Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree15Likes

Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்த


Discussions on "Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்த" in "Healthy and Nutritive Foods" forum.


 1. #21
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்&a

  கசகசாவின் மருத்துவ குணங்கள்

  கைக்கெட்டும் தூரத்தில் மருந்தை வைத்துக்கொண்டு தொலைதூரத்தில் இருக்கும் மருத்துவரை தேடிக் கொண்டு ஓடுகிறோம். வீரியமிக்க ஆங்கில மருத்துவத்தின் மீதான பற்று சமீப காலங்களில் வெகுவாக குறைந்து வருவது வரவேற்கத்தக்கது.

  மக்கள் மீண்டும் நம் பாரம்பரிய இயற்கை மருத்துவத்திற்கு மாறி வருகிறார்கள். பக்க விளைவுகள் அற்ற அதிக செலவற்ற இயற்கை மருத்துவம் நம் நோயை குணப்படுத்துவதுடன் நமது ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

  நம் சமையலறையில் இருக்கும் பொருள்களின் மருத்துவ குணங்கள், சிறப்புகள் என்னவென்று ஒவ்வொன்றாக தொடர்ந்து இந்த பிரிவில் பார்க்கலாம்.

  கசகசா

  பாப்பி செடியில் இருந்து பெறப்படுகிறது. பாப்பி மலர்களை அலங்காரத்துகாக பல்வேறு நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இதன் விதைப்பை முழுவதுமாக காய்ந்த பின் அதனுள்ளே இருக்கும் விதை தான் கசகசா.

  அசைவ உணவுகளில் சுவைக்காக கசகசாவை சேர்ப்பார்கள். ஒரு சில இனிப்பு, கேக் வகைகளிலும் சேர்க்கபடுவதுண்டு. சுவை மட்டுமில்லாமல் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய தன்மை இதில் இருக்கிறது. ஒரு அளவோடு இதனை சாப்பிட வேண்டும் , அளவுக்கு மீறினால் மயக்கத்தை கொடுக்கும்.

  ஓயாமல் அழுதுக் கொண்டே இருக்கும் குழந்தைகளுக்கு கசகசாவை மைபோல் அரைத்து, அந்த குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவினால் அழுகை குறைந்து நிம்மதியாக தூங்கும்.

  அம்மை வந்து போன தழும்பு ஒரு சிலருக்கு மிகுந்த மன வருத்தத்தை கொடுக்கும், அவர்கள் இந்த கசகசாவை ஒரு ஸ்பூன் எடுத்து அத்துடன் கொஞ்சம் வேப்பிலை, கஸ்தூரி மஞ்சளை சேர்த்து அரைத்து தழும்பு இருக்கும் இடங்களில் தொடர்ந்து தடவி வர அம்மை வந்த தழும்பு மறைந்துவிடும்.

  வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும்.

  தலையில் பொடுகு வந்து அவதி படுபவர்கள் சிறிதளவு கசகசாவை ஊறவைத்து அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து பின் குளித்து வந்தால் நாட்பட்ட பொடுகும் மறையும்.


  கசகசா சில திண்பண்டங்களில் ருசிக்காக மட்டும் சேர்க்கப்படுவதில்லை. இது தேகத்திற்கு குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்டது. எச்சரிக்கை இதை அதிகம் உண்டால் மயக்கம் வரும்.

  வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும்.

  கசகசா சருமத்தை பளபளபாக்கும்--அழகு குறிப்புகள்

  முகம் எப்பொழுதும் பளீச் என்று இருக்க வேண்டுமா? இதை பயன்படுத்துங்கள்.

  1.வரண்ட சருமத்திர்கு : கசகசாவை கொஞ்ஜம் நிறமாறாமல் வருத்து அரைத்து முகத்தில் புசலலாம்.
  2. என்னை பசை உடைய சருமத்திற்கு: மேலே சொன்னது போல் அரைத்து அதனுடன் கொஞ்சம் பைத்தம் பருப்பை சேர்த்து வருத்து அரைத்து புசலாம். கசகசாவிர்க்கு மட்டுமே சருமத்தை பளபளபாக்கும் தன்மை உடையது.
  Sponsored Links
  Attached Thumbnails Attached Thumbnails Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்த-poppy-seed1.jpg  
  sumitra likes this.

 2. #22
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்&a

  நலம் தரும் கடுகு

  நம் முன்னோர்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களையே உணவாக சாப்பிட்டு வந்தார்கள். ஒவ்வொரு வீட்டின் சமையல் அறையிலும் அஞ்சறைப் பெட்டி என்னும் அற்புத மருந்து பெட்டகம் இருக்கிறது. அதில் உள்ள உணவுப் பொருட்கள் அனைத்தும் மருத்துவ குணம் மிக்கவை. அவற்றின் மருத்துவ குணங்களை அறிந்து உபயோகித்தால் நாம் நூறாண!டு நோய்நொடியின்றி வாழலாம்.


  கடுகில் இரண!டு வகை உண!டு. அவை கருங்கடுகு மற்றும் வெண!கடுகு.

  கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழிக்கேற்ப எண!ணற்ற சத்துக்களையும், மருத்துவ குணங்ளையும் சின்னஞ்சிறிய கடுகு தன்னகத்தே கொண!டுள்ளது. ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே நாம் கடுகை பயன்படுத்தி வந்துள்ளோம்.

  கடுகு சிறு செடி வகையைச் சார்ந்தது. இந்தியாவில் பல இடங்களில் பயிரடப்படுகிறது. வெண!கடுகை விட கருங்கடுகில் காரம் மிகுந்து காணப்படுகிறது. இதன் மேல்தோல் கறுப்பாக இருக்கும்.

  கடுகு குளிர்ந்த நீருடன் சேரும் போது அதன் மேல்தோல் அப்புறப்படுத்தப்பட மைரோஸினேஸ் எனப்படும் என்ஸைம் வெளிப்படுகிறது. இதுவே கடுகின் தனிப்பட்ட சுவைக்கு காரணமாக இருக்கிறது. நம் நாட்டு சமையலில் சூடான எண!ணெயில் கடுகை பொரிக்கின்றோம். அப்போது அதன் மேல்தோல் அகலுகிறது. அதனால் மணமும் கார சுவையும் நம் சமையலில் சேர்க்கின்றது.

  கடுகின் சத்துக்கள் :

  கடுகில் நோய் எதிப்பு சக்தி அதிகம் உள்ளது. கடுகில் செலினியம் அதிகமாக உள்ளது. இது உடலில் உள்ள நச்சுத் தன்மையை போக்கும். இதில் உள்ள மெக்னீசியம் ஆஸ்துமா கோளாறுகளை நீக்குகிறது. கடுகில் உயர்தர கால்சியம், மாங்கனீஸ், ஒமேகா3 கொழுப்பு அமிலம், இரும்பு, புரதம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகிறது.

  கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில் 508 கலோரி ஆறறல் கிடைக்கிறது. எளிதில் வளர்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது. கடுகு நொதிகளில் செய்பாடு நரம்பு மண!டல செயல்பாடு மற்றும் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நியாசின் கடுகில் அதிக அளவில் உள்ளதால் இரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.

  செரிமானத்தைத் தூண!ட :

  செரிமானத்தைத் தூண!டும் சக்தி கடுகுக்கு உண!டு. தினமும் உணவில் கடுகை சேர்த்துக் கொள்வது நல்லது. கடுகை நன்கு அரைத்து பொடியாக்கி அதனுடன் மிளகு பொடி, உப்பு சேர்த்து காலையில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் செரிமான சக்தியைத் தூண!டி அஜீரணக் கோளாறைப் போக்கும்.

  இருமல் நீங்க :

  ஒரு சிலருக்கு இருமும் போது தலைப்பகுதி முழுவதும் வலி உண!டாகும். இந்த இருமல் நாளுக்கு நாள் அதிகரித்து தலைச்சுற்றலை உண!டாக்கும். இந்த இருமல் நீங்க கடுகுப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தலைவலியுடன் உண!டாகும் இருமல், மூக்கில் நீர் வடிதல், அதிக உமிழ்நீர் சுரத்தல் போன்றவை குறையும்.

  வயிற்றுவலி குணமாக :


  அஜீரணக் கோளாறால் வாயுக்கள் சீற்றமடைந்து வயிற்றில் வலியை உண!டாக்கும். கடுகை பொடி செய்து வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் இந்த வயிற்றுவலி நீங்கும்.

  நஞ்சு உண!டவர்களுக்கு :

  தெரிந்தோ தெரியாமலோ சிலர் நஞ்சை உண!டிருந்தால் அவர்களுக்கு முதலில் கடுகை அரைத்து நீரில் கலந்து கொடுக்க வேண!டும். இவ்வாறு கொடுப்பதால் வாந்தி உண!டாகும். இந்த வாந்தியுடன் உள்ளிருக்கும் நஞ்சானது வெளியேறும். சில வகையான காணாக்கடிகளுக்கு கடிபட்ட இடத்தில் கடுகை அரைத்து தடவினால் விஷம் நீங்கும்.

  இருமல் இளைப்பு நீங்க

  கடுகுத்தூள், அரிசி மாவு இவைகளை சரி பாதியாக எடுத்து வெந்நீரில் கலந்து களி போல் கிளறி அதை இருமல், இரைப்பு இருப்பவர்கள் மார்பு, தொண!டைப் பகுதிகளில் தடவி வந்தால் இருமல் இளைப்பு நீங்கும். தலைவலி உள்ளவர்கள் நெற்றியில் பற்றுப் போடலாம்.

  சிறுநீர் பெருக்கி :

  கடுகை அரைத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்.

  கை, கால்கள் விரைப்பு சீராக :

  கை, கால்கள் சில்லிட்டு விரைத்துக் காணப்பட்டால் கடுகை அரைத்து துணியில் தடவி கை, கால்களில் சுற்றி வைக்க வெப்பத்தை உண!டாக்கும். உடனடியாக விரைப்பு சீராகும்.

  இரத்தக் கட்டு, மூட்டு வலி குறைய :

  கடுகை அரைத்து பற்று போட்டால் இரத்தக் கட்டு, மூட்டு வலி போன்றவை குறையும்.

  கடுகு எண!ணெய் :

  கடுகிலிருந்து எடுக்கப்படும் எண!ணெயை வட இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

  * கடுகு எண!ணெய் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

  * கூந்தல் வளர்ச்சிக்கும், சரும பாதுகாப்பிற்கும் கடுகு எண!ணெய் உதவுகிறது.

  * கொழுப்பு சத்து அதிகமில்லாத கடுகு எண!ணெய் இதய நோயை தடுக்கும்.

  * கருப்பை கட்டியைச் சுருக்குவதில் கடுகு எண!ணெய் பெரும் பங்கு வகிக்கிறது. கடுகு பெண!களின் மெனோபாஸ் கால சிக்கலை நீக்குகிறது. நல்ல தூக்கத்தை கொடுக்கிறது.

  இத்தகைய மருத்துவ குணம் நிறைந்த கடுகை நம் அன்றாட உணவில் சேர்த்து நம் உடல் ஆரோக்கியத்தை பெருக்கிக்கொள்வோம்.


  Attached Thumbnails Attached Thumbnails Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்த-kadugu.jpg  
  sumitra likes this.

 3. #23
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்&a

  ஏலக்காய் ஒரு இயற்கை மருந்து என்பது நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம்...!

  சமையலில் முக்கியமாக இனிப்புப் வகைகள், கேக், போன்றவற்றிற்கு வாசனை, சுவை அளிக்க கூடிய ஏலக்காய் ஒரு இயற்கை மருந்து என்பது நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம் வாசனைப் பொருட்களின் ராணி(Queen of the spices) என்று சிறப்புப் பெயர் - செல்லப் பெயர் கொண்ட ஏலக்காய், இந்தியாவில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  ஏலக்காய் விதையில் புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம், வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை அடங்கியுள்ளன.

  ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன.

  * சிறிது ஏலப்பொடியை, வெற்றிலையுடன் மென்று தின்றால், அஜீரணம் அகலும். பசி ருசி உண்டாகும்.

  * ஏலப்பொடியுடன், மிளகுப்பொடி சேர்த்து, சிறிது துளசிச்சாறில் சேர்த்துக் குடித்தால், கடும் கபம் இளகி வெளிப்பட்டு, நலம் உண்டாகும். பக்க விளைவு இல்லாத இயற்கை மருந்து இது.

  * ஏலக்காய் தூள், டீ தூள் இரண்டையும் சேர்த்து டீ தயாரித்து அத்துடன் தேன் சேர்த்து, தினம் இருவேளை பருகி வர, நரம்புகள் வலுப்படும்.

  * தேனுடன், ஏலக்காய்தூள் கலந்து, சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கும். நரம்புகள் நன்கு இயங்கும். வலிமை அடையும்.

  * ஏலக்காயுடன், கறிவேப்பிலை வைத்து மைய்யாக அரைத்து எருமைத் தயிரில் சேர்த்து மூன்று வேளை சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

  * ஏலக்காய் விதைகளை வாயிலிட்டு அடக்கிக் கொண்டு, உமிழ்நீரை விழுங்கிவர, வாய்நாற்றம் மாறும்.

  * நான்கு மிளகு, சிறிது ஏலக்காய், சுக்கு இவைகளுடன் பால் தெளித்து விழுதாக அரைத்து, நெற்றியில் பற்றிட தலை வலிதானே போகும்.

  * ஏலக்காய், மிளகு, சுக்கு, திப்பிலி, தனியா இந்த ஐந்தையும் சேர்த்து கஷாயம் செய்து பருகிவர குற்றிருமல் குணமாகும்.

  * வெந்தயத்தை ஊற வைத்து எடுத்து சிறிது ஏலக்காய்ச் சேர்த்து மென்று தின்றால் வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

  * சிறிது ஏலக்காயுடன் வேப்பிலை மஞ்சள் வைத்து அரைத்து பித்த வெடிப்பு மீது பூசிவர, விரைவில் வெடிப்பு குணமாகும்.

  * ஏலக்காயுடன், அதிமதுரம், மிளகு போட்டு கொதிக்க வைத்த நீரை வடிகட்டி பருகினால், வாந்தி, குமட்டல் உடனே நிற்கும்.

  * அன்னாசிப்பழச்சாறுடன், ஏலக்காய்தூள் சேர்த்து பருகிவர, மூத்திரக் கோளாறுகள் குணமாகும். நீர்கடுப்பு நீங்கும். சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்களுக்கு, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

  * சுக்கு, ஏலக்காய், கிராம்பு இவைகளுடன் சிறிது நீர் தெளித்து மைய அரைத்து, சூடாக்கி கை, கால் மூட்டுகளின் மீது பூசி வர, மூட்டுவலி குணமாகும். ஆரம்பநிலை வாதம் நீங்கும்.

  * ஏலப்பொடி, சீரகப்பொடி, மல்லிப்பொடி இவைகளுடன், சிறிது கருப்பட்டி பொடித்திட்டு கலந்து, ஒரு நெல்லிக்காய் அளவு வீதம் காலை மாலை தின்றுவர, பித்த கிறுகிறுப்பு மாறும்.

  * திராட்சைச்சாறுடன், ஏலக்காய்த்தூள் கலந்து சாப்பிட்டுவர, நரம்புத்தளர்ச்சி நீங்கும். நரம்புகள் வலுப்பெறும்.

  * ஏலக்காய்தூள், சுக்குப்பொடி, மிளகுப்பொடி இவைகளை தேனில் கலந்து சாப்பிட்டுவர, தசைபிடிப்புகள் நீங்கும்.

  * செவ்வாழைப்பழத்துடன், சிறிது ஏலக்காய்தூள் சேர்த்துச் சாப்பிட்டால் மாதவிடாய்க் கோளாறுகள் ஒழுங்குபடும்.

  * வெல்லத்தைப் பொடித்து நீரில் கலந்து, அத்துடன், எலுமிச்சைச்சாறு, ஏலக்காய் தூள் சேர்த்து பானம் தயாரித்து பருகினால் கோடைத்தாகம் நீங்கும். உடல் குளிர்ச்சி அடையும். சோர்வு மாறி புத்துணர்ச்சி ஏற்படும்.

  * ஏலக்காயின் முக்கியமான பயன் என்னவென்றால். சூரிய வெப்பத்தால், உடலில் வெப்பம் அதிகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். மேலும் பக்கவாதம் வராது. அதிலும் வெளியே செல்லும் போது ஏலக்காயை வாயில் போட்டு மென்று சென்றால், வெப்ப அலைகள் உடலை தாக்காமல் பார்த்துக் கொள்ளும்.

  * ஆயுர்வேத கொள்கையின் படி, ஏலக்காய் உடலில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றிற்கு சிறந்தது. இவை உடலில் இந்த மூன்றையும் சமநிலையில் வைத்து, உடலை ஆரோக்கியமாக வைக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆகவே இதனை உண்டால் நன்கு ஆரோக்கியமாக வாழலாம். மேலும் அதனை உண்பதால், நல்ல குரல் வளத்தையும் பெறலாம்.

  * குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.

  * ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

  * மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், ஏலக்காய் டீ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள்.

  * நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.

  * வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

  * விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.

  * வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.


  sumitra likes this.

 4. #24
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்&a

  மல்லித் தூளை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

  மேற்கு நாடுகளெல்லாம் கனவிலும் நினைத்து பார்க்க முடியாது அளவிற்கு நம் நாட்டில் எண்ண முடியாத பத்திரிக்கைகளும், செய்தித்தாள்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவற்றில் "உடல்நல ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்புகள்" பற்றிய விஷயங்கள் இல்லாமல் இருப்பதில்லை. நம் நாட்டில் கிடைக்கும் பழமையான மூலிகையெல்லாம் சஞ்சீவியாக விளங்குகிறது. அவைகளைப் பற்றி படித்து தெரிந்து கொள்வது சுவாரசியமாக இருக்கும்.

  உதாரணத்திற்கு, மல்லி பொடியின் குணங்களை எடுத்துக் கொள்வோம். மல்லி பொடி அளிக்கும் உடல்நல பயன்கள் நம்மை பிரமிக்க வைக்கும். அதனை எப்படி அழைப்பது? இயற்கையின் வரப்பிரசாதம்?

  ஆம், சொல்லலாம். கடவுள் நம் மீது அருளை பொழிந்து, நமக்கு இந்த அழகான பூமியையும், அதில் இவ்வகை அழகான பொருட்களையும் தந்துள்ளார். நம் நாட்டில் விளையும் மற்ற மசாலாப் பொருட்களை போலவே, மல்லியும் வருடம் முழுவதும் கிடைக்கும் ஒரு மசாலா பொருளே. இந்த செடியின் உள்ள பழத்தை காய வைத்து மசாலா பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

  அதனை பொடியாக்கியும் உபயோகிக்கலாம். அதிலுள்ள ஊட்டச்சத்து அட்டவணை இவ்வாறு கூறுகிறது - 8% நார்ச்சத்து மற்றும் 2.9% கால்ஷியம் அதில் அடங்கியுள்ளது. அதனால் ஆரோக்கியமான மசாலா பொருட்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. உணவை தரம் பிரிக்கும் அமைப்பு ஊட்டச்சத்து வளமையாக உள்ள பொருளாக மல்லியை அறிவித்துள்ளது.

  குணப்படுத்தும் ஆற்றல் அதிகமாக உள்ளதால் மல்லி பொடிக்கு தனியாக ஒரு மவுசு இருந்து கொண்டு உள்ளது. ஐரோப்பியாவில் பல இடங்களில் இதனை "ஆன்டி-டயபெடிக்" செடி என்று கூட அழைக்கின்றனர். மருத்துவ குணங்களை கொண்டுள்ள மல்லி பொடியை பற்றி இன்னும் அறிந்து கொள்ள விரிவாக படியுங்கள்.


 5. #25
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்&a

  மல்லித் தூளை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

  இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்தும் சர்க்கரை நோய் என்பது உலகம் முழுவதும் பலருக்கும் உள்ள ஒரு பொதுவான் வியாதி தான். அது இன்றைய கால சூழலில் அதிகமாக காணப்படுகிறது. அதனை தடுத்து குணப்படுத்த நாம் கண்டிப்பாக ஒரு தீர்வை ஏற்படுத்தியாக வேண்டும். இதற்காக தான் இயற்கை அன்னை நமக்கு மல்லியை ஒரு தீர்வாக அளித்துள்ளார். மல்லி பொடியை உட்கொண்டால் அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் என்று பல ஆராய்சிகள் கூறுகிறது. மல்லிப்பொடியில் உள்ள குணப்படுத்தும் குணமே அதற்கு காரணமாக விளங்குகிறது. மல்லி பொடி நமக்கு அளிக்கும் விசேஷ மருத்துவ குணம் தானே இது?  சால்மோனெல்லா என்ற நுண்ணுயிரை அடக்கும் மிகவும் ஆபத்தான சால்மோனெல்லா என்ற பாக்டீரியாவை அழிக்க மல்லி பயன்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சால்மோனெல்லா பாக்டீரியா உணவு சம்பந்தமான நோய்களை உண்டாக்கும். உங்கள் உணவுகளில் மல்லி போன்ற ஆரோக்கியமான மசாலாக்களை சேர்த்தால் இவ்வகை நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.


  அடர்த்தியான மூலிகை மல்லியில் பைடோந்யூட்ரியெண்ட் குணங்கள் உள்ளதால் தான் நமக்கு பல மருத்துவ பயன்களை அளிக்கிறது. அதிலுள்ள ஆவியாகும் எண்ணெய்யில் லினலூல், பார்நியோல், கார்வோன், எபிஜெனின், சூடம் என பல பைடோந்யூட்ரியெண்ட்கள் உள்ளது
 6. #26
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்&a

  மல்லித் தூளை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

  பருக்களுக்கு நிவாரணி உடல்நல பலன்களை தவிர மல்லி பொடி பருக்களை நீக்கவும் பெரிதும் உதவுகிறது. இளைஞர்களுக்கு பருக்கள் என்றாலே பெரிய பயம். மல்லி பொடியையும் மஞ்சளையும் அல்லது மல்லி சாற்றை பயன்படுத்தி பருக்களை பெரிதளவில் குறைக்கலாம்.  கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் மல்லி பொடியில் உள்ள மற்றோடு மிகப்பெரிய மருத்துவ குணம் என்ன தெரியுமா? அது கொலஸ்ட்ராலை வெகுவாக குறைக்கும். மல்லியை பொடி அல்லது கொட்டை வடிவாக உட்கொண்டால் அது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெகுவாக குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.

  தொற்று ஏற்படுத்தும் வியாதிகளின் மீது அதன் தாக்கம் பெரிய அம்மை போன்ற பல வியாதிகள் தொற்றுக்களை விளைவிக்கும். மேலும் அது சுலபமாக பரவக் கூடிய வியாதிகளாகும். மல்லியில் உள்ள மருத்துவ குணங்கள் இந்த கிருமிகளுக்கு எதிராக போராடி அதனை அழிக்கும் ஆற்றலை ஓரளவுக்கு பெற்றுள்ளது என்று ஆய்வுகள் கூறுகிறது.


  மாதவிடாய் பிரச்சனைகளை சீராக்கும் கருவி ஆரோக்கியமான மசாலாக்களில் ஆரோக்கியமான குணங்கள் அடங்கியிருக்கும். மல்லியில் அப்படி பட்ட ஒரு குணம் தான் மாதவிடாயை சீராக்குவது. மாதவிடாயின் போது இரத்த கசிவு அதிகமாக இருந்தால் மல்லி பொடியை அல்லது மல்லி விதையை வெந்நீரில் போட்டு உட்கொள்ளுங்கள்.

  இயக்க உறுப்பு எதிராக போராடும் மல்லி எந்த வடிவத்தில் (இலை, விதை, பொடி) இருந்தாலும் சரி, அதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் உடலில் உள்ள இயக்க உறுப்புகளுக்கு எதிராக போராடும்.
 7. #27
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்&a

  சுகம் தரும் சோம்பு

  அறிவிலும் ஆக்கத்திலும் மேன்மை கொண்ட நம் முன்னோர்கள் தங்களுடைய வாழ்வில் ஆரோக்கியத்திற்கே முதலிடம் கொடுத்தனர்.“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழியை உலகிற்கு உணரச் செய்தவர்கள் தான் சித்தர்களும் ஞானிகளும்.நம் வீட்டு சமையல் அறைகளுக்குள்ளேயே மாபெரும் மருத்துவக் களஞ்சியத்தை வைத்துள்ளனர். ஒரு மனிதனின் உணவு மூலமே அவனுடைய நோய்க்கு மருந்தை கண்டறிந்து சொன்னவர்கள் சித்தர்கள்.

  வீட்டுச் சமையலில் ஏதோ வாசனைக்காக சீரகம், சோம்பு, இலவங்கம், வெந்தயம், கடுகு இவற்றை பயன்படுத்துகிறார்கள் என்று எண்ண வேண்டாம்.ஒவ்வொரு பொருளும் தலைசிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்டது.

  சோம்புபொதுவாக உணவு விடுதிகளில் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சிறு தட்டில் சோம்பை வைப்பார்கள். சிலர் அதை எடுத்து வாயில் போட்டு சாப்பிடுவதை பார்த்திருப்பீர்கள். அதன் அர்த்தம் என்ன என்பது இப்போது புரிந்திருக்கும். ஆம் உண்ணும் உணவை சீரணிக்க வைக்கும் சக்தி இதற்குண்டு. எனவே எளிதில் சீரணமாகாத உணவுகள், அசைவ உணவுகள் போன்றவற்றில் சோம்பை அதிகம் சேர்த்து சமைப்பார்கள்.இதை பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்று அழைப்பார்கள். இது பூண்டு வகையைச் சார்ந்தது. வெண்மை நிறத்துடன் சிறிது பச்சை கலந்த நிறமுடையது. இந்தியா முழுவதும் இது பயிரிடப்படுகிறது. குறிப்பாக கேரளா பகுதிகளில் அதிகம் விளைகிறது.இதன் பூ, விதை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.

  யோனிநோய் குன்மம் உரூட்சைமந் தம்பொருமல்போனமுறு காசம் பீலிகமிரைப்-பீன உரைசேர்க்கின்ற வாதமு போஞ் சீர்பெரிய சீரகத்தால்மூக்குநோ யில்லை மொழி- அகத்தியர்

  குணபாடம்செரிமான சக்தியைத் தூண்டஎளிதில் செரிமானம் ஆகாத உணவுகளைக் கூட செரிக்கச் செய்யும் தன்மை சோம்பிற்கு உண்டு. உணவுக்குப்பின் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மென்று சாறை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வந்தால் உண்ட உணவு எளிதில் சீரணமாகும்.

  குடல்புண் ஆறசாப்பிட்ட உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தப் புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் நாளடைவில் குணமடையும்.

  வயிற்றுவலி, வயிற்று பொருமல்அஜீரணக் கோளாறுகளால் வயிற்றில் வாய்வுக்களின் சீற்றம் அதிகமாகி வயிற்றுவலி, வயிற்று பொருமல் ஆகியவை ஏற்படுகின்றன. இவர்கள் உடனே சிறிதளவு சோம்பை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால் சிறிது நேரத்தில் குணம் தெரியும்.

  கருப்பை பலம்பெறகருப்பை பாதிக்கப்பட்டால் கருத்தரிப்பு நடக்காது. இதனால் சிலர் குழந்தை பேறு இல்லாமல் கூட அவஸ்தைப் படுவார்கள். பெருஞ்சீரகத்தை இளம் வறுவலாக வறுத்து பொடித்து, வேளையொன்றுக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது பனங்கற்கண்டு கலந்தோ சாப்பிட்டு வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகும்.

  ஈரல் பாதிப்பு நீங்கஉடலின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முக்கிய காரணியாக இருக்கும் உறுப்பு ஈரல்தான். ஈரல் பாதிக்கப்பட்டால் பித்தம் அதிகமாகி பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். ஈரல் நோயைக் குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது.சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடிசெய்து அதனுடன் தேன் கலந்து காலை மாலை 1 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும்.

  இருமல் இரைப்பு மாறநாள்பட்ட வறண்ட இருமல், இரைப்பு இவைகளால் அவதிப்படுபவர்கள் சோம்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரைப் பருகி வந்தால் நாள்பட்ட இரைப்பு, மூக்கில் நீர் வடிதல் குணமாகும்.சுரக் காய்ச்சல்அதிக குளிர் சுரம் இருந்தால் சோம்பை நீரில் கொதிக்க வைத்து கொடுத்தால் குளிர் சுரம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.பசியைத் தூண்டபசியில்லாமல் அவதிப்படுபவர்கள் சோம்பை தனியாக மென்று சாப்பிட்டு வந்தால் நன்கு பசியெடுக்கும்.இப்போது தெரிகிறதா சோம்பின் மகத்துவம்.  Attached Thumbnails Attached Thumbnails Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்த-saunf.jpg  

 8. #28
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்&a

  பெருஞ்சீரகம் இளம் வறுவலாக வறுத்து பொடித்து, தவறாமல் சாப்பிட்டு வந்தால் . . .

  பெருஞ்சீரகத்தை இளம் வறுவலாக வறுத்து பொடித்து, தவறாமல் சாப்பிட்டு வந்தால் . . .இன்றைய காலக்கட்டத்தில், சில பெண்களுக்கு தாய் மை அடைவது என்பதே கேள்விக்குறியாக இருந்து வருகிறது. என்னதான் மருத்துவஅறிவியல் முன்னேற்றம் கண்டிருந்தாலும், சிலருக்கு

  மருந்து மாத்திரை மற்றும் சிகிச் சைகளால் பல பின் விளைவுகளு க்கும் பக்கவிளைவுகளுக்கும் ஆளாகி வருவது கண்கூடு.
  பெண்களுக்கு கருப்பை பாதிக்கப் பட்டால் கருத்தரிப்பு நடக்காது. இதனால் சிலர் குழந் தைபேறு இல்லாமல் கூட அவஸ்தைப்படுவார்கள். இதற்கான எளிய தீர்வுண்டு
  ஆம் நாம் அன்றாடம் சமையலறையில் இருக்கும்
  எளி ய மூலிகையான பெருஞ்சீரகம் தான் அது.

  அந்த பெருஞ்சீரகத்தை இளம் வறுவலாகவறுத்து பொடித்து, ஒரு வேளைக்கு 2 கிராம் வீதம்
  தனியா கவோ அல்லது சுவைக்கான
  பனங் கற்கண்டை கலந்து சாப்பிட்டு வருவார் களேயானால், அவர்களுக்கு கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் வி லகி, விரைவிலேயே கருத்தரித்து ஆரோ க்கியமான குழந்தைக்கு தாயாகும் வாய்ப்பு கிட்டும் என்பதில் எள்ளவும் சந்தேகமில் லை.


  Last edited by chan; 13th Mar 2015 at 08:50 AM.

 9. #29
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்&a

  இலவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்!!!

  இலவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள் எண்ணிலடங்காதவை. மூலிகைகள் என்றாலே அதில் நிறைய ஆரோக்கிய நலன்கள் அடங்கியிருக்கும். பட்டையின் சிறப்பு என்னவெனில், இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருப்பதே ஆகும். இலவங்கப்பட்டை வீட்டு மருந்தாக மட்டுமின்றி அழகை மேம்படுத்த உதவுவதிலும் நல்ல பயன் தருகிறது.

  எந்த ஒரு நற்குணம் வாய்ந்த மருந்தாக இருந்தாலும், அதை மருத்துவ நிபுணர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் உட்கொள்வது தவறு. அதில் இருந்து இலவங்கப் பட்டை வேறுப்பட்டதல்ல. ஒருவேளை சிலர் ஏதேனும் மருந்துகள் உட்கொண்டு வருபவர்களாக இருந்தால். இலவங்கப் பட்டையை உட்கொள்வதை, உங்களது மருத்துவ ஆலோசகரிடம் பரிசீலித்தப் பின்பு எடுத்துக் கொள்வது நல்லது. சரி வாருங்கள் தற்போது பட்டையில் உள்ள மருத்துவ நற்குணங்கள் பற்றி அறிந்துக் கொள்வோம்...

  குடல் நோய் எரிச்சல் குடல் நோய் மற்றும் அதன் மூலம் வரும் எரிச்சல்களை பட்டையின் மருத்துவ குணம் கட்டுப்படுத்துகிறது. மற்றும் பட்டையில் இருக்கும் ஆன்டி-பாக்டீரியா தன்மை இரைப்பை குடலில் தங்கும் நச்சுப் பூச்சிகளை அழித்து இரைப்பை குடல் நோய்கள் வராமல் தடுக்கிறது.

  மூட்டு வலி இலவங்கப் பட்டை மூட்டு வலி உள்ள நோயாளிகளுக்கு நல்ல தீர்வளிகிறது. இலவங்க பட்டை எண்ணெய்யைக் கொண்டு மசாஜ் செய்வது மற்றும் பட்டையை தேநீரில் கலந்து குடிப்பது போன்றவை நல்ல பயனளிக்கக் கூடியதாக கருதப்படுகிறது. போதிய ஆதாரங்கள் இல்லாத போதிலும் பாட்டிக் காலத்து வைத்தியமான இது நல்ல பயனளிப்பதாக கூறப்படுகிறது.

  ஈஸ்ட் தொற்று நோய் ஈஸ்ட் தொற்று நோய்கள் வரும் போது, தொற்று ஏற்பட்ட இடங்களில் இலவங்கப் பட்டை எண்ணெய்யை உபயோகப்படுத்தினால் நோய் தொற்று குணமாகும்.

  இரத்த சர்க்கரை இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இலங்கைப் பட்டை வெகுவாக பயனளிக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் டைப் 2 சர்க்கரை உள்ளவர்களுக்கு இது நல்ல பயன் தருகிறது.

  ஆன்டி-பாக்டீரியல் இலவங்கப் பட்டையில் இயற்கையிலேயே ஆன்டி- பாக்டீரியா தன்மை அடங்கி இருப்பதால், இது பாக்டீரியா சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கிறது. உங்களுக்கு தேநீர் அருந்தும் பழக்கம் இருந்தால் இனிமேல் இலவங்கப் பட்டை தேநீர் அருந்துங்கள் இது உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது.

  புற்றுநோய் வராமல் தடுக்கிறது புற்றுநோய் கட்டி உருவாகாமல் இருக்க இலவங்கப் பட்டை நல்ல முறையில் பயன் தருகிறது. சில மருத்துவ ஆராய்ச்சிகளின் மூலம் நாம் அறிவது என்னவெனில் இது சில வகையான புற்றுநோய்கள் நம்மை தாக்காது இருக்க உதவுகிறது.

  கிருமி நாசினி இலவங்கப் பட்டையில் நுண்ணுயிர் பூச்சிகளைக் கொல்லும் தன்மை உள்ளது. அதனால் இது ஒரு நல்ல கிருமி நாசினியாக பயன் தருகிறது. உங்களது சமையல் அறைத்திட்டு அல்லது வீட்டு தரைகளை துடைக்கும் போது நீரில் சில துளிகள் இலவங்கப் பட்டை எண்ணெய்யை கலந்து துடைத்தால் நல்ல பயனளிக்கும்.

  உஷார்நிலை இலவங்கப் பட்டை கலந்த தேநீர் பருகும் போது உங்கள் உடல் நல்ல ஆரோக்கியத்துடனும் விழிப்புடனும் செயல்படுகிறது. இதனால் நீங்கள் உங்களது அலுவலகத்தில் சோர்வு ஏற்படாமல் நன்றாக வேலை செய்ய முடியும்.

  நாற்றம் முன்பு சொன்னது போலவே, நீங்கள் உங்களது வீட்டை துடைத்து சுத்தம் செய்யும் போது நீரில் சில துளிகள் இலவங்கப் பட்டை எண்ணெய்யை கலந்து உபயோகப்படுத்துவதினால் துர்நாற்றம் வீசாது. ஏனெனில் பட்டையில் உள்ள நல்ல மனம் நாற்றம் ஏற்படாமல் இருக்கு உதவுகிறது.

  ஆன்டி-ஆக்ஸிடன்ட் நமது உடல்நலத்தை நல்ல முறையில் பேணிக் காக்க ஆன்டி-ஆக்ஸிடன்ட்டின் பங்கு பெருமளவில் பயனளிக்கிறது. இலவங்கப் பட்டையில் இருக்கும் இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் நம் உடல்நலம் என்றும் ஆரோக்கியமாக இருக்கு உதவிகிறது.

  பாதுகாப்பு இலவங்கப் பட்டையில் இருக்கும் ஆன்டி-பாக்டீரியா தன்மை பாக்டீரியாக்களை எளிதில் அண்டாமல் இருக்க உதவுகிறது. இதனால் பட்டையை உணவில் சேர்ப்பதன் மூலம் உணவு சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்க வைக்கலாம்.

  மசாஜ் நீங்கள் பொதுவாக உபயோகப்படுத்தும் மசாஜ் செய்யும் எண்ணெயில் சிறிதளவு இலவங்கப்பட்டை எண்ணெய்யை கலந்து பயன்படுத்தினால், உங்களது உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.

  பூச்சிகளை விரட்டும் இலவங்கப்பட்டை எண்ணெய்யை உபயோகப்படுத்துவதின் மூலம் பூச்சிகளையும், கரப்பான்களையும் விரட்டி அடிக்கலாம். மற்றும் இலவங்கப்பட்டை எண்ணெய்யை தலையில் தேய்த்து வந்தால், பேன் தொல்லையில் இருந்தும் தீர்வு பெறலாம்.

  உடல் எடை இலவங்கப்பட்டை நமது இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. மேலும் நமது உடல் பருமனை கட்டுப்படுத்தி உடல் எடை கூடாமல் தடுக்கிறது.

  பல் பிரச்சனை இலவங்கப் பட்டை பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் [பிரட்சனைளுக்கு நல்ல தீர்வளிக்கிறது. மற்றும் வாய் திர்நாற்றத்தையும் குறைக்கிறது.

  அழகு உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் இல்லாமல் அழகு பெறவும் உதவுகிறது இலவங்கப்பட்டை. இதை உச்சந்தலையில் உபயோகப்படுத்துவதன் மூலம் பொடுகுத் தொல்லை தீரும். மற்றும் நல்ல சருமம் பெறவும் நிறைய மக்கள் பட்டையை பயன்படுத்துகின்றனர்.

  மாதவிலக்குக்கு முன் வரும் நோய்க்குறி இலவங்கப்பட்டையில் இருக்கும் மாங்கனீசின் நற்குணம் மாதவிலக்குக்கு முன் வரும் நோய்க்குறிகளில் இருந்து பாதுகாப்பாய் இருக்க உதவுகிறது.

  இதயம் நல்ல ஆரோக்கியமான இதயம் பெற இலவங்கப்பட்டை உதவுவதாகவும் மற்றும் இதயம் சார்ந்த கோளாறுகளுக்கு தீர்வளிப்பதாகவும் பாட்டி வைத்தியம் காலத்திலிருந்தே சொல்லப்படுகிறது.

  பூஞ்சை இலவங்கப்பட்டையில் இருக்கும் பூஞ்சைக் கொல்லி குணம், நமக்கு ஏற்படும் சிறு சிறு பூஞ்சைப் பிரச்சனைகளுக்கு நல்ல தேர்வு தருகிறது. இது இலவங்கப்பட்டையின் ஒரு நல்ல மருத்துவ குணம் ஆகும்.

  மன அழுத்தம் இலவங்கப்பட்டை எண்ணெயின் நறுமணம் நமது கவலையை போக்கி, நமது மனநிலையை மேலோங்க செய்ய உதவுவதாய் கூறப்படுகிறது.  Attached Thumbnails Attached Thumbnails Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்த-05-1423116631-cinnamon.jpg  

 10. #30
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்&a

  ஓட்ஸ்

  பீட்ஸாவுக்கும் பர்கருக்கும் நேரம் சரியில்லை. டாக்டர்கள், டயட்டீஷியன்கள், ஆராய்ச்சியாளர்கள் என்று பாரபட்சமில்லாமல் பீட்ஸா உள்பட பல துரித உணவுகளை திட்டிக் கொண்டிருக்கும் வேளையில், சமர்த்தாக பலரிடமும் நல்ல பெயர் வாங்கிக் கொண்டிருக்கிறது ஓட்ஸ். இன்றைய ஹெல்த் டிரெண்டாக வேகமாக மாறி வரும் ஓட்ஸ் பற்றி சில குறிப்புகள்...


  கோதுமையை உடைத்தாற்போல இருக்கும் ஒரு தானிய வகையே ஓட்ஸ். இது ரஷ்யா, கனடா, போலந்து போன்ற நாடுகளில் அதிகம் விளைகிறது. இந்தியாவில் இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களிலும் விளைகிறது. ஓட்ஸ் பற்றிய குறிப்புகள் மஹாபாரதத்தில் காணப்படுவதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

  11ம் நூற்றாண்டிலிருந்தே இங்கிலாந்து மக்களுக்கு ஓட்ஸ் சாப்பிடுகிற வழக்கம் இருந்திருக்கிறது. அதன்பிறகு, சீனர்கள் ஓட்ஸ் பக்கம் பார்வையை திருப்பினார்கள். இன்று அமெரிக்கா உள்பட பல நாடுகளிலும் ஓட்ஸின் செல்வாக்கு பரந்து விரிந்திருக்கிறது. இவர்கள் எல்லோரையும் விட ஓட்ஸ் பயன்படுத்துவதில் சுவிட்சர்லாந்து மக்களே முதலிடம் வகிக்கிறார்கள்.

  அதிகம் வேலை வைக்காமல் எளிதாக செய்துவிட முடியும் என்பதால் காலை உணவுக்கு பலரின் சாய்ஸ் ஓட்ஸ்தான். ஓட்ஸ் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் ஆரோக்கியத்தைத் தருகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். வைட்டமின் இ, துத்தநாகம், நார்ச்சத்து, செலினியம், காப்பர், இரும்புச்சத்து, மாங்கனீஸ், புரதம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. இதனால் நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம், பருமன் போன்ற நோய்களை கட்டுப்படுத்திக் குறைக்க முடியும் என்பதும் ஆராய்ச்சியின் முடிவுகளாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

  ஓட்ஸில் ஓல்டு ஃபேஷண்டு ரோல்டு மற்றும் ஸ்டீல் கட் (ஐரீஷ் அல்லது ஸ்காட்டிஷ் ஓட்ஸ் என்றும் சொல்வார்கள்) என இரண்டு வகைகள் உள்ளன. இந்த இரண்டும்தான் ஆரோக்கியமானவை.

  ஓட்ஸ் நல்லது என்பதற்காக அளவுக்கு மீறியோ, அத்துடன் கண்டதையும் சேர்த்தோ சாப்பிடக் கூடாது. இது கொழுப்பை கரைக்கிற ஓர் உணவு அல்ல. ஆனால், இதிலுள்ள லோ கிளைசெமிக் இண்டெக்ஸ் (அதனால்தான் நீரிழிவுக்காரர்களும் ஓட்ஸ் எடுத்துக்கொள்ளலாம்) காரணமாகவும் பசி கட்டுப்படுத்தும் தன்மையினாலும் எடை குறைக்க விரும்புவோருக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஓட்ஸ் என்பது கார்போஹைட்ரேட்டும் நார்ச்சத்தும் கலந்தது என்பதால், இதை எடுத்துக்கொள்ளும் அளவு மிக முக்கியம்.

  பாலுடன் ஓட்ஸ் சேர்த்துக் குடிப்பதனாலும் கால்சியம், புரதம் மற்றும் நல்ல கொழுப்பு கிடைக்கும். அதே நேரத்தில், இனிப்பு சேர்க்கும் போதுதான் எடை கூடுகிறது. ஓட்ஸ் உடன் மோர் கலந்து குடிப்பதால் மட்டுமே எடை குறைந்து விடாது. உடற்பயிற்சியும் அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, மலச்சிக்கலை நீக்கு வது, டைப் 2 நீரிழிவு அபாயத்தை குறைப்பது, கெட்ட கொழுப்பை குறைப்பது, ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என ஓட்ஸ் வேறு சில நல்ல தன்மைகளையும் கொண்டது.

  ஓட்ஸ் என்றாலே கஞ்சியாகத்தான் சாப்பிட வேண்டும் என்று இல்லை. ஓட்ஸ் பக்கோடா, ஓட்ஸ் புட்டு, ஓட்ஸ் அல்வா என்று வெரைட்டியாகவும் செய்து சாப்பிடலாம். ஓட்ஸ் குழந்தைகளுக்கு வரும் ஆஸ்துமாவுக்கான வாய்ப்புகளை குறைப்பதாகவும், மாவுச்சத்து அல்லாத உணவுப்பொருட்களோடு ஓட்ஸை சேர்த்துக் கொள்ளும்போது வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் அதிக அளவில் கிடைக்கிறது என்று மற்றொரு ஆய்வு தெரிவித்துள்ளது.

  ஓட்ஸா? நவதானியமா?


  ஓட்ஸ் பிரபலமாகிக் கொண்டிருப்பதற்கு இணையாக அதைப் பற்றிய விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லை.10 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்ஸ் என்றால் என்னவென்று நமக்குத் தெரியாது. ஆனால், இன்று ஓட்ஸுக்காக ஆயிரக்கணக்கான கோடிகளை இந்தியர்கள் செலவழிக்கிறார்கள்.

  உண்மையில் கொதிக்க வைத்துக் குடிக்கும் கஞ்சிதான் அது. பசியை கட்டுப்படுத்துமே தவிர, வேறு எந்த சத்தும் கிடையாது. இந்தியர்களுக்கு ஓட்ஸ் மோகத்தை ஏற்படுத்தும் சர்வதேச வணிக மோசடி இது என்றும், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஓட்ஸ் அதிகம் விளைந்தும் அவர்களே அதைப் பயன்படுத்துவதில்லை. இந்தியா போன்ற மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிடுகிறார்கள்.

  உண்மையில் ஓட்ஸைவிட 4 மடங்கு சத்து கொண்டது நம் கேழ்வரகு. நவதானியங்கள் என்று அழைக்கப்படும் சோளம், கம்பு, தினை, சாமை போன்றவற்றில் இல்லாத சத்துகளே இல்லை. நம் ஊரிலேயே விளைவதால் நவதானியங்களின் மதிப்பு நமக்குத் தெரிவதில்லை. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாவதால் ஓட்ஸ் மேல் நமக்கு பெரிய கவர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

  இதுவும் அந்நிய மோகத்தின் ஒரு முகம்தான் என்றும் விமர்சனங்கள் பெருகிக் கொண்டு வருகின்றன. சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா? என்று பாடிவிட்டு நவதானியங்களை தேடுவதுதான் சரியான வழியோ!
loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter