Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #961
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    # 100 கிராம் மாம்பருப்பை மேல் தோல் நீக்கிப் பொடி செய்து கொள்ளவும். பிறகு தேவையான அளவு மணத்தக்காளி கீரையைப் பிழிந்து சாறு எடுத்து, அதில் மாம்பருப்புப் பொடியைக் கலந்து வெயிலில் காயவைத்து மீண்டும் பொடி செய்துகொள்ளவும். தினமும் காலை மாலை இரு வேளையும் ஒன்று அல்லது இரண்டு கிராம் பொடியை மோர் அல்லது வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
    # காலையில் இறக்கிய பதநீரில் அரை ஸ்பூன் மஞ்சள் தூளைக் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
    # சோற்றுக் கற்றாழையின் சோற்றுடன் புளிக்காத எருமைத் தயிரைக் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
    # 5 அல்லது 6 பூண்டை ஒரு டம்ளர் பசும்பாலில் போட்டு நன்றாகக் காய்ச்சி வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
    # மாசிக்காயின் தூள் 1 ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் குழைத்துத் தினமும் காலை, மாலை இரண்டு வேளை சாப்பிடலாம்.
    # ஒரு கைப்பிடி கசகசாவைத் தண்ணீர் விட்டு அரைத்து, காய்ச்சிய பசும்பாலில் கலந்து இரவில் படுக்கும் முன் குடிக்கலாம். அத்தி இலையுடன் வேப்ப இலையைச் சம அளவு சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடிக்கலாம்.
    # அத்தி இலைக் கொழுந்து, அவரை இலைக் கொழுந்து, குப்பை மேனிக் கீரை இம்மூன்றையும் சம அளவு சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடிக்கலாம்.
    # மணத்தக்காளிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், வயிற்றுப்புண் மட்டுமல்லாமல் வாய்ப்புண்ணும் குணமாகும்.
    # அகத்திக் கீரை இலைகளை வெங்காயம் சேர்த்து வேகவைத்து நன்றாகப் பிழிந்து, அதில் கிடைக்கும் சாற்றைக் குடித்து வந்தால் வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.
    # அத்தி மரப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, சம அளவு பசும்பால் கலந்து சிறிது கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.


    Sponsored Links

  2. #962
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள்!
    உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் ஜூஸ்கள் மூலம் எடையை குறைப்பது. அது எப்படி ஜூஸ் குடிப்பதன் மூலம் எடையை குறைக்க முடியும் என கேட்கிறீர்களா.

    உண்மையிலேயே ஜூஸ் குடித்தால் அடிக்கடி பசி ஏற்படுவதை குறைத்து நீண்ட நேரம் வயிற்றினை நிறைத்து வைத்திருக்கும். இதனால் கண்ட கண்ட உணவு பொருட்களை சாப்பிடமாட்டோம். இப்போது உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகளை பார்ப்போம்.

    எலுமிச்சை ஜூஸ்: பொதுவாக எலுமிச்சை உடல் எடைக்குறைப்பதற்கு முக்கிய பங்கு. அதிலும் ஏழே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய, எலுமிச்சை ஜூஸில் 1 சிட்டிகை உப்பு, மற்றும் தேன் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

    தக்காளி ஜூஸ்: ஏழே நாட்களில் எடையில் நல்ல மாற்றம் வேண்டுமெனில், 3 தக்காளியை வேக வைத்து அதனை அரைத்து, அதில் வெல்லம் சேர்த்து தினமும் மூன்று வேளை குடித்து வரவேண்டும்.
    contd..



  3. #963
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அவகேடோ ஜூஸ்: அவகேடோவை அரைத்து ஜூஸ் போட்டு, தேன் சேர்த்து குடித்து வந்தால், தொப்பை குறைந்துவிடும். மேலும் இதில் நல்ல கொழுப்புகள் இருப்பதால், உடலில் உள்ள கலோரிகளை எரித்துவிடும்.

    திராட்சை ஜூஸ்: கிரேப் புரூட்டில் வைட்டமின்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் இருப்பதால், இதனை கொண்டு ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடல் எடை குறைவதோடு, சருமமும் நன்கு பொலிவோடு இருக்கும்.

    கொய்யா ஜூஸ்: கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இதனை ஜூஸ் போட்டு வாரத்திற்கு இரண்டு நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும்

    ஆரஞ்சு பழ ஜூஸ்: ஆரஞ்சு பழ ஜூஸை குடித்தாலும், எடையில் மாற்றம் தெரியும். அதிலும் ஆரஞ்சுப் பழ ஜூஸில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும்.

    அன்னாசி ஜூஸ்: அன்னாசியை மட்டும் அரைத்தால், அது கெட்டியாக ஜூஸ் போன்று இருக்கும். ஆகவே அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து பசியாக இருக்கும் நேரத்தில் குடித்தால் பசியானது உடனே அடங்கும்.


  4. #964
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கான காரணங்களும்... விளைவுகளும்...
    இறுதி மாதவிடாய் இறுதி மாதவிடாய் காலத்தின் போது ஒவ்வொரு பெண்ணும் அசாதாரண வகையிலான மனநிலையால் பாதிக்கப்படுவார்கள். இந்த காலத்தின் போது தான் பெண்களுக்கு மாதவிடாய் முழுமையாக நிற்கும். இதனால் குழந்தையை பெற்றெடுக்கும் திறனை அவர்கள் இழப்பார்கள்.

    பெண்களுக்கு இறுதி மாதவிடாய் தொடங்கும் நேரத்தில் இனப்பெருக்க உறுப்பில் மாற்றங்கள் ஏற்படும். பெண்களுக்கு ஏற்கனவே மன அழுத்தம் ஏற்பட்டிருந்தால், இந்த சூழ்நிலையில் மீண்டும் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம்.

    உடல் ரீதியான கோளாறு பொதுவாக ஒரு பெண் பருவ மாற்றத்தை அடையும் வயதில், மன அழுத்தம் ஏற்படுவதில் பாலின வேறுபாட்டை அறியலாம். அதே போல் பருவடையும் நேரத்தில் தனி நபரில் ஏற்படும் பாலின வேறுபாடும் கூட மன அழுத்தம் ஏற்படுவதில் முக்கிய பங்கை வகிக்கிறது.

    உடல் ரீதியான அதிருப்தி ஏற்படும் போதும் மன அழுத்தம் ஏற்படும். பருவமடையும் போது பெண்களுக்கு பாலியல் ரீதியான வளர்ச்சி ஏற்படுவதும் கூட மன அழுத்தம் ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக விளங்குகிறது.

    அளவுக்கு அதிகமான அழுத்தம் தங்கள் திறனுக்கு மேலாக கூடுதல் வேலையை செய்யும் நபர்களுக்கு அழுத்தங்கள் ஏற்படலாம். ஆண்களுடன் ஒப்பிடுகையில், அலுவலகம் அல்லது வீட்டில் வேலை பார்க்கும் பெண்களுக்கு தான் அழுத்தங்கள் அதிகமாக இருக்கும்.

    இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் உண்டாகும். ஆராய்ச்சியாளர்களின் படி, ஆண்களை விட பெண்களுக்கு தான் அழுத்தம் தொடர்பான ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும். சில காரணங்களால் மன அழுத்தம் அடையும் பெண்கள் எதிர்மறையாக சிந்திப்பார்கள். அவர்கள் மனதில் இருந்து நேர்மறையான எண்ணங்கள் முழுமையாக காலியாகியிருக்கும்.

    kiruthividhya likes this.

  5. #965
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இரவில் நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தடுப்பது எப்படி ..?
    * படுத்த நிலையில் இருப்பது ஆசிட் எளிதில் மேலே வர ஏதுவாகின்றது. தோள்பட்டை
    கீழே சிறிய தலையணை வைத் து உயர்த்திக்கொள்வதும், தலை க்கு சற்று உயர்த்தி தலையணை வைத்துக் கொள்வதும், இடது பக்கமாக திரும்பிப் படுப்பதும் இரவில் ஆசிட் மேலே ஏறாது இருக்க உதவும்.
    * முழு வயிறு உணவோடு இரவு படுக்கைக்குச் செல்வ து `ஆசிட்’ சுரப்பதை அதிகரிக்கச் செய்யும். தூங்க செல்வதற்கு 2-3 மணிநேரம் முன்பாக உணவு உட் கொள்வதும், இரவில் `ஸ்நாக்ஸ்’ எடுத்துக் கொள்ளாமல் இருப்பது ம் `ஆசிட்’ சுரப்பதை நன்கு கட்டுப் பாட்டில் வைக்கும்.
    * சாக்லேட், கேக், காபி போன்ற வை மாலைக்குப் பிறகு எடுத்துக் கொள்வது `ஆசிட்’ சுரப்பதை அதி கரிக்கச் செய்யும். எலுமிச்சை, நெல்லி, தக்காளி, பாட்டிலில் அடைக்கப்பட்ட செயற் கை பானங்கள், கொழுப்புசத்து மிகுந்த உணவுகளை இரவு உணவில் கண்டிப் பாய் தவிர்த்து விடுங்கள்.
    * இரவில் உடற்பயிற்சி செ ய்யாதீர்கள். இரவு உணவி ற்குப் பிறகு மெல்ல நடை யும், அமைதியும் `ஆசிட்’ சுரப்பதை வெகுவாய் கட்டு ப்படுத்தும்.
    * அதிக உணவு `அசிடிடி’க்கு ஒரு காரணம். சிறு சிறு உணவாக அவ்வப்போது எ டுத்துக் கொள்ளுங்கள்.
    * வாரத்திற்கு இருமுறைக்கு மேல் `அசிடிடி’ இருந்தால் உடனடி மருத்துவரை அணு குங்கள்.
    * இரவில் ஆல்கஹால் மிகவும் கெடுதலே.
    * முட்டியை மடக்கி கீழே குனியுங்கள். உடலை முன் மடித்து குனியாதீர்கள்.
    * இதற்கான மாத்திரைகளை மருத்துவ ஆலோசனையுட ன் பயன்படுத்துங்கள்.

    kiruthividhya likes this.

  6. #966
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கொழுப்பை குறைக்க நார்ச்சத்து உணவு
    உடல் எடை அதிகமாவதற்கு, உண்ணும் முறையும் பழக்க வழக்கங்களும் தான் காரணம். இதற்கு நாவை சரியாக கட்டுப்படுத்த முடியாததே ஆகும். இதனால் எந்த ஒரு உணவை பார்த்ததும், மனம் அலை பாய்ந்து, அதனை சாப்பிட தூண்டி, அதனை சாப்பிட்டால் என்ன தீமை ஏற்படும் என்பதை யோசிக்காமல் சாப்பிட்டு விடுகிறோம். அதற்காக சாப்பிடவே கூடாது என்று சொல்லவில்லை. சாப்பிட வேண்டும், ஆனால் கட்டுப்பாடும் வேண்டும். சிலர் உடல் எடையை குறைப்பதற்கு டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற் கொள்வார்கள். இதனால் மட்டும் உடல் எடை குறையாது. எப்போதும் ஒரே மாதிரி யான செயல்களையும், உணவு பழக்க வழக்கங்களையும் மேற்கொள்ள வேண்டும். ஒருசில உணவுகளை சாப்பிடுவதால் தொப்பை ஏற்படுகிறது. அதேபோல் தொப்பையை குறைக்கவும் ஒருசில உணவுகள் உள்ளன.க்ரீன் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட் கள் மட்டுமின்றி, கொழுப்புகளை கரைக்கும் பொருட்களும் உள்ளது. எனவே உடல் எடையை குறைக்க தின மும் காலையில் க்ரீன் டீயை குடித்து வர வேண்டும்.
    contd..


    kiruthividhya likes this.

  7. #967
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பீன்ஸ் வகைகளில் கருப்பு பீன்ஸ், காராமணி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை உடலில் உள்ள டாக்ஸின்களை (வேதிப்பொருள்) வெளி யேற்றுவதோடு, தேவையற்ற கொழுப்புக் களையும் கரைத்துவிடும். இதனை சாப்பிட்டால், அடிக்கடி பசி எடுக்காது.ஆப்பிளில் உள்ள பெக்டின் எனும் பொருள், உடலில் இருந்து தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றிவிடும். இதனால் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வர, தொப்பையும் குறையும்.காய்கறிகளில் ப்ராக்கோலி, காலிஃப்ள வர் மற்றும் முட்டைகோஸ் போன்ற பச்சை காய்கறிகளில் அதிக அளவில் கால்சியம் மற்றும் வைட்டமின் ‘சி‘ உள்ளது. வைட்டமின் ‘சி‘ சத்தானது கொழுப்புகளை கரைக்கக்கூடியது. மேலும் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், கொழுப்புகள் கரைந்து உடலில் இருந்து வெளியேறிவிடும். எனவே உணவை குறைத்து காய்கறிகளை அதிகளவு சாப்பிட்டால் தொப்பை குறையும்.

    டார்க் சாக் லெட்டில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதில் போதிய அளவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புகளும் அதிக அளவில் கொக்கோவும் உள்ளது. இவற்றை சாப்பிட தொப்பை குறைந்து, உடல் எடையும் குறையும்.மசாலா பொருட்களில் ஒன்றான பட்டை உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து விடும். எனவே உணவுகளில் லேசாக பட்டையை பொடி செய்து சேர்த்து சாப்பிட்டால், தொப்பை குறைவதோடு, நீரிழிவு நோயும் வராது.நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள ஓட்ஸ், ஒரு சிறந்த டயட் உணவு. உணவில் ஓட்ஸ் அதிகம் சேர்த்து உண்பது நல்ல பலனை தரும்.நறுமண பொருளான பூண்டு, உடல் வெப்பத்தை அதிகரிப்பதோடு, உடலில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கொழுப்புகளை கரைக்கும் திறன் கொண்டது.இஞ்சி ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, உடல் வெப்பத்தை அதிகரித்து, உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்துவிடும். எனவே இஞ்சியை, டீயில் சேர்த்து குடிப்பது நல்லது.
    contd..


    kiruthividhya likes this.

  8. #968
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பெர்ரிபழங்களில் ஸ்ட்ராபெர்ரி, ராஸ்ப்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரி போன்றவற்றில் உடலில் சர்க்கரையை மெதுவாக உறிஞ்ச செய்யும் நார்ச்சத்துக்களும், வைட்டமின்களும்உள்ளன. இவற்றை சாப்பிட வைட்டமின் குறைபாடுகள் ஏற்படாமல் இருக்கும்.ஆப்பிளை போன்றுபேரிக்காயிலும் அதிகளவு சக்தியானது நிறைந்துள்ளது. எனவே தொப்பை இருப்பவர்கள்பேரிக்காயை சாப்பிடுவது பலனை தரும்.தினையில் 5 கிராம்கொழுப்புகளை கரைக்கும் நார்ச்சத்தும், 8 கிராம்பசியை கட்டுப்படுத்தும் புரோட்டீனும் உள்ளதால், உடலில்தொப்பையானது விரைவில் கரைந்துவிடும்.

    சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் மெதுவாக செரிமானமடைவதால், நீண்ட நேரம் பசி யெடுக்காமல் இருக்கும்.மேலும் அதில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருப்பதால், நீரிழிவுஉள்ளவர்களும் சாப்பிடலாம்.காரபொருளான மிளகாயில் காப்சை சின் அதிகம் இருப்பதால், அவைஉடலில் உள்ள கலோரியை கரைத்து, சர்க்கரையின் அளவை சீராக வைக்கஉதவுகிறது. மேலும் இது காரமாக இருப்பதால், அதிகப்படியான உணவையும் சாப்பிடவிடாமல் தடுக்கும். -

    kiruthividhya likes this.

  9. #969
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வயிற்றுப்புண்ணை போக்கும் அருமருந்துகளின் பட்டியல்

    அருகம்புல், துளசி, அரசு, கல்யாண முருங்கை, வாழைத்தண்டு, கொத்தமல்லி, கருவேப்பிலை, வில்வம், கற்பூரவல்லி, புதினா, வல்லாரை, தூதுவளை, மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை, செம்பருத்தி, முருங்கை இலை, மணத்தக்காளி, வெந்தயகீரை இவற்றை தினமும் நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது வயிற்று புண்ணுக்கு நல்லது.

    இளநீரை தினமும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அதேபோல் முற்றிய தேங்காய் பருப்புகளை நன்கு காயவைத்து, செக்காடப்பட்டு எதுவும் கலக்காமல் இருக்கும் தேங்காய் எண்ணெயை வயிறு எரிச்சலின் போது குடிக்கலாம். இப்படி குடித்தால் சிறிது நேரத்தில் எரிச்சல் குறைந்துவிடும்.

    அத்துடன் இளநீர் நம் உடலில் சிறு குடலில் உண்டாகும் புழுக்களை அழிக்கிறது. இவற்றில் உள்ள உப்புத்தன்மை மற்றும் வழுவழுப்பு தன்மை குடலில் உள்ள புண்களை குணப்படுத்துகிறது. இவை சிவப்பு ரத்த அணுக்கள் அழியாமல், ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருட்களை அகற்றுகிறது


  10. #970
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இயற்கை அளித்துள்ள கொடை காய்கறிகள்
    காய்கறிகள் என்பது இயற்கை நமக்கு அளித்துள்ள கொடை எனலாம். காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின், கனிம சத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான எண்ணற்ற சத்துகள் உள்ளன. காய்கறிகளை உண்பதால் உடல் எடை அதிகரிக்காது. கலோரி அளவும் குறைவாகவே இருக்கும். பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்திலான காய்கறிகளை நாம் அதிகம் உண்பதால் தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில் தப்பிக்கலாம். இந்த வகை காய்கறிகளில் பீட்டா கரோட்டின், உடலுக்கு வைட்டமின் ஏ சத்தினை அளிக்கக்கூடிய பொருட்கள் உள்ளன. பீட்டா கரோடினானது புற்றுநோய் தடுக்கக்கூடியது. கேரட், இனிப்பு உருளைகிழங்கு, காலிப்ளவர் நூல்கோல் போன்றவை இந்த வகை காய்கறிகளில் அடங்கும்
    contd..


    Last edited by chan; 29th Nov 2014 at 09:22 PM.
    kiruthividhya likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter