Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #981
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள்
    சீதாபழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகள் கொண்டது. சீதாப்பழத்தில் நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார் சத்து, சுண்ணாம்புசத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தைகையை சத்துகள் சீதாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.

    சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.
    contd..



    Sponsored Links
    kiruthividhya likes this.

  2. #982
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும். சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.

    * சீதாப்பழத்தை சாப்பிட்டால் செரிமானம் ஏற்படும்.
    * சீதாப்பழ சதையோடு உப்பை கலந்து முகப்பரு மேல் தடவினால் முகப்பரு பழுத்து உடைந்து மறையும்.
    * இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டால் புண்கள் ஆறும்.
    * விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறு பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி மிருதுவாகும்.
    * சீதாப்பழம் காய்ச்சலை குணப்படுத்தும்
    * சீதாப்பழம் விதைகளை பொடியாக்கி கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வந்தால் முடி உதிராது.
    * சிறுவர்களுக்கு சீதாப்பழம் சாப்பிட்டால் எலும்பு உறுதியாகும்.
    * சீதாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலப்படும்

    kiruthividhya likes this.

  3. #983
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    எதிர்ப்பு சக்தி நிறைந்த முந்திரிபழம்!
    முந்திரி வெப்பமண்டல பகுதிகளில் அதிகளவில் சாகுபடியாகிறது. தமிழகத்தில் அரியலூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகளவு பயிர் செய்யப்படுகிறது.

    ஒரு எக்டேரில் முந்திரி கொட்டையின் விளைச்சல் 500 கிலோவாகும். நம்மிடையே முந்திரி கொட்டைகளை போல முந்திரி பழங்களை பயன்படுத்துவது குறைவு.

    நாட்டில் உற்பத்தியாகும் 500 டன் முந்திரி பழங்களில் 10 சதவிகிதம் கூட பயன்படுத்துவதில்லை.

    ஏனெனில் பழத்தில் உள்ள டானின் எனும் வேதிப்பொருளே காரணம். இதனால் பழம் சாப்பிடும்போது தொண்டையில் கரகரப்பு தன்மை ஏற்படுகிறது. இதனை போக்க பழத்தை நீராவியில் பத்து நிமிடம் வேகவைத்து அல்லது உப்புநீரில் ஊறவைத்து சாப்பிடலாம்.

    மா, பலா, ஆரஞ்சு போன்று அதிக சத்துகள் நிறைந்தது முந்திரிபழம். முக்கியமாக வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட, முந்திரிபழத்தில் ஐந்து மடங்கு அதிகமுள்ளது.

    வைட்டமின் சி மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு நோயை குணமாக்குகின்றது.

    பற்கள், நகங்களை உறுதிப்படுத்துகின்றது. ஸ்கர்வி என்ற வைட்டமின் சி குறைபாடு நோயை குணமாக்குகின்றது. மேலும், கிருமி நாசினியாக செயல்பட்டு தொற்று வியாதிகளை குணமாக்க பயன்படுகின்றது. இவற்றில் புரதம், பீட்டோ கரோட்டின், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.

    kiruthividhya likes this.

  4. #984
    pet
    pet is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    cochin
    Posts
    303

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    usefull information. thanks for sharing

    kiruthividhya likes this.

  5. #985
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பச்சைப்பட்டாணி
    பார்வைக்கு மட்டுமின்றி, சமைக்கவும் சுவைக்கவும் அருமையானது பச்சைப் பட்டாணி. பொரியலோ, கூட்டோ, குருமாவோ, சப்பாத்தியோ, பிரியாணியோ... இன்னும் எதனுடனும் இதமான கூட்டணி அமைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது பட்டாணி. சுமாரான எந்த உணவுடனும், கைப்பிடி அளவு பட்டாணி சேர்க்க, சூப்பர் உணவாக மாறும்!

    ‘‘பச்சைப் பட்டாணி சேர்த்த மட்டன் மின்ஸ் என் கணவரின் விருப்பமான பதார்த்தம்... சப்பாத்திக்கு சரியான மேட்ச் இது...’’ - அனுபவம் கலந்த பட்டாணி புராணம் பற்றிப் பேசுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சுரேந்திரன். பட்டாணியில் உள்ள சத்துகள், சமைக்கும் விதம், தேர்வு செய்வது எனப் பல விஷயங்களுடன் தன் வீட்டு ஸ்பெஷல் பட்டாணி ரெசிபிகளையும் பகிர்ந்து கொள்கிறார் அவர்.

    பட்டாணியை சாலட்டாகவும் சூப்பாகவும், பொரியலில் சேர்த்தும், மட்டன், சிக்கன் ஆகியவற்றுடன் சேர்த்தும், வேக வைத்த முட்டையுடனும் கட்லெட்டில் சேர்த்தும் சாப்பிடலாம்.

    இது உணவுப் பதார்த்தங்களுக்கு நிறம், சுவை, மணம் ஆகியவற்றைக் கொடுக்கிறது. குழந்தைகளுக்கு கேரட்டையும் பட்டாணியையும் மசித்து கொடுக்கலாம். இதில் பலவிதமான சத்துகள் அடங்கியுள்ளன.

    பச்சைப் பட்டாணியில் உடலுக்குத் தேவையான சத்துகளை கொடுக்கக்கூடிய phytonutrients, தாதுச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகியவை அடங்கியுள்ளன. பீன்ஸ், தட்டைப்பயறு ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது பட்டாணியில் கலோரிகள் குறைவு. 100 கிராம் பட்டாணியில் 81 கிலோ கலோரிகள் உள்ளன. கொலஸ்ட்ரால் இல்லை. புரதம் நிறைந்தது. கரையும், கரையாத தன்மையுள்ள நார்ச்சத்து உள்ளது.

    பட்டாணியில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. செல்களுக்கு உள்ளே டி.என்.ஏ. தொகுப்பு இயக்கம் சீராக நடைபெற ஃபோலேட்ஸ் என்கிற பி.காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் அவசியம். ஃபோலேட் அதிகம் உள்ள உணவை கர்ப்பிணிகள் தேவைக்கேற்ப எடுத்துக் கொண்டால், பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்பு மண்டலக் குறைபாடுகள் வராது. பட்டாணியில் நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான வைட்டமின் சி நிறைய உள்ளது.

    பட்டாணியில் உள்ள பைட்டோஸ்டெரால்ஸ் (Phytosterols), உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதில் உள்ள வைட்டமின் கே, எலும்புகளுக்கு தேவையான கால்சியத்தை கொடுக்கிறது. இதில் வைட்டமின் ஏ சரியான விகிதத்தில் அடங்கியிருப்பதால், சளிச் சவ்வுப் படலத்தின் ஆரோக்கியத்துக்கும் சரும ஆரோக்கியத்துக்கும் தெளிவான பார்வைக்கும் உதவுகிறது.

    பான்டோதெனிக் அமிலம், நியாசின், தயாமின் மற்றும் பைரிடாக்சின் ஆகிய பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களையும் கால்சியம், இரும்புச் சத்து, தாமிரச் சத்து, துத்தநாகச் சத்து மற்றும் மாங்கனீஸ் சத்துகளையும் உள்ளடக்கியது பட்டாணி.

    பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்கள், தேன் முதலியவற்றைக் கூட உண்ணாத ‘வீகன்’ உணவுப் பழக்கமுள்ளவர்களின் புரதத் தேவையை ஈடுகட்டுவதில் சிவப்பரிசிக்கும் பச்சைப் பட்டாணிக் கும் பெரிய பங்கு உண்டு. இவற்றின் மூலம் தரமான, போதுமான புரதச் சத்து கிடைக்கும். முளை கட்டிய பட்டாணி இன்னும் சத்தானது. தினமும் சிறிய அளவில் பட்டாணியை நமது உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தரும்.

    kiruthividhya likes this.

  6. #986
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உடம்பு வெயிட்டை நீங்க குறைக்கணுமா? அப்ப இந்தத் தவறுகளை செய்யாதீங்க!!

    'ஒபிசிட்டி' எனப்படும் உடல் பருமன் பிரச்சனை இந்தக் காலத்தில் சர்வ சாதாரணம். ஜங்க் ஃபுட் எனப்படும் கண்ட கண்ட உணவுகளைச் சாப்பிடுவது உள்ளிட்ட பல காரணங்களால் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. இப்படி நன்றாக உடல் எடையை ஏற்றிவிட்டு, பின் அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் ஏராளமோ, ஏராளம்! இவர்களில் பலர், எடையைக் குறைப்பதற்கான எந்தவித முயற்சிகளிலும் ஈடுபடாமல் சோம்பலாக இருந்து விடுவார்கள். எடையும் ஏறிக் கொண்டே இருக்கும். கலோரிகளை எரித்து, உடல் எடையைக் குறைக்கும் 10 அருமையான உணவுகள்!!! மற்றவர்கள் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு என்று முழு ஈடுபாட்டுடன் உடல் எடைக் குறைப்பில் அக்கறை கொண்டிருப்பார்கள். ஆனால், அப்போது ஓவராக உணர்ச்சிவசப்பட்டு செய்யக்கூடாத சில தவறுகளை அவர்களையும் அறியாமல் செய்து விடுவார்கள். இதனால் சில பக்க விளைவுகள் ஏற்பட்டுவிடும்; அல்லது, உடல் எடை மீண்டும் ஏறத் தொடங்கும். எடைக் குறைப்பின் போது நம்மவர்கள் செய்யும் சில தவறுகள் குறித்துப் பார்க்கலாமா? விரைவில் உடல் எடையில் மாற்றம் வேண்டுமா?
    contd..


    kiruthividhya likes this.

  7. #987
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உணவில் தேன் மற்றும் பட்டையை சேத்துக்கோங்க...
    அதிக புரோட்டீன் உடல் எடைக் குறைப்பிற்கு புரதம் எந்த அளவுக்கு உதவுகிறது என்பது நமக்குத் தெரியும். ஆனால் அந்த அளவுக்கு அதிகமாக புரதச்சத்தை ஏற்றிக் கொள்ளும் போது, வேறு சில விளைவுகள் ஏற்பட்டு விடுகிறது. அளவுக்கு அதிகமான புரதம் நம் உடம்பில் கொழுப்பாகத் தான் தேங்கி நிற்கும். எனவே, எடைக் குறைப்பில் ஈடுபடும் போது இதை மனதில் கொள்வது அவசியம்.

    2 குறைவான காலை உணவு எடையைக் குறைப்பதாகக் கூறிக் கொண்டு, காலை உணவை சிலர் குறைத்து விடுவார்கள். இன்னும் சிலர், காலை உணவையே தவிர்த்து விடுவார்கள். இவை இரண்டுமே தவறு. இதனால் உடலின் மெட்டபாலிசம் நன்றாகக் குறைந்துவிடும். ஆகவே காலையில் அதிக அளவில் சாப்பிட வேண்டும்.

    3காய்கறிகளைத் தவிர்த்தல் உடல் எடையைக் குறைக்கவுள்ள சிலர், காய்கறிகளின் பக்கம் தலை வைத்துக் கூடப் படுப்பதில்லை. எடைக் குறைப்பின் போது, காய்கறிகள் தான் நம் உடலில் ஒரு சமநிலையை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. பல காய்கறிகளில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், எடைக் குறைப்பிற்கு அவை பெரிதும் உதவுகின்றன.
    4ப்ளான் மிஸ்ஸிங் எடைக் குறைப்பில் ஈடுபடும் போது, பக்காவான ஒரு ப்ளானைத் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதற்காக என்னென்ன செய்கிறோம், என்னென்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்கிறோம், குறிப்பிட்ட இடைவெளியில் எவ்வளவு எடை குறைந்தது என்பது உள்ளிட்ட பல
    விஷயங்களையும் தினமும் ஒரு டைரியில் குறித்து வைத்துக் கொள்வது நலம்.

    5சரியாகத் தூங்குவதில்லை ஒவ்வொரு மனிதனும் சாதாரணமாக ஒரு நாளுக்குக் குறைந்தது ஆறு மணிநேரம் தூங்கியே ஆக வேண்டும். தலை முதல் காலை வரை அனைத்து உறுப்புகளுக்கும் இந்த ஆறு மணிநேர ஓய்வு என்பது அவசியம். இதைச் சரியாகக் கடைப்பிடிக்கவில்லை என்றால், உடல் எடைக் குறைப்பிற்கான பல விஷயங்கள் அடிபடும்.
    contd..


    kiruthividhya likes this.

  8. #988
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    6 போதுமான நேரம் ஒதுக்காதது உடல் எடையைக் குறைப்பது என்பது ஓரிரு நாட்களிலோ வாரங்களிலோ நிச்சயம் சாத்தியமில்லை. நம் முயற்சிகளைக் கைவிட்டு விடாமல் பல மாதங்களுக்கு இதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டியது அவசியம்.
    7 அரைத்த மாவையே அரைத்தல் எடைக் குறைப்பிற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, தினமும் ஒரே விதமான விஷயங்களையே செய்தால் உங்கள் எடையும் அப்படியே தான் இருக்கும். இதில் முன்னேற்றம் ஏற்பட ஏற்பட, புதிய விஷயங்களில் ஈடுபட வேண்டும்.

    8 பயிற்சிகளை அசட்டை செய்தல் உடல் எடை குறைவதற்கான பயிற்சிகளைத் தினமும் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் தான் சரியான ரிசல்ட் கிடைக்கும்; விரைவிலேயே கிடைக்கும்

    9 நீர் சரியாகக் குடிப்பதில்லை எடைக் குறைப்பின் போது, உடலுக்குத் தேவையான அளவு நீரைக் குடிக்காமலிருந்தால், உடலின் நீர்ச்சத்து குறைவதோடு மெட்டபாலிசத்தின் அளவுகளும் மோசமாகப் பாதிப்படையும். குறைந்தது மூன்று லிட்டர் நீர் குடிப்பது உடல் எடையைக் குறைக்க மிகவும் உதவும்

    kiruthividhya likes this.

  9. #989
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வாயு ஏற்படுவது ஏன்?
    வாயுப் பிரச்சினை. இது மூக்கைப் பிடித்துக்கொள்ள வேண்டிய பிரச்சினைதான். என்றாலும் எல்லோரும் அறிய வேண்டிய முக்கியமான பிரச்சினை ‘நாகரிக உணவுப் பழக்கம்’என்ற பெயரில் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளையும் எப்போது சாப்பிட ஆரம்பித்தோமோ, அப்போதிலிருந்து பலரையும் வருத்தி எடுக்கும் பிரச்சினையாக இது உருமாறிவிட்டது.
    வாயுத் தொல்லை எது?
    அஜீரணம், அடிக்கடி ஏப்பம் வருதல், வாயு பிரிதல், வயிற்று இரைச்சல், வயிற்று உப்புசம் ஆகிய அறிகுறிகளுடன் காணப்படும் உணவுப்பாதைப் பிரச்சினையை அலோபதி மருத்துவம் ‘வாயுத் தொல்லை’(Flatulence) என்கிறது. ஆனால், பொதுமக்கள் வாயுக்குத் துளியும் தொடர்பில்லாத நெஞ்சுவலி, முதுகுவலி, முழங்கால் மூட்டுவலி, விலாவலி, இடுப்புவலி, தோள்பட்டை வலி என்று உடலில் உண்டாகும் பலதரப்பட்ட வலிகளுக்கும் வாயுதான் காரணம் என்று முடிவு செய்துகொள்கிறார்கள்.
    நம் உடற்கூறு அமைப்பின்படி, சுவாசப் பாதை, உணவுப் பாதை இந்த இரண்டு இடங்களில் மட்டுமே வாயு இருக்க முடியும். பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் தலை முதல் பாதம்வரை வாயு சுற்றிக்கொண்டி ருப்பதில்லை. அப்படிச் சுற்றினால், அது உயிருக்கே ஆபத்து.
    வாயு எப்படி வருகிறது?
    நாம் அவசர அவசரமாகச் சாப்பிடும்போது, பேசிக்கொண்டே சாப்பிடும்போது, காபி, டீ மற்றும் புட்டிப் பானங்களை உறிஞ்சிக் குடிக்கும்போது நம்மை அறியாமலேயே காற்றையும் விழுங்கிவிடுகிறோம். இந்தக் காற்றில் 80 சதவீதம் இரைப்பையிலிருந்து ஏப்பமாக வெளியேறிவிடுகிறது. மீதி குடலுக்குச் சென்று ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது.
    அடுத்ததாக, குடலில் உணவு செரிக்கும்போது அங்கு இயல்பாகவே இருக்கும் தோழமை பாக்டீரியாக்கள் நொதித்தல் எனும் செயல்முறை மூலம் பல வேதிமாற்றங்களை நிகழ்த்துவதால், ஹைட்ரஜன், கார்பன்-டை-ஆக்சைடு, நைட்ரஜன், ஆக்சிஜன், மீத்தேன் எனப் பலதரப்பட்ட வாயுக்கள் உற்பத்தியாகின்றன. சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். தினமும் சுமார் 2 லிட்டர்வரை வாயு உற்பத்தியாகிறது. இது அப்படியே வெளியேறினால் சுற்றுச்சூழல் கெட்டுவிடும். எனவே, இது பெரும்பாலும் ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப் பாதை வழியாக வெளியேறுகிறது. சாதாரணமாக நம் குடலில் 200 மி.லி. வாயுதான் இருக்கக்கூடும். இது வெளியேறுவது உடலுக்கு நன்மை தரும் விஷயம்தான். ஆனால், கெட்ட வாடை கொண்ட வாயு வெளியேறினால், உடலுக்குள் கோளாறு இருப்பதாகவே அர்த்தம்.
    contd..


    kiruthividhya likes this.

  10. #990
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கெட்ட வாடை ஏன்?
    சாதாரணமாக மேலே சொன்ன வாயுக்கள் உருவாகும்போது துர்நாற்றம் இருக்காது. ஆனால், குடலில் சில என்சைம்கள் பற்றாக்குறை ஏற்படும்போது, புரத உணவு சரியாகச் செரிக்கப்படுவதில்லை. அப்போது அமோனியா, ஹைட்ரஜன் சல்ஃபைடு, மெர்காப்டான் போன்ற வாயுக்கள் உற்பத்தியாகி ஆசனவாய் வழியாக வெளியேறும். அப்போதுதான் அக்கம் பக்கம் இருப்பவர்கள் மூக்கைப் பிடிக்கும் நிலை உருவாகிறது.
    சத்தம் ஏன் கேட்கிறது?
    பலருக்குச் சத்தமில்லாமல் வாயு வெளியேறுகிறது. சிலருக்குச் சத்தத்துடன் அது வெளியேறுகிறது. காரணம் என்ன? பொதுவாக ஹைட்ரஜனும் மீத்தேனும் சரியான அளவில் ஆக்சிஜனுடன் கலந்தால் ‘புஸ்வாணம் சத்தம்’ மட்டுமே கேட்கும். இந்தக் கலவை அதிகமாகிவிட்டால் ‘அணுகுண்டு வெடியைப் போன்ற சத்தம்’கூடக் கேட்கலாம்.
    வாயு அதிகமாகப் பிரிவது ஏன்?
    நாளொன்றுக்குச் சராசரியாக 15 முறை வாயு வெளியேறினால் கவலைப்பட தேவையில்லை. இதற்கு மேல் அளவு அதிகரித்தாலோ வயிற்றில் வலி, கடுமையான இரைச்சல், உப்புசம், புளித்த ஏப்பம் போன்றவை சேர்ந்துகொண்டாலோ என்ன காரணம் என்று யோசிக்க வேண்டும். பொதுவாக, புரதம் மிகுந்த மொச்சை போன்ற உணவு வகைகளையும் ஸ்டார்ச் நிறைந்த கிழங்குகளையும் அதிகமாகச் சாப்பிடுவதுதான் இதற்குப் முதன்மைக் காரணம்.
    அடுத்து மலச்சிக்கல், குடல்புழுக்கள், அமீபியாசிஸ், பித்தப்பைக் கற்கள் போன்றவையும் வாயு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். குடல் காசநோய், புற்றுநோய், கணைய நோய், கல்லீரல் நோய், குடலடைப்பு, குடல் எரிச்சல் நோய் (Irritable Bowel Syndrome) போன்றவற்றால் குடலியக்கம் தடைபடும்போது வாயு அதிகமாகலாம். பேதி மாத்திரைகள், ஆஸ்துமா மாத்திரைகள், ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் போன்றவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும்போதும் வாயுத் தொல்லை அதிகரிப்பது வழக்கம்.
    contd..



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter