Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #801
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தேன் வாங்குகின்ற போது நன்கு கவனித்துத் தரமான தேனை வாங்க வேண்டும். நல்ல தரமான தேன் கண்ணாடி போன்று சுத்தமாகவும் அடியில் வண்டல் எதுவுமின்றியும் இருக்கும். காதி கமிஷன் மற்றும் கிராமோதய நிறுவனங்களின் மூலம் நல்ல தரமான தேன் கிலோ எண்பது ரூபாய் அளவில் விற்கப்படுகிறது.

    100 கிராம் தேனில் உள்ள சத்துகளின் அளவு. ஃப்ரக்டோஸ் (பழச்சர்க்கரை) 38 கி
    குளுக்கோஸ் 36 கி
    சுக்ரோஸ் 4.5 கி
    அமிலத்தன்மை 0.027 கி
    கால்ஷியம் 5 மி.கி
    பாஸ்பரஸ் 16 மி.கி
    கொழுப்பு 0 கி
    புரதம் 0.3 மி.கி
    கனிமச் சத்து 0.2 மி.கி

    தேனில் சாதாரணமாகக் காணப்படும் மகரந்தப் பொடிகள்
    கரும்பு -- ஈச்சம்பூ -- பனை -- தென்னை- - கடுகுப்பூ -- நெருஞ்சி போன்ற பூக்களைச் சேர்ந்தவையாகும்.

    தேனடையைப் பிழிகின்ற போது ஒரு சொட்டுத் தேனை கண்ணாடிச் சில்லில் பரப்பி நுண்ணோக்கி மூலம் பார்த்தால் பூக்களின் மகரந்தங்களைக் காணலாம். துல்லியமாகக் கணக்கிட்டால் 1 மி.கி. தேனில் 25 முதல் 30 மகரந்தம் வரை இருக்க வேண்டும். இதற்குக் குறைவாக இருந்தால் அது கலப்படம் செய்யப்பட்ட தேன். வெல்லப்பாகு சேர்ந்திருக்கக் கூடும்


    Sponsored Links
    saidevi likes this.

  2. #802
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அருகம்புல்
    **************
    எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து, காலையில் 9 மணிக்கு பசி ஆரம்பித்த வுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும், பசிப்பதற்கு முன்பே சாப்பிடுவது தவறு. அருகம்புல் சாறு சாப்பிட்டு2மணி நேரம் கழித்து ஒரு பழம் சாப்பிட்டால் போதும். அடுத்தது மதிய சாப்பாடுதான். இம்மாதிரி செய்தால் எல்லா நோய்களும் குணமடையும், உடல் எடை குறைய, கொலஸ்ட்ரால் குறைய, நரம்பு தளர்ச்சி நீங்க, இரத்த புற்றுநோய் குணமடையக் அருகம்புல் மிகவும் சிறந்தது.
    இருமல், வயிற்றுவலி, அனீமியா, மூட்டுவலி, இருதயக்கோளாறு போன்ற நோய்களுக்குச் சிறந்த மருந்து. ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு அருகம்புல் ஒரு உலகப் புகழ் வாய்ந்த டானிக். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்வதில் சிறந்தது அருகம்புல் தான், தோல் வியாதிகள் அனைத்தும் நீங்கும், இரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை வெளியேற்றுவதில் திறமையானது, இதன் பெருமை சொல்லில் அடங்கா அற்புத மூலிகை.

    saidevi likes this.

  3. #803
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    டிராகன் பழம் (Dragon Fruit )
    இந்தப் பழத்தை பார்ப்பதற்கு நம்ம ஊர் சப்பாத்தி கள்ளி பழம்போல் உள்ளது. உள் நிறமும் அப்படித்தான் இருக்கிறது. இது ஒரு கற்றாலை குடும்பம். கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம். இதன் நிறம், வடிவம் மற்றும் திகைப்பூட்டும் பூக்கள் இதன் பூக்கள் இரவு நேரத்தில் பூக்கும். இரவில் பூக்கள் பூப்பதால் இதை “நைட் ராணி” என்று கூறப்படுகிறது. வழக்கமாக பழம் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும், அது மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலும் காணலாம். இந்த பழத்தில் பச்சை செதில்கள் போல் அமைப்பு உள்ளது. பழம் மையத்தில், இனிப்பு கூழ் சிறு கருப்பு விதைகள், வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்.
    டிராகன் பழம் ஒரு மிதமான அளவு உலர் வெப்ப மண்டல சீதோஷ்ண நிலையில் வளரும். இதன் சரியான பிறப்பிடம் தெரியவில்லை, ஆனால் தெற்கு பெலிஸ் மூலமாக மெக்ஸிக்கோ, குவாதமாலா, எல் சால்வடார் மற்றும் கோஸ்டா ரிகா இருக்க வாய்ப்பு உள்ளது. இது வெப்ப மண்டல பகுதிகளில் உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது.
    மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் சிறிய அளவீடுகளில் வணிக ரீதியாக வளர்த்து குறிப்பாக கொலம்பியாவில்புகழ்பெற்று விளங்குகிறது. இப்போது அமெரிக்க, ஆசிய, மெக்ஸிக்கோ, வியட்நாம் வரை பரவியுள்ளது. உற்பத்தி மெக்ஸிக்கோ, இந்தோனேஷியா (குறிப்பாக மேற்கு ஜாவாவில்), தாய்வான், வியட்நாம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இலங்கை, மலேஷியா, மற்றும் மிக சமீபத்தில் வங்காளம் போன்ற ஆசிய நாடுகளில் பயிரிடப்படுகின்றன. அவைகள் ஓகினாவாவில், ஹவாய், இஸ்ரேல், ஆகிய இடங்களில் காணப்படுகின்றன வடக்கு ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு சீனாவில் பயிரிடப்படுகின்றன.
    டிராகன் பழம் மகரந்த சேர்க்கை வெளவால்கள் மற்றும் அந்துப்பூச்சிகளாள் இரவில் ஏற்படுகிறது. பழங்கள் சிவப்பு தோல் மற்றும் வெள்ளை சதை கொண்டிருக்கிறது, சிவப்பு தோல் மற்றும் சிவப்பு சதை உள்ளது, மஞ்சள் தோல் மற்றும் வெள்ளை சதை கொண்டிருக்கிறது.
    தாவரம் வளர குறைந்தது மூன்று மாதங்களுக்கு தேவைப்படுகிறது. அது பின்னர் ஒவ்வொரு மாதம் வரை ஆறு மாத காலம் வரை பழம் விளைகிறது. ஒவ்வொரு பழம் 700 மற்றும் 800 கிராம் வரை எடையுள்ளதாக. ஸ்வீட் டிராகன் பழம் மென்மையான நறுமணத்தை கொண்டிருக்கிறது.

    104F வரையிலான வெப்பநிலைகளை சமாளித்துக்கொள்ளும், மற்றும் பனி குறுகிய காலமே தாங்கும் ஆனால் நீண்ட குளிரிரை தாங்காது சேதம் ஏற்படும்.
    contd..


    saidevi likes this.

  4. #804
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    டிராகன் பழம் 20-50 ஆண்டுகள் மழை ஈரமான, வெப்ப மண்டல பகுதிகளில், தாவரங்கள் நன்றாக வளர்கின்றன.
    100 கிராம் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் தோரயமாக.
    நீர் 80-90 கிராம்
    கார்போஹைட்ரேட்கள் 9-14 கிராம்
    புரதம் 0.15-0.5 கிராம்
    கொழுப்பு 0.1-0.6 கிராம்
    இழை 0.3-0.9 கிராம்
    சாம்பல் 0.4-0.7 கிராம்
    கலோரிகள்: 35-50
    கால்சியம் 6-10 மி
    இரும்பு 0.3-0.7 மிகி
    பாஸ்பரஸ் 16 – 36 மி.கி.
    கேரட்டின் (வைட்டமின் a) தடயங்கள்
    தயாமின் (வைட்டமின் b1) தடயங்கள்
    ரிபோஃப்ளாவினோடு (விட்டமின் b2) தடயங்கள்
    நியாஸின் (வைட்டமின் b3) 0.2-0.45 மி
    அஸ்கார்பிக் அமிலம் (விட்டமின் சி) 4-25 மி
    இந்த புள்ளிவிவரங்கள் சாகுபடி நிலைமைகளின் படி மாறும். ஆரோக்கியமான ஆரோக்கியமான பழம் டிராகன் பழம்.

    saidevi likes this.

  5. #805
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ஆரோக்கியமான வாழ்க்கை வாழ சாப்பிடும் போது கடைப்பிடிக்க வேண்டியவைகள்!!!

    நாம் நிறைய சாப்பிட்டால் உடல் எடை ஏறிவிடும் என்று பலரும் நினைப்பதுண்டு. அது உண்மையல்ல. சிக்கன், மட்டன் போன்றவற்றை ஃபுல் கட்டு கட்டிவிட்டு, மிகவும் ஸ்லிம்மாக வலம் வருபவர்கள் நிறையப் பேர். எனவே, நாம் உண்ணும் உணவின் அளவுக்கும், உடல் எடைக்கும் சம்பந்தமில்லை. ஆனால், எந்த மாதிரி உணவை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் கவனமாக இருக்க வேண்டும்.
    ஆரோக்கியமான உணவுகளை ஒரு சில விதிமுறைகளுக்கு இணங்க சாப்பிட்டாலே போதும். நாமும் ஆரோக்கியமாக வாழ முடியும். அது ஒன்றும் அவ்வளவு சிரமமான காரியமல்ல. இப்போது அதுப்போன்ற 10 வழிகளை நாம் பார்க்கலாம்.
    நாம் பசி எடுத்த பிறகு சாப்பிடும் போது, பசி மயக்கத்திலேயே அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விடுவது வழக்கம். எனவே, நமக்குப் பசி எடுப்பதற்கு முன்பாகவே சாப்பிட்டு விட்டால் நல்லது. அதேப்போல் தாகம் எடுப்பதற்கு முன்பே தண்ணீர் குடிப்பதும் நல்லது.
    நாம் எப்போதும் அவசர அவசரமாக சாப்பிடக் கூடாது. அது நிறைய உபாதைகளில் கொண்டு போய்விடும். ஒரு வாய் உணவை எடுத்துக் கொள்ளும் போது, அதை நன்றாக மென்று வயிற்றுக்குள் தள்ளிய பிறகே, அடுத்த வாய் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அது உங்கள் தாடைகளுக்கும் செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.
    இந்த ஒரு சாண் வயிற்றுக்குத் தான் சாப்பிடுகிறோம் என்ற எண்ணத்துடனே சாப்பிட வேண்டும். அப்போது தான் நாம் அளவோடு சாப்பிட முடியும்.
    பழச்சாறுகளை விட, சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் நிறைய நீர் குடிப்பதும் மிகமிக நல்லது. சோடா உள்ளிட்ட அதிக கலோரிகள் கிடைக்கும் பானங்களையும் குடிக்கலாம்.
    என்ன ஆனாலும் சரி, நாம் காலை உணவை மட்டும் தவிர்க்கவே கூடாது. மேலும் காலை உணவை எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரமாக நாம் எடுத்துக் கொள்கிறோமோ அவ்வளவு நல்லது.
    contd..


    saidevi likes this.

  6. #806
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    எப்போதும் ஒரே விதமான காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிடுவது நல்லதல்ல. வெரைட்டி வெரைட்டியான பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் வைட்டமின், புரதம், மினரல், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பொட்டாசியம் என்று எல்லா சத்துக்களும் கிடைக்கும்.
    வாரத்திற்கு இரு முறையாவது மீன் சாப்பிடுவது நம் உடலுக்கு மிகமிக நல்லது. அதிலும் ஃப்ரெஷ்ஷான மீன் வகைகளை மட்டுமே எடுத்துக் கொள்வது இன்னும் நல்லது.
    சிக்கனில் கொழுப்பு அதிகம் இருப்பதால், அதைப் பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். வேண்டுமென்றால், கிரில் சிக்கனை சாப்பிடலாம்.
    கொழுப்புச் சத்து குறைவான சூரியகாந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றால் செய்யப்பட்ட உணவுகளைச் சாப்பிடுங்கள். மீன் எண்ணெய், நட்ஸ் மற்றும் விதைகளும் நல்லது.
    வெண்மையாக இருக்கும் உணவுப் பொருட்களான உப்பு, மாவு, சர்க்கரை உள்ளிட்டவற்றை அளவோடு தான் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவை எப்போது வேண்டுமானாலும் நம் ஆரோக்கியத்தைக் குறைத்துவிடும்.

    saidevi likes this.

  7. #807
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சர்க்கரை நோயால் வீக்கம் அடையும் கால்களுக்கான சில டிப்ஸ்..

    சர்க்கரை நோயால் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதி கால் தான். நம் உடலின் முழு பலத்தையும் தாங்குவது கால் தான். சர்க்கரை நோய் உள்ளவர்களின் கால்களுக்கு சரியான இரத்த ஓட்டம் கிடைக்காமல், அதிக வலியை ஏற்படுத்தும். உடல் அழுத்தமும், இரத்த அழுத்தமும் அதிகமாக ஏற்படுவதால், கால் வலி பல மடங்கு அதிகமாகி சிரமத்தை ஏற்படுத்தும்.இரத்த ஓட்டம் சரியாக இல்லாத காரணத்தால் தான் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு புண் ஏற்பட்டால் விரைவில் குணமாவது இல்லை. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கால் வலி இருக்கும். இதை கண்டு கொள்ளாமல் இருந்தால், கால் புற்றுநோய் போன்ற பலவித நோய்கள் வரலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே இந்த பிரச்சனை மீது கவனம் எடுத்து எப்படி இதில் இருந்து விடுபடுவது என்று இங்கு காண்போம்.
    * தினமும் உடற்பயிற்சி செய்வதால் எலும்புகளையும், தசைகளையும் வலிமை பெற செய்ய முடியும். மேலும், இதனால் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்த முடியும். ஆனால் உடற்பயிற்சி செய்யும் முன் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம். மேலும் கடினமான உடற்பயிற்சிகளை தவிர்ப்பது நல்லது.
    * நெஞ்சுக்கு மேல் கால்களை 10-&15 நிமிடத்திற்கு தூக்கி வைப்பது நல்லது. இப்படி செய்யும் போது அடியில் தலையணை வைத்து செய்தால் விழாமல் செய்ய முடியும். இந்த பயிற்சியால் கால் வீக்கம் குறையும். இந்த பயிற்சி தேவையற்ற திரவம் சுரப்பதை தவிர்த்து கால்களை சுற்றியுள்ள திசுக்களுக்கு வலிமை தருகின்றது.
    contd..

    saidevi likes this.

  8. #808
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    * சுருங்கும் தன்மை கொண்ட காலணிகள் கிடைகின்றன. இவை இறுக்கம் கொடுப்பதுடன் வலிக்காமலும் பார்த்து கொள்கின்றன. இவற்றை பாதிக்கப்பட்ட இடங்களின் மீது இறுக்கமாக கட்டினால் வீக்கத்தை குறைக்க முடியும் இதனால் இரத்த ஓட்டத்தை சீராக்கவும் முடியும். மெல்லிய இறுக்கம் கொடுக்கும் காலுறைகளை அணிந்து கொள்வதால் முட்டிக்கு கீழ் பகுதியில் இருக்கும் வீக்கத்தையும் வலியையும் குறைக்க முடியும்.
    டயட் சரியான அளவில் இருந்தால் சர்க்கரை நோயால் வரும் வீக்கத்தை தவிர்க்க முடியும். உட்கொள்ளும் உணவில் உப்பு கம்மியாகவும், சோடியம் குறைவாக உள்ள உணவையும் சாப்பிட வேண்டும். இதனால் இரத்த அழுத்தம் உயராமல் கால் வீங்குவதை தவிர்க்கலாம்.
    * சர்க்கரை நோய் உள்ளவர்கள் இருக்கமான ஷூவை அணிய கூடாது. சிறிது பெரியதான அளவில் ஷூ வாங்குவது நல்லது. இதனால் கால் வீங்கினாலும் இரத்த ஓட்டம் பாதிக்கப்படாமல் இருக்கும். சர்க்கரை நோய் உள்ள பெண்கள் ஹை ஹீல்ஸ் கொண்ட செருப்பு அணியக்கூடாது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு என்று தனியாக செய்யப்படும் செருப்பையும் ஷூவையும் அணிவது நல்லது.
    * நன்றாக கால்களுக்கு மசாஜ் தர வேண்டும். இதனால் பல பலனை பெற முடியும். இவ்வாறு மசாஜ் தருவதால், கால்களுக்கு தேவையான இரத்த ஓட்டம் சீராக கிடைக்கும். இதனால் கால்களுக்கு ஏற்படும் வீக்கமும் வலியும் குறையும்.
    * அதிக நேரம் உட்காரவோ நிற்கவோ கூடாது. அதிக நேரம் நின்றாலோ அமர்ந்தாலோ மறத்து போகும் வாய்ப்பு உள்ளது. கால் மேல் கால் போட்டு அமர்வதாலும், காலை மடக்கி அமர்வதாலும், இரத்த ஓட்டம் பாதிக்கப்படும் என்பதால் இதையும் தவிர்ப்பது நல்லது.

    saidevi likes this.

  9. #809
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நீரிழிவு நோய் இருக்கிறதா? காது கேக்காம போயிடுமாம்!!

    தற்போது நீரிழிவு நோய் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அப்படி நீரிழிவு நோய் இருப்பவர்கள் அடிக்கடி உடல் ஆரோக்கியம் பற்றி அறிய இரத்தம்,
    கண்கள், இதயம் என்று பரிசோதனை செய்து கொள்வர். ஆனால் தற்போது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை, பக்கவிளைவுகளை கண்டறிய ஒரு பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் நீரிழிவு நோயால் காது கேட்கும் திறனும் குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    அந்த ஆய்வில் நீரிழிவு நோய் இல்லாமல் காது செவிடாகுபவர்களை விட, அந்த நோய் இருப்பவர்களுக்கு இரு மடங்கு அதிகம் என்று மருத்துவர்கள் கண்டறிந்து கூறுகின்றனர். மேலம் இந்த நோய் இருப்பவர்கள் காதுகளுக்குள் ஏதேனும் சப்தங்கள் ஏற்பட்டால் உடனே காது சிறப்பி மருத்துவரை போய் பார்ப்பது நல்லது என்று கூறுகின்றனர்.
    மேலும் அவர்கள் வீட்டில் டிவியை பார்க்கும் போது சப்தம் குறைவாகத் தான் இருக்கிறதென்று, அதிகமாக சப்தம் வைத்து கேட்பவராய் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
    வயதானவர்கள் சிலருக்கு இரண்டு காதுகளும் சமஅளவில் கேட்காமல் இருக்கும். அதற்கு காரணம் சர்க்கரை வியாதி என்று கூறமுடியாது. அது வயது ஏற்பட்டதால் உண்டாகியிருக்கும் என்று கூறலாம். ஆனால் தற்போது அடிக்கடி இளம் வயதினருக்கு ஒரு காது மட்டும் சற்று மந்தமடைகிறது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படி இருந்தால் அதற்கு சர்க்கரை நோயும் ஒன்று என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
    மேலும் நீரிழிவு நோய் இருப்பர்களுக்கு காதுகளில் கெராடின் என்று பொருள் குறைவாக இருக்கும் அல்லது இல்லாமலும் இருக்கும். அதனால் காதுகளில் அழுக்கானது அதிகமாக சேரும். அவ்வாறு காதுகளில் அழுக்கானது அதிகமாக சேர்ந்தால் அது நீரிழிவு நோயின் ஒரு அறிகுறி என்றும் கூறலாம். மேலும் காதுகளில் அழுகானது அதிகமாக சேர்ந்தால் காது செவிடாகும் வாய்ப்பும் ஏற்படுகிறது.
    ஆகவே நீரிழிவு நோய் இருப்பவர்கள் கண்கள், இதயம் மற்றும் இரத்தம் போன்றவற்றை பரிசோதிப்பதுடன், காதுகளையும் மறக்காமல் அடிக்கடி பரிசோதித்துப் பாருங்கள் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    saidevi likes this.

  10. #810
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தைராய்டு சரியாக வேலை செய்யவில்லை என்பதற்கான அறிகுறிகள்

    தைராய்டு சுரப்பி சிறியதாக இருந்தாலும் இதன் வேலைகள் மிக அதிகம். பட்டாம்பூச்சு வடிவம் கொண்ட இந்த சுரப்பி 2-3 அங்குலம் அளவானது. ஒரு அவுன்ஸ் எடையுடையது. கழுத்தில் உள்ள இது மூச்சு குழலின் இருபுறமுமாக அமைந்து இருக்கிறது.
    இதன் பின்னால் இருப்பதுதான் நான்கு பேரா தைராய்டு சுரப்பி. இது உடலின் கால்சியம் அளவினை சீர் செய்கிறது. இதன் வேலைக்கும் பேரா தைராய்டு சுரப்பியின் வேலைக்கும் சம்பந்தமில்லை. உடலின் செயல்பாட்டு திறனுக்கு தைராய்டு சுரக்கும் ஹார்மோன் அவசியம். தைராக்ஸின் (T4), ட்ரையோ டோதைரோனின் (T3) மற்றும் கல்ஸிடோனின் என்பவையே தைராய்டு சுரக்கும் ஹார்மோன்கள்.
    தைராய்டு சுரப்பி தண்ணீர் மற்றும் உணவில் உள்ள `அயோடினை’ உபயோகித்து இந்த ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றது. தைராய்டு செல்கள் தனித்தன்மை வாய்ந்தவை. தைராய்டு செல் மட்டுமே அயோடினை எடுத்துக் கொள்ளும் தன்மை படைத்தது. இந்த தைராய்டுக்கு எஜமான் உண்டு. பிட்டியூட்டரி சுரப்பிதான் தைராய்டின் எஜமான்.
    இந்த பிட்யூட்டரி சுரப்பி மூளையின் அடியில் உள்ளது. பிட்யூட்டரி சுரப்பியில் தைராய்டினை தூண்டி விடும் ஹார்மோன் சுரக்கின்றது. T3, T4 சற்று குறைந்தால் பிட்யூட்டரி சுரக்கும் TSH தைராய்டு சுரப்பியினைத் தூண்டி விடும். இந்த பிட்யூட்டரி சுரப்பிக்கும் ஒரு பெரிய எஜமான் இருக்கின்றது. அதுதான் ஹைப்போதலாமஸ்.
    இது மூளையில் இருக்கின்றது. இதன் ஹார்மோன் தைரோடிராசின் (TRH) இதன் வேலை பிட்யூட்டரியினை வேலை வாங்குவதுதான். இத்தனை வேலைகளில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் `தைராய்டு நோய்கள்’ ஏற்படுகின்றன.
    contd..


    saidevi likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter