Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #771
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    எடை குறைப்பிற்கு நெல்லிக்காய் ஜூஸின் பயன்கள்!
    உடல் எடை குறைப்பு என்பது இன்றைய காலக்கட்டத்தில் பல பேருக்கும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. உடல் எடை குறைப்பிற்கு பல இயற்கை தந்த பழங்கள் உள்ளது.

    அப்படி உடல் எடையை குறைக்க தூண்டிவிடும் ஒரு கனி தான் நெல்லிக்காய். இந்திய கூஸ்பெர்ரி என அழைக்கப்படும் நெல்லிக்காயில் பல ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் வளமையாக உள்ளது.

    இரண்டே வாரத்தில் தொப்பையை குறைத்து தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமா? நெல்லிக்காயுடன் பல உடல் நல பயன்கள் அடங்கியுள்ளது.

    நெல்லிக்காயை அப்படியே உண்ணலாம் அல்லது நசுக்கி ஜூஸாகவும் குடிக்கலாம். உடல் எடையை குறைக்க நெல்லிக்காய் ஜூஸில் பல பயன்கள் அடங்கியுள்ளது.

    இதுப்போக முடியை திடமாக்க, சருமத்தின் அமைப்பை மேம்படுத்த மற்றும் சருமத்தில் ஒளி வீசிடவும் கூட அவை உதவி புரிகிறது. ஆனாலும் கூட இப்போது நெல்லிக்காய் ஜூஸால் ஏற்படும் உடல் எடை குறைப்பு பயனைப் பற்றி மட்டுமே பார்க்கப் போகிறோம்.

    உடல் எடையை குறைக்க உதவும் மாதுளைப்பழம்! உடல் எடை குறைப்பிற்கு நெல்லிக்காய் ஜூஸால் கிடைக்கும் பயன்கள் ஏராளம்.

    உடல் எடை குறைப்பில் எப்படி இது உதவி புரிகிறது என்பதை இப்போது பார்க்கலாமா? உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த நெல்லிக்காய் உதவும் என பல ஆய்வுகள் நம்ப வைத்துள்ளது. பல சந்தர்ப்பங்களில் உடலின் மெட்டபாலிச வீதம் குறைவாக இருக்கும்.

    இதனால் உடல் எடை அதிகரிக்கும். மெட்டபாலிச மேம்பாட்டினால், உடல் எடை வேகமாக குறைய ஆரம்பிக்கும். அதனால் உடலின் மெட்டபாலிச வீதத்தை அதிகரிக்க உதவுகிறது நெல்லிக்காய் ஜூஸ். உடலின் புரதம் கூட்டுணைப்பை மேம்படுத்துவதன் மூலம் இது சாத்தியமாகிறது.
    contd..



    Sponsored Links
    jv_66 likes this.

  2. #772
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    எவ்வளவு புரதம் உடைகிறதோ, அந்தளவிற்கு கூடுதல் ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. இதனால் உடலின் மெட்டபாலிச வீதம் அதிகரிக்கிறது. அதனால் உடல் எடை குறைப்பிற்கு நெல்லிக்காய் ஜூஸ் பெரிதும் உதவுகிறது.
    உடல் எடை அதிகரிப்பதற்கு நச்சுத்தன்மையின் தேக்கமும் ஒரு காரணமாகும்.

    அதனால் உடல் எடையை பராமரிப்பதற்கு குறிப்பிட்ட இடைவேளையில் நச்சுத்தன்மையை நீக்குவதற்கு ஒரு முகாமை உங்கள் உடல் நடத்த வேண்டும். உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை நீக்கும் குணங்களை நெல்லிக்காய் ஜூஸ் கொண்டிருக்கிறது.

    இவ்வகையான நச்சுக்கள் உங்கள் உடலுக்கு தீங்கை விளைவிக்கும். மேலும் ஒட்டுமொத்த உடல் எடையும் அதிகரிக்கும். அதனால் உடல் எடையை அதிகரிக்க செய்யும் இவ்வகையான நச்சுக்களை நீக்க நெல்லிக்காய் ஜூஸ் பெரிதும் பயன்படுகிறது.

    சீரான முறையில் நெல்லிக்காய் ஜூஸை பருகி வந்தால், உங்கள் உடலின் செரிமான வீதம் சீராக இருக்கும். அதே போல் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் மற்றும் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் நச்சுக்களை நீக்கி உடல் எடையை குறைக்க செய்யும்.
    contd..


    jv_66 likes this.

  3. #773
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நெல்லிக்காய் என்பது புத்துணர்ச்சி அளிப்பதில் சக்தி வாய்ந்ததாகும். அதாவது உடலின் ஆற்றல் அளவை மேம்படுத்தவும் தேவையான நேரத்தில் உடலுக்கு நீர்ச்சத்து அளிக்கவும் இது உதவும். உடல் எடையை குறைக்க நெல்லிக்காய் ஜூஸை பருகினால், உடலமைப்பின் ஆற்றல் சக்தி மேம்படும்.

    எந்தளவுக்கு ஆற்றல் சக்தியுடன் உங்கள் உடல் உள்ளதோ, அவ்வளவு வேகத்தில் உடல் எடை குறையும். ஈடுப்பாடின்மை உடல் எடை அதிகரிப்பை உண்டாக்கி விடும்.

    அதனால் நெல்லிக்காய் ஜூஸ் பருகி உடலை எப்போதும் முழு ஆற்றல் திறனுடன் வைத்திருங்கள். நெல்லிக்காயை கொண்டு உடல் எடை குறைப்பதால் கிடைக்கும் பயனில் இதுவும் ஒன்றாகும்.

    நெல்லிக்காய் ஜூஸ் உடல் எடை குறைப்பிற்கு பெரிதும் உதவும். இது போக பல உடல்நல பயன்களையும் அது கொண்டுள்ளது. இவைகளால் உங்கள் ஒட்டுமொத்த உடலும் நல்ல ஆரோக்கியத்துடன் விளங்கும். உடல் எடை குறிப்பும் அதில் ஒரு அங்கமாகும்.

    கனிமங்கள், வைட்டமின்கள் (குறிப்பாக வைட்டமின் சி) மற்றும் இதர ஊட்டச்சத்துக்களை நெல்லிக்காய் ஜூஸ் அளிப்பதால், உடல் திடமாக கட்டுக்கோப்புடன் விளங்கும்.

    அதனால் உடல் எடை குறைப்பிற்கு நெல்லிக்காய் ஜூஸை சீராக குடிக்க வேண்டும்.

    jv_66 likes this.

  4. #774
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கருந்துளசியின் மருத்துவப் பயன்கள்:


    * ஆஸ்துமாவுக்கு எதிராக வேலை செய்யும் தன்மை (Anti-Asthmatic)

    * ஆன்டி-ஆக்சிடென்ட் (Anti-oxidant) தன்மை

    * வலி, வீக்கம்(Anti-inflammatory) போக்கும் தன்மை

    * காய்ச்சலை போக்கும் தன்மை

    * கதிர்வீச்சுகளிலிருந்து பாதுகாக்கும் தன்மை

    * மனது சார்ந்த நோய்களை குணமாக்கும் தன்மை

    * நோய் எதிர்ப்புத் தன்மை (Immune modulator)

    * கண்புரை(ஊயவயசயஉவ)யிலிருந்து பாதுகாக்கும் தன்மை
    contd..


    jv_66 likes this.

  5. #775
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மருத்துவத்தில்கருந்துளசியின் பயன்பாடுகள்:-

    *
    ஒருகைப்பிடி துளசி இலைக் கொழுந்துடன் சிறிதளவு இஞ்சி சேர்த்து அரைத்து, சுண்டைக்காய் அளவான மாத்திரைகளைச் செய்து காயவைத்துக் கொள்ள வேண்டும். வேளைக்கு ஒரு மாத்திரை நசுக்கி, தேனில் கலந்து, குழைத்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வறட்டுஇருமல் உடனடியாக குறையும்.

    *
    துளசிஇலையை இலேசாக அவித்து 5 மி.லி. அளவுக்குச் சாறு எடுத்து காலை, மாலை வேளைகளில் ஒரு வாரம் வரை குடித்தால் தீராத சளித்தொல்லைகள் தீரும்.

    *
    ஐந்துகிராம் துளசி இலையை, இரண்டு மிளகுடன் சேர்த்து நன்றாக அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து காலை மற்றும் மாலைவேலைகளில் வெந்நீரில் சேர்த்து குடித்தால் தீராத காய்ச்சல் குணமாகும்.




  6. #776
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பட்டை:-

    ஞாபக சக்தியில் பட்டைய கிளப்புது ‘பட்டை’

    ஏலக்காய், கிராம்பு, பட்டை, லவங்கம், போன்ற பொருட்கள் உணவில் வாசனை மற்றும் ருசிக்காக சேர்க்கிறோம். இவற்றில் மருத்துவ பயன்களும் உள்ளது.

    பட்டையில் உள்ள மூலப்பொருள் மறதி நோய்க்கு மருந்தாக இருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சரியான அளவில், அதற்கான முறையில் உட்கொள்ளப்படும் பட்டை, மறதிக்கு நோயை பறந்தோடச் செய்துவிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். டெல்அவிவ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது குறித்த சிறப்பு ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். பேராசிரியர் மைக்கேல் ஒவாடியா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்தான் பட்டையின் பெருமை தெரியவந்தது.

    மறதி நோய்க்கான காரணமும் தீர்வும் என்ற தலைப்பில் நடந்த ஆய்வு முடிவில் வெளியாகி உள்ள தகவல்கள்: உணவில் ருசி மற்றும் வாசனையை அதிகரிக்கவும், எளிதில் செரிமானமாவதற்கும் சேர்க்கப்படும் தாவரப் பொருளான பட்டை, மறதி நோய்க்கும் மருந்தாகிறது. பட்டையில் உள்ள பி-ஆமிலாய்ட் பாலிபெப்டைட் ஆலிகோமர்ஸ் என்ற மூலப்பொருள் மூளையில் மறதி நோய்க்கு காரணமான பி-ஆமிலாய்ட் பிப்ரில்ஸ் என்ற பாக்டீரியாவை தாக்கி அழிக்கிறது. இந்த பாக்டீரியாக்கள், மூளையில் உள்ள நியூரான்களை அதிக அளவிலும் விரைவிலும் அழிக்கும் திறன் கொண்டவை. இவற்றை கட்டுப்படுத்தி அழிப்பதால் நோய்த் தாக்குதல் பெருமளவு குறையும். மறதி நோய் உள்ளவர்கள் மட்டுமின்றி சாதாரணமானவர்களும்கூட பட்டையை தேவையான அளவு உட்கொள்ளலாம். அதே நேரத்தில் நாள் ஒன்றுக்கு 10 கிராம் என்ற அளவுக்கு மிகாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

    Moderator's Note: This Article has been published in Penmai eMagazine December 2014. You Can download & Read the magazines HERE.




    Last edited by sumathisrini; 23rd Dec 2014 at 03:27 PM.

  7. #777
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பூண்டு..!

    நமது சமையலறை அலமாரியில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் இருக்கும். அதில் பூண்டிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம. பூச்சிக்கடியினால் உண்டான விஷம் பலவீனமடையும். பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் தேமல் காணாமல் போய் விடும்.

    பூண்டை சாப்பிடப் பிடிக்காதவர்களுக்கு, பூண்டு, தக்காளி, வெங்காயம் போன்றவற்றை நசுக்கிப் போட்டு சூப் வைத்துக் கொடுக்கலாம். இந்த சூப் குடித்தால் சளி பிடிப்பது குறையும்.

    பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும் உடனே பறந்து விடும். உணவில் சேர்த்தால் நல்லது தான் ஆனால், அதில் சத்துக்கள் குறைந்து விடுகின்றன; அதனால், அப்படியே கடித்து விழுங்குவது நல்லதே.

    தொண்டை கரகரப்பா? கவலையே வேண்டாம்; டாக்டரிடம் போக வேண்டாம்; நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விடுங்கள். சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண் டால், சர்க்கரை அளவை சீராக்குகிறது; இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது. ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் குறைந்து விடும்.

    பூண்டில் , அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவை நீங்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது. இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில் மரு காணாமல் போய்விடும்.
    contd..


    Last edited by chan; 17th Nov 2014 at 02:22 PM.

  8. #778
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அலர்ஜியை விரட்ட அருமையான மருந்து பூண்டு; மூன்று வாரம் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூண்டு விழுது சாப்பிட்டு வந்தால் போதும், அலர்ஜி போய் விடும். பல்வலியா, அதற்கும் பூண்டு போதும். ஒரு விழுதை கடித்து அதன் ரசம் பட்டால் போதும், பல்வலி போய்விடும்.

    தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டாலே போதும்; ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் எதுவும் வராது.

    பூண்டு சாப்பிட்டால், மூச்சு விட்டாலும், அதன் மணம் தான் வீசும். மூக்கை பிடிக்க வைக்கும் வாசனை தான் பலரையும் சாப்பிட விடாமல் பயமுறுத்துகிறது.
    சீரக தண்ணீர் செய்முறை:-

    குடம் (15) லிட்டர் தண்ணீரை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் தோராயமாக பாதி ஆறவைத்து அதில் ஒரே ஒரு டீஸ்பூன் அளவு சீரகத்தை போட்டு ஓர் குழி தட்டு போட்டு (வேர்த்து வடியும் நீர் தண்ணீரில் விழும்படியாக)முடிவைக்கவேண்டும். இந்த தண்ணீரை குடித்துவர வேண்டும். தினமும் புதியதாக செய்துக்கொள்ளவும்
    contd..


  9. #779
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    BP மற்றும் கொழுப்பு கட்டுக்குள் வரும்.

    சமையலில் சீரகம் உபயோகிகின்றோமே தனியாக ஜீரக தண்ணீர்குடிக்கவேண்டுமா என்ற நியமான நினைப்பு ஏற்ப்படுவது இறக்கையே. மேற்கண்ட செயல்முறைவிளக்கத்தில் சீரகம் மிதமான வெப்பத்திற்கு உட்ப்படுதப்படுவதை பார்க்கின்றோம், இதே சமையலில் பயன்படுத்தும்போது நமக்கு தேவையானமருத்துவ உட்ப்பொருள் (alkaloid) குழம்பு கொதிக்கும்போது ஆவியாகி வெளிப்பட்டுவிடும்என்பதே உண்மை. அதலால் நுணுக்கமரிந்து பயன்படுத்துவது நற்பலனளிக்கும்.

    வாயு தொல்லை

    பெரும்சப்தத்துடன் ஏப்பம் விடுபவர்களை காண முடிகிறது.நமக்கு அருவெறுப்பு, சிறிது கூட நாகரிகம் இல்லாமல் இப்படி பொது இடத்தில்ஏப்பம் விடுகிறாரே என்று. ஆனால் ஏப்பட்ம் விட்டவர் புத்திசாலி. ஆயுர்வேதத்தின்உபதேசங்களை நன்கு அறிந்திருக்ககக்கூடும். பெரும் சப்தத்துடன் விடுவது தவறுதான்என்றாலும் ஒரு இயற்கையான உபாதையை தடுக்காமல் ஏப்பத்தை நன்கு வெளியேவிட்டுவிட்டதால் வாயுத் தொல்லைகள் அவருக்கு வராமல் தன்னை பாதுகாத்துக் கொள்கிறார்.இதே நபர் வரும் ஏப்பத்தை தடுக்கக்கூடிய வழக்கத்தை கொண்டிருந்தால் அவருக்குகீழ்காணும் உபாதைகள் வரக்கூடும்.
    contd..



  10. #780
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    1.ருசியின்மை 2. உடல்நடுக்கம்

    3. ஹ்ருதயத்திலும், நெஞ்சிலும் வாயுப்பிடிப்பு

    4. வாயுவினால் வயிறு பெருத்தல் 5. இருமல் 6. விக்கல்.

    ஜீரகத்தை லேசாக வறுத்து (5 கிராம் அளவில்) கால் லிட்டர் தண்ணீரில் சிறிது நேரம் கொதிக்கவிட்டு வடிகட்டி, வெதுவெதுப்பாக சிறிய அளவில் அடிக்கடி பருக வேண்டும். ஆயுர்வேத மருந்து கடைகளில் தான் வந்திரம் குளிகை, வாயுகுளிகை என்று மாத்திரைகள் விற்கப்படுகின்றன, தான்வந்திரம் குளிகையை மேல் குறிப்பிட்ட ஜீரக ஜலத்துடன் 1 மாத்திரையை காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். தசமூலாரிஷ்டம் 1 அவுன்ஸ் அதாவது 25il, 1 வாயு குளிகையுடன் காலை, இரவு -ஆஹாரத்திற்குப் பிறகு சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். மருந்தை நாடாமல் இருக்க வேண்டுமாயின் ஏப்பத்தை தடுக்காமல் அதிக சத்தமில்லாமல் மெதுவாக விட்டு விடுவதே நல்லது.

    நம் உடலில் புகும் தீய சக்திகளில் பெரும்பாலானாவை தண்ணீர் மூலமாகவே சேர்கின்றன. தண்ணீரைக் காய்ச்சி ஆற வைத்து அருந்தி வந்தால் நமது எண்ணங்கள் துőய்மையாகி ஆன்மீக முன்னேற்றம் துரிதம் அடையும். தண்ணீரில் சிறிது சீரகத்தைச் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் தோஷங்கள் அகலும்..
    அரிசிக் கஞ்சியின் மகத்துவம்:-

    *சாதம் வடித்த கஞ்சியுடன் சிறிது உப்பு கூட்டி பருக, கண்ணெரிச்சல் நீங்கி குளிர்ச்சியடையும். உடல் உஷ்ணம் குறையும்.

    பேதி ஏற்படும்போது அரிசிக் கஞ்சியில் உப்பு சேர்த்து குடித்தாலும், சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிட்டாலும் நல்லது..

    அரிசிக் கஞ்சி

    இரவு வடித்த சாதத்தில் ஒரு டம்ளர் நீர் ஊற்றி மறுநாள் காலையில் அந்த நீரில் உப்பு சேர்த்து குடிப்பது அல்சர் போன்றவற்றிற்கு நல்லது.

    ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரிசி கழுவிய நீரை லேசாக சூடுபடுத்தி கால் மற்றும் கைகளில் ஊற்ற எலு*ம்பு பலம் பெறும்


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter