Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree20Likes

தண்ணீர் - Health Benefits of Water


Discussions on "தண்ணீர் - Health Benefits of Water" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #41
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: தண்ணீர் - Health Benefits of Water

    நீர்கோர்ப்புக்கான காரணங்கள்...

    உணவில் உப்பு அதிகம் சேர்த்துக் கொள்வது, மசாலா அதிகமுள்ள உணவு, அரிசி போன்ற எளிதில் ஜீரணமாகும் கார்போஹைட்ரேட் உணவுகளை உண்பது, பருமன், நீண்ட நேரம் நின்றபடியோ, நடந்து கொண்டோ, உடலை வருத்தி வேலை பார்ப்பது, ஒரே நிலையில் உட்கார்வது, கர்ப்பம்... சிலருக்குத் தூங்கி எழுந்ததும், முகமெல்லாம் வீங்கினாற்போல இருக்கும். களைப்பாகவே உணர்வார்கள். இதெல்லாம் உடலில் தண்ணீர் கோர்த்துக் கொள்ளும் பிரச்னைக்கான அறிகுறிகள்.

    சிறு நீரகக் கோளாறு உள்ளவர்கள், பருமனானவர்கள், ஹைப்பர் டென்ஷன் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த அறிகுறி இருந்தால், அது அவர்களது நோயின் விளைவாக இருக்கலாம். மருத்துவரைக் கலந்தாலோசித்த பிறகே எதையும் செய்ய வேண்டும். மற்றபடி நல்ல ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ளவர்கள் இப்படி உணர்ந்தால், அவர்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். அரிசி உணவைக் குறைத்து, கோதுமை, கேழ்வரகு, ஓட்ஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். கீரை மாதிரியான நார்ச்சத்துமிக்க உணவுகள் அவசியம். உப்பின் அளவை உடனடியாகக் குறைத்தாக வேண்டும்.



    Sponsored Links
    sumitra likes this.

  2. #42
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: தண்ணீர் - Health Benefits of Water

    தண்ணீர் கோர்த்துக் கொள்வது எத்தனை ஆபத்தானதோ, அதே மாதிரிதான் நீரற்ற வறட்சி நிலையும். 10 நபர்களில் ஒருவருக்கு இப்பிரச்னை வருகிறது. மயக்கம், தலைசுற்றல், களைப்பு, தலைவலி போன்றவை இதன் அறிகுறிகள். சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடலில் தண்ணீர் வற்றும்போது தீராத தலைவலி வரும். உடலுக்குத் தேவையான தண்ணீர் சேர்ந்த பிறகுதான், அந்தத் தலைவலி நீங்கும். அதிக வெயில் மற்றும் வயிற்றுப் போக்கு ஆகிய இரு விஷயங்களினால்தான் பெரும்பாலும் உடலில் தண்ணீர் வற்றும்.

    நாக்கு வறண்டு போவது, உதடுகள் வெடிப்பது, இதயத்துடிப்பு அதிகமாவது, சிறுநீர் அடர்த்தியாக வெளியேறுவது போன்றவையும் இதன் விளைவுகளே... நம்மில் பலரும் செய்கிற தவறு என்ன தெரியுமா? தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடிப்பது. அப்படியில்லாமல், அடிக்கடி தண்ணீர் குடிக்கப் பழக வேண்டியது அவசியம். புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு டீஹைட்ரேஷன் பிரச்னை ரொம்ப சுலபமாக வரலாம். அதன் அடுத்த விளைவாக நுரையீரல் புற்றுநோய் தாக்கலாம். புகையை நிறுத்துவதும், அதிக தண்ணீர் குடிப்பதும்தான் தீர்வு.


    sumitra likes this.

  3. #43
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: தண்ணீர் - Health Benefits of Water

    தினம் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியமானாலும், எல்லோராலும் வெறும் தண்ணீரைக் குடிக்க முடியாது. சிலருக்கு தண்ணீர் குடிப்பதென்றாலே வாந்தி வரும். என்ன செய்ய? ஒரு லிட்டர் தண்ணீரில் கால் மூடி எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அவ்வப்போது குடிக்கலாம். 100 மி.லி கொழுப்பு நீக்கப்பட்ட தயிரில் 1 லிட்டர் தண்ணீர் விட்டு, நீர் மோராக்கி, அடிக்கடி சிறிது சிறிதாகக் குடிக்கலாம்.

    சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்து, ஆற வைத்த தண்ணீரைக் குடிக்கலாம். சுவையாகவும் இருக்கும். செரிமானத்துக்கும் நல்லது. உடல் வறட்சியைப் போக்க இளநீரைப் போன்ற மகத்தான திரவம் வேறில்லை. வெயிலின் கடுமையை விரட்ட, குளிர் பானங்களைக் குடிப்பதைத் தவிர்த்து இளநீர் குடிப்பதே சிறந்தது.


    sumitra likes this.

  4. #44
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: தண்ணீர் - Health Benefits of Water

    இத்தனை மகிமை வாய்ந்த தண்ணீரில் ஏதேனும் சத்துகள் இருக்கிறதா எனப் பார்த்தால் இல்லை. ஆனால், தண்ணீர் அதிகமுள்ள காய்கறி, பழங்களுக்குப் பஞ்சமே இல்லை. அவற்றைச் சாப்பிடுவதன் மூலம் தண்ணீர் தேவையும் பூர்த்தியாகும். காய்கறி, பழங்களில் உள்ள சத்துகளும் உடலுக்குப் போகும். பூசணிக்காய், சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளிலும், தர்பூசணி, கிர்ணி, பேரிக்காய் போன்ற பழங்களிலும் தண்ணீர் அதிகம். ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்றவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம், வறட்சியும் போகும். வைட்டமின் சி சத்தும் சேரும்.

    sumitra likes this.

  5. #45
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: தண்ணீர் - Health Benefits of Water

    பள்ளிக்கூடம் செல்கிற குழந்தைகள், பள்ளிக் கழிவறையின் சுகாதாரமற்ற சூழலுக்குப் பயந்து, சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்க, தண்ணீரே குடிக்க மாட்டார்கள். இது மிகவும் தவறு. தண்ணீரே குடிக்காமலும், சிறுநீரை அடக்கியும் பழகினால், மிக இளம் வயதிலேயே யூரினரி இன்ஃபெக்ஷன் வரும். சிறுநீர் கழிக்கும்போது வலி, கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீர் வெளியேறுவது, அடர்த்தியாக, அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுவது போன்றவை இன்ஃபெக்ஷனுக்கான அறிகுறிகள். அந்த அளவுக்குப் போக விடாமல், முன்கூட்டியே அடிக்கடி தண்ணீர் குடிக்கப் பழக்குவது ஆரோக்கியமானது.
    Dinakaran


    Last edited by saidevi; 19th Oct 2014 at 04:38 PM.
    sumitra likes this.

  6. #46
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: தண்ணீர் - Health Benefits of Water

    Quote Originally Posted by Suasin View Post
    Very informative..
    Thank U & Welcome Friend.


  7. #47
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: தண்ணீர் - Health Benefits of Water

    Really wonderful information! thank you!

    saidevi likes this.

  8. #48
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: தண்ணீர் - Health Benefits of Water

    Quote Originally Posted by sumitra View Post
    Really wonderful information! thank you!
    Thank U and welcome friend....


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter