Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #711
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    Quote Originally Posted by chan View Post
    புரோக்கோளி ( broccoli )


    இது குளிர்காலப்பயிர். குளிர்ச்சியான தட்பவெப்பநிலையில் பயிரடப்படும் இந்த புரோக்கோளியில் எண்ணற்ற சத்துப்பொருகள் நிறைந்துள்ளன. 100 கிராம் புரோக்கோளியில் உள்ள சத்துப் பொருட்களைப் பாருங்க,

    கார்போஹைடிரேட்ஸ் 6.64 கிராம்,
    சர்க்கரை 1.7 கிராம்,
    நார்ச்சத்து 2.6 கிராம்,
    நீர்ச்சத்து 89.30 கிராம்,
    கொழுப்புச்சத்து 0.37 கிராம்,
    புரதம் 2.82 கிராம,
    சுண்ணாம்புச்சத்து 5%,
    வைட்டமின் ஏ 3%,
    வைட்டமின் சி 149%,
    வைட்டமின் ஈ 5%,
    இரும்புச்சத்து 6%,
    மக்னீசியம் 6%,
    பாஸ்பரஸ் 6%,
    பொட்டாசியம் 7%,
    சிங்க் 4%.
    பீடா கரட்டின் 3%,
    தயாமின் 5%,
    ரிபோஃப்ளோவின் 8%
    நியாசின் 4%
    பேண்டொதேனிக் 11%
    அடங்கியுள்ளன. இத்தனைச் சத்துக்களை விட்டு வைக்கலாமா சாப்பிடாமல்?
    Thanks chan.Useful.


    Sponsored Links

  2. #712
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சுத்தமான தேனை எப்படிக்கண்டுபிடிக்கலாம்?

    ஒன்று : கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம்.

    இரண்டு : எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்பு மொய்க்காதாம்.

    மூன்று : ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம்.

    நான்கு : பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் தித்திப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்தபின் மஞ்சள், சிவப்பு என்று எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது!

    இந்த நான்கு முறையுமே நல்ல தேனைக் கண்டுபிடிக்க நடைமுறைக்கு ஒத்துவரவில்ல என்றால்,
    தூய தேனைக் கண்டுபிடிக்க இன்னுமொரு சோதனை முறை உண்டு:

    1. நல்ல மணலில் ஓரிரு சொட்டு தேனைச் சொட்டவும்.
    2. ஒரு நிமிடம் காத்திருக்கவும்.
    3. குனிந்து தேனை வாயால் ஊதவும்.
    தேன் மட்டும் உருண்டோடினால் அது தூய தேனாம்.
    மணலின் உள்ளே இறங்கி விடுவது போலி/கலப்படம் என்றறிக!

    தேன் மகிமை ;-

    உடல் மெலிந்தவர்கள் தேனில் பேரீச்சம்பழத்தை ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் சதை பிடிக்கும்.

    அல்சர் நோய் குணமாக தினமும் சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டி தேனைச் சாப்பிட்டு வர வேண்டும்.

    அரை அவுன்ஸ் தேனுடன் அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்த சுத்தியும், ரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத்தளர்ச்சியும் நீங்கி விடும்.

    என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புபவர்கள் தினமும் தேனை அருந்த வேண்டும்.
    உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் தினசரி ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடலாம்.

    தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி
    குணமாகும்.

    தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பிக்கலாம்.
    contd..


  3. #713
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தேனும், வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும். ஊளைச்சதை குறையும். உடல் உறுதி அடையும்.

    சூடான நீரில் ஒரு தேக்கரண்டி இஞ்சிச்சாறு, எலுமிச்சைச் சாற்றுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்தீர்களானால் நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், தும்மல் போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கும் மருந்து ரெடி.

    அடிக்கடி சளி பிடித்தால் இளஞ்சூடான பாலில் சிறிது மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தேன் கலந்து தினமும் பருகி வர நல்ல பலன் தெரியும்.

    உடல் மெலிந்தவர்கள் தினமும் பாலில் தேன் கலந்து சாப்பிட்டு வர உடல்வாகு சீராகும்.


  4. #714
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    குடற்புண்களை ஆற்றும் சக்தி இதற்குண்டு :-

    வாழைத் தண்டில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தி சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவும்.

    உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வாழைத்தண்டு சூப் செய்து தினமும் அருந்தி வந்தால் உடல் பருமன் குறையும்.

    பெண்களுக்கு மாத விலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைம், வெள்ளைப் படுதலையும் குணப்படுத்தும்.

    இரத்த அழத்தத்தைக் குறைக்கும். வயிற்றில் உள்ள கீரி பூச்சிகளை அகற்றும்.

    தோல் நோய்களைக் குணப்படுத்தும்.

    உடலில் நச்சுப் பொருட்கள் கலந்திருந்தால் விரைவில் குணமாக்கும்.

    நீர்ச்சுருக்கம், நீர் எரிச்சல் இவற்றை போக்கும்.
    பச்சிலை சாறும் அதன் பயன்பாடுகளும்:-

    அருகம்புல் சாறு – இது ரத்ததை சுத்த படுத்தும்,வாய் புண் ஆற்றும்,
    மற்றும் தாய்பால் சுரக்க உதவும்

    … இளநீர் – இளமையாகவும் ஆனந்தமாகவும் இருக்க உதவும், அசிடிட்டியை குறைக்க உதவும் மற்றும் வெய்யில் காலத்தில் உடம்பை குளிர்விக்க கூடியது.
    contd..


  5. #715
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வாழைதண்டு சாறு – சிருநீரக கல்லை அகற்ற கூடியது, மூட்டு வலியை நீக்கும், உடல் இடையை குறைக்கும். ஊல சதையை குறைக்க உதவும்.

    வெல்ல பூசணிசாறு – குடற் புண்னை நீக்கும்.

    வல்லாரை சாறு – நரம்பு சமந்தபட்ட நோய்களை நீக்கும், நாபகசக்தியை அதிகரிக்கும்

    வில்வம் சாறு – அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்றது, நரம்பு சமந்தபட்ட நோய்களுக்கும் உகந்தது. சர்க்கரையின் அளவை குறைகவல்லது சீரான இரதத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.

    கொத்தமல்லி சாறு – அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்றது.

    புதினா சாறு – இருமலை குணபடுத்தும். முகபருவை நீக்க வல்லது. மற்றும் அணைத்து ரத்த சமந்தமான, வாயு சமந்தமான நோய்களுக்கும் ஏற்றது.

    நெல்லிக்காய் சாறு – அழகு தரும் மருந்து.

    துளசி சாறு – சளி மற்றும் சோம்பேரிதனத்தை குறைக்க வல்லது. அளவுக்கு அதிகமாக துளசி உட்கொள்ளுவது விந்தணுவை குறைத்துவிடும்.

    அகத்தி சாறு- மலசிக்கலை குணபடுத்தும் , சர்க்கரை நோயை குணபடுத்தும்.

    கடுக்காய் சாறு – முக நிறம் நல்ல பொலிவாகும். கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது.

    முடக்கத்தான் சாறு – மூட்டு வலிக்கு நல்லது, வாயு தொல்லைக்கு நல்லது

    கல்யாண முருங்கை சாறு – உடல் எடை குறைக்க உதவும். இதை வாயில் மென்று நம் உமிழ் நீருடன் கலந்து சாபிட்டால், உடனடியாக மலச்சிக்கலுடன் வாய்வு தொல்லை நீங்கும். ஆனால் கர்ப்பிணி
    பெண்களுக்கு நல்லது இல்லை கருக்கலைய கூடியது.

    தூதுவளை சாறு – சளி தொல்லை நீங்கும்

    ஆடாதோடா சாறு – ஆஸ்மாவைய் குணப்படுத்த வல்லது

    கரிசலாங்கண்ணி சாறு – கண் பார்வைக்கு நல்லது,
    முடி வளர்ச்சிக்கு நல்லது.


  6. #716
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ஆரோக்கியத்துக்கு அவகேடோ!
    ஆரோக்கியமான உணவு பட்டியலில் அவகேடோவும் ஒன்று. 25க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் அவகேடோவில் அடங்கியுள்ளன. இதில் உள்ள சத்துக்கள் நோயின் பிடியிலிருந்து நம்மைக் காக்கின்றன.

    ஹெல்தி ஹார்ட்

    வைட்டமின் பி6, ஃபோலிக் ஆசிட் மற்றும் ஒலியிக் அமிலம் (oleic acid) ஆகியவை இதயத் தொடர்பான நோய்கள் வருவதைத் தடுக்கின்றன. மேலும், இந்தச் சத்துக்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

    குறையும் கொழுப்பின் அளவு

    பீட்டா சிடோஸ்டெரால் (beta sitosterol) அதிகளவில் உள்ளதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை இந்தப் பழம் வெகுவாகக் குறைக்கும். ஹைபர்கொலஸ்ட்ரொலெமியா (Hypercholesterolemia) என்ற நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் ஒருவர், 7 நாட்கள் தொடர்ந்து அவகேடோவை சாப்பிட்டு வந்தால், அந்த நோயின் தாக்கம் 17 சதவிகிதம் வரை குறையும். 22 சதவிகிதம் கெட்டக் கொழுப்பு குறைந்து, 11 சதவிகிதம் நல்ல கொழுப்பு உடலில் சேரும். நல்ல கொழுப்பு நிறைந்திருப்பதால் இன்சுலின் குறைப்பாடும் சரியாகும்.

    ரத்தக் கொதிப்புக்குப் பை பை

    வாழைப் பழத்தில் இருக்கும் பொட்டாஷியத்தை விட அவகேடோவில் 35 சதவிகிதம் அதிகமாகவே உள்ளது. இதனால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். மேலும், வாழைப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளதால் செரிமானத்துக்கு ஏற்றது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையைச் சமன் செய்கிறது.
    contd..



  7. #717
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அதிகரிக்கும் பார்வை திறன்

    லுடீன் (lutein) என்ற ஆண்டி ஆக்சிடன்ட், வயதாகிய பிறகும், பார்வை திறன் குறையாமல் தடுக்கிறது. மேலும், கண்களில் ஏற்படும் புரையை வளர விடாமல் தடுக்கும் ஆற்றல் அவகேடோவில் உள்ளது.

    கர்ப்பிணிகளுக்கு அருமருந்து

    ஃபோலேட், வைட்டமின் பி6 ஆகிய ஃபோலிக் அமிலங்கள் அவகேடோ பழத்தில் 23 சதவிகிதம் உள்ளது. கர்ப்பிணிகள் இதைச் சாப்பிட்டு வந்தால், பிறக்க போகும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். வயதானவர்களுக்குப் பக்கவாதம் வராமல் தடுக்கும்.

    புற்றுநோயை தடுக்கும் ஆன்டிஆக்சிடன்ட்

    ஆன்டிஆக்சிடன்ட் இதில் நிறைந்திருப்பதால் ஆண்களுக்கு வரும் ப்ராஸ்டேட் புற்றுநோயையும், பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயையும் தடுக்கிறது. மூப்படைதலை தடுத்து இளமையைத் தக்க வைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்யும். நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும். செல்களைச் சேதமடையாமல் பாதுகாக்கும்.

    நேசர் மவுத் வாஷ்

    இயற்கையான முறையில் வாயை சுத்தம் செய்வதால் இதனை ‘நேசர் மவுத் வாஷ்’ எனச் சொல்லலாம். குடலை சுத்தம் செய்யும் அதோடு நாக்கின் மேல் உள்ள கிருமிகளை நீக்கி, வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.

    உடல் எடையைக் கூட்டும்

    100 கிராம் பழத்தில் 200 கலோரிகள் உள்ளன. இதனால், உடல் எடையைக் கூட்ட வேண்டும் என நினைப்போருக்கு அவகேடோ ஒரு சிறந்த உணவு. நல்ல கொழுப்பும், சர்க்கரையும் இதில் அதிக அளவில் உள்ளன.
    contd..



  8. #718
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அழகுக்கும் அவகேடோ

    தொடர்ந்து அவகேடோ சாப்பிட்டு வர, சருமம் பளபளப்பாகும். கூந்தலின் ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும். முடி உதிர்தல் நிற்கும். கூந்தல் வறட்சி நீங்கும். எரிச்சல், சிவந்து போகுதல், சோரியாசிஸ் போன்ற சரும நோய்கள் குணமாகும்.


  9. #719
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பக்கவாதம் தடுப்பது எப்படி ?
    டாக்டர் கு. கணேசன்
    முதுமை என்பது நமக்கெல்லாம் ஒரு பருவம். இக்காலகட்டத்தில் முதுமையின் விளைவாக பல நோய்கள் நம்மிடம் எட்டிப் பார்க்கும். அவற்றில் முதன்மையானது மாரடைப்பு. இந்த நோயினால் உடனே மரணமும் வரலாம் அல்லது சரியான நேரத்தில் சரியான சிகிச்சை பெற்று பல ஆண்டுகள் நலமாகவும் வாழ முடியும். ஆனால், பக்கவாதம் வந்தவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே முழுவதுமாக குணம் கிடைக்கும். பலரையும் இது படுக்கையில் போட்டுவிடும். இவர்களுக்கு கை, கால் செயல் இழந்து விடுவதால் மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கும். அதனால், இந்த நோயைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகவே தெரிந்துகொள்வது நல்லது.

    எது பக்கவாதம்?

    மூளையின் ஒரு பக்கத்தில் ரத்த ஓட்டம் குறைந்து, அந்தப் பகுதி செயல்படாமல் போகும்போது, உடலின் எதிர்பாகத்தில் ஒரு கை, ஒரு கால் மற்றும் முகத்தில் ஒரு பகுதி செயலற்றுப் போவதைப் ‘பக்கவாதம்’ (Stroke) என்று சொல்கிறோம். வலது, இடது என்று மூளையை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். உடலின் வலது பக்கச் செயல்பாட்டை இடது பக்க மூளை கட்டுப்படுத்துகிறது. இடது பக்கச் செயல்பாட்டை வலது பக்க மூளை கண்காணிக்கிறது. ஆகவே, மூளையின் வலது பக்கம் செயல்படவில்லை என்றால், உடலில் இடது பக்கம் செயல்படாது. மூளையின் இடது பக்கம் செயல்படவில்லை என்றால், உடலில் வலது பக்கம் செயல்படாது. பொதுவாக, வலது பக்கம் பக்கவாதம் வருமானால் பேச்சு பாதிக்கும். காரணம், பேச்சுக்குத் தேவையான சமிக்ஞைகள் மூளையின் இடது பக்கத்திலிருந்து வருவதுதான்.
    contd..



  10. #720
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    எப்படி வருகிறது?

    பெருமூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குப் பெருமூளை நடுத்தமனிக் குழாய் (Middle Cerebral Artery) ரத்தத்தை விநியோகிக்கிறது. இதில் ரத்தம் உறைந்து அடைத்துக் கொள்ளும்போது அல்லது ரத்தக்கசிவு ஏற்படும்போது, அந்தப் பகுதிக்கு ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனால் அங்குள்ள மூளை செல்கள் செயலிழந்துவிட, அந்தப் பகுதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் உடல் உறுப்புகள் ஓட்டுநர் இல்லாத பேருந்து போல செயலற்றுப்போகும். முக்கியமாக, உடலின் ஒரு பக்கத்தில் கை, கால் மற்றும் முகத்தில் பாதிப்பகுதி செயலிழந்துவிடும். ஆகவேதான், இந்த நோய்க்குப் ‘பக்கவாதம்’ என்று பெயர் வந்தது. இதையே ‘ஹெமிபிலிஜியா’ (Hemiplegia) என்ற மருத்துவ மொழியில் அழைக்கிறார்கள்.

    காரணங்கள்

    50 வயதைத் தாண்டியவர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம். அதாவது, இந்த வயதுக்கு மேல் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை பக்கவாதம் வருகிற வாய்ப்பு 2 மடங்கு அதிகரிக்கிறது. குடும்பத்தில் பெற்றோருக்கு அல்லது அவர்களின் சந்ததியினருக்கு பக்கவாதம் வந்திருந்தால், அவர்கள் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக ரத்தக் கொழுப்பு, மாரடைப்பு, இதயவால்வு கோளாறுகள், இதயச் செயலிழப்பு, இதயத்துடிப்புக் கோளாறுகள் போன்றவை பக்கவாதம் வருவதற்கு அடித்தளம் அமைக்கின்ற முக்கிய நோய்கள்.

    புகைப்பிடித்தல், அடுத்தவர் விடும் புகையைச் சுவாசித்தல், மது அருந்துதல், பருமன், உடல் உழைப்பு குறைந்த வாழ்க்கைமுறை ஆகியவை பக்கவாதம் வருவதைத் தூண்டுகின்றன. தலைக்காயம், மூளையில் ஏற்படும் தொற்று போன்றவற்றாலும் பக்கவாதம் வரலாம். முன் அறிவிப்புகள் பக்கவாதம் பெரும்பாலும் திடீரென்றுதான் வருகிறது. பக்கவாத நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து வரும்போது, ‘அஞ்சு நிமிஷம் முன்னாடி வரைக்கும் நல்லாத்தான் சார் இருந்தார். பாத்ரூமுக்குப் போய்ட்டு திரும்பும்போது மயங்கி விழுந்தாரு. அப்புறம் பார்த்தா ஒரு கை வரலே, ஒரு கால் வரலே, வாய் கோணிப்போச்சு, மூச்சு மட்டும் வருது’ என்றுதான் சொல்வார்கள்.

    ஆனால், நோயாளியானவர் நன்றாக யோசித்துப் பார்த்தாரென்றால், முழுமையான பக்கவாதம் வருவதற்கு முன், அவருக்கு முன்னறிவிப்பு செய்வதைப்போல சில அறிகுறிகள் அவ்வப்போது தோன்றி மறைந்திருக்கும். அந்த அறிகுறிகள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொண்டால் பக்கவாதத்தைத் தடுக்க உதவும்.
    contd..



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter