Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree913Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #811
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தைராய்டு சரியாக வேலை செய்யவில்லை என்பதற்கான அறிகுறிகள் :
    இந்த தைராய்டு ஹார்மோனுக்கு உடலின் நிர்வாகத்தில் பல பொறுப்புகளும், பங்கும் உண்டு. பொதுவாக 35 வயதை கடக்கும் பெண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகின்றது. பலர் இதன் பாதிப்பினை பல காலம் அறியாமலேயே கஷ்டப்பட்டு காலம் தள்ளுகின்றனர்.
    தைராய்டு ஹார்மோன் குறைந்தாலும் பிரச்சனைதான். கூடினாலும் பிரச்சனைதான். பரம்பரை, கர்ப்பம், மன உளைச்சல், சத்தான உணவின்மை, நச்சுத்தன்மை, சுற்றப்புற சூழ்நிலை இவைகள் இதன் பாதிப்பிற்கு காரணமாகின்றன.
    * கை, கால் ஓய்ந்து விட்டது போல் இருக்கின்றதா, நல்ல தூக்கத்திற்குப்பிறகும் காலையிலும், நாள் முழுவதும் உடல் அதிக சோர்வாக இருக்கின்றதா? உடனடியாக தைராய்டு சோதனை செய்து கொள்ளுங்கள்.
    * எப்பொழுதும் சோகமாகவே இருக்கின்றீர்களா? மகிழ்ச்சி தரும் `செரடோனின்’ எனும் ரசாயனம் தைராய்டு ஹார்மோன் குறைவினால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
    contd..



    Sponsored Links
    saidevi likes this.

  2. #812
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    * எதற்கெடுத்தாலும் அதிக வேகம், படபடப்பு என்று இருக்கின்றதா? மனதை அமைதி படுத்த முடியவில்லையா? இது தைராய்டு ஹார்மோன் கூடுதலாக சுரப்பதன் காரணமாக இருக்கலாம்.
    * ஹார்மோன் அதிகம் சுரந்தால் அதிக பசி இருக்கும். ஆனால் அதிக உணவிலும் எடை கூடாமல் இருக்கும்.
    * ஹார்மோன் குறைவாக சுரந்தால் சுவை, வாசனை இவற்றில் மாறுதல் இருக்கும்.
    * அதிக ஹார்மோன் படபடப்பின் காரணமாக கவனக்குறைப்பாட்டினை ஏற்படுத்தும். குறைந்த ஹார்மோன் அதிக மறதியினை ஏற்படுத்தும்.
    * குறைந்த ஹார்மோன் உடலுறவில் நாட்டமின்மையை ஏற்படுத்தும். குறைந்த ஹார்மோனால் எடை கூடும். சக்தி குறையும் உடல் வலி ஏற்படும்.
    * உடலில் பல இடங்களில் நாடி துடிப்பு படபடவென இருப்பது போல் இருந்தால் ஹார்மோன் அதிகம் இருக்கலாம்.
    * ஹார்மோன் குறைபாட்டால் உடல் வறண்டு, அரிப்பு இருக்கலாம்.
    contd..


    saidevi likes this.

  3. #813
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    * ஹார்மோன் குறைவு மலச்சிக்கலையும், ஹார்மோன் அதிகம் இருப்பது வயிற்றுப் போக்கினையும் ஏற்படுத்தும்.
    * ஹார்மோன் குறைவு மாதவிலக்கின் போது அதிக ரத்தப் போக்கு, வயிற்று வலி, குறைந்த இடைவெளியில் அடிக்கடி மாதவிலக்கு ஏற்படுத்தும்.
    * ஹார்மோன் கூடுதலாக இருப்பின் மாதவிலக்குகின் இடைவெளி கூடும். ரத்தப்போக்கு குறைவாக இருக்கும்.
    * பாதம், கை, கால், தோள் இவற்றில் வலி, ஒரு வித குறு குறுப்பு போன்றவை ஹார்மோன் குறைவினால் ஏற்படுபவை.
    * ஹார்மோன் குறைவு, கூடுதல் இரண்டுமே உயர் ரத்த அழுத்தத்தினை ஏற்படுத்தும்.
    * குளிர், உடல் சில்லிப்பு போன்றவை ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படுபவை.
    * உடல் சூடு, அதிக வியர்வை இவை கூடுதல் ஹார்மோனால் இருக்கலாம்.
    * ஹார்மோன் குறைவினால் எப்போதும் தூங்க வேண்டும் என்றே இருக்கும். கூடுதல் ஹார்மோன் தூக்கமின்மையைக் கொடுக்கும்.
    * குறைந்த ஹார்மோன் காரணமின்றி எடை கூடச் செய்யும். அதிக ஹார்மோன் அதிகம் சாப்பிட்டும் எடை குறையச் செய்யும்.
    * முடி கொட்டி, தேய்த்து மெலிந்து போகின்றதா? உடனடியாக உங்கள் தைராய்டு ஹார்மோனை சோதனை செய்யுங்கள்.
    * உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்து இருக்கின்றதா? உடற்பயிற்சி உணவு கட்டுப்பாடு, மருந்து எதற்கும் கேட்கவில்லையா? வேறேன்ன உடனடி தைராய்டு டெஸ்ட்தான்.

    saidevi likes this.

  4. #814
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பற்களை பாதுகாக்கும் உணவு முறைகள்

    பல் சொத்தை, பயோரியா (பற்புறத் திசு நோயினால் பற்களில் அசைவு ஏற்படும்.) போன்ற நோய்கள் வராமல் தடுக்க வாயைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.
    காலையிலும் இரவு படுக்கப் போகும் முன்பும் நவீன நார்த் துலக்கிகள் (BRUSH) கொண்டு பல் துலக்க வேண்டும்.
    பற்பசை – புளோரைடு கலந்த பற்பசை உபயோகிப்பது நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு புளோரைடு கலந்த பற்பசை சிறப்பானது.
    பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம். தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான ஊட்டச் சத்து அடங்கியுள்ளது. குழந்தையின் முகம் – தாடை வளர்ச்சிக்கு ஏதுவாக வளரும் பற்களுக்கு நோய் வராமல் தடுக்கும் சக்தியைத் தாய்ப்பால் கொடுக்கிறது.
    பற்களில் ஒட்டிக் கொள்ளக் கூடிய வெண் சர்க்கரை கொண்ட மிட்டாய் – சாக்லெட் – ஐஸ்கிரீம் போன்றவற்றைக் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. இது குழந்தைகளின் பற்களைத் துரிதமாக அரித்து விடும்.
    காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், தானியங்கள், பருப்பு வகைகளைக் கொடுத்து வந்தால் வளரக் கூடிய குழந்தைகளுக்குப் பற்களின் வளர்ச்சி முழுமையாகவும் நிறைவாகவும் இருக்கும்.
    contd..


    saidevi likes this.

  5. #815
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சாப்பிட்ட பின்பு வாய் நிறைய நல்ல தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியே அந்தத் தண்ணீரால் வாயைக் கொப்பளித்து விழுங்க வேண்டும் (Swish and Swallow). துப்பக் கூடாது. இதனால் வாய் சுத்தமாகும்.
    ஒவ்வொரு முறை சாப்பாட்டுக்குப் பின்பும் ஒரு தேங்காய்த் துண்டையோ அல்லது ஒரு கேரட்டையோ நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இதனால் பற்களின் மேல் ஒட்டிக் கொண்டிருக்கும் உணவுத் துகள்கள் நீங்கி பற்கள் இயற்கையாகவே சுத்தம் அடைந்து விடுகின்றன.
    எந்தெந்த காய்கறிகளை அல்லது கீரைகளை சமைக்காமல் சாப்பிட முடியுமோ அவற்றை மென்று சாப்பிடுங்கள். அவை பற்களுக்குப் பயிற்சி அளிப்பது மட்டும் அல்லாமல் உடலுக்கும் ஊட்டச் சத்து அளிக்கிறது.
    வாயின் இருபுறமும் சமமாக மென்றுச் சாப்பிடுவது நன்று.
    புகையிலை, பான் பராக், குட்கா போன்ற பழக்கம் வேண்டாம். இப்பழக்கத்தால் வாய்ப் புற்று நோய் வரும்.
    அதிக சூடான உணவுகள் – பானங்களையோ அல்லது அதிக குளிர்ச்சியானவற்றையோ தவிர்ப்பது நல்லது.
    ஆறு மாதத்துக்கு ஒரு முறை பல் மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொண்டால் பற்கள் கெடுவதில்லை.
    உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

    saidevi likes this.

  6. #816
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தீக்காயத்திற்கு மாவிலை!

    இந்துக்கள் பண்டிகை, வீட்டு விசேஷங்கள், திருவிழாக்களின் போது மாவிலையை தோரணமாகக் கோர்த்து வாசலில் கட்டுவார்கள். இது மங்கள பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது தவிர மா இலை சிறந்த கிருமி நாசினியாகும். வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதேனும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு. இதனால் தான் நம் முன்னோர்கள் மாவிலைத் தோரணங்களைக் கட்டி வந்தனர்.
    கிருமிநாசினியான மாவிலை
    கோமியத்தை வீட்டில் தெளிக்கும் போது மா விலையை பயன்படுத்துவதை நம் கிராமங்களில் இன்றும் கடைப்பிடித்து வருகிறார்கள்.
    கொழுந்து இலையை தேன் விட்டு வதக்கி குடிநீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தினால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும். நீரிழிவு உள்ளவர்கள், மா கொழுந்து இலையை எடுத்து உலர்த்தி பொடி செய்து தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும். தீக்காயம் பட்டவர்கள் மா இலையைச் சுட்டு சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்து பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும்.
    மாம்பூவும், பட்டையும்
    மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால், வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு போன்றவை நீங்கும். இளம் மாவடுக்களை எடுத்து காம்பு நீக்கி காயவைத்து, உப்பு நீரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து வைத்துக்கொண்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டால், சீரண சக்தி அதிகரிக்கும். வாந்தி, குமட்டல் நீங்கும்.
    மாம்பட்டையைக் குடிநீர் செய்து அருந்தினால் சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏதும் அணுகாது. மா வேர்பட்டை வயிற்றுப்புண், குருதிக்கழிச்சல் போன்றவற்றை நீக்கும்.
    contd..


    saidevi likes this.

  7. #817
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பித்த வெடிப்பு குணமாகும்
    பித்த வெடிப்பினால் கால் வலி ஏற்படுவதோடு பாதங்கள் பார்ப்பதற்கே அருவெறுப்பாக காணப்படும். கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். தேமல், படை உள்ளவர்கள் மாம்பிசினை மாம்பழச்சாறுடன் கலந்து பூசினால் தேமல், படை நீங்கும்.
    மாங்காய்
    மாங்காயை சமைத்துச் சாப்பிடுவது நல்லது. அல்லது ஊறுகாய் செய்து சாப்பிடலாம். மாங்காய் அதிகம் சாப்பிட்டால், பசியின்மை, புண் ஆறாமை, பல் கூச்சம், சிரங்கு போன்றவை உண்டாகும்.
    ஜீரண சக்தி அதிகரிக்கும்
    மாம்பழம் அதிக வைட்டமின் சத்துக்கள் நிறைந்தது. இதனை கிடைக்கும் காலங்களில் அளவோடு சாப்பிட்டு வந்தால் சிறந்த பயனை அடையலாம். கோடைக்காலத்தில் அதிகம் விளையும் மாங்கனி மிகுந்த சுவை கொண்டது. மலச்சிக்கலைப் போக்கும், சீரண சக்தியை அதிகரிக்கும், வயிற்றுப்புண், வாய்ப்புண்ணை ஆற்றும். மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும்.
    contd..

    saidevi likes this.

  8. #818
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உதிரப்போக்கு கட்டுப்படுத்தும்
    மாங்கொட்டை பருப்பை எடுத்து காயவைத்து பொடித்து கஷாயம் செய்து மாதவிலக்குக் காலத்தில் அருந்தினால், அதிக உதிரப்போக்கு கட்டுப்படும். வெள்ளைப்படுதல் குணமாகும். வயிற்றுப் புழுக்கள் நீங்கி, வயிற்றுப்புண் ஆறும். வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு குணமாகும். மாம்பருப்பை எடுத்து பொன்னிறமாக வறுத்து தூள் செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சரும எரிச்சல் நீங்கும்.
    மாம்பட்டையைக் குடிநீர் செய்து அருந்தினால் சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவும் அணுகாது. மா வேர்பட்டை வயிற்றுப்புண், குருதிக்கழிச்சல் போன்றவற்றை நீக்கும்.


  9. #819
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உடலுக்கு புத்துணர்ச்சியளிக்கும் பிளம்ஸ்..!

    மலைப் பகுதிகளில் அதிகம் விளையும் பழங்களில் ஒன்று பிளம்ஸ்.
    நல்ல சிவப்பாகவும், கருஞ்சிவப்பாகவும் பார்க்க அழகாகவும் இருக்கும் இந்த பழம் இனிப்பு, புளிப்பு என இரண்டும் கலந்த சுவையுடன் இருக்கும்.
    மனிதனின் செயல்பாட்டிற்கு இதயம் முக்கிய பங்காற்றுகிறது. நிமிடத்திற்கு 72முறை சுருங்கி விரியக்கூடிய இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடலுக்கு தேவையான ரத்தத்தை சுத்தப்படுத்தி மற்ற பாகங்களுக்கு அனுப்ப முடியும்.
    சில நேரங்களில் இதன் செயல்பாடு அதிகமாகவும் சில நேரங்களில் குறைவாகவும் காணப்படும். கோபம், பயம் போன்ற காரணங்களால் இதயமானது வேகமாக சுருங்கி விரிகிறது.
    இது இதயகோளாறுகளை ஏற்படுத்தி விடுகிறது. இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்க பிளம்ஸ் பழங்களை சாப்பிடலாம்.
    * ரத்தத்தை சுத்தப்படுத்த :-
    ரத்தம் அசுத்தம் அடைவதால் சிறுநீரக நோய்கள், ரத்த அழுத்தம், ரத்தசோகை, உடல் சோர்வு போன்றவை ஏற்படும். ரத்த சுத்தத்திற்கு பிளம்ஸ் பழங்களை சுவைக்கலாம்.
    பிளம்ஸ் பழத்தின் சதைகளை எடுத்து நிழலில் உலர்த்தி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
    contd..



  10. #820
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    * ஜீரண சக்கியைத் தூண்ட :-
    உடலில் நோய் தாக்குவதற்கு அஜீரணமும் ஒரு காரணம். உண்ட உணவானது நன்கு ஜீரணமானால் தான் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.
    தினமும் உணவு உட்கொண்ட பின்னர் பிளம்ஸ் பழத்தை சாப்பிட்டு வந்தால் ஜீரண பிரச்சனைகள் நீங்கும்.
    * உடல் புத்துணர்ச்சிக்கு :-
    உடலும் மனமும் சேர்வடையாமல் புத்துணர்சியுடன் இருக்க தான் அனைவரும் விரும்புவோம். ஆனால் இன்றைய அவசர உலகில் உடலும் மனமும் அதிக சோர்வடைகிறது.
    இதனால் இளவயதிலேயே முதியவர்கள் போல காட்சியளிக்கின்றனர். இந்த குறைகள் நீங்கி உடல் புத்துணர்வடைய பிளம்ஸ் பழத்தை சாப்பிடலாம்.
    பிளம்ஸ் பழத்தை உலர்த்தி காய வைத்தும் சாப்பிடலாம்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter