Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #831
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பசும் பாலை விட ஆட்டுப் பால் குடிப்பது மிகவும் நல்லது... ஏன் தெரியுமா?
    இதுவரை எப்போதாவது நீங்கள் ஆட்டுப் பால் குடித்துள்ளீர்களா? கடைசியாக எப்போது குடித்தீர்கள்? நம் தேசப் பிதா காந்தியடிகள் ஆட்டுப் பால் தான் குடித்ததாகப் படித்திருக்கிறோம். ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள் ஒருமுறை கூட ஆட்டுப் பால் குடித்திருக்க மாட்டோம்.

    தினமும் லிட்டர் கணக்கில் பால் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

    ஆட்டுப் பாலில் ஏராளமான சத்துக்கள் உள்ளனவாம்! வயிற்று வலிக்கு சிறந்த மருந்து ஆட்டுப் பால்தானாம்! மேலும் பசும் பாலை விட ஆட்டுப் பால் மிகவும் ஆரோக்கியமானது என்றால் வியப்பாக இருக்கிறது அல்லவா?

    தினமும் ஆட்டுப் பாலைக் குடித்து வந்தால் நம் உடல் வலுவாகும். பசும் பாலை விட ஆட்டுப் பால் மிகவும் ஆரோக்கியமானது என்பதற்கான சில காரணங்களை இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
    contd..



    Sponsored Links
    saidevi likes this.

  2. #832
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பாதாம் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

    எளிதில் செரிமானமாகும் பசும் பால் குடிக்கும் சிலருக்கு வாயுத் தொல்லைகள் ஏற்படும். இதுப்போன்ற பிரச்சனைகளுக்கு ஆட்டுப் பால் ஒரு அருமையான மருந்தாகும். பசும் பாலை விட ஆட்டுப் பாலில் உள்ள கொழுப்பு மூலக்கூறுகள் சிறியவை என்பதும், ஆட்டுப் பாலில் உள்ள பொட்டாசியமும் தான் இதற்குக் காரணமாகும்.

    கொழுப்பு குறைவு பசும் பாலில் உள்ள கொழுப்பைக் குறைப்பதற்காக அதை மெருகேற்றுவது வழக்கம். பால் நிறுவனங்களில் இது ஒரு முக்கியப் பணியாகவே மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் தொல்லை ஆட்டுப் பாலில் கிடையாது. ஆட்டுப் பாலில் இயற்கையாகவே கொழுப்பு சீரான நிலையில் இருக்கிறது.

    அலர்ஜி இல்லை பசும் பாலில் உள்ள கேசின் என்னும் புரதம் காரணமாக சில குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்பட்டு, வாந்தி, வயிற்றுப் போக்கு, எரிச்சல் என்று கஷ்டப்படுவார்கள். ஆட்டுப் பாலில் கேசின் மிகமிகக் குறைவாக இருப்பதால், இந்த அலர்ஜித் தொல்லைகள் கிடையாது.

    saidevi likes this.

  3. #833
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    லாக்டோஸ் குறைவு பசும் பாலில் லாக்டோஸ் எனப்படும் பால் சுகர் அதிகமாக உள்ளது. மனித உடலில் உற்பத்தியாகும் லாக்டேஸ் என்னும் என்சைம் இந்த பால் சுகரை எளிதில் செரிமானம் செய்துவிடும். எனவே, லாக்டேஸ் என்சைம் குறைவாக இருக்கும் சிலருக்கு பசும் பால் சரிப்படாது. அவர்களுக்கு சரியான மாற்று, பால் சுகர் குறைவாக உள்ள ஆட்டுப் பால் மட்டுமே!

    ஊட்டச்சத்து அதிகம் ஆட்டுப் பாலில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி12 அல்லதி ரிபோஃப்ளேவின் ஆகியவை அதிகம் உள்ளன. தவிர, கால்சியம், புரதம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்களும் மிகுதியாக உள்ளன. இதனால், ஆட்டுப் பால் சாப்பிடும் போது நமக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

    சுவை? ஆட்டுப் பாலில் இவ்வளவு நல்ல விஷயங்கள் இருந்தாலும், அதன் சுவை காரணமாகவே சிலர் அதை விரும்ப மாட்டார்கள். இதற்கு மாற்றாக, அவர்கள் ஆட்டுப் பாலினால் தயார் செய்யப்பட்ட வெண்ணெய், தயிர், ஐஸ்க்ரீம் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    saidevi likes this.

  4. #834
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!
    குடைமிளகாயில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. குறிப்பாக வைட்டமின் சி, மினரல்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் ஆகியவை அதிகம் உள்ளன. உங்கள் டிஷ்களில் பார்ப்பதற்கு அழகாகவும், கலர் ஃபுல்லாகவும் இருப்பதோடு நல்ல ருசியையும் கொடுக்கிறது குடைமிளகாய்.

    அதனால் தான் பெரும்பாலான சைனீஸ் ரெசிபிக்களில் குடைமிளகாய் சேர்க்கப்படுகிறது. அதைப் பச்சையாகச் சாப்பிட்டாலும் சரி, சமைத்துச் சாப்பிட்டாலும் சரி... அது தரும் நன்மைகளுக்கு அளவே இல்லை.

    இப்போது நம் உடல் ஆரோக்கியத்திற்குக் குடைமிளகாய் அளிக்கும் 7 நன்மைகள் குறித்து நாம் பார்க்கலாம்.

    செரிமானத்திற்கு... செரிமானப் பிரச்சனைகளுக்கு குடைமிளகாய் மிகவும் நல்லது. வயிற்று வலி, வாயுத் தொல்லை, வயிற்றுப் போக்கு ஆகியவற்றுக்கும் இது ஒரு நல்ல நிவாரணியாக உள்ளது
    contd..


    saidevi likes this.

  5. #835
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நீரிழிவுக்கு... இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, நீரிழிவையும் கட்டுப்படுத்துகிறது குடைமிளகாய். இதில் கலோரிகள் மற்றும் கொழுப்பு ஆகியவை குறைவாக இருப்பதால், தேவையில்லாத கொலஸ்ட்ராலின் அளவுகளும் அதிகரிக்காமல் இருக்கும்.

    வலிகளுக்கு... குடைமிளகாயில் உள்ல கேயீன் என்னும் வேதிப் பொருள், பலவிதமான உடம்பு வலிகளைக் குறைக்கிறது.

    இதயத்திற்கு... இரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்து இதய ஆரோக்கியத்தை குடைமிளகாய் அதிகப்படுத்துகிறது. இதய அடைப்பினால் தவிப்பவர்களுக்கும் இது ஒரு அருமருந்தாகும்.

    நோயெதிர்ப்புக்கு... குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அது ஒரு நல்ல ஆன்டி-ஆக்ஸிடண்ட்டாக உள்ளது. இரத்த நாளங்கள், சருமம், எலும்புகள் ஆகியவை சீராகச் செயல்பட இது உதவுகிறது. ஸ்கர்வி என்னும் நோயைத் தவிர்ப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதிலும் குடைமிளகாய் வல்லது.

    முதுகெலும்புக்கு... குடைமிளகாயில் உள்ள கேப்சைசின் என்ற கூட்டுப் பொருள், சருமத்திலிருந்து முதுகெலும்பிற்குச் செல்லும் வலி சிக்னலைத் தடுக்கிறது.

    கொழுப்பு குறைவதற்கு... குடைமிளகாயில் கலோரிகள் குறைவாக இருப்பதால், அது கொழுப்பை நன்றாகக் குறைக்கிறது. உடலின் மெட்டபாலிசமும் அதிகரிக்கிறது. குடைமிளகாயைத் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நலம்!

    saidevi likes this.

  6. #836
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நோய் நொடியின்றி வாழ ஊட்டச்சத்துக்கள் 10!
    உடல் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் ஊட்டச்சத்து மிகமிக அவசியம். குறிப்பாகப் பெண்கள் மாதவிடாய் காலங்களிலும், கருவுற்ற நேரத்திலும ஊட்டச்சத்துக்களின் தேவை மிகவும் அதிகமாகவே இருக்கும். நோய் நொடியின்றி நலமாக வாழ்வதற்குத் தேவையான பத்து ஊட்டச்சத்துக்களின் பட்டியல் இங்கே..
    1. ஃபோலிக் ஆசிட்

    கஷ்டமில்லா சுகப் பிரசவத்துக்கு இந்த வைட்டமின் தேவைப்படுகிறது. இந்த வைட்டமின் சத்து குறைந்தால், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்படுவது மட்டுமின்றி, மூளையின் செயல்பாடும் பாதிக்கப்படும். பெண் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான சத்து இது.

    பச்சைக்காய்கறிகள் மற்றும் அவகேடோ பழத்தில் இந்த வைட்டமின் அதிகம் இருக்கிறது.

    2. இரும்புச்சத்து

    ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு உதவும் பெரும் பங்கு இரும்புச்சத்துக்கு அதிகம். இந்த வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் எப்போதும் களைப்பாகவும், சோர்வாகவும் இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் கவனக்குறைவு ஏற்படும்.

    மாமிசம், ப்ராக்கோலி மற்றும் பீன்ஸில் இரும்புச்சத்தை அதிகம் பெறலாம்.
    contd..


    saidevi likes this.

  7. #837
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    3. கால்சியம்

    உறுதியான பல்லுக்கும், எலும்புக்கும் கால்சியம் அவசியம். 35 வயதில் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டால் எலும்பு தொடர்பான நோய்கள் வரும். இளம் வயதிலேயே இந்தச் சத்தை எடுத்துக் கொண்டால் எலும்புத் தேய்மானம் பிரச்னை மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

    பால், சீஸ், பசலைக்கீரை மற்றும் பாதாம் போன்றவற்றில் இந்த ஊட்டச்சத்து கிடைக்கும்.

    4. வைட்டமின் D

    மனித உடலில் போதுமான அளவுக்குக் கிடைக்காத ஒரு முக்கியமான வைட்டமின் இது. சூரிய ஒளியிலிருந்து மட்டுமே இந்தச் சத்தைப் பெறமுடியும். இதன் மூலம், மனஅழுத்தம், நெஞ்சு வலி போன்ற பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம். பல்லுக்கும் எலும்புக்கும் தேவையான கால்சியம் சத்தும் இந்த வைட்டமினிலிருந்து அதிகம் கிடைக்கிறது.

    5. மக்னீசியம்

    உடலின் பல்வேறு வேதியியல் மாற்றங்களுக்குக் காரணமாக இருக்கிறது இந்தச் சத்து. நரம்பு, தசை, தோல் மற்றும் எலும்பு வலுவாக வைத்திருப்பதோடு மட்டுமில்லாமல் உயர் ரத்த அழுத்தத்தைச் சமநிலையில் இருக்க உதவுகிறது.
    பூசணி விதை, பசலைக்கீரை, பாதாமில் இருந்து இந்தச் சத்தைப் பெறலாம்.
    contd..


    saidevi likes this.

  8. #838
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    6. வைட்டமின் E

    கொழுப்புப் பொருட்களில் அதிகமாகக் காணப்படும் இது ஒரு சிறந்த ஆன்டிஆக்சிடன்ட், நோய் எதிர்ப்புச்சக்திக்கு உறுதுணையாக அமைகிறது,

    கொய்யா, நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிசை மற்றும் முருங்கை, காலிபிளவர், கீரை வகைகள், முளை தானியங்களின் மூலம் பெறலாம்.

    7. ஒமெகா-3

    பெண்களுக்கு மிகவும் தேவைப்படும் ஒரு சிறந்த கொழுப்பு அமிலம் இது. உயர் ரத்த அழுத்தம், வீக்கம் மற்றும் நாள்பட்ட நோய்களைச் சரி செய்வதுடன் இதயப் பாதிப்பிலிருந்தும் காக்கிறது. நாள் ஒன்றுக்கு 1.1 கிராம் அளவுக்குப் பெண்களுக்குத் தேவைப்படும்

    கடல் மீன்களிலிருந்து இதை பெறலாம்.
    contd..


    saidevi likes this.

  9. #839
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    8. பொட்டாசியம்

    பொட்டாசியத்தின் குறிப்பிடத்தக்க வேலை நரம்புகளில் ரத்தத்தைப் பிரச்னைகள் இல்லாமல் எடுத்துச் செல்ல உதவுவதுதான். மேலும், உறுதியான எலும்புக்கும், புத்துணர்ச்சிக்கும் சக்தியாக அமையும் இந்தச் சத்தை தயிர், உருளைகிழங்கு மீன் மற்றும் மாமிசத்தில் இருந்து அதிகம் பெறலாம். 19 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, நாள் ஒன்றுக்கு 4700 மி.கி அளவு இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    9. வைட்டமின் c

    நோய் எதிர்ப்புச்சக்திக்கு அதிகம் தேவைப்படும் இந்த வைட்டமின் ஒரு சிறந்த ஆன்டிஆக்சிடன்ட். தோல் சம்பந்தப்பட்ட பிரச்னை வராமல் தடுக்கும் இந்த வைட்டமினை 19 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 75 மி.கி அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ஆரஞ்சு. கிவி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களியிருந்து இந்த வைட்டமினை பெறலாம்.

    10. நார்ச்சத்து

    குடல் செரிமானத்துக்குப் பெரிதும் உதவுவது நார்ச்சத்து. 19-50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஒரு நாளைக்கு 25 கிராம் அளவுக்கு மட்டுமே இதை எடுத்துக் கொள்ளவேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு இது அவசியம் தேவைப்படுகிறது. இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது.

    கோதுமை, காய்கறி, கீரை மற்றும் பழங்கள் மற்றும் தானியங்கள் நார்ச்சத்து நிறைந்தவை.

    saidevi likes this.

  10. #840
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!
    தூக்கமின்மை நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும் தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கிறது. அதை எப்படியாவது சரி செய்துவிடணும் என்று பாதிக்கப்பட்ட எல்லோருமே முயற்சி செய்திருப்பார்கள். இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும் உறக்கம் வர காரணமாக அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி விளக்கமாக அறியலாம்.


    செர்ரி பழங்கள்

    நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுபடுத்தும் ஒரு வகையான உயிரியல் கடிகாரமானது நமது தூக்கத்தையும் கட்டுபடுத்துகிறது-. இந்த கடிகாரமானது தூக்கத்தை நெறிப்படுத்த ஆணையிடும் திறனுள்ள மெலடோனின் என்கிற வேதியியல் பொருளின் இயற்கை உறைவிடம் தான் செர்ரி பழங்கள். அதனால் இரவு தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும்.
    contd..


    saidevi likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter