Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree98Likes

Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்


Discussions on "Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #61
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    சப்போட்டா

    மாம்பழம், வாழையைப் போலவே அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, எளிதில் செரிமானம் ஆகக்கூடிய பழம் சப்போட்டா. இதில் சர்க்கரை மிக எளிய வடிவத்தில் இருப்பதால், சாப்பிட்ட உடனேயே உடலுக்கு ஆற்றலைத் தரும்.
    100 கிராம் சப்போட்டாவில் 83 கலோரிகள் உள்ளன.

    அதேபோல் நார்ச்சத்தும் இதில் அதிக அளவு இருப்பதால், மலச்சிக்கலைப் போக்கி, குடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. டேனின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் நிறைவாக உள்ளது. இது அமிலங்களை நீர்த்துப்போகச் செய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது. மேலும் செல்களில் வீக்கம், வைரஸ் - பாக்டீரியா கிருமிகளுக்கு எதிராகவும் செயல்படுகிறது. வயிற்றுப்போக்கு, ரத்தக் கசிவுவைத் தடுக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.



    ஓரளவுக்கு வைட்டமின் சி மற்றும் ஏ சத்துக்கள் உள்ளன. அதிக அளவில் கார்போஹைட்ரேட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், கர்ப்பிணிகள் இதை ஓரளவுக்கு எடுத்துக்கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகளான குமட்டல் வாந்தியைத் தடுக்கும். பாலூட்டும் பெண்களும் இதை எடுத்துக் கொள்ளலாம்.



    Sponsored Links
    Last edited by chan; 11th Apr 2015 at 06:53 PM.
    sarjana ul and suryasindhuja like this.

  2. #62
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    தர்பூசணி.

    தர்பூசணியில் 95.7% நீர்ச்சத்து இருப்பதால், உடல் சூட்டைத் தணித்து, புத்துணர்வு அளிக்கிறது. மேலும் இதயத்தைக் குளிரச் செய்து ரத்தக் குழாய்களில் இருக்கும் அடைப்பைப் போக்குகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.இதில் மிகமிகக் குறைந்த அளவிலேயே கலோரி உள்ளது.

    வைட்டமின் ஏ சத்து இதில் அதிக அளவில் உள்ளது. 100 கிராம் பழத்தில் ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் ஏ அளவில் 19 சதவிகிதம் உள்ளது. வயிறு, மார்பகம், ப்ராஸ்டேட், நுரையீரல், கணையப் புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. இதில் உள்ள லைகோபீன் (Lycopene) என்ற வேதிப்பொருள் சூரியனின் புற ஊதாக் கதிர்வீச்சு பாதிப்பில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. இதில் உள்ள சிட்ருலைன் (Citrulline) என்ற வேதிப்பொருள் உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.


    சிறுநீரைப் பெருக்கி நீர்க்கடுப்பு, சிறுநீர் பாதை நோய்த் தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

    ஆஸ்துமா, சளிப் பிரச்னை உள்ளவர்கள் தர்பூசணிச் சாறை லேசாக சூடு செய்து குடிக்கலாம். அனைவருக்கும் ஏற்ற பழம் இது.



    sarjana ul and suryasindhuja like this.

  3. #63
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    சாத்துக்குடி

    நோயாளியைப் பார்க்கச் செல்லும்போது கையோடு வாங்கிச் செல்லும் பழங்களில் சாத்துக்குடிக்குத்தான் முதல் இடம். அந்த அளவுக்கு ஊட்டச்சத்துக்களைக் கொண்டது சாத்துக்குடி.

    செரிமான மண்டலத்தைத் தூண்டக்கூடிய ஃபிளவனாய்ட், சாத்துக்குடியில் அதிக அளவில் உள்ளது. இதனால் வயிறு மற்றும் செரிமானக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது. மலமிளக்கியாக மட்டுமல்லாது வயிற்றுப்போக்கையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. செரிமானக் குறைபாடு உள்ளவர்கள் சாத்துக்குடி சாறுடன் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்கலாம்.

    இதில் வைட்டமின் சி நிறைவாக உள்ளது. சாத்துக்குடியைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது உடலின் ஒட்டுமொத்த செயல் திறனையும் மேம்படுத்தும். ரத்த ஓட்டம் சீராகும், நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும். இதில் உள்ள லெமனாய்ட்ஸ் என்ற ரசாயனம் பல்வேறு வகையான புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்பட்டு, புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.


    உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்றது. வெதுவெதுப்பான நீரில் சாத்துக்குடி சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால், உடல் எடை குறையும். மேலும் கொழுப்பைக் குறைப்பதுடன், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

    இதில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. சிறுநீரகம், சிறுநீர்ப்பையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், நோய்த் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கவும் உதவுகிறது. இருப்பினும், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.


    இதில் உள்ள வைட்டமின் சி சத்தானது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, சருமத்துக்கு இயற்கைப் பொலிவை தருகிறது. இதனால் தோல் சுருக்கம் உள்ளிட்ட சருமப் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது.

    ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களைச் சாப்பிடுவது மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள், பக்கவாதம், சில வகையான புற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

    பழங்களில் பொட்டாஷியம் நிறைவாக உள்ளதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது. மேலும் சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது.

    வயிறு நிரம்பிய உணர்வைத் தந்தாலும் இதில் கலோரி மிகமிகக் குறைவாகவே உள்ளது.

    மேலும் கொலஸ்ட்ரால் இல்லவே இல்லை. இதனால் பழம் சாப்பிட்டால் பருமன் கவலை இல்லை

    பருக்கள் வருவதைத் தடுக்க நினைப்பவர்கள், வைட்டமின் ஏ சத்து நிறைந்த காய்கறி- பழங்களை எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

    வைட்டமின் சி உள்ள காய்கறி- பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. இதனைச் சூடுபடுத்தும்போது வைட்டமின் சி குறைந்துவிடும் அல்லது அழிந்துவிடும்.

    சூரிய வெளிச்சம், காற்று கூட வைட்டமின் சி-க்கு எதிராக செயல்படக்கூடியவை. எனவே, வைட்டமின் சி நிறைவாக உள்ள பழங்களை உடனடியாக சாப்பிட்டுவிட வேண்டும். நீண்ட நேரம் வைத்திருக்கக் கூடாது.

    Last edited by chan; 11th Apr 2015 at 06:56 PM.
    sarjana ul and suryasindhuja like this.

  4. #64
    suryasindhuja is offline Friends's of Penmai
    Real Name
    sindhuja
    Gender
    Female
    Join Date
    Apr 2014
    Location
    salem
    Posts
    206

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    thanks 4 sharing...

    chan likes this.

  5. #65
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    பப்பாளி! உள்ளே..வெளியே...



    Attached Thumbnails Attached Thumbnails Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்-p-66.jpg  
    sarjana ul likes this.

  6. #66
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    உடல் நலத்தை பாதுகாக்கும் சப்போட்டா பழத்தின் மருத்துவ குணங்கள் :-


    கண்களுக்கு நல்லது: சப்போட்டா பழம் வைட்டமின் ஏ வை அதிகளவு கொண்டுள்ளதால் பார்வையை பலப்படுத்துவதோடு முதுமையை தள்ளிபோடும் ஆற்றலை வழங்குகிறது. ஆதலால் தினமும் ஒரு சப்போட்டா பழம் எடுத்துக்கொள்ளலாம்..

    இதய பாதுகாப்பு: இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்றபடி பாதுகாக்கும் தன்மையை சப்போட்டா பழம் கொண்டுள்ளது. சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும்.

    தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான தூக்கம் வரும்.
    ஆற்றலை வழங்கக்கூடியது: நாம் சுறுசுறுப்பாக நடந்து செல்ல நமக்கு மிகவும் அவசியமாக இருப்பது ஆற்றல். அந்த ஆற்றலை அதிகளவு கொண்டுள்ளது
    சப்போட்டா பழம் . ஏனெனில் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் குளுக்கோஸ்சை கொண்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு ஆற்றல் அதிகம் தேவைப்படும் அதனால் அவர்களுக்கு சப்போட்டா பழம் பரிந்துரைக்கப்படுகிறது.

    புற்றுநோய் தடுப்பு: வைட்டமின் ஏ மற்றும் பி யை கொண்டுள்ளதால் உடலில் ஏற்படக்கூடிய சளி, தோளின் அமைப்பு முறை, போன்றவற்றை ஆரோக்கியமாக பராமரிக்கிறது. சப்போட்டாவில் உள்ள ஆண்டியாக்ஸிடண்ட்கள், நார்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது. அதாவது வாய் குழி புற்றுநோய், பெருங்குடல் சளி சவ்வை நச்சுகளிடமிருந்து பாதுகாக்க வைட்டமின் ஏ வை கொண்டு பாதுகாப்பு வழங்குகிறது.

    எலும்பை உறுதிப்படுத்தும்: எலும்பை பலப்படுத்த தேவையான கால்சியம், பாஸ்பரஸ், இருப்பு சத்துகளை அதிகளவு கொண்டுள்ள சப்போட்டா பழத்தை சாப்பிடுவதால் எலும்பை பலப்படுத்தலாம். இதை தொடர்ந்து சாப்பிடுவதால் எலும்பின் வளர்ச்சியை மேம்படுத்தி எலும்புக்கு வலு சேர்க்கிறது.
    மலச்சிக்கலுக்கு நிவாரணம்: சப்போட்டா சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. சப்போட்டா மூலமாக நார்ச்சத்துகளை நமது உடலுக்கு 5.6/100g அளவு வழங்குகிறது. இதனால் மலச்சிக்கள் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் சப்போட்டா பழத்தை எடுத்துக்கொள்ளலாம்.

    பித்தம் நீக்க: சப்போட்டா பழத்தைத் தின்று, பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்த மயக்கத்திற்கும் இது நல்ல மருந்து. சப்போட்டா பழத்தை கூழாக்கி, சிறிது சுக்கு, சித்தரத்தை பொடித்து போட்டு சாப்பிடலாம். இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும்.



    sarjana ul likes this.

  7. #67
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    தளதள தர்பூஸ்... பலப்பல பயன்கள்!



    ந்தந்த பருவகாலங்களில் விளையும் காய்கறி, பழங்களில், அந்த தட்பவெப்பத்துக்குத் தேவையான சத்துகளை உள்ளடைத்தே இயற்கை கொடுக்கும். அந்த வகையில், கோடையின் பழமான தர்பூசணியில் உள்ள சத்துக்கள் மற்றும் சிறப்புகளைச் சொல்கிறார், சென்னை கேர் அண்ட் க்யூர் அரோமா கிளினிக் நிர்வாகி, டாக்டர் கீதா அஷோக்.

    ‘‘தர்பூசணியில் விட்டமின் ஏ, பி6, சி மற்றும் லைகோபீன் (lycopene) சத்து (இது ஆஸ்துமா, ஹைபர் டென்ஷன், இதய படபடபடப்பு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும்) என நிறைய சத்துகள் உள்ளன. எல்லாவற்றையும்விட, இதில் 92 சதவிகிதம் நீர்ச்சத்து இருப்பதால் வெயில் காலங்களில் ஏற்படும் சன் ஸ்ட்ரோக் போன்றவற்றிலிருந்து காக்கும்.

    தர்பூசணியில் இருக்கும் தையாமின், ரிபோஃப்ளோவின் போன்ற மருத்துவச் சத்துகள் வெயில் காலத்தில் ஏற்படும் அக்கி, வாய்ப் புண், குடல்புண், மூலம், அம்மை போன்றவற்றிலிருந்து காக்கும்.

    தர்பூசணி சாப்பிடுவதால் ஒபிசிட்டி, இதய நோய், சர்க்கரை வியாதி போன்றவற்றின் தீவிரம் குறையும்.

    சரும வறட்சி, மலச்சிக்கல், தசை வீக்கம் போன்றவற்றுக்கு தர்பூசணி கைகண்ட மருந்தாக உதவும்.

    தொடர்ந்து தர்பூசணி சாப்பிடுபவர்களுக்கு வயோதிகம் தள்ளிப்போகும்.

    எண்ணெய் வழியும் சருமம், கரும்புள்ளிகள், சரும வறட்சி, வயோதிக தோற்றம் போன்றவற்றைப் போக்க, தர்பூசணியின் சதைப்பகுதியை விதையுடன் அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்துக்கொண்டு, தினமும் ஒரு டீஸ்பூன் எடுத்து, அரை ஸ்பூன் பால் பவுடர், கால் ஸ்பூன் தேன் கலந்து முகம், கழுத்து, கை, போன்ற வெயில் படும் இடங்களில் தடவி, பத்து நிமிடங்கள் ஊறவைத்துக் கழுவினால்... முகம் பொலிவடையும்.

    அக்கி வந்தால், நாட்டுமருந்துக் கடையில் கிடைக்கும் காவி ஒரு ஸ்பூன், ஆவாரம்பூ பொடி ஒரு ஸ்பூன் மற்றும் தர்பூசணி ஒரு ஸ்பூன் கலந்து அக்கியின் மேல் பூசலாம். இதை தொடர்ந்து செய்துவந்தால்... அக்கி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

    காதி கிராஃப்ட்டில் கிடைக்கும் குளிர்தாமரை தைலம் 2 ஸ்பூனுடன் தர்பூசணி 2 ஸ்பூன் கலந்து தலையில் தடவி, 2 - 3 மணி நேரத்துக்குப் பிறகு குளித்தால் உடல் சூடு, கண் எரிச்சல் எல்லாம் மாயமாகும்.’’

    Last edited by chan; 16th Apr 2015 at 04:12 PM.
    sarjana ul likes this.

  8. #68
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    இதயத்தை பாதுகாக்கும் பழங்கள்.



    இன்றைய நவீன உலகில் மக்களை இருவிதமான நோய்கள் அதிகமாக ஆட்டிப் படைக்கின்றன.

    அவை நீரிழிவு, இரத்த அழுத்தம்.இரத்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. இதய நோய் வந்தால் குணப் படுத்தவும், வராமல் தடுக்கவும் இயற்கை நமக்களித்த கொடைதான் காய்களும் கனிகளும்.

    சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை பரிந்துரைக்கும் ஒரே வாசகம்தான் உணவில் கீரை, காய்கனிகளை அதிகம் சேருங்கள் என்பது.
    இதயத்திற்கு இதம் தரும் பழங்கள் பல உள்ளன. அவை இதயத்தை பலப்படுத்தி சீராக செயல்பட வைக்கும்.

    ஆப்பிள் பழம் இதயத்திற்கு உற்சாகத்தையும், புத்துணர்வையும் தர வல்லது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை என்கிறது ஒரு ஆங்கில பழமொழி.
    “An apple a day, keeps the doctor away” இதிலிருந்து ஆப்பிளின் மருத்துவப் பயன் நமக்கு புரியவரும்.

    இதுபோல் புத்தம் புது திராட்சை, அன்னாசி, ஆரஞ்சு, சீதாபழம் ஆகியவை இதயத்தை பலப்படுத்தும்.

    வாதுமையும் தேங்காய் நீரும் இதயத்திற்கு ஊக்கம் அளிப்பவை.

    நெல்லிக்கனி இதயத்திற்கு மிகுந்த பலனைத் தரவல்லது. ஒரு நெல்லிக்கனியில் 4 ஆப்பிளுக்கு இணையான சத்துக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனை ஜாமாகவும், இலேகிய மாகவும் செய்து சாப்பிடலாம்.

    மார்பில் வலியும், மரத்துப்போன உணர்வும் ஏற்பட்டால் உடனே திராட்சைச் சாறு அருந்தலாம். இது வலியைக் குறைக்கும் இதய நோயாளிகள் தினமும் திராட்சை சாறு பருகுவது நல்லது. அது நோயைக் குணப்படுத்த உதவும்.

    ஆரஞ்சு பழமும், அதன் பழச்சாறும் இதயம், மார்புநோய் போன்றவற்றிற்கு சிறந்த டானிக் ஆகும். இதனை இதய சம்பந்தப்பட்ட நோயாளிகள் தினமும் அருந்துவது நல்லது.

    அதுபோல் உலர்ந்த திராட்சை, பேரீச்சை, அத்திப்பழம் போன்றவை இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன் இதயத்தை பாதுகாக்கவும் செய்கிறது.

    உடலில் உள்ள அதிக உப்பைக் குறைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கனிகளுக்கு உண்டு.

    இதயத்திற்கு இதமான கனிகளை உண்டு இதயத்தைப் பாதுகாப்போம்





    sarjana ul likes this.

  9. #69
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    கோடையில் எந்தப் பழங்களைச் சாப்பிட வேண்டும்?

    உற்சாகம் ஊட்டும் இளநீர்

    கோடைக் காலத்தில் காபி, டீ மற்றும் செயற்கைக் குளிர்பானங்களை அதிகமாகக் குடிப்பதால் பணத்தை இழப்பது மட்டுமல்ல உடலையும் கெடுத்துக்கொள்கிறோம். மென்பானங்களைக் குடிப்பதால் வெயில் காலத்தில் ஏற்படுகிற சிறுநீர் கல் தொல்லை அதிகப்படும். இவற்றில் உள்ள செயற்கை சர்க்கரை உடல் பருமனுக்கு வழிவகுக்கும். கவர்ச்சி வண்ணங்களுக்காக இவற்றில் கலக்கப்படும் சில வேதிப்பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும். எனவே, இயற்கை தந்திருக்கும் வரமான இளநீர் இருக்க, மென் பானங்களை நாடி செல்ல வேண்டிய அவசியமே இல்லை.


    இளநீரில் குளுக்கோஸ், வைட்டமின்கள், தாதுச் சத்துகள், அமினோ அமிலங்கள், கால்சியம், சைட்டிகைனின் என்று பலவிதச் சத்துகள் உள்ளன. இளநீரைக் குடித்தவுடன் தாகம் குறைந்துவிடும் என்பது மட்டுமல்லாமல் உடல் புத்துணர்ச்சி அடையும் என்பதும் உறுதி. இளநீரில் பொட்டாசியத்தின் அளவு அதிகம் என்பதால், இதய நோயாளிகளுக்கும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இது நல்லதொரு கோடை நீராகாரம். நல்ல கட்டுப்பாட்டில் உள்ள நீரிழிவு நோயாளிகளும் கோடையில் தினமும் இரண்டு இளநீர் பருகலாம். இதில் துத்தநாகம், மாங்கனீஸ் தாதுகள் அதிகமாக இருப்பதால் கோடையில் தோல் வறட்சி அடைவது தடுக்கப்படும்.

    நன்மை தரும் நுங்கும் பதநீரும்

    கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை வாரி வழங்குவதில் நுங்கும் பதநீரும் முக்கியப் பங்காற்றுகின்றன. உடல் வெப்பத்தைக் குறைக்கிற பல தாதுகள் இந்த இரண்டிலும் கலந்திருக்கின்றன. இவற்றில் உள்ள தண்ணீர்ச் சத்து வயிற்றையும் நிரப்பும்; பசியையும் தூண்டும். சிலருக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. இவர்கள் நுங்கு சாப்பிட்டால் தாகம் அடங்கிவிடும். கோடையில் நீரிழப்பு காரணமாகப் பலருக்கு மலச்சிக்கல் ஏற்படுவது வழக்கம். இவர்கள் தினமும் ஒரு நுங்கும் பதநீரும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் மறையும். நுங்கும் பதநீரும் செலவு குறைந்த கோடை உணவு என்று சொன்னால் மிகையில்லை.

    சிட்ரஸ் பழங்கள்

    திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவற்றைச் சிட்ரஸ் பழங்கள் என்கிறோம். இவற்றில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருப்பதே, இப்படி அழைக்கப்படுவதற்குக் காரணம். இந்தச் சத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. கோடையில் முதியவர்களும் குழந்தைகளும் அதிக நேரம் வெயிலில் அலைந்தால் மயக்கம் அடைவது வழக்கம். இவர்களுக்குப் பொதுவாகவே நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதும் இதற்கு ஒரு காரணம். எனவே, இந்த வயதில் இருப்பவர்கள் தினமும் நெல்லிக்காய், திராட்சை அல்லது ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். எலுமிச்சை, நன்னாரி கலந்த சர்பத் அருந்திவந்தால், உடல் குளிர்ச்சி அடையும். சிறுநீர் அதிகமாகப் போகும். இவற்றில் உள்ள குளுக்கோஸ் உடனடியாக ரத்தத்தில் கலந்துவிடும் என்பதால், விரைவிலேயே உடல் சோர்வு மறைந்து புத்துணர்வு கிடைக்கும்.
    பழங்கள் தரும் பொதுவான பலன்கள்

    பழங்கள் கோடைக் காலத்தில் மட்டுமல்ல எல்லாப் பருவத்திலும் நமக்கு நன்மை தருகின்றன. நம் உடலுக்குத் தேவைப்படுகிற பலவிதச் சத்துகளைக் குறைந்த செலவில் அள்ளித்தருவது பழங்களே. பழங்களில் நார்ச் சத்து அதிகமாகவும், கொழுப்புச் சத்து குறைவாகவும் உள்ளது. இதனால் உடல் பருமன் தடுக்கப்படும்; செரிமானக் குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாது. பப்பாளி, கொய்யா, பலாப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லி போன்றவற்றில் உள்ள வைட்டமின்-சி சத்து சளித் தொல்லையிலிருந்தும் விடுவிக்கிறது. எலும்பு மூட்டுகளில் ‘கொலாஜன்’ என்ற புரத உற்பத்திக்கு உதவுகிறது; இதனால் மூட்டுவலி தடுக்கப்படுகிறது.

    நாவல் பழத்தில் உள்ள ‘ஜம்போலின்’ எனும் குளுக்கோசைடு ரத்தச் சர்க்கரையைக் குறைத்து நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது. பேரீச்சம்பழத்தில் உள்ள இரும்புச் சத்து ரத்தசோகையைக் குணப்படுத்துகிறது.

    வாழை பழம், கிர்ணிப் பழம், சாத்துக்குடி போன்றவற்றில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது. பப்பாளி மற்றும் மாம்பழத்தில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் பார்வையைப் பாதுகாக்கிறது. மாலைக்கண் நோயைச் சரிசெய்கிறது. பல்வேறு பழங்களில் உள்ள ‘ஆன்டி ஆக்சிடன்ட்’கள் புற்றுநோய் வருவதைத் தடுக்கின்றன. எனவே, ஒரு நாளைக்கு 300-லிருந்து 500 கிராம்வரை பழங்களைச் சாப்பிடுவது நல்லது.
    சாப்பாட்டுக்கு முன்பா? பின்பா?

    உணவோடு பழங்களைச் சேர்த்துக்கொள்வதே நம்மில் பலருக்குப் பழக்கம். ஆனால், பழங்களைத் தனி உணவாகக் கருத வேண்டும் என்கிறது நவீன மருத்துவம். பழங்களை உணவுக்குச் சற்று முன்பு அல்லது உணவைச் சாப்பிட்டவுடன் சாப்பிடுவதைவிட, தனித்து அதையே உணவாகக் கருதிச் சாப்பிடுவதே சிறந்த முறை. அப்போதுதான் உணவுச் செரிமானத்தில் பிரச்சினை வராது. உணவு சாப்பிட்டதும் பழம் சாப்பிட்டால், ஏற்கனவே இரைப்பையில் இருக்கும் உணவு செரிமானம் ஆவதற்காகக் காத்திருக்காமல், முன்கூட்டியே இது செரிமானமாகிவிடும். அதற்குப் பிறகுதான் உணவில் உள்ள மற்றச் சத்துகள் கிரகிக்கப்படும். இதனால் சிலருக்கு குறிப்பாக அல்சர் உள்ளவர்களுக்கு - ஏப்பம், வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்துப் பழம் சாப்பிட்டால், இது தவிர்க்கப்படும்.

    தோலோடு சாப்பிடுங்கள்!

    பொதுவாகவே பழங்களைச் சாப்பிடத் தொடங்கும்போது நாம் முதலில் செய்யும் வேலை, பழத்தின் தோலை நீக்குவதுதான். தோல் என்றாலே தேவையற்றது என்று நம் மனதில் பதிந்து போனதன் விளைவு இது. பல பழங்களில் அவற்றின் உட்பகுதியைவிட, தோலில்தான் அதிகச் சத்துகள் இருக்கும். குறிப்பாகச் சப்போட்டா, மாம்பழம், திராட்சை, கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி போன்ற பழங்களின் தோலில் அதிக நார்ச்சத்து இருக்கிறது. இவற்றைத் தோலோடு சாப்பிடுவதுதான் நல்லது. பழங்களைப் பிழிந்து, வடிகட்டி, சாற்றை மட்டும் குடிக்கும்போது நார்ச்சத்து இழக்கப்படும். தவிரப் பழங்களைச் சாறாக்கி, பால், சர்க்கரை, குளுக்கோஸ் சேர்த்துக் குடிக்கும்போது, அதில் சேர்க்கப்படும் சர்க்கரையும் பாலும் பழத்தில் இருக்கிற சத்துகளின் இயல்பையே குலைத்துவிடும். செரிமானக் கோளாறையும் ஏற்படுத்திவிடும். எனவே, பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது,

    - கட்டுரையாளர், பொது நல மருத்துவர்.
    தொடர்புக்கு: gganesan95@gmail.com

    Last edited by chan; 22nd Apr 2015 at 05:42 PM.
    sarjana ul likes this.

  10. #70
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    மருந்தாகும் பழங்கள்



    நாம் விரும்பிச் சாப்பிடும் சுவையான பழங்களுக்குள் மருத்துவ குணங்களும் ஒளிந்திருக்கின்றன. அவற்றை அறியாமலேயே நாம் பழங்களை உண்டு வருகிறோம். பழங்களுக்குள் உள்ள மருத்துவ குணங்கள் வருமாறு:

    ஆப்பிள்: இரத்த சோகை, இரத்த ஓட்டச் சுழற்சி, மூளையின் போஷாக்கு, குடற்கிருமிகளை அழிக்க உதவுகிறது, வயிற்றுப்போக்கு, சீதபேதி, சிறுநீரக கோளாறுகள், சிறுநீரகத்தில் கல், ஆகியவற்றிற்கு உதவி புரிகிறது. இதய நோயாளிகளுக்குச் சிறந்த உணவாகிறது. கீல் வாதம், இடுப்புச் சந்து வாதம், துடைவாதம், நரம்பு சம்மந்தப்பட்ட சகல வாதங்களும் படிப்படியாகக் குறைந்து பூரண குணம் ஏற்படும்.

    நாவல் பழம்: நீரிழிவை நீக்கும். வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை நீக்கும். கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது. நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும். வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.

    திராட்சை: ஒரு வயது குழந்தைக்கு மலக்கட்டு, சளி, காய்ச்சல் ஏற்பட்டால், குணமாக திராட்சை பழங்களை பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் கொடுக்க வேண்டும். 'கரோனரி ஹார்ட் டிசிஸ்' எனும் இதய வியாதி ஏற்படாமல் காக்கும். எலும்புகளை உறுதியாக்கும். சிவப்பு திராட்சை: தோல் வியாதியை போக்கும்.

    கொய்யாப்பழம்: முதுமைத் தோற்றத்தைப் போக்கி முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தரும். உடல் வளர்ச்சியும், எலும்புகளும் பலம் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்ததால் குணப்படுத்தும். கல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது.நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. அல்சரைக் குணப்படுத்திவிடும்.

    பப்பாளி,: பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். நரம்புத் தளர்ச்சி குறையும். பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும். பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.


    Last edited by chan; 9th May 2015 at 02:26 PM.
    sarjana ul likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter