Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #741
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    · தாமரைப்பூவை நன்கு சுத்தமாக்கி கஷாயம் செய்து அதனுடன் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் இரத்த கொதிப்பு குறையும்.

    ருங்காலிப்பட்டை 100 கிராம், சதகுப்பை, சீரகம், ஏலக்காய் ஆகியவற்றை வகைக்கு 20 கிராம் எடுத்து ஒன்றாகக் கலந்து இளவறுப்பாய் வறுத்து தூள் செய்து 5 கிராம் அளவு தூளை இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் காய்ச்சி சாப்பிட இரத்த அழுத்த நோய்கள் குறையும்.

    முழு வெந்தயம், பாசிபயறு, கோதுமை இவற்றை முதல்நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் காலை மிளகு, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து தோசை வார்த்து சாப்பிட இரத்த அழுத்தம் குறையும்.

    ஆரைக் கீரை சாற்றில் சீரகத்தை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறையும்.

    முருங்கைக் கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலை, மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.


    Sponsored Links

  2. #742
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மூல நோய்க்கு தீர்வு
    மூலத்தை உள்மூலம், வெளிமூலம் என பொதுவாக இரண்டு வகையாக பிரிக்கலாம். மூலத்திற்கு முதல் காரணம் மலச்சிக்கல். உண்ணும் உணவு முறையை மாற்றி அமைத்துக் கொண்டாலே மூலம் வராது. மூல நோய் என்பது ஆசனவாயில் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் காணப்படும் சிறு இரத்தக் கட்டிகளாகும். ஒரே இடத்தில் உட்கார்ந்து மணிக்கணக்கில் வேலை செய்வதால் ஆசனவாயில் சூடு ஏற்படுகிறது. அது வெளியேறமுடியாமல் ஆசனவாயின் உட்புறத்தை தாக்குகிறது. இதனால் மூலத்தில் சூடு ஏற்பட்டு மூல நோய் உண்டாகிறது.

    நாட்பட்ட மலச்சிக்கலால் ஆசனவாயிலுள்ள ரத்த நாளங்கள் பருத்து குழாய்களில் ரத்தம் தேங்கி விடுகிறது. இப்படி ரத்தத்தில் தேக்கப்பட்ட இரத்த கசடுகள் பிறகு மூலமுளைகளாக மாறி விடுகிறது. கல்லீரலில் உள்ள ரத்த குழாய்கள் தங்களுடைய வேலைகளைச் சரிவர செய்யாவிடில் ஆசனவாயிலுள்ள நாளங்களில் இரத்த தேக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது மூலமுளையாக மாறிவிடுகிறது.

    மேலும் பெண்கள் கருத்தரித்துள்ளபோது கர்ப்பப்பையை மலக்குடல் அழுத்துவதாலும், தாய் தந்தை வழியாகவும், பட்டினி கிடத்தல், பசியின்மை இவை போன்றவற்றால் கீழ் நோக்கி மலத்தை தள்ளும் வாயு தன்னுடைய வேலையை சரியாக செயல் புரிய முடிவதில்லை. யோகநிலையில் தன்வன்மைக்கு மீறி இருப்பதாலும் இந்நோய் ஏற்படுகிறது. மீண்டும் மலம் மலக்குடலில் இருப்பது போன்ற உணர்வு, ஆசன வாயில் எரிச்சல், காந்தல் வலி, உண்ட உணவு சரியாக செரிமானம் ஆகாதது, சோம்பல், துன்பங்களில் மனம் வளர்ந்து அடிக்கடி கோபம் கொள்ளுதல் போன்றவை ஏற்படும்.
    contd..



  3. #743
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உள்மூலம் இருப்பதற்கான அறிகுறிகள் :-

    உள்மூலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உடல் மெலிந்து உடல் வெளுத்து காணப்படுவர். பசியின்றி இருப்பார். மலத்துடன் இரத்தம் வெளியேறும். சிலநேரங்களில் உடல் சூட்டினால் கூட இரத்தம் வெளியேற வாய்ப்புள்ளது. மூலமானது ஆசனவாயின் உட்புறத்தில் தசைபோன்று வளர்ந்திருக்கும். மலம் வெளியேறும்போது மிகுந்த இறுக்கத்துடனும், வலியுடனும் காணப்படும். சில சமயங்களில் வயிற்று வலி ஏற்ப்படும்.

    வெளிமூலத்தின் அறிகுறிகள் :

    வெளிமூலத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பசியின்றி, அமைதியின்றி மிகுந்த களைப்புடனும் சோகத்துடனும் காணப்படுவர். மூலம் வெளியே தள்ளிக் காணும். அடிவயிற்றில் இரைச்சல், தொப்புளைச் சுற்றி வலி, மலம் கழிக்கும் போது இரத்தம் வெளியேறுதல் போன்றவை இருந்தால் நிச்சயமாக மூலம்தான்.

    உணவு வகைகள் :

    தினசரி உணவு வகைகளில் நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளையும், கீரைகளையும் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவிற்கு பின் ஏதாவது ஒரு பழவகையை சேர்த்துக் கொள்ளலாம். தினம் 2 மொந்தன் வாழைப்பழம் சாப்பிடலாம். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். பகலில் மோரும், இரவில் பாலும் சேர்த்துக் கொள்ளலாம். இளநீர், எலுமிச்சைப்பழம், நெய், வெண்ணெய், நெய்யில் வதக்கிய வெங்காயம், கருணைக்கிழங்கு ஆகியவைகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

    தவிர்க்க வேண்டிய உணவுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் :
    கருணைக்கிழங்கு தவிர அனைத்து கிழங்கு வகைகள், பாசிப்பயிறு தவிர அனைத்து பயிர்வகைகள், முட்டை முதல் அனைத்து அசைவ உணவுகள், காரம், மசாலாப் பொருட்கள் இவைகளைத் தவிர்க்க வேண்டும்.

    பகலில் தூக்கம், புகைபிடித்தல், மது வகைகள், வெயிலில் அதிகம் செல்வது, காற்றுப் புகாத கடினமான இருக்கையில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்தல் இவைகளைத் தவிர்க்க வேண்டும்.


  4. #744
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மருத்துவ முறைகள் :

    தமிழக அரசின் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைந்துள்ள சித்த மருத்துவ பிரிவுகளில் மூல நோய்க்கு சித்த மருந்துகள் எளிதாக கிடைக்கிறது. நோயின் தன்மைக்கு ஏற்ப உள் மருத்துவம், வெளி மருத்துவம் என ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

    மூல நோயின் உச்சகட்டமாக மூலாதாரத்தில் காந்தல்,எரிச்சல் ஆகியவை ஏற்படும். சின்ன, பெரிய வெங்காயத்தின் சருகுகளை நூல் துணிகளில் உள்ளே வைத்து தலையணை போல் தைத்து, நாம் உட்காரும்போது மல வாய்க்கு ஏற்ற அளவு தைத்து தினமும் உட்கார்ந்து வர நோய் தீரும்.

    சோற்றுக்கற்றாழையின் மடலை மேல்தோலை சீவி எடுத்துக் கொண்டு பளபளப்பாக இருக்கும் அதை மலவாயில் வைத்து இரவில் கட்டிக் கொண்டு காலையில் எடுத்துவிட மூலம் சுருங்கி விடும்.

    நம்முடைய முன்னோர்கள் மாதத்திற்கு சில நாட்களில் கடவுள் பெயரால் விரதம் இருக்கச் சொல்வார்கள். இது மிகப் பெரிய மருத்துவம். லங்கணம் பரம ஔஷதம் என்பார்கள். சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி வைப்பது போல நம்முடைய குடலையும் அடிக்கடி கழுவி சுத்தம் செய்யவேண்டும். அதற்கு செலவில்லாத மிகப்பெரிய மருத்துவம் விரதமிருத்தல் என்கிற பெயரில் சாப்பிடாமலிருத்தல். வாரத்தில் ஒருநாள் ஒருவேளை மட்டுமாவது விரதமிருக்கவேண்டும்.

    இறுதியாக மூல நோய்க்கு ஆங்கில மருத்துவத்தை விட சித்த /ஹோமியோ/இயற்கை மருத்துவமே சிறந்தது.


  5. #745
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பெண்களுக்கு சத்து அளிக்கும் பழங்கள்!!
    கருப்பு திராட்சையில் வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து அதிகம் காணப்படுகிறது. இதில் போலிக் அமிலம் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

    பலர் கர்ப்பகாலங்களில் சாப்பிடக்கூடாது, குழந்தை கருப்பாக பிறக்கும் என்பார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, நீங்கள் சாப்பிடுவது குழந்தைக்கும் நல்லது தாய்க்கும் நல்லது.

    தர்பூசணி பழத்தில் தண்ணீர்ச்சத்து அதிகம் இருக்கும். வைட்டமின் ஏ சத்து மற்றும் போலிக் அமிலம் அதிகம் காணப்படுவதால் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிகவும் நல்லது. தாய்மார்கள் விரும்பிச் சாப்பிடலாம்.

    அத்திப் பழச்சாறு ஆண்களைவிட பெண்கள் மிக முக்கியமாக சாப்பிட வேண்டிய சாறு. ஏனெனில் பெண்களுக்கு ஏற்படும் சத்துக்குறைவு(இரத்தசோகை) பிரச்சனைகளை சரி செய்கிறது.

    உடலில் இரத்தத்தைச் சுத்திகரிக்கக் கூடியது. இதில் இரும்புச்சத்து அதிகம். பெண்கள் அதிகமாக சாப்பிட வேண்டும். சோர்வாக இருக்கும் போது சாப்பிட்டால் உடனடியாக சுறுசுறுப்பு வரும்.
    ·


  6. #746
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வேப்பமரத்தின் அதிசியங்கள்
    வேப்பமரத்தின் பல்வேறு பயன்களை , அதன் சக்திகளை , மகிமைகளை, அறிந்து பயன்படுத்தி , அனுபவங்களை உணர்ந்து , வைத்திருந்த நம்முடைய முன்னோர்கள்,
    வேப்ப மரத்தின் பலன்கள் மனிதர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் , ஒவ்வொரு வீட்டிலும் வேப்ப மரத்தை வளர்த்து அதன் பயனை அனைவரும் பெறும் படி பல்வேறு முறைகளை வகுத்து வைத்து வந்திருக்கின்றனர் .

    அதன் பலனை உணர்ந்தும் உணராமலும் நேரடியாகவும் , மறைமுகமாகவும் மனிதர்கள் தங்கள் வீடுகளில் வேப்பமரத்தை வளர்த்து வந்து இருக்கின்றனர்.
    தற்காலத்தில் கிராமப் பகுதிகளில் வாழும் மக்கள் கூட வேப்ப மரத்தின் பயனை உணர்ந்தும் , உணராமலும் – அறிந்தும் , அறியாமலும் கிராமப் பகுதிகளில் வீட்டின் முன் பக்கத்திலோ அல்லது பின் பக்கத்திலோ வேப்ப மரத்தை வளர்த்து வருகின்றனர் . வேப்ப மரம் வளர்க்கப் பட்டு வருவதைக் காணலாம் .

    வேப்பமரம் நமது தேசத்தில் தான் எங்கும் காணப்படுகிறது. இமயம் முதல் குமரிவரை இந்த வேப்பமரத்தைக் காணலாம் .
    ஆனால் மேல் நாடுகளிலும் , கீழ்நாடுகளிலும் வேப்பமரம் அவ்வளவாகச் செழித்து வளர்வதில்லை . செழித்து வளர்வதற்கு உரிய காலநிலை அங்கே காணப்படுவதில்லை .
    contd..


  7. #747
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பாகங்கள்: ஆலமரம் , அரசமரம் போன்ற வியக்கத்தக்க மரவகைகள் உள்ள நிலையில் வேப்ப மரம் மட்டும் முக்கிய இடம் வகிப்பதற்குக் காரணம் அதனிடமுள்ள மருந்துக் குணமேயாகும் .
    உச்சி முதல் அடி வரை அதாவது நுனிவேர் வரை முழுவதும் மருந்துக் குணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது வேப்ப மரம் . பேய் பிசாசுகளை ஓட்டும் மந்திரவாதிகளுக்கும் , விஷக்கடிகளின் விஷத்தைப் போக்கும் மருத்துவர்களுக்கும் , வேப்ப இலை பயன்படுகிறது .

    வேப்ப மரத்தின் இலை , பூ , காய் , பழம், கொட்டை , பருப்பு , எண்ணெய் பட்டை , கட்டை என்ற எல்லா விதமான பாகங்களுமே வைத்திய முறைக்கு நன்கு பயன் பட்டு வருகிறது .

    பார்வை -சுவாசம்: பச்சைப் பசேல் என்று இருக்கும் வேப்பமரத்தைத் தினசரி எழுந்தவுடன் கண் குளிரப் பார்த்து அதன் காற்றைச் சுவாசித்து வருபவர்களுக்கு , கண் சம்பந்தமான நோய்களும் ,சுவாச உறுப்புகள் சம்பந்தமான நோய்களும் வருவதில்லை .
    சுவாச உறுப்புகள் சுத்தமடையும் . கண் பார்வை தெளிவடையும் .

    கண் பார்வை குறைந்தவர்கள் பசுமையான வேப்ப மரத்தைத் தினசரி 40 நாட்கள் வரை காலையிலும் ,மாலையிலும் அரை மணி நேரம் பார்த்து வருவார்களானால் அவர்கள் பார்வை தெளிவடையும் .
    சர்வரோக நிவாரணி : இத்தகைய சிறப்பு வாய்ந்த வேப்பமரத்தைப் புகழ்ந்து ஒரே வார்த்தைகளில் கூற வேண்டுமானால் , இதை ஓர் சர்வரோக நிவாரணி எனலாம் .
    சர்வம் என்றால் அனைத்தும் என்று பொருள் . ரோகம் என்றால் நோய் என்று பொருள் . நிவாரணி என்றால் தீர்க்கக் கூடியது என்று பொருள் . சர்வரோக நிவாரணி என்றால் அனைத்து விதமான நோய்களையும் தீர்க்கக் கூடியது என்று பொருள் .
    தொற்று நோய்: மூலிகை வர்க்கங்களிலேயே அனைத்து வகை நோய்களையும் தீர்க்கக் கூடிய சக்திவாய்ந்த ஒரு மூலிகை உண்டென்றால் அது வேப்ப மரமாகத்தான் இருக்கும் .

    வேப்ப மரத்தைத் தெய்வமாக எண்ணி அதை வழிபட்டு வரும் பழக்க வழக்கங்கள் நம் நாட்டில் இன்றளவும் இருந்து வருகிறது . அதற்கு முக்கிய காரணம் அம்மரத்தினிடமுள்ள நோய் தீர்க்கும் சக்தியே ஆகும் .
    பொதுவாக வேப்பமரம் இருக்கும் இடத்தில் எந்தவிதமான தொற்று நோயும் வருவதில்லை .
    contd..



  8. #748
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கிராமங்களில் அமைந்த வீடுகளின் முன்பக்கம் வேப்பமரமும் , பின்பக்கம் முருங்கை மரமும் இருப்பதைக் காணலாம் . வேப்பிலையை வீட்டைச் சுற்றிலும் வீட்டு வாசலின் முன் பக்கமும் ,வீட்டின் பின்புறத்திலும் வைத்து இருந்தால் , வீட்டைச் சுற்றிலும் வைத்து இருந்தால் , அந்த வீட்டினுள் எந்தவிதமான தொத்துநோயும் வருவதற்கான வாய்ப்புகளே இல்லை . தொத்து நோய் வருவதற்கான எந்தவிதமான காரணங்களும் அறிகுறிகளும் இருக்காது.
    மந்திரவாதி: சிலர் தங்களுக்கோ , தங்கள் குழந்தைகளுக்கோ உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவரைத் தேடமாட்டார்கள் .மந்திரவாதியைத் தான் தேடுவார்கள் . மந்திரவாதியிடம் சக்தி இருக்கிறதோ , இல்லையோ ஆனால் அவர் கையிலிருக்கும் வேப்பிலைக் கொத்துக்கு மட்டும் நோய் தீர்க்கும் சக்தி உண்டு .
    வேப்பிலையிலிருக்கும் ஒருவித மருத்துவ குணம் கொண்ட சக்தி அந்த இலையை வீசும் பொழுது வெளிப்படும் . இந்தச் சக்தி எந்த வியாதியையும் குணப்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இதன் காரணமாகத் தான் மந்திரவாதி மந்திரித்த பின் வியாதி குணமாகிறது .
    மனது: மனதிற்கும் வேப்பமரத்தில் உள்ள ஒவ்வொரு பாகத்திற்கும் நெருங்கிய அதிகமான பல்வேறு வகையான தொடர்புகள் உண்டு . வேப்பமரத்தின் அடியில் காலை , மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் உட்கார்ந்து கொண்டே வந்தால் மனம் சாந்த நிலையை அடையும். மனதில் ஒரு புத்துணர்ச்சி உண்டாகும் . மனதில் ஒரு மகிழ்ச்சி உண்டாகும் . மனதில் ஒரு தெம்பு உண்டாகும் .


  9. #749
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நம்மை சுற்றி கொட்டிக்கிடக்குது மருந்துகள்
    என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி.

    தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு கொடிபசலைக் கீரை.

    இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ.

    மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை.

    இதயத்தை பலப்படுத்தும் தாமரை.

    தோல் நோய்களை குணமாக்கும் கோரைப்புல்.

    இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி(ஓமவல்லி).

    மூட்டுவலி குணமாக்கும் முட்டைகோஸ்.

    நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை.


  10. #750
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மூல நோயை குணமாக்கும் சப்போட்டா பழம்.

    வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் மணத்தக்காளிகீரை.

    உடலை பொன்னிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை.

    மாரடைப்பு நீங்கும் மாதுளம் பழம்.

    குடல்புண்ணை ஓடஓட விரட்டும் தடியங்காய்.

    ரத்தத்தை சுத்தமாகும் அருகம்புல்.

    கான்சர் நோயை குணமாக்கும் சீதா பழம்.

    மூளை வலிமைக்கு ஓர் பப்பாளி பழம்.

    நீரிழிவு நோயை குணமாக்கும் முள்ளங்கி.

    வாயு தொல்லையிலிருந்து விடுபட வெந்தயக் கீரை.

    நீரிழிவு நோயை குணமாக்க வில்வம்.

    ரத்த அழுத்தத்தை குணமாக்கும் துளசி.

    மூட்டுவலி, ரத்த சோகை நீங்கும் திணைமாவு.

    மார்பு சளி நீங்கும் சுண்டைக்காய்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter