Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree20Likes

தண்ணீர் - Health Benefits of Water


Discussions on "தண்ணீர் - Health Benefits of Water" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #31
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: தண்ணீர் - Health Benefits of Water

    அல்சரை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்


    குடற்புண் (Peptic ulcer) அல்லது வயிற்றுப்புண் என்பது இரைப்பை உணவுக்குழாய் பாதையில் ஏற்படும் சீழ்ப்புண் ஆகும். இது பொதுவாக அமிலத்தன்மையுடையது. மிக அதிக வலிவுடையதாக இருக்கும். வயிற்றின் அமிலச்சூழலில் வாழும் ஒரு சுருள் வளைய வடிவிலான நுண்கிருமியாகும். வயிற்றில் உணவை ஜீரணிக்க ஹைட்ரோ குளோரிக் அமிலம் உள்ளது. இந்த அமிலம் அதிகம் சுரப்பதால் இரைப்பை மற்றும் சிறுகுடல்கள் சுவர்களில் உள்ள மியூக்கோஸா படலம் சிதைத்து குடற்புண் உண்டாக்குகிறது. சாலிசிலேட் மருந்து, ஆஸ்பிரின் முதலான வலி நிவாரணி மருந்து, காயம் மற்றும் மூட்டு வலிகளுக்கு சாப்பிடும் மருந்து போன்றவற்றால் அல்சர் ஏற்பபடலாம் .



    Sponsored Links
    Last edited by saidevi; 19th Oct 2014 at 04:23 PM.

  2. #32
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: தண்ணீர் - Health Benefits of Water

    வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!


    என்றென்றும் இளமையாக இருக்க தண்ணீரை அதிகளவில் உட்கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என பெரியவர்கள் முதல் மருத்துவர்கள் வரை சொல்லக்கேட்டிருப்போம். ஆனால் மிதமான நீரை பருகுவதை விட வெந்நீரை குடிப்பதால் அதிகளவில் நன்மைகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரியுமா என்பதே சந்தேகம் தான். தினமும் வெந்நீரை காலையில் அருந்துவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது என கூறுகின்றனர்.

    உடலை சுத்தம் செய்யும் இந்த வெந்நீர் வேகமாக வயதாவதையும் குறைத்து இளமையை தக்க வைத்து கொள்ள உதவும். கடும் குளிர்காலத்தில் ஏற்படும் மூக்கடைப்பு தொண்டைகட்டிற்கு வெந்நீரை குடிப்பது நலம் தரும். வெந்நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கொண்டால் இன்னும் சிறந்தது. டீன் ஏஜ் பெண்கள் மற்றும் ஆண்களை தொல்லை செய்யும் முகப்பருக்களும் வெந்நீர் பருகுவதால் சுத்தமாக அகன்றுவிடும்.


    Last edited by saidevi; 19th Oct 2014 at 04:24 PM.

  3. #33
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: தண்ணீர் - Health Benefits of Water

    அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன் முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி நல்ல வளர்ச்சி அடையும். வெந்நீரால் இரத்த ஓட்டம் சீராவது மட்டுமின்றி நரம்பு மண்டலத்தின் ஒரத்தில் உள்ள கொழுப்புகளும் குறைந்துவிடும்.

    மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிபடுவார்கள். அந்த சமயத்தில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால் மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும். உடற்பயிற்சி மையத்திற்கு சென்று போராடாமல் எளிதில் உடல் எடையை குறைக்க சிறந்த வழி வெந்நீர் குடிப்பது தான்.

    மதியநேர சாப்பாட்டிற்கு பின் சிறிது வெந்நீர் பருகினால் இதயத்தில் சேரக்கூடிய தேவையற்ற கொழுப்புக்களை அகற்றிவிடும் ஆற்றல் கொண்டது. காலை வேளையில் மலம் எளிதில் வரவில்லையா ஒரு தம்ளர் வெந்நீர் குடித்தால் எல்லாம் சரியாகிவிடும்.


    Last edited by saidevi; 19th Oct 2014 at 04:25 PM.

  4. #34
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: தண்ணீர் - Health Benefits of Water

    வெந்நீரிலும் இருக்கிறது பயன்கள்

    தண்ணீர் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது என்று நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் சுடு தண்ணீரிலும் பயன்கள் இருப்பது உங்களுக்கு தெரியுமா?

    யாருக்காவது சமையல் சுத்தமாக தெரியாவிட்டால், அவர்களை நாம் கேலி செய்திருப்போம். ‘‘அவளுக்கு நல்லா வெந்நீர் போட வரும்...’’ என்று. உண்மையில் நாம் வெந்நீரின் மகிமை தெரியாமல்தான் அப்படி கேலி செய்திருக்கிறோம். வெந்நீரால் எத்தனை பலன்கள் என்று இப்போது பார்க்கலாம்.... !

    அளவுக்கு அதிகமான உணவோ அல்லது ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருந்தால் ஒரு டம்ளர் வெந்நீரை எடுத்து பருகுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போய்விடும், உணவும் செரித்துவிடும். காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறவர்கள் ஒரு தம்ளர் வெந்நீரை உடனே குடியுங்கள். மலப்பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வையுங்கள்.


    Last edited by saidevi; 19th Oct 2014 at 04:18 PM.

  5. #35
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: தண்ணீர் - Health Benefits of Water

    வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருக்கிறது.

    சாப்பிட்டு முடித்ததும் சுடுதண்ணீர் பருகினால் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் கொழுப்புகளை சேரவிடாமல் கரைத்துவிடும் சக்தி வெந்நீருக்கு உள்ளது.

    வீட்டில் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் நீங்கி, உங்கள் கைகள் சுத்தமானதாக, ஆரோக்கியமாக இருக்கும்.


    Last edited by saidevi; 19th Oct 2014 at 04:19 PM.

  6. #36
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: தண்ணீர் - Health Benefits of Water

    உடம்பு வலிக்கிற மாதிரி இருந்தால் நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு சூடாக அருந்துங்கள் நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்..

    மேலும் சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும்.


    வெளியில் சென்று அலைந்துவிட்டு வந்தால் கால் பாதங்கல் வலிக்கும். அவ்வாறு வலிக்கும் போது பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள் கால் வலி குறையும்..

    காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், பாதமும் சுத்தமாகிவிடும்.


    Last edited by saidevi; 19th Oct 2014 at 04:20 PM.

  7. #37
    Suasin is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Kuwait
    Posts
    52

    Re: தண்ணீர் - Health Benefits of Water

    Very informative..

    saidevi likes this.

  8. #38
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: தண்ணீர் - Health Benefits of Water

    மூக்கு அடைப்புக்கு சிறந்த மருத்துவர் வெந்நீர்தான். வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு குணமாகும்.

    வெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி.


    ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள். அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு விரைவில் குணமாகும்..



  9. #39
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: தண்ணீர் - Health Benefits of Water

    தண்ணீரின் பயன் அறிவோம்

    நீரின்றி அமையாது உலகு!
    மனிதனோ, மரமோ...
    புல்லோ, புழுவோ...


    எந்த உயிருக்கும் தண்ணீரே ஆதாரம். உணவு, உறக்கம் இல்லாமல்கூட ஒருவரால் உயிர் வாழ்ந்து விட முடியும். தண்ணீர் இல்லாமல் எதுவுமே சாத்திய மில்லை. மனித வாழ்க்கை சீராக இயங்க இன்றியமையாத திரவம் தண்ணீர். ஒரு நாளைக்கு ஒருவருக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் அவசியம். 1 கிராம் உணவு செரிக்க, 5 மி.லி. தண்ணீர் தேவை. தோராயமாக ஒரு நாளைக்கு 500 கிராம் உணவு எடுத்துக் கொள்கிறோம் என வைத்துக் கொண்டால், 500 ஙீ 5 மி.லி, அதாவது, 2,500 மி.லி. தண்ணீர் தேவையில்லையா? இது உணவு செரிமானத்துக்கு மட்டுமே. மற்றபடி வேலை, வியர்வை போன்றவற்றையும் சேர்த்துக் கணக்கிட்டால், குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அவசியமாகிறது.



  10. #40
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: தண்ணீர் - Health Benefits of Water

    தண்ணீரால் என்ன நன்மைகள்?

    நிறைய தண்ணீர் குடிப்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். அவர்களுக்கு பருமன் வராது.

    குறிப்பாக காலையில் எழுந்ததும் 2 டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் குடித்தால், உள் உறுப்புகள் சுத்தமாகும்.

    வளர்சிதை மாற்றச் செயல்பாடு மேம்படும். உடலின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யாமல், குளிர்ச்சியாக வைத்திருக்கவும் தண்ணீர் உதவுகிறது. அதிலும் வெயில் காலத்தில், உடல் வெப்பநிலை எகிறாமலிருக்க, தண்ணீர் அவசியம் என்பதால்தான் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

    நமது உடலில் 60 சதவிகிதம் தண்ணீர் இருக்கும். அந்த அளவு எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம். குறையவும் செய்யலாம்.

    அதிகமாவதை நீர்கோர்ப்பு (வாட்டர் ரிட்டென்ஷன்) என்றும், குறைவதை

    உடலில் நீரற்ற வறட்சி நிலை (டீஹைட்ரேஷன்) என்றும் சொல்கிறோம்.



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter