Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree98Likes

Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்


Discussions on "Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #31
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    பச்சை நிறப் பழங்கள்

    பச்சை திராட்சை, பச்சை ஆப்பிள், சீத்தாப்பழம், கொய்யா, பலாப்பழம், பேரிக்காய் pear போன்றவை இதில் அடங்கும். இப்பழங்கள் காய்கறிகளை ஒத்திருப்பதால் அவற்றில் உள்ள சத்துக்கள் போல் இவ்வகைப் பழங்களிலும் உள்ளன. உடலின் வளர்சிதை மாற்றங்களில் இத்தகைய பச்சை நிறப் பழங்கள் மிகுந்த பங்களிக்கின்றன. மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சை நிறப் பழங்களை அதிகம் உட்கொண்டால் இளைத்த உடல் எளிதில் தேறும்.




    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்-pears-thamil.co_.uk_.jpg  
    sarjana ul likes this.

  2. #32
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    ஆரஞ்சு நிறப் பழங்கள்

    மாம்பழம், ஆரஞ்சு, நட்சத்திரப் பழம் போன்றவை ஆரஞ்சு நிறப் பழங்களுள் அடங்கும். உடலுக்கு சக்தியைக் கொடுத்து ஊக்கம் அளிக்கின்றன. இவற்றில் விட்டமின் B3, C, D, E மற்றும் K சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆரஞ்சு நிறப் பழங்களில் பொட்டாசியம் சத்து மிகுந்துள்ளது.

    இது மன அழுத்தத்தைப் போக்கக்கூடியது. இரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்துகிறது. சீரண சக்தியை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டுகிறது. கண்பார்வைக் கோளாறுகளை நீக்குகிறது. இதயத்தைப் பலப்படுத்தி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. புற்றுநோய் வருவதைத் தடுக்கும்.




  3. #33
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    நீல நிறப் பழங்கள்

    நீலத் திராட்சை, நாவல்பழம், நீல பிளம்ஸ் போன்றவை அடங்கும். மனிதனுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக்கூடிய பழங்கள் நீல நிறப் பழங்களாகும். துவர்ப்பு சுவை மிகுந்ததாக இருக்கும். இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

    மூளையின் கலங்களை தூண்டி புத்துணர்வு பெறச் செய்கிறது. தொண்டைக்கம்மல், வறட்டு இருமலைப் போக்கும். தலைவலி, தலையில் நீர்க் கோர்வையைப் போக்கும். ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் உகந்த மருந்தாகும். நுரையீரலைப் பலப்படுத்தி சுவாசத்தை எளிதாக்கும். இரத்தம் உறைவதை துரிதப்படுத்தும்.



    sarjana ul likes this.

  4. #34
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    மண் நிறப் பழங்கள்

    சப்போட்டா பழம், விளாம்பழம் இதில் அடங்கும். இது உடலுக்கு ஊக்கமளிக்கும். கொழுப்புச் சத்தை அதிகரிக்கும். சீரண சக்தியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். குடற்புண்களை ஆற்றும். வாய்ப்புண், வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.




    sarjana ul likes this.

  5. #35
    bharathi saravanan's Avatar
    bharathi saravanan is offline Commander's of Penmai
    Real Name
    Dhivya Bharathi
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    Chennai
    Posts
    1,612

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    useful info.......thanks for sharing......

    chan likes this.
    Very little is needed to make a happy life; it is all within yourself, in your way of thinking.


    எனது வரிகள்

  6. #36
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    மாதுளை - குணமும், பயன்களும்



    ஆயுர்வேதத்தின் படி மாதுளம் பழத்தின் குணாதிசயங்கள் பின்வருமாறு


    அக்னி தீபகா (பசியை தூண்டும்), ருசி ஜானகா (ருசியை தூண்டும்), பித்தகாரகா (பித்தத்தை அதிகரிக்கும்), ஹிர்தயா (இதயத்தை வலுப்படுத்தும்), கிராஹி (பேதியை எதிர்க்கும்), சீதனா (குளிர்விக்கும்), ரக்த சோதகா (ரத்தத்தை சுத்தீகரிக்கும்).

    மரப்பட்டை மற்றும் வேர்பட்டை - கிராஹி, க்ருமிக்னா (கிருமி, பூச்சிகளை அழிக்கும்) பழத்தோல் - கிராஹி.

    மாதுளம் பழச்சாற்றில், குளூகோஸ், ஃப்ரூக்டோஸ், டேனின் (Tannin) மற்றும் ஆக்சாலிக் அமிலங்கள் உள்ளன.

    வேர்பட்டை, மரப்பட்டை - துவர்ப்பு (Astringenet) - நரம்புகளை சுருக்கி, ரத்தம், சீழ் முதலியவற்றை நிறுத்தும் பொருள். தவிர வயிற்றுப் புழுக்களை (குறிப்பாக நாடா புழுவை) கொல்லும் ஆற்றல் உடையவை. பழத்தின் தோலை (Rind) நன்கு பொடித்து ஒரு மேசை கரண்டி அளவில் தண்ணீருடன் கலந்து காலையிலும் மாலையிலும் இரு வேளை 3 நாட்கள் குடித்து வர, வயிற்றுப் பூச்சிகள் அழியும்.

    பழத் தோலின் உட்பாகம் (rind) சீதபேதியை நிறுத்தும். இந்த பனியை அது கிராம்புடன் சேர்ந்து செய்யும்.

    பழச்சாறு, கல்லீரல், சிறுநீரகம், இதயம் இவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. ஜுரங்களில் சிறுநீர் பெருக்கி. கல்லீரலுக்கு தேவையான தாதுப்பொருட்கள், விட்டமின் ஏ முதலியவற்றை தருகிறது. பழச்சாறு உடலின் நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கிறது.

    இருமல், வீசிங் (Wheezing) உள்ளவர்கள் 3 மணிநேரத்திற்கு ஒரு முறை மாதுள பழச்சாற்றுடன் இஞ்சி சாறு தேன் கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

    மாதுளம் பழச்சாறு வயிற்றுப் புண்களுக்கு (Ulcer) கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்தாகும்.

    வெறும் வயிற்றில் காலையில் (ஒரு நாள் விட்டு ஒரு நாள்) மாதுளம் பழத்தை சாப்பிட்டால் உடலின் எலும்புகள் வலுப்படும்.

    மாதுளம் பழத்தை 14 நாட்களுக்கு, படுப்பதற்கு முன் எடுத்துக் கொண்டால் ஆண்மையின்மை குறைபாடு நீங்கும்.

    மாதுளம் பழ ஜுசும், விதைகளும் இதயத்திற்கும், தொண்டைக்கும் சிறந்த "டானிக்"காக ஆயுர்வேதம் சொல்கிறது.

    மாதுளம் பழச்சாறு, உட்தோல் (rind) மரப்பட்டை, துவர்ப்பு குணம் (Astringent) உடையவை. இவை ரத்தம் கசியும் மூலம், மூக்கிலிருந்து ரத்தம் வடிதல், ஈறிலிருந்து ரத்தம் கசியும் போன்ற ரத்தப்போக்குளை தடுக்க மருந்தால் பயன்படுத்தப்படுகின்றன. சரகசம்ஹிதை மரப்பட்டை கஷாயத்தை ரத்த மூலத்திற்கு மருந்தாக பரிந்துரைக்கிறது.

    இனிப்பு ரக மாதுளம் பழம் ஒரு மிதமான மலஇளக்கி. இனிப்பு குறைந்த மாதுளம் பழம் அமல பித்தம் (Gastritis) மற்றும் நெஞ்செரிச்சலுக்கு நல்ல மருந்து.

    மாதுளம் பிஞ்சு, இலைகளின் சாறு மற்றும் மரப்பட்டை கஷாயம் சீதபேதியை நிறுத்த உதவுகின்றன.

    "குல்நார்" பூக்கள், சிறுநீரில் ரத்தம் போதல், ரத்த மூலம் இவற்றுக்கு மருந்தாகும். பூக்கள் உலர்ந்து இருக்க வேண்டும்.

    மாதுளம் மொட்டுக்களின் பொடி பிராங்கைடீஸ் (Bronchitis) நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.

    விதைகளின் சதைப்பற்று பசியை அதிகரிக்கும்.

    மாதுளம் பழ ஜுஸ் தூக்கமின்மை, மறதி பிரச்சனைகளுக்கு மருந்தாகும்.

    வேரின் பட்டை பாலுடன் சேர்த்து குழந்தைகளின் கல்லீரல் வீக்கத்திற்கு மருந்தாக தரப்படுகிறது.

    பாலியல் நோயான சிபிலிஸ்ஸக்கு (Syphilis) மரப்பட்டை பொடி மருந்தாக உபயோகிக்கப்படுகிறது.

    மாதுளை பாம்பு, தேள் கடிகளுக்கு மருந்தாக பயனளிக்கிறது.

    உலர்ந்த மாதுளை தோலின் பொடியுடன் உப்பு, மிளகு பொடி சேர்த்து சிறந்த பற்பசையாக உபயோகிக்கலாம். ஈறுகள் பலப்படும். பயோரியா தடுக்கப்படும்.

    மெக்சிகோவில் மாதுளம் பூக்களின் கஷாயத்தை, வாய் மற்றும் தொண்டை தொற்று, அழற்சிகளுக்கு மருந்தாக உபயோகிக்கின்றனர்.

    மாதுளையின் தாவரவியல் வார்த்தையான Punica granatum லத்தின் வார்த்தையான Granatum என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள் "விலை மதிப்பில்லாதது". மாதுளையின் பல பயன்களை பார்த்தால் இது சரியான வார்த்தை என்று தோன்றுகிறது. இந்தியாவில் மாதுளை இலைகளும், பூக்களும், விநாயகர், சத்ய நாராயண பெருமாள் ஆகிய தெய்வங்களுக்கு அர்ச்சிக்கப்படுகிறது.

    "பைபிளில் வரும் ஈடன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் சுவைத்த பழம் ஆப்பிளல்ல மாதுளம் பழம் தான்" என்று கூறுவோரும் உண்டு. துருக்கியில் ஒரு வழக்கம் உண்டு. புதிதாக கல்யாணமான பெண்மணி மாதுளம் பழத்தை கீழே தரையில் வீச வேண்டும். எவ்வளவு மாதுளை பழ விதைகள் சிதறுகின்றனவோ அவ்வளவு குழந்தைகள் அவளுக்கு பிறக்கும் என்று நம்பிக்கை.

    sarjana ul likes this.

  7. #37
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்


    ப்ரூன்ஸ்னா என்ன?



    ப்ளம்ஸ் !உங்க எல்லோருக்கும் தெரியும்.ப்ரூன்ஸ் ரொம்ப பேர் கேள்விபட்டிருக்க மாட்டீங்க.காயவைத்து பதப்படுத்தப்பட்ட யுரோப்பியன் ப்ளம்ஸ் தான் ப்ரூன்ஸ்.[prunes are dried version of plums.]நம்ம ஊர்ல எல்லா கடைகளிலும் கிடைக்கிறது.



    ப்ரூன்ஸின் மருத்துவ குணங்கள்:



    *ஒரு சில பழங்களைத்தான் super fruit என்று கூறுவர்.அந்த வரிசையில் ப்ரூன்ஸும் வருகிறது.ஏனெனில் இதில் இருக்கும் மருத்துவ குணங்களும்,antioxidants மற்றும் phytochemicals னால் தான்.



    *இதில் அதிகளவில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால்,சிறந்த மலமிளக்கியாக செயல் படுகிறது.[prevents constipation].



    *தொடர்ந்து நம் உணவில் இப் பழத்தை சேர்த்துக் கொள்ளும் பொழுது,எலும்பின் அடர்த்தி [bone density]குறையாமல் வலுவாக இருக்கும்.இதில் இருக்கும் பொட்டாஷியமும்,போரானும் தான் எலும்பிற்கு பலம் சேர்க்கிறது.



    *ரத்த சோகைக்கு [anemia]சிறந்த மருந்து.



    *ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.



    *இதில் இருக்கும் பீட்டாகரோட்டீன் புற்று நோயிலிருந்து காக்கிறது



    *ப்ரூன்ஸில் கொழுப்புச்சத்து சுத்தமாக இல்லை.அதிகளவில் விட்டமிங்களும்,மினரல்ஸும் இருக்கிறது.தொடர்ந்து சாப்பிட்டால் முகம் நல்ல பொலிவுடன் காணப்படும்.தோலும் பளபளப்பாக இருக்கும்.



    *இப்பழத்தை NUTRITION POWER HOUSE என்றும் கூறுவர்.இவ்வளவு சத்துக்கள் நிறைந்த இப்பழத்தை கண்டிப்பா உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.



    A PRUNE A DAY KEEPS AILMENTS AWAY.



    Last edited by chan; 9th Mar 2015 at 12:44 PM.
    sarjana ul likes this.

  8. #38
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    கர்ப்பிணிகள் உணவில் ப்ரூன்ஸ் பழமும் இடம்பெறட்டும்!


    ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் சாப்பிட வேண்டும். இரும்புச்சத்து, போலிக் அமிலம், கால்சியம் சத்துள்ள உணவுகளை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். பேறுகாலத்தில், இரும்புச்சத்து (18மில்லி கிராம் முதல் 27 மில்லி கிராம் வரை) அதிகமாகத் தேவைப்படும். அதனால், இந்த சத்துள்ள உணவுப் பொருட்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.


    பேறு காலத்தின் முதல் மூன்று மாதத்தில் அனைத்து பெண்களுக்கும் வாந்தி ஏற்படுவது இயல்பு. உடலின் செரிமான பணிகள் அனைத்தும் ஹார்மோன் மாற்றங்களின் கட்டுப்பாட்டில் இயங்குவதால், கருவுற்ற பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும்.


    பேறுகாலத்தில் கரு முழுமையாக வளர, ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியாகும். அதே சமயம், இந்த ஹார்மோன்கள் குடல் இயக்கத்தின் வேகத்தைக் குறைத்து விடுகிறது. இதனால், மலச்சிக்கல் ஏற்படுகிறது. தசைகளைத் தளர்த்துவதன் மூலம் ஹார்மோன்களில் ஒன்றான புரோஜெஸ்ட்ரான் செயல்படும்.



    தசைகளால் ஆன குடலின் வெளிப்புறச் சுவர் தளர்வதால் உணவு மற்றும் மலத்தின் வேகம் குறைகிறது.


    சில நேரங்களில் இரைப்பை, குடல் உறுத்தல்கள் ஏற்படும். பேறுகாலத்தில் இயல்பாகவே, தவிப்பும் ஆர்வமும் அதிகமாக இருக்கும்.


    ப்ரூன்ஸ் பழத்தில் உள்ள சத்துக்கள் இதுபோன்ற சிக்கலான நேரத்தில், குடல்களின் இயக்கத்திற்குத் தேவையான நார்ச்சத்தை வழங்குகிறது.


    * குடல்களின் வேகமான செயல்பாடுகளுக்கு நார்ச்சத்துக்கள் மிகவும் முக்கியம். ப்ரூன்ஸ் பழங்கள் நீர்ச்சத்தை உறிஞ்சிக் கொள்வதால், மலச்சிக்கலைப் போக்குகிறது.


    * ப்ரூன்ஸ் பழங்கள் சுவையாக இருப்பதுடன், தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.


    * ஆரோக்கியமான குழந்தையைப் பெற, இரும்புச்சத்து முக்கியமான ஊட்டச்சத்து. ப்ரூன்ஸ் பழங்களில் உள்ள இந்த ஊட்டச்சத்து தாய் மற்றும் குழந்தைக்குத் தேவையான ஹீமோகுளோபினை அளிக்கிறது. இது ரத்தசோகையைத் தடுத்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.


    * ப்ரூன்ஸ் பழங்களில் உள்ள பொட்டாசியம் சத்து இயற்கையாகவே உயர் ரத்த அழுத்தத்தைத் குறைக்கும் திறன் கொண்டது.


    * இதில் கொழுப்புச்சத்துக்கள் இல்லாததால், எப்போது பசித்தாலும் சாப்பிடலாம்.


    தகவல்: கலிபோர்னியா ப்ரூன்ஸ் வாரியம்.




    sarjana ul likes this.

  9. #39
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    பலாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

    சாலையின் ஓரத்தில் இருக்கும் தள்ளுவண்டியை கடக்கும் போது வாசனை தூக்குகிறதா? ஆம், அதான் முக்கனிகளுள் ஒன்றான பலாப்பழத்தின் சீசன் ஆரம்பித்துவிட்டதே? பின் வாசனை தூக்காமலா இருக்கும்.

    அப்படி விற்கப்படும் பலாப்பழத்தின் வாசனையை நுகர்ந்து மட்டும் செல்லாமல், அதனை வாங்கி சாப்பிடவும் செய்யுங்கள். ஏனெனில் பலாப்பழம் வருடம் முழுவதும் கிடைக்காது. அதற்கென்று வரும் சீசன் போது வாங்கி சாப்பிட்டால் தான், அதன் உண்மையான சுவையை ருசிக்க முடியும்.

    உடல் எடையில் மாற்றம் தெரிய வேண்டுமா? அப்ப உங்க டயட்-ல பலாப்பழத்தை சேத்துக்கோங்க...

    பலாப்பழம் மட்டுமின்றி, அதன் விதையிலும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், பைட்டோ நியூட்ரியன்ட்டுகள், கார்போஹைட்ரேட்டுகள், எலக்ரோலைட்டுகள், நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் போன்றவை வளமாக உள்ளது.

    மேலும் இப்பழத்தில் கலோரிகள் இருக்கிறது ஆனால் கொழுப்புக்கள் இல்லை. ஆகவே இப்பழத்தை எவ்வித அச்சமும் இல்லாமல் ரசித்து ருசித்து சாப்பிடலாம். அதுமட்டுமின்றி, இது உடலுக்கு மட்டுமின்றி அழகைப் பாதுகாக்கவும் உதவுகிறது. சரி, இப்போது பலாப்பழத்தின் நன்மைகளைப் பார்ப்போமா!!

    மலச்சிக்கல் பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு, நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, முகம் பொலிவோடு இருக்கும்.

    நோயெதிர்ப்பு சக்தி பலாப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், இவற்றை உட்கொள்வதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் காய்ச்சல், சளி போன்றவை தாக்காமல் தடுக்கலாம்.

    புற்றுநோயைத் தடுக்கும் பலாப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், பைட்டோ நியூட்ரியன்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள் உள்ளது. இவை புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

    இரத்த அழுத்தம் பலாப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது உடலில் சோடியத்தின் அளவை சீராக பராமரிக்கும். இதனால் உடலில் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும்.

    குடல் புற்றுநோய் பலாப்பழத்தில் டயட்டரி கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், அவை குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, குடல் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

    பார்வையை மேம்படுத்தும் பலாப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், அவை பார்வை கோளாறு ஏற்படுவதைத் தடுப்பதோடு, கண்களில் புரை ஏற்படுவதையும் தடுக்கும். முக்கியமாக பலாப்பழத்தில் கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஏ அதிகம் உள்ளது.

    சரும ஆரோக்கியம் தற்போது விரைவிலேயே முதுமைத் தோற்றம் ஏற்படுகிறது. ஆனால் பலாப்பழத்தை உட்கொண்டு வந்தால், விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படுவதைத் தடுத்து, சருமத்தை இளமையோடு பாதுகாக்கலாம்.

    எலும்புகளின் ஆரோக்கியம் பலாப்பழத்தில் உள்ள கால்சியம், எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதோடு, எலும்புகளை வலிமையோடும் வைத்துக் கொள்ளும். இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நாள்பட்ட மூட்டுவலி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

    இரத்த சோகை பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, சி, ஈ, கே, நியாசின், வைட்டமின் பி6, ஃபோலேட், பேன்டோதெனிக் ஆசிட், காப்பர், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் அதிகம் இருப்பதால், அவை இரத்தம் உருவாக உதவும். மேலும் இப்பழம் உடலானது இரும்புச்சத்தை உறிஞ்சி, இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கும்.

    சளி மற்றும் நோய்த்தொற்றுகள் பலாப்பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இவற்றை உட்கொள்ளும் போது, சளி மற்றும் நோய்த்தொற்றுகள் தாக்குவது தடுக்கப்படும். மேலும் ஒரு கப் பலாப்பழத்தில் உடலுக்கு வேண்டிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கிடைத்து, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடையும்.

    இரத்த சர்க்கரை அளவு உடலில் மாங்கனீசு குறைபாட்டினால் ஏற்படுவது தான் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாவது. ஆனால் இந்த சத்து பலாப்பழத்தில் அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட்டு வந்தால், இரத்த சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ளலாம்.

    இதய நோய் பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6, இரத்தத்தில் ஹோமோசிஸ்டின் அளவை குறைத்து, இதயத்தை சீராகவும் ஆரோக்கியமாகவும் செயல்பட உதவும்.

    சரும சுருக்கம் பலாப்பழத்தின் விதையை பாலில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதனை அரைத்து முகத்தில் தடவி மாஸ்க் போட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், ஆறே வாரங்களில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.

    கூந்தல் வளர்ச்சி பலாப்பழத்தின் விதைக்கு உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. ஆகவே இதன் விதையை சமைத்து சாப்பிட்டு வந்தால், தலை முதல் கால் வரை இரத்த ஓட்டம் சீராக இருந்து, இதனால் தலையில் முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

    பட்டுப்போன்ற சருமம் நல்ல பட்டுப் போன்ற சருமத்தைப் பெற, பலாப்பழத்தின் விதையை உலர வைத்து, அதனை பால் மற்றும் தேனுடன் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி, உலர வைத்து கழுவி வேண்டும். இப்படி செய்து வந்தால் பட்டுப் போன்ற சருமத்தைப் பெறலாம்.

    வைட்டமின் ஏ பலாப்பழத்தின விதையில் உள்ள வைட்டமின் ஏ, முடிக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. முக்கியமாக முடியின் ஆரோக்கியத்தையும், முடியில் ஏற்படும் வறட்சியையும் தடுக்கும்.



    sarjana ul likes this.

  10. #40
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    இரத்த சோகையைப் போக்கும் பம்பளிமாஸ் பழம்

    பம்பளிமாஸ் பழம் சாத்துக்குடி, ஆரஞ்சு வகையைச் சேர்ந்தது. இந்தப் பழம் பச்சை நிறத்தில் பெரிய பந்து போல இருக்கும். முற்றின காயின் மேல் இளம் மஞ்சள் நிறத்தில் மாறும் அதுதான் பழம். இதன் தோல் அழுத்தமாக காணப்படும். உள்ளே சாத்துக்குடிபோல சுளைகள் இருக்கும்.

    சிலவகை வெள்ளைச் சுளைகளைக் கொண்டிருக்கும்.

    சிலவற்றின் சுளைகள் ரோஸ் நிறத்தில் காணப்படும். இந்த இரண்டு வகைப் பழங்களின் குணமும் ஒன்றுதான். இதில் புளிப்பு, இனிப்பு என இரண்டுவகை உண்டு. இதில் புளிப்புவகையை விட இனிப்பு வகையேசிறந்தது. இது அனைத்து காலங்களிலும் கிடைக்காது அதற்கென உள்ள சீசனில் மட்டுமே கிடைக்கும்.

    இது குளிர்ச்சி நிறைந்தது எனவே சளி, சீதாள தேகம் உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது.

    பழங்கள் யாவும் உடலுக்கு நேரடியாக சத்துக்களை அளிக்க வல்லவை. உடலுக்குத் தேவையான புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள் அனைத்தும் பழங்களில் நிறைந்துள்ளன. பழங்கள் உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கும்.

    தினமும் ஒரு பழமோ அல்லது பழக்கலவையோ சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

    பம்பளிமாஸ் பழம் சாத்துக்குடி, ஆரஞ்சு வகையைச் சேர்ந்தது. இந்தப் பழம் மற்றும் சுளைகள் பெரியதாக இருக்கும்.

    பித்த அதிகரிப்பை சரி செய்யும் தன்மை பழங்களுக்கும், கீரைகளுக்கும் உண்டு. இதில் பம்பளிமாஸ் பழம் பித்த அதிகரிப்பை வெகு விரைவில் குறைக்கும்.

    இப்பழம் கிடைக்கும் காலங்களில் சாப்பிட்டு வருவது நல்லது.

    கண் பார்வைக் கோளாறுகள் நீங்க வைட்டமின் ஏ சத்து அவசியம். இந்த வைட்டமின் ஏ சத்துக் குறைவதால் மாலைக் கண் நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இக்குறைகளை களைய பம்பளிமாஸ் பழம் சிறந்த மருந்தாகும். காரட் எப்படி கண்களை காக்கிறதோ அதேபோல் பம்பளிமாஸ் பழமும் காக்கும்.

    ஈரல் பாதிப்புகளால்தான் காமாலை நோய் உருவாகின்றது. இந்த காமாலை நோயின் தாக்கம் குறைய பம்பளிமாஸ் பழம் நல்லது. இப்பழம் கிடைக்கும் காலத்தில் அதிகம் வாங்கி சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.

    கோடைக்காலத்தின் அதிக வெயிலில் அலைபவர்கள், அதிக சூடுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்களின் உடல் வெகு விரைவில் வெப்பமடையும்.

    இவர்கள் பம்பளிமாஸ் பழத்தை சாறு குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.

    இரத்த சோகையைப் போக்கும் குணம் பம்பளிமாஸ் பழத்திற்கு உண்டு. இந்தப் பழத்தின் சுளைகளை மதிய உணவுக்குப்பின் தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தச் சோகை குறைபாடு நீங்கும்.

    வயிற்றுப் போக்கு சிலருக்கு அடிக்கடி ஏற்படும்.

    இதற்குக் காரணம் தெரியாமல் அடிக்கடி மருத்துவரை நாடுவார்கள். எந்த வகையான மருந்துகள் சாப்பிட்டாலும் இவர்களின் சீதளப் போக்கு அப்படியே இருக்கும். இதற்குக் காரணம் இவர்களின் சீதள தேகம்தான். இவர்கள் பம்பளிமாஸ் பழத்தை சாறு எடுத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு ஏற்படுவது குறையும்.

    வருடத்தில் சில மாதங்களே கிடைக்கும் பம்பளிமாஸ் பழத்தை வாங்கி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்



    sarjana ul likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter