Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree913Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #841
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வாழைப்பழம்

    வாழை பழத்தில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைய இருக்கு. அது மட்டுமில்லாமல் எல்ட்ரிப்டோபன் எனும் அமினோ அமிலமும் வாழைப்பழத்தில் இருக்கிறது. இந்த எல்ட்ரிப்டோபன் அமினோ அமிலமானது மூளைக்குள்ளே 5HTP என்னும் ஒரு ரசாயனமாக மாறிவிடும். அதன் பிறகு இந்த 5HTP யானது செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறிவிடும்.

    டோஸ்ட்

    பொதுவாக காலை உணவாக அதிகம் சாப்பிடுகிற டோஸ்ட்க்கும் தூக்கத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றாங்க விஞ்ஞானிகள். மாவுசத்து நிறைந்த உணவுகள் எல்லாமே இன்சுலின் ஹார்மோன் உறக்கத்தை தூண்டக்கூடியதாகும். இன்சுலின் ஹார்மோனானது மூளையிலிருந்து ட்ரிப்டோன் மற்றும் செரடோனின் ஆகிய ரசாயனங்களை ரத்தத்தில் அதிகரிக்கச் செய்யும் சமிக்ஞைகளை உருவாக்கிறதாம். மூளையிலிருந்து வெளியாகும் இவ்விரு இரசாயனங்களும் உறக்கத்தை தூண்டிவிடும் திறன் கொண்டவை ஆகும்.
    contd..



    Sponsored Links

  2. #842
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ஓட் மீல்

    ஓட்ஸ் கஞ்சியும் இரத்ததில் இருக்கிற சர்க்கரை அளவை அதிகப்படுத்தி அந்த சர்க்கரை இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டிவிட அதன் விளைவாக உறக்கம் தூண்டப்படுகிறது. மூளை இரசாயனங்கள் சுரந்து கடைசியாக நாம தூங்கிவிடலாம்.

    கதகதப்பான பால்

    உறக்கம் தரும் இயற்கை உணவுகளை தரவரிசையில் நாம் மேலே பார்த்த நான்கு உணவுகளுமே புதுசுதான். ஆனா பால் மட்டும் பழசுதான். வாழைப்பழத்துல இருக்கிற எல் ட்ரிப்டோபன் அமினோ அமிலம் பாலிலும் இருக்கிறது. அது தான் செரடோனின் உற்பத்தி மூலமாக உறக்கம் வரவைக்கும். அதுமட்டுமில்லாமல் பாலில் அதிக கால்சியம் இருப்பது உறக்கத்தை தூண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

    தூக்கம் வரவேண்டும் என்பதற்காக இனி யாரும் தூக்கமாத்திரை சாப்பிட வேண்டாம். அதுக்கு பதிலா மேலே பார்த்த உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமான தூக்கத்திற்கு அழைப்பு விடுங்கள்


  3. #843
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மழைக்கால நோய்க்கான வீட்டு வைத்தியம்!
    பருவ மழையும், குளிரும் பாடாய்ப்படுத்துகிறது. குழந்தைகள், முதியவர்கள், உடல் பலவீனமானவர்கள் மட்டுமல்லாமல், பெரும்பாலானோருக்கு தலைவலியில் தொடங்கி ஜலதோஷம், மூக்கடைப்பு, ஒழுகும் மூக்கு, தும்மல், சளி, சைனஸ், கபம் கட்டுதல் என்று மளிகைக்கடை பில் போல நீளுகிறது பிரச்னைகளின் பட்டியல். இவையெல்லாம் தொற்றாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்... வந்தபின் நிவாரணம் பெறவும், கீழ்க்கண்ட வீட்டு வைத்தியங்களை கடைபிடிக்கலாமே!

    * குழந்தைகள் தொடங்கி அனைவருமே காலை எழுந்ததும் சூடுபொறுக்கும் வெந்நீரில் முகம் கழுவுவது நல்லது. டீ போடுவதற்காக தேயிலைத் தூளைக் கொதிக்க வைக்கும்போது துளசி அல்லது இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால், சளித்தொல்லைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். எலுமிச்சை ஜூஸ் அல்லது எலுமிச்சை டீ குடிக்கலாம். இஞ்சி, நெல்லிக்காய், கறிவேப்பிலை போன்றவற்றை அரைத்து சாறு எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு, தேன், தேவைப்பட்டால் சர்க்கரை கலந்து குடித்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.
    contd..



  4. #844
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    * காலை உணவைச் சூடாக உண்பது நலம். சட்னியில் இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளுங்கள். தோசை மாவுடன் முசுமுசுக்கை இலையை அரைத்துச் சேர்த்து சுட்டுச் சாப்பிட்டால், நெஞ்சுச்சளியை விரட்டும். உளுந்த மாவுடன் கல்யாண முருங்கை இலையை பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்த்து வடை செய்து சாப்பிட்டாலும் சளிப் பிரச்னைக்கு நல்லது.

    * மதிய உணவுக்குச் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்த குழம்பும், தூதுவளை துவையல், இஞ்சி துவையல், கொள்ளு துவையலும் நல்லது. சின்னவெங்காயத்தை பச்சையாக உரித்து மதிய உணவில் சேர்த்து சாப்பிடலாம். மிளகு ரசமும் நல்லது.

    * மூக்கடைப்பு இருந்தால், விரலி மஞ்சளை நல்லெண்ணெயில் தோய்த்து எடுத்து தீயில் வாட்டி, அதன் புகையை சுவாசிக்கலாம். நொச்சி இலைகளைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் ஆவியை சுவாசிப்பதாலும் மூக்கடைப்பு விலகும். நொச்சி இலை கிடைக்காதவர்கள், வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கியதும் போர்வையால் போர்த்தி வேது (ஆவி) பிடித்தால்... தலைபாரம், மூக்கடைப்பு, ஜலதோஷம் சரியாகும். ஜாதிக்காயை நீர்விட்டு உரசி எடுத்துக்கொண்டு, கரண்டியில் வைத்து சூடுபடுத்த வேண்டும். குழம்பு போன்று வந்ததும் மூக்கின் மேல் பற்று போட்டாலும் மூக்கடைப்பு விலகும்.
    contd..



  5. #845
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    * தலைபாரம், தும்மல், நீர்கோத்தல் போன்ற பிரச்னைகள் இருந்தால், தலையணை உறையில் நொச்சி இலைகளை வைத்து உறங்க, நிம்மதியான தூக்கம் வரும். நொச்சி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் ஆவியை சுவாசித்து வந்தாலும் இந்தப் பிரச்னைகள் நீங்கும்.

    சுக்குவெந்நீர் தயாரியுங்கள் இப்படி!

    *மாலையில் சுக்கு காபி குடிக்கலாம். இதை சுக்கு காபி என்று சொல்வதைவிட சுக்கு வெந்நீர் என்பதே சரியாக இருக்கும். சுக்கு வெந்நீர் செய்ய... மிளகு 10 கிராம் என்றால், சுக்கு 20 கிராம், 40 கிராம் தனியா (கொத்தமல்லி விதை), நான்கைந்து ஏலக்காய் சேர்த்துப் பொடியாக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, கருப்பட்டி (பனைவெல்லம்) சேர்த்து வடிகட்டிக் குடிக்கலாம். கிடைக்கும்பட்சத்தில்... துளசி, தூதுவளை, ஓமவல்லி இலைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். சிற்றுண்டி ஏதாவது சாப்பிட விரும்பினால் ஓமவல்லி இலைகளை பஜ்ஜி மாவில் தோய்த்து பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.
    contd..



  6. #846
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பூண்டுப்பால் தயாரியுங்கள் இப்படி!

    * இரவில் உறங்கப்போவதற்கு முன், பூண்டுப்பால் சாப்பிடலாம். பூண்டுப்பால் செய்ய 50 மில்லி பால், 50 மில்லி தண்ணீர், உரித்த பூண்டுப்பற்கள் 10 போட்டு பாதியாக வற்றும் வரை கொதிக்க வைக்க வேண்டும். அடுப்பிலிருந்து கீழே இறக்குவதற்கு முன் 2 சிட்டிகை மஞ்சள்தூள், 2 சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளவும். பிறகு, பனங்கற்கண்டு (இல்லாதபட்சத்தில் சர்க்கரை) சேர்த்து கடைந்து சாப்பிடவும்.

    மணத்தக்காளி சூப் வைக்கலாம் இப்படி!

    * ஜலதோஷம், தொண்டை கரகரப்பு, இருமல் இருந்தால்... மணத்தக்காளி சூப் நல்ல பலன் தரும். எப்படிச் செய்வது? மணத்தக்காளி கீரை, மிளகு, சீரகம், பூண்டு, சின்னவெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்து, பாதியாக வற்றியதும் இறக்கி வடிகட்டி, பொறுக்கும் சூட்டில் குடிக்கவும்.

    இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் வீட்டு வைத்தியங்கள் அனைத்துமே பெரிதாக செலவு வைக்காமல், பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல், ஆரோக்கியத்தை உங்களுக்குப் பரிசளிக்கக் கூடியவை. இவற்றை தேவையைப் பொறுத்து அனைவருமே மேற்கொள்ளலாம்.


  7. #847
    arunaprakash is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    bangalore
    Posts
    52

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    thanks for the healthy tips


  8. #848
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    குழந்தைகளுக்கு இயற்கை மருத்துவம்
    5 வெத்தலை, 1/2 ஸ்பூன் மிளகு, 1/2 ஸ்பூன் சீரகம், 5 வெத்தலை அளவிற்கு துளசி, 2 ஸ்பூன் ஓமம்
    இவை அனைத்தையும் நன்கு சுத்தம் செய்து 500மிலி நீர் 250 மிலி வரும் வரை நன்றாக கொதிக்க வைக்கவும்.
    பிறந்த குழந்தை முதல் 5 வயது குழந்தை வரை 15 மிலி கொடுக்கவும். அதற்கு மேல் உள்ளவர்களுக்கு 30 மிலி கொடுக்கவும்.

    இதன் பயன்கள் :

    சிறு குழந்தைகளுக்கு பிடிக்கும் சளி தொந்தரவு , காய்ச்சல், பசியின்மை, உடல்வலி, நுரையீரல் கிருமி, குடல் கிருமி போன்றவைகள் குணமாகும்.

    பெரியவர்களுக்கு அலர்ஜீ, அடுக்கு தும்மல், வாயு தொல்லை, அஜீரனம், வயிறு பொருமல்,உடல் வலி, காய்ச்சல், சளி போன்றவைகள் குணமாகும்.
    இதனை 3 வேலை 11 நாட்கள் அருந்தவும்.


  9. #849
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கால் தசைப் பிடிப்பு அவஸ்தைப்படுகிறீர்களா?
    உயரமான பாதணிகளை தவிர்க்கவும் :

    உயரமான பாதணிகள் கால் விரல்களை வளைந்து இருக்க செய்யும். இதனால், இரத்த ஓட்டம் சீராக இருக்காது.

    இறுக்கமில்லாத பாதணிகளை அணியவும் :

    இறுக்கமான பாதணிகள் நடக்கும்போது கால்விரல்களிலும், அவற்றின் நுனிகளிலும் அழுத்தங்களைக் கொடுக்கும். இதனால் இரத்த ஓட்டத்தின் சீர் குறைந்து விரல்களில் பிடிப்பு ஏற்படும்.

    உடலில் சீரான சமமான நீராதாரம் :

    உடலில் சமமற்ற நீராதாரம் இருந்தால் தசை பிடிப்புகள் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. ஆகவே உடற்பயிற்சி செய்யும் போதும், அதிகம் வியர்க்கும் போதும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

    போதுமான தாதுப் பொருட்கள் இல்லாமை :

    கால் விரல்களில் வரும் பிடிப்புகள் குறிப்பாக தாதுக்கள், கால்சியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் பற்றாக்குறை காரணமாக வருவது. நாள் ஒன்றுக்கு பரிந்துரைக்கப்படும் குறைந்த பட்ச அளவு, கால்சியம் 1,000 மி.கி., பொட்டாசியம் 4.7 கிராம் ஆகும். இதுவே மெக்னீசியதின் அளவு, ஆண்களுக்கு 400-420 மி.கி. மற்றும் பெண்களுக்கு 310-320 மி.கி. ஆகும்.

    கால் அசைவுகள் :

    கால் விரல்களுக்கு நெகிழ்வு தன்மை தருவதற்கு சிறப்பு பயிற்சி உபகரணங்கள் எதுவும் தேவையில்லை. உதாரணமாக, தரையில் இருக்கும் ஒரு துண்டு அல்லது பளிங்கு எடுப்பது அல்லது ஓய்வாக உட்கார்ந்திருக்கும் போது விரல்களை ஆட்டிக் கொடுத்து பயிற்சி எடுங்கள்.

    வெதுவெதுப்பான நீரில் காலை ஊற வைத்தல் அல்லது ஒத்தடம் கொடுத்தல் :

    வெதுவெதுப்பான நீர் கொண்டு ஒத்தடம் கொடுத்தல், காலில் இரத்த ஓட்டத்தை துரிதப்படுத்த மிகவும் எளிமையான மற்றும் முக்கியமான வழியாகும். தூங்கும் முன் சூடான நீரில் குளிப்பது மற்றொரு சிறந்த வழி. இது கால் தசைகளை தளர்த்தி, பிடிப்புக்கள் வர வைக்கும் சாத்தியங்களை குறைக்கிறது.

    வழக்கமான உடற்பயிற்சி :

    நாள்தோறும் கால்களை நீட்டி, மடக்கி பயிற்சி செய்வது, தசைகளை தளர்த்தும். மேலும் தசைப் பிடிப்புகள் வருவதை தவிர்க்கும். இரவில் திடீரென்று கால்களில் தசைப் பிடிப்பு வந்தால் மெதுவாக நிதானமாக காலை நீட்டி மடக்குங்கள். இது இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
    contd..



  10. #850
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பொட்டாசியம் மற்றும் கால்சியம் உள்ள உணவுகள் :

    இவ்விரு தாதுக்களும் உடலில் உள்ள திரவங்களை எடுத்து கொள்ள பெரிதும் உதவுகின்றன. வாழைப்பழங்கள், கோழி, மீன் போன்ற பொட்டாசியம் நிறைந்த உணவுகள், சாப்பிட வேண்டும். குறைந்த கொழுப்பு உள்ள தயிர் அல்லது கொழுப்பு இல்லாத பால் மூலம் கால்சியத்தைப் பெறலாம்.

    சரியான பாதணிகள் :

    சரியான அடித்தளம் உள்ள பாதணிகளை பார்த்து வாங்கி உபயோகிக்க வேண்டும். உயரமான பாதணிகளை தவிர்க்க வேண்டும்.

    தடித்த போர்வை :

    குளிர் காலத்தில் தடித்த போர்வை கொண்டு போர்த்தி தூங்குங்கள். மேலும் காலுறை அணிந்து தூங்குவது சிறந்தது.

    kiruthividhya likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter