Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #821
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உடலின் ஆற்றலை அதிகரிக்க சிறப்பான வழிகள்!!!

    மனிதர்களாகிய நமக்கு தேவையான அடிப்படை விஷயங்களில் ஒன்று தான் ஆற்றல் திறன். ஆற்றல் திறனால் தான் நம்மால் நம்முடைய அன்றாட நடவடிக்கைகளை ஒழுங்காக செய்ய முடிகிறது. ஆற்றல் திறனை இழக்கையில் நாம் சோர்வடைந்து வலுவிழந்து போகிறோம். நாள் முடிவடையும் நேரத்தில் நாம் சோர்வாக உணர்வது வாடிக்கையான ஒன்று தான்.
    களைப்பு ஏற்படுவதால் உணர்ச்சி ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நீங்கள் உடைந்து போவீர்கள். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பையும் பாதிக்கும். களைப்பின் அளவு அதிகரிக்கும் போது உடல் சுகவீனம், மன அழுத்தம் மற்றும் இதய நோய்கள் உண்டாகும். நேர்மறை ஆற்றல் திறன் உங்கள் படைப்பாற்றலையும் ஆக்க வளத்தையும் மேம்படுத்தும்.
    இந்த பிரச்சனைகள் அனைத்தையும் எதிர்த்து போராட ஒரே வழி, உங்கள் ஆற்றல் திறனை எப்படி அதிகரிப்பது என்பதை புரிந்து கொள்வதில் தான் அடங்கியுள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை தான் இதற்கான தேர்வு. சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள், உடற்பயிற்சிகள் மற்றும் ஓய்வை உங்கள் வாழ்க்கை முறை கொண்டிருக்க வேண்டும். இது உங்கள் உடலுக்கு போதிய ஆற்றல் திறனை அளிக்கும். அதனால் நாள் முழுவதும் சோர்வடையாமால் இருப்பீர்கள். நல்ல ஆரோக்கியத்திற்கு கீழ்கூறிய சில ஆற்றல் திறன் டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.
    contd..



    Sponsored Links

  2. #822
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உங்கள் ஆற்றல் திறனை அதிகரிக்கும் வழிகளில் ஒன்று தான் இயற்கையான மற்றும் ஆரோக்கியமான ஆற்றல் திறன் கொண்ட உணவுகளை உட்கொள்ளுவது. உடனடி ஆற்றல் திறனுக்கு, புரதம் மற்றும் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் வளமையாக உள்ள உணவுகளை நீங்கள் உட்கொள்ள வேண்டும். கார்ப்ஸ் உணவுகளை விட இவ்வகை உணவுகள் மெதுவாக செரிமானமாகும். இதனால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவும் அதிகரிக்கும்.
    ஆற்றல் திறனை எப்படி அதிகரிப்பது என்பது உங்களுக்கு வியப்பாக இருந்தால், உங்கள் காலை உணவின் முக்கியத்துவத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதிக கார்ப் மற்றும் நார்ச்சத்து கொண்ட காலை உணவு, குறுகிய நேர மற்றும் நீண்ட நேர ஆற்றல் திறன் அதிகரிப்பை மேம்படுத்தும்.
    உங்களுக்கு அதிக வேலைகள் உள்ளதா? அப்படியானால் அவை அனைத்தையும் இழுத்து போட்டு கொண்டு பார்ப்பீர்கள். அது நல்லது தான் என்றாலும் கூட, உங்களை சீக்கிரத்திலேயே சோர்வடையச் செய்யும். நல்ல ஆரோக்கியத்திற்கான ஆற்றல் திறன் டிப்ஸ்களில் ஒன்று – அதிக வேலை இருக்கும் சமயத்தில் சின்ன சின்ன இடைவேளைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
    வேகமாக நடை கொடுத்தாலும் கூட, உங்கள் ஆற்றல் திறனை அதிகரிக்கலாம். சர்க்கரை உங்களுக்கு ஒரு மணிநேரத்திற்கு ஆற்றல் திறனை அளிக்கும். ஆனால் 10 நிமிடம் நடை கொடுத்தால், 2 மணிநேரத்திற்கு ஆற்றல் திறனை அளிக்கும். அதனால் இதனை தினசரி நடவடிக்கையாக மாற்றிக் கொள்ளுங்கள்.
    contd..



  3. #823
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இதனை குறிப்பாக காலை வேளைகளில் தான் செய்ய வேண்டும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், சோர்வாக இருக்கும் போது, கண்களை மூடிக் கொண்டு ஆழமாக சுவாசிக்கவும். நல்ல ஆரோக்கியத்திற்கான மற்றொரு ஆற்றல் திறன் டிப்ஸ் இது.
    ஆற்றல் திறனை அதிகரிக்க சிறந்த வழியை தேர்ந்தெடுக்க வேண்டுமா? அப்படியானால் எதிர்மறை ஆற்றல் திறனை கொண்டவர்களுடன் இருப்பதை தவிர்க்கவும். நேர்மறை ஆற்றல் திறன் கொண்டவர்களுடன் இருந்தால், உங்கள் ஆற்றல் திறனும் அதிகரிக்கும்.
    நம் உடலில் மெக்னீசியத்தின் அளவு குறையத் தொடங்கினால், நம் ஆற்றல் திறன் குறைவதையும் நம்மால் உணர முடியும். உடலுக்கு போதிய அளவிலான மெக்னீசியத்தை அளிப்பதும் கூட நல்ல ஆரோக்கியத்திற்கான ஆற்றல் திறன் டிப்ஸாகும்.
    உங்கள் மூளை அதிகளவில் அழுத்தம் அடைந்திருந்தால், நீங்கள் சோர்வடைவீர்கள். உங்கள் ஆற்றல் திறனை அதிகரிப்பதற்கு குட்டித் தூக்கமும் கூட உதவி புரியும். அதிக அளவிலான தகவல்களை தக்க வைத்துக் கொள்ளவும் இது உதவும் என பல ஆய்வுகள் கூறுகிறது.
    மன அழுத்தம் ஏற்படும் போது உங்கள் ஆற்றல் திறன் முழுமையாக குறையத் தொடங்கும். ஆற்றல் திறனை அதிகரிக்கும் வழிகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அமைதியாக ஓய்வெடுங்கள் அல்லது மன அழுத்தத்தை போக்கும் வழிகளை கொண்டு அதனை குறைத்திடுங்கள்.
    contd..



  4. #824
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உங்கள் உடலில் உள்ள ஆற்றல் திறன் குறைவதற்கு மற்றொரு காரணமாக விளங்குவது உங்களின் கோபமாகும். நல்ல ஆரோக்கியத்திற்கான மற்றொரு ஆற்றல் திறன் டிப்ஸ் தான் கோபத்தை கையாளுவது. கோபமடைவதால் உங்கள் உடலுக்கும் மனதுக்கும் தேவையற்ற சுமையே.
    ஆற்றல் திறனை அதிகரிக்க அதிகளவில் தண்ணீர் குடியுங்கள். நீர்ச்சத்து இல்லாமல் போனாலும் கூட நீங்கள் சோர்வடைவீர்கள். நல்ல உடற்பயிற்சிக்கு பிறகு குறிப்பாக அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.


  5. #825
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வயிற்று தொல்லையை போக்கும் வெற்றிலை

    வெற்றிலை உடல் உறுப்புக்களை மட்டுமின்றி உள்ளுறுப்புகளான சுரப்பிகளை தூண்டி நன்கு செயல்பட வைப்பது ஆகும். வயிற்றிலிருந்து துன்பம் செய்யும் வாயுவைச் சமன் செய்து வெளியேற்றுவதோடு செரிமானத்தைச் சீர்படுத்தக் கூடியது ஆகும். மேலும் உடலில் சுருங்கி விரியும் தன்மையுடைய உறுப்புக்களை ஒழுங்காகச் செயல்பட வைப்பதாகும் காயங்களையும், புண்களையும் சீழ் பிடிக்காமல் ஆற்றக்கூடியது.
    வெற்றிலையை நீரிலிட்டுக் கொதிக்க வைப்பதால் ஒரு விதமான நறுமணமுடைய எண்ணெய் கிடைக்கும். இந்த எண்ணெயை சேமித்து வைத்து உபயோகப்படுத்துவதால் விட்டு விட்டு முறையாக வலிக்கின்ற கடும் வயிற்று வலி குணமாகும். இந்த எண்ணெயை மேல் பூச்சாகப் பூசுவதால் புண்கள் சீழ்பிடிக்காமல் சீக்கிரத்தில் ஆறிவிடும்.
    உள்ளுக்கு சில துளிகள் சாப்பிடுவதால் சுவாச நாளங்களைப் பற்றிய சளி, இருமல், மூக்கொழுக்கு ஆகிய நோய்கள் குணமாகும்.வெற்றிலைக் கொடியில் வரும் காய்கள் வயிற்றுக் கோளாறுகளைப் போக்கக் கூடியது. வெற்றிலையில் நீர்ச்சத்து 85 சதவீதம் முதல் 90 வரை உள்ளது.
    contd..



  6. #826
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    புரதச்சத்து, கொழுப்புச் சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்து,பச்சையம் மாவுச்சத்து, நிகோடினிக் அமிலம், வைட்டமின் `சி’ சத்து, வைட்டமின் ஏ, தயாமின், ரிபோபிளேவின் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் ஐயோடின் , எண்ணெய் சத்து, சத்தூட்டம் 44 கலோரி, இரும்புச்சத்து டானின் என்னும் நிறமி என ஒரு மருத்துவச் சாலையையே உள்ளடக்கியுள்ளது.
    வெற்றிலையை நசுக்கி வலியுள்ள முகப்பருக்கள் மீதும் வீக்கமுற்று வலிக்கின்ற போதும் மேல் பற்றாகப் போட விரைவில் வீக்கமும் வலியும் குறைந்து நலம் உண்டாகும்.
    வெற்றிலையை நெருப்பில் காட்டி வதக்கி அடுக்காக ஒன்றின் மேல் ஒன்றாக மேல் வைத்துக் கட்டுவதால் தாய்ப்பால் நன்கு சுரப்பதோடு குழந்தை சரியாகப் பால் குடிக்காத போது பால் கட்டிக் கொண்டு மிக்க வேதனை தரக் கூடிய மார்பகக் கட்டியும் கரைந்து நலம் செய்யும்.
    காது வலி கண்ட போது வெற்றிலைச் சாறு இரண்டு அல்லது மூன்று துளிகள் காதினுள் விடுவதால் காது குத்தல், காது வலி குணமாகும். தலைக்கணம் கண்டு தலைவலி ஏற்படும் போது வெற்றிலைச் சாற்றை 2-3 துளிகள் மூக்கினில் விட்டு உறிஞ்சுவதால் தலை பளு குறையும்.
    உடலில் தீப்பட்டதால் காயங்கள் ஏற்படும் போது இளம் வெற்றிலையை தீக்காயங்களின் மேல் வைத்துக் கட்ட விரைவில் புண்கள் ஆறும். இளம் வெற்றிலைக் கொடி வேரும், மிளகும் சேர்த்து சாப்பிட்டு வர கருத்தடைக்கு உதவும்.
    contd..



  7. #827
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சிறு குழந்தைகளுக்கு மலக்கட்டு ஏற்பட்டு வேதனையுறும் போது வயிற்றுப் பொருமல் வலி ஆகியன வந்த போதும் வெற்றிலைக் காம்பை விளக்கெண்ணெயில் நனைத்து ஆசன வாயினுள் நுழைத்து வைக்க சிறிது நேரத்தில் மலம் வெளிப்பட்டு குழந்தையின் வயிற்றுத் தொல்லைகள் போகும்.
    இரண்டு அல்லது மூன்று வெற்றிலையுடன் 4 அல்லது 5 மிளகு சேர்த்து தீநீர் வைத்து சிறுவர்களுக்குக் கொடுக்க செரியாமை உடன் போகும். 50மி.லி தேங்காய் எண்ணெயில் 5-6 வெற்றிலையைப் போட்டு கொதிக்க விட்டு இலை நன்றாக சிவந்து பொரிந்ததும் எடுத்து ஆற வைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படை ஆகியவற்றின் மேல் தடவி வர விரைவில் குணம் உண்டாகும்.
    வெற்றிலைச் சாறு ஒரு பங்கும் தண்ணீர் இரண்டு பங்கும் சேர்த்து அன்றாடம் பருகிவர நன்கு சிறுநீரை வெளியேற்றும். இரண்டு அல்லது மூன்று வெற்றிலையைச் சாறு பிழிந்து அத்தோடு ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து தினம் ஒருமுறை பருகிவர உடல் நரம்புகள் பலம் பெறும்.


  8. #828
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    எலும்புகள் வலிமையோடு இருக்க சாப்பிட வேண்டியவை…
    எளிதில் எலும்பு முறிவு ஏற்படுத்தும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தற்போது இளம் வயதினரையும் பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கும் காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு திறன் குறைவு நோய் ஏற்படுவது வழக்கம். இந்த நோயின் காரணமாக எலும்புகள் போதிய சக்தியில்லாமல் எளிதில் உடையும் நிலையை அடைகின்றன.
    சுண்ணாம்பு சத்து, வைட்டமின் டி சத்து குறைவு போன்றவற்றால் இந்த நோய் ஏற்படுகிறது. ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு காணப்பட்ட இந்த நோய் தற்போது இளம் வயதினருக்கும் காணப்படுகிறது. பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது, போதிய அளவு உடற்பயிற்சி செய்யாதது போன்ற காரணங்களால் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் இளைஞர்களை தாக்கி வருகிறது.
    கால்சியம் சத்து அதிகம் உள்ள பால், கீரைகள் போன்றவற்றை சாப்பிடாமல் இருப்பதும் இந்த நோய் தாக்குவதற்கு காரணமாக அமைகிறது. மேலும் வைட்டமின் டி குறைபாடினாலும் முதுகெலும்பை தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய், பின்னர் கை கால் எலும்புகளையும் பாதிக்க செய்கிறது என்கின்றனர் மருத்துவர்கள். எனவே சத்தான உணவுகளை சாப்பிட்டால் இந்த நோய் பாதிப்பிலிருந்து தப்பலாம் என்று கூறும் நிபுணர்கள் அதற்கான உணவுகளை பரிந்துரைத்துள்ளனர்.
    contd..



  9. #829
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்களை சாப்பிடவேண்டும். சீஸ், யோகர்டு, பன்னீர், ஸ்கிம்டு மில்க் பவுடர் போன்றவற்றில் கால்சியம் காணப்படுகிறது. அவற்றை சாப்பிடலாம். இதனால் எலும்புகள் பலமடையும்.
    பாதாம், பிஸ்தா, போன்ற கொட்டைகளில் உடலுக்குத் தேவையான தாது உப்புகள் உள்ளன. கால்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்றவைகள் காணப்படுகின்றன. இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் பாதிப்படையாமல் தப்பிக்கலாம்.
    ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், காலிப்ளவர், பீட்ரூட், வெண்டைக்காய் போன்ற காய்கறிகளை தினசரி சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களை சாப்பிடலாம். ஆரஞ்சு, கொய்யா, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம், ஆப்பிள் போன்றவை எலும்புகளை பாதுகாப்பாக வைத்திருக்கும்.
    100 கிராம் ராகியில் 330 மில்லிகிராம் முதல் 350 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது. எனவே ராகி சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.
    பேரிச்சம்பழத்தில் கால்சியம், மாங்கனீஸ் உள்ளது. அதேபோல் தாமிரச்சத்துக்களும், மங்கனீசியமும் காணப்படுகின்றன. இது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
    contd..



  10. #830
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    எலும்புகளின் வளர்ச்சிக்கும், சருமத்திற்கும் வைட்டமின் டி அவசியம். எனவே வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். சூரிய ஒளியில் வைட்டமின் டி உள்ளது. எனவே உடலில் சூரிய ஒளி படுமாறு நிற்கலாம்.
    கருப்பு உளுந்து கால்சியம் சத்து நிறைந்தது. அதேப்போல் சோயா பீன்ஸ், கொள்ளு போன்றவைகளில் கால்சியம் சத்து காணப்படுகின்றன. அதேப்போல் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட மீன் உணவுகளை உட்கொள்ளலாம். உணவியல் நிபுணர்கள் கூறியுள்ள இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் எலும்பு உடைதல் நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter