Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree98Likes

Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்


Discussions on "Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்" in "Healthy and Nutritive Foods" forum.


 1. #21
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

  ஆரோக்கியத்துக்கு அவகேடோ!

  ஆரோக்கியமான உணவு பட்டியலில் அவகேடோவும்ஒன்று. 25க்கும் மேற்பட்டஊட்டச்சத்துக்கள் அவகேடோவில் அடங்கியுள்ளன. இதில் உள்ள சத்துக்கள் நோயின்பிடியிலிருந்து நம்மைக் காக்கின்றன.
  ஹெல்தி ஹார்ட்

  வைட்டமின் பி6, ஃபோலிக் ஆசிட் மற்றும் ஒலியிக் அமிலம் (oleic acid) ஆகியவை இதயத் தொடர்பான நோய்கள் வருவதைத்தடுக்கின்றன. மேலும், இந்தச் சத்துக்கள் இதயத்தின் ஆரோக்கியத்தைமேம்படுத்துகின்றன.

  குறையும்கொழுப்பின் அளவு

  பீட்டாசிடோஸ்டெரால் (betasitosterol) அதிகளவில் உள்ளதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை இந்தப்பழம் வெகுவாகக் குறைக்கும். ஹைபர்கொலஸ்ட்ரொலெமியா (Hypercholesterolemia) என்ற நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும்ஒருவர், 7 நாட்கள் தொடர்ந்து அவகேடோவை சாப்பிட்டுவந்தால், அந்த நோயின் தாக்கம் 17 சதவிகிதம் வரை குறையும். 22 சதவிகிதம் கெட்டக் கொழுப்பு குறைந்து, 11 சதவிகிதம் நல்ல கொழுப்பு உடலில் சேரும். நல்ல கொழுப்புநிறைந்திருப்பதால் இன்சுலின் குறைப்பாடும் சரியாகும்.

  ரத்தக்கொதிப்புக்குப் பை பை

  வாழைப் பழத்தில்இருக்கும் பொட்டாஷியத்தை விட அவகேடோவில் 35 சதவிகிதம் அதிகமாகவே உள்ளது. இதனால் உயர் ரத்த அழுத்தம்கட்டுப்படும். மேலும், வாழைப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளதால்செரிமானத்துக்கு ஏற்றது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையைச் சமன் செய்கிறது.

  அதிகரிக்கும்பார்வை திறன்

  லுடீன் (lutein) என்ற ஆண்டி ஆக்சிடன்ட், வயதாகிய பிறகும், பார்வை திறன் குறையாமல் தடுக்கிறது. மேலும், கண்களில் ஏற்படும் புரையை வளர விடாமல் தடுக்கும் ஆற்றல்அவகேடோவில் உள்ளது.

  கர்ப்பிணிகளுக்குஅருமருந்து

  ஃபோலேட், வைட்டமின் பி6 ஆகிய ஃபோலிக் அமிலங்கள் அவகேடோ பழத்தில் 23 சதவிகிதம் உள்ளது. கர்ப்பிணிகள் இதைச் சாப்பிட்டு வந்தால், பிறக்க போகும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.வயதானவர்களுக்குப் பக்கவாதம் வராமல் தடுக்கும்.

  புற்றுநோயைதடுக்கும் ஆன்டிஆக்சிடன்ட்

  ஆன்டிஆக்சிடன்ட்இதில் நிறைந்திருப்பதால் ஆண்களுக்கு வரும் ப்ராஸ்டேட் புற்றுநோயையும், பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயையும் தடுக்கிறது.மூப்படைதலை தடுத்து இளமையைத் தக்க வைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச்செய்யும். நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும். செல்களைச் சேதமடையாமல் பாதுகாக்கும்.

  நேசர் மவுத் வாஷ்

  இயற்கையானமுறையில் வாயை சுத்தம் செய்வதால் இதனை நேசர் மவுத் வாஷ்எனச் சொல்லலாம். குடலை சுத்தம் செய்யும் அதோடு நாக்கின்மேல் உள்ள கிருமிகளை நீக்கி, வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.

  உடல் எடையைக்கூட்டும்

  100
  கிராம் பழத்தில் 200 கலோரிகள் உள்ளன. இதனால், உடல் எடையைக் கூட்ட வேண்டும் என நினைப்போருக்கு அவகேடோ ஒருசிறந்த உணவு. நல்ல கொழுப்பும், சர்க்கரையும் இதில் அதிக அளவில் உள்ளன.

  அழகுக்கும்அவகேடோ

  தொடர்ந்து அவகேடோசாப்பிட்டு வர, சருமம் பளபளப்பாகும். கூந்தலின்ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும். முடி உதிர்தல் நிற்கும். கூந்தல் வறட்சிநீங்கும். எரிச்சல், சிவந்து போகுதல், சோரியாசிஸ் போன்ற சரும நோய்கள் குணமாகும்.  Sponsored Links
  kiruthividhya and sarjana ul like this.

 2. #22
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

  டிராகன் பழம் (Dragon Fruit )

  டிராகன் பழம் இப்படி ஒரு பழம் இருப்பது நம்மில் பலருக்கு தெரிய வாய்பிபில்லை. நானும் இதைப்பற்றி படித்திருக்கிறேன் கேள்விபட்டு இகுக்கிறேன். இந்தப் பழத்தை பார்ப்பதற்கு நம்ம ஊர் சப்பாத்தி கள்ளி பழம்போல் உள்ளது. உள் நிறமும் அப்படித்தான் இருக்கிறது. இது ஒரு கற்றாலை குடும்பம். கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம். இதன் நிறம், வடிவம் மற்றும் திகைப்பூட்டும் பூக்கள் இதன் பூக்கள் இரவு நேரத்தில் பூக்கும். இரவில் பூக்கள் பூப்பதால் இதை “நைட் ராணி” என்று கூறப்படுகிறது. வழக்கமாக பழம் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும், அது மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலும் காணலாம். இந்த பழத்தில் பச்சை செதில்கள் போல் அமைப்பு உள்ளது. பழம் மையத்தில், இனிப்பு கூழ் சிறு கருப்பு விதைகள், வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்.


  டிராகன் பழம் ஒரு மிதமான அளவு உலர் வெப்ப மண்டல சீதோஷ்ண நிலையில் வளரும். இதன் சரியான பிறப்பிடம் தெரியவில்லை, ஆனால் தெற்கு பெலிஸ் மூலமாக மெக்ஸிக்கோ, குவாதமாலா, எல் சால்வடார் மற்றும் கோஸ்டா ரிகா இருக்க வாய்ப்பு உள்ளது. இது வெப்ப மண்டல பகுதிகளில் உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது.

  மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் சிறிய அளவீடுகளில் வணிக ரீதியாக வளர்த்து குறிப்பாக கொலம்பியாவில்புகழ்பெற்று விளங்குகிறது. இப்போது அமெரிக்க, ஆசிய, மெக்ஸிக்கோ, வியட்நாம் வரை பரவியுள்ளது. உற்பத்தி மெக்ஸிக்கோ, இந்தோனேஷியா (குறிப்பாக மேற்கு ஜாவாவில்), தாய்வான், வியட்நாம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இலங்கை, மலேஷியா, மற்றும் மிக சமீபத்தில் வங்காளம் போன்ற ஆசிய நாடுகளில் பயிரிடப்படுகின்றன. அவைகள் ஓகினாவாவில், ஹவாய், இஸ்ரேல், ஆகிய இடங்களில் காணப்படுகின்றன வடக்கு ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு சீனாவில் பயிரிடப்படுகின்றன.
  டிராகன் பழம் மகரந்த சேர்க்கை வெளவால்கள் மற்றும் அந்துப்பூச்சிகளாள் இரவில் ஏற்படுகிறது. பழங்கள் சிவப்பு தோல் மற்றும் வெள்ளை சதை கொண்டிருக்கிறது, சிவப்பு தோல் மற்றும் சிவப்பு சதை உள்ளது, மஞ்சள் தோல் மற்றும் வெள்ளை சதை கொண்டிருக்கிறது.

  தாவரம் வளர குறைந்தது மூன்று மாதங்களுக்கு தேவைப்படுகிறது. அது பின்னர் ஒவ்வொரு மாதம் வரை ஆறு மாத காலம் வரை பழம் விளைகிறது. ஒவ்வொரு பழம் 700 மற்றும் 800 கிராம் வரை எடையுள்ளதாக. ஸ்வீட் டிராகன் பழம் மென்மையான நறுமணத்தை கொண்டிருக்கிறது.


  104F வரையிலான வெப்பநிலைகளை சமாளித்துக்கொள்ளும், மற்றும் பனி குறுகிய காலமே தாங்கும் ஆனால் நீண்ட குளிரிரை தாங்காது சேதம் ஏற்படும்.

  டிராகன் பழம் 20-50 ஆண்டுகள் மழை ஈரமான, வெப்ப மண்டல பகுதிகளில், தாவரங்கள் நன்றாக வளர்கின்றன.

  100 கிராம் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் தோரயமாக.
  நீர் 80-90 கிராம்
  கார்போஹைட்ரேட்கள் 9-14 கிராம்
  புரதம் 0.15-0.5 கிராம்
  கொழுப்பு 0.1-0.6 கிராம்
  இழை 0.3-0.9 கிராம்
  சாம்பல் 0.4-0.7 கிராம்
  கலோரிகள்: 35-50
  கால்சியம் 6-10 மி
  இரும்பு 0.3-0.7 மிகி
  பாஸ்பரஸ் 16 – 36 மி.கி.
  கேரட்டின் (வைட்டமின் A) தடயங்கள்
  தயாமின் (வைட்டமின் B1) தடயங்கள்
  ரிபோஃப்ளாவினோடு (விட்டமின் B2) தடயங்கள்
  நியாஸின் (வைட்டமின் B3) 0.2-0.45 மி
  அஸ்கார்பிக் அமிலம் (விட்டமின் சி) 4-25 மி
  இந்த புள்ளிவிவரங்கள் சாகுபடி நிலைமைகளின் படி மாறும். ஆரோக்கியமான ஆரோக்கியமான பழம் டிராகன் பழம்.  Attached Thumbnails Attached Thumbnails Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்-dragon-fruit-2.jpg   Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்-dragon-fruit-.jpg   Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்-dragon-fruit-1.jpg  
  sarjana ul likes this.

 3. #23
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

  நோய்களை நீக்க வாழை பழத்தை எப்படிப் பயன்படுத்தலாம்?

  நெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது. கர்ப்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது.

  நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும். இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.

  குடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்ஷேக் செய்து தேன் கலந்து பருகினால் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும். மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சாப்பிடச் சொல்வார்கள்.

  இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தக்காரர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது. கால்களில் ஆடுசதையில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறைவால் வருகிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம்.

  பூவன் : இந்த பழத்தை கதலி என்றும் அழைப்பார்கள். மலச்சிக்கல், மூலநோயால் அவதிப்படுவோருக்கு இந்த பழம் மிகவும் நல்லது.

  பேயன் பழம் : குடற்புண் தீர்க்கும். வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள் தினம் ஒரு பேயன் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தாலே போதும்.

  மலைவாழை : சோகையை நீக்கும். எளிதில் ஜீரணத்தை உண்டாக்கி மலச்சிக்கலைப் போக்குகிறது இந்த மலைவாழை.

  ரஸ்தாலி : இதில் மருத்துவ குணங்கள் குறைவு. ஆனால் சுவை அதிகம். செவ்வாழை பலமளிக்கும். மொந்தன் காமாலைக்கு நல்லது.

  பச்சைவாழை: வெப்பத்தைக் குறைக்கும். நவரை வாழை கரப்பான் நோயை அதிகப்படுத்தும்.

  வாழைப்பழத்தில் எந்த வகையானாலும், அஜீரணத்தைப் போக்குவதுடன், உடலில் தங்கும் தேவையற்ற பொருட்களை வெளிக்கொண்டு வரப் பயன்படுகிறது


  தொடர்ந்து இருமல் இருந்து வந்தால் கருமிளகு கால் தேக்கரண்டி எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதில் பழுத்த நேரந்திரம் பழத்தை கலந்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் சரியாகும்.

  காசநோய் உள்ளவர்கள் அரை கப் தயிரில் வாழைப்பழத்தை பிழிந்து, ஒரு தேக்கரண்டி தேன், ஒரு டம்ளர் இளநீர் ஆகியவை சேர்த்து தினமும் இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வர அந்த பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம். சின்னம்மை, டைபாய்டு, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கு தேனில் வாழைப்பழத்தைப் பிசைந்து தினமும் இரு வேளை வீதம் சாப்பிட வேண்டும்.

  பசும்பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டுவர அஜீரணம் சரியாகும். தொடர்ந்து தினமும் 2-3 வேளை இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும். காய்ச்சல் வருவதுபோல் உணர்ந்தால் ஒரு வாழைப்பழத்தை உடனே சாப்பிடுங்கள்

  Attached Thumbnails Attached Thumbnails Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்-302.jpg  
  sarjana ul likes this.

 4. #24
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

  அன்றாடம் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

  நம் வீட்டில் அம்மா தினமும் சாப்பிட பேரிச்சம் பழம் கொடுப்பார்கள். சிலர் பேரிச்சம் பழம் மிகவும் இனிப்பாக இருப்பதால், அதனை சாப்பிட மறுப்பார்கள். ஆனால் அன்றாடம் பேரிச்சம் பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

  ஏன் என்று பலருக்கு தெரியாது. இருப்பினும் அதனை சாப்பிட்டால், உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும் என்று மட்டும் தெரியும். ஆனால் பேரிச்சம் பழத்தில் உடலுக்கு தேவையான எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனால் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

  பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

  இந்த பேரிச்சம் பழத்தை அப்படியே அல்லது சட்னி செய்தும் சாப்பிடலாம்.இங்கு பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள்.

  இரத்த சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்
  உங்களுக்கு இனிப்பான பொருளை உட்கொள்ள ஆசை இருந்தால், பேரிச்சம் பழம் வாங்கி சாப்பிடுங்கள். ஏனெனில் பேரிச்சம் பழத்தில் இருப்பது ஆரோக்கியமான சர்க்கரை. ஆகவே இதனை உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

  எடையை அதிகரிக்கும்
  உடல் எடையை அதிகரிக்க நினைப்போர், பேரிச்சம் பழத்தை உட்கொள்வது நல்லது. அதிலும் இதனை அதிக அளவில் சாப்பிட வேண்டும். மேலும் இதில் சோடியம், கொலஸ்ட்ரால் இல்லாததால், இதனை உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வழியில் உடல் எடையை அதிகரிக்கலாம்.

  செரிமானத்தை சீராக்கும்
  பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால், இதனை அன்றாடம் உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலம் சீராக இயங்கும்.

  இதய ஆரோக்கியம்
  செரிமானம் சீராக நடைபெறுவதால், உடலில் கெட்ட கொழுப்புக்களின் சேர்க்கை குறைந்து, இதன் மூலம் இதயத்திற்கு எவ்வித அழுத்தமும் ஏற்படாமல், இதயத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

  இரத்த சோகை
  இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படுவது தான் இரத்த சோகை. இந்த இரும்புச்சத்து பேரிச்சம் பழத்தில் அதிகமாகவே உள்ளது. மேலும் இரும்புச்சத்தானது சிவப்பணுக்கள் ஆக்ஸிஜனை மற்ற பாகங்களுக்கு எடுத்துச் செல்ல உதவி புரியும்.

  பொட்டாசியம் நிறைந்தது
  100 கிராம் பேரிச்சம் பழத்தில் 656 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது. மேலும் உலக சுகாதார அமைப்பின் படி, ஒருவருக்கு ஒரு நாளைக்கு 3,510 மில்லிகிராம் பொட்டாசியம் தேவைப்படுகிறது. ஆகவே பேரிச்சம் பழத்தை அன்றாடம் உட்கொண்டு வந்தால், உடலுக்கு வேண்டிய பொட்டாசியத்தைப் பெறலாம்.

  நரம்புகளின் இயக்கம்
  பேரிச்சம் பழத்தின் வேறு சில சத்துக்களான கால்சியம், மக்னீசியம் மற்றும் வைட்டமின் பி6 போன்றவை நிறைந்துள்ளது. இதில் உள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. வைட்டமின் பி6 புரோட்டீன்களை உடைத்து, நரம்புகளிளை சீராப இயங்க  Attached Thumbnails Attached Thumbnails Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்-16-1424080775-6-dates.jpg  
  sarjana ul likes this.

 5. #25
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

  நீரழிவு நோயின் முக்கிய எதிரி செர்ரி...!

  இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது செர்ரிபழம். ரோஸ்யேசியே தாவர குடும்பத்தைச் சேர்ந்த இனிப்பு செர்ரியின் அறிவியல் பெயர் புருனஸ் அவியம், புளிப்பு செர்ரியின் அறிவியல் பெயர் புருனஸ் செரசஸ். இனிப்பு மற்றும் புளிப்பு செர்ரி பழங்கள் இரண்டுமே உடலுக்கு நலம் மிக்க சத்துக்களை கொண்டுள்ளன. செர்ரி பழங்கள் மிகக் குறைந்த ஆற்றல் வழங்குபவை. அதே நேரத்தில் ஊட்டச் சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்தது.

  ஆன்தோசயனின் கிளைகோசிட் எனும் நிறமிசெர்ரியில் மிகுந்துள்ளது. இது அவற்றிற்கு நிறத்தை வழங்குவதுடன் உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயல்படக் கூடியது. உடலில் சைக்ளோஆக்சிஜனேஸ் 1, சைக்ளோஆக்சிஜனேஸ் 2 போன்ற நொதிகள் செய்யும் வேலையை ஆன்தோசயானின் நிறமி செய்வதாக சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நொதிகள் குடல் மற்றும் சிறுநீரகத்தை பாதுகாக்கும் பணிகளில் பங்கெடுக்கிறது.

  பொட்டாசியம் இதய செயல்பாட்டிற்கும், உடல் மற்றும் உடற்செல்கள் வளவளப்பு தன்மையுடன் இருக்கவும், இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் அவசியமான தாதுவாகும். புளிப்பு செர்ரி பழத்தில் லுடின், ஸி-சான்தின், பீட்டா கரோட்டின் போன்ற ஆரோக்கியம் ஆன்டி-ஆக்சி டென்டுகள் உள்ளன. இவை தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டி அடிப்பவை.

  கீல் வாதம் மற்றும் சதைப்பிடிப்பு போன்ற பாதிப்புகளுக்கு எதிராகவும் இது செயல்படும். புற்றுநோளிணி, உடல் முதுமை அடைதல், நரம்பு வியாதிகள், நீரிழிவு போன்ற கொடிய பாதிப்புகளுக்கு எதிராக உடலை காக்கும் ஆற்றல் புளிப்பு செர்ரி பழத்திற்கு உண்டு. மெலடானின் எனும் சிறந்த நோளிணி எதிர்ப் பொருள் செர்ரி பழத்தில் இருக்கிறது. ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு மூளையில் கட்டி உண்டாதல் போன்ற பாதிப்பு ஏற்ப டாமல் தடுப்பதில் மெலடானின் பங்கு முக்கியமானது.

  இதுபோன்ற பாதிப்புகளில் வலியை கட்டுப்படுத்துவதிலும், நரம்பு மண்டல கோளாறுகள், இன்சோம்னியா போன்ற தூக்கமின்மை வியாதி, தலைவலி போன்றவற்றிற்கு எதிராகவும் மெலடானின் நோளிணித் தடுப்புபணியை செய்கிறது. பொட்டாசியம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், மாங்கனீசு போன்ற அத்தியாவசிய தாதுஉப்புக்கள் செர்ரி பழத்தில் நிறைந்துள்ளது.

  வயது மூப்பு மற்றும் புற்றுநோய்களுக்கு எதிராகவும் செயலாற்றக் கூடியது. மேற்கிந்திய தீவுகளில் கிடைக்கும் அசெரோலாவகை செர்ரி பழங்கள், பிற நாடுகளில் கிடைக்கும் செர்ரிபழங்களைவிட வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏமிகுதியாகக் கொண்டது. 100 கிராம் பழத்தில் 1677.6 மில்லிகிராம் வைட்டமின் சியும், குறிப்பிட்ட அளவில் வைட்டமின ஏ யும் உள்ளது.  Attached Thumbnails Attached Thumbnails Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்-13.jpg  
  sarjana ul likes this.

 6. #26
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்  sarjana ul likes this.

 7. #27
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

  வயிற்றுக் கொழுப்பு குறைய புளுபெர்ரி சாப்பிடுங்க…!

  புளுபெர்ரி என்று அழைக்கப்படும் அவுரிநெல்லி பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கவல்லது.

  இதன் பூக்கள் மணி வடிவத்தில் வெள்ளை, இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்.

  இதோ இதன் மருத்துவ பயன்கள்,

  நோய் எதிர்ப்பு சக்தி

  இயற்கையின் கொடையில் மிகச்சிறந்த உணவாக கருதப்படும் புளுபெர்ரி, மற்ற பழங்கள், காய்கறிகளை விட அதிக அளவு ஆண்டியாக்ஸிடண்ட்களை கொண்டுள்ளது என்று ஆய்வுகளின் முடிவில் தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
  நீலநிறத்தில் காணப்படும் புளுபெர்ரி பழம் நீலநிறமாவதற்கு தேவையான ஆண்டியாக்ஸிடன்ட்களை அதிகளவு கொண்டுள்ளது.

  மேலும், இதில் பைபர் மற்றும் வைட்டமின் சி ஊட்டசத்துகள் நிறைந்துள்ளது. இது இதயத்தில் உண்டாககூடிய நோய்களை தடுக்கிறது.

  வயிற்று கொழுப்பை குறைக்க
  நீலநிறத்தில் காணப்படும் புளுபெர்ரி பழமானது எடை குறைப்புக்கு பெரிதும் உதவுகிறது.

  உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் புளுபெர்ரி பழங்களை சாப்பிடலாம்.

  இப்பழத்தை உட்கொள்வதால் வயிற்றில் உள்ள கொழுப்புகளை அகற்றி உடலை பாதுகாக்கிது. சிலர் தொப்பையை குறைக்க முடிவதில்லை என கவலைப்படுவது உண்டு. அவர்கள் உலர்ந்த புளுபெர்ரியை சாப்பிட்டு தொப்பைக்கு டாடா காட்டிவிடலாம்.
  ஏனெனில் இப்பழத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகள் இரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பை அகற்றி சிக்கென்று உடலை வைத்துக்கொள்ள உதவி புரிகிறது.

  உயர் இரத்த அழுத்தம் தடுக்க
  நீல மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும் பழங்கள் அனைத்திலும் அந்தோசியனின்கள் உள்ளது. உயர் இரத்த அழுத்தத்திற்கு எதிராக இந்த நிறமிகள் போராடி உடல் நலத்தை பாதுகாக்கிறது.

  மூளை பராமரிப்பு
  புளுபெர்ரி பழத்தில் உள்ள அந்தோசியனின்கள் மூளையின் நரம்பு சம்பந்தப்பட்ட அனைத்து தொடர்புகளையும் இணைத்து அதிகரிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.

  புளுபெர்ரி பழச்சாற்றை வயதானவர்கள் தினமும் எடுத்துக்கொள்ளவதால் அவர்களது ஞாபகசக்தி மாறுபடுகிறது.
  sarjana ul likes this.

 8. #28
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

  பழங்களின் நிறமும் குணமும்

  இயற்கை நமக்களித்த கொடைகளுள் பழங்களும் ஒன்று. பழங்களை சமைக்காத உணவு என்பர் நம் முன்னோர்கள். உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும், புத்துணர்வையும் ஒருசேர தரவல்லது பழங்களே. பழங்களை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. தினமும் ஏதாவது ஒரு பழத்தை உண்டு வந்தால் நீண்ட ஆரோக்கியம் பெறலாம்.

  நோயுற்றவர்கள் உடல் நலம் தேற மருத்துவர்கள் பழங்களையே பரிந்துரை செய்வார்கள். நம்மில் சிலர் பழங்களை சாறு எடுத்து அருந்துவார்கள். சிலர் சாறு எடுக்கப்பட்டு போத்தல்களில் இரசாயனம் சேர்த்து பதப்படுத்தப் பட்டிருக்கும் பழச்சாறுகளை விரும்பி அருந்துவார்கள். பழங்களை சாறு எடுத்து அருந்துவதை விட அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அல்லது சாறு எடுத்த உடனேயே அருந்துவது நல்லது. அப்போதுதான் அதிலுள்ள நார்ச்சத்துக்கள் அழியாமல் உடலுக்குக் கிடைக்கும். இந்த நார்ச் சத்துக்கள் மலச்சிக்கலைத் தீர்க்கும். சீரண சக்தியை அதிகரிக்கும்.

  மேலும் சில விட்டமின் சத்துக்கள், தாதுக்கள் உடலுக்கு நிறைய கிடைக்கும். பழங்களில் பல நிறங்கள் உள்ளன. அனைத்துப் பழங்களும் சத்துக்கள் நிறைந்தவை. இப்பழங்களின் நிறத்துக்குத் தகுந்தவாறு அதன் சத்துக்கள் இருக்கின்றன.

  sarjana ul likes this.

 9. #29
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

  சிவப்பு நிறப் பழங்கள்

  கண்ணைக் கவரும் பழங்கள்தான் சிவப்பு நிறப் பழங்கள். இப்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவல்லவை. ஆப்பிள் apple, பிளம்ஸ் plums, செவ்வாழை, மாதுளம்பழம், இலந்தை, செர்ரி cherry போன்றவை சிவப்பு நிறப் பழங்களில் அடங்கும். விட்டமின் A சத்து அதிகம் நிறைந்த பழங்கள்.

  இவை இரத்தத்தை விருத்தி செய்யும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது. சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடையச் செய்யும். நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும்.

  மனஅழுத்தத்தைப் போக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.

  கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி, சிவப்பு நிறப் பழங்களுக்கு உண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எலும்பு மச்சைகளைப் பலப்படுத்துகிறது. இதயத்திற்கு சிறந்த டானிக்காக இந்த சிவப்பு நிறப் பழங்கள் விளங்குகின்றன.


  Attached Thumbnails Attached Thumbnails Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்-apple-thamil.co_.uk_.jpg   Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்-thamil.co_.uk_-e1425463568889.jpg  
  sarjana ul likes this.

 10. #30
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

  மஞ்சள் நிறப் பழங்கள்

  எலுமிச்சை, வாழைப்பழம், அன்னாசிப் பழம் வாழைப்பழம் போன்றவை மஞ்சள் நிறப் பழங்களில் அடங்கும். மஞ்சள் நிறப் பழங்களில் கல்சியம், விட்டமின் C, விட்டமின் A, போலிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளன.

  இதனால் எலும்புகள் பலப்படும். சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும் இரத்தம் சுத்தமடையும். பொதுவாக மஞ்சள் நிறப் பழங்கள் எல்லோரும் சாப்பிடலாம். இது நரம்புத் தளர்வைப் போக்கும். மயக்கமுள்ளவர்களுக்கு உடனே உணர்வை உண்டாக்கும். மன அழுத்தத்தைப் போக்கும். ஜீரண சக்தியைக் கூட்டும்.

  மலச்சிக்கலைப் போக்கும். குடல் புண்களை ஆற்றும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். கண் பார்வையையைத் தெளிவுபடுத்தும்.

  வாழைப்பழம் பொதுவாக கை கால் நடுக்கம், உதறல் போன்றவற்றைத் தடுக்கும் தன்மை கொண்டது. குடற்புண், வாய்நாற்றத்தை நீக்கும். அஜீரணத்தைக் குறைக்கும். கண் பார்வையைத் தெளிவாக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
  முகப்பொலிவு கொடுக்கும். பெண்களுக்கு கழுத்துப்பகுதி, முகம், கை கால் முட்டிகளில் ஏற்படும் கரும்படலத்தைப் போக்கும். இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தும். மலச்சிக்கலைத் தவிர்க்கும்.

  உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும், சிறுநீரகத்தைச் சுத்தப்படுத்தும். இது ஒரு கிருமிநாசினி
loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter