Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #891
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வாழைப்பழத்தின் மருத்துவ குணம்...

    எளிதில் கிடைக்கும் பழ வகைகளில் ஒன்று வாழைப்பழம். மருத்துவ குணம் நிறைந்த பழமாக வாழைப்பழம் திகழ்கிறது. ஆப்பிளில் உள்ளதை விட 4 மடங்கு கார்போ ஹைடிரேட்டும், 3 மடங்கு பாஸ்பரசும், 5 மடங்கு வைட்டமின் ஏ வும் மற்றும் இரும்புச் சத்தும் இதில் நிறைந்துள்ளன. ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் உப்பான பொட்டாஷியம் வாழைப்பழத்தில் ஏராளமாக அடங்கி உள்ளது. உடனடி உற்சாகத்தையும் பயனையும் தரக்கூடியது இப்பழம்.

    உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்தி தொடர்ச்சியாக காய்ச்சலில் படுப்பதை தடுக்கும் ஆற்றல் வாழைப்பழத்திற்கு உண்டு. வாழைப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்த சோகையையும், பொட்டாசியம் ஸ்ட்ரோக்கையும் தவிர்க்கும் வல்லமை பெற்றுள்ளது.

    வாழைப்பழம் ஞாபக சக்தி, மூளையின் சக்தி அதிகரிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலும் இவற்றிற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது


    Sponsored Links
    kodiuma likes this.

  2. #892
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    எந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்?
    பழங்கள் அசைவ உணவுகள் திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள். ஆப்பிள்கள் ஒரு மாதம். சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள். அன்னாசி (முழுசாக) 1 வாரம். (வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள்.

    வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள். சமைத்த மீன் 3-4 நாட்கள். பிரஷ் மீன் 1-2 நாட்கள். ஓட்டுடன் கூடிய நண்டு 2 நாட்கள். பிரஷ்ஷான இறால்(சமைக்காதது) ஒரு நாள். உலர்ந்த மீன் அல்லது மீன் ஊறுகாய் ஒரு வாரம். பிரஷ்ஷான கோழி இறைச்சி துண்டுகள் 1-2 நாட்கள். சமைத்த கோழி இறைச்சி 2-3 நாட்கள்.

    காய்கறிகள் புரோக்கோலி, காய்ந்தபட்டாணி 3-5 நாட்கள். முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, ஓம இலை 1-2 வாரங்கள். வெள்ளரிக்காய் ஒரு வாரம். தக்காளி 1-2 நாட்கள். காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம். காளான் 1-2 நாட்கள்.

    பால் பொருட்கள் பால் அல்லது ஆடை நீக்கப்பட்ட பால் ஒரு வாரம். பதப்படுத்தப்பட்ட பால், சுவீட் கிரீம், சுவையூட்டப்பட்ட பால், அதன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை தேதியில் இருந்து, 10-14 நாட்கள். மோர் 2 வாரங்கள். தயிர் 7-10 நாட்கள்.

    kodiuma likes this.

  3. #893
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வெயிட்டான வைட்டமின்கள் தேவை!
    மனிதன் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், பலவித சத்துகளும் தேவை. இதில் முக்கியமானவை, வைட்டமின் சத்துகள். உலகம் முழுவதும் ஆண்டுக்கு 5 லட்சம் குழந்தைகள் வைட்டமின் ‘ஏ’ பற்றாக்குறையால் பார்வை இழக்கிறார்கள் என்கிறது பிரிட்டன் ஆய்வு. புற்றுநோய் ஏற்படுவதற்கும் வைட்டமின் ‘ஏ’ பற்றாக்குறை ஒரு காரணம் என்று அண்மையில் வெளியான மருத்துவ ஆய்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. வைட்டமின் ‘ஏ’ குறைவால் இரவில் பார்வை மந்தம், தோல் வறட்சி, எளிதாக சளி பிடிப்பது, எலும்பு வளர்ச்சியின்மை, பாலியல் உறுப்புகள் பிரச்னை என நிறைய பாதிப்புகள் மனிதனைத் தாக்க காத்திருக்கின்றன. இந்தப் பிரச்னைகளை தினமும் 500 மில்லி கிராம் வைட்டமின் ‘ஏ’ சத்தினை உட்கொள்ளுவதன் மூலம் விரட்ட முடியும். எப்படி? வைட்டமின் ‘ஏ’ அதிகம் நிறைந்திருக்கும் பால், முட்டை, மஞ்சள் கரு, வெண்ணெய், மாம்பழம், பப்பாளிப்பழம், பேரிக்காய், பலாப்பழம், ஆரஞ்சு, தக்காளிப்பழம், பச்சை கேரட் ஆகியவற்றை உண்டாலே போதும். இவற்றில் வைட்டமின் ஏ சத்து நிறைந்திருக்கிறது. சிகரெட் பிடித்து புகையை ஊதித்தள்ளு பவர்கள் இனி கொஞ்சம் விழிப்பாக இருப்பது நல்லது. ஆமாம், சிகரெட் பிடிப்பவர்கள் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து இழுத்தால் போதும், 25 மில்லி கிராம் வைட்டமின் ‘சி’யை சிகரெட் எடுத்துக் கொள்கிறது. தினமும் உணவில் அதிகமாகப் புரதச் சத்து உணவுகளை மட்டும் சேர்த்துக் கொள்பவர்கள், வைட்டமின் ‘சி’யையும் அதிகம் சேர்க்க வேண்டும். புரதச்சத்து உடலில் அதிகரிக்கும்போது வைட்டமின் ‘சி’ தேவையும் அதிகரிக்கிறது.
    contd..


    kodiuma likes this.

  4. #894
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அதற்குத் தகுந்தாற்போல் வைட்டமின் ‘சி’ நிறைந்துள்ள உணவுகளைச் சேர்கக வேண்டும். வைட்டமின் ‘சி’ குறைவால் உள்காயங்கள், பலவீனமான எலும்பு, பல், ஈறு நோய்கள், சோம்பேறித்தனம், களைப்பு ஆகிய பிரச்னைகள் ஏற்படும். சராசரியாக ஒவ்வொரு வருக்கும் தினம் 400 மில்லி கிராம் வைட்டமின் ‘சி’ தேவை. இது கொய்யாப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை, பப்பாளிப் பழம், சாத்துக்குடி, தக்காளி, முட்டைக்கோசு, கேரட், உருளைக் கிழங்கு ஆகியவற்றில் இருந்து அதிகம் கிடைக்கிறது. நாம் அதிகம் கவலைப் படாத ஒரு வைட்டமின் என்றால், நிச்சயம் அது வைட்டமின் ‘ஈ’-யாகத்தான் இருக்கும். உண்மை யில் வைட்டமின் ஈ இல்லா விட்டால், வைட்டமின் ‘ஏ’யும் ‘சி’யும் உடலில் அழிந்துவிடும். இந்து இரு வைட்டமின்களையும் பாதுகாப்பதுதான் ஈ-யின் முக்கிய வேலை. இது நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்துகிறது. தசைகளை வலுவாக்குகிறது. வைட்டமின் ‘ஈ’ குறைந்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை, சோம்பேறித்தனம், பலவீனம், கவனக்குறைவு ஆகிய பிரச்னைகள் ஏற்படும். ரத்தம் உறையாமை நோய் உள்ளவர்கள் வைட்டமின் ‘ஈ’ உணவு வகைகளை அதிகம் சேர்க்கக் கூடாது. அப்படி சாப்பிட்டால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. பட்டாணிக்கடலை, கோதுமை, ரவா, புழுங்கலரிசி, முட்டை, சூரியகாந்தி விதை ஆகியவற்றில் வைட்டமின் ‘ஈ’ அதிகம் உள்ளது.

    kodiuma likes this.

  5. #895
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்!

    பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத்தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளனர் சித்தர்கள். தற்போது மலர் மருத்துவமாகவே மேல் நாடுகளில் சிகிச்சை செய்து வருகின்றனர்.

    பூக்களில் நாம் பலவற்றை அறந்திருப்போம். அவற்றில் வாழைப்பூவைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. வாழையை இந்தியாவில் வீட்டு மரமாக வளர்க்கின்றனர். வாழைமரத்தில் மொத்தம் 14 வகைகள் உள்ளன.

    முன்னோர்கள் பொதுவாக வாழையை பெண் தெய்வமாகவே வணங்கி வந்தனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த வாழையின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. இதில் வாழைப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்து கொள்வோம்.
    contd..


    kodiuma likes this.

  6. #896
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மருத்துவப்பயன்கள்:

    இரத்தத்தைச் சுத்தப்படுத்த:

    வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால்இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால்இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும்.

    மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக்கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் இரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனை உட்இரப்பதுடன், தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன். இரத்தஅழுத்தம், இரத்தசோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

    சர்க்கரை நோயாளிகளுக்கு:

    இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக்கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில்கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.

    வயிற்றுப்புண் நீங்க:

    இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மனஉளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டுவயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இருமுறைஉணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும்.

    மூலநோயாளிகளுக்கு:

    மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம்வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப்புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூமூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

    மலச்சிக்கலைப் போக்கும் . சீதபேதியையும்கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.

    பெண்களுக்கு:

    பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள்.மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லதுஇரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில்சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும்.
    contd..


    kodiuma likes this.

  7. #897
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வாழைப்பூகஷாயம்

    வாழைப்பூ (இரண்டு அல்லது மூன்று இதழ்களை நீக்கிவிட்டு பூவை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு) அதனுடன்

    இஞ்சி 5 கிராம்

    பூண்டு பல் 5

    நல்ல மிளகு 1 ஸ்பூன்

    சீரகம் 1 ஸ்பூன்

    சோம்பு 1 ஸ்பூன்

    கொத்தமல்லி விதை 1 ஸ்பூன்

    கறிவேப்பிலை 5 இணுக்கு

    எடுத்து இடித்து கஷாயம் செய்து காலை, மாலைஎன இருவேளையும் மாதவிலக்கு தோன்றும் காலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், மாதவிலக்குகாலங்களிலும், மாதவிலக்கு முடிந்து இரண்டு நாட்கள் என மூன்று அல்லதுநான்கு மாதங்கள் அருந்தி வந்தால் கருப்பைப்புண், கர்ப்பப்பைக்கட்டி, வெள்ளைபடுதல், மாதவிலக்குசீரற்ற தன்மை போன்றவை மாறும். இது கை கண்ட மருந்தாகும். அடிவயிறு கனம் குறையும்.புண்புரை நீங்கும், சீராக இரத்த ஓட்டம் பெறும். உடல் வலுவடையும்.

    பெண்களுக்கு உண்டாகும் சூடு மற்றும் வெள்ளை படுதலைபோக்கும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும் குணமுண்டு. மலட்டுத் தன்மையைப் போக்கும்.ஈறு வீக்கம், புண் இவற்றிற்கு சிறந்த மருந்தாகும். வியர்வைநாற்றத்தைப் போக்கி, வியர்வையை நன்கு வெளியேற்றும்.
    contd..


    kodiuma likes this.

  8. #898
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கை, கால்களில் உண்டாகும் பித்த எரிச்சலைக் குணப்படுத்தும். உடல் எரிச்சலைப் போக்கும். தாதுவை விருத்தி செய்து விந்துவை கெட்டிப்படுத்தும். பருவ வயதினருக்கு உண்டாகும் சொப்ன ஸ்கலிதத்தை மாற்றும்.

    நரம்புகளுக்கு வலுவூட்டும். குறிப்பாக மூளை நரம்புகளில் சூட்டைத் தணித்து மூளைக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

    இத்தகைய சிறப்பு மிகுந்த வாழைப்பூவை நாமும் சமைத்து உண்டு நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்.

    kodiuma likes this.

  9. #899
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் கோவைக்காய்
    கோவையின் இலை, காய், கனி, தண்டு, வேர் என எல்லாப் பாகங்களும் மருத்துவ குணம் கொண்டது. கோவைப் பழங்கள் தொழுநோயை தீர்க்கும் வல்லமை பெற்றதாகும். அது மட்டுமல்லாமல் ஆஸ்துமா, மூச்சிரைப்பு, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கும் சிறந்த மருந்து.

    இயல்பாகவே கோவைச் செடியில் 'குளுக்கோஸ்-6 பாஸ்பேடஸ்' என்னும் வேதிப்பொருள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. குளுக்கோஸ்-6 தான் கல்லீரலில் உற்பத்தியாகி, நம் உடலின் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. கோவைப் பழத்தை உண்டால் பல் வலி கூட குறையுமாம்.

    கோவை இலைச்சாற்றுடன் வெண்ணெய் சேர்த்து புண்களுக்குப் பூசலாம். இதன் இலைச்சாற்றைப் பருகி வந்தால் நீரழிவு நோய் கட்டுப்படும்.
    contd..



  10. #900
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கோவையின் ஒரு பிடி இலையை நீரில் நசுக்கிப் போட்டு, அதனை சுண்டக் காய்ச்சி தினமும் இரண்டு வேளை பருகி வந்தால், உடல் சூடு குறைந்து குளிர்ச்சியாகும். கண் எரிச்சல் நீங்கும். இருமல், நீரடைப்பு, சொறி சிரங்கு, புண் ஆகியவை குணமாகும்.

    இதன் காரணமாகத்தான் அந்த காலத்தில் அம்மன் கோவிலில் ஊற்றப்படும் இலைக் கஞ்சியில், கோவைக் கொடியின் இலையையும் சேர்ப்பதுண்டு.

    கோவைக்காயை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியும். வாய்ப் புண்ணை போக்கும் தன்மை கோவைக்காய்க்கு உண்டு.

    சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டது என்பதால், பொதுவாக கர்ப்பிணி பெண்களும், தாய்ப்பால் கொடுப்பவர்களும் கோவையின் பாகங்களை உண்பதை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள். பொதுவாக கோவைக்காய் எண்ணெய் வறுவலாகவும், கதம்ப சாம்பார் எனப்படும் பல்வகைக் காய் சாம்பாருக்கும் பயன்படுத்துவது வழக்கம்.

    நன்கு கனிந்த இனிப்பு வகை கோவைப்பழங்களை எடுத்துக்கொண்டு, சர்க்கரை மற்றும் ஐஸ் துண்டங்களை சேர்த்து மிக்சியில் அடித்து பின்னர் வடிகட்டி சாப்பிட உடலுக்கு நன்மை தரும் பானமாக இருக்கும்.

    kodiuma likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter