Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree15Likes

Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்த


Discussions on "Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்த" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #11
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்&a

    செரிமான பிரச்சனையை தீர்க்கும் பெருங்காயம்

    பெருங்காயத்திற்கு சில மருத்துவ குணங்கள் உண்டு. இது உணவுக்குழாய் வாயுநிலை தடுப்பானாகவும், உணர்ச்சியைக் கிளறிவிடும் தடுப்பானாகவும், நுண்ணுயிர் கொல்லியாகவும், மலமிளக்கியாகவும், சளி நீக்கியாகவும் மற்றும் தூக்க மருந்தாகவும் பயன்படுகிறது. பெருங்காயம் அன்றாடம் சமைக்கும் உணவில் சேர்க்கப்படுகிறது.

    செரிமானப் பிரச்சனைகளான வயிற்று வலி, வாயு, குடல் புழுக்கள், வயிற்றுப் பொருமல், எரிச்சல் ஏற்படுத்தும் குடல் புண்கள் போன்ற சிலவற்றை குணப்படுத்த உதவுகிறது. சிறிது பெருங்காயத்தை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து பருகினால், செரிமான தொந்தரவுகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

    பெருங்காயத்தின் பயன்பாட்டினால் பெண்களுக்கு மாதவிடாயினால் ஏற்படும் பிரச்சனைகளான வயிற்று வலி, சதை பிடிப்பு, ஒழுங்கற்ற மாதவிலக்குக் காலம் மற்றும் வாய்வுகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பெண்ணுக்கு ஏற்படும் புண்களுக்கும், வெண் கசிவுகளுக்கும் இது சிறந்த மருந்தாக விளங்குகிறது.

    பெருங்காயத்தை தேன் மற்றும் இஞ்சியுடன் கலந்து குடித்தால் சுவாசக் கோளாறுகளான வறட்டு இருமல், ஆஸ்துமா, மார்புச் சளி போன்றவைகள் குணமாகும். பெருங்காயம் சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. இரத்த சர்க்கரை அளவை குறைக்க, பாகற்காயில் பெருங்காயத்தை சேர்த்து சாப்பிடலாம்.

    இந்த வாசனைப் பொருள் நரம்பு உந்தியாக செயல்படும். எனவே இதை நரம்பு தளர்ச்சி நோய், தசை வலிப்பு, மயக்க நிலை மற்றும் இதர நரம்பு சீர்குலைவுகளுக்கு பயன்படுத்தலாம். பெருங்காயத்தை தண்ணீரில் கலந்து பருகினால் தலைவலி மற்றும் கடுமையான ஒற்றை தலைவலி நீங்கும்.

    அதிலும் எலுமிச்சை பானத்துடன் ஒரு சிட்டிகை பெருங்காயம் கலந்து குடித்தால், பல் வலி நீங்கும். ஆய்வின்படி இது ஒரு புற்றுஎதிர்ப்பியாக இருப்பதால், புற்றுநோயை உண்டாக்கும் அணுக்கள் வளருவதை தடுக்கின்றன.

    சந்தையில் கிடைக்கும் பல சரும பாதுகாப்பு பொருட்களில் பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள் இருப்பதால், சரும சிகிச்சைக்கு உகந்ததாக இது விளங்குகிறது. இதை சருமத்தின் மேல் நேரடியாக தடவினால், தோல் தடிப்பு மற்றும் தோல் காய்ப்பு நீங்கும்.


    Sponsored Links

  2. #12
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்&a

    மூளையை பலமாக்கும் மஞ்சள்


    மஞ்சளுக்கும் பெண்களுக்கும் நிறையவே தொடர்புகள் உண்டு. அவர்கள்தான் இந்த மஞ்சளை, தங்கள் உடல் அழகுக்காகவும் பயன்படுத்துகிறார்கள்; கமகம சமையலிலும் உபயோகிக்கின்றனர்.

    இதே மஞ்சளுக்கு மூளையை பலமாக்கும் `பவர்’ இருப்பதாக கண்டறிந்து இருக்கிறார்கள் வட கரோலினா பல்கலைக்கழக பேராசிரியர்கள்.அதாவது, சமையலுக்காக பயன்படுத்தும் மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்கிற உட்
    பொருள் அல்சைமர் மற்றும் டெமெண்டியா என்கிற மூளை சம்பந்தப்பட்ட மற்றும் நினைவாற்றலை குறைக்கும் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டிருப்பது இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஆய்வு முடிவு குறித்து ஆய்வாளர்கள் கூறும்போது, `மூளைக்குள் இருக்கும் நரம்பு மண்டலத்தில் உருவாகும் ஒருவகை புரோட்டீன், அமிலத்தன்மையின் பரவல் காரணமாக நினைவாற்றலை இழக்கிறது. மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்கிற உட்பொருள் இந்த புரோட்டீன் அமிலத்தன்மையின் பரவலை தடுக்கும் சக்தியை பெற்றிருப்பது எங்கள் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனர்.

    ஒரு வாரத்தில் குறைந்தது மூன்று முறை மஞ்சள் கலந்த குழம்பை உணவில் சாப்பிடுபவர்களுக்கு மூளை மற்றும் நினைவாற்றல் குறையும் நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்புகள் குறைவதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
    மஞ்சளை சமையலில் பயன்படுத்தும் வழக்கம் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் மட்டுமே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




  3. #13
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்&a

    இலவங்கப் பட்டையின் 20 மருத்துவ குணங்கள்!!!

    இலவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள் எண்ணிலடங்காதவை. மூலிகைகள் என்றாலே அதில் நிறைய ஆரோக்கிய நலன்கள் அடங்கியிருக்கும். பட்டையின் சிறப்பு என்னவெனில், இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருப்பதே ஆகும். இலவங்கப்பட்டை வீட்டு மருந்தாக மட்டுமின்றி அழகை மேம்படுத்த உதவுவதிலும் நல்ல பயன் தருகிறது.

    எந்த ஒரு நற்குணம் வாய்ந்த மருந்தாக இருந்தாலும், அதை மருத்துவ நிபுணர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் உட்கொள்வது தவறு. அதில் இருந்து இலவங்கப் பட்டை வேறுப்பட்டதல்ல. ஒருவேளை சிலர் ஏதேனும் மருந்துகள் உட்கொண்டு வருபவர்களாக இருந்தால்.

    இலவங்கப் பட்டையை உட்கொள்வதை, உங்களது மருத்துவ ஆலோசகரிடம் பரிசீலித்தப் பின்பு எடுத்துக் கொள்வது நல்லது. சரி வாருங்கள் தற்போது பட்டையில் உள்ள மருத்துவ நற்குணங்கள் பற்றி அறிந்துக் கொள்வோம்...

    குடல் நோய் எரிச்சல் குடல் நோய் மற்றும் அதன் மூலம் வரும் எரிச்சல்களை பட்டையின் மருத்துவ குணம் கட்டுப்படுத்துகிறது. மற்றும் பட்டையில் இருக்கும் ஆன்டி-பாக்டீரியா தன்மை இரைப்பை குடலில் தங்கும் நச்சுப் பூச்சிகளை அழித்து இரைப்பை குடல் நோய்கள் வராமல் தடுக்கிறது.

    மூட்டு வலி இலவங்கப் பட்டை மூட்டு வலி உள்ள நோயாளிகளுக்கு நல்ல தீர்வளிகிறது. இலவங்க பட்டை எண்ணெய்யைக் கொண்டு மசாஜ் செய்வது மற்றும் பட்டையை தேநீரில் கலந்து குடிப்பது போன்றவை நல்ல பயனளிக்கக் கூடியதாக கருதப்படுகிறது. போதிய ஆதாரங்கள் இல்லாத போதிலும் பாட்டிக் காலத்து வைத்தியமான இது நல்ல பயனளிப்பதாக கூறப்படுகிறது.

    இரத்த சர்க்கரை இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இலங்கைப் பட்டை வெகுவாக பயனளிக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் டைப் 2 சர்க்கரை உள்ளவர்களுக்கு இது நல்ல பயன் தருகிறது.

    ஆன்டி-பாக்டீரியல் இலவங்கப் பட்டையில் இயற்கையிலேயே ஆன்டி- பாக்டீரியா தன்மை அடங்கி இருப்பதால், இது பாக்டீரியா சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கிறது. உங்களுக்கு தேநீர் அருந்தும் பழக்கம் இருந்தால் இனிமேல் இலவங்கப் பட்டை தேநீர் அருந்துங்கள் இது உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது.

    புற்றுநோய் வராமல் தடுக்கிறது புற்றுநோய் கட்டி உருவாகாமல் இருக்க இலவங்கப் பட்டை நல்ல முறையில் பயன் தருகிறது. சில மருத்துவ ஆராய்ச்சிகளின் மூலம் நாம் அறிவது என்னவெனில் இது சில வகையான புற்றுநோய்கள் நம்மை தாக்காது இருக்க உதவுகிறது.

    கிருமி நாசினி இலவங்கப் பட்டையில் நுண்ணுயிர் பூச்சிகளைக் கொல்லும் தன்மை உள்ளது. அதனால் இது ஒரு நல்ல கிருமி நாசினியாக பயன் தருகிறது. உங்களது சமையல் அறைத்திட்டு அல்லது வீட்டு தரைகளை துடைக்கும் போது நீரில் சில துளிகள் இலவங்கப் பட்டை எண்ணெய்யை கலந்து துடைத்தால் நல்ல பயனளிக்கும்.

    ஆன்டி-ஆக்ஸிடன்ட் நமது உடல்நலத்தை நல்ல முறையில் பேணிக் காக்க ஆன்டி-ஆக்ஸிடன்ட்டின் பங்கு பெருமளவில் பயனளிக்கிறது. இலவங்கப் பட்டையில் இருக்கும் இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் நம் உடல்நலம் என்றும் ஆரோக்கியமாக இருக்கு உதவிகிறது.

    பாதுகாப்பு இலவங்கப் பட்டையில் இருக்கும் ஆன்டி-பாக்டீரியா தன்மை பாக்டீரியாக்களை எளிதில் அண்டாமல் இருக்க உதவுகிறது. இதனால் பட்டையை உணவில் சேர்ப்பதன் மூலம் உணவு சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்க வைக்கலாம்.

    மசாஜ் நீங்கள் பொதுவாக உபயோகப்படுத்தும் மசாஜ் செய்யும் எண்ணெயில் சிறிதளவு இலவங்கப்பட்டை எண்ணெய்யை கலந்து பயன்படுத்தினால், உங்களது உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.

    உடல் எடை இலவங்கப்பட்டை நமது இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. மேலும் நமது உடல் பருமனை கட்டுப்படுத்தி உடல் எடை கூடாமல் தடுக்கிறது.

    அழகு உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் இல்லாமல் அழகு பெறவும் உதவுகிறது இலவங்கப்பட்டை. இதை உச்சந்தலையில் உபயோகப்படுத்துவதன் மூலம் பொடுகுத் தொல்லை தீரும். மற்றும் நல்ல சருமம் பெறவும் நிறைய மக்கள் பட்டையை பயன்படுத்துகின்றனர்.

    மாதவிலக்குக்கு முன் வரும் நோய்க்குறி இலவங்கப்பட்டையில் இருக்கும் மாங்கனீசின் நற்குணம் மாதவிலக்குக்கு முன் வரும் நோய்க்குறிகளில் இருந்து பாதுகாப்பாய் இருக்க உதவுகிறது.

    இதயம் நல்ல ஆரோக்கியமான இதயம் பெற இலவங்கப்பட்டை உதவுவதாகவும் மற்றும் இதயம் சார்ந்த கோளாறுகளுக்கு தீர்வளிப்பதாகவும் பாட்டி வைத்தியம் காலத்திலிருந்தே சொல்லப்படுகிறது.

    மன அழுத்தம் இலவங்கப்பட்டை எண்ணெயின் நறுமணம் நமது கவலையை போக்கி, நமது மனநிலையை மேலோங்க செய்ய உதவுவதாய் கூறப்படுகிறது.


  4. #14
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்&a

    சளியில் இருந்து உடனடி நிவாரணம் தரும் சீரகம்..!

    தற்போது குளிர் அதிகம் இருப்பதால் பலருக்கும் சளி, இருமல் போன்றவை எளிதில் தொற்றிக் கொள்கின்றன. இத்தகைய சளி, இருமலுக்கு பலரும் பல்வேறு மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வருவார்கள். ஆனால் எந்த ஒரு பலனும் இருந்திருக்காது.

    அப்படி வெளியே மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்கி உட்கொள்வதை விட்டு, நம் வீட்டின் உள்ளேயே இருக்கும் குட்டி மருந்துக் கடையான சமையலறைக்கு சென்று அங்குள்ள அற்புதமான சில பொருட்களைக் கொண்டே சளி மற்றும் இருமலுக்கு உடனடி நிவாரணத்தைக் காணலாம். அப்படி சளி மற்றும் இருமலுக்கு உடனடி நிவாரணம் தரக்கூடியது தான் சீரகம்.

    இந்த சீரகத்தில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு தன்மை அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் சீரகத்தில் உள்ள சத்துக்களால் காயமடைந்த தசைகள் ரிலாக்ஸாகும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். இதனால் உடலில் உள்ள நோய்த்தொற்றுக்கள் விரைவில் குணமாகும்.

    அதுமட்டுமின்றி, சீரகத்தில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சளிக்கு உடனடி நிவாரணத்தைத் தரும். இப்போது சீரகத்தைக் கொண்டு எப்படி சளிக்கு உடனடி நிவாரணம் காண்பது என்று பார்ப்போம்.

    * 2 கப் நீரில் 1 ஸ்பூன் சீரகத்தை சேர்த்து கொதிக்க விட்டு, பின் அதில் சிறிது இஞ்சி மற்றும் துளசி இலைகளை தட்டி சேர்த்து வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் குடித்து வந்தால், சளிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

    * சளியினால் மூக்கடைப்பு ஏற்பட்டிருந்தால், சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அத்துடன் சிறிது கிராம்பையும் சேர்த்து கொதிக்க விட்டு, பின் அந்த நீரை ஆவி பிடித்தால், மூக்கடைப்பு நீங்கி, நிம்மதியாக மூச்சு விட முடியும்.


    Attached Thumbnails Attached Thumbnails Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்த-04-1423054004-10-cumin.jpg  
    sucharitha likes this.

  5. #15
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்&a

    சாதிக்காய்

    சாதிக்காய் அனைவரையும் மயக்கும் ஒரு விதமான நறுமணம் கொண்டது. அதோடு பல மருத்துவ குணங்களை உள்ளடக்கிய மிகச் சிறந்த மணமூட்டி.

    சாதிக்காயில் ஆண் மரம், பெண்மரம் எது என்று அறிய 6 வருடங்கழித்து அவை பூக்கும் போது தான் கண்டுபிடிக்கவே முடியும்.


    முற்காலத்தில் நறுமண வியாபாரிகளாலும், மூலிகை வியாபாரிகளாலும் "எங்கிருந்து இந்த பொருள் கொண்டு வரப்படுகிறது" என்பதை வெளியில் சொல்லாமல் ரகசியமாய் வைத்து விற்பனை செய்யப்பட்ட வரலாறும் உண்டு...

    ஆரம்ப காலக் கட்டத்தில் இது நறுமணத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது.. நாளடைவில் இதில் இருக்கும் மருத்துவ குணங்கள் உணரப்பட்டது... ஆனால் இதன் குணத்தை மேலோட்டமாக ஓரளவு மட்டுமே அறிந்தவர்களால் இது காமம் தூண்டக்கூடிய பொருள் என்று மட்டுமே பார்க்கப்படுகிறது...
    இதில் உண்மை இருக்கிறது என்றாலும் கூட இதில் அதை தாண்டிய பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பி வழிகிறது...

    சாதிக்காய் கனிக்கும் விதைக்கும் நடுவில் இருக்கும் மெல்லிய தோல் போன்ற பகுதி தனியாக பிரிக்கப்பட்டு "சாதிபத்ரி" என்று தனியாகவும் பயன்படுத்தப்படுகிறது...

    குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு கொடுக்கப்படும் சித்த/ஆயுர்வேத மருந்துகளில் சாதிக்காயும், சாதிபத்ரியும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.. ஆண்களுக்கு காம உணர்வை தூண்டும். விந்தணு குறைபாட்டை நீக்கி விந்தணு எண்ணிக்கையை பெருக்கும். இதன் காரணமாக குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிட்டும்.

    நினைவாற்றல் அதிகமாகும்.. சுவாசம் சீராகும். பித்தம் நீக்கும். அதோடு மட்டுமல்லாமல் நரம்பு மண்டலத்தை முழுவதுமாக சீராக்கும். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் உண்டாகும் வயிற்றுப்போக்கை குணமாக்கும். காலரா போன்ற வாந்தி பேதி நோய்களுக்கு இது ஒரு அருமருந்து .

    சாதிக்காய் "அரோமா தெரபி" என்று சொல்லக்கூடிய வாசனை சிகிச்சை முறையிலும் கூட பயன் படுத்தப்படுகிறது. இதன் வாசனை நிலையில்லாமல் அலைபாயும் மனதை அமைதிப்படுத்தும் . மன அழுத்தத்தை போக்கி நல்ல உறக்கம் வர வைக்கும். மனதில் உற்சாகம் உண்டாக்கும்..

    சாதிக்காயில் உள்ள Myristicin என்ற சத்து அதிகம் இருப்பதால் தோல் சுருக்கத்தை (anti ageing) தடுக்கும். இதனை நம் முன்னோர்கள் அறிந்து தங்களது தோற்றப் பொலிவை காத்திருக்கிறார்கள்... மேலும் இது வாசனை திரவியங்கள், முகப்பூச்சுக்கள், பற்பசை மற்றும் வாய் கொப்புளிக்கும் தைலங்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    எல்லாவற்றிலும் நம் முன்னோர்களை புறக்கணித்த நாம் இந்த விஷயத்திலும் கூட அதையே செய்து.... தோலிற்கு தீங்கு விளைவிக்கும் இராசயன கலவையாக வரும் அழகு சாதன கிரீம்களை விளம்பரங்களில் பார்த்து மயங்கி... வாங்கி உபயோகித்து இயற்கையாகவே இருக்கும் சரும அழகையும் கெடுத்துக்கொள்கிறோம்..



    Attached Thumbnails Attached Thumbnails Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்த-nutmug.jpg  

  6. #16
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்&a

    விஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு

    இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
    வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.

    அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.

    இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.

    * சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.

    * வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

    * இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டுய, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.

    * கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.

    * பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது.
    திருநீற்றுப் பச்சை இலைச்சாறு பருக்கள், வடுக்கள் போன்றவற்றிலிருந்து சருமத்தைக் காக்கிறது.இதன் சாறுடன் வசம்பு சேர்த்து, அரைத்து சருமத்தில் தோன்றும் பருக்களுக்குப் போட்டால் விரைவில் குணம் தெரியும்.




    முருங்கை இலையுடன் வசம்பு, உப்பு சேர்த்து சுட்டு கரியாக்கி, அதை நீரில் குழைத்து தொப்புளைச் சுற்றி பற்றிட குழந்தைகளின் வயிற்று உப்புசம், வயிற்று வலி தீரும்.

    Attached Thumbnails Attached Thumbnails Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்த-.jpg  

  7. #17
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்&a

    நலம் தரும் ஜாதிக்காய்

    முகத்தை அழகாக்கும்:

    ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும்; முகம் பொலிவடையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப்படுகிறது.

    அம்மை கொப்புளங்கள் சரியாகும்:

    அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை போடி செய்து உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.

    தசைப்பிடிப்பை நீக்கும்:

    ஜாதிக்காயின் விதை வாந்தியை தடுக்கக் கூடியது. ஜீரணத்தை தூண்டவல்லது. தசை வலியினைப் போக்குகிறது. விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூட்டுவலி பக்கவாதம் ஆகியவற்றிற்கு பயன்படுகிறது. காலரா நோயின் பொழுது ஏற்படும் தசைப்பிடிப்பு வலியினை போக்க மேல் பூச்சாக உதவுகிறது. இதனுடைய வடிநீர் காலரா நோயாளிகளின் தண்ணீர் தாகத்தினைச் சரிப்படுத்தும். ஜாதிக்காய்த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத்து குடித்து வந்தால் நா வறட்சி சரியாகும்.

    ஜாதிக்காயின் விதைகளின் மேல் சூழ்ந்துள்ள சிவப்பு நிற திசு ஜாதிபத்ரி எனப்படுகிறது. ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்ரி வயிற்றுப் போக்கு, உப்புசம், குடல்வலி, ஆகியவற்றினை போக்க உதவுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு வயிறு உப்புசம் ஏற்படாமல் இருக்க ஜாதிக்காய் விதையை அரைத்து குடிக்க கொடுப்பார்கள். ஜாதிக்காய், சுக்கு மற்றும் ஓமம் மூன்றின் பொடி ஜீரணத்திற்கு சிறந்த மருந்தாகும்.


    Attached Thumbnails Attached Thumbnails Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்த-1.jpg  

  8. #18
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்&a

    பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்

    சமையல் செய்யும்போது வாசனைக்காக பயன்படுத்தும் பெருங்காயத்தில் ஏராளமான மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளன.

    பெருங்காயத்தில் புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது.

    மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை ஈடுகட்டலாம்.

    நரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்து.

    சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.

    பெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி நொடியில் பறந்துவிடும், அதோடு வாய் துர்நாற்றமும் போய்விடும்.

    ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகிறவர்கள், பெருங்காயப் பொடியை அனலில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் உடனே தீரும்.

    பெருங்காயம் வாயுக்கோளாறுக்கு மிகவும் பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும் ஹிஸ்டீரியா மற்றும் இருமலுக்கும் மிகவும் பயன்படுகிறது.

    இலைகள் வயிற்றுப்புழுக்களை வெளியேற்றவும், வியர்வை மற்றும் ஜீரண தூண்டுவியாக பயன்படுகிறது.

    பெருங்காயத்தில் உள்ள வேதிப்பொருள்கள், நுரையீரல் – சுவாசமண்டலம் வழியாக மார்புசளியினை இருமல் மூலம் வெளியேற்றுகிறது.

    மார்புவலி, மூச்சுக்குழல் அழற்சி, கக்குவான் ஆகியவற்றினை போக்க உதவுகிறது, மேலும் உயர் ரத்த அழுத்தத்தினை குறைத்து ரத்தத்தின் அடர்த்தியினை குறைக்கிறது.



  9. #19
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்&a

    சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால்...?

    சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

    அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.

    மந்தத்தைப் போக்கும்;நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.

    சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.

    மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

    சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும்.

    உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.

    ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

    சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.

    திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

    அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.

    சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

    ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சீரகத்தைத்தூள் செய்து இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது




  10. #20
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்&a

    கசகசா

    இந்திய உணவுகளில் கசகசாவுக்கு தனி இடம் உண்டு. இந்தி மொழியில் 'கஸ்கஸ்' என்று அழைக்கப்படுகிறது. இது உணவுப் பொருள் மட்டுமல்ல, மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையும் கூட. கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற கனிமங்களை நிறைய அளவு பெற்றிருக்கின்றன. ‘கசகசாவினால் குடற்புழு, தினவு, குருதிக் கழிச்சல், தலைக்கனம், தூக்கமின்மை போகும். அழகும் ஆண்மையும் கூடும்’ என்கிறது சித்தர் பாடல்.

    காரசாரமான மட்டன், சிக்கன் குழம்பு மற்றும் பிரியாணி போன்ற அசைவ உணவுகளில் ருசியைக் கூட்ட கசகசா சேர்க்கப்படுகிறது. மேற்குலக நாடுகளிலும் ‘பாப்பி விதை’ (POPPY SEED) என்று அழைக்கப்படும் கசகசாவுக்கு சிறப்பான மரியாதை உண்டு. பாப்பி மலர்கள் அலங்காரத்துக்காக பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

    இந்த பாப்பிச் செடியில் விதைகளை தாங்கியிருக்கும் பை முற்றி, அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதிலிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா. ஆனால், விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும் போது, அதாவது பையில் இருக்கும் விதைகள் முழுமை அடையாமல் இருக்கும் சமயத்தில், அந்த விதைப்பையைக் கீறி அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால் அதுதான் ஓபியம்
    மதுபானம், புகையிலை, அபின், ஹெராயின், கஞ்சா, கோக்கைன், பிரவுன் சுகர் போன்று ஓபியமும் போதை தரக்கூடியது. போதைபொருள் பழக்கம் உடல் நலத்திற்கும், சமூக நலத்திற்கும் பெரும் கேடு விளைவிக்கும். இதனால் வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. கசகசாவில் போதை இல்லை என்றாலும், ஓபியம் தயாரிக்கப்படும் செடியின் விதை என்பதால், தடை செய்துள்ளார்கள். காரணம், இந்த விதையை விதைத்து, கசகசா செடியை வளர்த்து ஓபியம் எடுத்துவிட முடியும். அதனால்தான், கசகசாவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கசகசா இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. கசகசாவுக்காக பயிர் செய்யப்படும் செடிகளிலிருந்து சட்ட விரோதமாக ஓபியம் எடுப்பதும் நடக்கிறது.

    இந்தியாவை பொறுத்தவரை கசகசா போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரவில்லை. என்றாலும், இந்திய அரசின் நீதித்துறை, வருவாய்த்துறை மற்றும் சுங்க இலாகா இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கசகசாவை உரிய அனுமதியின்றி எடுத்துச் செல்ல தடை உத்தரவு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது



    Attached Thumbnails Attached Thumbnails Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்த-poppy-seed.jpg  

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter