Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #751
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மதுரக்கீரை சாப்பிட்டால் கேன்சர் வராது.

    சளி, ஆஸ்துமாவுக்கு ஆடாதொடை.

    ஞாபகசக்தியை கொடுக்கும் வல்லாரை கீரை.

    ரத்த அழுத்தத்தை குணமாக்கும் பசலைக்கீரை.

    ரத்த சோகையை நீக்கும் பீட்ரூட்.

    ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் அன்னாசி பழம்.

    முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)

    கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.

    மார்புசளி, இருமலை குணமாக்கும் தூதுவளை.

    முகம் அழகுபெற திராட்சை பழம்.

    அஜீரணத்தை போக்கும் புதினா.

    “பிளட் சுகரை” விரட்டியடிக்கும் சர்க்கரை கொல்லி சிறுகுறிஞ்சான்.


    Sponsored Links

  2. #752
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பெண்களின் மாதவிலக்கு கோளாறுகளை சரிபடுத்தும் ஆவாரம்பூ.

    மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி”

    சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.

    தினசரி 1 ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டாம்.

    முகப்பருவை போக்கும் அம்மான் பச்சரிசி.


  3. #753
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மருந்தில்லா மருத்துவம் - இய*ற்கை வைத்தியம்
    1.வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும்.
    சளிக் காய்ச்சல்.

    2.புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.

    3.இருமல், தொண்டை கரகரப்பு
    பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

    4.சளி
    பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

    5.டான்சில்
    வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.

    6.வயிற்றுப் போக்கு
    சிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் குணமாகும்.

    7.வாயுக் கோளாறு
    மிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.

    8.நெஞ்சு சளி
    தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

    9.தலைவலி
    ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

    10.தொண்டை கரகரப்பு
    சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.


  4. #754
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வெங்காயத்தினை உண்டால் அபூர்வ பலன்கள்!!!.
    வெங்காயம்யத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் (Bவெங்காயம்) என இருவகையாக சந்தையில் கிடைக்கின்றன. ஒனியன் என ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.. இது யூனியோ என்ற லத்தீன் மொழிச் சொல்லாகும்.. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

    வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய் போன்ற பொருள் காணப்படுகின்றது. இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம் (பெல்லாரி வெங்காயம்) இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

    வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், வைட்டமின்கள் தாது உப்புக்கள், உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்தைத் தருகிறது.

    பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.
    contd..


  5. #755
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வெங்காயத்தைஎப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

    1.
    நாலைந்துவெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிடபித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

    2.
    சமஅளவுவெங்காயச் சாறு, வளர்பட்டைசெடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

    3.
    வெங்காயச்சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கிஇளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

    4.
    வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லாமூலக்கோளாறுகளும் நீங்கும்.

    5.
    வெங்காயநெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால்ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

    6.
    வெங்காயத்தைச்சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள்மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

    7.
    வெங்காயச்சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல்குறையும்.

    8.
    வெங்காயச்சாற்றையும், வெந்நீரையும்கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில்தடவிவர பல்வலி, ஈறுவலிகுறையும்.

    9.
    வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலைஆகும். மூலச்சூடு தணியும்.

    10.
    வெங்காயத்தைஅவித்து தேன், கற்கண்டுசேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
    contd..



  6. #756
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவரநரம்புத் தளர்ச்சி குணமாகும்.

    12.
    வெங்காயத்தைவதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

    13.
    படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்து விடும்.

    14.
    திடீரெனமூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

    15.
    வெங்காயச்சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதிநிற்கும்.

    16.
    வெங்காயரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

    17.
    பனைமரபதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

    18.
    வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிடமேகநோய் குறையும்.

    19.
    வெங்காயம்குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப்பயன்படுத்தலாம்.

    20.
    பச்சைவெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவதுநல்லது.

    contd..


    sudhavaidhi likes this.

  7. #757
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையைசுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

    22.
    வெங்காயம்ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

    23.
    தொடர்ந்துபுகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம்மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

    24.
    வெங்காயச்சாற்றுடன், கடுகுஎண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலிகுணமாகும்.

    25.
    நறுக்கியவெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

    26.
    வெங்காயச்சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

    27.
    வெங்காயச்சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிடகண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

    28.
    ஜலதோஷநேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

    29.
    வெங்காயத்தைஅரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

    30.
    பாம்புகடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்
    contd..


    sudhavaidhi likes this.

  8. #758
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

    32.
    வெங்காயம்சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகுடாக்டரிடம் செல்லலாம்.

    33.
    வெங்காயச்சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

    34.
    காலராபரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

    35.
    ஒருபிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

    36.
    சிறியவெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப்பயன்படுத்தலாம்.

    37.
    தலையில்திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இருதுண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

    38.
    காக்காய்வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்புகுறையும்.

    39.
    வெங்காயத்தைதினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

    40.
    வெங்காயச்சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
    contd..


    sudhavaidhi likes this.

  9. #759
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

    42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

    43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

    44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

    45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

    46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

    47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

    48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

    49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

    50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்
    முடி வளர சித்த மருத்துவம்..

    sudhavaidhi likes this.

  10. #760
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பாட்டிவைத்திய முறைகள் சில::::

    தலைபாரம் குறையும்.
    துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும்.

    கிராம்பை மை போல் அரைத்து நெற்றியில் பற்று போடதலைபாரம் குறையும்.

    நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி அடிக்கடிதலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

    தலை வலி...குறைய:
    ஒற்றை தலைவலி...குறைய
    துளசி இலைகளோடு ஒரு துண்டு சுக்கு, லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால்தலைவலி குறையும்.

    தலைசுற்றல் குறைய
    நெல்லி வற்றல், பச்சைபயறு இரண்டையும் 200 கிராம் அளவு எடுத்து தண்ணீர் விட்டு காய்ச்சிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்க தலைசுற்றல் குறையும்.

    இஞ்சி சாறு, தேன் கலந்து தொடர்ந்து முப்பது நாட்கள் சாப்பிட்டு வரதலைசுற்றல் குணமாகும்.

    ஏலக்காய்களை நசுக்கி அரை டம்ளர் தண்ணீரில் போட்டுநன்கு கஷாயமாகக் காய்ச்சி அதில் கொஞ்சமாக பனைவெல்லம் போட்டு சாப்பிட்டால்தலைசுற்றல் உடனே நீங்கும்.

    தலைவலி தீர
    கொத்தமல்லி சாறு எடுத்து முன் நெற்றியில் பற்றுபோட்டால் தலை வலி விலகும்.

    contd..


    sudhavaidhi likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter