Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree913Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #701
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மீன்:

    மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இந்த ஃபேட்டி ஆசிட் இதயத்திற்கு மட்டுமின்றி, மூளையின் செயல்பாட்டிற்கும் சிறந்தது. ஏனெனில் மூளையின் செயல்பாட்டிற்கு ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மிகவும் முக்கியமானது. மேலும இது மூளைச் செல்களின் இயக்கத்தை அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக ஹெர்ரிங், சால்மன், சூரை (Tuna), கானாங்கெளுத்தி, பொத்தல், நெத்தலி, மற்றும் மத்தி போன்றவை மிகவும் சிறந்தது.இதில் ஒமேக-3 ஃபேட்டி ஆசிட்டான DHA மற்றும் EPA அதிகம் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. மற்ற உணவுப் பொருட்களை மீனிலேயே அறிவுத்திறனை கூர்மைப்படுத்தும் திறன் அதிகமாக உள்ளது. மேலும் மற்ற உணவுப்பொருட்களான காய்கறிகளில் தக்காளி, கேரட், பீன்ஸ், கீரைகள் போன்றவையும் சிறந்தது. ஆகவே மேற்கூறிய உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு தினமும் கொடுத்து வந்தால் மூளையானது நன்கு சுறுசுறுப்போடு இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.


    Sponsored Links
    jv_66 likes this.

  2. #702
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மண்பானையில்

    சமைப்பது பாரம்பரியமாக தமிழகத்தில் உள்ள வழக்கம். தற்போது தினம்தோறும் புதிது புதிதாக பல வகை உலோக பாத்திரங்கள் அறிமுகம் ஆகின்றன. அவற்றின் நன்மை தீமைகளை பயன்படுத்தினால் தான் அறிய முடியும். ஆனால் அது போல் இல்லாமல் மண்பானைகள் பல நூற்றாண்டுகளாக ஆரோக்கிய சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    மண்பானைகளில் சமைக்கும் போது உணவின் மீது வெப்பம் சீராக, மெதுவாக பரவுகிறது. இது உணவை சரியான முறையில் சமைக்க உதவுகிறது. மேலும் மண்பானைகளில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவி, காற்று உணவில் ஒரே சீராக ஊடுருவி உணவை சமைக்க உதவுகிறது. இதனால் மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவைப்போன்ற தன்மையை பெறுகிறது. இது உடல் நலனுக்கு உகந்தது. இதனால் உணவில் உள்ள சத்துகள் பாதுகாக்கப்பட்டு, எளிதில் செரிமானமாகும் தரமான உணவு கிடைக்கிறது.

    மண் பாத்திரங்கள் உணவில் உள்ள அமிலத்தன்மையை சமப்படுத்தும் தன்மை கொண்டவை. உப்பு, புளிப்பு சுவையுடைய உணவுகள் சமைக்கும் போது, மண்பானை தீங்கான விளைவுகள் எதையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் உலோக பாத்திரங்கள் உணவுடன் வினைபுரியும் நிலை உள்ளது. மண்பானையில் சமைக்கும் போது, அதிக எண்ணெய் பயன்படுத்தவும் தேவையில்லை. எனவே மண்பானையில் சமைக்கும் உணவு மிகவும் ஆரோக்கிய மானதாகும்.

    jv_66 likes this.

  3. #703
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பிளம்ஸ் பழம்:-

    நல்ல இனிப்பு சுவை கொண்ட பிளம்ஸ் பழங்கள், ஏராளமான சத்துக்களும் அடங்கிய கனி வகையாகும். புதர்ச்செடிபோல குள்ளமாக வளரும் மரவகையில் கொத்துக் கொத்தாக காய்த்துத் தொங்கும் பிளம்ஸ் கனிகளின் உள்ள சத்துக்களை பார்ப்போம்...

    * பிளம்ஸ் பழங்கள் குறைந்த ஆற் றல் தரக்கூடியது. 100 கிராம் பழத்தில் 46 கலோரிகள் ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.

    * பூரிதமாகாத கொழுப்புகள் இதில் இல்லை. எளிதில் ஜீரணமாகும் நார்ச் சத்துக்கள் உள்ளன.

    * பழத்தில் உள்ள சார்பிட்டல், இசாதின் போன்ற நார்ப்பொருட்கள் ஜீரண மண்டலத்தை நன்கு செயல்பட வைக்கும். மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

    * புத்துணர்ச்சி மிக்க பிளம்ஸ் பழத்தில் வைட்டமின் சி, நிறைந்துள்ளது. இது மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயல்பட வல்லது. உடலை நோய்த் தொற்றுகளில் இருந்து காப்பதில், 'வைட்டமின் சி'யின் பங்கு மகத்தானது. தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை அகற்றும் தன்மையும் வைட்டமின் சி-க்கு உண்டு.

    * 'வைட்டமின் ஏ' மற்றும் பீட்டா கரோட்டின் சத்துக்கள் பிளம்ஸ் பழத்தில் சிறந்த அளவில் உள்ளது. வைட்டமின் ஏ, பார்வைத் திறனுக்கு மிக அவசியமானது. சளிச்சவ்வை ஆரோக்கியமாக இயங்கச் செய்து சளித் தொல்லையை தவிர்க்கச் செய்யும். நுரையீரல் மற்றும் வாய்ப் புற்றுநோய்களில் இருந்து காக்கும் ஆற்றலும் வைட்டமின் ஏ-விற்கு உள்ளது.

    * லுடின், கிரிப்டோசாந்தின், ஸி-சாந்தின் போன்ற நோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளன. ஆக்சிஜன் பிரீ-ரேடிக்கல்களை நீக்கும் ஆற்றல் இவற்றுக்கு உண்டு. ஸி-சாந்தின், கண்களின் ரெட்டினா பகுதியை புற ஊதாக் கதிர்களின் தாக்குதலில் இருந்து காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    * பொட்டாசியம், புளோரைடு, இரும்பு போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் மிகுதியாக உள்ளன. ரத்த சிவப்பμக்கள் உற்பத்திக்கு இரும்புத் தாது மிக அவசியம். பொட்டாசியம் உடலை வளவளப்பு தன்மையுடன் வைப்பதிலும், ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் பங்கெடுக்கிறது.

    * பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான நியாசின், வைட்டமின் பி6, பான்டோ தெனிக் ஆசிட்போன்றவை உள்ளன. கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு போன்றவற்றின் வளர்ச்சிதை மாற்றத்தில் இந்த வைட்டமின்கள் துணைக் காரணியாக பங்காற்றுகிறது.

    * பிளம்ஸ் பழத்தில் சிறிதளவு வைட்டமின் கே, உள்ளது. இது ரத்தம் உறை தலில் உதவுவதுடன், அல்சீமர் போன்ற பாதிப்புகளை குறைப்பதிலும் பயன்படுகிறது.

    சாப்பிடும் முறை..........

    * பிளம்ஸ் பழங்கள் தோலுடன் அப்படியே சுவைத்துச் சாப்பிட ஏற்றது. இனிப்பு சுவையுடன், சாறு நிறைந்த இதனை களிப்புடன் சாப்பிடலாம்.

    * சாலட்டுகளில் அதிகம் சேர்க்கப்படுவது உண்டு.

    * பிளம்ஸ் பழத்தில் ஜாம், ஜெல்லி தயாரிக்கப்படுகிறது.

    * இறைச்சியுடன் பழ வகைகள் சேர்த்து செய்யப்படும் 'பை' வகை உணவுகளிலும், வேறு பல உணவு வகைகளிலும் பிளம்ஸ் பழங்கள் சேர்க்கப்படுகிறது.

    * கேக், ஐஸ்கிரீம்களிலும் பிளம்ஸ் பழங்கள் சேர்க்கப்படுகிறது.

    * உலர்த்தப்பட்ட பழங்கள் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகிறது

    jv_66 likes this.

  4. #704
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பல நோய்களுக்குத் தீர்வாக வெண்டைக்காய்

    வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் கணக்கு நல்லாப் போடலாம் என்று சொல்லிச் சொல்லியே குழந்தைகளுக்கு ஊட்டும் அம்மாக்களை பார்த்துள்ளோம். வெண்டைக் காய்க்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடி தொடர்பு இருக்கிறதோ இல்லையோ இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது.

    கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் அமிலம் வெண்டைக் காயில் அதிகமாக உள்ளது. கர்ப்பத்ததில் உள்ள குழந்தையானது உள்ளே நல்லபடியாக வளரவும் முதல் ட்ரைமெஸ்டரின் போதான குழந்தையின் நரம்பு குழாய்களின் வளர்ச்சிக்கும் இந்த ஃபோலிக் அமிலமானது மிகவும் அவசியம்.

    வெண்டைக்காயின் சிறப்பே அதன் கொழகொழப்புத் தன்மைத்தான். ஆனால் அந்தக் கொழகொழப்பு பிடிக்காமலே பலரும் அதை சேர்த்துக் கொள்ளவதில்லை. உண்மையிலே அந்த வழவழப்புத் தன்மையில்தான் வெண்டைக்காயின் அத்தனை மருத்துவப் பலன்களும் மறைந்துள்ளன.

    இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு அருமருந்து. தவிர மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்த கூடியது.

    நோய் எதிர்ப்பாற்றல் அதிகமுள்ள வெண்டைக்காய் சிறந்த உடல்நல ஊக்கி என்றே சொல்லாம். இதிலுள்ள கரையும் நார்ச்சத்தானது கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுவதன் மூலம் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்தை குறைக்கின்றது

    jv_66 likes this.

  5. #705
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கிவி

    கிவி பழம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சிறப்பான உணவியல் தன்மை, மருத்துவப் பண்புகள் கொண்ட கிவி (Kiwi) என்ற பெயருடைய இந்தக் கனிக்கு சீனத்து நெல்லிக்கனி (Chinese Gooseberry) என்ற மற்றொரு பெயரும் உண்டு. இத்தகைய கனி பற்றி உலக அளவில் உணவியல் அடிப்படையிலும், மருத்துவ அடிப்படையிலும் நிறைய ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

    இந்தக் கனிக்கு இப்பெயர் எவ்வாறு வந்தது?

    இந்தக் கனியானது பெரும்பாலும் நியூசிலாந்து நாட்டில் அதிக அளவு பயிரிடப்படுகிறது, அங்கிருந்து உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்தக் கனிக்கு ‘கிவி’ (KIWI) என்ற சிறப்புப் பெயர் உண்டு. பொதுவாக உலகில் நியூசிலாந்து நாட்டு மக்களை ‘க்விஸ்’ என்று செல்லமாக அழைப்பதுண்டு. அதன் காரணமாகத்தான் இந்தக் கனிக்கு உலகில் ‘கிவி’ என்ற பெயர் ஏற்பட்டது.

    மேலும் பல்லாயிரம் ஆண்டுகளாக, இந்தக் கனியானது சீன நாட்டில் பயிரிடப்படுவதால், இந்தக் கனியை, உலகிலுள்ள மக்கள் பொதுவாக ‘சீனத்து நெல்லிக்கனி’ (Chinese Gooseberry) என்றும் அழைக்கிறார்கள். தற்பொழுது இத்தகைய கனியானது, நியூஸிலாந்து, இத்தாலி, சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

    இந்தக் கனியின் மருத்துவப் பண்புகள் . . .

    உலகெங்கும் பல்வகையான நாடுகளில் உணவியல் அடிப்படையிலும், மருத்துவ அடிப்படையிலும் நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகள் யாவும், இந்தக் கனியை சிறந்த ‘மருத்துவப் பெட்டகம்’ என போற்றுகின்றன.கிவி கனியில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவான அளவில் உள்ளது. இதன் காரணமாக, தங்கள் உடலின் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இந்தக் கனியை அச்சமில்லாமல் உண்ணலாம்.பொதுவாக விட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளது.நோயைத் தடுக்கும் ஆற்றல் அதிகம் பெற்றுள்ளது!

    நமது உடலில் கட்டுப்பாடு இல்லாமல் திரியும் ‘ரேடிக்கிள்கள்’தான் பல்வகையான சிதைவு நோய்களுக்கும், செல்களின் சிதைவிற்கும் அடிப்படைக் காரணங்களாக அமைந்துள்ளன. இத்தகைய ரேடிக்கிள்களின் வன்தன்மையை அழித்து நோயின்றி நம்மை காக்கும் ஆற்றல் இத்தகைய கனிக்கு இயற்கையாக உள்ளது.முதுமைக் கால கண் நோய்களைத் தடுக் ,விட்டமின் சி என்ற சத்துடன் இணைந்து, மேற்கூறிய முதுமையின் காரணமாக ஏற்படும் சிதைவு நோய்களான, கண் புரை, விழித்திரை சிதைவு நோயைத் தடுக்கின்றது.

    இதயத்துடிப்பின் சீரற்ற நிலையைத் தடுக்க துணைபுரிகின்றது! இதயத்தின் துடிப்பை சீராக கட்டுப்படுத்துகின்றது. உடலில் பொட்டாசியத்தின் அளவானது குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி கனியில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இந்த சத்தானது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

    மாரடைப்பைத் தடுக்கின்றது . . .

    மாரடைப்பிற்கு முன்னர் பல்வகையான நோயியல் நிகழ்வுகள் இதய தமணிகளில் நிகழ்கின்றன. இவற்றில் மிகவும் முக்கியமானது இரத்தக் குழாய்களிலுள்ள இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள், தட்டகங்கள் இவை யாவும் ஒன்றாகக் குழுமி, கட்டியாக அடைப்பாக மாறி, இதய தமணிகளில் இரத்தம் செல்ல இயலாமல் முழுமையாக அடைத்து மாரடைப்பிற்கு (Heart Attack) வழிவகுக்கின்றது. இவ்வாறு இதய தமணிகளில் இரத்தக் கட்டி உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் ‘கிவி’ கனிக்கு இயற்கையாக உள்ளது. வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற கனியாகும்:கிவி பழத்தில் ‘ஃபோலேவி(FOLATE) என்ற சத்தும், ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் மற்ற கனிகளை விட மிகவும் அதிகமான அளவில் உள்ளது.

    இத்தகைய சத்துக்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள சத்துக்களில் சிறந்ததாக உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றார்கள். எனவே, வளரும் குழந்தைகளுக்கு இக்கனியை அளிப்பது மூளையின் வளர்ச்சிக்கு உதவும்.

    நீரிழிவு நோயாளி உண்பதற்கு சிறந்த கனி . . .

    ஏனென்றால், கிவி கனியின் சர்க்கரை குறியீடின் அளவானது மிகவும் குறைவான அளவாக இருப்பதால், இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை மற்ற கனிகளைப் போல் விரைவாக அதிகமாக்காமல், கொஞ்சமாகும் நிலையாகவும் நிலை நிறுத்துவதால், நீரிழிவு நோயாளிகள் உண்பதற்கு சிறந்த கனியாகக் கருதப்படுகிறது.

    உடலின் எடையைக் குறைப்பவர்களுக்கு சிறந்த மருந்து! உடலின் எடையைக் குறைப்பவர்களுக்கு கிவி கனியானது மிகவும் சிறந்த கனியாக கருதப்படுகின்றது. ஏனென்றால், மற்ற கனிகளுடன் ஒப்பிடும் பொழுது கிவியில் மிகவும் குறைவான அளவில் கலோரிகள் உள்ளன. ஒரு சாதாரண கனியில் சுமார் 3.8 கலோரிகள் மட்டும்தான் உள்ளன. ஆனால், ஆரஞ்சில் 20.9 கலோரிகளும், வாழைப்பழத்தில் சுமார் 22.4 கலோரிகளும் மற்றும் ஆப்பிளிலும், பேரிக்காயிலும் சுமார் 32.8 கலோரிகளும் உள்ளன.உடலின் எடையைக் குறைக்கும் ஆர்வமுடையவர்கள் இந்தக் கனியை பாதுகாப்பாக அன்றாடம் உண்ணலாம்.

    மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகும் . . .

    கிவி கனியில் அளவிற்கு அதிகமாக நார்ப்பகுதிகள் இயற்கையான வடிவத்தில் இருப்பதால், கிவி கனிகளை உட்கொள்வதன் மூலம் இயற்கையான மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும்.
    பெண்கள் எளிதாக கருவுறுதலுக்கான வாய்ப்பை அளிக்கின்றது:
    விட்டமின் ஈ-யானது பெண்களின் சருமத்தை இளமைப் பொலிவுடன் வைத்திருக்க துணை புரிவதோடு அல்லாமல், பெண்கள் மிகவும் எளிதாகக் கருவுறும் தன்மையை உருவாக்குகின்றது.

    ஆஸ்துமா நோயாளிக்கு மிகவும் சிறந்த உணவு . . .

    சில மனிதர்களுக்கு ஏற்படும் மூச்சுத் திணறல் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவாகச் செயல்படுகின்றது. மேலும் நுரையீரல்கள் செயல்திறனை அதிகரிக்க இந்தக் கனி பயன்படுகின்றது.
    பல்வகையான சத்துக்கள் மிகுந்த கனிகளில் சிறந்த கனியாகக் கருதப்படுகின்றது.

    சில ஆண்டுகளுக்கு முன்னர் ரட்ஜர் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த உணவியல் வல்லுநர்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வகையான கனிகளிடம், கிவியின் ‘சத்து அடர்வு நிலை’ பற்றி விரிவான ஆய்வு ஒன்று நிகழ்த்தப்பட்டபொழுது, இவர்கள் ஆய்வு செய்த 18 வகையான கனிகளில் அதிக அளவு சத்துக்கள் பொதிந்த சிறந்த கனியாக கிவியைக் கருதுகின்றார்கள். இத்தகைய ஆய்வு முடிவை இவர்கள் அமெரிக்காவில் புகழ்பெற்று விளங்கும் The Journal of American College of Nutrition என்ற உணவியல் இதழில் விரிவான ஆய்வுக் கட்டுரையாக வெளியிட்டுள்ளனர்.
    contd..


    jv_66 likes this.

  6. #706
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இந்த ஆய்வுக் கட்டுரையின் முக்கிய தகவல்கள் . . .

    உணவு, மருந்துக் கட்டுப்பாடு அமைப்பானது, ஒரு மனிதன் நலமாக வாழ வேண்டுமென்றால் அவனுக்கு குறைந்தது 9 வகையான முக்கிய சத்துக்கள் அன்றாட உணவில் தேவைப்படுகின்றது. இத்தகைய சத்துக்களை ஒரு தனிமனிதன் பெற வேண்டுமென்றால் அவன் அன்றாட உணவில், பல்வகையான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். ஆனால், இந்த 9 வகையான சத்துக்களும் ஒருசேர கிவி என்ற கனியில் பொதிந்துள்ளது என குறிப்பிடுகின்றார்கள்.உணவியல் குறியீட்டில் கனிவகைகளில் அதிக எண்ணை உடைய கனியாக கிவி கருதப்படுகின்றது.

    உணவியல் வல்லுநர்கள் கனிகள் வகைகளில் கிவி கனிக்கு உணவியல் குறியீடு எண்ணாக அதிக அளவு சத்துக்கள் நிறைந்த கனி என்பதால், இதற்கு 16 என்ற எண்ணை வழங்கியுள்ளார்கள். இது முதல் இடமாகும். இதற்கு அடுத்தபடியாக உணவுக் குறியீடு உள்ள கனியான பப்பாளிக்கு 14 அளித்துள்ளார்கள். மெலன் என்ற தர்பூசணிக்கு 13 என்ற குறியீடு எண்ணும், ஸ்ட்ரா பெர்ரிக்கு உணவுக் குறியீடு எண் 12-ம், மாங்கனிக்கு 12-ம், ஆரஞ்சு வகைகளுக்கு குறியீடு எண் 11-ம் வழங்கியுள்ளனர். இத்தகைய கனியானதுஎவ்வகையான பருவங்களில் கிடைக்கின்றன?
    இக்கனிக்கு சிறந்த பருவம் ஜூன் மாதத்திலிருந்து அடுத்த ஆண்டு மார்ச் வரை சிறந்த பருவமாகக் கருதப்படுகின்றது.

    இத்தகைய கனிகளில் எத்தனை வகைகள் உள்ளன?

    கிவி கனியில் மூன்று வகைகள் உள்ளன. 1. பச்சை நிற கிவி பழங்கள். 2. தங்க நிற கிவி பழங்கள். 3. சிவப்பு நிற கிவி பழங்கள். முதன் முதலாக இறக்குமதி செய்யப்பட்டது பச்சை நிறத்தில் உள்ள வகைதான். இத்தகைய வகைதான் கடந்த 10 ஆண்டுகளாக அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றது. இதன் அகப்பகுதியானது பச்சையாக இருக்கும்; வெளித் தோலானது சற்று பழுப்பு நிறமாகக் காணப்படும். ஒவ்வொரு கனியும் சுமார் 50 முதல் 60 கிராம் அளவு இருக்கும்.

    அண்மைக் காலங்களில் தங்க நிற கிவி பழம் என்ற புதிய வகை இறக்குமதி செய்யப்படுகின்றது. இதன் சதைப் பகுதியானது மஞ்சள் வண்ணத்தில் இருப்பதால் இதற்கு இந்தப் பெயராகும். இந்த வகையாவது, பச்சை வகையை விட அதிக சுவையாக இருக்கும்.

    மேலை நாடுகளில் அண்மையில் கிவியில், சிவப்பு வகை என்ற கிவி பழம் விற்பனையில் உள்ளது. கிவி நியூசிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளில் விற்பனையில் உள்ளன

    jv_66 likes this.

  7. #707
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கருஞ்சீரகம்...

    *தோல் நோயை குறைப்பதில் கருஞ்சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

    *பசியைத்தூண்டவும் கருஞ்சீரகம் பயன்படுகிறது . ஜீரணத்தை சீர்படுத்தும்.

    *வயிற்றுப் போக்கை குணப்படுத்தும்.

    *கருஞ்சீரகம் புழுக்கொல்லியாக செயல்படும். வாந்தியைத் தடுக்கும். இதய வலியை குறைக்கும்.

    *சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும்.

    *கருஞ்சீரகத்தை நீர் விட்டு, அரைத்து, நல்லெண்ணையில் குழைத்து கரப்பான், சிரங்கு ஆகியவற்றில் பூசி வர குணம் தெரியும்.

    *கருஞ்சீரகத்தை தேன் விட்டு அரைத்து பிரசவித்த பின் ஏற்படும் வலிக்குப்பூசிட வலி மாறும்.

    *கருஞ்சீரகத்தை அரைத்து தேமல் மேல் பூசி வர தேமல் சிறிது சிறிதாக மாறும்.

    *கருஞ்சீரகத்தை வறுத்து காடி விட்டு அரைத்து சொறி, தேமல் மேல் பூசி வர தேமல், சொறி மறையும்.
    .
    *கருஞ்சீரகப்பொடி, மல்லிப்பொடி இரண்டையும் பாலில் கலந்து சாப்பிட அஜீரணம் மாறும்.

    *கருஞ்சீரகப்பொடியை தயிரில் கலந்து சாப்பிட அஜீரணம் மற்றும் வாயு உற்பத்தி மாறும்.

    *கருஞ்சீரகத்தை எருமைப்பால் விட்டு அரைத்து முகத்தில் தடவி வர முகப்பரு மாறும்.

    *கருஞ்சீரகத்தை வெற்றிலை சாறு விட்டு அரைத்து காது, கன்னப் பகுதியில் ஏற்படும் வீக்கம் மேல் பற்று போட வீக்கம் மறையும்.

    *கருஞ்சீரகத்தை (vinegar)ல் வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்

    *கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும்

    *கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் சிறுநீர் பை கல்லைக்
    கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும்

    *கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது

    * கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி நல்எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.


  8. #708
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    புரோக்கோளி ( broccoli )


    இது குளிர்காலப்பயிர். குளிர்ச்சியான தட்பவெப்பநிலையில் பயிரடப்படும் இந்த புரோக்கோளியில் எண்ணற்ற சத்துப்பொருகள் நிறைந்துள்ளன. 100 கிராம் புரோக்கோளியில் உள்ள சத்துப் பொருட்களைப் பாருங்க,

    கார்போஹைடிரேட்ஸ் 6.64 கிராம்,
    சர்க்கரை 1.7 கிராம்,
    நார்ச்சத்து 2.6 கிராம்,
    நீர்ச்சத்து 89.30 கிராம்,
    கொழுப்புச்சத்து 0.37 கிராம்,
    புரதம் 2.82 கிராம,
    சுண்ணாம்புச்சத்து 5%,
    வைட்டமின் ஏ 3%,
    வைட்டமின் சி 149%,
    வைட்டமின் ஈ 5%,
    இரும்புச்சத்து 6%,
    மக்னீசியம் 6%,
    பாஸ்பரஸ் 6%,
    பொட்டாசியம் 7%,
    சிங்க் 4%.
    பீடா கரட்டின் 3%,
    தயாமின் 5%,
    ரிபோஃப்ளோவின் 8%
    நியாசின் 4%
    பேண்டொதேனிக் 11%
    அடங்கியுள்ளன. இத்தனைச் சத்துக்களை விட்டு வைக்கலாமா சாப்பிடாமல்?

    saidevi likes this.

  9. #709
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பாதாமை தினமும் சாப்பிடுவதால், உடலில் உண்டாகும் நன்மைகள் :-

    நட்ஸ்களின் ராஜாவாக விளங்கும் பாதாமில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இந்த சூப்பர் நட்ஸ் உடல், சருமம் மற்றும் முடி என பலவற்றிற்கு ஆரோக்கியத்தை தருவதில் சிறந்ததாக உள்ளது. அதிலும் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் உடலை வலுவுடனும், எந்த ஒரு நோயும் அண்டாமல் பாதுகாக்கிறது.

    குறிப்பாக பாதாமில் வைட்டமின் பி2, வைட்டமின் ஈ, பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, புரோட்டீன், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் காப்பர் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்திருப்பதால், இது இதயத்தை ஆரோக்கியத்துடன் வைப்பதில் பெரிதும் துணையாக உள்ளது. இவ்வாறு பாதாமின் நன்மைகளைப் பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். ஏனெனில் அதன் நன்மைக்கு எல்லையே இல்லை.

    இதய நோய்-
    பாதாமை தினமும் சாப்பிட்டு வந்தால், இதய நோய் வருவதைத் தடுக்கலாம். ஏனெனில் இதில் இதயத்தை பாதுகாக்கும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி வாரத்திற்கு 5 நாட்கள் தொடர்ந்து பாதாம் சாப்பிட்டு வந்தால், 50% இதய நோய் வருவதைத் தடுக்கலாம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    கொலஸ்ட்ரால்-
    பாதாமில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நல்ல அளவில் உள்ளது. அதிலும் தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை சீராக வைக்க உதவும்.

    இரத்த அழுத்தம்-
    பாதாமில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், இதனை ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரத்தில் சாப்பிட்டால், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

    புற்றுநோய்-
    நார்ச்சத்து அதிகம் இருக்கும் பாதாமை சாப்பிட்டால், அது குடலியக்கத்தை சீராக வைத்து, குடல் புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் ஈ, பைட்டோ கெமிக்கல் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் அதிகம் இருப்பதால், மார்பக புற்றுநோயை உண்டாக்கும், செல்கள் வளர்வதை தடுக்கும்.

    சீரான இரத்த ஓட்டம்-
    மக்னீசியம், பாதாமில் அதிகம் இருப்பதால், இது உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சீராக பாய உதவியாக இருக்கும். மேலும் இதில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்தணுக்களின் அளவு அதிகரிக்கவும் செய்யும். இதனால் நன்கு சுறுசுறுப்புடன் வேலை செய்யலாம்.

    வலுவான எலும்புகள்-
    மற்றும் பற்கள் பாதாமில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் இருப்பதால், மூட்டு வலியை தடுத்து, எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக்கும்.

    எடை குறைய
    பாதாமில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அது உடலில் கலோரியின் அளவை கட்டுப்படுத்தி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும். மேலும் இதில் உள்ள புரோட்டீன், வயிற்றினை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கும்.

    நீரிழிவு-
    பாதாமில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஆய்வு ஒன்றில் பாதாம் சாப்பிட்டால், உணவிற்கு பின் இரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை குறைத்து, சீராக வைக்க உதவும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

    பித்தக்கற்கள்-
    பாதாமை தொடர்ந்து சாப்பிட்டால், 25% பித்தக்கற்கள் உருவாவது குறைந்துவிடும். ஆனால் ஏற்கனவே சிறுநீரகம் அல்லது பித்தப்பையில் பிரச்சனை உள்ளவர்கள், இந்த நட்ஸை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதற்கு இதில் உள்ள ஆக்சலேட் பண்புகள் தான் காரணம்.

    contd..


  10. #710
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    எனர்ஜி-
    பாதாமில் உடலின் எனர்ஜியை அதிகரிக்கும் கனிமங்களான மாங்கனீசு, காப்பர் மற்றும் ரிபோஃப்ளேவின் உள்ளது.

    ஆரோக்கியமான மூளை-
    ஆய்வு ஒன்றில், பாதாமில் ரிபோஃப்ளேவில் மற்றும் எல்-கார்னிடைன் இருப்பதால், அவை மூளை செயல்பாட்டை அதிகரிக்க உதவியாக இருக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயுர்வேத மருத்துவத்திலும், தினமும் காலையில் நீரில் ஊற வைத்த 5 பாதாம் சாப்பிட்டு வந்தால், மூளையின் சக்தி அதிகரிக்கும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

    இரத்த சோகை-
    காப்பர், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் பாதாமில் அதிகம் நிறைந்துள்ளது. காப்பருடன், இந்த இரண்டு சத்துக்களும் நிறைந்திருப்பதால், அவை ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, இரத்த சோகையை குணமாக்கிவிடும்.

    அழகான சருமம்-
    பாதாமில் நல்ல அளவில் மாய்ஸ்சுரைசிங் தன்மை இருப்பதால், அது வறட்சி, முப்பரு, கரும்புள்ளிகள் போன்றவற்றை போக்கி, சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

    முடி பிரச்சனைகள்
    முடிகளில் பிரச்சனை உள்ளவர்கள், பாதாம் எண்ணெயை தடவி வந்தால், சரிசெய்துவிடலாம். அதிலும் முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை, இளநரை, மெல்லிய முடி போன்றவற்றை குணமாக்க உதவியாக இருக்கும்.

    பாதாம் அதிகமாக சாப்பிடுவதால் மலசிக்கல் ஏற்படும். ஒரு நாளைக்கு 5 அல்லது 6 சாப்பிடுவதே நலம்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter