Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree20Likes

தண்ணீர் - Health Benefits of Water


Discussions on "தண்ணீர் - Health Benefits of Water" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #21
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    re: தண்ணீர் - Health Benefits of Water

    சருமப் பொலிவு:

    தண்ணீர் தெரபி எடுக்கும் போது, வெதுவெதுப்பான தண்ணீரைப் பயன்படுத்தினால், இறுதியில் குளிர்ந்த நீரை ஒரு முறை பயன்படுத்த வேண்டும். ஏனெனில் வெதுவெதுப்பான தண்ணீர் சருமத்துளைகளை திறக்கவும், குளிர்ந்த நீர் திறந்த சருமத்துளைகளை மூடவும் உதிவியாக இருக்கும். இதனால் தேவையற்ற மாசுக்கள் சருமத் துளைகளில் தங்குவதை தவிர்த்து, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளலாம்.


    இளமையை தக்க வைக்க தண்ணீர் ஒரு சிறந்த மருந்து. ஏனெனில் இது சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை சீராக பராமரித்து, சுருக்கம், சரும வறட்சி போன்றவற்றை தடுத்து, எப்போதும் இளமையான தோற்றத்தை தக்க வைக்கும். தண்ணீர் அதிகம் குடித்தால், சாப்பிடும் அளவு குறைந்து, செரிமான மண்டலம் சீராக இயங்கி, உடல் எடை குறைவிற்கு பெரிதும் துணையாக உள்ளது.



    Sponsored Links

  2. #22
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    re: தண்ணீர் - Health Benefits of Water

    சரும தொற்றுகள்:


    ஷவரில் குளிக்கும் போது, சருமத்தில் தங்கியிருக்கும் நோய்த்தொற்றுகள் நீக்கப்படுவதோடு, சருமத்துளைகளில் தங்கியுள்ள நச்சுக்களும் வெளியேற்றப்பட்டு, உடலை நன்கு புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்கிறது. தண்ணீரை தினமும் போதுமான அளவில் பருகினால், உடலின் வெப்பநிலையானது சீராக பராமரிக்கப்பட்டு, உடலை மற்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும்.

    குடிக்கும் நீரின் அளவை அதிகரித்தால், உடல் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம். எப்படியெனில் தண்ணீர் அதிகம் குடித்தால், உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர் வாயிலாக வெளியேறுவதால், அளவுக்கு அதிகமாக வியர்வை வெளியேறுவதைத் தவிர்க்கலாம். தண்ணீரை அதிகமாக குடித்து நம்மை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வோம்.



  3. #23
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    re: தண்ணீர் - Health Benefits of Water

    ப்ரீட்ஜ் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்?

    அப்படியென்றால் இது உங்களுக்குத்தான். சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும்.

    திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு (கிநீவீபீ )வினைபுரியும். இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சபடும். இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்ல




  4. #24
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: தண்ணீர் - Health Benefits of Water

    கோடையில் அதிக தண்ணீர் பருகுங்கள்

    கோடை காலத்தில் பெரியவர்கள் நாள்தோறும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என டாக்டர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

    கோடை காலத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனை வருக்கும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படவாய்ப்புள்ளது. இந்த சூழலில் ஏற்படும் அதிக வெப்பம், குழந்தைகளை பாதித்து உடலில் பலவித மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதேபோல் வயதானவர்களுக்கு உடலில் நீர்சத்து குறைந்து, மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.


    மேலும் உடலில் அதிகரிக்கும் வெப்பத்தால் நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது




  5. #25
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: தண்ணீர் - Health Benefits of Water

    இவற்றை தவிர்க்க டாக்டர்கள் கூறிய ஆலோசனை வருமாறு:

    கோடை காலத் தில் சுற்றுப்புற வெக்கை அதிகமாக இருப்பதால் பல பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க பெரியவர்கள் தினமும் 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    இளநீர், மோர், பழச்சாறு போன்றவை களை பருக வேண்டும். குழந்தைகள் தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.

    பிரட், பரோட்டா, ஃபாஸ்ட் புட் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.


    இவ்வகை உணவுகள் நமது உடலில் அதிகளவு தண்ணீர் சத்தை எடுத்துக்கொள்ளும் தன்மை கொண்டது.

    உடலில் வெப்பம் அதிகமாகும் போது, இதயத்துக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கும்.

    சுத்தமான தண்ணீரை பருக வேண்டும். வாந்தி பேதி, டயரியா வந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.

    சிறுநீர் மஞ்சள் நிறத்தில் சென்றால், உடலில் நீச்சத்து குறைந்து விட்டது என அறிந்துகொள் ளலாம். இதனை தவிர்க்க போதிய அளவு சுத்தமான தண்ணீர் பருகவேண்டும்.



  6. #26
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: தண்ணீர் - Health Benefits of Water

    சார்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் தண்ணீர் அளவு குறையும்போது, சர்க்கரை அளவு குறைந்து மயக்கம் ஏற்படும். இவர்கள் கையில் எப்பொழுதும் குளுக்கோஸ் கலந்த தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும்.

    கர்ப் பிணி பெண்களுக்கு உட லில் தண்ணீர் சத்து குறைய அதிக வாய்ப்புள்ளது. எனவே, மருத்துவரை அணுகி, உட லில் போதிய அளவு தண் ணீர் சத்து உள்ளதா என பரிசோதிக்க வேண்டும். இல்லையெனில் வயிற்றில் உள்ள குழந்தை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க பழச்சாறு, தண்ணீர் அதிகமாக பருகவேண்டும்.



  7. #27
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: தண்ணீர் - Health Benefits of Water

    எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும். தண் ணீர் சத்து குறைந்தால், குழந்தை அக்கி குடிக்க வாய்ப்புள்ளது.

    பொதுவாக கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் கடுமையான வெயில் நேரத் தில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

    குழந்தைகளை வெயி லில் அலையவிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி, அம்மை, தோல் கொப்பளம் உட்பட பலவித நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.


    குழந்தைகளுக்கு நீர்ச்சத்துள்ள ஆகாரத்தை அதிகளவில் தரவேண்டும்.

    தினமும் 3 லிட்டர் தண்ணீர் தரவேண்டும். சுகாதாரமாக இருக்க வேண்டும்.

    சுத்தமில்லாமல் தயார் செய்யப்படும் உணவு வகைகளை வாங்கி தரக்கூடாது.

    குழந்தைகளை தினமும் இருமுறை குளிக்க வைக்கலாம். பருத்தி ஆடைகளை அணிவிக்கலாம். இளநீர், பாழரசங்கள், உப்பு கலந்த எலுமிச்சை பழச் சாறு, தர்பூசணி தரலாம்.



  8. #28
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: தண்ணீர் - Health Benefits of Water

    வெயிலுக்கு இதமா மண்பானை தண்ணீர் குடிக்கலாமே

    இந்த வெயிலில் இருந்து தப்பிக்க குளிர்பானம், ஜூஸ், பழங்கள், நுங்கு, பதனீர், தர்பூசணி, வெள்ளரின்னு குளிர்ச்சியானத சாப்பிட்டுகிட்டுதான் இருக்கோம். என்னதான் சாப்பிட்டாலும், குடிச்சாலும் இந்த வெயிலுக்கு தண்ணீர்தான் அதிகமா குடிக்க வேண்டியிருக்கு.



    இந்த நேரத்தில தண்ணீர் குடிக்கிறதும் உடலுக்கு ரொம்ப நல்லது. வெயில் காலத்துல தண்ணீர ஜில்லுன்னு குடிக்கணும்தான் ஆசப்படுவோம். அதனால பிரிட்ஜ்ல வைச்சிருக்கிற தண்ணீர், ஜில்லுன்னு வாட்டர் பாக்கெட் போன்றவற்ற குடிக்கிறோம். இது அவ்வளவு நல்லது கிடையாது. பிரிட்ஜ்ல வைச்சிருக்கிற அதிக ஜில் தண்ணிய குடிக்கிறதால ஜலதோஷம் பிடிக்கவும், தலைவலி வரவும் வாய்ப்பிருக்கு.

    இதை தவிர்க்க இயற்கையா ஜில்லுன்னு இருக்கும் மண்பானை தண்ணீரை குடிக்கலாம். மண்பானை தண்ணீர் மிதமான குளிர்ச்சியுடனும், சுவையாகவும் இருக்கும். உடலுக்கும் நன்மை தரக்கூடியது. பல இடங்கள்ல குழாய் பொருத்திய மண்பானைகள் விற்கப்படுகின்றன. இந்த மண்பானைகளை வாங்கி நாமும் பயன்பெறலாமே.




  9. #29
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: தண்ணீர் - Health Benefits of Water

    பாதுகாப்பு - தண்ணீர்

    சமீப காலமாக ஆர்.ஓ. ட்ரீட்டட் தண்ணீர் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆர்.ஓ. ட்ரீட் செய்யப்பட்ட தண்ணீர் என்றால் சுவையும் கூடுதலாக இருக்குமாமே... தண்ணீரை ஆர்.ஓ. ட்ரீட் செய்து குடிக்க வேண்டிய அவசியம் என்ன?

    பேராசிரியர் அப்துல் ரஹ்மான்

    ஆர்.ஓ. என்பதன் பொருள் ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ். ஆர்.ஓ. ட்ரீட்டட் செய்யப்பட்ட தண்ணீரில் உப்புச்சுவை இருக்காது. இந்த முறையில் தண்ணீரில் இருந்து உப்பு பிரிக்கப்பட்ட பிறகு கிடைக்கிற ரிஜக்டட் தண்ணீரையே நாம் உபயோகிக்கிறோம். தண்ணீரில் டிடிஎஸ் எனப்படுகிற டோட்டல் டிசால்வ்டு சால்ட் அளவானது 2,100 இருக்க வேண்டும் என்பது மாசு கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிடுகிற அளவு. சில தண்ணீரில் இது கூடவோ குறைவாகவோ இருக்கும். ஆர்.ஓ. ட்ரீட் செய்யப்பட்ட தண்ணீரிலோ உப்புச் சத்து அறவே இருக்காது.



  10. #30
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: தண்ணீர் - Health Benefits of Water

    நம் உடலில் உள்ள உப்பானது வியர்வை மற்றும் சிறுநீரின் வழியே வெளியேறும். அதை ஈடுகட்ட சாதாரண தண்ணீரை குடிக்க வேண்டும். ஆர்.ஓ. ட்ரீட்டட் செய்யப்பட்ட தண்ணீரையே குடிப்பதால் இந்த உப்பு இழப்பு ஈடுகட்டப்படாது. உடலுக்கு தேவையான உப்புச்சத்து இல்லாவிட்டால் களைப்பாக உணர்வோம். சாதாரண தண்ணீரில் ஓரளவு கால்சி யம் சத்தும் இருக்கிறது. ஆர்.ஓ. ட்ரீட்டட் தண்ணீரில் இந்த கால்சியமும் நீக்கப்படும். கால்சியம் என்பது மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமானது.

    வயதானவர்களும் பெண்களும் தொடர்ந்து ஆர்.ஓ. ட்ரீட்டட் தண்ணீரை குடிப்பதால் கால்சியம் பற்றாக்குறைக்கு ஆளாகிறார்கள். அவர்களது எலும்பு ஸ்பாஞ்ச் போல மிருதுவாகும். லேசாக அடிபட்டால் கூட எலும்புகள் நொறுங்கிப் போகலாம். ஒரு சில மினரல் வாட்டரை பருகும்போது லேசான இனிப்புச் சுவையுடன் இளநீர் போல இருப்பதை உணரலாம். அவர்கள் அதில் சேர்க்கிற ஒருவிதமான கெமிக்கலே அதற்கு காரணம். கொதிக்க வைத்து வடிகட்டிய தண்ணீரே ஆரோக்கியமானது. ஆர்.ஓ. ட்ரீட்டட் தண்ணீர் அனாவசியமானது.



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter