Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #671
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மஞ்சள் (மூலிகை) மகிமை

    மஞ்சள் ஒரு மருத்துவ மூலிகையாகும். இது 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு. நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் கிழங்கின் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டாகும். இது இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள். இதனை இந்துக்கள் மதச் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள். மஞ்சளில் ‘குர்மின்ங்’ என்ற நிறமி இருக்கிறது.மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அவைகளில் ‘ஆலப்புழை மஞ்சள்’ உலகிலேயே மிகச் சிறந்த மஞ்சளாகக் கருதப்படுகிறது.

    மஞ்சளின் வகைகள்:
    1. முட்டா மஞ்சள்
    2. கஸ்தூரி மஞ்சள்
    3. விரலி மஞ்சள்
    4. கரிமஞ்சள்
    5. காஞ்சிரத்தின மஞ்சள்
    6. குரங்கு மஞ்சள்
    7. காட்டு மஞ்சள்
    8. பலா மஞ்சள்
    9. மர மஞ்சள்
    10. ஆலப்புழை மஞ்சள்
    contd..



    Sponsored Links
    kiruthividhya likes this.

  2. #672
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மஞ்சளின் இயல்புகள்:

    முட்டா மஞ்சள்

    இது சற்று உருண்டையாக இருக்கும். இதை அரைத்தோ, கல்லில் உரைத்தோ முகத்திற்குப் பூசுவார்கள்.

    கஸ்தூரி மஞ்சள்:

    இது வெள்ளையாக , தட்டையாக இருக்கும். வாசனை நிறைந்தது.

    விரலி மஞ்சள்:

    இது நீள வடிவில் இருக்கும். இதுதான் கறி மஞ்சள்.

    மஞ்சளின் பயன்பாடுகள்:

    சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுகிறது.

    *பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது.

    *சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது.

    *உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது.

    *பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது.

    *வயிறு தொடர்பான அனைத்து நோய்களைப் போக்குகிறது.

    *இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது.

    *நிப்பானில் ஒகினாவா என்னும் இடத்தில் தேனீர் ஆகவும் பயன்படுத்தப்படுகிறது.
    contd..


    kiruthividhya likes this.

  3. #673
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மருத்துவ குணங்கள்:

    1. மஞ்சள் சூரணம் உட்கொண்டால் குடல் நோய் விரைவாகவும், நிரந்தரமாகவும் தீரும்.பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி, சிலந்திக்கடி ஆகியவற்றில் பூசினால், நோய் தீரும்.

    2. மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும்.

    3. மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும்.மஞ்சளை வறுத்துப் பொடியாக்கி வைத்துக்கொண்டு உடலில் தோன்றும் அனைத்து வகையான புண்களையும், புரையோடுதலையும் நீக்கிவிடலாம்.

    4. மஞ்சளைச் சுட்டு கரியாக்கிய சூரணத்தை உட்கொண்டால், மேகப்புண், தோல் தொடர்பான நோய்கள், விகாரத்தன்மை, அதிசாரக் கழிச்சல் போன்றவை நீங்கும். வாய்வு தொடர்பான மார்புவலி, தலைவலி குணமாகும்.

    5. மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்துத் தெளிய வைத்து, தெளிந்த நீரை வடித்துவிட்டு, பாத்திரத்தில் தங்கியுள்ள பொடி, திப்பியுடன் அடுப்பில் வைத்து நன்றாக எரித்தால், நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பைச் சாப்பிட்டால், குடல் கிருமிகள் வெளியேறி விடும். துர்நாற்றம் நீக்கும்.

    6. "மஞ்சளில் வேப்பிலை சேர்த்து அரைத்து விட்டால் அனைத்து வகையான நச்சுயிரி (தீ நுண்மம், நுண்ணுயிரிகளையும் அழிக்கும் சக்தியுண்டாகும்".

    "மஞ்சளும், சுண்ணாம்பும் சேர்த்துக் கரைத்து ஆரத்தி எடுத்தால், தொற்றி நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் அழியும்".

    7. மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசிக் கெண்டால் மேகப் புண், மேகப் படைகள், வட்டமான படைகள், நச்சுக்கடிகள் நீங்கும்". தினம் அரை கிராம் அளவில் மஞ்சள் பொடி சாப்பிட்டால், வயிற்றுப்புண், வலி நீங்கும். வாதத்தைக் கண்டிக்கும்.

    8. "மஞ்சளை இலுப்பெண்ணெயில் குழைத்துத் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்"

    9. " மஞ்சளை வேப்ப எண்ணெயில் தோய்த்துக் கொளுத்தினால் புகை வரும். மூக்கு வழியாக உள் இழுத்தால், தலைவலி நீங்கும்"

    10. "மஞ்சளை நல்லெண்ணெயில் கலந்து கற்பூரம் சேர்த்துக் காய்ச்சி, புண்களுக்குப் போட்டால், விரைவில் ஆறாத புண்கள் ஆறும்"
    contd..


    kiruthividhya likes this.

  4. #674
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    11. மஞ்சள், பூண்டு, வசம்பு சேர்த்து வேப்ப எண்ணெயில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு, காதில் சில துளிகள் விட்டு வந்தால், காதில் சீழ் வடிதல் நின்றுவிடும்.

    12. மஞ்சளும், கடுக்காயும் சேர்த்து அரைத்துப் பூச, சேற்றுப் புண் குணமாகும்.அடிபட்ட புண்ணுக்குப் மஞ்சளை அரைத்துப் போட்டால், சீக்கிரம் புண் ஆறிவிடும்.அடிபட்ட வீக்கம், இரத்தக்கட்டிற்கு மஞ்சளைப் பற்றுப் போட்டால், இரத்தக்கட்டு, வீக்கம் நீங்கி வேதனை குறைந்து விடும்.

    13. பெண்களின் பிறப்பு உறுப்பில் தோன்றும் கிரந்திப் புண்ணுக்கு, மஞ்சளை அரைத்துப் பூசினால், மிக எளிதாக நோய் நீங்கும்.

    14. பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் வயிற்று வலி, சூதகச் சிக்கல் போன்றவை மஞ்சள் பொடி சாப்பிடுவதால் நீங்கும்.

    15. மஞ்சளை கஷாயமாக்கி, பிரசவமான பெண்களுக்குக் கொடுத்தால், வயிற்றில் தங்கியுள்ள விஷ நீர் வெளியேறி விடும்.

    மேலும் சில தகவல்கள்:

    1. மஞ்சள்தூள் உணவில் சேர்ப்பதால் அகவை முதிர்ந்தவர்களுக்கு (வயதானவர்களுக்கு) ஏற்படும் நினைவுக் குறைபாடு தரும்அல்சைமர் நோய் உள்ளவர்களின் மூளையில் ஏற்படும் கெடுதிதரும் படிவு குறைக்கின்றது என்று துவக்கநிலை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

    2. மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் என்ற ஒரு மூலக்கூறு, வயதான ஆய்வக எலிகளின் மூளையில் இருக்கும் பீடா-அமைலோய்ட் புரத சேமிப்புகளை (அகற்றுகிறது என்பதையும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

    3. மூளையில் அல்சைமர் உருவாக்கும் கெடுதிதரும் படிவுகளாகக் கருதப்படுபவை அமைலாய்ட் நாறுகள். மனித மூளையில் இருக்கும் இப்படிப்பட்ட பீட்டா-அமைலோய்ட் புரதங்களை பரிசோதனைக்குழாயில் போட்டு அத்துடன் மிகக்குறைவான அளவு குர்க்குமின் சேர்த்தால், அது பீட்டா- அமைலோய்ட் புரதங்கள் ஒன்றுசேரவிடாமல், அவை நாறுகள் ஆக்கவிடாமல் பண்ணுகிறது.

    4. பீட்டா-அமைலோய்ட் புரோட்டீன்கள் மூளையில் ஒன்று சேர்ந்து அழுக்குகளாக சேர்வதே அல்சைமர் நோயாக உருவாகிறது. ஆகவே இந்த புதிய கண்டுபிடிப்புகள், அல்சைமர் நோயைக் குணப்படுத்தவும், அது வராமல் தடுக்கவும் மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் உதவும் என்னும் கருத்துக்கு வலுவூட்டுகின்றன.

    kiruthividhya likes this.

  5. #675
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சவுச்சவ் ஆச்சரியப்படுத்தும் உடல்நல நன்மைகள்:-

    சவுச்சவ் இதய நொய்யாளிகளுக்கு நல்லது, மற்றும் புற்றுநோய் வராமல் காக்கும்.

    சவுச்சவ் பொதுவாக ஒரு காய்கறி போன்றே தயார் செய்ய படுகிறது என்றாலும், அது உண்மையில் ஒரு பழம் ஆகும். இதில் மிகவும் முறுமுறுப்பான சதை பற்று இருப்பதால் இதைல் சமைத்தும் சாப்பிடலாம், பச்சையாகுவும் சாப்பிடலாம்.

    1. இதயத்திற்கு நல்லது:
    (Homocystein) ஒரு அமினோ ஆஸிட் ஆகும், இது இரத்தத்தில் அதிகமா இருந்தால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன, இப்படிப்பட்ட அமினோ ஆஸிட் வளர்வதை 'B' விடமின் தடுக்கிறது. இந்த Folate எனப்படும் 'B' விடமின் சவுச்சவ்வில் நிறைந்து இருக்கிறது.

    2. (வைட்டமின் சி) புற்றுநோயை தடுக்க உதவுகிறது:
    வைட்டமின் சி, ஒரு சக்திவாய்ந்த ஆண்டி-ஆக்ஸிடெஂட்ஸ்(antioxidants) ஆகும். இந்த சாரம் நம் உடலில் ஏற்படும் திசு சிதைவுகளை சரிசேய்யும் அது மற்றும் இன்றி இந்த ஆண்டி-ஆக்ஸிடெஂட்ஸ் மெதுவாக அல்லது சாத்தியமான வகையில் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சவுச்சவ்வில் வைட்டமின் சி ஒரு நல்ல மூலமாகும், இது . 17% வழங்கும்.

    3. உடலின் ஆற்றல்/சக்தி உற்பத்தியை அதிகரிக்கும் (Manganese):
    சவுச்சவ் முட்டை போடிமாஸ்யை காலை உணவாக உன்ணுங்காள், நாள் முழுவதும் உங்கள் உடல் ஆற்றல் / சக்தியுடன் இருக்கும். இதில் மாங்கனீசு உள்ளடக்கம் அதிகம் உள்ளத்தால் அந்த நாளில் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் புரதம் மற்றும் கொழுப்பை எநர்ஜீ(Energy) ஆகா மாற்றும்.

    4. மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது (Fiber):
    குடல்பகுதியை முறைப்படுத்தி ஊக்குவிக்க, உங்கள் உணவில் சவுச்சவ்வை தினமும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    5. தைராய்டு(thyroid) ஆரோக்கியமாக வைத்திருக்கும் (Copper):
    தைராய்டு வளர்சிதையை கட்டுப்படுத்தும் அயோடின்க்கு, தாமிரம்(Copper) உதவுகிறது. அயோடின் என்பது தைராய்டு வளர்சிதை பரிணாமத்துடன் சம்பந்தப்பட்டு இருக்கும் ஒரு தாது குறிப்பாக ஹார்மோன் உற்பத்தியில் மற்றும் உட்கிரகிப்பிற்கும்.

    6. ஆண்மை அதிகரிக்க மற்றும் முகப்பரு தடுக்க உதவுகிறது (Zinc):
    சவுச்சவ் துத்தநாகம்(.) ஒரு நல்ல மூலமாகும். தோல் எண்ணெய் உற்பத்தி கட்டுப்படுத்தும் ஹார்மோன்கலை ஊக்குவிக்கும். ஆண்மை அதிகரிக்க மற்றும் மலட்டுத் தன்மையை போக்கும்.

    7. எலும்பு இழப்பு தடுக்க உதவுகிறது (Vitamin K):
    உங்கள் வீட்டில் இருக்கும் வயதானவர்களை சவுச்சவ் சாப்பிட சொல்லுங்கள், அதில் இயற்கை வைட்டமின் கே இருக்கிறது. வைட்டமின் கே மற்றும் எலும்பு இடையே ஒரு தொடர்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    8. இரத்த அழுத்தம் குறைக்க உதவுகிறது (Potassium):
    சவுச்சவ் உங்கள் உடலின் தினசரி படாஸீயம் தெவயை பூர்த்தி செய்யும், இந்த தாது இரத்த அழுத்த அளவுகளை குறைக்க உதவுகிறது.

    9. மூளை வார்சிக்கு நல்லது (Vitamin B6):
    ஆய்வின் பங்கேற்பாளர்கள் சில குறிப்பிட்ட வயதில் உள்ளவர்களுக்கு மூளை நினைவக திறனை ஊக்குவிக்கும் என்று நம்புகிறார்கள்

    10. கால் தசைப்பிடிப்புக்கலை தடுக்க உதவுகிறது (Magnesium):
    ஒரு எலக்ட்ரோலைட் மற்றும் கனிமம் தசைப்பிடிப்புப்பை தடுக்கும் உதவும்.

    kiruthividhya likes this.

  6. #676
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்:-


    உடலில்கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்புநிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான். அதிலும் தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள்அனைத்திலும், கொழுப்புக்கள்தான் பெருமளவில் நிறைந்துள்ளன.

    இத்தகைய உணவுகளை உட்கொண்டு, அதனால்உடலில் தங்கும் கொழுப்புக் களை கரைப்பதற்கு, தினமும்உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை. இதனால் 40 வயதில்வரக்கூடிய இதய நோயானது, 30 வயதிலேயே வந்து விடுகிறது.

    இவை அனைத்திற்கும் காரணம், இளம்வயதில் இருந்தே கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவது தான்.இவ்வாறு இளம் வயதில் சாப்பிட்ட கொழுப்புக்கள் உடலில் அப்படியே தங்கி, அதனால்உடல் பருமன் அடைவதோடு, இதய நோய்க்கும் ஆளாகின்றனர்.

    ஏனெனில் அவ்வாறு தங்கும் கெட்ட கொழுப்புக்கள் ரத்தக்குழாய்கள் மற்றும் இதர முக்கியமான உறுப்புக்களில் படிந்து, இரத்தஅழுத்தத்தை அதிகரித்து, இறுதியில் மாரடைப்பை ஏற்படுத்தி, இளமையிலேயேஇறப்புக்கு வழிவகுக்கின்றன.

    அதற்காக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தொடக்கூடாது என்பதில்லை.நல்ல கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்து வந்தால், உடல்ஆரோக்கியமாக இருப்பதோடு, இதயமும் நன்கு செயல்படும். இப்போது அப்படி, உடலில்கெட்ட கொழுப்புக்களை கரைத்து நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும் சிலஉணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம். அவற்றைப் படித்து உணவில் சேர்த்து, ஆரோக்கியமாகவாழுங்கள்.
    contd..


    kiruthividhya likes this.

  7. #677
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பார்லி:

    தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடியநார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனைஉண்டால், உடலில்உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடைபடுவதோடு, கொலஸ்ட்ராலும்கரைந்து விடும்.

    கத்திரிக்காய் :

    கத்திரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதை விட, கலோரிகளேஇல்லை என்று சொல்லலாம். ஆனால் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனைஉட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவது குறைக்கப்படும்.

    மீன் :

    மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், மீன்களைஅதிகம் உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தவிர்க்கலாம். ஆகவேமீன்களில் சால்மன் மற்றும் டூனா போன்றவற்றை சாப்பிட்டு, கெட்டகொலஸ்ட்ராலின் அளவை குறையுங்கள்.

    ஆப்பிள் :

    ஆப்பிள்களில் வைட்டமின் `சிமற்றும்பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனைதினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில்தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை எளிதில் குறைக்கலாம்.

    நட்ஸ் :

    நட்ஸில் ஒமேகா3 ஃபேட்டிஆசிட் அதிகமாக உள்ளதால், இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். ஆகவேஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாம், வால்நட் போன்றவற்றை உட்கொண்டு, இதயத்தைஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

    contd..



  8. #678
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    டீ :

    அனைவருக்குமே டீயில் புற்றுநோயை எதிர்க்கும்ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது என்று தெரியும். இருப்பினும், அந்தடீயில் ப்ளாக் டீயை குடித்து வந்தால், உடலில்உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.

    வெங்காயம் :

    வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஃப்ளேவோனாய்டு, ரத்தகுழாய்களில் தங்கியுள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவேவெங்காயத்தை அதிகம் உட்கொண்டால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதயமும்ஆரோக்கியமாக இருக்கும்.

    ஓட்ஸ் :

    ஓட்ஸை காலை உணவாக உட்கொண்டால், உடலில்கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதை குறைக்கலாம். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம்இருப்பதால், உடலில் தங்கியிருக்கும் கொலஸ்ட்ராலின் அளவும்குறையும்.

    முழு தானியங்கள் :

    முழு தானியங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில்இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. எனவே தினை, கேழ்வரகுபோன்றவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.

    சிட்ரஸ் பழங்கள் :

    சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரிபோன்வற்றில் கரையக் கூடிய நார்ச்சத்தான பெக்டின் வளமையாக உள்ளது. இது ரத்தநாளங்களில் படிந்திருக்கும் கொழுப்புக்களை கரைத்து, இதயத்தைஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
    contd..


    kiruthividhya likes this.

  9. #679
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பசலைக்கீரை :

    பசலைக் கீரையில் லுடீன் மற்றும் நார்ச்சத்து அதிகம்உள்ளது. இந்த சத்துக்கள் தமனிகளில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் தன்மைகொண்டவை. ஆகவே பசலைக் கீரை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம்கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.

    சோயா பொருட்கள் :

    சோயா பொருட்களிலும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும்தன்மை இயற்கையாகவே உள்ளது.

    பூண்டு :

    பூண்டில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும்பொருள் அதிகம் உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருப்பதால், இதுகொலஸ்ட்ரால் அளவை வேகமாக குறைக்க உதவும். அதிலும் தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாகசாப்பிட்டால், இதன் பலன் நன்கு தெரியும்.

    வெண்டைக்காய் :

    கத்திரிக்காயைப் போன்றே வெண்டைக்காயும் கொலஸ்ட்ராலைகுறைக்கும் தன்மை கொண்டது. அதிலும் இதில் மிகுந்த அளவில் நார்ச்சத்து மற்றும்குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால், உடல்எடையை குறைக்க நினைப்போர், இதனை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மேலும்நீரிழிவு நோயாளிகளும் இதனை உட்கொண்டால், ரத்தத்தில்உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

    ரெட் ஒயின் :

    ரெட் ஒயினானது அதிகப்படியாக நார்ச்சத்து நிறைந்ததிராட்சைகளால் செய்யப்படுவதால், இதனை உட்கொண்டால், இதுஉடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களைவேகமாக கரைக்கும். அதனால் தான் ரெட் ஒயினை அளவாக சாப்பிட்டால், இதயத்தைஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.

    contd..


    kiruthividhya likes this.

  10. #680
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சாக்லெட் :

    சாக்லெட் அல்லது கொக்கோ கலந்து உணவுப் பொருட்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களை கரைத்து, தமனிகளில் ஏற்படும் அடைப்புக்களை தடுக்கிறது.

    பீன்ஸ் :

    அனைத்து காய்கறிகளிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இருப்பினும் பீன்ஸில் நார்ச்சத்துடன், அதிக அளவில் ஸ்டார்ச் இருப்பதால், இதனை தண்ணீரில் வேக வைத்து, அந்த நீரை வடிகட்டிவிட்டு சாப்பிட்டால் நல்லது. இல்லா விட்டால், பீன்ஸானது கெட்ட கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும்.

    மிளகாய் :

    மிளகாய் வயிற்றிற்கு நல்லது இல்லாவிட்டாலும், இது உடலில் தங்கியுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் ஆற்றல் கொண்டவை. சொல்லப்போனால், மிளகாயும் பூண்டு குடும்பத்தைச் சேர்ந்தது. மேலும் மிளகாயிலும் அல்லியம் என்னும் பொருள் உள்ளது.

    மார்கரைன் :

    இது வெண்ணைக்கு நல்ல மாற்றாக இருந்தாலும், இதில் ஸ்டெரால்ஸ் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பொருள் அதிகம் உள்ளது.

    அவகேடோ :

    இதுவரை அவகேடோவில் கொழுப்புக்கள் அதிகமாக இருப்பதால், இது இதயத்திற்கு மிகவும் ஆபத்தான உணவுப் பொருள் என்று தான் நினைத் திருக்கிறோம்.

    ஆனால் உண்மையில், அவகேடோவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இது உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter