Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree98Likes

Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்


Discussions on "Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #71
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,298

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    இதயத்தை வலிமையாக்கும் வாழை!

    ஜீவா சேகர், நேச்சுரோபதி மருத்துவர், சென்னை:

    '' 'இயற்கை குளுக்கோஸ்' என்று கொண்டாடப்படும் வாழைப்பழம், நமக்கு விட்டமின் ஏ மற்றும் விட்டமின் ஈ சத்துகளை அள்ளித் தருகிறது.

    இயல்பிலேயே சிலருக்கு உஷ்ண உடம்பாக இருக்கும். இவர்கள் தினமும் இரவு உணவுக்குப் பிறகு ஒரு பச்சை வாழைப்பழத்தை சாப்பிட்டு வர, உடல் குளிர்ச்சி பெறும். சூட்டினால் ஏற்படும் கட்டிகளும் நீங்கும். மூட்டு வலி, வாத நோய் இருப்பவர்கள் பச்சை வாழைப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது.

    தினமும் பூவன் பழம் சாப்பிட்டு வந்தால், நல்ல ஜீரண சக்தி உண்டாகும். உடல் நிலை சரியில்லாமல் போய் மெள்ள மெள்ள மீண்டு வருபவர்கள் தினம் ஒரு பூவன்பழம் சாப்பிட்டால் உடல் சோர்வு, தளர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.
    மஞ்சள்காமாலை நோய் நீங்கிய பின்னும் கண்களில் தேங்கும் மஞ்சளை நீக்கும் வல்லமை படைத்தது ரஸ்தாளி பழம்.

    தினமும் ஒரு பேயன் வாழைப்பழத்துடன் சிறிது தேன் கலந்து சாப்பிட, அம்மை நோய் விட்டுச் சென்ற கொப்புளங்களின் வீரியம் குறையும். இதையே வெளிப்புற மருந்தாகவும் மாற்றலாம். ஒரு பேயன் வாழைப்பழத்-துடன் சிறு கொத்து வேப்பந்தளிர், கொஞ்சம் இளநீர், கஸ்தூரி மஞ்சள் பவுடர்.. இவற்றை சேர்த்து அரைத்து அம்மைத் தழும்புகளின் மீது பற்றுப் போட்டு வந்தால், சுவடே இல்லாமல் வடுக்கள் மறையும்.

    செவ்வாழையில் விட்டமின் ஏ சத்து கொட்டிக் கிடக்கிறது. இதைத் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர, நோய் எதிர்ப்பு சக்தி கூடும். சொரி, சிரங்கு போன்றவற்றை குணப்படுத்தி சருமத்தை சீராக்கும். நரம்புத் தளர்ச்சியினால் ஏற்படும் தளர்வையும் நீக்குவதோடு, எலும்பை பலப்-படுத்தி பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை தடுக்கும் வல்லமையும் செவ்வாழைக்கு உண்டு.
    நன்றாகப் பழுத்த அரை நேந்திரம் பழத்தை தினமும் இரவு சாப்பிட்டு வந்தால், இதயம் வலிமையாகும். மூச்சு சீராகும்.

    வயிறு நிறைந்திருக்கும்போது வாழைப் பழம் சாப்பிட்டால், அது தொண்டையி-லேயே தங்கி விடும். இதனால் சிலருக்கு சளி ஏற்படுகிறது. எனவே, வாழைப்பழம் சாப்பிட்டபின் ஒரு டம்ளர் சூடான தண்ணீர் பருகுங்கள். சளி ஏற்படாது.''


    Sponsored Links

  2. #72
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,298

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    ஹெல்த்துக்கு சப்போர்ட்... சப்போட்டா!
    பாலசுப்ரமணியன்
    அரசு சித்த மருத்துவர், பெரம்பலூர்
    சுவை மிகுந்த, கலோரி நிறைந்த சப்போட்டா ஆரோக்கியத்துக்கும் சப்போர்ட்டாக இருக்கிறது. உடலுக்குச் சத்தை அளிப்பதோடு, சருமத்துக்கும் பலன் அளிக்கிறது.

    சப்போட்டாவில், வைட்டமின்கள் பி6, சி, இ, ரிபோஃப்ளேவின், நியாசின், மாங்கனீஸ், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துகள் நிறைவாக உள்ளன. இது உடலுக்கு குளிர்ச்சியையும் பலத்தையும் தரும். இரும்புச்சத்து இருப்பதால் கர்ப்பிணிகள், ரத்தசோகை உள்ளவர்கள் இந்தப் பழத்தைச் சாப்பிடலாம்.

    ஆண்மைக் குறைபாடு உள்ளவர்கள் சாப்பிட்டுவந்தால், குறைபாடு நீங்கும். நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் சாப்பிடலாம்.

    கார்போஹைட்ரேட், சர்க்கரை, புரதச்சத்து இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இந்தப் பழத்தை உண்ணக் கூடாது.
    களைப்பைப் போக்கி, உடலுக்குப் புத்துணர்ச்சி தரக்கூடியது. குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.

    சப்போட்டா, முழுவதுமாகப் பழுக்காத நிலையில், செங்காயாகவும் சமைத்துச் சாப்பிடலாம். உடல் வலுப்பெற உதவும்.


    சப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை நீக்கக்கூடியது. வாய்ப்புண், வயிற்றுப் புண், மலச்சிக்கல் தீரும்.

    சப்போட்டா பழத்துடன், எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட, சளித் தொல்லை நீங்கும்.

    பித்த வாந்தி, மயக்கம் இருந்தால், சப்போட்டா பழத்துடன் சீரகம் சேர்த்துச் சாப்பிடலாம். சட்டென சரியாகும்.

    சப்போட்டா பழத்துடன், வெள்ளரி விதை, பயத்தமாவு கலந்து, குளிப்பதற்கு முன்பு பூசிவர, முகம் பிரகாசமாக ஜொலிக்கும்.



    Last edited by chan; 19th May 2015 at 02:21 PM.

  3. #73
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,298

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    பழங்களில் உள்ள மருந்துகள்



    மருத்துநாம் விரும்பிச் சாப்பிடும் சுவையான பழங்களுக்குள் மருத்துவ குணங்களும் உள்ளன.

    பழங்களுக்குள் உள்ள வ குணங்கள் இதோ,

    அப்பிள்

    இரத்த சோகை, இரத்த ஓட்டச் சுழற்சி, குடற்கிருமிகளை அழிக்க உதவுகிறது.
    வயிற்றுப்போக்கு, சீதபேதி, சிறுநீரக கோளாறுகள், சிறுநீரகத்தில் கல், ஆகியவற்றிற்கு உதவி புரிகிறது.

    இதய நோயாளிகளுக்குச் சிறந்த உணவாகிறது. கீல் வாதம், இடுப்புச் சந்து வாதம், துடைவாதம், நரம்பு சம்மந்தப்பட்ட சகல வாதங்களும் படிப்படியாகக் குறைந்து பூரண குணம் ஏற்படும்.

    நாவல் பழம்

    நீரிழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை நீக்கும். கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது. நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

    இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும். வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.


    திராட்சை

    ஒரு வயது குழந்தைக்கு மலக்கட்டு, சளி, காய்ச்சல் ஏற்பட்டால், குணமாக திராட்சை பழங்களை பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் கொடுக்க வேண்டும்.

    எலும்புகளை உறுதியாக்கும். சிவப்பு திராட்சை தோல் வியாதியை குணமாக்க உதவுகிறது.

    கொய்யாப்பழம்
    முதுமைத் தோற்றத்தைப் போக்கி முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தரும். உடல் வளர்ச்சியும், எலும்புகளும் பலம் பெறுகின்றன.

    வயிறு மற்றும் கல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. அல்சரைக் குணப்படுத்திவிடும்.

    பப்பாளி

    பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும்.

    எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். நரம்புத் தளர்ச்சி குறையும், பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.


    Last edited by chan; 25th May 2015 at 01:43 PM.

  4. #74
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,298

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    பேஷன் ஃபுருட்டின் நன்மைகள்


    தாட்பூட் என்று அழைக்கப்படும் பேஷன் ஃபுருட் ( Passion fruit ) தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது.மலைப்பாங்கான வெப்ப மண்டலப் பகுதிகளில் சிறப்பாக வளரும் இந்த கொடியின் பழம் பானங்கள் தயாரிக்க ஏற்றது. மருத்துவ குணங்கள் நிறைந்த இதன் சாறு இரத்த கொதிப்பு, புற்று நோய், ஆஸ்துமா போன்ற நோய்களின் கடுமையை குறைக்கும் .சர்க்கரை நோய்க்கும் நிவாரணியாகச் செயல்படுகிறது.பேஷன் ஃபுருட்.

    தாட்பூட் பழம், காட்டில் உள்ள மரங்களில் இதன் கொடி படர்ந்து இருக்கும் காய்கள் காய்த்து பழம் பழுக்கும். நல்ல சுவையுடன் இருக்கும். தாட்பூட் என்ற பெயரில் பொதுவாக அனைவராலும் அழைக்கப்படும் இப்பழம் ஆங்கிலத்தில் பேசன் ஃபுரூட் என அழைக்கப்படுகிறது. பேசி புளோரா என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்த இப்பழ்தை ஆங்கிலேயர்கள்தான் பேசன் புரூட் என்ற பெயரில் அழைத்தனர். பேசன் என்றால் ஆசை என்று பொருள். பார்த்தவுடன் இப்பழத்தை ஆசையுடன் சாப்பிடத் தோன்றுவதாலேயே இப்பழம் பேசன் ஃபுரூட் எனப்பெயர் பெற்றதாகவும் கூறப்படுவதுண்டு.
    பேசி புளோரா தாவரக் குடும்பத்தில் உலகில் 400 வகைகள் உள்ளன.

    இவற்றில் நீலகிரி மலைப்பகுதிகளில் 5 வகைகள் உள்ளன. இவற்றில் பழுக்கும் பழங்கள் வெளிர் நீல நிறத்திலும், தங்க மஞ்சள் நிறத்திலுமாக இரு நிறங்களில் காணப்படும். பெரும்பாலும் வனப்பகுதிகளில்தான் இப்பழங்கள் கிடைக்குமென்பதால் கருங்குரங்குகள் விரும்பி உண்ணும் பழமாக இது அமைந்துள்ளது. தற்போது கருங்குரங்குகளுக்குத் தேவைப்படும் உணவு வகைகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இவ்வகை இனம் அழிவின் விளிம்பிலுள்ளது தனிக்கை. அமெரிக்காவில் வெப்ப மண்டல பகுதிகளிலும், பிரேசிலில் அமேசான் காடுகளிலும், தென் அமெரிக்காவில் பராகுவே உள்ளிட்ட பகுதிகளிலும் இவ்வகைப் பழங்கள் அதிகளவில் விளைகின்றன.

    அதைத் தவிர இலங்கை, கென்யா, கேமரூன், ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளிலும் இப்பழங்கள் கிடைக்கின்றன.

    மருத்துவம்:
    வைட்டமின் ஏ,பி,சி என அனைத்தும் நிரம்பிய இவ்வகைப் பழங்களை அப்படியே சாப்பிடலாம். மேலை நாடுகளில் இப்பழத்திலிருந்து சாலட், சர்பத், ஐஸ்கிரீம், ஜூஸ், கார்டியல் போன்றவைதயாரிக்கப்படுகின்றன. இப்பழங்கள் இரத்த அழுத்தத்திற்கும், சர்க்கரை நோய்க்கும் நிவாரணியாக செயல்படுவதாக மக்கள் நம்புவதால் இதற்கு அனைத்து தரப்பிலும் அமோக வரவேற்பு உள்ளது. இப்பழத்தின் சிறப்பிற்காகவே கோவாவில் பேசியோ என்ற பெயரில் மதுபானமும் தயாரிக்கப்படுகிறது. வழக்கமாக செடிகளில் மலரும் மலர்களில் சூலகம் மலருக்குள்ளேயே அமைந்திருக்கும். ஆனால், இந்த ரகத்தில் மட்டும் சூலகம் இதழ்களுக்கு வெளியே தனியே வளர்ந்திருக்கும்.

    நீலகிரி மாவட்டத்தில் பேசி புளோரா கல்கரேட்டா, எடிபிள், போட்டிடா, லென்னாட்டி, மொல்லிசிமா என்ற ரகங்களைக் கொண்டுள்ளது. சில இடங்களில் இப்பழங்கள் உருண்டையாகவும், சில இடங்களில் கூம்பைப் போலவும் வளரும். இவை செடியாக இல்லாமல் கொடியாக வளரும் தன்மை கொண்டவை என்பதால் மரங்களின் மீது படர்ந்திருக்கும். இதன் காரணமாகவே குரங்கு இனங்கள் இப்பழங்களை விரும்பி உண்கின்றன. இப்பழத்துக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பைக் கருதி குன்னூரிலுள்ள அரசு தோட்டக்கலை பழவியல் நிலையத்தில் பேசன் ஃபுரூட் பழச்சாறு விற்பனை செய்யப்படுகிறது. இதைத்தவிர பழக்கன்றுகளும் விற்பனை செய்யப்படுகின்றன.



  5. #75
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,298

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    பழங்களும் ஆங்கில பெயர்களும்



    APPLE - குமளிப்பழம்,அரத்திப்பழம்

    APRICOT - சர்க்கரை பாதாமி
    AVOCADO - வெண்ணைப் பழம்,ஆணை கொய்யா
    BANANA - வாழைப்பழம்
    BELL FRUIT - பஞ்சலிப்பழம்
    BILBERRY - அவுரிநெல்லி
    BLACK CURRANT - கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி
    BLACKBERRY - நாகப்பழம்
    BLUEBERRY - அவுரிநெல்லி
    BITTER WATERMELON - கெச்சி
    BREADFRUIT - சீமைப்பலா, ஈரப்பலா
    CANTALOUPE - மஞ்சள் முலாம்பழம்
    CARAMBOLA - விளிம்பிப்பழம்
    CASHEWFRUIT - முந்திரிப்பழம்
    CHERRY - சேலா(ப்பழம்)
    CHICKOO - சீமையிலுப்பை
    CITRON - கடாரநாரத்தை
    CITRUS AURANTIFOLIA - நாரத்தை
    CITRUS AURANTIUM - கிச்சிலிப்பழம்
    CITRUS MEDICA - கடரநாரத்தை
    CITRUS RETICULATA - கமலாப்பழம்
    CITRUS SINENSIS - சாத்துக்கொடி
    CRANBERRY - குருதிநெல்லி
    CUCUMUS TRIGONUS - கெச்சி
    CUSTARD APPLE - சீத்தாப்பழம்
    DEVIL FIG - பேயத்தி
    DURIAN - முள்நாரிப்பழம்
    EUGENIA RUBICUNDA - சிறுநாவல்
    GOOSEBERRY - நெல்லிக்காய்
    GRAPE - கொடிமுந்திரி, திராட்சைப்பழம்
    GRAPEFRUIT - பம்பரமாசு
    GUAVA - கொய்யாப்பழம்
    HANEPOOT - அரபுக் கொடிமுந்திரி
    HARFAROWRIE - அரைநெல்லி
    JACKFRUIT - பலாப்பழம்
    JAMBU FRUIT - நாவல்பழம்
    JAMUN FRUIT - நாகப்பழம்
    KIWI - பசலிப்பழம்
    LYCHEE - விளச்சிப்பழம்
    MANGO FRUIT - மாம்பழம்
    MANGOSTEEN - கடார முருகல்
    MELON - வெள்ளரிப்பழம்
    MULBERRY - முசுக்கட்டைப்பழம்
    MUSCAT GRAPE - அரபுக் கொடிமுந்திரி
    ORANGE - தோடைப்பழம், நரந்தம்பழம்
    ORANGE (SWEET) - சாத்துக்கொடி
    ORANGE (LOOSE JACKET) - கமலாப்பழம்
    PAIR - பேரிக்காய்
    PAPAYA - பப்பாளி
    PASSIONFRUIT - கொடித்தோடைப்பழம்
    PEACH - குழிப்பேரி
    PERSIMMON - சீமைப் பனிச்சை
    PHYLLANTHUS DISTICHUS - அரைநெல்லி
    PINEAPPLE-அன்னாசிப்பழம்
    PLUM - ஆல்பக்கோடா
    POMELO - பம்பரமாசு
    PRUNE - உலர்த்தியப் பழம்
    QUINCE - சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்
    RAISIN - உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை
    RASPBERRY - புற்றுப்பழம்
    RED BANANA - செவ்வாழைப்பழம்
    RED CURRANT - செந்திராட்சை, செங்கொடிமுந்திரி
    SAPODILLA - சீமையிலுப்பை
    STAR-FRUIT - விளிம்பிப்பழம்
    STRAWBERRY - செம்புற்றுப்பழம்
    SWEET SOP - சீத்தாப்பழம்
    TAMARILLO - குறுந்தக்காளி
    TANGERINE - தேனரந்தம்பழம்
    UGLI FRUIT - முரட்டுத் தோடை
    WATERMELON - குமட்டிப்பழம், தர்பூசணி
    WOOD APPLE – விளாம்பழம்


  6. #76
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,298

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    வளரும் குழந்தைகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய கனி


    கொய்யா பழத்தில் வைட்டமின் பி, சி ஆகிய உயிர்ச்சத்துக்களும், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும் அடங்கியுள்ளன.

    இதர பழங்களை ஒப்பிடும்போது கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், வளரும் குழந்தைகளுக்கு இக்கனி ஒரு வரப்பிரசாதமாகும்.

    மலச்சிக்கலால் அவதிப்படும் நபர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், அப் பிரச்னையில் இருந்து மீளலாம்.

    கொய்யா பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடையும்.

    இந்த பழம் செரிமான உறுப்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இதனை உண்பதால் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுப்பெறும்.

    இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

    கொய்யா பழத்தில் உள்ள லைகோபைன் (Lycopene) மற்றும் கரோட்டினாய்டுகள் (Carotenoids) புற்றுநோய் கட்டிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டவை.

    இப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால், இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.

    கொய்யா பழத்தை தோல் நீக்கி சாப்பிடுவதை விட, தோலுடன் அப்படியே சாப்பிட வேண்டும், இது முகத்திற்கு பொலிவை தருவதுடன் தோல் வறட்சியையும் நீக்கும்.

    குறிப்பு:

    இப்பழத்தை இரவில் சாப்பிடக் கூடாது, அதேபோன்று வாதநோய் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடாமல் தவிர்ப்பது நலம்.

    கொய்யா பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு.

    நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும்.

    இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் இருமல் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் தோல் வியாதி அதிகரிக்கும்.

    kkmathy likes this.

  7. #77
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    2,961

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    Very good info, Latchmy.

    chan likes this.

  8. #78
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,298

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    இதயம் காக்கும் திராட்சை
    பிரியா ஜான்

    சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவர்
    னிப்பும் புளிப்பும் கலந்த பழம், திராட்சை. கறுப்பு, பச்சை என இரண்டு வகை நிறங்களில் கிடைக்கும் திராட்சையில், தாது உப்புக்களும் ஆன்டிஆக்ஸிடன்ட்டும் நிறைந்திருக்கின்றன. நீர்ச்சத்து நிறைந்தது என்பதால், டீஹைட்ரேட் ஆகும் வாய்ப்பு குறையும்.
    தொடர்ந்து திராட்சைகளை எடுத்துக்கொண்டால், மலச்சிக்கல் தீரும், சிறுநீர் நன்கு கழியும்.

    இதில் உள்ள ஃப்ளவனாய்ட்ஸ் மற்றும் ரிஸ்வெரட்றால் (Resveratrol) எனும் வேதிப்பொருட்கள், எல்.டி.எல் என்ற கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

    ரத்தஅழுத்தம் குறையும். இதய நோய்கள் வராமல் தடுக்கும். இதனால்தான், திராட்சை ஜூஸை ‘இதய டானிக்’ என்பர்.

    இரும்புச்சத்து அதிகம். ஹீமோகுளோபின் உற்பத்தியைப் பெருக்கும். காலை எழுந்தவுடன் காபி, டீ-க்கு பதிலாக, சர்க்கரை சேர்க்காத திராட்சை ஜூஸ் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

    கர்ப்பக்காலத்தில் இதை எடுத்துக்கொண்டால், மலச்சிக்கல் வராது.

    பால் பற்கள் முளைக்கும்போது, குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கை சரிசெய்ய, திராட்சை ஜூஸை ஒரு ஸ்பூன் அளவுக்கு, இரண்டு வேளை கொடுக்கலாம்.

    தினமும் 30 - 40 திராட்சைகள் உண்டால், குடல் புண் ஆறும் வாய்ப்புகள் அதிகரிக்கும். காமாலை, மலக்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைப் பெருமளவு குறைக்கும்.

    ரிபோஃபிளேவின், தயாமின், அஸ்கார்பிக் அமிலம், வைட்டமின் பி6 போன்ற சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும். அல்சைமர் என்ற மறதி நோய் வரும் வாய்ப்பு குறையும்.

    திராட்சை (உலர்ந்தது அல்லது ஃப்ரெஷ்), பேரீச்சம்பழம், மிளகு, வாய்விடந்தை, வால்மிளகு, தேன் இவற்றை சமஅளவு எடுத்து, மை போல அரைத்துச் சாப்பிட்டால், வறட்டு இருமல் நீங்கும்.



    Last edited by chan; 4th Jun 2015 at 12:37 PM.

  9. #79
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,298

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    அலர்ஜியால் அவதியா? இந்த பழத்தை சாப்பிடுங்க




    கண்ணை கவரும் நிறத்தில் இருக்கும் பப்பாயா உடலுக்கு ஆரோக்கியமான நன்மைகளை வழங்குகிறது.

    பப்பாளியில் அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ,சி மற்றும் ஈ இருக்கிறது.

    இத்தகைய அதிகமான அளவு ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அவை உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை கரைக்கின்றன.

    பப்பாளியை சாப்பிட்டால் மலச்சிக்கல் இருந்தாலும் சரியாகிவிடும். பப்பாளியில் இருக்கும் நொதிப்பொருள் மற்றும் நார்ச்சத்துக்கள், குடல் இயக்கத்தை சரியாக இயக்குவதால் செரிமானம் எளிதில் நடைபெற்று மலச்சிக்கலும் குணமாகிறது.

    பப்பாளியில் உடலில் ஏற்படும் அலர்ஜியை எதிர்த்து போராடும் பண்புகள் இருக்கின்றன. அதனால் தான் உடலில் எரிச்சல் அல்லது புண் இருந்தால் பப்பாளியை சாப்பிடுகின்றனர்.

    மேலும் மூட்டுவலி அல்லது ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பப்பாளி ஒரு சிறந்த மருந்தாகும்.

    பப்பாளியில் இருக்கும் பலவித பண்புகளோடு புற்றுநோயை குணப்படுத்தும் பொருளும் இருக்கிறது.

    இந்த பழத்தில் இருக்கும் நார்ச்சத்து, புற்றுநோய் உண்டாக்கும் டாக்ஸின்களை(Toxin) உடலில் இருந்து முற்றிலும் வெளியேற்றி, வயிற்றில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கிறது.

    மேலும், பப்பாளியில் இருக்கும் போலேட், வைட்டமின் சி, பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவையும் புற்றுநோய் உண்டாக்குவதை தடுக்கும் சத்துக்களாகும்.

    பப்பாளி ஜீஸ்

    பழுத்த பப்பாளி பழம் – 1, பால் – 1 கப், சீனி – 1 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி எல்லாவற்றையும் ஒன்றாக மிக்சியில் போட்டு அரைக்கவும்.

    வெனிலா ஐஸ் க்ரிம் அல்லது ஸ்ட்ராபெர்ரி ஐஸ் க்ரீம் சேர்த்துக் கொள்ளலாம்.

    பயன்கள்

    வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்தையும், உற்சாகத்தையும் வழங்குகிறது.

    இதில் நியுட்ரியஸ் உள்ளதால் உடம்புக்கு நல்லது.

    கொலஸ்ட்ரால் குறையும்.

    அழகாக மாற ஆசையா

    பழுத்த பப்பாளியை மிக்ஸியில் அரைத்து எலுமிச்சை பழ ஜீஸ் விட்டு கலந்து முகம் மற்றும் உடலில் தடவி ஊறியபின் தேய்த்துக் குளித்தால் பருக்கள், கரும்புள்ளிகள் மறையும்.

    பப்பாளி தோலினை அரைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து கொண்டால் சருமம் மற்றும் முக சுருக்கத்திற்கு குட்பை சொல்லிவிடலாம். அவை வராமலும் தடுக்கவும் செய்யும்.

    உங்களுடைய தோலை மென்மையாக வைத்திருக்க விரும்பினால், பப்பாளிப் பழத்தை எடுத்து மெல்லிய படலமாக உங்களுடைய தோலில் தடவி, சில நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் கழுவிக் கொள்ளுங்கள்.


  10. #80
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,298

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    அல்சர் நோய்க்கு அருமருந்தாகும் திராட்சை!
    திராட்சைப்பழம் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தக்கூடியது. திராட்சையில் பச்சை, கறுப்பு என எந்த பழம் இருந்தாலும் சாப்பிடலாம். குறிப்பாக அல்சர் என்று சொல்லப்படும் வயிற்றுப்புண், குடல்புண், வாய்ப்புண்ணுக்கு திராட்சை அருமையான மருந்தாகும். காலையில் கண் விழித்ததும் திராட்சைப்பழத்தை சாறு எடுத்து குடித்து வாருங்கள்... வேறு எந்த மருத்துவ சிகிச்சைக்கும் கட்டுப்படாத வயிற்றுப்புண் முழுவதும் குணமாகும். இதேபோல், தலைசுற்றல், மலச்சிக்கல், கை - கால் எரிச்சல் உள்ளவர்களும் திராட்சையை வெறுமனே பழமாகவோ, ஜூஸாகவோ சாப்பிட்டு வந்தால் கைமேல் பலன் கிடைக்கும். மேலும், பொதுவாக பல்வேறு நோய்களுக்கு முக்கிய காரணமாக இருக்கும் மலச்சிக்கலை சரிசெய்ய திராட்சை நல்ல மருந்தாகும். மலச்சிக்கல் உள்ளவர்கள் உலர் திராட்சையை இரவு உறங்கும் முன் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால் மறுநாள் காலை அதன் பலன் தெரியும்.
    இதே பிரச்னை குழந்தைகளுக்கு இருந்தால், சிறிதளவு தண்ணீரில் உலர் திராட்சையை இரவில் ஊறப்போட்டு காலையில் கண்விழித்ததும் அதை நசுக்கி அதன் சாற்றை மட்டும் குடிக்க கொடுத்தாலே பிரச்னை சரியாகிவிடும்.

    கர்ப்பிணி பெண்களுக்கு வாய்க்குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு இருக்கும். அந்தமாதிரி நேரங்களில் திராட்சை சாப்பிட்டால் பலன் கிடைக்கும். எடை குறைவாக இருக்கிறவர்கள், உடம்பில் சூடு அதிகம் உள்ளவர்களும் திராட்சையை சாப்பிட்டு பலனடையலாம்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter