Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #81
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அதிகாலையில் தவிர்க்க வேண்டிய தவறான பழக்கங்கள்!!!
    பலர் காலையில் எழுந்ததும் ஒருசில பழக்கத்தை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அதில் முதன்மையான ஒன்று எழுந்ததும் மொபைலைப் பார்ப்பது. மேலும் சிலர் எழுந்திருக்கும் போதே எதற்காக விடிந்தது என்று எரிச்சலுடன் எழுந்திருப்பார்கள். இதுப்போன்று ஒருசில விஷயங்களை மக்கள் காலை வேளையில் செய்து வருகிறார்கள். நீங்கள் காலையில் எப்போதும் குழப்பமான மனநிலையோடு எழுந்திருக்கிறீர்களா? காலை உணவைத்
    தவிர்க்கிறீர்களா? அப்படியெனில் சில எளிய மாற்றங்கள் உங்கள் காலை நேரத்தை இதமாக்கும். அந்த மாற்றங்கள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள். நீங்க காலையில் தினமும் உடற்பயிற்சி செய்யுறவங்களா? அப்ப நீங்க ஆரோக்கியசாலி தான்… காலை என்பது ஒரு நிதானமான நேரம். எனவே அமைதியாக, மெதுவாக எழுந்து உங்களது தசைகளை மெதுவாக அசையுங்கள். நீங்கள் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போது உங்கள் வலது பக்கமாகத் திரும்பி எழுந்திருங்கள். இது உடலின் ஆற்றல் ஓட்டத்தை சீராக்கும். நாம் காலையில் எழுந்திருக்கும் போது, நமது தசைகள், குறிப்பாக முதுகெலும்பு சற்று விறைப்பாக இருக்கும். நாம் நெட்டிமுறிக்காமல் எழுந்திருக்கும் போது இந்த விறைப்புத் தன்மை தொடர்வதால், இது நமது நாள் முழுவதும் நமது ஆக்கத்திறனை சமரசம் செய்துவிடும். ஆகவே எழுந்ததும் மெதுவாக நடக்கவும். தசைப்பிடிப்புகள், தசை இறுக்கங்கள் இருந்தால், நெட்டிமுறிக்கவும். மூன்று அல்லது நான்கு மெதுவான நெட்டிகள் மற்றும் சில பெருமூச்சுகள் உதவியாக இருக்கும். ஒரு சிறந்த வளர்ச்சிதை மாற்றத்திற்கான ரகசியம் காலையில் தேனீர் அல்லது காரத்தன்மையான பானத்துடன் அந்த நாளைத் தொடங்கக் கூடாது. உங்களது நாளை சர்க்கரை மற்றும் பால் சேர்ந்த டீ அல்லது காபி போன்ற அமிலத்தன்மையான பானங்களுடன் தொடங்க வேண்டாம். எலுமிச்சை சாறு மற்று தண்ணீர் குடிக்க வேண்டும். வைட் டீ அல்லது கிரீன் டீ குடிப்பதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மொபைல் போன்களை செக் பண்ணுவது, ஈமெயில் செக் பண்ணுவது மற்றும் வேறு உத்திகளை ஒரு காலையில் எழுந்தவுடன் செய்யாதீர்கள். காலையில் எழுந்து முதல் இரண்டு மணிநேரத்திற்குள் உலகப்பிரச்சனைகள் எதையும் உடனடியாக தீர்க்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களது ஆற்றலை முக்கியமற்ற வேலைகளில் செலுத்தாமல் மிக முக்கியமான வேலைகளில் செலுத்துங்கள். காலை உணவைத் தவிர்ப்பதால், உடல் பருமன், நீரிழிவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைதல் ஆகியவை ஏற்படுகின்றன என சமீபத்திய அறிக்கைகள் கூறுகின்றன. நீங்கள் காலையில் சாப்பிடவில்லை என்றால், அந்த நாள் முழுவதும் உங்களது உணவுத் தேர்வு தவறாகவே இருக்கும். நீங்கள் காலையில் ராஜா மாதிரி உணவு உட்கொள்ளத் தேவையில்லை. ஆனால் ஏதாவது சாப்பிட வேண்டியது அவசியம். அதிகமானோருக்கு விடியற்காலை அமைதியற்றதும் பரபரப்புடையதுமாக இருக்கிறது. எனவே அப்படி இருப்பதை தவிர்க்க முயல வேண்டும். எப்போதும் அமைதியாகவும், சந்தோஷமாகவும் இருக்க பழக வேண்டும். உங்களது துணிகளை மற்றும் உணவுகளை ஒரு நாள் முன்னதாகவே திட்டமிடுகிறீர்களா? மக்கள் செய்யும் ஒரு மிகப்பெரிய தவறு முன்னதாகவே திட்டமிடாமை. ஒரு நீண்ட நாளுக்கு பின்னர், அடுத்த நாள் காலைப் பற்றி யோசிக்காமல் இருக்கலாம். ஆனால், உணவுகளைத் திட்டமிடுதல் மற்றும் துணிகளை எடுத்து வைத்தல் ஆகியவற்றை முன்னதாகவே செய்துவிடுங்கள். இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன்னரே அடுத்த நாள் காலை உணவிற்குத் தேவையானவற்றைத் தயார் செய்து வையுங்கள்.


    Sponsored Links
    rajisugu likes this.

  2. #82
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    Quote Originally Posted by chan View Post
    thank u sarala
    Welcome pa. Neriya tips kodukkirenga.Thank u.


  3. #83
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மதிய வேளையில் குட்டித் தூக்கம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
    அனைவருக்குமே மதிய வேளையில் உணவு சாப்பிட்ட பின் தூக்கம் வருவது இயற்கையான ஒன்று. அப்படி தூக்கம் வந்தால், பலர் அதனைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருப்பார்கள். ஆனால் மதிய வேளையில் குட்டித் தூக்கம் போடுவதால், நன்கு சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட முடியும் என்பது தெரியுமா? பெரும்பாலும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்கள் கண்டிப்பாக மதிய வேளையில் குட்டித் தூக்கம் போடுவார்கள். அப்படி
    தூங்குவதால் தான் அவர்களால் மாலையில் நன்கு வீட்டு வேலைகளை சுறுசுறுப்புடன் செய்ய முடிகிறது. ஆனால் அலுவலகத்தில் வேலைப் பார்ப்பவர்கள், நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டியுள்ளது. எனவே அத்தகையவர்கள் மதிய வேளையில் முடிந்தால் ஒரு 10 நிமிடம் ஒரு குட்டித் தூக்கம் போட்டு பின் வேலை செய்யுங்கள். நிச்சயம் காலையில் சுறுசுறுப்புடன் இருந்ததை விட, மதியம் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். இப்போது மதிய வேளையில் குட்டித் தூக்கம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!! தூக்கம் என்பது மூளைக்கு ஓய்வு கொடுக்கும் ஒரு செயலாகும். தூங்கி எழுந்த பின்னர், மூளையானது சுறுசுறுப்புடன் இருப்பதால், அப்போது எந்த ஒரு செயலையும் சுறுசுறுப்புடன் செய்ய முடியும். அதனால் தான் காலையில் நம்மால் நிறைய வேலைகளை செய்ய முடிகிறது. அப்படி நிறைய வேலைகளை தொடர்ந்து செய்வதால், மூளையானது மீண்டும் சோர்வடைகிறது. எனவே மதிய வேளையில் 10 நிமிடம் குட்டி தூக்கம் போட்டால், மதியம் மீண்டும் புத்துணர்ச்சியுடன் வேலை செய்ய முடியும். காட்டில் வேட்டையாடும் விலங்குகள் மிகவும் விழிப்புணர்வுடன் இருப்பதற்கு முக்கிய காரணம், அவை பகல் நேரத்தில் குட்டித் தூக்கம் போடுவதால் தான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் நாசாவில் உள்ள பைலட்டுகளிடம் இந்த சோதனையை மேற்கொண்ட போது, அதன் மூலம் குட்டித் தூக்கம் போடுவதால் 100 சதவீதம் விழிப்புணர்வுடன் இருக்க முடிகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. காலையில் நிறைய வேலைகளை செய்து, மூளை மற்றும் கண்களானது சோர்வடைந்திருக்கும். இதனால் நம்மை அறியாமலேயே மதிய வேளையில் தூக்கம் வரும். அப்படி மதிய வேளையில் உணவு உண்ட பின்னர், 10 நிமிடம் தூங்கி எழுந்தால், உடலானது இழந்த ஆற்றலை மீண்டும் பெற்று, உற்பத்தித் திறனானது அதிகரிக்கும். மூளை சோர்வாக இருந்தால், எந்த ஒரு ஐடியாவும் வராது. ஆகவே உங்களுக்கு எதற்கேனும் முடிவு அல்லது ஐடியா வேண்டுமானால், அப்போது சிறு தூக்கம் மேற்கொள்ளுங்கள். நிச்சயம் மூளையில் இருந்த குழப்பங்கள் நீங்கி, மனமானது தெளிவடைந்து, நல்ல முடிவைப் பெற வழிவகுக்கும். தற்போதைய மார்டன் உலகில் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர் மிகவும் அதிகம். இத்தகைய மன அழுத்தத்தில் இருந்து விடுதலைப் பெற சிறந்த வழி என்றால் அது தூக்கம் தான். எனவே காலையில் அதிக வேலைப்பளுவினால் மன அழுத்தத்தில் இருந்தால், மதியம் ஒரு குட்டித் தூக்கம் போடுங்கள். நிச்சயம் மனதில் உள்ள அழுத்தங்கள் நீங்கி, மனம் ரிலாக்ஸ் ஆகும்.

    rajisugu likes this.

  4. #84
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    Quote Originally Posted by saidevi View Post
    Welcome pa. Neriya tips kodukkirenga.Thank u.
    whenever i read ,if i like that Article immediately ,i copy and save that article in word document,these are taken from health related websites,like this ,having beauty realted,house keeping tip ,so many word documents,one by one i post ,i i get time
    thank u
    lakshmi

    saidevi likes this.

  5. #85
    anitprab is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    madurai
    Posts
    419

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    chan,

    தங்களின் அனைத்து குறிப்புகளும் மிகவும் உபயோகமுள்ளவை. நன்றி.


  6. #86
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    Quote Originally Posted by chan View Post
    whenever i read ,if i like that Article immediately ,i copy and save that article in word document,these are taken from health related websites,like this ,having beauty realted,house keeping tip ,so many word documents,one by one i post ,i i get time
    thank u
    lakshmi
    Kandepa seiyunga Lakshmi.


  7. #87
    rajisugu's Avatar
    rajisugu is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    2,418

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    Thanks for sharing very useful info & tips lakshmi.


  8. #88
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வெள்ளரியின் சிறப்பு!

    நம்மில் பலருக்கு வெள்ளரி சாப்பிடப் பிடிக்கும். வெள்ளரியில் காய், பிஞ்சு என்று இரு வகையுண்டு. மருத்துவக் குணங்கள் நிறைந்தது வெள்ளரி.
    வெள்ளரி ஒரு நல்ல நீரிளக்கி. செரிமானத்துக்கு உதவுவது. வெள்ளரிப் பிஞ்சு பித்தத்தைத் தணித்து, குடலுக்குக் குளிர்ச்சியூட்டுகிறது. சிறுநீரகக் கோளாறைச் சரிசெய்கிறது. தலைசுற்றலைத் தடுக்கிறது.
    சமீபத்திய ஓர் ஆய்வின்படி, மூட்டு வீக்க நோய்களை வெள்ளரி குணமாக்குகிறது. எனவே வெள்ளரி ஒரு முக்கிய காய்கறி வகை என்று கூறலாம்.
    வெள்ளரியில் `கலோரி’கள் குறைவாக உள்ளதால், உடல் பருமனைக் குறைக்க விரும்புவோருக்கு நல்லது.
    வெள்ளரிச் சாறுடன் விதைகளையும் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலன்கள் ஏற்படும். கீல்வாதத்தைப் போக்கவும் இது உதவுகிறது. சிறுநீரகத்துக்கும் நன்மை புரிகிறது.
    நீரிழிவு நோயாளிகளும், உடல் பருமனைக் குறைக்க விரும்புபவர்களும் வெள்ளரிப் பிஞ்சுகளை அதிகமாகச் சாப்பிடுவது நலம் பயக்கும்


  9. #89
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பித்தம் தணிக்கும் கொத்தமல்லி

    உலகில் முதன் முதலாக உணரப்பட்ட மருத்துவப் பொருள் மூலிகைகளே. நாம் அன்றாடம் பயன்படுத்தும் கீரை, காய்கள், கனிகள் அனைத்துமே ஒவ்வொரு வகையில் மருத்துவப் பயன் கொண்டவையாகும்.
    மக்கள் பிணி நீங்கி நீண்ட ஆரோக்கிய வாழ்வு வாழ்வதற்கும், இந்த மூலிகைகள் நமக்கு உதவு கின்றன. இதனையே நாம் கற்ப மூலிகைகள் என்று அழைக்கிறோம். மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், கொத்தமல்லி போன்றவற்றை தினமும் மசாலாவாக அரைத்து குழம்பு செய்து உண்ணும் வழக்கம் தென்னிந்தியாவிற்கே உரிய சிறந்த பழக்கமாகும்.
    கறிவேப்பிலை போல் கொத்தமல்லியும் நம் சமையலில் அதிகம் இடம்பெறும் ஒரு மூலிகைப் பொருள் ஆகும். இது வாசனைக்காக மட்டுமே சேர்க்கப்படுவது என நம்மில் பலர் நினைப்பதுண்டு. ஆனால் வாசனையோடு அதன் மருத்துவக் குணங்களும் சேர்க்கப் படுகிறது என்பதை அறிந்திருக்க மாட்டோம்.
    நம் முன்னோர்கள் உணவின் மூலமே நோயற்ற வாழ்வு வாழ்ந்தார்கள் என்பதற்கு கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்றவை சாட்சிகள்.
    கடையில் காய் வாங்கினால் ஏதோ கொசுறாக கொத்தமல்லித் தழையைக் கொடுப்பார்கள். அதை நாமும் வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் அதிலுள்ள மருத்துவப் பயனைஅறிந்ததில்லை.
    பசுமையான, மணமுள்ள இலைகளையும் சிறிய வெண்ணிற மலர்களையும் உருண்டையான விதைகளையும் உடைய சிறு செடி கொத்தமல்லி. இதன் விதைகளுக்கு தனியா என்று பெயர். இது பலசரக்குக் கடைகளில் கிடைக்கும்.
    நஞ்சை, புஞ்சை காடுகளிலும் இதனைப் பயிரிட்டு வளர்க்கின்றனர். இதன் விதை மிகவும் மருத்துவப் பயன் கொண்டது. இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் உடையவை. இது இந்தியா முழுவதும் பணப்பயிராகப் பயிரிடப் படுகிறது.
    இது கார்ப்புச் சுவை கொண்டது. குளிர்ச்சித் தன்மையுடையது. சிறுநீர் பெருக்கல், உடல் வெப்பம் சமன்படுத்தல், வயிற்று வாயுவகற்றல், செரிமானம் மிகுத்தல் ஆகிய மருத்துவப் பயன்களைக் கொண்டது.
    கொத்துமல்லிக் கீரையுண்ணில் கோரவ ரோசகம்போம்
    பித்தமெல்லாம் வேருடனே பேருங்காண்- சத்துவமாம்
    வெச்செனவே போகம் விளையுஞ் சுரந்தீருங்
    கச்சுமுலை மாதே! நீ காண்
    -அகத்தியர் குணவாகடம்
    பொருள் -
    சுவையின்மை, சுரம் நீங்கவும், உடலை வன்மையாக்கவும், விந்துவைப் பெருக்கவும் உதவும்.
    கொத்தமல்லியின் பயன்கள்
    · சுவையின்மை நீங்கும்.
    · வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.
    · செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு சீரணிக்கச் செய்யும்.
    · வயிற்றுப் பொருமல், வாயுக் கோளாறுகளைப் போக்கும். மலச்சிக்கல் நீங்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலக்குடலில் உள்ள தேவையற்ற அசடுகளை வெளியேற்றும். மூலநோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாகும்.
    · புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் போன்றவை மாறும்.
    · கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும் கண் சூடு குறையும்.
    · சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகளைப் போக்கும். மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தொண்டைக்கட்டு, வறட்டு இருமல் நீங்கும்.
    · உடலுக்குத் தேவையான சக்திகளைச் சேமித்து வைத்து தேவைப்படும்போது கொடுக்கும் உறுப்புதான் கல்லீரல். இது வீக்கமோ, சுருக்கமோ அடைந்து பாதிக்கப்பட்டால், உடலானது பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இதனால் கல்லீரலைப் பலப்படுத்த கொத்தமல்லி சிறந்த நிவாரணியாகும்.
    · நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். மன அமைதியைக் கொடுக்கும்.
    · உடலுக்கு வலுவைக் கொடுக்கும். விந்துவைப் பெருக்கும் குணம் இதற்குண்டு.
    · நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் மயக்கம், தலைச்சுற்றல் போன்றவற்றை நீக்கும். இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்கும். இரத்த அழுத்த நோயாளிகளும் இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    · வாய் நாற்றத்தைப் போக்கும். பல்வலி, ஈறுவீக்கம் குறையும்.
    சிறுநீர், வியர்வையைப் பெருக்கும்.
    கொத்தமல்லி இலை – 1 கைப்பிடி
    சின்ன வெங்காயம் – 5
    மிளகு – 10
    சீரகம் – 2 தேக்கரண்டி
    பூண்டு – 5 பல்
    மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
    கறிவேப்பிலை – 1 கொத்து
    உப்பு – தேவையான அளவு
    எடுத்து நீர் விட்டு சூப் செய்து காலை, மாலை, டீ, காபிக்கு பதிலாக இதனை அருந்தி வந்தால் உடல் களைப்பு நீங்கி மேற்கண்ட பாதிப்புகள் குறையும்.
    கொத்தமல்லி இலையுடன் கறிவேப்பிலை, புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன், பித்த அதிகரிப்பினால் உண்டாகும் பித்தச்சூடும் தணியும்.
    கொத்தமல்லி கீரைக்கும், விதைக்கும் கண்பார்வையைத் தூண்டும் குணம் உண்டு.
    காய்ச்சலாலும், குடல் அலர்ஜியாலும் பித்தம் அதிகரித்து வயிற்றில் சளி ஏற்பட்டு அதனால் நாவில் சுவையின்மை ஏற்படும். இது பொதுவாக பித்த அதிகரிப்பினால் வருவது.
    இதற்கு, கொத்தமல்லி இலை, சீரகம், சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கஷாயம் செய்து அருந்தினால் சுவையின்மை நீங்கி, பித்த கிறு கிறுப்பு நீங்கும்.


  10. #90
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    காய்கள் – அவரைக்காய்

    இயற்கையுடன் இணைந்து வாழும் மனிதன் தன் இருப்பிடத்தைச் சுற்றி அதாவது வீட்டைச் சுற்றி தோட்டம் அமைத்தான். அதில் தமக்குத் தேவையான செடி, கொடி, மரங்களை நட்டு வைத்தான். அதிலிருந்து கிடைக்கும் பூ, இலை, காய், கனி அனைத்தையும் உண்டான். தன்னை வளர்த்து ஆளாக்கிய மனிதன் என்ற எஜமானுக்கு இவை நீண்ட ஆயுளை நன்றிக்கடனாக கொடுத்து வந்தன.
    ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் பருவ கால சூழ்நிலைக்கேற்ப எந்த வகையான உணவுகளை சாப்பிடவேண்டும், அதை எப்படிச் சாப்பிடவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். அதன்படி வீட்டைச் சுற்றி மனிதனுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் தரும் கீரைகள், மரங்களை நட்டு வளர்த்தனர். ஆனால் இன்று வீடுகளைச் சுற்றி காங்கிரீட் தளங்கள், குரோட்டன்ஸ் என்று சொல்லப்படும் எதற்கும் உதவாத நச்சுச் செடிகள், அல்லது பிளாஸ்டிக் அலங்காரப் பொருட்கள்தான் உள்ளன. இதனால் வீட்டுத் தோட்டக் காய்கள் எதுவென்று நம் எதிர்கால சந்ததியினர்களுக்குத் தெரியாமல் போகும் நிலை உள்ளது.
    இன்று காய்கறிகள், கனிகள் கீரைகள் எல்லாம் இரசாயன உரமிட்டு வளர்க்கப்பட்டு சந்தைகளில் விற்கப்படுகிறது. அவை சில நேரங்களில் உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது.
    ஆனால் இவைகளை நம் ஒவ்வொரு வீட்டிலும் வீட்டுக் கழிவுகளை உரமாக இட்டு வளர்த்தால் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.
    அந்த வகையில் வீடுகளில் எளிதாக வளர்க்கப்படும் அவரைக்காய் பற்றி தெரிந்து கொள்வோம்.
    அவரை கொடி வகையைச் சேர்ந்தது. குறிப்பாக தென்னிந்தியாவில் வீடுகள்தோறும் பயிரிடப்படும் செடியாகும். இன்றும் கிராமப்புறங்களில் வீட்டின் கொல்லைப் புறத்தில் அவரை பயிரிடப் படுவதைக் காணலாம். ஆடி மாதம் விதை விதைத்தால் அதன் பயன் தை மாதத்தில்தான் கிடைக்கும். இது கொடியாக வளர்ந்து காய் காய்ப்பதற்கு ஆறு-மாத காலமாகும். இந்த அவரைக் கொடிக்கு அழகான பந்தல் போடுவார்கள். அந்த பந்தலின் மேல் இந்த கொடி படர்ந்து காணப்படும். அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது.
    அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும். எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.
    நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் விரத மன அமைதியைப் பெருக்கவும் உதவும். சிந்தனையைத் தெளிவுபடுத்தும்.
    காமச்சிந்தனை, அதீத சிந்தனை, கோபம், எரிச்சல், இவற்றைப் போக்கும். உடலுக்கும், மனதிற்கும் சாந்தத்தைக் கொடுக்க வல்லது.
    சங்குலுண விற்குங் கற்கும் உறைகளுக்கும்
    பொங்குதிரி தோடத்தோர் புண்சுரத்தோர்-தங்களுக்குங்
    கண்முதிரைப் பில்லநோய்க் காரருக்குங் காழுறையா
    வெண்முதிரைப் பிஞ்சாம் விதி
    -தேரையர் குணபாடம்.
    பித்தத்தினால் உண்டாகும் கண்சூடு, கண்பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் பிஞ்சு வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.
    அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
    அதுபோல் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை மட்டுப்படும்.
    · மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும்.
    · மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
    · சிறுநீரைப் பெருக்கும்
    · சளி, இருமலைப் போக்கும்
    · உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்
    · சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும்
    · இரவு உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் சுகமான நித்திரை கிடைக்கும்.
    முற்றிய அவரைக்காயை உணவாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும். ஆண்மை சக்தி அதிகரிக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.
    முதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப் பிஞ்சு மாற்றும். தசை நார்களை வலுப்படுத்தும்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter