Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree98Likes

Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்


Discussions on "Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #81
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    பாலுணர்வைத் தூண்டும் சிறந்த 9 பழங்கள் !!!




    இன்றைய காலத்தில் கருவுறுதல் பிரச்சனை நிறைய பேருக்கு இருக்கிறது. இத்தகைய பிரச்சனை ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள் போன்றவற்றால் தான் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி சரியான உணவுகள் சாப்பிடாமல் இருப்பதால், உடலுக்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் போவதாலும், இந்த பிரச்சனை ஏற்படும். சிலருக்கு பாலுணர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் சரியாக இருக்காது. அதனால் அவர்களால் உறவில் சரியாக ஈடுபட முடியாது.

    பாலுணர்ச்சியைத் தூண்டுவதற்கு என்ன செய்யலாம் என்ற கேள்விக்கான விடையை தேடுங்கள்.மேலும் அதற்கான ஒரு விடையையும் உங்களுக்காக கொடுத்துள்ளோம். அது வேறொன்றும் இல்லை, உணவுகள் தான். பொதுவாக கடல் சிப்பிகள் பாலுணர்வைத் தூண்டும் ஒரு சிறந்த உணவு என்பது அனைவருக்கும் தெரியும். அதுமட்டுமின்றி காய்கறிகள், நட்ஸ், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் போன்றவையும் பாலுணர்வைத் தூண்டும் என்று தெரியும். இவற்றைத் தவிர பழங்களை சாப்பிட்டாலும், பாலுணர்வை அதிகப்படுத்தலாம் என்பது தெரியுமா? ஆம், உண்மையில் பழங்களில் ஒருசிலவற்றில் பாலுணர்வைத் தூண்டும் பொருளானது உள்ளது. எனவே அவற்றை சாப்பிட்டு, பாலுணர்வை அதிகப்படுத்தி வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவித்து வாழுங்கள். சரி, இப்போது அந்த பழங்கள் என்னவென்று பார்ப்போமா!!!

    ஸ்ட்ராபெர்ரி
    ஸ்ட்ராபெர்ரியில் கருவுறுதலை அதிகரிக்கும் வைட்டமின் பி மற்றும் போலிக் ஆசிட் அதிகம் உள்ளது. மேலும் இதை ஆண்கள் அதிகம் சாப்பிட்டால், விந்தணுவின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

    வாழைப்பழம்
    வாழைப்பழத்தை சாப்பிட்டால், இரும்பு சக்தி மட்டும் கிடைப்பதில்லை. அவை பாலுணர்வை அதிகரிக்கும் ஹார்மோன்களையும் தூண்டும். மேலும் இதில் உள்ள வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், பாலியல் உறுப்புகளை நன்கு ஆரோக்கியமானதாகவும் வைக்கும்.

    அத்திப்பழம்
    அத்திப்பழத்திலும் பாலுணர்ச்சியை அதிகரிக்கும் பொருள் அதிகமாக உள்ளது. எனவே இதனை பெண்கள் அதிகம் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, கருவுறுதலின் அளவையும் அதிகரிக்கும்.

    அவகேடோ
    அவகேடோ உடல் மற்றும் சருமத்திற்கு மட்டும் நன்மை தரும் பழம் அல்ல. இது பாலுணர்ச்சியைத் துண்டும் பழங்களிலும் சிறந்த ஒன்று. எனவே இதனை அதிகம் சாப்பிடுவதால், கருவுறுதலுக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

    கோஜி பெர்ரி
    பெர்ரிப்பழங்களில் ஒன்றான கோஜி பெர்ரி ஆண்களுக்கு மிகவும் சிறந்த பழம். ஏனெனில் இதில் உள்ள பாலிசாக்கரைடுகள் ஆண்களில் விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கும்

    .
    லிச்சி
    இந்த இனிப்பான மற்றும் சாறு அதிகம் உள்ள பழத்தில் உறவில் அதிக நேரம் ஈடுபட வைக்கும் வைட்டமின் சி, காப்பர் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது.

    ஆரஞ்சு
    சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் போலிக் ஆசிட் அதிகம் உள்ளது. எனவே இந்த பழத்தை ஆண்கள் மற்றும் பெண்கள் அதிகம் சாப்பிட்டால், இனப்பெருக்க மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.

    செர்ரி
    சில செர்ரிப் பழங்கள் பெரோமோனின் உற்பத்தியை தூண்டும். எனவே இதனை சாப்பிட்டால், காதல் வாழ்க்கை மிகவும் உற்சாகமாக இருக்கும்.



    Sponsored Links

  2. #82
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    இரத்த நாளங்களில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் பச்சை ஆப்பிள்




    சிவப்பு வகை ஆப்பிள்கள் மிகவும் பொதுவாக காணப்படுகின்றன. பச்சை நிற ஆப்பிள்கள் புளிப்பாக இருந்தாலும், சுவைப்பதற்கு இனிமையாக இருக்கும். இந்த பழத்தில் தான் இயல்பாகவே பல்வேறு வகையான புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

    பச்சை ஆப்பிளில் நிறைய நார்ச்சத்துக்கள் இருப்பதால், குடலை சுத்தம் செய்வதிலும் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தினை அதிகரிக்கவும் செய்கிறது. எனவே இது தடையற்ற குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. பச்சை ஆப்பிளில் தாதுப்பொருட்களான இரும்புச்சத்து, துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம் முதலிய சத்துக்கள் மனித சுகாதாரத்திற்கு வேண்டுவன ஆகும்.

    அதிலும் ஆப்பிள்களில் இருக்கும் நுண்ணூட்டச் சத்தான இரும்புச்சத்து இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவை உயர்த்த உதவுகிறது. எடையை குறைக்க முயலுபவர்களுக்கு பச்சை ஆப்பிள் ஒரு சிறந்த உணவாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் உணவில் ஒரு ஆப்பிளை சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் இது இரத்த நாளங்களில் கொழுப்பு சேர்வதை தடுத்து, இதயத்திற்கு சரியான இரத்த ஓட்டத்தைப் பராமரிக்க உதவுகிறது.

    பச்சை ஆப்பிளில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுவதால், இது கட்டற்ற தீவிர மூலக்கூறுகளால் சரும செல்களுக்கு எதிராக ஏற்படும் சேதத்தை தடுக்க உதவுகிறது. இதனால் சரும புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளை குறைகிறது. பச்சை ஆப்பிள்களில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துக் காணப்படுவதால், இது கட்டற்ற தீவிர மூலகூறுகளால் சரும செல்களுக்கு எதிராக ஏற்படும் சேதத்தை தடுக்க உதவுவதோடு, இது சருமத்தை பிரகாசிக்கவும் உதவுகிறது.

    பச்சை ஆப்பிள்கள் மூப்படைதலுக்கு எதிரான ஒரு சிறந்த மூலப்பொருளாக உள்ளது. இந்த ஆப்பிளில் எதிர் ஆக்ஸிகரணிகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துக் காணப்படுவதால், தோலின் நெகிழ்வு திறன் மற்றும் நீண்ட நாட்கள் இளமையாக இருக்க செய்கிறது.


  3. #83
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    கொய்யா பழத்தை இரவில் சாப்பிடலாமா?

    பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யா பழத்தில், முக்கிய உயிர்சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டுள்ளது.

    வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன. கொய்யாமரத்தின் இலைகள், திசுக்களை சுருக்கும் மற்றும் குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை. மலச்சிக்கல் போக்கும். கசாயம் வாந்தியை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால், இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம்.

    கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல் தொண்டை மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம், தயாரிக்கப்படும் கஷாயம், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து, காயத்தின் மேல் தடவினால், அவை விரைவில் ஆறிவிடும். கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கு மருந்தாக உதவுகின்றன.

    கொய்யாமரத்தின் பட்டை, பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர் பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கை குணப்படுத்தும். கொய்யாப்பழத்தை நன்றாக கழுவிய பிறகு, பற்களால் கடித்து நன்கு மென்று தின்பதே நல்லது. இதனால்
    பற்களும், ஈறுகளும் பலப்படும். வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து, இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும்.

    கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது. மது போதைக்கு அடிமையான, மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால், இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

    சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட நல்லது. நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள், இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள், இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.


    கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது. கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது.


  4. #84
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

    நலம் ! நலமறிய நாவல்

    கருஊதா நிறத்தில், கண்களைக் கவரும் நாவல் பழம், துவர்ப்பும் இனிப்புமாக நாவுக்குச் சுவையை அள்ளித்தரும். ஒருகாலத்தில் தள்ளுவண்டிகளில் விற்றபோது சீண்டுவாரின்றி இருந்தது. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என்றதும் விர்ரென விலை ஏறிவிட்டது. நாவல் பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டும்தான் நல்லதா?
    இந்தப் பழத்தில் ‘குயுமின்’ என்ற ஆல்கலாய்டு இருப்பதால், தோலில் சுருக்கங்கள் வராமல் தடுத்து, இளமையைத் தக்கவைக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் என்பதால், செல்கள் புதுப்பித்தலுக்குப் பெரிதும் உதவும். கால்சியம் இருப்பதால், எலும்புகள் வலுவடையும். ஈறுகளை உறுதியாக்கும். சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல, சர்க்கரை நோயின் ஆரம்ப நிலை எனப்படும் ப்ரீ டயாபடீஸ் நிலையில் உள்ளவர்கள், நாவல் பழத்தைச் சாப்பிட்டால் சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைக்கலாம். மூளை பலப்படவும், கல்லீரல் நோய் குணமாகவும், செரிமான சக்தி அதிகரிக்கவும் நாவல் பழம் உதவுகிறது.
    நாவல் பழக் கஷாயம், வாயுத்தொல்லையை நீக்கும். மண்ணீரல் வீக்கம் மற்றும் நாட்பட்ட கழிச்சல் நோயைக் குணப்படுத்தும்.
    கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும். ரத்தத்தைச் சுத்திகரித்து, ரத்த விருத்திக்கு உதவும். நீர்ச்சுருக்கைக் குணப்படுத்தும்.
    இரண்டு நாவல் பழங்களை உப்பில் போட்டுச் சாப்பிட்டால், தொண்டைக்கட்டுப் பிரச்னை நீங்கும்.
    தாகத்தைத் தணிக்கும். பழுக்காத காய்களை நன்றாக உலர்த்திப் பொடித்து, அதை ஒரு தேக்கரண்டி மோரில் போட்டுக் கலந்து அருந்தினால், வயிற்றுப்போக்கு குணமாகும்.
    நாவல் பழத்தைச் சாப்பிட்ட பின், கொட்டையைத் தூர எறியாமல், நிழலில் நன்றாக உலர்த்தி, பொடித்து, சலித்துக்கொள்ளவும். தினமும், இந்தப் பொடியை இரண்டு முதல் நான்கு கிராம் வீதம் தண்ணீரில் கலந்து மூன்று வேளை அருந்தினால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். பித்தத்தைப் போக்கும்.
    நாவல் இலைக் கொழுந்து, மாவிலைக் கொழுந்து ஆகிய இரண்டையும் சம அளவில், எடுத்து மை போல் அரைத்து, தயிர் அல்லது மோரில் கலந்து சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு, ரத்த சீதபேதி ஆகியவை குணமாகும்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter