Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #911
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உதாரணமாக ampicillin (அம்பிசிலின்), amoxicillin (அமாக்ஸ்சிலின்), erythromycin (எரித்திரோமைசின்) போன்ற மருந்துகள் இந்தியாவில் - முக்கியமாக தமிழகத்தில் சர்வசாதாரணமாக பயன்படுத்தப்படுவதால் அவை வீரியம் இழந்து வருகின்றன.

    சாதாரண காய்ச்சலுக்குக்கூட நரம்புகளில் மருந்து ஏற்றி மருத்துவமனையில் சேர்க்க வைக்கிறது. மருந்தாளுநர்கள், மருத்துவர் பரிந்துரையின்றி கிருமிநாசினிகளை தருவதை அரசாங்கம் தடுத்து நிறுத்தட்டும். கிருமிநாசினிகளை பெயர் தெரிந்து கேட்டு வாங்கி உண்பதை மக்கள் நிறுத்தட்டும். தேவையில்லாத இடங்களில் கிருமி நாசினிகளை உபயோகிப்பதை மருத்துவர்களும் நிறுத்தட்டும்.நாம் நம் சந்ததியினருக்கு சொத்து, பாரம்பரியம், நல்ல சுற்றுச்சூழல், சுகாதாரங்களை மட்டுமல்ல... நல்ல வீரியம் மிக்க கிருமி நாசினிகளையும் விட்டுச்செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.


    Sponsored Links

  2. #912
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நீரிழிவின் போது எடை அதிகரிக்க உதவும் 5 உணவுகள்:-
    நீரிழிவிற்கும் எடை இழப்பிற்கும் தொடர்பு உள்ளதா என்ன*? ஆம்! என்றால், அது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் எடை இழப்பு அதிலும் கடுமையான எடை இழப்பு என்பது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டதற்கான* ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும்.

    நீரிழிவு என்பது மனித உடலில் உள்ள இன்சுலின் அளவை தேவையான அளவை விட* குறைக்கிறது என்று அர்த்தம். இந்த இன்சுலின் பற்றாக்குறை என்பது செல்கள் குளுக்கோஸ்ஸை சரியாக சேமிக்கவில்லை என்று பொருள். நம் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் தசைகளின் இயக்கத்தை சரியாக செயல்பட*விடாமல் உடலின் ஆற்றலையும், சக்தியையும் குறைக்கிறது. இதனால் நம் உடல் எடை குறைகிறது. ஒரு மாதத்தில் 3 முதல் 4.5 கிலோ வரை எடை இழப்பு ஏற்படும் என்பதாலும், இது ஆரோக்கியமானது என்றும் சொல்ல முடியாது. இதனால்தான் நாம் அடிக்கடி கழிவறைக்கு செல்லும் நிலையும், இரத்த சுழற்சியும் அதிவேகமாக நடக்கிறது.

    எப்படி நீரிழிவின் போது எடையை அதிகரிப்பது? எடை அதிகரிப்பதற்கான உணவு முறைகள் இதோ:

    நீரிழிவு நோயாளிகள் பலரும், அவரவர் உடல் நிலைக்கு ஏற்றவாறு அன்றாட உணவு முறைகளை சரியாக உட்கொள்ள வேண்டும், மற்றும் எடை இழப்பை வைத்து இன்சுலின் ஊசி எடுத்துக் கொள்ள வேண்டும். இருந்தாலும் உடல் எடை அதிகரிக்க நீரழிவு நோயாளிகளுக்கென்றே சில மருந்துகள் உள்ளன. இதனால் மருந்துதான் உள்ளதே என்று, இனிப்புகள் மற்றும் தேவையற்ற தின்பண்ட பொருட்கள் போன்றவற்றை மருத்துவர் அனுமதி இன்றி எடுத்துக் கொள்ள கூடாது. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதோடு, உடலில் பல* சிக்கல்களும் ஏற்படும். ஆரோக்கியமான வழியில் உடல் எடையை அதிகரிக்க என்ன வழிமுறைக*ள் உள்ளன என்று பார்ப்போமா!
    contd..



  3. #913
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    1. சிறிய அளவில் உணவை அதிக தடவை எடுத்துக் கொள்வது:

    நீரிழிவு நபர் எவ்வளவு சாப்பிட்டாலும், அது உடலில் தங்குவது இல்லை. எனவே இதை கருத்தில் கொண்டு, மூன்று வேளைக்கு பதில் 5 அல்லது 6 வேளையாக உட்கொண்டால் உடலின் எடையை சமன் செய்ய முடியும். சாப்பிடும் உணவில் ஆரோக்கியமான உணவுகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகம் எண்ணெய் மற்றும் சர்க்கரை உணவுகளை தவிர்க்க வேண்டும் மற்றும் கிளைசெமிக் உள்ள* உணவுகளையும் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    2. வேய் பவுடர் (புரதச்சத்து உள்ள):
    இந்த பவுடரில், அதிக ஆற்றல் உள்ள மாவுச்சத்தும், புரதமும் அதிக* எண்ணிக்கையில் உள்ளது. புரதமானது நம் உடலின் இன்சுலின் அளவை அதிகரித்து சர்க்கரையின் அளவை சரியாக* பராமரிக்க உதவுகிறது. அதோடு அதிக ஆற்றல் வழங்குவதோடு, ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது

    3. பாதாம்:
    இந்த கொட்டைகளில் அதிக ஆற்றலும், சர்க்கரை உற்பத்தி திறன் குறைவாகவுமுள்ளது. நொறுக்கு தீனிக்கு பதிலாக பாதாம் சாப்பிட்டால் நம் உடலுக்கான ஆரோக்கியமான மற்றும் போதுமான உணவாக இருக்கிறது.

    4. பீன்ஸ்:
    பயறு, கார்பேன்ஸோ அவரை மற்றும் சிறுநீரக பீன்ஸ் இவற்றில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கலோரிகள் கூடுதலாக* உள்ளன. நம் உடலில் உள்ள கார்போஹைட்ரேட் எப்போதும் உணவு அதிகமாக இருப்பது போலவே காட்டும். அதோடு பீன்ஸ் நார்ச்சத்து உள்ள ஒரு முக்கியமான உணவு என்பதற்கு ஒரு நல்ல ஆதாரமாக இருக்கிறது.

    5 சால்மன்/இறால் மற்றும் மீன்:
    அனைத்து வகையான மீன்கள் மற்றும் முட்டைகளில் புரதம் அதிக* அளவு உள்ளது. கொழுப்பு குறைக்க வேண்டும் என்றால் மீன் சாப்பிடுங்கள். இறால்/சால்மன் வகை மீன்களில் ஒமேகா 3 அதிகம் உள்ளது, இது உடம்பில் கொழுப்பின் அளவை குறைக்கிறது.


  4. #914
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    குளிர் காலத்தில் சாப்பிட, சாப்பிட கூடாத உணவுகள்
    குளிர் காலத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய மற்றும் சத்தான உணவை உட்கொள்வது மிகவும் சிறந்ததாகும். மழைக்காலம், குளிர் காலங்களில் பல தொற்றுநோய்கள் தாக்கும். குளிர் காலங்களில் நாம் உட்கொள்ளும் உணவுகளை சிறந்த ஊட்டச்சத்து நிரம்பியவைகளாக தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.

    சாப்பிட கூடிய உணவுகள் :

    டயட்டில் சரியான அளவு காய்கறிகளை சேர்த்து கொள்ள வேண்டும். இவை தேவையான சக்தியை அளித்து குளிர்காலத்தை சமாளிக்க உதவும். அதிகளவில் கீரைகளையும், கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற காய்களை சாப்பிடுவது நல்லது.

    ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குளிர்காலங்களில் சாப்பிட வேண்டிய உணவுகளில் சிறந்தது. மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. தேவையான அளவு மீன்களை உட்கொள்ளுவது நல்லது.

    சிறு தானியங்களை சேர்த்து சப்பாத்தி செய்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பது நல்லது. குளிர்காலங்களில் சரியான உணவுமுறையை பெறுவதற்கும் தேவையான பிராண வாயுவை உட்கொள்வதற்கும் வேர்க்கடலை சிறிதளவு உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
    contd..



  5. #915
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    குளிர் காலங்களில் உணவில் தேனை சேர்த்து கொள்வது மிகச்சிறந்த ஒன்றாகும். இது ஜீரண சக்தியை அதிகரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்த உதவும்.

    குளிர் காலத்தில் பாதாம் பருப்பு அதிகளவில் பலன் தரக்கூடியது. இதன்மூலம் குளிர்காலங்களில் ஏற்படும் மலச்சிக்கலை தவிர்க்க முடியும். இஞ்சி, குழந்தைகள் மற்றும் பெரியோர்களால் உட்கொள்ளப்படும் பொதுவான உணவாகும்.

    இது ஜலதோஷத்திற்கும், காய்ச்சலுக்கும் சிறந்த சிகிச்சையை அளிக்கக்கூடியது. இது குளிர் காலத்தில் வெப்பம் தரும் உணவுகளில் ஒன்றாகும். ஒரு கப் இஞ்சி டீ அருந்தினால், அது உடலில் உள்ள கொழுப்பு அமிலங்களை ஜீரணிக்க உதவி புரியும். மேலும், அசிடிட்டியை போக்குவதற்கும் உதவி புரியும்.

    காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். மோர் சாப்பிடலாம். இரவு தூங்குவதற்கு முன்பு பசும்பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

    ஜலதோஷம் தொடர்பான பிரச்சனைகள் வராது. நீர்ச்சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலங்காய், பீர்க்கன்காய், வெள்ளரி போன்ற காய்கறிகளை குறைந்த அளவிலேயே சாப்பிடலாம். மழைக்காலங்களில், அசைவ உணவுகளான மீன், முட்டை, இறைச்சி ஆகியவற்றை சாப்பிடலாம். குளிர்காலத்தில் உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும்.

    அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு உதவுவது ஆரஞ்சு பழமும், தேனும் தான்.வைட்டமின் ‘ஏ’ மற்றும் ‘சி‘ சத்துக்கள் அதிகம் நிறைந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளக்கும். அதிகளவில் தண்ணீர் குடித்து வருவதும் நல்லது.
    contd..



  6. #916
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சாப்பிடக்கூடாத உணவுகள் :

    உணவில் இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளக்கூடாது. எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது. இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு ஆகியவற்றை சேர்க்க வேண்டாம்.

    சிலருக்கு மழைக்காலத்தில் எலுமிச்சம் பழம் மற்றும் ஆரஞ்சு ஜுஸ் சாப்பிட்டால் ஒத்துக் கொள்ளாது. அவர்கள் இவற்றை சாப்பிடாமல் இருப்பது நல்லது. மழைக்காலங்களில் இரவில் கீரை வகைகளை அதிகம் சாப்பிடக்கூடாது.

    பால் மற்றும் பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக்கூடாது


  7. #917
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பெண் மலட்டுத்தன்மை நீங்க வழிகள்
    வயதுக்கு வரும் பெண் பிள்ளைகள் நல்லெண்ணெய், உளுந்தங்களி, லேகிய வகைகள் சாப்பிடாமல் விட்டுவிடுகிறார்கள். இதுவும் மலட்டுத்தன்மைக்கு காரணமாகிறது.

    மாதவிலக்கு 28 நாட்ளுக்கு ஒருமுறை வரவேண்டும். இதில் ஒருநாள் மாறுபடலாம். மாதவிலக்கு 3 நாட்கள் இருக்க வேண்டும். வயிற்றில் வலி இருக்கக்கூடாது. அப்படி வலிஇருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

    நிறைய பெண்களுக்கு வெள்ளைப்படும். அதை தடுக்க சித்த மருத்துவத்தில் மருந்துகள் இருக்கின்றன. ரத்தப்போக்கு பிரச்சனை வந்தாலும் அதையும் உடனே சரிப்படுத்த வேண்டும்.

    பெண்கள் மலட்டுத்தன்மையை போக்க வழி :

    மலட்டுத்தன்மை கொண்ட பெண்கள் உணவு வகையிலும் கவனம் செலுத்தவும். கசப்பு, துவர்ப்பு, இயற்கையான இனிப்பு... இந்த மூன்றையும் உணவில் மூன்றில் ஒரு பங்கு குறையாது பார்த்துக்கொள்ளவும்.

    அதாவது பாகற்காய், சுண்டைக்காய், வெந்தயம், கேரட், பீட்ரூட்டை தாராளமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வெந்தயக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை, வல்லாரைக்கீரை, தூதுவளை, இப்படி ஏதாவது ஒரு கீரையை தினமும் உணவுடன் காலை அல்லது மதியம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    contd..



  8. #918
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மாதுளம் பழம், அத்திப்பிஞ்சு, திராட்சை, எலுமிச்சசம் பழம், ஆரஞ்சு நலம் தரும். பூ வகைகளில் ரோஜா, மாதுளம் பூ, ஆவராரம் பூ, செம்பருத்தி பூ நல்லது.

    கர்ப்பப்பை கோளாறுகள் நீங்க :

    வெண்பூசணியை தினம் உணவில் சேர்த்து வந்தால் கர்ப்பக் கோளாறுகள், மாதவிலக்கு பிரச்சனை நீங்கும்.


  9. #919
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கசப்பான கஷாயம் இனிக்கும்!
    ''மழைக்காலம் வந்தாலே, ஜுரமும் ஜலதோஷமும் வரிசைக் கட்டி வர ஆரம்பித்துவிடும். அதுவும் கொஞ்சம் பனி பெய்தாலும் போச்சு. உடனே, 'லொக் லொக்’ இருமலும், 'ஹச்.. ஹச்’ தும்மலும் வீட்டையே ஜுகல்பந்தியாக்கிவிடும். பனியால் ஏற்படும் பிணியைப் போக்க, கஷாயம்தான் கண்கண்ட மருந்து'' என்கிறார் ஊட்டச் சத்து நிபுணர் சங்கீதா.

    மிளகுக் கஷாயம்
    12 மிளகை நன்றாகப் பொடித்து, இரண்டு கப் பாலில் சேர்த்து சுண்ட காய்ச்சவும். இனிப்பு தேவைப்பட்டால் வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.
    பலன்கள்: தொண்டைக் கரகரப்பு நீங்கும். ஜீரணக்கோளாரைச் சரி செய்யும்.
    பெண்களுக்கு, கர்ப்பகாலத்தில் மசக்கையால் ஏற்படும் வாந்தியை தடுக்கும்.
    கிராம்பு கஷாயம்
    10 கிராம்புகளைப் பொடித்துக்கொள்ளவும். நான்கு அல்லது ஐந்து கிராம்புடன் பொடித்த கிராம்புத் தூளை சேர்த்து மூன்று கப் தண்ணீர் விடவும். அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து ஒரு கப்பாகச் சுண்டியதும், வடிகட்டி பனை வெல்லத்தை சேர்க்கவும். கால் டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பருகலாம்.
    பலன்கள்: தொண்டைக்கு இதமாக இருக்கும். தோல் பிரச்னைக்கு மிகவும் நல்லது. கரும்புள்ளிகளை போக்கும். கண்களில் இருக்கும் கருவ¬ளையம் மறைந்துவிடும்.


  10. #920
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வெளிநாட்டுப் பொருட்களின் மீதான மோகமும், ஆர்வமும் நமக்கு ரொம்பவே அதிகம். டி.வி., லேப்டாப், ஏ.சி. என்று ஃபாரீன் பொருட்களின் மேல் இருந்த நம்பிக்கை இப்போது நாம் சாப்பிடும் பழங்கள், காய்கறிகள் மீதும் திரும்பி இருக்கிறது. 'பார் கோட் ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டு பளபளக்கும் பழங்களை, ஸ்டைலாக டிராலியைத் தள்ளிக்கொண்டு போய் வாங்க, பழக்கபட்டு விட்டோம்.
    வெளிநாடுகளில் இருந்து அதிக அளவு இறக்குமதி செய்யப்படும் பழம் ஆப்பிள். 'வாஷிங்டன் ஆப்பிள்’, 'ராயல் காலா ஆப்பிள்’, 'பியூஜி ஆப்பிள்’ என்று விதவிதமான ஆப்பிள்கள் கடைகளை அலங்கரிக்கின்றன. இந்த ஆப்பிள்களின் 'பளிச்’ தோற்றத்தைப் பார்த்தாலே வாங்கத் தூண்டும்.
    ஆப்பிளின் பளபளப்புக்கு என்ன காரணம்? விவசாயியும் இயற்கை ஆர்வலருமான அரச்சலூர் செல்வம் விலாவரியாகப் பேசுகிறார்...
    ''வெளிநாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆப்பிள் கெட்டுப்போகாமல் இருக்க 'வேக்ஸ்’ எனப்படும் கோட்டிங், அதாவது நம் வீட்டுக்கு பெயிண்ட் அடிப்பது போல, ஒரு லேயர் அந்த ஆப்பிள் மீது பூசப்படுகிறது. சில நாடுகளில் வேக்ஸ் இடத்தை 'கெமிக்கல் கோட்டிங்’ பிடித்துக் கொள்கிறது! இது எந்த வகையான கெமிக்கல் என்பது ஆப்பிளை வாங்கும் யாருக்கும் சொல்வது இல்லை; வாங்குபவரும் இதுபற்றிக் கேட்பது இல்லை! இப்படி முலாம் பூசப்பட்ட ஆப்பிளை 'கோல்டு ஸ்டோரேஜ்’ (Cold STORAGE ) செய்து அனுப்பிவைக்கிறார்கள். இந்த ஆப்பிளை என்னதான் கழுவினாலும் அதன் மீது பூசப்பட்ட 'வேக்ஸ்’ அல்லது 'ரசாயன முலாம்’ போக வாய்ப்புக் குறைவு.
    அன்னாசி, மாதுளை, திராட்சை போன்ற பழ வகைகளும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அன்னாசிப் பழத்துக்கு 'வேக்ஸ் கோட்டிங்’ கொடுக்கப்பட்டு இருந்தாலும் அதில் பாதிப்பு இருக்காது. காரணம் அந்தப் பழத்தை தோல் சீவிதான் சாப்பிடுகிறோம். மாதுளையும் அதே போலத்தான். ஆனாலும் இந்தப் பழங்களில் 'கெமிக்கல் முலாம்’ பூசப்பட்டு இருந்தால், அந்த கெமிக்கலின் தாக்கம் பழத்துக்குள் ஊடுருவிப் பாய்ந்து இருக்கவே செய்யும்.
    contd..



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter