Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree20Likes

Foods for being healthy


Discussions on "Foods for being healthy" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    raji rajagopal is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2015
    Location
    chennai
    Posts
    272

    Foods for being healthy

    பார்லி
    உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையை குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது. நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலை தடுக்கும். வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். சிறுநீர் தாராளமாக பிரிய உதவும்

    Similar Threads:

    Sponsored Links
    jv_66 and kiruthividhya like this.

  2. #2
    raji rajagopal is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2015
    Location
    chennai
    Posts
    272

    Re: : Healthy and Nutritive Foods

    ரத்த அழுத்தத்தையும் கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்துவதால் குடைமிளகாய்க்கு இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும் குணம் உண்டு.

    jv_66 and kiruthividhya like this.

  3. #3
    raji rajagopal is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2015
    Location
    chennai
    Posts
    272

    Re: : Healthy and Nutritive Foods

    இனிப்புக்கு முதலிடம் கொடுங்க !!!
    திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளில் கடைசியாக நாம் பாயாசம் என இனிப்பு வகை உணவுகளை சாப்பிடுகிறோம். ஆனால் இது தவறான முறையாகும். இனிப்பு வகைகளையே முதலில் எடுக்க வேண்டும். நாம் சாப்பிடும் முன்பு பசி காரணமாக வாயு அதிகரித்து காணப்படும். அப்போது நாம் இனிப்புகளை உண்பதால் அது வாயுவை தணித்து விடும். குறிப்பாக பழங்களை சாப்பிடும் முன்பே உண்பது நல்லது. நமது உடல் தேவையான உணவை ஜீரணித்த பின்னர் எஞ்சிய உணவுகள் வயிற்றில் தங்கியிருக்கும். அப்போது பழங்கள் தங்கியிருந்தால் அவை அழுகி வேதியியல் மாற்றம் காரணமாக இதர நோய்களை உருவாக்கும்.

    jv_66 and kiruthividhya like this.

  4. #4
    raji rajagopal is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2015
    Location
    chennai
    Posts
    272

    Re: : Healthy and Nutritive Foods

    சுண்டைக்காயைக் காய வைத்து வற்றலாக்கி, சில துளிகள் எண்ணெய் விட்டு வறுத்து, சூடான சாதத்தில் பொடித்துச் சேர்த்து ஒரு கவளம் சாப்பிட, அஜீரணக் கோளாறுகள் குணமாகும். வாயுப்பிடிப்பு பிரச்னை உள்ளவர்களுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து. பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் பலப்படும்.

    jv_66 and kiruthividhya like this.

  5. #5
    raji rajagopal is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2015
    Location
    chennai
    Posts
    272

    Re: : Healthy and Nutritive Foods

    கண்களுக்கு கண்ணாடி போடாமல் இருக்க கேரட் அதிகமாக சாப்பிடவேண்டும். வயிற்றில் அமிலம் காரணமாக புளியேப்பம், பசி மந்தம் ஏற்பட்டால் கேரட்டை துருவி பச்சடி செய்து சாப்பிடலாம். உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கேரட்டிற்கு உண்டு. தொற்று நோய் நமக்கு வராமல் தடுக்கிறது. சிறுநீர் சம்பந்தமான கோளாறுகளை சரிபடுத்தும் சக்தி கேரட்டிற்கு உள்ளது.

    jv_66 and kiruthividhya like this.

  6. #6
    raji rajagopal is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2015
    Location
    chennai
    Posts
    272

    Re: : Healthy and Nutritive Foods

    வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்

    jv_66 and kiruthividhya like this.

  7. #7
    raji rajagopal is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2015
    Location
    chennai
    Posts
    272

    Re: : Healthy and Nutritive Foods

    வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும். வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு பின்னர் பசும்பால் குடித்தால் ஆண்மை பெருகும். படை, தேமல், மீது வெங்காயத்தின் சாற்றை பூசி வந்தால் படை மற்றும் தேமல் மறைந்து விடும். திடீரென மயக்கம் ஏற்படும் போது வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் மயக்கம் தெளியும். வெங்காய சாற்றையும், தேனையும் கலந்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும். வெங்காயத்தை ரசத்தை நீர் கலந்து குடித்தால் நன்கு தூக்கம் வரும்.
    வெங்காயம், அவரை இலை ஆகிய இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் வந்தால் ஆசன கடுப்பு நீங்கும்.

    jv_66 and kiruthividhya like this.

  8. #8
    raji rajagopal is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2015
    Location
    chennai
    Posts
    272

    Re: : Healthy and Nutritive Foods

    வேப்பிலையை வறுத்து சூடோடு தலைக்கு வைத்து தூங்கினால் காய்ச்சல் குணமடையும்

    jv_66 and kiruthividhya like this.

  9. #9
    raji rajagopal is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2015
    Location
    chennai
    Posts
    272

    Re: : Healthy and Nutritive Foods

    மனத்தை அமைதிப்படுத்தித் தன்னம்பிக்கையை உணர்த்துகிறது வெள்ளை பூண்டு, மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.
    ஞாபகச் சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் உயிர் வாழ்கின்றன. எனவே, ஞாபகசக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    jv_66 and kiruthividhya like this.

  10. #10
    raji rajagopal is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2015
    Location
    chennai
    Posts
    272

    Re: : Healthy and Nutritive Foods

    தமிழர்களின் சமையலில் முக்கிய பங்கு வகிப்பது கறிவேப்பிலை. சமையலில் கறிவேப்பிலையை பயன்படுத்தினால் உணவு ருசிமிகுந்தாகவும், வாசனை மிகந்ததாகவும் மாறும். கறிவேப்பிலை தென்னிந்தியா மற்றும் இலங்கை உணவு வகைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. இது இந்திய, இலங்கை உணவு வகைகளில் பெரும்பாலும் பயன்படுத்தப் படுகிறது. இத்தாவரத்தின் தோற்றம் தென்னிந்தியாவாகும். இதன் விதைகள் நச்சுத் தன்மையுடையவை.
    இலங்கை, இந்தியா தவிர்ந்த மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் கறிவேப்பிலையின் பயன்பாடு காணப்படுகின்றது. தென்னிந்தியர் மற்றும் தமிழரின் தொடர்புகள் ஊடாக கறிவேப்பிலையின் பயன்பாடு பிற இனத்தவர்களான சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற மக்களிடமும் கணிசமான அளவினரிடம் பரவியுள்ளது. கறிவேப்பிலை ஒரு சிறந்த நோய் எதிர்ப்புக் காரணி.. இது குறித்து அரசு சித்தா மருத்துவர் செல்வமூர்த்தி கூறியதாவது: கறிவேப்பிலை தூக்கி எறிவதற்கல்ல, உண்பதற்கே.
    புரதம், இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, வைட்டமின் சி. இவற்றால் கண் பார்வைக் கோளாறுகள் வராது. எலும்புகள் ஏற்றம் பெறும். சோகை நோய் அண்டாது. தொற்று நோய் ஊரில் இருந்தாலும் நமக்கு வராமல் தடுக்கும் ஆற்றல் கறிவேப்பிலைக்கு உண்டு. புண்கள் விரைவில் ஆற கறிவேப்பிலை உதவும். சிறப்பாக வாய்ப்புண் குணமாகும். பல் ஈறு வலுவாகும். வயிறு தொடர்பான சிக்கல்களை விரட்டியடிக்கும் வலிமை இதற்கு உண்டு. மலச்சிக்கலை போக்கும். ஜீரண சக்தியை மிகுவிக்கும்.
    பேதியைக் கட்டுப்படுத்தும். பித்தத்தை மாற்றி வாந்தியை தடுத்து வயிற்று இரைச்சலைத் தொலைக்கும். தலைமுடி வளரவும், வனப்பாக விளங்கவும், கண்களுக்கு ஒளிதரவும், சுக்கிலம் விருத்தியடையவும் கறிவேப்பிலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உதவும். முகத்தில் அம்மை வடுவா? கவலை வேண்டாம். கறிவேப்பிலை ஒரு பிடி, கசகசா ஒரு கரண்டி, கஸ்தூரி மஞ்சள் ஒரு துண்டு, அம்மியில் வைத்து அரைத்து முகத்தில் தடவுங்கள் அரை மணிநேரம் ஊறவைத்த பின் கழுவுங்கள்.
    இதுபோல 15 நாட்கள் செய்து பாருங்கள் இம்மைத் தழும்புகள் மறையும். பசி எடுப்பதில்லையா? ஜீரண மந்தமா? கறிவேப்பிலையை வறுத்து மிளகு, சீரகம், சுக்கு இவற்றைப் பொடி செய்து உப்புச் சேர்த்து சோறுடன் பிசைந்து உண்ணுங்கள். பசி கிளர்ந்தெழுந்து கொண்டு வா கொண்டு வா என்பீர்கள் என்றார்.
    கறியில் போடும் இலை
    கறியில் போடும் இலை என்பதாலும், அந்த இலையின் தோற்றம் வேப்பிலையின் தோற்றத்தை ஒத்திருப்பதாலும் கறி + வேம்பு + இலை = கறிவேப்பிலை என பெயர் பெற்றுள்ளது. கறி எனும் தமிழ் சொல்லை ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்டதைப் போலவே, கறிவேப்பிலை எனும் சொல்லும் (Curry leaf) தமிழ் வழி ஆங்கிலம் சென்ற ஒரு சொல் ஆகும். குறிப்பாக, யாழ்ப்பாணத் தமிழரின் பேச்சு வழக்கில் கேட்கலாம். இருப்பினும் கறுவேப்பிலை, கறுகப்பில்லை, கறுகப்பிள்ளை, கறிப்பில்லை என்றும் பேச்சு வழக்கில் பயன்படுவதும் உண்டு.


    jv_66 and kiruthividhya like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter