Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree98Likes

Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்


Discussions on "Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #41
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா?


    இந்தியாவின் முக்கியமான பழங்களில் ஒன்று மாம்பழம், இல்லாவிட்டால் முக்கனிகளில் ஒன்றாக்கி அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்போமா! இந்தியாவில் மட்டும் 1000 வகை மாம்பழங்கள் இருக்கு. தமிழ்நாட்டு மார்க்கெட்டுகளிலேயே ருமானி, அதிமதுரம், முண்டப்பா பஞ்சவர்ணம், நீலம், பங்கனப்பள்ளி, ஒட்டு மாம்பழம்னு பட்டியல் நீளமா போய்க்கிட்டே இருக்கும்.

    மாம்பழங்களில் அதிக அளவில் கரோட்டீன் சத்து உள்ளது. அல்போன்சா வகை மாம்பழத்தில் எக்கச்சக்கமான பீட்டா கரோட்டீன் (Carotene) சத்தும், பங்கனப்பள்ளி மற்றும் பெத்தராசலு வகைகளில் மிதமான அளவு பீட்டா கரோட்டீன் (Carotene) சத்தும் உள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே மாலைக்கண் போன்ற கண் தொடர்பான நோய்களுக்கு மாம்பழம் சாப்பிடுவது நல்லது.

    தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் உடலில் இரத்த ஓட்டம் சீராகி நரம்புத் தளர்ச்சி நீங்கி உடல் வலுவடையும். காரணம் மாம்பழத்திற்கு இரத்தத்தில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உண்டு. இது மட்டுமல்ல, இதயத்தையும், மூளையையும் பலப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கும்.

    கர்ப்பிணிகள் மாம்பழம் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை நல்ல ஊட்டத்தோடு பிறக்கும். பெண்களின் மாதவிடாய் பிரச்சினைக்கும் மாம்பழம் சாப்பிடுவது நல்லது. நல்ல கனிந்த மாம்பழங்களை சாப்பிட்டால் மாதவிடாய் ஒழுங்குப்படும். அதேசமயம் பெண்கள் மாதவிலக்கு நாட்களில் காலை நேரத்தில் சாப்பிட்டால் உதிரப்போக்கு அதிகரிக்கும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.

    மாம்பழம் பல் நோய்களையும் போக்கும். பழத்தை துண்டு துண்டாக நறுக்கி வாயில் போட்டு ஈறுகளில் படும்படி வைத்திருந்து 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து துப்பிவிட்டால் பல்நோய் பறந்துவிடும். சிறுநீர் பையில் உள்ள கற்களைப் படிப்படியாகக் கரைக்கும் ஆற்றலும் மாம்பழத்திற்கு உண்டு. இரவில் மாம்பழம் சாப்பிட்டு விட்டுத் தூங்கினால் அடுத்த நாள் மலச்சிக்கல் இல்லாமல் இருக்கும்.

    அதெல்லாம் சரிதான், சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா, கூடாதா அதைச் சொல்லுங்க முதல்ல என்கிறீர்களா...? பயப்படாதீங்க தாராளமா சாப்பிடலாம் போதுமா! தினம் ஒரு மாம்பழம் சாப்பிட்டு வந்தால் அதிக கொழுப்புச் சத்து, நீரிழிவு ஆகியவை வருமுன் தடுக்கலாம் என சமீபத்திய ஆஸ்திரேலிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இன்னொரு விஷயம் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்.... மாம்பழத்தில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் அதிகக் கொழுப்பு மற்றும் நீரிழிவுக்கு எதிரான மருந்துகளைப் போல செயல்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். மாம்பழத்திற்கு புற்றுநோய் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இருக்கிறதா என்றும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    சொல்லிவிட்டன என்று இன்சுலின் உபயோகித்து வருபவர்கள் மாம்பழத்தை அதிகம் சாப்பிட்டு விடாதீர்கள். உங்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி அளவாகச் சாப்பிடுங்கள்.

    100 கிராம் மாம்பழத்தில் உள்ள சத்துக்கள்

    சக்தி - 70 கிலோ கலோரிகள்
    கார்போஹைட்ரேட் - 17.00 கிராம்
    சர்க்கரை - 14.08 கிராம்
    நார்ச்சத்து - 1.08 கிராம்
    கொழுப்பு - 0.27 கிராம்
    புரதம் - 0.51 கிராம்
    வைட்டமின் ஏ - 38 மைக்ரோ கிராம்
    பீட்டா கரோட்டீன் - 445 மைக்ரோ கிராம்
    தையாமின்
    (வைட்டமின் பி) - 0.058 மில்லி கிராம்
    ரிபோஃபிளேவின்
    (வைட்டமின் பி2) - 0.057 மில்லி கிராம்
    நியாசின்
    (வைட்டமின் பி3) - 0.584 மில்லி கிராம்
    பான்டோதெனிக்
    அமிலம் (பி5) - 0.160 மில்லி கிராம்
    வைட்டமின் பி6 - 0.134 மில்லி கிராம்
    போலேட்
    (வைட்டமின் பி9) - 14 மைக்ரோ கிராம்
    வைட்டமின் சி - 27.7 மில்லி கிராம்
    கால்சியம் - 10 மில்லி கிராம்
    இரும்புச் சத்து - 0.13 மில்லி கிராம்
    மக்னீசியம் - 9 மில்லி கிராம்
    பாஸ்பரஸ் - 11 மில்லி கிராம்
    பொட்டாசியம் - 156 மில்லி கிராம்
    துத்தநாகம் - 0.04 மில்லி கிராம்

    நன்றி: தமிழ் வாசல்


    Sponsored Links
    sarjana ul likes this.

  2. #42
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    தக்காளிப் பழத்தின் மருத்துவ பயன்கள்

    இது மிகவும் குளிர்ச்சியான பழம். தக்காளியை ஆரம்ப காலத்தில் நஞ்சுக்கனி என்றே விலக்கியிருந்தனர். காலப்போக்கில் அதன் சுவையை உணர்ந்து சுவைத்து உண்டனர். தற்போது அதை சமையலின் பொருளாக மாற்றி, தனிப்பட்ட முறையில் உண்பதை விட்டுவிட்டனர். சாம்பார், ரசம், சட்னி.. என்று உணவில் அதை எல்லாவற்றிற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

    இப்பழத்தின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், தனியே சாப்பிட்டாலும், சமையலுக்கு பயன்படுத்தி சாப்பிட்டாலும் அதன் சத்து குறைவதே இல்லை.இப்பழத்தை வேக வைக்காமல் பச்சையாகவும் சாப்பிடலாம், சாறுபிழிந்தும் பருகலாம். நல்ல பலனைத் தரும்.தக்காளியில் பல வகைகள் உண்டு அவைகள் மாட்டுத்தக்காளி, சீமைத்தக்காளி, மணத்தக்காளி, நாட்டுத் தக்காளி என்று பல வகையான தக்காளிகள் உண்டு.பெரும்பாலும் நாட்டுத் தக்காளியைத்தான் நாம் பயன்படுத்தி வருகிறோம். நவீன உணவு வகைகளில் முக்கிய இடம் பிடித்திருக்கும் இது உணவுகளுக்கு ருசியையும், நறுமணத்தையும் கொடுக்கிறது.விலையுயர்ந்த கனிகளை வாங்க இயலாதவர்கள், இக்கனியை தினசரி அப்படியே சாப்பிட்டு வந்தாலே போதும் நமது தேகத்திற்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். இப்பழத்தில், உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான அயோடின், கந்தகம், மக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு சுண்ணாம்பு போன்ற சத்துக்களும், மேலும் வைட்டமின் சத்துக்களும் ஏராளமாய் அமைந்துள்ளன.

    இதன் மருத்துவப் பயன்கள்


    • கண்கள் ஒளியுடன் திகழ உதவுகிறது.
    • சிறுநீர் எரிச்சலைப் போக்குகிறது.
    • தொண்டைப் புண்ணை ஆற்றும்.
    • இரத்தத்தை சுத்தமாக்கும்.
    • எலும்பை பலமாக்கும்.
    • நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்
    • தோலை பளபளப்பாக்கும்
    • இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
    • பற்களும், ஈறுகளும் வலிமை பெறும்.
    • மலச்சிக்கலை நீக்கும்.
    • குடற்புண்களை ஆற்றும்.
    • களைப்பைப் போக்கும்.
    • ஜீரண சக்தியைத் தரும்.
    • சொறி, சிரங்கு, சரும நோய்களைப் போக்கும்.
    • தொற்று நோய்களைத் தவிர்க்கும்.
    • வாய், வயிற்றுப் புண்ணை ஆற்றும்.
    • கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு எலும்பு பலத்தைக் கொடுக்கும்.
    • உடலின் கனத்தைக் குறைக்கும் உதவும்.
    • நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு இது.




    தக்காளியில் உள்ள சத்துக்கள்


    • இரும்புச் சத்து 0.1 மி.கிராம்
    • சுண்ணாம்புச் சத்து 3.0 மி.கிராம்
    • வைட்டமின் A 61 மி.கிராம்


    உடல் சோர்வு நீங்க

    தக்காளி சூப் செய்து பருகினால் சோர்வும், களைப்பும் நீங்கி விடும்.

    தோல் நோய் குணமாக
    நன்கு பழுத்த தக்காளி இரண்டு (அ) மூன்றை எடுத்து, சிறிது சிறிதாக அரிந்து, மிக்ஸியிலிட்டு, ஜூஸ் எடுத்து வெறும் வயிற்றில் காலையில் பருகி வந்தால் போதும், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

    மலச்சிக்கல் நீங்க
    காலை, மாலை இரு வேளைகள், இப்பழங்களை சாப்பிட்டு வாருங்கள், மலச்சிக்கல் அகன்று விடும்.




    sarjana ul likes this.

  3. #43
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    சப்போட்டா பழம்

    உடலுக்கு ஆற்றலை தரும் சப்போட்டா பழம்:

    கண்களுக்கு நல்லது:

    சப்போட்டா பழம் விட்டமின் A வை அதிகளவு கொண்டுள்ளது. ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிபடி விட்டமின் A வை கொண்டுள்ளதால் பார்வையை பலப்படுத்துவதோடு முதுமையை தள்ளிபோடும் ஆற்றலை வழங்குகிறது. ஆதலால் தினமும் ஒரு சப்போட்டா பழம் எடுத்துக்கொள்ளலாம்..

    இதய பாதுகாப்பு:
    இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்றபடி பாதுகாக்கும் தன்மையை சப்போட்டா பழம் கொண்டுள்ளது என அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான தூக்கம் வரும்.

    ஆற்றலை வழங்கக்கூடியது:
    நாம் சுறுசுறுப்பாக நடந்து செல்ல நமக்கு மிகவும் அவசியமாக இருப்பது ஆற்றல். அந்த ஆற்றலை அதிகளவு கொண்டுள்ளது சப்போட்டா பழம். ஏனெனில் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் குளுக்கோஸ்சை கொண்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு ஆற்றல் அதிகம் தேவைப்படும் அதனால் அவர்களுக்கு சப்போட்டா பழம் பரிந்துரைக்கப்படுகிறது.

    புற்றுநோய் தடுப்பு:
    விட்டமின் A மற்றும்B யை கொண்டுள்ளதால் உடலில் ஏற்படக்கூடிய சளி, தோளின் அமைப்பு முறை, போன்றவற்றை ஆரோக்கியமாக பராமரிக்கிறது. சப்போட்டாவில் உள்ள ஆண்டியாக்ஸிடண்ட்கள், நார்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது. அதாவது வாய்குழி புற்றுநோய், பெருங்குடல் சளி சவ்வை நச்சுகளிடமிருந்து பாதுகாக்க விட்டமின் A வை கொண்டு பாதுகாப்பு வழங்குகிறது.

    எலும்பை உறுதிப்படுத்தும்:
    எலும்பை பலப்படுத்த தேவையான கல்சியம், பாஸ்பரஸ், இருப்பு சத்துகளை அதிகளவு கொண்டுள்ள சப்போட்டா பழத்தை சாப்பிடுவதால் எலும்பை பலப்படுத்தலாம். இதை தொடர்ந்து சாப்பிடுவதால் எலும்பின் வளர்ச்சியை மேம்படுத்தி எலும்புக்கு வலு சேர்க்கிறது.

    மலச்சிக்கலுக்கு நிவாரணம்:
    சப்போட்டா சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. சப்போட்டா மூலமாக நார்ச்சத்துகளை நமது உடலுக்கு 5.6/100g அளவு வழங்குகிறது. இதனால் மலச்சிக்கள் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் சப்போட்டா பழத்தை எடுத்துக்கொள்ளலாம்.

    பித்தம் நீக்க:

    சப்போட்டா பழத்தைத் தின்று, பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்த மயக்கத்திற்கும் இது நல்ல மருந்து. சப்போட்டா பழத்தை கூழாக்கி, சிறிது சுக்கு, சித்தரத்தை பொடித்து போட்டு சாப்பிடலாம். இதில் கல்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும்




  4. #44
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    ஆரஞ்சு பழத்தில் இருக்கும் நமக்குத் தேவையான உயிர்ச்சத்துக்கள்!


    அனைவரையும் கவர்ந்திழுக்கும் நறுமணம் கொண்ட இந்த ஆரஞ்சு பழத்த்தை, கமலா பழம் என்றும் அழைப் பதுண்டு. மஞ்சளும்
    சிவப்பும் கலந்த கலவையாக அதாவது ஆரெஞ்சு நிறத்தில் ஒரு பந்து போல் காணப்படும் இந்த பழத்தி ன் வெளித்தோல் கனத்திரு ந்தாலும் உரிப்பது எளிதா னது. இதன் உள்ளிருங்கும் சுளைகளில் நமக்குத் தே வையான அனைத்து உயிர் ச்சத்துக்களும் காணப்படுகி ன்றன• அது என்னென்ன என்று பார்ப்போமா? .

    ஆரெஞ்சு (கமலா) பழத்தில் காணப்படும் உயிர்ச் சத்துக்கள்.
    100 கிராம் எடை கொண்ட பழத்தில் . . .

    நீர்ச்சத்து: 88 கிராம்
    புரதம்: 0.6 கிராம்
    கொழுப்பு: 0.2 கிராம்
    தாதுப் பொருள்: 0.3 கிராம்
    பாஸ்பரஸ்: 18 மி.கிராம்
    சுண்ணாம்புச் சத்து: 24 மி.கிராம்
    கரோட்டின்: 1100 மி.கிராம்
    சக்தி: 53.0 கலோரி
    இரும்புச் சத்து: 0.2 மி.கிராம்
    வைட்டமின் ஏ: 99 மி.கிராம்
    வைட்டமின் பி: 40 மி.கிராம்
    வைட்டமின் பி2: 18 மி.கிராம்
    வைட்டமின் சி: 80 மி.கிராம்



    Last edited by chan; 22nd Mar 2015 at 04:10 PM.
    sarjana ul likes this.

  5. #45
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    ஜில்லுன்னு ஒரு சம்மர்!

    எம். கோலப்பன் சித்த மருத்துவர்

    கோடை வெயில் தரும் கொடைகளில் ஒன்று... தர்பூசணிப் பழம்.
    வெள்ளரி வகையைச் சேர்ந்த தர்பூசணியில், கொழுப்பு துளியும் இல்லை. நாள் ஒன்றுக்குத் தேவையான கார்போஹைட்ரேட்டில், ஏழு சதவிகிதம் இதில் இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் மற்றும் சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் அளவோடு எடுத்துக்கொள்ளலாம். மேலும், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் இதில் நிறைவாக உள்ளன.

    தர்பூசணி சிவப்பு நிறத்தில் இருப்பதற்கு, அதிக அளவு லைகோபீன் இருப்பதுதான் காரணம். லைகோபீன் சீரான ரத்த ஓட்டத்துக்கும், இதயம் சார்ந்த நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது.

    உடலில் உள்ள செல்களுக்கு ஆற்றலைத் தருகிறது. பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. ப்ராஸ்டேட் புற்றுநோயாளிகளுக்கு சிறந்த நிவாரணி.

    செல்களின் வளர்ச்சியைத் தூண்டுவதால், தோல் நோய் வராமல் காக்கிறது.

    கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் தர்பூசணிக்கு உண்டு. இதில் உள்ள சிட்ருலின் (நீவீtக்ஷீuறீறீவீஸீமீ) உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு செல்களை வெளியேற்றுகிறது. மேலும் அதிகப்படியான கொழுப்பு உடலில் சேருவதையும் இது தடுக்கிறது.

    ஃபிளவனாய்ட், கரோட்டினாய்ட் போன்ற ஊட்டச்சத்துக்கள், இதில் நிறைவாக உள்ளன. செல்களின் வீக்கங்களைக் கட்டுப்படுத்தி, ஆக்சிஜன் பயன்பாட்டால் ஏற்படக்கூடிய எதிர்வினைகளைக் கட்டுப்படுத்துகிறது.

    முடி வளர்ச்சியைத் தூண்டவும் உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி, உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது. உடல் வெப்பத்தைத் தணித்து, குளிர்ச்சியைத் தருகிறது.

    மகிழ்ச்சியை தரும் டோபோமைன் என்ற ரசாயனம் சுரக்க தர்பூசணி உதவுகிறது.

    பொட்டாசியம் இதில் அதிகம் இருப்பதால், ரத்த அழுத்த நோய் கட்டுப்படும். மேலும், நரம்பு செல்கள் மற்றும் தசைகளின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது.

    சிறுநீர் எரிச்சலுக்கு அருமருந்தாக இருக்கிறது. ஆல்கஹால், காபி போல, சிறுநீரகத்துக்கு அதிகப்படியான வேலை கொடுக்காமலேயே சிறுநீரைப் பெருக்கி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

    காயம், புண் இருந்தால், அந்த இடத்தில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ஆக்சிஜன் அளவை அதிகரிக்கச் செய்து, விரைவில் புண்களை ஆற்ற உதவுகிறது.


    இருமல், சளி உள்ளவர்கள், தர்பூசணிப் பழச்சாற்றில் சீரகப் பொடி சேர்த்துக் குடித்தால், சளிப் பிரச்னை இருக்காது.

    அப்புறம் என்ன, தர்பூசணி எடு! கோடையைக் கொண்டாடு!

    Last edited by chan; 22nd Mar 2015 at 04:29 PM.
    sarjana ul likes this.

  6. #46
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    அத்திபழத்தில் இருக்கும் ஆரோக்கியத்தின் வித்து!

    பறவைகள் அத்திப்பழம், ஆலம்பழம் ஆகிய இரு வகையான பழங்களை மிகவும் விரும்பி உண்கின்றன. இப்பழங்களில் உள்ள அரிய மருத்துவ குணங்களை பறவைகள் அறிந்திருக்கலாம். பறவைகள் அறிந்திருக்கும்போது, நாம் அறியாமல் இருக்கலாமா?
    அத்திமரமும் ஆலமரமும், பெரும்பாலும் பறவைகளின் எச்சத்தில் இருந்து முளைத்து வளர்கின்றன. அத்திப்பழத்தை சித்தம் வளர்க்கும் பழம் என்பார்கள். சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம் மற்றும் யுனானி மருத்துவ மருந்துகளில் அத்திப்பழத்தின் பங்கு முக்கியமானதாகும். அத்திப்பழத்தையும் தேனையும் கலந்து சாப்பிட்டால், அபூர்வமான தித்திக்கும் சுவை கிடைக்கும். இந்த சுவையில் fig and honey என்ற பெயரில் ஐஸ்கிரீம் கூட உள்ளது.

    அத்திப்பழத்தின் அதிசய பலன்கள்:

    உணவை விரைவில் ஜீரணித்து சுறுசுறுப்பை தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற்றி ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளை நீக்குகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. வாய்நாற்றத்தை நீங்குவதுடன், தலைமுடியும் நீளமாக வளர உதவுகிறது.

    தினசரி, 2 பழங்களை சாப்பிட்டால், உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். மலச்சிக்கலை குணமாக்க, 5 பழங்களை இரவில் சாப்பிடலாம்.

    போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க, அத்திப்பழங்களை வினிகரில் ஒருவாரம் வரை ஊற வைத்து, பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை மட்டும் சாப்பிட்டால் இப்பிரச்னை தீரும்.

    அத்திப்பழத்தால் உடல் கவர்ச்சி அதிகரிக்கும். இப்பழத்தை உடல் பலவீனம் மற்றும் காய்ச்சல் ஏற்படும் போது பயன்படுத்துகின்றனர்.

    பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
    அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்கும். அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை, தினசரி ஒருவேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.

    குறிப்பாக சர்க்கரை நோய், சர்க்கரைப் புண், உடல் வீக்கம், கட்டிகள், நீர்க்கட்டிகள், புண், சொறி, சிரங்கு, நமைச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு, அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தரும்.

    சிறுநீர்ப்பை புண், சிறுநீர் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும், அத்திப் பழம் உதவுகிறது.

    அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து, அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால், மூலநோய் குணமாகும்.

    கல்லீரல் - மண்ணீரல் அடைப்புகளும் வீக்கமும் நீங்கும். கண் பார்வையைக் கூட்டும். வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை அத்திப்பழத்தில்
    அதிகம் உள்ளன. மற்ற பழங்ளை விட, அத்திப்பழத்தில், 4 மடங்கு தாது உப்புகளும், சத்துப் பொருட்களும் உள்ளன.

    இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால், இதை தொடர்ந்து சாப்பிட்டால் ரத்த சோகை நோய் வராது.



    Attached Thumbnails Attached Thumbnails Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்-e_1426494381.jpeg  
    sarjana ul likes this.

  7. #47
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    இளமை தரும் மாதுளை!
    உள்ளே வெளியே



  8. #48
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    முந்திரிபழம்!

    முந்திரியை ஆங்கிலத்தில் கேஷ்யூ என்பர். முந்திரி வெப்பமண்டல பகுதிகளில் அதிகளவில் சாகுபடியாகிறது. அமெரிக்காதான் இதன் தாயகம். முந்திரி இந்தியாவில் பல மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.வறட்சியை தாங்கி வளரும் மரப்பயிர்களில் இதுவும் ஒன்று. தமிழகத்தில் அரியலூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகளவு பயிர் செய்யப்படுகிறது.

    ஒரு எக்டேரில் முந்திரி கொட்டையின் விளைச்சல் 500 கிலோவாகும். நம்மிடையே முந்திரி கொட்டைகளை போல முந்திரி பழங்களை பயன்படுத்துவது குறைவு.

    நாட்டில் உற்பத்தியாகும் 500 டன் முந்திரி பழங்களில் 10 சதவிகிதம் கூட பயன்படுத்துவதில்லை.

    ஏனெனில் பழத்தில் உள்ள டானின் எனும் வேதிப்பொருளே காரணம். இதனால் பழம் சாப்பிடும்போது தொண்டையில் கரகரப்பு தன்மை ஏற்படுகிறது. இதனை போக்க பழத்தை நீராவியில் பத்து நிமிடம் வேகவைத்து அல்லது உப்புநீரில் ஊறவைத்து சாப்பிடலாம்.

    மா, பலா, ஆரஞ்சு போன்று அதிக சத்துகள் நிறைந்தது முந்திரிபழம். முக்கியமாக வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட, முந்திரிபழத்தில் ஐந்து மடங்கு அதிகமுள்ளது.

    வைட்டமின் சி மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு நோயை குணமாக்குகின்றது.

    முந்திரிபழம் உடற்சூட்டைத் தரும். சிறுநீர்ப் பெருகும் நீர் வேட்கையை நீக்கும். நெஞ்சில் கரகரப்பு ,கரப்பான் நோய் ஆகியவற்றை தீர்க்கும். உவர்ப்பு சுவையுடைய பழச்சாறு வந்தி எடுப்பதை தடுக்க உதவும். தொண்டை நோய்களில் வாய் கொப்பளிக்க உதவும் மருந்தாகவும் உதவுகிறது. பழத்தில் வைட்டமின் 'சி' அதிகமுள்ளது .சளியை போக்கும். இது உடலை வளர்க்கும் காமத்தைப் பெருக்கும்.பசியை நீக்கும் .

    பற்கள், நகங்களை உறுதிப்படுத்துகின்றது. ஸ்கர்வி என்ற வைட்டமின் சி குறைபாடு நோயை குணமாக்குகின்றது. மேலும், கிருமி நாசினியாக செயல்பட்டு தொற்று வியாதிகளை குணமாக்க பயன்படுகின்றது. இவற்றில் புரதம், பீட்டோ கரோட்டின், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.

    மேலும், பழத்தில் டானின் உள்ளதால் ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆக செயல்படுகின்றது. இச்சிறப்புமிக்க பழத்தில் இருந்து ஜூஸ், சிரப், ஜாம், மிட்டாய் போன்ற மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரித்து பயன்படுத்தலாம்.

    அத்திப்பழங்களையும், முந்திரி பழங்களையும் அதிக அளவில் அன்றாடம் இரண்டு, மூன்று மாதங்கள் உண்டு வந்தால் எத்தகைய குஷ்ட நோயானாலும் நிச்சயம் நிவாரணம் பெறலாம்.

    கொட்டை :
    முந்திரிகொட்டையின் தடித்த மெல்தொலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை பாதத்தில் உண்டாகியுள்ள பித்த வெடிப்பிற்கு தடவலாம் .எண்ணெய் தோலின்மீது பட்டால் கொப்புளத்தை உண்டாக்கும். பருக்கள் ,குருக்கள் ,புடைகள் மீது கவனமாகத் தடவிவர அவை நீங்கும்.
    பட்டை :
    இம்மர வேர்ப்பட்டை குடிநீர் , நீரிழிவு நோய்க்கு உதவும் .



  9. #49
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    பழங்கள் பலன்கள்


    ழத்தைக் கொண்டாடியவர்கள் நம் 'பழ’ந்தமிழர்கள். 'முத்தமிழே...முக்கனியே...’ என கொஞ்சிப்பேசியவர்கள் நாம். இன்றைய பீட்சா, பர்கர் யுகத்தில் பழங்களை தினசரி உணவில் எடுத்துக் கொள்வதையே, நம் சந்ததியினர் பலர் மறந்துவிட்டார்கள். உணவாகவும் மருந்தாகவும் செயல்பட்டு, நிறைவான ஊட்டச்சத்துக்களையும் அள்ளித்தருபவை கனிகள்

    .


    பழங்களில் மிகக் குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும், அதிக அளவில் நார்ச்சத்தும் இருக்கிறது. இதனால் இதய நோய், உடல் பருமன், செரிமானக் குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் நம் உடலுக்குள் எட்டிப்பார்க்காது.

    கோடையின் வெப்பத்தைத் தணிக்கத் தர்ப்பூசணி, கிரிணி என அந்தஅந்தப் பருவத்துக்கு ஏற்ப இயற்கையே பழங்களை வாரி வழங்கி இருக்கும் நிலையில், தினமும் தொடர்ந்து பழவகைகளைச் சாப்பிடுவதே சிறந்தது.

    நம் ஊரில் கிடைக்கக்கூடிய சில முக்கியமான பழங்கள், அவற்றின் பலன்கள்,
    எடுத்துக்கொள்ளும் முறைகள், தவிர்க்க வேண்டியவை பற்றி மூத்த டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி பட்டியலிடுகிறார். பலம் தரும் பழங்களை நம் வாழ்க்கையோடு இணைத்துக் கொள்வோம்.


    ஒரு நாளைக்கு ஐந்து கப் அளவுக்கு காய்கறி- பழங்கள் கொண்ட சரிவிகித உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.


    ஒருவரின் வயது, பாலினம் மற்றும் அவரது உடல் உழைப்பைப் பொருத்து பழங்கள் எடுத்துக்கொள்ளும் அளவு வேறுபடும். பொதுவாக எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம் என்று அட்டவணையில் தெரிவித்துள்ளோம். இருப்பினும் அவரவர் கலோரி தேவையைப் பொறுத்து இதற்கு மேலும் பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.



    Last edited by chan; 11th Apr 2015 at 06:37 PM.

  10. #50
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    மாம்பழம்


    முக்கனிகளில் முதன்மையானது. பழங்களின் அரசன். மாம்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள், இரும்புச் சத்து, தாது உப்புக்கள் மற்றும் பாலிபீனாலிக் ஃபிளவனாய்ட் ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் உள்ளன. இதுதவிர, வைட்டமின் ஏ, பி6, சி, இ ஆகியவை நிறையவே உள்ளன.

    100 கிராம் மாம்பழத்தில், 765 இன்டர்நேஷனல் யூனிட் வைட்டமின் ஏ உள்ளது. இது ஒரு நாளைக்குத் தேவையான அளவில் 25 சதவிகிதம். வைட்டமின் ஏ, பார்வை மற்றும் தோல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம்.

    வைட்டமின் சி - நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. மாம்பழத்தில் மார்பகம், ரத்தப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. நம் நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்பட இது உதவுகிறது.


    மாம்பழத்தில் உள்ள சிலவகையான என்சைம்கள், புரதத்தை உடைத்து உடலுக்கு ஏற்ற ஊட்டச்சத்தாக மாற்றும் பணியை ஊக்குவிக்கிறது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால், நல்ல செரிமானத்துக்கு உதவுகிறது. மலச்சிக்கலையும் போக்கும்.

    மாம்பழத்தில் குறிப்பிடத்தகுந்த அளவில் தாமிரம் உள்ளதால், ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும், இரும்புச் சத்து நிறைந்தது. எனவே, பெண்கள், கர்ப்பிணிகள், மெனோபாஸ் நிலையில் உள்ள பெண்கள் எடுத்துக்கொள்வது நல்லது.




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter