Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #871
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பசும்பாலுடன்ஒரு வாழைப்பழம் சாப்பிட்டுவர அஜீரணம் சரியாகும். தொடர்ந்து தினமும் 2-3 வேளைஇவ்வாறு சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும். காய்ச்சல் வருவதுபோல் உணர்ந்தால் ஒருவாழைப்பழத்தை உடனே சாப்பிடுங்கள்


    Sponsored Links

  2. #872
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    முதுமையிலும் இளமை

    அனைவருக்குமேநன்கு அழகாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்றுஆசைப்படுவோம். இளமை என்ற ஒன்று இருந்தால், நிச்சயம்முதுமையும் வரும். ஆனால் அத்தகைய முதுமை, இளமைகாலத்திலேயே வந்தால்தான் மிகவும் கஷ்டம். நிறைய பேர் இத்தகையபிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக நிறைய ஆன்டி-ஏஜிங் க்ரீம்களைபயன்படுத்துகின்றனர். இருப்பினும் அதற்கான பலன் சிறிது நாட்கள் மட்டும் தானே தவிர, முதுமைவயது எட்டும் வரை நீடிப்பதில்லை. ஆனால் இந்த பிரச்சனைக்கு உணவுகளால் தீர்வு காணமுடியும். சாதாரணமாகவே உண்ணும் உணவைப் பொறுத்து தான் உடல் நிலை இருக்கும் என்றுசொல்வார்கள். எனவே நல்ல ஆரோக்கியமான, இளமைத்தோற்றத்தை நீட்டிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைய உணவுகளை சேர்த்து வந்தால், உடலில்உள்ள டாக்ஸின்கள் வெளியேறி, உடலே நன்கு பொலிவோடு அழகாக மின்னும். அதிலும்குறிப்பாக ஆன்டி-ஆக்ஸிடன்ட்களில் வைட்டமின் சி, , , லைகோபைன்மற்றும் லூடின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளைஉணவில் அதிகம் சேர்த்து வந்தால், முதுமை வயதிலும், சற்றுஇளமையுடனேயே இருக்கலாம். அந்த உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப்படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


    contd..



  3. #873
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மாம்பழம்

    கோடைகாலத்தில் மாம்பழம் மிகவும் விலைமலிவாககிடைக்கும். இந்த பழத்தில் கரோட்டினாய்டு பீட்டா-கரோட்டீன் என்னும்ஆன்டி.ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இவை சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும்.எனவே முடிந்த அளவில் இதனை வாங்கி சாப்பிடுவது, இளமைதோற்றத்தை அதிகரிக்கும்.

    கேல்

    கேல் (Kale) கீரையில்லூடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. எனவே இந்தகீரையை அதிகம் சாப்பிட்டால், இளமையுடன் காணப்படலாம்.
    contd..



  4. #874
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பசலைக்கீரை

    ஒரு கப் பசலைக் கீரையில், சருமத்திற்கும், உடலுக்குஆரோக்கியத்தை தரும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான 20, 350 mcg லைகோபைன்மற்றும் இதர வைட்டமின்களும் நிறைந்துள்ளன.

    ப்ராக்கோலி

    பச்சை இலைக் காய்கறிகளில் ப்ராக்கோலியில் அதிக அளவில்லைகோபைன் உள்ளது. எனவே சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, நன்குஇளமையாகக் காணப்பட, இந்த காய்கறியை உணவில் சேர்ப்பது நல்லது.

    முட்டை

    முட்டையிலும், லூடின்மற்றும் ஸீக்ஸாக்தைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்தஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு மட்டுமின்றி, கண்களுக்கும்சிறந்தது.
    contd..



  5. #875
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    குடைமிளகாய்

    குடைமிளகாயில் சருமத்தையும், உடலையும்ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும், வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. அதிலும் இந்த காய்கறியில்நிறைய வண்ணங்கள் உள்ளன. இவை அனைத்திலுமே கரோட்டினாய்டுகள் மற்றும்பீட்டா-கரோட்டீன் அதிகம் உள்ளன.

    பால்

    பாலில் கால்சியம், புரோட்டீன்மட்டுமின்றி, வைட்டமின் ஏ மற்றும் கரோட்டீனாய்டுகள் அதிகம்நிறைந்துள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பாலை, அதிகம்குடித்தால், நிச்சயம் உடல் ஆரோக்கியத்துடன், இளமையோடும்இருக்கும்.

    தக்காளி

    தக்காளியில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றுமமுதுமைக் கோடுகள் போன்றவற்றை தடுக்கும் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாகஇருக்கிறது. எனவே இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது சருமத்திற்கும் மாஸ்க்போன்றும் பயன்படுத்தலாம்.

    contd..



  6. #876
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சிட்ரஸ் பழங்கள்

    சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்திருப்பது தெரியும். ஆகவே இவற்றை சாப்பிட்டால், இதில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

    தர்பூசணி

    நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த பழத்தில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டும் அதிகம் உள்ளது. எனவே இவற்றை அதிகம் சாப்பிட, வெயிலினால் பாதிப்படைந்த சரும செல்கள் அனைத்தும் குளிர்ச்சியடைந்து, சருமம் அழகாக காணப்படும்.


  7. #877
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கொடிகாய்களிலே சிறந்தது அவரைக்காய் !

    மலிவான விலையில் நிறைய ஊட்டசத்துகளை தருவது அவரை. புரதம் சுண்ணாம்புசத்து, இரும்பு, வைட்டமின் சத்துகள் இதில் உள்ளன.மிக எளிதில் செரிமானமாகக் கூடியது. அவரை பலவீனமான குடல் உடையவர்களுக்கு இரவு நேரத்தில் பத்தியஉணவாகவும் இது உண்பதற்கு ஏற்றது. முற்றிய அவரைகாயை விட அவரை பிஞ்சே உடலுக்கு நல்லது.

    வெண்ணிற அவரைகாய் வாயு பித்தம் இவற்றை கண்டிக்கும்,உள்ளுறுப்புகளின் அழற்சியைப் போக்கும் எரிச்சலை அடக்கும்.

    நீரிழிவு நோய் பேதி தொல்லை,அடிக்கடி தலை நோய் வருதல் ஜிரணக்கோளாறு,சீதபேதி,இவற்றிற்கு அவரையை அடிக்கடி உணவில் சேர்த்தால் பலனுன்டு.

    அஸ்ஸாமில் காது வலிக்கும்,தொண்டை வலிக்கும்,அவரைகாயின் சாறைப் பயன்படுத்துகின்றனர்.

    இரத்த கொதிப்பை தடுக்கும் ஆற்றல் இதற்குண்டு என்பது அறிய கண்டுபிடிப்பு.

    எனவே, அவரைக்காயை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்!


  8. #878
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மூலிகைகளும், தீரும் நோய்களும்...!

    நமது முன்னோர்களெல்லாம் மூலிகைகளை கொண்டுதான் எல்லா வியாதிகளுக்கும் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இன்றைய ஆங்கில மருந்துகளில் பக்க விளைவுகளும், வீரியமும் அதிகம் இருப்பதால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்குசெல்லாமல் நமக்குத் தெரிந்த மூலிகைகளை வைத்து வீட்டிலேயே குணப்படுத்தி விடலாம். தீராத வியாதிகளையும் குணப்படுத்தும் சக்தி மூலிகைக்கு இருக்கிறது. ஆகையால் மூலிகைகளை பயன்படுத்தி அதன் பலன்களை அடையலாமே!


  9. #879
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அருகம்புல்: மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமாசர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்

    ஓரிதழ் தாமரை : வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாதுபலவீனம்

    ஆடா தோடை : இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில்ரத்த கசிவு

    தூதுவளை : சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம்வாதக்கடுப்பு

    நில ஆவாரை : மலச்சிக்கல், மூலம், வாதம், உடல்உஷ்ணம்

    நில வேம்பு : சுரம், நீர்க்கோவை, பித்தமயக்கம்

    முடக்கத்தான் : மூட்டுப்பிடிப்புகள், சகலவாதங்கள், கரப்பான்மூலம்


  10. #880
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வல்லாரை: ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை, மலச்சிக்கல்

    அஸ்வகந்தி : கரப்பான், வெட்டான், மயக்கம், தாதுநஷ்டம்

    வில்வம் : பித்தம், ஆஸ்துமா, காசம், தோல்நோய்கள்

    நெல்லிக்காய் : பித்தம், சளி, மூலம், சர்க்கரைவியாதி நீங்கும்

    நாவல் கொட்டை : சர்க்கரை வியாதி, கரப்பான், தோல்நோய்கள் நீங்கும்

    சுக்கு : வயிற்றில் வாயு, வலி, பொறுமல்அஜீரணம்




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter