Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #781
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நீரிழிவு நோய்
    நீரிழிவு நோயின் பிரதான எதிரி போன்ற மாயை பழங்கள் மீது உருவாகியிருக்கின்றது. நீரிழிவு நோய்க்கு பழங்கள் தான் சிறந்த தீர்வு என்பதை எப்படி நாம் உணர்ந்து கொள்வது ?
    நீரிழிவு நோய் வந்தவர்கள் அந்நோய் பற்றிய பயத்தினை முற்றிலும் நீக்கிவிட்டு, நோய் வந்ததற்கான காரணத்தையும், அந்நோய் பற்றிய அறிவையும் வளர்த்துக் கொள்ளுதல் அவசியம் ஆகின்றது .
    மரபணு குறைபாட்டினால் வருவது, தாய், தந்தையற்கு இந்நோய் இருப்பதால் வருவது, மன இறுக்கம் மற்றும் மன அழுத்தம் இவற்றால் வருவது என இது போன்ற பல காரணங்கள் நீர ழிவு நோய் வருவதற்கு ஆதாரமாக இருந்தாலும், முறையற்ற உணவுப்பழக்கம் ஒன்றே காரணமாக இருக்கிறது.
    மூன்று நான்கு தலைமுறைகளுக்கு முன்பிருந்தே தொடங்கி விட்ட மிக மோசமான உணவு சீர்கேடு தான் மரபணு குறைபாட்டிற்கும், மனயிறுக்கம் மன அழுத்தத்திற்கும் காரணமாக இருக்கிறது. நூறு வருடத்திற்கு முன்பெல்லாம் ''நீரிழிவு நோய்''''பிரஷர் ''என்றால் என்னவென்று தெரியாத நிலை தான் இருந்து வந்தது
    எண்ணற்ற மருத்துவமணைகளும், தூருவிற்கு காணப்படும் எண்ணற்ற மருந்துக்கடைகளும் இருந்தும், வீட்டிற்கு ஒரு நீரிழிவு நோயாளிகள் நிரந்தரமாக இருக்கும் சூழல் தான் உருவாகியிருக்கின்றது.
    இந்த நோய் நீங்க வேண்டுமானால் உடலின் அமைப்பை பற்றி தெரிந்து கொள்ளுதல் அவசியமாகின்றது,
    செல்களின் தொகுப்பு தான் திசுக்களாக ஆகின்றது,
    திசுக்களின் தொகுப்பு தான் உறுப்புகளாகின்றது,
    உறுப்புகளின் தொகுப்பு தான் உடலாகின்றது.
    இந்த உடல் இயக்கம் சரியாக இருக்க வேண்டுமானால், செல்களின் இயக்கமும் சரியாக இருக்க வேண்டும். செல்களின் இயக்கத்திற்கு தேவையான தாதுப்பொருட்கள், விட்டமின்கள் மற்றும் பிராண சக்தியில் குறைபாடு ஏற்படுமாயின், உடல் தன் நோய் தன்மையை வெளிப்படுத்துகின்றது
    contd..



    Sponsored Links
    saidevi likes this.

  2. #782
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அவ்விதம் செல்களின் இயக்கத்திற்கு தேவைப்படும் முக்கிய பல மூலப்பொருட்களில் ஒன்றாக குளுக்கோஸ் இருக்கிறது, நன்மை செய்யக்கூடியதும் தீமை
    செய்யக்கூடியதுமாய் இரண்டு வகையான குளுக்கோஸ் இருக்கிறது.
    நாம் உண்ணும் உணவில் இருக்கக்கும் நன்மை செய்யக்கூடிய குளுக்கோஸை மட்டும் செல்கள் எடுத்துக் கொள்கிறது.
    செல்கள் எடுத்துக் கொள்ளாத தீமை செய்யக்கூடிய குளுக்கோஸ் அனைத்தும் இரத்தத்தில் சேர்ந்து விடுகின்றன. இரத்தத்தில் கெடுதல் செய்யக்கூடிய குளுக்கோஸ் அதிகரிக்கும் போது உடல் இயல்பு நிலையில் இருந்து மீறி சில அசௌகரியங்கள் ஏற்படுவதை முன்னிட்டு , இரத்தத்தை சோதனை செய்து பார்க்கும் போது''சுகர்''நமக்கும் வந்து விட்டது என்ற நல்ல செய்தி அதாவது இனிப்பான செய்தி தெரிய வருகிறது, அடுத்த நிமிடமே நம் வாழ்க்கை முடிந்து விட்டது என்ற சிந்தனை தான் ஓங்கி நிற்கிறது,
    உடலுக்கு தீமை செய்யும் குளுக்கோஸ் அளவு அதிகமாகிவிட்டது என்ற செய்தியை தான் அந்த சோதனையின் முடிவு சொல்லி இருக்கின்றது . மேலும் மேலும் இந்த நிலை தொடர்ந்தால் உடலுக்கு ஆபத்து என்ற எச்சரிக்கையை நாம் நோய் என்று நினைத்து மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்கிறோம்.
    நெருப்பில் சமைத்த உணவுகளில் அதிகமான அளவில் தீமை செய்யக்கூடிய குளுக்கோஸ் தான் இருக்கிறது. இந்த குளுக்கோஸை சரி செய்வதற்காக இன்சுலின் என்ற வேதிப்பொருளை கனையம் சுரக்கிரது. தொடர்ந்து தேவைக்கு அதிகமாக இன்சுலினை சுரந்து குறைகின்றதால், நாம் மாத்திரை மூலமாகவோ, ஊசிகளின் மூலமாகவோ இன்சுலினை எடுத்துக் கொள்கிறோம்.
    பழ உணவுகளில் இருக்கக்கூடிய இனிப்பு சுவை அதாவது குளுக்கோஸ் மனித உடலுக்கு மிக மிக நன்மை செய்யக்கூடிய குளுக்கோஸாக செயல்படுகிறது..
    மேலும் இந்த வகை குளுக்கோஸ் தீமை செய்யக்கூடிய குளுக்கோஸை இரத்தத்தில் இருந்து வெளியேற்றும் திறனை பெற்றிருக்கிறது, முள்ளை முள்ளால் தான் எடுப்பது போல், கெட்ட குளுக்கோஸை நல்ல குளுக்கோஸை கொண்டு நீக்க முடியும், அந்த அற்புதமான வேலையைத்தான் இயற்கை உணவான பழங்கள் செய்கின்றன.
    நீரிழிவு நோயின் பாதிப்பை அதிகப்படுத்தும் லட்டு, பூந்தி, ஜாங்கிரி, ஐஸ்கிரீம் போன்ற கெடுதல் செய்யும் உணவுகளை உண்ணுவதற்கு கூட யோசிக்க மாட்டார்கள். நன்மை செய்யக்கூடிய குளுக்கோஸ் நிறைந்த பழம் என்று வந்தாலே பத்தடி தூரம் பின்னால் போய் நின்று கொள்ள நினைக்கிறார்கள்.
    கணமூடித்தனமாக இந்த அறியாமையை விலக்கும் வரை , சுகரும் உங்களை விட்டு போவதில்லை என்று முடிவு செய்திருக்கின்றது .
    நீரிழிவு நோய் வந்தவர்கள் தேங்காய், பூவன் வ ாழைப்பழம், கொய்யா, பப்பாளி, கருப்பு திராட்சை, சாத்தூக்குடி, வெள்ளரிக்காய், கேரட், மட்டை அவல் போன்ற உணவுகளை ஆரம்ப காலக்கட்டத்தில் எடுத்துக் கொள்ளலாம், உங்கள் மனம் உறுதி அடைந்த பிறகு அனைத்து வகை பழங்களையும் எடுத்துக் கொள்ளலாம் உணவாக, மனதளவில் தயாராகி ஒரு செயலைச் செய்யும் போது தான் முழுப்பலனையும் அடைய முடியும்.

    saidevi likes this.

  3. #783
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    2-ம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணை
    காலை உணவு 7.30 மணி :

    1 கப் காபி (அ) டீ 1 சதவீத கொழுப்புள்ள பாலில் தயாரித்தது. தானிய ரொட்டி 2 துண்டு, கொழுப்பில்லாத வெண்ணெய் (மார்கரைன்) 2-3 குக்கர் இட்லி, 1 கப் கோதுமை ரவை உப்புமா, தக்காளி, புதினா சட்னி, சாம்பார்.

    காலை 10.30 :

    பரிந்துரைக்கப்பட்ட ஏதாவது ஒரு பழம், 1 க்ளாஸ் மோர்.

    மதிய உணவு 12.30 :

    ஒண்ணரை கப் ப்ரவுன் சாதம் (அ) வரகு, சாமை, தினை, குதிரை வாலி சாதம், அரை கப் சாம்பார், 1 கப் ரசம், 2 கப் காய்கறிகள் (கூட்டு, பொறியல், கீரை, மோர்)

    மாலை 3.30 :

    1 கப் காபி (அ) டீ, சுண்டல்

    இரவு 8 மணி : 3 ரொட்டி, வேக வைத்து காய்கறிகள் சேர்த்த பருப்பு, மோர் (அ) கொழுப்பு நீக்கிய தயிர்.

    இரவு 9 மணி :

    1 பழம், 10 வேர்க்கடலை

    இது ஒரு மாதிரி அட்டவணையே. காய்கறி சாலட், சூப், கேழ்வரகு, ஓட்ஸ் இவை சேர்த்த உணவு வகைகளை மாற்றிச் செய்யலாம். கொழுப்பு நீக்கிய பால் எடுத்துக் கொள்ளலாம். வேக வைத்த உணவுகள் சிறந்தவை. எண்ணெயை மிகக் குறைந்த அளவே பயன்படுத்துங்கள்.


  4. #784
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தேங்காய்
    பச்சைத் தேங்காயில் கொழுப்பு இருக்கத்தான் செய்கிறது ஆனால், அது தண்ணீரில் கரையும் தன்மை கொண்ட உயர் தரமான hdc வகையான நன்மை செய்யக்கூடிய கொழுப்பாக இருக்கிறது, இதனை நீங்கள் எவ்விதம் அறிந்து கொள்ளலாம் என்றால்......
    சிறிதளவு தேங்காயை துருவல் செய்து கையில் எடுத்துக் கொள்ளுங்கள், அதனை உள்ளங்கைகளால் அழுத்தி நன்றாக கசக்கித் தேயுங்கள். இப்போது இரண்டு உள்ளங் கைகளிலும் எண்ணெய் பசை ஒட்டி இருப்பது நன்றாக தெரியும், குழாயில் விழும் சாதாரண நீரில் கைகளை கழுவும் போது, கைகளில் இருந்த எண்ணெய் பசை மட்டும் அல்ல ஒட்டியிருந்த மற்ற அழுக்குகளும் சேர்த்து நீங்குவதை கண் கூடாக உணர முடியும். இன்னும் கூட சில கிராமங்களில் சிலர் கரிப்பாத்திரங்களை தேய்க்க தேங்காய் துருவலைத்தான் பயன் படுத்துகிறார்கள்.
    ஆனால் சிறிதளவு தேங்காய் எண்ணயை கையில் தேய்த்து விட்டு கழுவும் போது அதன் பிசு பிசுய்பு எளிதில் நீங்குவது இல்லை , சோப்பு போட்டால் தான் பிசு பிசுப்பு போகின்றது அதற்கு காரணம் தேங்காய் எண்ணெயில் இருக்கும் தண்ணீரில் கரையாத ldl கெட்ட கொழுப்பு ஆகும்.
    தேங்காயை நீங்கள் நெருப்பில் சமைத்து உணவாக எடுத்துக் கொண்டால், அதில் இருக்கும் கொழுப்பு தண்ணீரில் கரையாத கெட்ட கொழுப்பாக மாறிவிடுகிறது. இந்த கெட்ட கொழுப்பே இரத்தத்தில் கொழுப்பு கட்டிகளாக மாறி, இரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற கொடிய நோய்க்கு காரணமாகின்றது.
    பச்சை தேங்காயில், தண்ணீரில் கரையக்கூடிய உயர் ரக கொழுப்பு, உயர்ரக துத்தநாகச் சத்து, புரதம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்ற பலவகை அரிய பொருட்கள் இரத்தத்தில் கரைந்து, அதில் இருக்கும் அபாயம் தரும் நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் வல்லமை கொண்டவைகளாக இருக்கிறது.
    பச்சை தேங்காய் இன்றி கனவில் கூட மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியாது என்பது மட்டும் உண்மை .
    இயற்கையானது, தேங்காய் தான் கொடுத்திருக்கின்றதே தவிர, தேங்காய் எண்ணயை தரவில்லை என்று சிந்தித்து பாருங்கள். தேங்காய் மீதிருக்கும் பயம் தானாக விலகி விடும்


  5. #785
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பழைய சாதத்துல இவ்வளவு விஷயமா


    முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள்சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாகஇருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒருமருத்துவர்.

    தவிரவும் உடலுக்கு, குறிப்பாகசிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்:'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகிநம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

    கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய்எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக்காய்ச்சலும் நம்மை அணுகாது!

    பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில்வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில....

    1. "
    காலையில்சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல்லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

    2.
    இரவேதண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில்உருவாகிறது.

    3.
    மறுநாள்இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்றுவலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

    4.
    அதுமட்டுமில்லாமல்இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

    5.
    இந்தப்பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம்தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல்எடையும் குறைந்தது." என்கிறார்.

    6.
    மிகவும்முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்கசோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

    7.
    அலர்ஜி, அரிப்புபோன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.

    8.
    அல்சர்உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும்அளவிற்குப் பலன் கிடைக்கும்.

    9.
    எல்லாவற்றிற்கும்மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்தநோயும் அருகில்கூட வராது.

    10.
    ஆரோக்கியமாகஅதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்.




  6. #786
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சர்க்கரை நோய்க்கு தீர்வு
    நீரிழிவு நோய்-சர்க்கரை நோய் என்றும்அழைக்கப்படுகிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடி இருக்கும் நிலையே சர்க்கரை நோய்இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பர்.இதனால் தான் இதனை நீரிழிவு என்றும் கூறுவர்.
    காரணங்கள்
    -
    இன்சுலின்உற்பத்தி குறைபாடு.
    -
    போதியஉடலுழைப்பின்மை.
    -
    மனஉளைச்சல்
    -
    அதிகஉடல் பருமன்
    -
    பரம்பரைகாரணங்கள்

    அறிகுறிகள்
    -
    சிறுநீரில்சர்க்கரை வெளியேறுதல்.
    -
    சிறுநீர்கழித்தல்.
    -
    அதிகமாகதண்ணீர் தாகம் ஏற்படுதல்.
    -…
    அதிகமாகபசித்தல்
    -
    அதிகஉடல் சோர்வு, தலைசுற்றல்
    -
    தூக்கமின்மை
    -
    உடல்எடை குறைதல்.


    contd..



  7. #787
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சிகிச்சைகள்:
    நீரிழிவு நோய் உடையவர்கள் இனிப்பு, எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றை கைவிடல் நல்லது. வெந்தயம்-தினசரி சேர்த்து கொள்வது நல்லது. முளைவிட்ட வெந்தயம், வெந்தயச்சாறு, பொடி, வெந்தயக்கீரை என பலவழிகளிலும் பயன் படுத்தலாம், பாகற்காய் சாறு, நூல் கோல் சாறு, வெள்ளரி, நெல்லிக்காய், கறிவேப்பிலை சாறுகள் நல்லது.
    மாவுப் பொருட்கள் குறைத்து காய்கள், கீரைகள், பழங்கள் அதிகம் சேர்க்கலாம் .
    பழங்களில் பப்பாளி, கொய்யா, சாத்துக்குடி, மாதுளை, திராட்சை, நாவல், அதிகம் சேர்க்கலாம். ஆப்பிள், வாழை அளவுடன் சேர்க்கலாம், பேரிச்சை மா, சப்போட்டா தவிர்க்கவும்.
    முளைவிட்ட தானியங்கள், பருப்புகள்- வெந்தயம், பாசிப்பயறு, கொண்டைக்கடலை, பட்டாணி, பீன்ஸ், கோதுமை, கேழ்வரகு ஆகியன பயன் படுத்தலாம்,
    தினசரி உணவில் பச்சை காய்கறி சாலட் (முட்டை கோஸ், கேரட், சொள, சொள, வெள்ளரி,) சேர்க்கவும
    ் கிழங்கு, வேறு காய்கறிகள் குறைக்கவும்,பச்சைகாய்கள் அதிகமாக சேர்க்கவும், யோகப்பயிற்சியில் சூரிய நமஸ்காரம் மிக மிக நல்லது, எந்த உணவாக இருந்தாலும் நன்கு மென்று உமிழ்நீரோடு கலந்து சாப்பிடுவது நல்லது, அப்படி இல்லாமல் கடமைக்கு சாப்பிடுவது கூடாது



    Last edited by chan; 19th Nov 2014 at 01:14 PM.

  8. #788
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இயற்கை உணவுகள் உயிராற்றல் மிகுந்தவை, காரத்தன்மை மிகுந்தவை, அனைத்து சத்துக்களும் முழுமையாக உள் அடங்கியவை, உடலுக்கும் மனதிற்கும் நலன் தருவன, இயற்கை உணவுகளை மூன்று வகைப் படுத்தலாம்.
    1,கழிவு நீக்கும் உணவுகள்.
    2,உடலை வளப்படுத்தும் உணவுகள்.
    3,வலிமை படுத்தும் உணவுகள்.
    என மூன்று வகைப் படுத்தலாம்.


  9. #789
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    1,கழிவு நீக்கும் உணவுகள்.
    எலுமிச்சை, ஆரஞ்சு, மாதுளை, திராட்சை, தர்பூசனி போன்ற சாறுள்ள பழக்கங்களும் மற்றும் சுரைக்காய், வெண்பூசனி வெள்ளெரி போன்ற நீர்க் காய்கள் சிறந்த கழிவு நீக்கும் உணவுகளாகும் ,
    மேலும் இளநீர், கறிவேப்பிலை, அருகம்புல், துளசி, வில்வம் போன்ற சாறுகளும் கழிவு நீக்கும் உணவுகளாகும், இத்தகைய உணவுகள் நமது உடலையும், இரத்தத்தினையும் தூய்மைபடுத்துகின்றன கழிவுளை வெளியேற்றம் செய்ய உதவுகின்றன. அனைத்து நோய் நிலைகளிலும் இந்த உணவுகள் சிறந்த பலனை அளிக்கும்.


  10. #790
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    2,உடலினை வளப்படுத்தும் உணவுகள்.
    இவை சாத்வீக உணவு வகையாகும், பழங்கள், காய்கறிகள், தானியங்கள், வேகவைத்த காய்கள், முளைகட்டிய பயறுகள் அடங்கும், இவை நமது உடலையும், மனத்தையும் வளப்படுத்தும் உணவுகள், இவை நமது உணவில் பெரும் பாலும் இருக்க வேண்டும்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter