Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #901
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சிறுநீரகக் கல்!!!

    இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்!!!

    இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். நெல்லிக்காய், இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்துப் பரிமாறவும்.இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல் கரையும்


    Sponsored Links
    kodiuma likes this.

  2. #902
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சர்க்கரைவள்ளிக் கிழங்கின் மருத்துவப் பயன்கள்
    சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ருசிக்க மட்டும் சுவையானதல்ல, இதயத்தின் செயல்பாட்டிற்கும் நன்மை பயக்கும். இதில் நிறைய ஸ்டார்ச்சத்தும், நோய் எதிர்பொருட்களும் உள்ளன. மாவுச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு, சராசரியான ஊட்டம் தரக்கூடியது.

    100 கிராம் கிழங்கில் 70 முதல் 90 கலோரி ஆற்றல் கிடைக்கும். மிகமிக குறைந்த அளவே கொழுப்பு உள்ளது. சர்க்கரை வள்ளிக் கிழங்கில் நிறைய அளவு நார்ச்சத்து உள்ளது.

    ஆன்டி-ஆக்சிடென்டுகளும், வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்களும் அதிகம் உள்ளது. மாவுச்சத்தில் கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளாக உள்ளது.

    இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாகவே உயர்த்தும். எனவே நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த அளவு உண்ணலாம்.

    மற்ற கிழங்கு வகைகளைவிட இதில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளது. இவை இயற்கை நோய் எதிர் பொருட்களாகும். உடலில் வைட்டமின் ஏ ஆக மாறி தேக ஆரோக்கியம் மற்றும் தோல் - நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு உதவும்.

    நுரையீரல் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது. இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற உடலுக்கு அவசியமான தாது உப்புக்களும் உள்ளது. இவை புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்களின் வளர்ச்சிதை மாற்றத்தில் பங்கெடுக்கும்.

    நொதிகளின் செயல்பாட்டிற்கும் உதவும். கிழங்கைவிட அதன் இலைகள் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது. 100 கிராம் புதிய இலைகளில் அதிக அளவில் இரும்பு, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், சோடியம், போரேட் ஆகியவை அடங்கி உள்ளது

    kodiuma likes this.

  3. #903
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தைராய்டு பிரச்னை தீர்க்கும் கீரைகள்
    தைராய்டு பிரச்னை பெரும்பா லும் பெண்களையே அதிகம் பாதிக்கிறது. அதுவும் இளம்பெண்களை இந்த தைராய்டு பாடாய்படுத்துகிறது. இதை விரட்ட சில விளக்கங்கள். கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.

    அயோடின் ஏற்ற இறக்கமே இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது. தைராய்டு பெண்களின் தலையாய பிரச்னையாக மாறி வருகிறது. ஆனால், ஆண்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது பெரும்பாலும் நோய்க்கிருமிகளால் தாக்கப்படுவதில்லை. அயோடின் குறைவே இதற்கு காரணம்.

    தைராய்டு பாதிக்கப்பட்டால் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப்போகலாம். சில பெண்கள் குறைந்த வயதிலேயே பருவடையும் நிலையும் ஏற்படும். இந்த நோய் எல்லா வயது பெண்களையும் பாதிக்கிறது. ரத்த தைராக்சின் ஹார்மோன் குறைந்த அளவு இருப்பதால் நோய் பாதிப்பு உண்டாகிறது.

    உடல் பருமன் அதிகரிப்பு, உடல் சோர்வடைதல், அதிக தூக்கம், முடி உதிர்தல், குளிர் தாங்க முடியாத தன்மை, இதயத்துடிப்பு குறைந்து கொண்டே போவது, மாதவிடாய் அதிகமாக உள்ள நிலை, ஞாபகசக்தி குறைதல், சருமம் வறட்சியாக காணப்படுதல் ஆகியவை இதன் அறிகுறியாகும்.
    contd..



  4. #904
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இந்த நோய் உள்ளவர்கள், பொதுவாக தைராக்சின் மாத்திரையை வாழ்நாள் முழுவதும் உட்கொள்ள வேண்டும். ஆண்டிற்கு ஒருமுறை ரத்த பரிசோதனையின் முலம் தைராக்சின் அளவை அறிய வேண்டும்.

    பொதுவாக தைராய்டு சுரப்பி பெரிதாவதை ‘காய்டர்‘ என்று அழைக்கப்படுகிறது. பல காரணங்களால் இந்த கட்டி ஏற்படுகிறது. 5 முதல் 10 சதவீதம் பெண்களிடம் காணப்படுகிறது. தைராய்டு கட்டிகள் புற்றுநோய் (அ) புற்றுநோய் இல்லாத கட்டிகளாக உருவாகிறது.

    புற்றுநோய் இல்லாத கட்டிகள் மெதுவாக பெரிதாகும். இதனால் இதர உடல் உறுப்புகளையும் பாதிக்கும் அபாயம் ஏற்படலாம். இதை கண்டுபிடிக்க அல்ட்ரா ஸ்கேன் மற்றும் திசுப்பரிசோதனை ஆகியவற்றின் மூலம் தைராய்டு கட்டியின் தன்மையை எளிதில் கண்டறியலாம். பாரா தைராய்டு நாளமில்லா சுரப்பி: நமது உடலில் மொத்தம் 4 பாரா தைராய்டு சுரப்பிகள் உள்ளன.

    இந்த சுரப்பிகள் தைராய்டு சுரப்பியின் பின்புற கழுத்தில் உள்ளது. இந்த சுரப்பிகள் பாரா தைராய்டு ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள் உடலின் ரத்தத்தில் கால்சியம் அளவினை கட்டுப்படுத்தும். சரியான அளவு கால்சியம் ரத்தத்தில் இருப்பது மிகவும் அவசியமானது.

    இதில் ஏற்படும் சிறு மாற்றங்களினால் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடலில் பல்வேறு விதமான செயல்பாடுகளுக்கு கால்சியத்தின் அளவு மிக முக்கிய பங்களிக்கிறது, முக்கியமாக நரம்பு, தசை, இருதய செயல்பாடுகளுக்கு கால்சியம் மிகவும் அவசியமானது. உடலில் 99 சதவீதம் கால்சியம் எலும்பில்தான் உள்ளது.
    contd..


  5. #905
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அறிகுறிகள்: தைராய்டு சுரப்பி குறைவாக இருக்கும் பெண்களுக்கு தொடக்கத்தில் மாத விலக்கில் மாற்றம் ஏற்படலாம். (அதிகமாக அல்லது குறைவாக இருக்கும்) இளம்பெண்களுக்கு கருமுட்டையில் நீர் கட்டிகள் (பாலி சிஸ்டிக் ஓவரியன் டிஸஸ்) இருக்கலாம்.

    சில பெண்களுக்கு குழந்தை பிறப்புக்கு பிறகு தைராய்டு சுரப்பி குறைவாக இருக்கும். குழந்தை பிறப்புக்கு பிறகு உடல் குண்டாகி, முகம் பருமனாகிவிடும். கைகளில் வீக்கம், கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்படலாம். கை, கால்கள் உளைச்சல், மூட்டுவலி, ஞாபக மறதி, மனச்சோர்வு அதிகமாகும்.

    சிலருக்கு குரல் மாறும். எச்சில் விழுங்கும்போது வலி ஏற்படும். சருமம் வறண்டு பொலிவு இழந்து காணப்படும். கரு முட்டைகள் சரியாக வளர்ச்சியடையாது. உடல் பருமன் காரணமாக குழந்தை பிறப்பு தடுக்கும். சாப்பிடக்கூடியவை தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்ய வேண்டுமென்றால் அயோடின், செலினியம் மிக முக்கியமாகும்.

    செலினியம் அதிகம் உள்ள உணவு வகைகளான இறைச்சி, மீன், காளான், சோயாபீன்கள், சூரியகாந்தி விதைகள் ஆகியவையும் அவசியம். உணவில் பசலைக்கீரை, எள், பூண்டு ஆகியவை சேர்த்து சாப்பிடுவது நல்லது. உணவில் அயோடின் உள்ள உப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
    contd..



  6. #906
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தினமும் 4 முதல் 5 கிராம் உப்பு வரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகள் சாப்பிடலாம். அவற்றை வேக வைக்கும்போது தண்ணீரை வடித்து விட்டு பயன்படுத்தலாம்.

    முழு தானியங்கள் மற்றும் முளை கட்டிய பயறு வகைகள் உணவில் சேர்க்கலாம். பழச்சாறுகளும் உடலுக்கு ஏற்றது. ஊட்டச்சத்து உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும். சிகிச்சை: தைராய்டால் ஏற்படும் குரல் பிரச்னைக்கு ஆளானவர்கள் அக்ரகாரம், அதிமதுரம், கரிசலாங்கண்ணி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் இரண்டு கிராம் அளவுக்கு காலையில் சாப்பிட்டு வந்தால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

    உடல் சோர்வின்போது, அகில் கட்டையை பொடி செய்து அதை நெருப்பில் தூவி வரும் புகையை முகரலாம். அசோக மரப்பட்டையை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து தினமும் மூன்று வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு குணமாகும்.

    தூதுவளைக் கீரைச்சாறு 30 மிலி அளவில் தினமும் காலையில் குடித்து வருவதன் மூலம் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு கரையும். தும்பை இலையை அரைத்து கழுத்துப் பகுதியில் பற்று போட்டால் கழலைகள் குணமாகும்.


  7. #907
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கிருமிநாசினிகள்
    ப்ரிஸ்க்ரிப்ஷன்

    நவீன மருத்துவத்தின் விஞ்ஞான கொடையாக நமக்குக் கிடைத்த கிருமி நாசினிகளும் (Antibiotics), அறுவை சிகிச்சை முறைகளும் மிக முக்கியமானவை. இவையே மனித குலத்தின் 90 சதவிகித நோய்களுக்கு தீர்வாக அமைகின்றன.

    பல்வேறு நோய்கள் கிருமிகளால் ஏற்படுகின்றன என்று அறியப்பட்டிருக்கிறது... எனினும், கெட்ட காற்று, வாயு, பித்தம், தீயவினைகளால் நோய் உண்டாவதாக நம்பிக்கொண்டு, கைக்குழந்தைகளையும் இளந்தாய்களையும் இன்றும் வேப்பிலையுடன் நவீன மருத்துவரிடம் அழைத்து வருகிறது நம் சமுதாயம்.

    பல நோய்களுக்கும் நவீன மருத்துவரிடம் தீர்வு இருப்பதாக நம்பி வருவது தான் கடவுள் நம்பிக்கையின் உச்சகட்டம்.ஆரம்ப காலத்தில் கிருமிநாசினிகள் நுண்ணுயிரிகளிலிருந்து கிடைத்தன. இவை மனித உடலில் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கவோ, குறைக்கவோ, கொல்லவோ பயன்படுத்தப்படுகிறது.

    உடலில் ஏற்படும் எல்லாக் காயங்களும் கிருமிகளால் ஏற்படும் அனைத்து நோய்களும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து, தானாகவே கிருமிகளை ஒழிக்க போராடி உடல் தோற்றுப்போகும் பட்சத்தில் என்ன ஆகும்? கிருமிகளால் உருவாகும் நோய், கிருமிகள் ஒன்றிலிருந்து பல நூறாக, லட்சங்களாக, கோடிகளாக, ஓரிடத்தில் மட்டுமல்லாது, உடல் முழுக்க பரவி (sepsis), நோயின் வீரியம் அதிகமாகி நோயாளி இறந்துபோகக்கூட நேரிடும்.

    முதன்முதலாக மருத்துவ ஆராய்ச்சியாளர் எர்லீஷ், சில சாயம் மற்றும் உலோகங்களுக்கு கிருமி நாசினிகளுக்கான குணாதிசயம் இருப்பதை அறிந்தார். 1935ல், ஜெர்மன் மருத்துவர் டோமாக் Sulfonamide dyeயை கிருமிநாசினியாக பயன்படுத்தி வெற்றி கண்டார்.

    1877ல், விஞ்ஞானி லூயி பாஸ்டியர், சிறுநீர் ஆந்தராக்ஸ் கிருமிகளின் வளர்ச்சி காற்றில் இருக்கும் கிருமிகளால் கட்டுப்படுத்தப்படுவதைக் கண்டறிந்தார். 1929ல், விஞ்ஞானி அலெக்சாண்டர் ஃபிளமிங், Penicillium mould (Staphylococcus) கிருமிகளை அழிப்பதைக் கண்டறிந்தார்.

    இதற்குப் பிறகு ஒவ்வொரு நோய்க்கும் தனித்தனியான கிருமிநாசினிகள் கண்டறியப்பட்டன... கொத்து கொத்தாக கிருமித் தொற்றுகளால் இறந்து கொண்டு இருந்த மனித சமுதாயத்தின் மரணம் தடுத்து நிறுத்தப்பட்டது. நூற்றுக்கும் அதிக கிருமிநாசினிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், இன்று புதிதாக கிருமிநாசினிகளை கண்டுபிடிக்க இயலாத ஒரு கட்டத்தில் இருக்கிறோம்
    contd..



  8. #908
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அதனால், WHO (உலக சுகாதார நிறுவனம்) மற்றும் இந்திய மருத்துவ சங்கம் (IMA) ஆகிய அமைப்புகள் கிருமிநாசினிகளை தேவையில்லாமல் பயன்படுத்தக் கூடாது (Avoid Antibiotic Abuse Mission AAA) என நவீன மருத்துவர்களுக்கும் மருந்தாளுனர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    கிருமிநாசினிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிப்பட்ட முறையில் - குழந்தைகள், நடுவயதினர், மூத்தகுடிமக்கள், தாய்மார்கள், கர்ப்பிணிகள் என ஒவ்வொரு தரப்பினருக்கும் - ஒருவேளை, ஒருநாள் அளவு, ஒவ்வொரு நோய்க்கும் கொடுக்க வேண்டிய அளவு என நோயின் வீரியத்தை பொறுத்து மாறுபடும். இது ஒவ்வொரு கிலோ கிராம் எடைக்கான அளவின் அடிப்படையில் கணக்கிடப்படும்.

    அமெரிக்காவிலிருந்து குழந்தையை அழைத்துக்கொண்டு விடுமுறைக்கு வந்த ஒருவர், நான் மருந்து எழுதும்போது, ‘டாக்டர் அமெரிக்காவில் கிருமிநாசினிகளை உடனே தருவதில்லை. தந்தால் 5, 7, 10 நாட்கள் என தருவார்கள்.

    இந்தியாவில் எடுத்தவுடன் கிருமிநாசினிகளை எழுதுவதும் 3 நாட்களுக்கு மட்டும் எழுதுவதும் ஏன்?’ என்று கேட்ட கேள்வி எனக்கு ஞாபகம் வருகிறது. மருந்துக்கடைகளில் ஒரு வேளைக்குக்கூட தருவது அவருக்கு தெரியவில்லை! கிருமிநாசினிகளை பாக்டீரியாக்களுக்கு மட்டும் - (சிக்கன் பாக்ஸ் போன்ற ஒரு சில வைரஸ்களுக்கு ஆன்டி வைரஸ் இருப்பது தவிர) வயிறு, குடல் பாக்டீரியா மற்றும் கிருமிகளான ஒரு செல் உயிரியான அமீபாவிலிருந்து புழுக்கள் வரை பயன்படுத்த முடியும்.

    சளி, மூக்கு ஒழுகுதல் உடன் வரும் ஃபுளு (Flu) மற்றும் சிக்குன்குனியா, டெங்கு, வைரஸ், எபோலா காய்ச்சலுக்கு கிருமிநாசினிகள் பயன்படாது.

    அதனால், சில காய்ச்சலுக்கு நவீன மருத்துவர் ஜுரம் மாத்திரை மற்றும் அலர்ஜி, மூக்கடைப்பு மாத்திரை மட்டும் எழுதித் தரும்போது தெரிந்த மருந்துகளையே தருகிறாரே என நல்ல மருந்துகளை எழுதித் தருமாறு வற்புறுத்தாமல், அவர் கூறும் விளக்கங்களை ஏற்று, அவர் தரும் மருந்துகளை மட்டுமே பயன்படுத்துவதும், 48 மணி நேரம் கழித்து மீண்டும் ஆலோசனை பெறுவதும் நல்லது. கிருமிநாசினிகளை தேவையில்லாமல் உபயோகப்படுத்தும்போதோ, குறைவான அளவில் உபயோகப்படுத்தும்போதோ (dose), குறைவான

    நாட்கள் உபயோகப்படுத்தும்போதோ, அடிக்கடி உபயோகப்படுத், தும்போதோ, அது கிருமிகளைக் கொல்லும் வீரியம் (Resistant) குறைந்து, அவை கிருமிகளுக்கு எதிராக வேலை செய்யாமல் போய்விடும்.
    contd..



  9. #909
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    புதிய கிருமிநாசினிகளை கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில் மருத்துவர்கள் பரிந்துரை அல்லாது ஓரிரு வேளைக்கு மட்டும் மருந்தாளுநர்கள் மூலமோ, தாமாகவோ கிருமிநாசினிகளை பயன்படுத்துவதை - குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுப்பதை நிறுத்தியே ஆக வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம்.

    காச நோய்க்கு 4 அல்லது 5 மருந்துகள் கிருமிநாசினியாக உட்கொள்ளப்படுகிறதே... ஏன்? நோயாளியின் எதிர்ப்பு சக்தி மற்றும் கிருமி நாசினிகள் ஜி.ஙி. கிருமியை அழிக்கும் வீரியம் குறைந்ததே இதற்குக் காரணம். இது கிருமிநாசினிகளின் வீரியம் குறைவதற்கும் காரணமாகிறது (Multidrug resistant MDR).

    நோயாளியின் எடைக்குக் குறைவான, நோயின் வீரியத்துக்குக் குறைவான கிருமிநாசினிகளின் அளவுக்கு, கிருமிகளுக்கு Mutation எனப்படும் உயிரின மூலக்கூறுகளின் (DNA / RNA) மாற்றம் ஏற்படுவது, நுண்ணுயிரிகளின் வாழ்நாட்களை நீட்டிக்கும் பரிணாம வளர்ச்சியாகும்.

    குறைவான அளவில் (Low dose)

    கிருமிநாசினிகளை உபயோகிக்கும்போது மருந்துகளுக்கு உருவாகும் எதிர்ப்புச் சக்தியை இப்படி உணரலாம்... கொசு மருந்து உபயோகிக்கும்போது சில ஆண்டுகளுக்கு முன் கொசுக்களே இல்லாமல் போனது மாறி, இப்போது கொசுக்கள் அறைகளில் தாராளமாக உலவுகின்றனவே... கொசு மருந்துக்கு அவை கொல்லப்படாமல் போவதுபோல, அம்மருந்துக்கு கிருமிகள் பழகிக்கொள்வதால் மருந்துக்கான வீரியம் குறைவதையே drug resitant என்று கூறுகிறோம். இதனால்தான் MDR - காசநோய்க்கு பல்வேறு மருந்துகளை உபயோகப்படுத்தும் கட்டாயத்தில் இருக்கிறோம்.
    contd..



  10. #910
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கிருமிநாசினிகளை அடிக்கடி எடுப்பதால் இரைப்பையில், உணவுக்குழாயில், ஜீரணத்துக்குப் பயன்படும் சில நல்ல நுண்ணுயிரிகளையும் அழித்து, ஜீரண சக்தி குறைந்து, எடையும் குறையும் அபாயம் ஏற்படும். கிருமி நாசினிகள் வாந்தி, பேதி, வயிற்றுவலி, தோல் அலர்ஜி போன்ற சிறிய பக்கவிளைவுகளுடன், ஷாக் (Shock) போன்ற உயிரைப் பறிக்கும் பக்கவிளைவாகவும் மாறலாம். கிருமிநாசினிகள் சிறுநீரகம், ஈரல் போன்ற உறுப்புகளையும் பாதிக்கும். ஒவ்வொரு கிருமியும் உடலின் ஒவ்வோர் இடத்தில் வளரும், வாழும். ஒவ்வொரு கிருமிக்கும் தனித்தனியான கிருமிநாசினிகள் உண்டு.

    அவை ஒவ்வொன்றும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்தாக, புட்டி மருந்தாக, கரையும் மாத்திரைகளாக, பெரியவர்களுக்கு எடைக்குத் தகுந்த மாத்திரைகளாக, ஊசிமருந்தாக, சில வேளைகளில் புண்களுக்கு பவுடர்களாக, ஆயின்மென்ட் ஆக, பிறப்பு உறுப்பிலோ, ஆசனவாயிலோ வைக்கும் கரையும் மருந்துகளாக அளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நோய்க்கும், ஒவ்வொரு மருந்துக்கும் மருந்தின் அளவு, உட்கொள்ளும் நாட்களின் அளவு வேறுபடும்.

    கடைகளில் காய்ச்சலுக்கு என்று மருந்தாளுநர் தைரியமாக - ஓரிரு வேளைக்காக மருத்துவரின் பரிந்துரையின்றி கிருமிநாசினிகளை எடுத்துத் தரும்போதோ, அவ்வாறு தரும் மருந்தினை நோயாளி தைரியமாக ஓரிரு வேளை உட்கொள்ளும்போதோ, மருத்துவர் பரிந்துரைத்தும் நன்றாக ஆகிவிட்டது என ஓரிரு வேளைகளில் கிருமிநாசினிகளை உட்கொள்ளாமல் நிறுத்தும்போதோ - கிருமிநாசினிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிட்டது என்று அர்த்தம்.
    contd..



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter