Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree28Likes

Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்


Discussions on "Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்" in "Healthy and Nutritive Foods" forum.


 1. #11
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்

  லெட்டூஸ் – LETTUCE

  கீரை வகைகளில் சிறந்த உணவாக லெட்டூஸ் Lettuce கருதப்படுகிறது. இது இலைக் கீரையாகும். இதனை பச்சடிக்கீரை, சாலட்டுக் கீரை என்றும் கூறுவர். இதன் பிறப்பிடம் இந்தியாதான். இந்தியர்களை விட இக்கீரையை ஐரோப்பியர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்தக் கீரையானது இமயமலைச் சாரலில் ஏராளமாக தன்னிச்சையாக வளரக் கூடியது. எகிப்து நாட்டில் 4500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறைகளில் இக்கீரையின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களைப் போலவே பண்டைய கிரேக்கர்களும், மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

  அமெரிக்கா உட்பட பல நாடுகளில் லெட்டூஸ் கீரையைப் புத்தாண்டு தினத்தன்று தவறாமல் சேர்த்துக் கொள்கின்றனர். அன்றைய தினம் இக்கீரை இடம் பெறுவது தனிச் சிறப்பு என்று கருதுகின்றனர்.

  பூப்பதற்கு முன்னுள்ள இலைகளே உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது. இலைகள் நீண்ட முட்டை வடிவமுள்ளதாய் இருக்கும். சில வகைகள் சுருள் சுருளான இலை அமைப்பை பெற்றிருக்கும். இலைகள் தடிப்பாக இருக்கும். சாறு நிறைந்து மிக மென்மையாக இருக்கும். பச்சை நிறம் கீரைவகையைச் சார்ந்தது. சாலட்டுகளில் அழகுக்காக சேர்க்கப்படுவது எனினும் விட்டமின் E சத்தும், அதிகப்படியான தாது உப்புக்களும் நிறைந்து காணப்படுகின்றன.
  புற ஊதாக்கதிர் மற்றும் சூரியக்கதிர் தாக்கத்திற்குட்படும் சருமத்திற்கு நிவாரணமளிக்கிறது. புரதம், தாது உப்புகள், வெப்ப ஆற்றல் முதலியன மிகுந்த கீரை, சிவப்பு அணுக்களைத் தோற்றுவிக்கும் ஒருவித சத்து இக்கீரையில் இருக்கிறது.
  சமையலில் இனிய மணத்துக்காகவும், சுவைக்காகவும் பலர் இதனை விரும்பி உண்கின்றனர். முதிர்ந்த இலைகளைக் கால்நடைகள் விரும்பி உண்கின்றன.

  இக்கீரை உடலுக்கு குளிர்ச்சியையும், உற்சாகத்தையும் தரவல்லது. முச்சிரைப்பு நோயான ஆஸ்துமாவைக் கண்டிக்க வல்லது. இதிலுள்ள மாச் சத்து காரணமாக உடல்பருமனைக் குறைப்பதற்கு இந்தக் கீரையை உணவுடன் சேர்த்துக் கொள்வார்கள். நிரிழிவு நோய்க்கு நல்ல பத்திய உணவு இக்கீரை.

  லெட்டூஸ் கீரை எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதில் கார்போஹைடிரேட் அடங்கியுள்ளதால் இது காய்கறி போன்றே பயன்படுகிறது.

  கரப்பான் ஏற்படாமல் தடுக்கும் கீரை இது. சாதாரண உணவு போல் பயன்படும் இக்கீரையில் உயர்ந்தரக ஆரோக்கியச் சத்துகள் அடங்கியுள்ளன. காரப்பொருள், முக்கியமான பொருளாகவும், அதே நேரத்தில் அதிகமாகவும் இருக்கிறது.

  லெட்டூஸ் கீரையில் ஈரப்பதம் அதிகம் உள்ளது. இதில் கல்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மக்னீசியம், விட்டமின் C தயாமின், ரிபோஃப்ளோவின், நிக்கோடினிக் அமிலம் போன்றவை காணப்படுகிறது. விட்டமின் E, K போன்றவையும் அடங்கியுள்ளன. இதில் கொழுப்பு, நார்ச்சத்து, மாச்சத்து போன்றவையும் அடங்கியுள்ளன.

  நீண்ட நாள்களாக உள்ள மலச்சிக்கல், ஆஸ்மா, தூக்கமின்மை, நீரிழிவு, தாய்ப்பால் சுரப்புக் கோளாறு, இரத்த சோகை ஆகிய வியாதிகளைக் குணமாக்குவதில் லெட்டூஸ் கீரை தலைசிறந்து விளங்குகிறது.

  இதயத்தை காக்கும்
  மருத்துவக் குணங்கள் நிரம்பிய இக்கீரை உடலில் உள்ள அனைத்து பகுதிகளையும் தரமான முறையில் புதுப்பிக்கிறது. இக்கீரையை சாப்பிடுவதன் மூலம் இரத்தம் சுத்தமாகிறது. இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகிறது. மூளை சுறுசுறுப்பாகிறது. உடலும் தொடர்ந்து ஆரோக்கியத்துடன் இருக்கும்.

  இக்கீரையில் அதிக அளவு மக்னீசியம் உள்ளதால் மூளையின் இயக்கம், நரம்புகளின் இயக்கம், தசைகளின் இயக்கம், இதயத்தின் இயக்கம் ஆகியவற்றிற்கு மக்னீசியம் தேவை. எனவே, நன்கு பச்சையாக உள்ள கீரைகளை அரைத்து சூப் போல குடித்தால் மூளை மற்றும் நரம்பு மண்டலம் பலம்பெறும். இதே சாறு நுரையீரல்களையும் பலப்படுத்தும். மனத்திற்கு உற்சாகத்தையும், உடலுக்குக் குளிர்ச்சியையும் இக்கீரை தருவதால் காலையில் இக்கீரைச்சாற்றை அருந்துவது நல்லது.

  சமைத்து சாப்பிடலாம்
  இக்கீரையை சிறுசிறு துண்டுகளாக வெட்டி பச்சையாகவே சாப்பிடலாம். நன்கு பச்சை நிறத்தில் உள்ள கீரைகள்தாம் சிறந்தவை. தேவைக்கு ஏற்ப இலைகளைப் பறித்து உடனே சமைத்தால் அதிக அளவு விட்டமின்கள் நமக்குக் கிடைக்கும். கீரையை நன்கு கழுவிய பிறகே சமைக்க வேண்டும். தண்ணீர் சேர்க்காமல் சமைக்க வேண்டும். அதைப் பொரியல் செய்து சாப்பிடலாம். பருப்பு வகைகள் சேர்த்து பச்சடியாகச் சமைக்கலாம். இந்தக் கீரை கால் வேக்காடு வெந்தாலே போதும். அதற்கு மேல் வேக வைத்தால் தாது உப்புகளும், விட்டமின்களும் அழிந்துவிடும். எனவே, பத்து நிமிடத்துக்குள்ளேயே கீரையை அடுப்பிலிருந்து இறக்கிவிட வேண்டும். ஆஸ்மா, மூச்சுத்திணறல், வாய்வுத் தொந்தரவு ஆகியன நீங்க இத்துடன் பருப்புச் சேர்த்துச் சமைத்து உண்ணவேண்டும்.

  நீரிழிவு குணமாகும்
  இக்கீரையில் செலுலோஸ் அதிக அளவில் இருக்கிறது. அதனால் உணவு, குடற்பகுதிக்குள் செல்ல எளிதில் வழி கிடைக்கிறது. குடலும் சுத்தப்படுத்தப்பட்டு மலச்சிக்கல் பூரணமாக நீங்குகிறது. நீண்டகாலமாக மலச்சிக்கலால் அவதிப்படுவோர் ஒரு வாரத்துக்கு இக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் அதிக அளவு நன்மைகளைப் பெறுவார்கள். மேலும் உடலிலும், மனத்திலும், புத்துணர்ச்சி பெற்று சுறுசுறுப்பாய்ச் செயல்படுவார்கள். இதில் மாச்சத்து குறைவாய் இருப்பதால் நீரிழிவுக்காரர்களுக்கு எந்த ஒரு தீங்கும் செய்யாத உணவு இது.

  ஆழ்ந்த தூக்கம்
  இரவில் தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் லெட்டூஸ் கீரைச் சாற்றை அருந்தினால் போதும். இக்கீரையில் ‘லெக்ட்டு கேரியம்’ என்னும் பொருள் இருக்கிறது. இது தூக்கத்தை வரவழைக்கக் கூடியது.

  தலைவலி ஏற்பட்டால் ரோஜா எண்ணெயுடன் இக்கீரைச் சாற்றைக் கலந்து நெற்றியில் தடவினால் ஐந்து நிமிடங்களில் குணமாகிவிடும்.

  கர்ப்பிணிகளுக்கு ஏற்றது
  இதில் உள்ள இரும்புச்சத்து இரத்தத்தில் சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்கிறது. அதிக அளவில் இரும்புச்சத்து உள்ள லெட்டூஸ் கீரை இரத்தசோகை நோயாளிகளுக்கு மிக உயர்ந்த டானிக் ஆகும். கீரை உடனே செரிமானம் ஆகிவிடுவதால் இரத்த சோகை நோயாளிகளுக்கு இரத்தவிருத்தி ஏற்படுகிறது.
  கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் இரத்த சோகையையும் லெட்டூஸ் கீரை குணப்படுத்துகிறது. கர்ப்பம் தரிப்பது முதல் தாய்பால் தரும் வரை இக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. இதனால் கர்ப்பக்கலைவு ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு ஏற்படுகிறது.

  Sponsored Links
  Attached Thumbnails Attached Thumbnails Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்-30.jpg  

 2. #12
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்

  பசலைக்கீரை

  மகத்துவம் நிறைந்த மருத்துவர் பசலைக்கீரை- spinach

  தரையில் படரும் பசலைக்கீரை ஓர் அருமருந்தாகும். குளிர்ச்சியான கீரை. இந்தியாவில் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. பல மருத்துவக் குணங்கள் கொண்டது.

  இரும்புச் சத்து உடையது. பளபளப்பு மேனி தரும்.

  * பசலைக்கீரை இலையாக அமைந்த கறியாகும். அதில் இரும்பு சத்து ஏராளமாக உள்ளது. எனவே இரத்தம் குன்றியுள்ள சோகை நோயாளிகளுக்கு அது மிகவும் நன்மை தருகின்றது. பசலைக்கீரை மிகுந்த ஊட்டச்சத்து உள்ளது. மருந்தாகும் மதிப்பு உள்ளது. இதில் பெரும் அளவில் விட்டமின் சத்துக்கள் உள்ளன. சுண்ணாம்புச்சத்து உள்ளது.

  * இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களுக்கு உதவும் சிவப்புச்சத்து (ஹிமொகுளோபின்) உள்ளது. புரதங்களைப் பலப்படுத்தும் அமிலங்கள் உள்ளன. அது நம்மைப் பேணிப் பாதுகாக்கும் உணவு. அதில் காரசத்துள்ள தாதுப் பொருள்கள் ஏராளமாக உள்ளன. ஆதலால் அது தொற்று நோயிற்கு எதிர்பான தடுப்புச் சக்தியை மிகவும் ஆற்றலுடன் பேணுகின்றது.  * பசலைக்கீரையை உட்கொண்டால் எரிச்சலூட்டும் ஒரு வகை நச்சு அமிலச்சத்து மிகமிகச் சிறிய அளவில் உண்டு. தண்ணீரில் கரையக்கூடிய ஒரு வகைப் புரதச்சத்தும் இதில் மிகமிகச்சிறிய அளவில் உண்டு. ஆனால் விட்டமின் சத்துக்கள் A, B, C, ஆகியனவும், பொட்டாசிய உப்பின் காரச்சத்தும் ஏராளமாக உள்ளன.

  * விட்டமின் A பார்வைக் கோளாரைக் குணப்படுத்தும். இரத்த விருத்தி உண்டாக்கும். இதில் உள்ள இரும்புச்சத்து மிகவும் சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது. சோடியம், போலாசின், கல்சியம் உள்ளன ஆனால் கொழுப்பு சத்து கிடையாது.


  * பசலைக்கீரை மிகவும் சுலபமாக செரிக்கின்றது. குளிர்ச்சி தருகின்றது. ஊட்டச்சத்து உள்ளது. எரிச்சலைத் தணிக்கின்றது, மிக உயர்ந்த உணவாக உள்ளது. பித்தம், நீர்தாரை, வெட்ட நோய்கள் குணமாகின்றன.

  * தோல்நோய்கள், மேகம், சீதபேதி குறைகின்றது. இதன் இலைச்சாற்றுடன் சிறிது தேன் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்க நீர்கோவை குணமாகும். இந்தக் கீரை சாப்பிடும்போது தாது கெட்டிபடும். மூளைக்கு சக்தியைக் கொடுக்கும். இலையை வாட்டி தலையில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.

  * இதை சிறிதளவு தண்ணீரில் சமைக்க வேண்டும். சமைத்த பின் தண்ணீரை வெளியில் கொட்டிவிடக் கூடாது ஏனெனில் அதில் மிகுந்த ஊட்டச்சத்துப் பொருள்கள் உள்ளன. மிளகு, பூண்டு, தக்காளி சேர்த்து ரசம் வைக்கலாம்.


  * பசலைக்கீரையின் இளம், மென்மையான முளைகளைச் சமைக்காத பச்சடிகளில் பயன்படுத்தலாம். இவற்றைப் பச்சடிக் கீரையின் கொழுந்துகளுடன் சேர்த்துக் கொள்ளலாம். இது நல்ல பசியைத் தூண்டிவிடுகின்றது. பருப்புகளுடன் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளும் கீரை வகைகள் மிகவும் நன்மை தருகின்றன.

  பசலைக்கீரை மலத்தை நன்றாக இளகச் செய்கின்றது. எரிச்சலைத் தணிக்கின்றது. இழையங்களின் அழிவை இது குறைக்கின்றது. இதில் உடல் வறட்சிக்கு எதிரான பெரிபெரி என்னும் வீக்கநோயிற்கு எதிரான கரப்பான் வியாதிக்கு எதிரான சத்துக்கள் கணிசமான அளவில் உள்ளன. கொழுந்தாக உள்ள கொடிச்சுருளைப் பச்சையாகவே உண்பது மிகுந்த நன்மையைத் தருகின்றது.

  * நீரிழிவு, இரத்தக் குறைவு, கால் விரல்களில் உள்ள வீக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தப் பசலைக்கீரை மிகவும் உதவுகின்றது. இதன் சாறு, சிறுநீரில் கற்கள் இருந்தால் அவற்றைக் கரைக்க உதவுகின்றது. கற்களைக் கரைத்து வெளியேற்றும் சக்தி அதற்கு உள்ளது. சிறுநீரகக் கோளாறுகளையும் இது அகற்றுகின்றது. இதன் சாற்றைக் கொப்பளித்தால் தொண்டைப்புண் குணமாகும்.

  * இலைகளை (1 லிருந்து 10 வரை) கஷாயம் வைத்து அருந்தினால் காய்ச்சல், கல்லடைப்பு, சுவாசப்பைகளிலும் குடல்களிலும் ஏற்பட்டுள்ள வீக்கங்கள், சுவாசிப்பதில் சிரமம், வேகமாக இயங்கும் சுவாசம் ஆகியவை குணமாகின்றன. இத்தகைய நோய்களின் போது இது எரிச்சலைத் தணிக்கின்றது. துவர்ப்பு மருந்தாக உதவுகின்றது. சிறுநீரைப் பெருக்குகின்றது.

  * வளரும் இளம்பெண்கள் பசலைக் கீரையை ஏராளமாக உண்ணவேண்டும். அதில் இரும்புச் சத்து ஏராளமாக உள்ளது. சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது.  Last edited by chan; 5th Feb 2015 at 08:02 PM.

 3. #13
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்

  கோதுமைப்புல்- WHEATGRASS

  மூலிகையின் பெயர் – கோதுமைப்புல்
  தாவரப்பெயர் – TRTICUM AESTIVUM
  தாவரக் குடும்பம் – POACEAE
  பயன்தரும் பாகம் – புல் மட்டும்.
  வளரியல்பு – கோதுமை எல்லா வளமான இடங்களிலும் வளரக்கூடியது. இந்தியாவில் வட நாட்டில் அதிகமாக விளைகிறது. கோதுமையின் தாயகம் மேற்கு ஆசியா. பின் வட ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மற்றும் கிழக்கு ஆசியாவுக்குப் பரவிற்று. வட அமரிக்கா 1890 ல் கோதுமை வியாபரத்தில் முதன்மை பெற்றது. இது வருடாந்திரப்பயிர். இதன் புல் மருத்துவத்திற்கு மிகவும் அதிகம் பயன்படுகிறது. கோதுமை ரோட்டி செய்யவும் உணவுப் பொருளாகவும் பயன் படுகிறது. கோதுமைப் புல் வீடுகளிலும் வளர்க்கலாம். புல் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும், பச்சையாக இருக்கும். பல வகை வைட்டமின்களைக் கொண்டுள்ளது. கோதுமை விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.

  கோதுமைப்புல் (Wheatgrass) மிகச்சிறந்த ஆரோக்கிய மற்றும் மருத்துவத் தன்மைகளைக் கொண்டுள்ளது. நமது உடல் மிகச்சிறப்பாக இயங்குவதற்குத் தேவையான 19 அமினோ அமிலங்களும், 92 தாதுக்களும், இதில் உள்ளன. இது சாதாரணமாக ரொட்டிக் கோதுமை என்று அழைக்கப்படுகிறது. செயற்கையாக ஒளியூட்டப்பட்ட உள்கூடங்களிலும், கண்ணாடிக் கூரை பொருத்தப்பட்ட கூடங்களிலும் இது பயிரிடப்படுகிறது.
  கோதுமைப்புல் பொடி/வீட் கிராஸ் பவுடர் (Wheatgrass Powder) என்பது கோதுமைப்புல்லின் இலைகளை அரைத்து சாறெடுத்து, பின் அதை உலர வைத்து பொடி செய்யப்படும் ஒரு உணவுப்பொருளாகும். வயலில் இயற்கையாக வளர்ந்துள்ள மூன்று மாதம் நிரம்பிய கோதுமைப்புல்லின் இலைகளை சாறு எடுத்து, நீர்ப்பதம் போக நன்கு உலர வைத்து, அதிலிருந்து கோதுமைப்புல் பொடி தயாரிக்கப்படுகிறது. இந்த பொடி மிகுந்த சத்து நிறைந்தது என்று கூறப்படுவதற்குக் காரணம், மேலே கூறப்பட்டுள்ள சத்துக்களுடன், இதில் குளோரோஃபில் (chlorophyll) என்னும் பச்சையமும் மிகவும் அதிகமாக நிரம்பியுள்ளது தான். கோதுமையில் இருப்பது போன்று, இதில் க்ளூட்டன் (gluten) என்பது இல்லாதது ஒரு சிறப்பம்சமாகும்.

  கோதுமைப்புல் பொடியை தண்ணீரில் கலந்து, சத்து பானமாகவும் அல்லது வேறு ஏதாவது ஜூஸ்களில் கலந்தும் அருந்தலாம். கோதுமைப்புல் செடியில் உள்ள அனைத்து சத்துக்களும், கோதுமைப்புல் சாற்றிலும் உள்ளன.  Attached Thumbnails Attached Thumbnails Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்-wheatgrass.jpg  

 4. #14
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்

  கோதுமைப்புல்லின் மருத்துவப் பயன்கள்

  ஈரலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்குகிறது :

  கோதுமைப்புல் பவுடரில் அற்புதமான நச்சு நீக்கும் தன்மை உள்ளது. புதிய காய்கறிகளில் உள்ள அளவுக்கு, இதிலும் தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், என்ஸைம்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இதனால் உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்கும் தன்மை பெற்றுள்ளது. இரத்த செல்களின் வலிமையைக் கூட்டுகிறது. இரத்த ஓட்டம் மற்றும் ஈரலின் நச்சுத்தன்மையை நீக்குகிறது. மேலும் குடலை சுத்தப்படுத்தி, கார்ஸினோஜன்களிலிருந்து (carcinogens) காக்கிறது.
  பெருங்குடலில் உள்ள (colon) என்ற பாகத்தைச் சுத்தம் செய்ய உதவுகிறது.

  இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றது.
  மலச்சிக்கலைப் போக்குகிறது. கோதுமைப்புல் பொடியானது உணவு செரிப்பதை எளிதாக்குகிறது. இதில் அடங்கியுள்ள சில காரத்தன்மையுள்ள தாதுக்களினால், வயிற்றிலுள்ள புண்கள், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகியவை குணமாகின்றன. முக்கியமாக இதில் உள்ள மக்னீசியமானது மலச்சிக்கலைக் குணப்படுத்துகிறது.

  முகப்பரு, உடலில் உள்ள வடுக்களைப் போக்க உதவுகிறது. நச்சு நீக்கும் தன்மை கொண்டிருப்பதால், கோதுமைப்புல் பொடியானது பருக்கள் உண்டாவதைத் தடுத்து, மென்மையான வழவழப்பான சருமத்தினை அளிக்கிறது. கோதுமைப்புல் பொடியுடன் சிறிது பால் சேர்த்து பசை போலாக்கி, சருமத்தின் மீது தடவிக் கொள்வதால், பருக்கள், வெடிப்புகள், கரும்புள்ளிகள், சரும நிறம் மங்குதல் ஆகியவை மறையும்.

  சாற்றைக் கொப்பளித்தால் தொண்டை கரகரப்பு நீங்கும், தொண்டைப் புண்ணும் குணமாகும். பல் எகிரில் ஏற்படும் வீக்கம் சீள் பிடித்தலைக் குணப்படுத்தும்.

  புற்று நோய் புதிய செல்கள் உண்டாவதை அழித்துக் குணப்படுத்தும். 50 கிராம் கோதுமைப் புல்லை எடுத்துக் கழுவி நன்கு அரைத்து 150 மில்லி நீர் கலந்து வடிகட்டியபின் அதில் தேன் கலந்து சாற்றைக் குடிக்கலாம். தயார் செய்தவுடன் குடித்து விட வேண்டும். இதனால் புற்று நோயை எதிர்க்கும் சக்தி இதற்கு உண்டு.

  இதிலுள்ள குளோரோபில் கதிரியக்கங்களின் தீமையைக் குறைக்கிறது. எனவே ஹீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி மருத்துவத்தை மேற்கொள்ளும் புற்றுநோயாளிகள், வீட்கிராஸ் பவுடரை உணவில் சேர்த்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

  கோதுமைப்புல்லின் சாற்றைக் குடிப்பதால் அது இரத்தத்தை சுத்தம் செய்கிறது : கோதுமைப்புல் பொடியில் நிறைந்துள்ள ஏராளமான குளோரோஃபில்கள், இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகப்படுத்த உதவுகின்றன. அதிகமான ஹீமோகுளோபின் உற்பத்தி செய்யப்படுவதால், இரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லவும், அதன்மூலம் உடல் மேலும் சுறுசுறுப்பாக இயங்கவும் உதவுகிறது. வீட் கிராஸ் ஜூஸானது இரத்தத்தில் சிவப்பணுக்களையும் வெள்ளையணுக்களையும் உற்பத்தி செய்வதில் மிகவும் உதவுகிறது.

  கோதுமைப்புல் சாறு பல் வலி உண்டாகும் போது வாயில் ஊற்றிக் கொப்பளித்துக் குடித்தால் பல் வலி குறையும்.
  பற்சிதைவு மற்று இதர பல் சார்ந்த பிரச்சனைகளுக்கு கோதுமைப்புல் பவுடர் மிகச்சிறந்த மாற்றாகப் பயன்படுகிறது. அதற்கு கோதுமைப்புல் பொடியைக் கொண்டு, ஈறுகளை மசாஜ் செய்து வந்தால், ஈறுகள் வலிமையடைந்து, ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.

  எடைக் குறைப்பில் உதவுகிறது : கோதுமைப்புல் பவுடரை ஜூஸ்களிலும், பழரசங்களிலும் சேர்க்கலாம் என்பதால், இதனை மற்ற உணவுப் பொருட்களில், வாசனைப் பொருளாகவும், மாற்று உணவாகவும் சேர்க்க முடியும். மேலும் இது உடலுக்கு அதிகமான ஆற்றலை அளிக்கிறது. உடற்பயிற்சி நேரங்களில், நீண்ட நேரத்திற்கு உடற்பயிற்சி செய்ய உதவுகிறது. இதனால் உடல் எடை குறைய வழிவகுக்கிறது. மேலும் தைராய்டு சுரப்பிகளைத் தூண்டி, எடை அதிகரிப்பதைக் குறைக்கிறது. இதன் மூலம் வளர்சிதை மாற்றம் அதிகரித்து, உடல் பெருக்கத்தையும், செரிமானமின்மையையும் தடுக்கிறது.

  இரத்தத்தில் pH அளவை சமப்படுத்துகிறது : கோதுமைப்புல் பொடியில் காரத்தன்மை அதிகமாக உள்ளதால், இரத்தத்தில் இருக்க வேண்டிய pH அளவை நிலைப்படுத்தி பேணுகிறது. எனவே, இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மையைக் குறைத்து, காரத்தன்மையை நிலைநிறுத்த உதவுகிறது.

  சர்க்கரை நோய்க்கு இயற்கை வழியில் தீர்வு : இரத்தத்தில் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சும் வீதத்தை மட்டுப்படுத்துவதால், இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவினை இது கட்டுப்படுத்த மிகவும் உதவுகிறது. இதன் மூலம் சர்க்கரை நோய்/ நீரிழிவு நோய் மருத்துவத்தில் இது மிகவும் உதவிகரமாக உள்ளது. எனவே சர்க்கரை நோயை, அது எந்த நிலையில் இருந்தாலும், கட்டுப்படுத்துவதில் இது சிறப்பிடம் வகிக்கிறது.


 5. #15
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்

  கோதுமைப்புல்லின் மருத்துவப் பயன்கள்

  மூலநோயைக் குணப்படுத்துதல் : மிகவும் பயன் தரக்கூடிய சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளதால், வீட் கிராஸ் பவுடரானது மூல நோயைக் கட்டுப்படுத்தும் இயற்கையான நிவாரணியாகக் கருதப்படுகிறது. இதில் குளோரோபில், நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இவை மூலநோயைக் குணப்படுத்த வல்லவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மூலநோயாளிகள், வீட் கிராஸ் பவுடரை ஒரு நாளுக்கு இரண்டு தடவை வீதம், மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  வலி மற்றும் வீக்கங்களிலிருந்து நிவாரணம் : கோதுமைப்புல் பொடியானது சாதாரணமாகவே, உடலிலுள்ள வீக்கங்களைக் கட்டுப்படுத்தும் தன்மையைப் பெற்றுள்ளது. எனவே உடல் வலிகளையும், வீக்கங்களையும் கட்டுப்படுத்தும் சிகிச்சைகளில் இது நல்ல பயன் தருகிறது. அதிலும் வலிகளைக் குறைத்து, உடல் ஆரோக்கியமாகவும் இயல்பாகவும் திகழ இது உதவுகிறது.
  கண்களுக்கு அளிக்கும் நன்மைகள் : வீட் கிராஸ் பவுடரைத் தவறாமல் சாப்பிட்டு வந்தால், கண்கள் பிரகாசமாகத் திகழ்ந்து பார்வை பொலிவு பெறும்.

  இரத்த நாளங்கள் தடிப்புறுவதைத் தடுக்கிறது : வீட் கிராஸ் பவுடரைத் தவறாமல் சாப்பிட்டு வந்தால், இரத்த நாளங்கள் தடிப்புறும் (varicose veins) வாய்ப்பு குறைகிறது.

  இரத்தத்தை சுத்திகரிக்கிறது : நச்சு நீக்கும் தன்மை கொண்டதால், இது இரத்தத்தை சுத்திகரித்து, மூச்சு மற்றும் வியர்வையில் உள்ள கெட்ட நாற்றத்தைப் போக்குகிறது.
  கருவுறும் வாய்ப்பை அதிகரிக்கிறது: ஆண்களுக்கும், பெண்களுக்கும் இனப்பெருக்க சக்தியை அதிகரித்து, கருவுறுதலில் மிகவும் உதவுகிறது.

  சருமத்தை சுத்தம் செய்கிறது: சருமத்திலுள்ள இறந்த செல்களை நீக்குவதன் மூலம், இது சிறந்த சரும சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. நமது உடலுக்குள்ளும் ஊடுருவி, இளமையைப் பேணும் பணிகளையும் செய்வதால், சருமத்தின் பொலிவையும், மென்மையையும் அதிகரிக்கிறது.
  தோல் வியாதிகளைக் குணப்படுத்தும். முக்கியமாக வெண்புள்ளி தேமலைப் போக்க வல்லது.

  கிருமிநாசினி குணங்கள் : கோதுமைப்புல் பொடிக்கு கிருமி நாசினித் தன்மை உள்ளதால், இதை புண்கள், காயங்கள், வெடிப்புகள், பூச்சிக்கடிகள், வெட்டுக்காயங்கள், சிராய்ப்புகள் ஆகியவற்றைக் குணப்படுத்த பயன்படுத்தலாம். மேலும் தேமலை நீக்கவும் இது பயன்படுகிறது. வெயிலால் கருமையடைந்த சருமம், கொப்புளங்கள் மற்றும் பித்தவெடிப்புகளைக் குணப்படுத்தவும் இது உதவுகிறது.

  முதுமையைத் தடுக்கும் குணங்கள்: ஃப்ரீ ராடிகல்களினால் (free radicals) ஏற்படும் பாதிப்புகளை இது தடுக்கிறது. முதிர்ந்த செல்களைப் புத்துயிரூட்டும் தன்மையைக் கொண்டிருப்பதால், முதுமையைத் தடுக்கும் ஆற்றல் பெற்று, இளமையைப் பேண உதவுகிறது. சருமத்திலுள்ள சுருக்கங்களை நீக்கி சருமத்தின் நெகிழும் தன்மையை நிலை நிறுத்த உதவுகிறது. இதன் மூலம் சருமத்தின் இளமைப் பொலிவை மீட்டுத் தருகிறது.

  பொடுகு மற்றும் தலைமுடிப் பிரச்சனைகள் : கோதுமைப்புல் பொடியைத் தலையில் தடவிக் கொண்டு குளித்து வந்தால், பொடுகு, வறட்சி மற்றும் உச்சந்தலை அரிப்பு போன்ற தலை சார்ந்த பிரச்சனைகள் தீரும். ஆகவே வழக்கமாகப் பயன்படுத்தும் ஷாம்புவுடன் கோதுமைப்புல் பொடியைக் கலந்து, தலையில் தடவிக் கொண்டு குளித்துவரலாம். இதனால், ஆரோக்கியமற்ற தலைமுடியை நல்ல ஆரோக்கியத்துடன் திகழும்.

  நரை முடியைக் குறைக்கும்: நரைத்துப் போன தலைமுடியின் நிறத்தை மாற்றி, பழைய படி கருமையாக்கும் தன்மை கோதுமைப்புல் பொடிக்கு உண்டு. இந்த பவுடரைத் தலை முடியில் தடவிக் கொண்டு, குளித்து வந்தால், நரைமுடிகள் கருமையாகும்.
  எல்லா நாட்பட்ட நோய்களும் இதன் சாற்றால் குணமடையும்.

  கோதுமைப் புல்லில் உள்ள சத்துக்கள்-

  நீர் – 65%,
  புரதம் – 20%
  கொழுப்பு – 3%
  மாசத்து – 12%
  நார்சத்து – 1%
  கல்சியம் – 40 மி.கி.
  இரும்பு – 6 மி.கி.
  விட்டமின் – B1 – 1.4 யூனிட்
  B2 – 0.54 யூனிட்
  நியாசின் – 2.90 யூனிட்
  மற்றும் விட்டமின் A, விட்டமின் B 1, 2, 3, 5, 6, 8, 12 விட்டமின் C, E, K ஆகியவை உள்ளன.


 6. #16
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்

  வெங்காயத்தாள் சிறப்பு அம்சங்கள்
  வெங்காயத்தாள் மிகவும் பிரபலமான காய்கறிகளில் ஒன்றாகும் மற்றும் அவைகள் வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பு உட்பட பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. இந்த இளந்தளிர் வெங்காயத்தாளில் மிகுந்த சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. நீண்ட காலமாக வெங்காயத்தாள் சீன பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. வெங்காயம் போலவே வெங்காயத்தாளிலும் கூட கந்தகச்சத்து அதிகமாக உள்ளது. அதிக அளவிலான கந்தகச்சத்து பல சுகாதார நன்மைகளை வழங்குகிறது. இந்த இளந்தளிர் வெங்காயத்தாளில் குறைந்த கலோரி இருக்கின்றன.

  மேலும் வெங்காயத்தாளில் வைட்டமின் சி, வைட்டமின் பி2 மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவைகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே கூட நிறைந்துள்ளன. இது தவிர, இவைகளில் காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் மூலங்களாக உள்ளன. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், புற்றுநோயை குணப்படுத்தும். வெங்காயத்தாள் க்யூயர்சிடின் போன்ற பிளேவோனாய்டுகளுக்கு ஒரு வலுவான ஆதாரமாக இருக்கின்றது.

  வெங்காயத்தாளின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளினால், செரிமான உபாதைகளுக்கு நிவாரணம் கூட வழங்குகிறது.இந்த காய்கறிகளிலுள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை நோயிலிருந்து பாதுகாக்கிறது. வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போஹைட்ரேட், குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது.

  வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அவைகள் உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கின்றது. இந்த காய்கறிகளில் உள்ள சல்பர் சேர்மங்கள், இரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் மற்றும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. வெங்காயத்தாள் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகிறது.

  வெங்காயத்தாளில் உள்ள குரோமியம் சத்து நீரிழிவு நோய்க்கான சுகாதார நலன்களை வழங்குகிறது. இது இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் குளுக்கோஸ் ஏற்புத்தன்மையை அதிகரிக்கிறது. மேலும் இதில் உள்ள புரோப்பைல் டைசல்பேட்டானது, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வெங்காயத்தாளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளினால், ஜலதோஷம் மற்றும் காய்ச்சலை எதிர்த்து போராட உதவுகிறது.  Attached Thumbnails Attached Thumbnails Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்-onionl.jpg  

 7. #17
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்

  வாழை இலையின் பயன்கள்

  1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

  2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

  3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.

  4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

  5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.

  6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.

  7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.

  தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.
  ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.

  நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.

  வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.  Attached Thumbnails Attached Thumbnails Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்-.jpg  

 8. #18
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்

  வீட்டு வைத்தியத்தில் சிறந்தது லெமன்கிராஸ் பற்றிய தகவல்கள்

  மருந்து மாத்திரைகளை விட வீட்டு வைத்தியம் சளி, இருமல், குளிர் காய்ச்சல் போன்றவற்றிற்கு சிறந்தது. லெமன்கிராஸ் டீ பருகுவதால் இருமல், குளிர் காய்ச்சல் இருப்பின் அவற்றை குணப்படுத்துகிறது. இந்த லெமன்கிராஸ் மருத்துவத்தில் காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது என்னென்ன சுகாதார நலன்களை கொண்டுள்ளது என பார்ப்போம். காய்ச்சல், இருமல் மற்றும் சளியை சமாளிக்க உதவுகிறது. நீண்ட நாட்கள் மன அழுத்தத்தில் அவதி படுபவர்களுக்கு லெமன்கிராஸ் உதவுகிறது. உயர் இரத்த அழுத்தத்துடன் இணைந்து செயல்படுகிறது.

  நச்சு பொருட்களை அகற்றி உடலை தூய்மையாக்கி கொழுப்பின் அளவை குறைப்பதற்காகவும் பயன்படுகிறது. சிறுநீரகம், கணையம், கல்லீரல், சிறுநீர்ப்பை போன்ற அனைத்து உறுப்புகளையும் தூய்மையாக வைத்துக்கொள்ள பயன்படுகிறது. செரிமான அமைப்பில் பிரச்சனைகள் ஏற்படாமல் செரிமான அமைப்பை மேம்படுத்தி இரத்த ஒட்டத்தை சீரமைக்கிறது. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை சமாளிக்க உதவுகிறது. மேலும் மாதவிடாய் கோளாறால் அவதிப்படும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்கிறது. முகப்பரு தொல்லையால் அவதிபடுபவர்கள் இதை முகத்திற்கு பயன்படுத்தினால் முகப்பரு தொல்லையிலிருந்து விடுபடலாம்.

  எப்படி பயன்படுத்தலாம் லெமன்கிராஸை

  லெமன்கிராஸை பல வழிகளில் பயன்படுத்தலாம். அதிக மக்கள் லெமன்கிராசின் சுவையை உணவில் சேர்த்துக்கொள்வதற்காக அதனை எண்ணெய்யாக பயன்படுத்துகின்றனர். இதனை சுடு தண்ணீரில் கொதிக்க வைத்து சர்க்கரை, தேயிலை, இஞ்சி சேர்த்து தேநீர் மாதிரியும் பருகலாம். லெமன்கிராஸை மருத்துவ பானமாகவும் தயாரிக்கலாம். புதியலெமன்கிராஸ் இலை இரண்டு மூன்று கிராம்பு, சிறிய துண்டு இலவங்கப்பட்டை, மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர் இந்த கலவையில் சேர்த்ததை வடித்து விட்டு குடித்தால் காய்ச்சல், இருமல், சளி ஆகியவை குணமடையும். இதில் ஆண்டிபாக்டீரியா மற்றும் காலானின் பண்புகளை கொண்டிருக்கிறது.  Attached Thumbnails Attached Thumbnails Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்-lemongrass.jpeg  

 9. #19
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்

  கற்ப மூலிகை கற்பூரவள்ளி

  காய கற்பம் என்பது காயம் என்னும் உடலை என்றும் இளமையுடன் வைத்திருக்க உதவும் மருந்தாகும்.
  சித்தர்கள் தங்களின் தவப் பயனால் கண்டறிந்த மருத்துவ முறைகளில் கற்ப முறைக்கு தனிச்சிறப்புண்டு.
  நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்
  வாய்நாடி வாய்ப்பச் செயல்
  என்ற வள்ளுவரின் வாக்குப்படியும், சித்தர்களின் கூற்றுப்படியும், நோய் வந்ததற்கான காரணங்களை அறிந்து அந்த நோயினை தீர்க்கும் வழியினை கண்டுபிடித்து அதை சீர் செய்து மீண்டும் நோய் ஏதும் உடலை அணுகாதவாறு காக்க மக்களுக்கு சித்தர்கள் சொன்ன வழிமுறைதான் காய கற்ப முறையாகும்.
  கற்ப முறையில் 1 மண்டலம் மூலிகைகளை சாப்பிட்டு வந்தால், நோய் என்னும் காலன் நம்மை நெருங்காமல் என்றும் புத்துணர்வுடனும், இளமையுடனும் வாழலாம்.
  .
  கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூர வள்ளியும் நட்டு வளர்த்தனர். இரண்டும் விஷக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. கற்பூரவள்ளியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் எந்தவகையான பூச்சிகளும் தென்னையைத் தாக்காது.

  கற்ப மூலிகையில் கற்பூரவள்ளிக்கு சிறந்த இடமுண்டு. இதனால்தான் இதன் பெயரும் கூட கற்பூர வள்ளி என்று அழைக்கப்படுகிறது.

  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற மருந்தாக கற்பூரவள்ளி அமைகிறது.

  இந்தியாவில் தமிழகம் கேரளா, கர்நாடகா பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இதன் இலை வட்ட வடிவமாக பஞ்சு போன்று காணப்படும். இதில் காரத்தன்மை கொண்ட நீர்ச்சத்து நிறைந்துள்ளது.

  கற்புரவள்ளி இலைகளை காயவைத்து பொடி செய்து அதனுடன் காய்ந்த தூதுவளை, துளசி பொடிகளை சம அளவு எடுத்து புட்டியில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் காலை வேளையில் குழந்தைகளுக்கு 1 சிறு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல், ஈளை போன்றவை நீங்கும். சளியின் அபகாரம் குறையும்.

  கற்பூர வள்ளி இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் காய்ந்த வேப்பிலை, வில்வம், அத்தி இலை, துளசி இலை, தும்பை இலை, தூதுவளை, ஆடாதோடை, நெல்லி, கீழாநெல்லி இவற்றை சம அளவு எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு, மஞ்சள்தூள், தனியா பொடி கலந்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளையும் வேளைக்கு இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து நீரில் கொதிக்க வைத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு அருந்தி வந்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

  மூச்சுக் கிளைக்குழல்களில் தொற்றுநோய்களின் தாக்குதல் ஏதுமின்றி பாதுகாக்கும். சுருங்கியுள்ள மூச்சுக்குழல்களை விரிவடையச் செய்து சீராக செயல்பட வைக்கும். ஆஸ்துமாவுக்கு இது நல்ல மருந்து.

  குழந்தைகளுக்கு உண்டான மார்புச்சளி நீங்க
  சிறு குழந்தைகளுக்கு மார்பில் சளி கட்டிக்கொண்டு இறுகிப்போயிருக்கும். இதனால், குழந்தைகளுக்கு அடிக்கடி மூச்சு விட முடியாமல் திணறுவார்கள். சில சமயங்களில் இது ஆஸ்துமா, காசநோயாக கூட மாற நேரிடும். இவர்களுக்கு கற்பூர வள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து, லேசாக வதக்கி சாறு எடுத்து, 5 மி.கி. அளவு தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால், மார்புச்சளி அறவே நீங்கும்.

  கற்பூரவள்ளி இலை, தூதுவளை, வல்லாரை, இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி அதில் 1 ஸ்பூன் அளவு எடுத்து 100 மி.லி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து 50 மி.லியாக சுண்டக் காய்ச்சி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நுரையீரல் பாதிப்பு நீங்கும். மூச்சுக்குழல் அடைப்பு சீராகும் .

  கற்பூரவள்ளி சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைக் கம்மல் குணமாகும்.

  கற்பூரவள்ளி உடலை நோயின்றி காப்பது போல், வீட்டையும் விஷப் பூச்சிகளிலிருந்து காப்பாற்றும்.


  இதனை தொட்டிகளில் வளர்த்து அதன் முழுமையான பயன்களைப் பெற்று நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வோம். 10. #20
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்

  கறிவேப்பிலை......!!!
  கறிவேப்பிலையை மெல்லலாம்!
  உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள்.ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

  கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது.

  இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது. இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பத்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர் கள் கண்டறிந்துள்ளனர்.

  சைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.

  இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர். கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

  சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.

  திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலை யையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன.
  தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
  தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

  கறிவேப்பிலையை உணவு பதார்த்தத்தில் இருந்தாலே தூக்கி எறியும் பழக்கம் கொண்டவர்கள் இருக்கும் போது, பச்சை கறிவேப்பிலையை
  மென்று திண்ணலாம் என்கிறார்கள் ஆராய்ச்சி நிபுணர்கள்.

  கறிவேப்பிலை பற்றி ஆராய்ச்சி செய்து பல ஆய்வுகள் வெளியாகியுள்ளன.
  கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டு வந்தால் பரம்பரை நரை முடி பிரச்சினை ஏற்படாது.. கண்பார்வை குறைபாடும் ஏற்படாது.
  கறிவேப்பிலையை அரைத்து விழுதாகவோ அல்லது சாறு எடுத்தோ உண்டு வந்தால் நுரையீரல், இதயம் மற்றும் ரத்தம் தொடர்பான நோய்களே நம்மை அண்டாது.

  கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவும்.

  கறிவேப்பிலையை பறித்து பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.


  Attached Thumbnails Attached Thumbnails Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்-301.jpg  
  Last edited by chan; 12th Feb 2015 at 07:26 PM.
  ashsuma likes this.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter