 0.901 கி
    குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
    கிளைசின்- 1.512 கி
    விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
    கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) - 93.00 மி.கி.
    காப்பர் - 11.44 மி.கி.
    இரும்புச்சத்து - 4.58 மி.கி.
    மெக்னீசியம் - 168.00 மி.கி.
    மேங்கனீஸ் - 1.934 மி.கி.
    பாஸ்பரஸ் - 376.00 மி.கி.
    பொட்டாசியம் - 705.00 மி.கி.
    சோடியம் - 18.00 மி.கி.
    துத்தநாகச்சத்து - 3.27 மி.கி.
    தண்ணீர்ச்சத்து - 6.50 கிராம்.

    போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பிஉள்ளது.

    நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம்உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான்இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு .


  4. #664
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்:-


    1. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
    2. உடலின் pH ஐ சீராக்குகிறது.
    3. உடல் எடையைக் குறைக்கிறது.
    4. சமிபாட்டை வேகப்படுத்துகிறது.
    5. சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்கிறது.
    6. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக்குறைக்கிறது.
    7. வாய்த்துற்நாற்ற த்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது.
    8. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது.
    9. stress ஐ குறைக்கிறது


  5. #665
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மூட்டு வலியை விரட்ட:-


    மூப்பு வரும்போது மூட்டு வலியும் தானாக வந்து விடுகிறது. இளம், நடுத்தர வயதினரையும் இந்த பிரச்னை விட்டுவைப்பதில்லை. கொஞ்சம் உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவு என கவனமாக இருந்தால் மூட்டு தேய்மானத்தையும், அதனால் ஏற்படும் மூட்டுவலியையும் தவிர்க்கலாம் என்கிறார் எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரேம்நாத்.
    எலும்பு, நரம்பு மற்றும் தசைகள் நம் உடல் இயக்கத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. நிற்கவும், உட்காரவும் நம் உடல் வளைந்து கொடுக்க உதவுபவை மூட்டுகள். இதில் முழங்கால் மூட்டு மிகவும் சிக்கலானது. எலும்பின் அசைவுக்கு உதவியாக அதன் மீது கட்டிலேஜ் என்ற ஜவ்வு உள்ளது. வயதாகும் போது இந்த ஜவ்வில் ஏற்படும் தேய்மானத்தால் எலும்பில் கிராக் மற்றும் பிராக்சர் போன்ற பிரச்னைகள் வருகிறது. இதன் காரணமாக வலி ஏற்படுகிறது. உடலின் எடையை தாங்கும் விதத்தில் முழங்கால் மூட்டு வலிமையுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூட்டு வெளியில் தெரியும்படி இருப்பதால் எளிதில் அடிபட்டு காயங்களுக்கு உள்ளாகிறது. இதனால் முழங்கால் மூட்டுப் பிடிப்பு மற்றும் பிறழ்வு ஏற்படுகிறது.
    சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல் ஆகியவற்றால் மூட்டுத்தசை நாண் அலர்ஜி ஏற்படலாம். மூட்டின் அதிக பயன்பாட்டால் அதன் முன் பக்கத்தில் வலி ஏற்படும். தசைநார் வலி பிரச்னை இருக்கும் போது முழங்கால் மூட்டு வலி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. எலும்புத் தேய்வு, மூட்டு நாண் கிழிதல் போன்ற பாதிப்புகளின் காரணமாகவும் வலி ஏற்படலாம். சத்தான உணவு மற்றும் முறையான உடற்பயிற்சி, உடலை வேலை வாங்குவதில் கவனம் ஆகியவை அவசியம். சிறிய பிரச்னை தோன்றும் போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது. மூட்டுப் பிரச்னைகளுக்கு பிசியோ தெரபி பயிற்சிகள் மூலம் தீர்வு காண முடியும்.

    பாதுகாப்பு முறை

    விபத்து, திடீர் அசைவு, அதிக இயக்கம் ஆகியவற்றால் ஏற்படும் தசை வலிகளை சில நடைமுறைகளால் தவிர்க்கலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் தசைகளை நீட்டி மடக்க வேண்டும். சூடான ஒத்தடம் கொடுப்பது நல்லது. நிறைய தண்ணீர் குடிப்பதும் அவசியம். புரதங்கள் எலும்புக்கான கட்டமைப்பை வலுப்படுத்தும். கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுக்கள் எலும்புக்கு வலு சேர்ப்பதால் உண்ணும் உணவில் கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

    சிறு வயதில் விளையாடும் போது ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக கூட மூட்டு வலி ஏற்படலாம். முதுகுவலி மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் குதித்தோடும் விளையாட்டுகளை தவிர்க்கலாம். குழந்தைகளுக்கு எலும்பின் இறுதிப் பகுதியில் எலும்பு வளரும் நுனி உள்ளது. இந்த வளரும் நுனி பாதிக்கப்பட்டால் எலும்புகளின் வளர்ச்சி தடைபடும்.

    பெரியவர்கள் வேலை செய்யும் போது ஒரே வேலையை திரும்பத் திரும்பச் செய்யாமல் இடையிடையே ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்வதன் மூலம் வயதாவதால் ஏற்படும் தசை தேய்மானத்தை தடுக்கலாம். தசையை வலுவாக்கும் பயிற்சிகள் இதற்கு உதவும். முழங்கால் மூட்டு உடலின் எடையை தாங்குவதால் அதிக எடை வலியை ஏற்படுத்தும். இதை தவிர்க்க முறையான எடைக்குறைப்பு வழிகளை மேற்கொள்ளலாம். உணவில் உப்பின் அளவை குறைக்கவும். நீண்ட நேரம் பயணம் செய்யும் போது இடையில் நடப்பதும், கால்களை நீட்டி மடக்குவதும் நல்லது. மூட்டு பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைபடி செயல்படுவது பாதுகாப்பானது என்கிறார்.


  6. #666
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    முட்டை சாப்பிடுங்க:-


    ஒரு முட்டையில் 6 கிராம் புரதமும் ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களும் இருக்கிறது. மேலும் இதில் வைட்டமின் டி உள்ளது.

    முட்டையில் சரியான விகிதத்தில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஒரு முட்டையில் 5 கிராம் கொழுப்பு உள்ளது, அதில் 1.5 கிராம் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. முட்டையின் மஞ்சள் கருவில் 300 மைக்ரோ கிராம் கொலைன் சத்து உள்ளது. இது மூளை, நரம்பு மண்டலம் மற்றும் இதயக் குழாய் செயல்பாடுகளுக்கு மிகவும் நல்லது.

    முட்டையை தொடர்ந்து சாப்பிட்டு வர, மார்பக புற்று நோய் வருவதை தடுக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

    முட்டையைப் பற்றி பல தவறான புரிதல்கள் இருந்து வருகின்றன. முட்டை சாப்பிடுவதற்கும் இதய நோய்களுக்கும் எவ்வித நேரடித் தொடர்பும் இல்லை. தினமும் அளவாக முட்டையை உணவில் சேர்த்துக்கொண்டால், ஸ்ட்ரோக், ரத்த உறைவு போன்ற பிரச்னைகளைத் தவிர்க்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, அழகுக்கும் முட்டை நல்ல பலன் தரும். முட்டையில் சல்பர் சத்து, தாது உப்பு மற்றும் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், தலைமுடி மற்றும் நகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்


  7. #667
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பாத்திரங்களாலும் உண்டு பலன்:-


    உணவு, நீர், தானியங்கள், தயிர், மோர், நெய், சாறு, எண்ணெய் போன்ற பொருள்களைச் சேமிக்கவும், சமைக்கவும் பாத்திரங்கள் தேவைப்படுகின்றன.
    பயன்படுத்தப்பட்டு வருகின்ற பாத்திரங்கள் காலத்துக்கும் நாகரிக வளர்ச்சிக்கும் ஏற்றவாறு மாறிக்கொண்டே வந்துள்ளன.

    உலோகங்கள் கண்டறியபட்டாத காலத்தில் மண், கல், பீங்கான், மரப்பட்டை, மூங்கில், பரங்கி, சுரக்காய், தேங்காய், திருவோடு, இலைகள் போன்றவை பாத்திரங்களாகப் பயன்பட்டன. பின்னர் உலோகங்கள் கண்டறியப்பட்டன. தங்கம், வெள்ளி, பித்தளை, அலுமனியம், இரும்பு, வெண்கலம், எவர்சில்வர் முதலியவை பயன்படுத்தப்பட்டன. தற்போது, காகிதம், பிளாஸ்டிக் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
    எளிதாகக் கிடைக்க வேண்டும்; பயன்படுத்தும்போது இலகுவாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே, புத்தம்புது பாண்டங்கள் தோன்றின.

    செல்வந்தர்களும், மன்னர் போன்றவர்களும் விலை மதிப்பை அடிப்படையாகக் கொண்டு பாத்திரங்களைச் சேர்த்துக்˘கொண்டனர். உதாரணமாக, தங்கம், வெற்றி பாத்திரங்கள் ஏழை எளிய மக்களால் பயன்படுத்த முடிவதில்லை. வருவாய் குறைந்தவர்கள், மட்பாண்டமோ, அலுமினிய பாத்திரமோ பயன்படுத்தக் கூடியவர்களாக இருக்கின்றனர்.

    பாத்திரங்களைப் பயன்படுத்தும் முன் அவற்றினால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளை கருத்திற் கொண்டால், உடல் நலத்துக்கு ஏற்றதாக இருக்கும்.
    பயன்கருதாது பயன்படுத்துவோர் ஏராளம். மாவீரன் நெப்போலியன், தான் உணவு உண்பதற்காக அலுமினியத்தினால் செய்யப்பட்டு தட்டு வைத்திருந்தாராம். அன்றைய காலத்தில் அலுமினியம் விலை மதிப்புடையதாக இருந்திருக்கிறது. இன்றைக்கு அது ஏழைகளின் பாத்திரமாக ஆகியிருக்கிறது.
    பாத்திரங்களினால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளைக் குறிப்பிட வரலாற்று நிகழ்வு ஒன்றைக் குறிப்பிடலாம்.
    மாவீரன் அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தார். அப்போரில், ஈடுபட்ட போர் வீரர்கள் தீராத வயிற்று வலியினால் அவதியுற்றனர். ஆனால் போர்ப் படைத்தளபதிகள் எவ்வித நோயும் இல்லாமல் நலமுடனே இருந்தார்கள்.

    அதற்குக் காரணம், படைவீரர்களெல்லாம் நீர் அருந்துவதற்காக வெள்ளீயத்தினாலான குவளைகளைப் பயன்படுத்தினர். படைத்தளபதிகளோ வெள்ளியினாலான குவளைகளைப் பயன்படுத்தினர்.
    வெள்ளிக் குவளையைப் பயன்படுத்தியவர்களுக்கு எந்த நோயுமில்லை. வெள்ளீயத்தைப் பயன்படுத்தியவர்கள் வயிற்று வலியால் அவதியுற்றனர்.

    படைவீரர்களுக்கு ஏற்பட்ட வயிற்று நோயினால், போரிட போதிய வீரர்கள் இல்லாமல் போயினர். அதனால், மாவீரர் அலெக்சாண்டர் தன்னாட்டுக்குத் திரும்ப நேர்ந்தது. ஆகவே, பாண்டங்களைப் பயன்படுத்துமுன் அதனால் உண்டாகக்கூடிய நன்மை தீமைகளை அறிந்து கொள்ள வேண்டும். அறிவியல் ஆய்வின்படி, வெள்ளியில் நோய்களை உண்டாகக்கூடிய 650 நுண்ணுயிர்களை அழிக்கும் தன்மை உள்ளது. மேலும் ஒரு லிட்டர் தண்ணீரைச் சுத்தஞ்செய்ய 0.1 கிராம் வெள்ளியே போதுமானது. தண்ணீரிலுள்ள நுண்கிருமிகளை வெள்ளி தூய்மைப் படுத்துவதால், பாலை வெள்ளிப் பாத்திரத்திலிட்டு அருந்துவதால் பாலின் மூலம் பரவும் நுண்கிருமிகள் அழிக்கப்படுகின்றன.

    நோய்க்கிருமிகளை அழிக்கும் திறன் கொண்ட வெள்ளியில் பாத்திரங்களைச் செய்துகொண்டு, அதில் உணவுகளை உட்கொண்டால் பெரும்பகுதி நோய்க் கிருமிகளின் பாதிப்பிலிருந்து விடுபடலாம்.
    வெள்ளி விற்கும் விலையில் வெள்ளிப் பாத்திரங்களை எப்படிப் பயன்படுத்துவது என்கிறீர்களா? விடுங்கள் கவலையை, அடுத்ததைப் பார்க்கலாம்.

    செம்பு பாத்திரம்
    தமிழர் நாகரிகம் செம்பு நாகரிகத்தில் தொடங்கியதாகக் கூறுவர். செம்பு அதிக அளவில் கிடைக்கப் பெற்றதால் தேவையான கருவிகளும் பாத்திரங்களும் செம்பினால் செய்து கொண்டனர். சிந்து, கங்கைச் சமவெளிகளில் வாழ்ந்திருந்த பழந்திராவிட மக்கள் அறுவை மருத்துவத்துக்காகச் செப்புக் கத்திகளைப் பய்னபடுத்தியுள்ளனர். அறுவை மருத்துவத்துக்காகச் செம்பைப் பயன்படுத்துவதனால், பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது என்று இன்றைய அறிவியலார்கள் கண்டறிந்துள்ளனர்.

    தண்ணீரைச் சேமித்து வைப்பதற்காகவும் செம்புப் பாத்திரங்களை அதிக அளவில் பயன்படுத்தியுள்ளார்கள்.
    சித்தர்களும், முனிவர்களும் பயன்படுத்தி வந்த கமண்டலங்கள் செம்பினால் ஆனவை என்பது குறிப்பிடத்தது. இயற்கையாகவே செம்பினாலான பாத்திரங்களில் நீர் வைத்திருந்தால், நீரிலுள்ள தீய நுண்ணுயிர்கள் (விவீநீக்ஷீஷீ ஷீக்ஷீரீணீஸீவீsனீs) அழிந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது.
    செம்புப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், ரத்தத்திலுள்ள பித்த நோய்கள், சந்தி, கபம், பிலீகம், மந்தம், வெண்மேகம், அழலை, சூதக நோய், புண், பிரந்தி, சுவாசநோய்கள், கிருமி தாதுநட்டம், கண் நோய் ஆகியவை நீங்கிவிடும் என்பது தெரிகிறது.
    உலக நல நிறுவனம் (கீபிளி) குடிநீரைப் பற்றிக்கூறும் செய்தியில், குடிநீரில் கோலிஃபோர்ம் பாக்டீரியா உள்ள நீரைப் பருகினால் டைபாஃய்ட் சுரமும், வயிற்றுப் போக்கு நோய்களும் ஏற்படும் என்று தெரிவித்திருக்கிறது. ஆனால் செம்புப் பாத்திரத்தில் தண்ணீரை வைத்திருந்தால் கோலிஃபார்ம் பாக்டிரியா முற்றிலும் அழிந்துவிடுகிறது.


  8. #668
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வீட்டில் எளிதாய் கிடைக்கும் உணவுப் பொருட்களை வைத்து ஆரோக்கியமாக வாழ பழகிக்கொள்ளுங்கள்.

    கொண்டைக் கடலை சுண்டல் ஒரு கப் மற்றும் 100 கிராம் தேங்காய் சாப்பிட்டு வந்தால் துத்தநாக உப்பு பெற முடியும். இது நமது கை நகங்களையும், தோலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்று கூறப்படுகிறது.

    அதேபோல் பூசணிக்காயில் உள்ள வைட்டமின் ஏ புற்று நோய் வராமல் 70 சதவீதம் பாதுகாப்பளிக்கிறது. சிறநீரக கற்கள் ஏற்படாமல் தடுக்கும் வல்லமையும் பூசணிக்காய்க்கு உண்டு.

    வாழைப்பழத்தின் மருத்துவ குணம்...

    எளிதில் கிடைக்கும் பழ வகைகளில் ஒன்று வாழைப்பழம். மருத்துவ குணம் நிறைந்த பழமாக வாழைப்பழம் திகழ்கிறது. ஆப்பிளில் உள்ளதை விட 4 மடங்கு கார்போ ஹைடிரேட்டும், 3 மடங்கு பாஸ்பரசும், 5 மடங்கு வைட்டமின் ஏ வும் மற்றும் இரும்புச் சத்தும் இதில் நிறைந்துள்ளன. ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் உப்பான பொட்டாஷியம் வாழைப்பழத்தில் ஏராளமாக அடங்கி உள்ளது. உடனடி உற்சாகத்தையும் பயனையும் தரக்கூடியது இப்பழம்.

    உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்தி தொடர்ச்சியாக காய்ச்சலில் படுப்பதை தடுக்கும் ஆற்றல் வாழைப்பழத்திற்கு உண்டு. வாழைப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்த சோகையையும், பொட்டாசியம் ஸ்ட்ரோக்கையும் தவிர்க்கும் வல்லமை பெற்றுள்ளது.

    வாழைப்பழம் ஞாபக சக்தி, மூளையின் சக்தி அதிகரிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலும் இவற்றிற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது


  9. #669
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வீட்டு வைத்தியத்தில் சிறந்தது லெமன்கிராஸ்:-

    லெமன்கிராஸ்(lemongrass) இருமல், சளி, காய்ச்சல் ஆகியவற்றை சமாளிக்க உதவியாக இருக்கிறது. இதுமட்டுமன்றி பல வழிகளில் நமது ஆரோக்கியத்திற்கு உதவி புரிகிறது. மருத்துவரிடம் சென்றால் சளி, இருமல் என அனைத்திற்கும் மருந்துகளை தருகின்றனர். அதுவே நாம் வீட்டு வைத்திய மருந்தில் குணமாகும் என்றால் அதை பயன்படுத்துவது நல்லது தானே..

    மருந்து மாத்திரைகளை விட வீட்டு வைத்தியம் சளி, இருமல், குளிர் காய்ச்சல் போன்றவற்றிற்கு சிறந்தது. லெமன்கிராஸ் டீ பருகுவதால் இருமல், குளிர் காய்ச்சல் இருப்பின் அவற்றை குணப்படுத்துகிறது. இந்த லெமன்கிராஸ் மருத்துவத்தில் காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது என்னென்ன சுகாதார நலன்களை கொண்டுள்ளது என பார்ப்போம். காய்ச்சல், இருமல் மற்றும் சளியை சமாளிக்க உதவுகிறது. நீண்ட நாட்கள் மன அழுத்தத்தில் அவதி படுபவர்களுக்கு லெமன்கிராஸ் உதவுகிறது. உயர் இரத்த அழுத்தத்துடன் இணைந்து செயல்படுகிறது.

    நச்சு பொருட்களை அகற்றி உடலை தூய்மையாக்கி கொழுப்பின் அளவை குறைப்பதற்காகவும் பயன்படுகிறது. சிறுநீரகம், கணையம், கல்லீரல், சிறுநீர்ப்பை போன்ற அனைத்து உறுப்புகளையும் தூய்மையாக வைத்துக்கொள்ள பயன்படுகிறது. செரிமான அமைப்பில் பிரச்சனைகள் ஏற்படாமல் செரிமான அமைப்பை மேம்படுத்தி இரத்த ஒட்டத்தை சீரமைக்கிறது. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை சமாளிக்க உதவுகிறது. மேலும் மாதவிடாய் கோளாறால் அவதிப்படும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்கிறது. முகப்பரு தொல்லையால் அவதிபடுபவர்கள் இதை முகத்திற்கு பயன்படுத்தினால் முகப்பரு தொல்லையிலிருந்து விடுபடலாம்.

    எப்படி பயன்படுத்தலாம் லெமன்கிராஸை

    லெமன்கிராஸை பல வழிகளில் பயன்படுத்தலாம். அதிக மக்கள் லெமன்கிராசின் சுவையை உணவில் சேர்த்துக்கொள்வதற்காக அதனை எண்ணெய்யாக பயன்படுத்துகின்றனர். இதனை சுடு தண்ணீரில் கொதிக்க வைத்து சர்க்கரை, தேயிலை, இஞ்சி சேர்த்து தேநீர் மாதிரியும் பருகலாம். லெமன்கிராஸை மருத்துவ பானமாகவும் தயாரிக்கலாம். புதியலெமன்கிராஸ் இலை இரண்டு மூன்று கிராம்பு, சிறிய துண்டு இலவங்கப்பட்டை, மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர் இந்த கலவையில் சேர்த்ததை வடித்து விட்டு குடித்தால் காய்ச்சல், இருமல், சளி ஆகியவை குணமடையும். இதில் ஆண்டிபாக்டீரியா மற்றும் காலானின் பண்புகளை கொண்டிருக்கிறது.


  10. #670
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மஞ்சளின் உடல்நல நன்மைகள்:-

    நமது பாரம்பரியமான உணவுகளிலும், அழகுசாதனப் பொருட்களிலும் மருத்துவக்குணம் வாய்ந்த பல பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அவற்றின் சிறப்பை, மேலைநாட்டினர் அவ்வப்போது செய்யும் ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன.புதிய கண்டுபிடிப்பாக, மஞ்சள் கிழங்கானது 'ஆஸ்டியோபோரசிஸை' (எலும்புச் சிதைவு) தடுக்கும் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

    அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழத்தின் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஜேனட் பங்க், மஞ்சளின் மருத்துவகுணங்களைத் தான் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, எலும்புச் சிதைவு நோய்க்கு மஞ்சள், அணை போடும் என்று ஜேனட் தெரிவித்திருக்கிறார். மாதவிலக்கு நின்ற பெண்களை அதிகமாகப் பாதிப்பதாக 'ஆஸ்டியோபோரசிஸ்' உள்ளது.

    இஞ்சி வகையைச் சேர்ந்த தாவரமான மஞ்சள், இந்தியச் சமையலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நமது ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூற்றாண்டு காலமாக இது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. பல்வேறு வகையான உடல்நலக் குறைவுகள், வயிற்று வலி, மூட்டு வீக்கம் போன்றவற்றுக்கு மஞ்சள் கைகண்ட மருந்தாகக் கருதப்படுகிறது. வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்யப்படும் மஞ்சளானது உணவு வகைகளில் ஒரு நறுமணப் பொருளாக அதிகளவில் சேர்க்கப்படுகிறது. எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கிறது.

    உடலியல் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் 'எண்டோக்ரைன் சுரப்பி' நிபுணரான ஜேனட், மஞ்சள் குறித்துப் பல ஆண்டுகள் ஆய்வு செய்திருக்கிறார். ஆய்வுக்கு என்றே பதப்படுத்தப்பட்ட மஞ்சளை கவனமாக, நுணுக்கமாக ஆராய்ந்து முடிவுக்கு வந்திருக்கிறார். அப்போது, எலும்புகளின் சிதைவைத் தடுப்பதன் மூலம், மூட்டுகளில் ஏற்படும் பாதிப்பை மஞ்சள் தடுக்கிறது என்று ஜேனட் கண்டறிந்தார். 'மெனோபாஸ்' ஆன பெண்களுக்கும் எலும்புச் சிதைவையும், எலும்பு இழப்பையும் மஞ்சள் கட்டுப்படுத்துகிறது என்று ஜேனட் பங்க் உறுதியாகக் கூறுகிறார்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter