Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree98Likes

Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்


Discussions on "Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #11
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    உயிர்ச் சத்துக்கள் அதிகம் காணப்படும் அத்திப்பழம்

    பெண்களுக்கு பிரத்யோகமாக வரக்கூடிய சில நோய்களிலினின்று பெண்களுக்கு விடுதலை அளிக்கக்கூடிய ஆற்றல் சில கனிகளுக்கு உண்டு. அவற்றுள் முதன்மையாக கருதக்கூடிய கனி அத்திப்பழம். இது பெண்களுக்கு மாதவிடாய் மூலம் ஏற்படும் இரத்த சோகையை தீர்க்கும் வல்லமை படைத்தது. இந்த அத்திப் பழங்கள் பழமாகவும், உலர் பழமாகவும் பயன்படுத்தப்படுகிறது. அத்திப் பழம் என நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது பூவேயாகும். அத்திமரத்தில் விநோதமான பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் ஒரு தோற்றத்தை தருகின்றது.

    இதன் பூவை காண்பது மிக அரிது. அதனாலேயே “அத்தி பூத்தது” என்ற பழமொழி உருவாகியது. அத்திப் பழங்கள் 6-8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரங்களில் காய்க்கின்றன. பெரிய முட்டை வடிவிலான இலைகள் இருக்கும். அத்திப்பழம் இரு வகைப்படும். சீமை அத்தி எனவும், நாட்டு அத்தி எனவும் தாவரவியலில் திகழ்கின்றது.


    100 கிராம் அத்திப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:-

    ஊக்கச்சத்து - 249 kcal
    மாவுச்சத்து - 63.87 கிராம்
    சர்க்கரைச்சத்து - 47.92 கிராம்
    நார்ச்சத்து - 9.8 கிராம்
    கொழுப்புச்சத்து - 0.93 கிராம்
    புரதச்சத்து - 3.30 கிராம்


    அதிசயமாக கிடைக்கும் அத்திப்பழம் பல்வேறு மருத்துவப் பண்புகளைக் கொண்டுள்ளது. சீசனில் மட்டுமே கிடைக்கும் இந்த பழத்தை உண்பதன் மூலம் உடல் சுறுசுறுப்படைகிறது. இதில் சீமை அத்திப்பழம், நாட்டு அத்திப்பழம் என இரண்டு வகை உண்டு. அத்திப்பழத்தில் இரத்தத்தை விருத்தி செய்யக்கூடியதும், இரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடியதுமான உயிர்ச் சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.அத்திப் பழங்களில் அதிக அளவு வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கக் கூடிய Antioxidents உள்ளன.

    அத்திப்பழத்தின் உள்ள கனிமங்கள்:-


    கால்சியம் - 162 மி.கி
    இரும்புச்சத்து - 2.03 மிகி
    மெக்னீசியம் - 68 மிகி
    பாஸ்பரஸ் - 67 மிகி
    பொட்டாசியம் - 680 மிகி
    ஸின்ங் சத்து - 0.55 மிகி
    அதிக நார்ச்சத்து, புரதம் - 4 கிராம்




    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்-.jpg   Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்-.jpg  
    sarjana ul and Dangu like this.

  2. #12
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    அத்தியின் மருத்துவ பயன்கள்:-

    இரத்த சோகை:-

    உலர் அத்தி உண்பதால் பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் ஏற்படும் இரத்த சோகை குணமடைகிறது. வயிற்றுப்போக்கு குணமடைகிறது. வாய், மூக்கு வழியே வெளியேறும் இரத்தப்போக்கை அத்திப்பழம் குறைக்கிறது.


    வாய்ப்புண்:-

    இரத்த சோகையாலும், மன அழுத்தத்தாலும் நாக்கிலும், வாயில் உட்புற பகுதிகளில் ஏற்படும் புண்ணை அத்திப்பழம் குணமாக்குகிறது.

    சளித்தொல்லை:-

    அத்திப்பழம் கப சம்பந்தமான நோய்களை நீக்குகிறது. கோழையை வெளியேற்றுகிறது.

    ஜீரண சக்தி:-

    அத்திப்பழம் உண்பதால் உணவு விரைவில் ஜீரணமடையும். ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை அத்திப்பழத்திற்கு உண்டு. அத்திப்பழம் எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற உறுப்புகளை நன்கு செயலாற்ற செய்கிறது.

    அத்தி தேனூறல்:-

    அத்திப்பழத்தை சுத்தம் செய்து 5 நாட்கள் நிழலில் காய வைத்து,பதப்படுத்தி தேனில் ஊற வைத்து உட்கொண்டால் தாது விருத்தியடையும், ஆண்மை பெருகும், உடல் புஷ்டி உண்டாகும் இரத்த விருத்தி உண்டாகும்.

    நாட்டு அத்தியின் பாலை, மரு, மூலம் போன்றவற்றில் போட்டு வர அவை சுருங்கி விடும். உபாதைகள் குறையும்
    போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்

    அத்திப் பழம் உடலுக்கு குளிர்ச்சியூட்டக் கூடியது. பெண்களின் வெள்ளை படுதலையும் போக்கிடும்

    அத்திப் பழம் ஓர் ஒப்பற்ற மலமிளக்கியாகும் உலர்ந்த அத்திப் பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் பழத்தை சாப்பிட்டு அந்த ஊற வைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலமும் இறுகி வெளியேறும்.

    அத்தி மரத்தை வெட்டினால் பால் வடியும் இது துவர்ப்பு மிக்கதாகும். அடிமரத்தின் கீழ் வேரைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டால் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும். தெளிந்த இந்த நீரை தினமும் 300 மி.லி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு குணமாகும்

    பழங்களை பிரித்து தேனிலும், பொடித்த கற்கண்டிலும் துவைத்து உட்கொள்ளலாம்.

    பிரித்த பழத்தினுள் பொடித்த கற்கண்டு தூளை செலுத்தி இரவு பனியில் வைத்து காலையில் உண்டு வர உட்சூடு தணியும்.
    அத்திப் பழம், பாதாம் பருப்பு, அக்ரூட் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரப் பருப்பு, பூனைக்காலி விதை பருப்பு, ஆப்பிள் விதை, ஏலக்காய், கற்கண்டு இவற்றை சம எடையாக பொடித்து பசுவின் நெய்யில் கலந்து அத்துடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து ஒரு வாரம் ஊறிய பின் தினமும் 10-15 மி.லி.வீதம் காலையில் உட்கொள்ள பலம், உடல் புஷ்டி, ஆண்மை பெருகும்.

    சீமை அத்திப் பழத்தை தினமுட் 1 வேளை உண்டு வர வெண் புள்ளிகள், வெண் குட்டம், தோலின் நிறமாற்றம் குணமாகும்.
    அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம்.

    மேலும் அத்திப் பழத்தினை கொண்டு அத்தி பொரியல், அத்திக் கூட்டு, அத்தி ஜாம் முதலியன செய்தும் உட்கொள்ளலாம்.
    தினசரி இரண்டு அத்திப் பழங்களை உண்டு வர இரத்த உற்பத்தி மற்றும் உடல் பருமன் அடையும்.

    தினமும் இரண்டு அத்திப் பழங்களை உண்டு வர உடல் அழகாவதுடன், முழு ஊட்டச்சத்தும் கிடைக்கும்.



    Attached Thumbnails Attached Thumbnails Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்-30.jpg  
    sarjana ul and Dangu like this.

  3. #13
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    ஆப்ரிகாட் பழம் APRICOT

    பொன்னிறமான மேல்தோலையும், ஒருவிதமான புளிப்பு சுவையும் உடைய ஆப்ரிகாட் பழங்கள் -apricot – எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளன. இது புருனஸ் ஆர்மெனியேகா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரோசேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறிய மரங்களின் நன்கு பழுத்த ஆரஞ்சு நிற பழங்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன. பித்தப்பையில் உள்ள கற்களைப் போக்குவதிலும், குடல் புழுக்களை அழிப்பதிலும் ஆப்ரிகாட் பழங்களின் பணி மகத்தானது.

    தோல்நோய்களை நீக்கும்
    இதில் அடங்கியுள்ள ஏராளமான தாதுப்பொருட்கள் ஆஸ்துமா, மார்புச்சளி, காசநோய் மற்றும் இரத்த சோகையைக் குணப்படுத்த வல்லவை. இதில் அடங்கியுள்ள நார்ச்சத்தானது மலச்சிக்கலை நீக்குகிறது. இதில் உள்ள விட்டமின் ஏ முகப்பருவினை நீக்குவதிலும், தோல் தொடர்பான தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் பெரும்பங்கு வகிக்கின்றன. விட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.

    நரம்புகளை வலுப்படுத்தும்
    பழங்களிலுள்ள வானிலிக் அமிலங்கள் மற்றும் ரூப்பின் என்ற நறுமண எண்ணெய் கை, கால் வலியை நீக்குகிறது. இதில் இரும்புச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின்கள் அதிகம் உள்ளதால் ரத்த உற்பத்திக்கு ஏற்றது. இதில் உள்ள கரோட்டினாய்டுகள் எல்.டி.எல். என்னும் கெட்ட கொழுப்பை நீக்கி, இதய நோயை தடுக்கின்றது. பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீர்செய்கிறது. லைகோபின் என்னும் சத்தானது கலங்கள் முதிர்வை தடுக்கிறது. இதிலுள்ள டிரிப்டோபேன்கள் நரம்புகளை வலுப்படுத்துகின்றது.

    நோய் எதிர்ப்பு சக்தி
    மிகவும் சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழம் குழந்தைகளுக்கு ஏற்றது. இருதய நோய், சிலவகை புற்றுநோயை கூட எதிர்த்து போராடும் சத்துக்கள் அடங்கிய பழம் இது. ஆப்ரிகாட்டை நன்கு கழுவி இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவோ அல்லது நறுக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து மசிக்கவோ செய்யலாம். பின்னர் பாலில் ஓட்ஸ், சர்க்கரை கலந்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கொதித்து கெட்டியானதும் தீயை அணைத்து ஆறவிடவும். ஆறியதும் ஆப்ரிகாட் மசித்ததையும் ஓட்ஸையும் கலந்து குழந்தைக்கு ஊட்டவும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    கண்பார்வை தெளிவாகும்
    விட்டமின் ஏ பார்வை திறனை அதிகப் படுத்துகிறது. தினமும் 1 அல்லது 2 ஆப்ரிகாட் என்ற துருக்கி ஆரஞ்சுப் பழங்களை இரவில் சாப்பிட்டு வர பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேருவதுடன் கலங்கள் அழிவும் கட்டுப்படுத்தப்படும்.
    மலைவாழைப்பழம்-1, ஆப்ரிகாட்-4 ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, தயிர்-அரை கோப்பை கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து, இரவில் படுக்கும்பொழுது சாப்பிட்டுவர பார்வைதிறன் அதிகரிப்பதுடன் தோல் மினுமினுப்பு உண்டாகும்.


    sarjana ul and Dangu like this.

  4. #14
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்


    சீத்தாபழ காலம் ஆரம்பிச்சுடுச்சு. அதன் அருமை பெருமைகளை அறிவீர்களா...?


    இது இந்தியாவை சேர்ந்த பழம் இல்லை...அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் கழித்து இந்தியாவிற்கு வந்ததாக மொகாலய அரசர் அக்பர் தனது ஆவணங்களில் குறித்து வைத்துள்ளார்.

    சீத்தாபழம் நோய் எதிர்ப்பு சக்தியான வைட்டமின்சி யை கொண்டிருக்கிறது. ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு போதுமான கால்சியம் ஒரு பழம் உண்பதாலேயே கிடைக்கும்.

    அல்சர் உள்ளவர்கள் அல்லது வயிற்றில் அதிகபடியான அமில தன்மை உடையவர்களுக்கு இப்பழம் சிறந்தது. இதன் விதை பூச்சி கொல்லி மருந்தாகவும், இதன் பொடியானது தலை முடியில் உள்ள பேன் பொடுகு போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்து.

    இதில் 16.5 சதவிகிதம் சர்க்கரை உள்ளது. கொழுத்த சதை உள்ளவர்கள் இதை சாப்பிடுவதை தவிர்க்கவும். எடைகுறைவாக உள்ளவர்கள் எடையை அதிகப்படுத்த இப்பழத்தை தினமும் சாப்பிடலாம்.

    இதில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் கொண்டுள்ளதால் நமது இதயத்தை இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது. உங்களுக்கு மாறிகொண்டே இருக்கும் இரத்தஅழுத்தம் இருந்தால் தினமும் இப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் இரத்தஅழுத்தத்தை கட்டுபாட்டில் வைத்துக்கொள்ளலாம்.

    நோய்க்கு மருந்தாவதோடு மட்டுமல்லாமல் அழகுக்கும் உதவுகிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டால் முகம் மற்றம் தோல் பளபளப்பாக மாறும்.

    இதில் மெக்னீசியத்தின் அளவை அதிகம் கொண்டிருப்பதால் உடலில் நீர் இருப்பு நிலையை பராமரிக்கிறது. சீத்தாபழத்தின் தோல் பற்சிதைவு, ஈறுகளில் ஏற்படும் வலிகளுக்கு உதவியாக உள்ளது.


    chan and sarjana ul like this.

  5. #15
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    பெருங்குடல் புற்றுநோயை தடுக்கும் திராட்சைப் பழம்

    புற்றுநோய் வகையில் ஒன்றான பெருங்குடல் புற்றுநோயால் ஆண்டிற்கு 5 லட்சம் பேர் உலகம் முழுவதும் மரணமடைகின்றனர். இதனை சாதாரண திராட்சைப் பழம் தடுத்து விடுகிறதாம்.

    திராட்சைப் பழத்தில் உள்ள ஃப்ளேவனாய்டுகள் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.

    தினசரி உணவில் கறுப்புத் திராட்சை சாப்பிட்டால் போதுமாம் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். திராட்சை ரசத்தில் 87.12 சதவிகிதம் தண்ணீரும், பொட்டாசியம் தாது உப்பும் இருக்கின்றன. இதுவே மருந்துப் பொருளாக செயல்படுகிறது.
    கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் திராட்சைப் பழத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் ரெஸ்வெரட்ரோல் என்ற சத்துப்பொருள் 100 சதவிகிதம் பெருங்குடல் புற்றுநோயைக் குணப்படுத்தி விடுவதை ஆய்வுமூலம் கண்டறிந்துள்ளனர்.

    பெருங்குடல் புற்றுநோயாளிகளுள் ஒரு பிரிவினருக்கு 20 மில்லி கிராம் ரெஸ்வெரட்ரோல் மாத்திரை தினமும் கொடுக்கப்பட்டது.

    இரண்டாவது பிரிவினருக்கு 120 கிராம் திராட்சைப் பழப்பொடியைத் தண்ணீரில் கலந்தும் அருந்தச் சொன்னார்கள்.

    மூன்றாவது பிரிவினருக்கு 80 கிராம் திராட்சைப் பழப் பொடியை கலந்து அருந்தி வரச்சொன்னார்கள்.

    சில நாட்களுக்குப் பின்னர் 80 கிராம் திராட்சைப் பழப்பொடியை அருந்தி வந்தவர்களுக்கு மட்டும் பெருங்குடல் புற்றுநோய் குறிப்பிட்ட அளவிற்கு குணமாகி இருந்தது. அதிகளவு திராட்சைப் பழப் பொடியும், மாத்திரையும் சாப்பிட்டவர்களை விட குறைந்த அளவு திராட்சைப் பழப்பொடி மிகுந்த ஆற்றலுடன் செயல்பட்டு குணப்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஆற்றலுடன் செயல்படும்

    தினசரி 50 முதல் 100 கிராம் வரை திராட்சைப் பழங்களை மென்று உண்பதால் ரெஸ்வெரட்ரோல் எளிதில் கிடைக்கும். குறைந்த அளவே உண்பதால் திராட்சையில் உள்ள செயல்படும் கூட்டுப்பொருள் மிகுந்த ஆற்றலுடன் புற்றுநோயைத் தடுக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்




    Attached Thumbnails Attached Thumbnails Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்-302.jpg  
    sarjana ul and Dangu like this.

  6. #16
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    பிருன்ஸ் பழங்கள்

    கருவுற்ற பெண்கள், முதல் முன்று மாதங்களுக்கு அனைத்து வகையான ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் சாப்பிட வேண்டும். இரும்புச்சத்து, போலிக் அமிலம், கால்சியம் சத்துள்ள உணவுகளை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். பேறுகாலத்தில், இரும்புச்சத்து (18மில்லி கிராம் முதல் 27 மில்லி கிராம் வரை) அதிகமாகத் தேவைபடும். அதனால், இந்த சத்துள்ள உணவு பொருட்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.

    பேறு காலத்தின் முதல் முன்று மாதத்தில் அனைத்து பெண்களுக்கும் வாந்தி ஏற்படுவது இயல்பு. உடலின் செரிமான பணிகள் அனைத்தும் ஹார்மோன் மாற்றங்களின் கட்டுபாட்டில் இயங்குவதால், கருவுற்ற பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும்.

    பேறுகாலத்தில் கரு முழுமையாக வளர, ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியாகும். அதே சமயம், இந்த ஹார்மோன்கள் குடல் இயக்கத்தின் வேகத்தைக் குறைத்து விடுகிறது. இதனால், மலச்சிக்கல் ஏற்படுகிறது. தசைகளைத் தளர்த்துவதன் முலம் ஹார்மோன்களில் ஒன்றான புரோஜெஸ்ட்ரான் செயல்படும். தசைகளால் ஆன குடலின் வெளிபுறச் சுவர் தளர்வதால் உணவு மற்றும் மலத்தின் வேகம் குறைகிறது.

    சில நேரங்களில் இரைப்பை, குடல் உறுத்தல்கள் ஏற்படும். பேறுகாலத்தில் இயல்பாகவே, தவிப்பும் ஆர்வமும் அதிகமாக இருக்கும். பிருன்ஸ் பழத்தில் உள்ள சத்துக்கள் இதுபோன்ற சிக்கலான நேரத்தில், குடல்களின் இயக்கத்திற்குத் தேவையான நார்ச்சத்தை வழங்குகிறது. குடல்களின் வேகமான செயல்பாடுகளுக்கு நார்ச்சத்துக்கள் மிகவும் முக்கியம். பிருன்ஸ் பழங்கள் நீர்ச்சத்தை உறிஞ்சிக் கொள்வதால், மலச்சிக்கலை போக்குகிறது. பிருன்ஸ் பழங்கள் சுவையாக இருப்பதுடன், தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.

    ஆரோக்கியமான குழந்தையை பெற, இரும்புச்சத்து முக்கியமான ஊட்டச்சத்து. பிருன்ஸ் பழங்களில் உள்ள இந்த ஊட்டச்சத்து தாய் மற்றும் குழந்தைக்குத் தேவையான ஹீமோகுளோபினை அளிக்கிறது. இது ரத்தசோகையைத் தடுத்து, உடலில் நோய் எதிர்பு சக்தியை அதிகரிக்கிறது. பிருன்ஸ் பழங்களில் உள்ள பொட்டாசியம் சத்து இயற்கையாகவே உயர் ரத்த அழுத்தத்தைத் குறைக்கும் திறன் கொடது. இதில் கொழுப்புச்சத்துக்கள் இல்லாததால், எப்போது பசித்தாலும் சாப்பிடலாம்.


    Attached Thumbnails Attached Thumbnails Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்-29.jpg  
    Last edited by chan; 7th Feb 2015 at 08:18 PM.
    sarjana ul likes this.

  7. #17
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    எலுமிச்சை ஜூஸ் குடிப்பதன் மூலமாக நாமடையும் 12 ஆரோக்கிய பயன்கள்!!!

    எலுமிச்சையில் இயற்கையிலேயே நிறைய ஆரோக்கிய பயன்கள் நிறைந்துள்ளன. வருடம் முழுவதும் மற்றும் மலிவான விலையில் கிடைக்கும் பழம், எலுமிச்சை ஆகும். இதில் உயர்ரக ஊட்டச்சத்துகளான கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துகள் இருக்கின்றன. மேலும் இதில் வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்தின் பயன்களும் இருக்கிறது.

    எலுமிச்சையில் சருமத்தை புத்துணர்ச்சி அடைய செய்து அதன் மூலம் அழகை மேம்படுத்தும் தன்மை உள்ளது. எலுமிச்சை ஜூஸில் உள்ள சிறந்த பயன் எதுவெனில் உடல் எடை குறைக்க இது வெகுவாக பயனளிக்கிறது. இதுமட்டுமின்றி உடலில் உள்ள நச்சு கிருமிகளை அழிக்கவும் எலுமிச்சை உதவுகிறது. காலை வேலையில் எலுமிச்சை ஜூஸ் பருகுவது மிக அருமையான மற்றும் ஆரோக்கியமான ஒன்றாகும். இது செரிமானத்தை மேம்படுத்துகிறது.

    எலுமிச்சையில் இருக்கும் நச்சு கிருமிகளை அழிக்கும் பயன் உங்களை வயிற்றுப்போக்கு மற்றும் அஜீரண தொல்லைகளில் இருந்து விடுபட செய்கிறது. மேலும் பெருங்குடல் சார்ந்த கோளாறுகளுக்கும் நல்ல தீர்வளிக்கிறது எலுமிச்சை. எலுமிச்சை ஜூஸின் மூலம் நாம் அடையும் பலன்களைப் பற்றி மேலும் அறிய தொடர்ந்து படியுங்கள்...

    செரிமான தீர்வு தினமும் காலையில் தவறாது எலுமிச்சை ஜூஸ் பருகினால் செரிமான கோளாறு குணமடையும். எலுமிச்சையில் இருக்கும் நற்குணங்கள் செரிமானம் சார்ந்த பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.

    நோய் எதிர்ப்பு சக்தி எலுமிச்சையில் இருக்கும் மிகுதியான உயர்ரக வைட்டமின் சி-யின் பயன் மூலம் நமது உடலிற்கு தேவையான அளவு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.

    வாய் பராமரிப்பு பற்களில் ஏற்படும் வலியை குறைக்கும் பயன் எலுமிச்சையில் உள்ளது. மேலும் இது, ஈறு மற்றும் எனாமலை வலுவடைய உதவுகிறது.

    தொண்டைப் பிரச்சனைகள் எலுமிச்சை நீரில் வாய் கொப்பளிப்பதன் மூலம் தொண்டை வலி மற்றும் தொண்டை கோளாறுகளுக்கு தீர்வு காணலாம்.

    உடல் எடை குறைய எலுமிச்சை நீரின் சிறந்த பயன்களில் ஒன்று, அதை தினசரி தேனில் கலந்து பருகி வந்தால், உடல் எடையை வேகமாக குறைக்க இயலும்.

    இரத்தக்கொதிப்பு எலுமிச்சையின் மற்றொரு சிறந்த பயன், இது இரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் உங்களது உடலை சோர்வடைவதில் இருந்து மீட்டு ஓய்வளிக்கும். எலுமிச்சை ஜூஸ் நமது மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

    காய்ச்சல் எலுமிச்சை ஜூஸ் பருகுவதன் மூலம் சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விரைவில் குணமடையலாம்.

    வளர்ச்சிதையை தூண்டுகிறது எலுமிச்சை நீரில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மற்றும் போதையில் இருந்து தெளியவும், வளர்ச்சிதையை தூண்டவும் கூட எலுமிச்சை ஜூஸ் உதவுகிறது.

    சரும பிரச்சனைகள் எலுமிச்சையின் நற்குணங்கள் மற்றும் வைட்டமின் சி-யின் பயன் மூலம் சரும பிரச்சனைகளில் இருந்து நல்ல தீர்வைப் பெற இயலும். முக்கியமாக முகத்தில் வரும் கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்களை போக்க வெகுவாக உதவுகிறது எலுமிச்சை ஜூஸ்.

    நெஞ்செரிச்சல் இது நம் உடலில் இருக்கும் கால்சியம் மற்றும் ஆக்சிஜனின் அளவை சமநிலைப்படுத்துகிறது. அதனால் உங்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும் போது எலுமிச்சை ஜூஸை உட்கொள்ளும் போது நல்ல தீர்வு கிடைக்கும்.

    மூட்டு வலி இதமான நீரில் எலுமிச்சை சாற்றினை கலந்து குடித்து வர மூட்டு வலியில் இருந்து எளிதாக விடுப்பெறலாம்.

    கல்லீரல் எலுமிச்சை ஜூஸ் கல்லீரலில் உள்ள நச்சு கிருமிகளை அழிக்கிறது. இதனால் கல்லீரல் சுத்தம் அடைவது மட்டும் இல்லாமல் கல்லீரல் சார்ந்த பிரச்சனைகளில் இருந்தும் விரைவில் தீர்வு காண இயலும்.


    Attached Thumbnails Attached Thumbnails Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்-index.jpg  
    sarjana ul likes this.

  8. #18
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள நன்மைகள்


    ஸ்ட்ராபெரி பழத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இந்த பொருள் வேறு சில பழங்கள், காய்கறிகள், தேனீர் மற்றும் ரெட் ஒயின்-red wine- ஆகியவற்றில் உள்ளன. இது சர்க்கரை நோய், புற்றுநோயை தடுக்கும் திறன் வாய்ந்தது.இதுதவிர எல்லாவிதமான நோய்களையும் தடுக்கும். ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுகிறது. எனவே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் உதவும்.

    ஸ்ட்ராபெர்ரி பழங்களில் விட்டமின் C, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், விட்டமின் A, டோக்கோபெரால், விட்டமின் K போன்ற விட்டமின்களும், செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கல்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், தேவையான கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.

    இதில் ஆன்டி ஆக்சிடன்ட் என சொல்லப்படும் கலங்களின் அழிவை தடுக்கும் தன்மை உள்ளது. இந்த தன்மை நிறைந்துள்ள பழங்கள் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் காணப்படுவது இதன் சிறப்புக்கு அடையாளமாகும். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.

    இதை சாப்பிட்டால் புற்றுநோய் வருவதைத் தடுக்கலாம். மேலும் இது இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றது.

    ஸ்ட்ராபெர்ரி பழச்சாற்றை குடித்தால் பற்களில் கறை ஏற்படுவதை தவிர்க்கலாம். இதில் உள்ள அமிலங்கள் பல் கறையையும் நீக்குகின்றன.
    .


    mercyanburaj and sarjana ul like this.

  9. #19
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    நோய் எதிர்ப்பு சக்திக்கு புளுபெர்ரி சாப்பிடுங்க!

    புளுபெர்ரி என்று அழைக்கப்படும் அவுரிநெல்லி பழங்கள் நீலநிறத்தில் காணப்படுகிறது.. இதன் பூக்கள் மணி வடிவத்தில் வெள்ளை, இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். இதன் தாயகமாக பிரிட்டிஸ், கொலம்பியா போன்ற நாடுகள் கருதப்படுகிறது. இது கொழுப்பை குறைக்க, ரத்த அழுத்தம், இதய பாதுகாப்பு, போன்றவற்றிக்கு பெரிதும் உதவுகிறது.

    நோய் எதிர்ப்பு சக்தி

    இயற்கையின் கொடையில் மிகச்சிறந்த உணவாக கருதப்படும் புளுபெர்ரி, வேறு எந்த பழங்கள், காய்கறிகளை விட அதிக அளவு ஆண்டியாக்ஸிடண்ட்களை கொண்டுள்ளது என்று ஆய்வுகளின் முடிவில் தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.. நீலநிறத்தில் காணப்படும் புளுபெர்ரி பழம் நீலநிறமாவதற்கு தேவையான ஆண்டியாக்ஸிடன்ட்களை அதிகளவு கொண்டுள்ளது. மேலும், இதில் பைபர் மற்றும் வைட்டமின் சி ஊட்டசத்துகள் நிறைந்துள்ளது. இது இதயத்தில் உண்டாககூடிய நோய்களை தடுக்கிறது.

    வயிற்று கொழுப்பை குறைக்க

    நீலநிறத்தில் காணப்படும் புளுபெர்ரி பழமானது எடை குறைப்புக்கு பெரிதும் உதவுகிறது. உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் புளுபெர்ரி பழங்களை சாப்பிடலாம். இப்பழத்தை உட்கொள்வதால் வயிற்றில் உள்ள கொழுப்புகளை அகற்றி உடலை பாதுகாக்கிது. சிலர் தொப்பையை குறைக்க முடிவதில்லை என கவலைப்படுவது உண்டு. அவர்கள் உலர்ந்த புளுபெர்ரியை சாப்பிட்டு தொப்பைக்கு டாடா காட்டிவிடலாம். ஏனெனில் இப்பழத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகள் இரத்ததில் உள்ள தேவையற்ற கொழுப்பை அகற்றி சிக்கென்று உடலை வைத்துக்கொள்ள உதவி புரிகிறது.

    உயர் இரத்த அழுத்தம் தடுக்க

    நீல மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும் பழங்கள் அனைத்திலும் அந்தோசியனின்கள் உள்ளது. உயர் இரத்த அழுத்தத்திற்கு எதிராக இந்த நிறமிகள் போராடி உடல் நலத்தை பாதுகாக்கிறது. புளுபெர்ரியை வைத்து மேற்கொண்ட ஒரு ஆய்வில் 134000 பெண்கள் மற்றும் 23000 ஆண்கள் சோதனைக்கு உட்படுத்தபட்டனர். அவர்களுக்கு வாரத்திற்கு 1/2 கப் பழங்கள் கொடுக்கப்பட்டது. அதில் அவுரிநெல்லி பழங்களை சாப்பிட்டவர்களுக்கு இரத்த அழுத்தமானது, பழங்களை உட்கொள்ளாதவர்களை விட குறைவாக உள்ளது கண்டறியப்பட்டது.

    மூளை பராமரிப்பு

    புளுபெர்ரி பழத்தில் உள்ள அந்தோசியனின்கள் மூளையின் நரம்பு சம்பந்தப்பட்ட அனைத்து தொடர்புகளையும் இணைத்து அதிகரிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. புளுபெர்ரி பழச்சாற்றை வயதானவர்கள் தினமும் எடுத்துக்கொள்ளவதால் அவர்களது ஞாபகசக்தி மாறுபடுகிறது என்று சின்சின்னாட்டி அகாடமிக் ஹெல்த் சென்டர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 12 வாரங்களுக்கு பிறகு பழச்சாற்றை பருகினவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும் திறன் மேலும் வளர்ச்சியடைந்துள்ளது என்றும் தகவல் அளித்துள்ளனர்.



    Attached Thumbnails Attached Thumbnails Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்-blueberry.jpg  
    sarjana ul likes this.

  10. #20
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    புத்துணர்ச்சி தரும் கல் பழங்கள்

    கல் பழங்கள் (Stone Fruits) என்று தொகுப்பாக கூறப்படும் ‘ரோசாசியே’ தாவர குடும்பத்தைச் சார்ந்த Prunus genus வகை பழங்கள், பீச், ப்ளம், செர்ரி, ஆப்ரிகாட், நெக்ட்ரைன் ஆகியவையாகும். கல் பழங்களில் பொதுவாக பழத்தின் சதைப்பகுதிக்கு உள்ளே, பாதுகாப்பான ஒரு பெட்டி போல கடினமான ஓடு இருக்கும். அதற்கும் உள்ளேதான் விதைகள் காணப்படும்.

    பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சீனாவில் ப்ளம் தோன்றியிருக்கலாம் என கருதப்பட்டாலும், அதற்கு உரிய ஆதாரங்கள் இல்லை. ரோம் தேசத்தில் வாழ்ந்த ‘ப்ளினி’ என்பவர், அந்நாட்டின் கடற்படை தளபதியாக இருந்தவர். எழுத்தாளர், வரலாற்று அறிஞர் என்று பல முகங்கள் அவருக்கு உண்டு. ரோம் சாம்ராஜ்யத்தின் பேரரசன் வெஸ்பாசியன் என்பவருக்கு மிக நெருக்கமானவர். கி.மு. 79-ல் இன்றைய இத்தாலியின் நேப்பிள்ஸ் நகருக்கு 9 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் வெசூவியஸ் மலைத்தொடரில் ப்ளம் பழங்கள் விளைவிக்கப்பட்ட தகவல்களை தனது நூலில் ப்ளினி குறிப்பிட்டுள்ளார். அதுதான் ப்ளம் பற்றிய எழுத்துப் பூர்வமான முதல் ஆதாரம்.

    வெசூவியஸ் மலை சதா எரிமலைக் குழம்புகள் வெடிக்கும் தட்பவெப்ப அமைப்பை கொண்டது. அங்கு மக்கள் நீண்டகால பயிர்களை விளைவிப்பது இயலாத காரியம். எனவே பழங்கள் தரும் மரங்கள்தான் அங்கு பிரதான பயிர். இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என பல்வேறு சுவைகள் கொண்ட ப்ளம் பழங்களை அங்கு விளைவித்திருக்கிறார்கள். டார்டாரியன்கள், மங்கோலியர்கள், துருக்கியர்கள், சீனாவின் ஹான் இனத்தவர்கள் ப்ளம் பழங்களை தங்கள் பிரதான உணவாக உண்டு வந்திருக்கின்றனர். ப்ளம் பழங்கள் ஐரோப்பாவில் இருந்துபிற கண்டங்களுக்கு பரவி இருக்கின்றன. 1755-ல் அமெரிக்காவுக்கு அறிமுகமானது.

    ப்ளம் பழத்தின் வகைகள்

    இன்று உலக அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட ப்ளம் பழ வகைகள் உள்ளன. அதில் அமெரிக்காவில் மட்டுமே முப்பது வகைகள் விளைவிக்கப்படுகின்றன. ஐரோப்பியன் ப்ளம், ஜப்பானியன் ப்ளம், டாம்ஸன் மற்றும் மீரபெல்லா என நான்கு வகைகளாக பிரிக்கின்றனர். இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு மற்றும் சுவையற்ற பழங்கள், அவற்றின் அளவுகள் ஆகியவற்றை வைத்து வகை படுத்தப்படுகிறது. எலிபெண்ட் ஹார்ட், டிகா, ஷினோ, ஸதே ரோசா, சுப்பீரியர், வனேடா என பல சிறிய ரகங்கள் உள்ளன.

    மீரபெல்லா வகை பழங்கள், பீச் பழத்தையும் ப்ளம் பழத்தையும் இணைத்து அதிலிருந்து உருவாக்கப்பட்டவை. ஜப்பானிய ப்ளம் வகை பழங்கள் உண்மையில் சீனாவில்தான் முதன் முதலில் விளைந்தன. ஆனால் ஜப்பான்தான் முதன் முதலில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது என்பதால் அந்த பெயர் அதற்கு அமைந்துவிட்டது. வேடிக்கை என்னவென்றால் இன்றைக்கு உலக அளவில் அதிக எண்ணிக்கையில் ஜப்பானிய ப்ளம்களை ஏற்றுமதி செய்வது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம்தான்.

    லூதர் பர்பங்க் என்னும் அமெரிக்க தாவரவியல் ஆர்வலர்தான் பல புதுமையான ப்ளம் வகைகளை கலப்பின முறையில் உருவாக்கியும், வெளிநாடுகளில் இருந்து தருவித்தும் உலகெங்கும் பிரபலப்படுத்தியவர். ஒரு காலத்தில் ப்ளம் பழத்தையும், விஷக்கனி என்றே கருதி இருக்கிறார்கள். ப்ளம் பழத்தின் விதைகளை உண்ணுவது கூடாது என்பது இன்றும் கூட ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துதான்.

    ப்ளம் ஐலண்ட் என்றொரு தீவு அமெரிக்காவின் மாசாசூட்ஸ் மாகாணத்தில் வடகிழக்கு கடலோரத்தில் அமைந்துள்ளது. இந்த தீவின் கரை முழுவதும், அமெரிக்க பழங்குடிகள் மட்டுமே வாழ்ந்த ஒரு காலத்தில் ப்ளம் பழங்கள் கனிந்து செழித்துக் கிடந்ததால் இந்தப் பெயர்.

    பீச் பழம்

    பார்ப்பதற்கு ப்ளம் பழம் போலவே தோற்றமளித்தாலும் சற்றே வேறுபட்டது. உள்ளிருக்கும் சதைப்பகுதி சற்று கடினமாகவும், அளவில் சரியான உருண்டை என சொல்ல முடியாத வடிவத்திலும் இருக்கும். சீனாவின் டாரிம் பேசினுக்கும் குன்லாம் ஷான் மலைத்தொடருக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில்தான் முதன் முதலாக விளைந்ததற்கான ஆதாரங்கள் சீனாவில் எழுத்துப் பூர்வமாக உள்ளன. சீனாவை தவிர்த்து அன்றைய பெர்சியா எனப்படும் ஈரானிலும் காணப்பட்டிருக்கிறது. இதுவும் ரோசாசியே குடும்பத்தை சேர்ந்ததுதான். இதன் தாவரவியல் பெயர் ‘ப்ருனே பெர்சிகா’ (பெர்சியாவில் அதிகம் கிடைத்ததால் இந்தப் பெயர். தமிழில் இதனை ‘குழிப்பேரி’ என்கிறார்கள்.

    ஆப்ரிகாட்

    பொன்னிறமான மேல்தோலையும், ஒருவிதமான புளிப்பு சுவையும் உடைய ஆப்ரிகாட் பழங்களை ‘துருக்கி ஆரஞ்சு’ என்றும் அழைப்பார்கள். வடகிழக்கு சீனாவை தாயகமாகக் கொண்ட இப்பழங்கள் இந்தியாவின் காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் விளைகின்றன. இதில் அடங்கியுள்ள தாதுப்பொருட்கள் ஆஸ்துமா, மார்புச்சளி, காசநோய் மற்றும் ரத்த சோகையைக் குணப்படுத்த வல்லவை. இதன் நார்ச்சத்தானது மலச்சிக்கலை நீக்குகிறது. வைட்டமின்-ஏ முகப்பருவினை நீக்குவதிலும், தோல் நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் பங்காற்றுகின்றன. வைட்டமின்-சி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.

    செர்ரி பழம்

    செர்ரி பழ உற்பத்தியில் உலகிலேயே 26-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. துருக்கிக்கு முதல் இடம். ஐரோப்பிய நாடுகள்தான் அதிகளவு உற்பத்தி செய்கின்றன. அடுத்து அமெரிக்க நாடுகள். செர்ரியில் இனிப்பு, புளிப்பு என இரண்டு வகைகள் இருக்கின்றன. இரண்டிலும் ஒரே மாதிரியான சத்துக்கள்தான் இருக்கின்றன. குறைந்த கலோரி உள்ள பழங்களில் செர்ரியும் ஒன்று. இது கேன்சர் வருவதை தடுக்கும். நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள ஒரு தாவர மையத்தில் வளர்க்கப்படும், ‘இந்தியன் செர்ரி’ என்னும் வகை நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த இனமாகும். தூங்கி எழுவதில் ஏற்படும் பிரச்சினையை சரி செய்யும் விதமாக, மெலடோனின் என்ற ஹார்மோன் செயல்படுகிறது. இது செர்ரி பழங்களில் அதிகம் காணப்படுகிறது. எனவே தூக்கமின்மை பாதிப்பில் இருந்து விடுபட செர்ரி பழங்கள் உதவுகின்றன.

    கல் பழங்கள் எனப்படும் பழங்களில் பல அரிய ரகங்கள் மேலை நாடுகளில் கிடைக்கின்றன. பொதுவாக இவற்றின் சுவை, அளவு, இளகுத்தன்மை மாறுபட்டாலும் அனைத்துமே உடலுக்கு சக்தி தரும் ஆற்றல் கொண்டவை. ஸ்டோன் பழங்களில் உள்ள 40 வகைப் பழங்களை ஒரே மரத்தில் காய்க்கச் செய்து சாதனைப் படைத்திருக்கிறார் அமெரிக்காவின் சிராக்கஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் சாம் வான் ஏகன்.

    பல்கலைக்கழக வளாகத்திலேயே காணப்படும் இம்மரம் பல வண்ணங்களில் பூத்துக்குலுங்குவதை காணவே ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடுகின்றனர். எப்படி 40 பழங்களையும் ஒரே மரத்தில் விளைவிக்கமுடியும் என்பதற்கான முறையை வான் ஏகன் தனது இணையதளத்தில் விளக்கி இருக்கிறார்.

    கல்பழங்கள் என பெயரிட்டது எதன் காரணமாகவோ இருக்கலாம். ஆனால் மனிதகுல நலத்துக்கு பயன் தருவதில் எவற்றுக்கும் சளைத்தவை அல்ல.. இந்தப் பழங்கள் இந்தியாவில் அதிகம் விளையக்கூடியவை இல்லை. ஒரு வேளை அவை பரவலாக விளைந்திருந்தால், நம் இந்திய மக்கள் பெருந்தன்மையோடு ஈரம் மிக்க பழங்கள் என்னும் பொருளில் ஏதேனும் ஒரு பெயரை சூட்டி இருப்பார்கள்.



    Attached Thumbnails Attached Thumbnails Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்-fruits-noyau.jpg  
    sarjana ul likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter