Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree28Likes

Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்


Discussions on "Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்" in "Healthy and Nutritive Foods" forum.


 1. #21
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்

  ஊட்டச்சத்து நிறைந்த சிவப்பு கீரை

  கீரையில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொரு கீரையும் உடலுக்கு தேவையான பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. மேலும் பச்சை நிறம் கொண்ட கீரைகளை விட கவர்ச்சிகரமான தோற்றம் கொண்ட சிவப்பு கீரையில் தாவர ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படுகிறது.

  குறிப்பாக சிவப்பு கீரையில் அதிக இரும்பு சத்து காணப்படுவதால் ஊட்டச்சத்துகளை இரத்தத்தில் சேர்க்கிறது. கூடுதலாக சிவப்பு கீரையில் வைட்டமின் ஏ,பி,சி மற்றும் சி பொட்டாசியம், பாஸ்பரஸ் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு 100 கிராம் கீரையிலும் 45 கிலோ கலோரி, புரதம் 3.5 கிராம், 0.5 கிராம் கொழுப்பு, 6.5 கிராம் கார்போஹைட்ரேட், 267 மி.கி கால்சியம், பாஸ்பரஸ் 67 மில்லி கிராம், இரும்பு 3.9 மில்லி கிராம் உள்ளது.

  எந்த வகையான கீரையாக இருந்தாலும் அவை ரத்தசோகை, வறிற்று கடுப்பு, கபம், நோய் எதிர்ப்புசக்தி, கல்லீரல் போன்றவற்றிக்கு தீர்வு தருகிறது. சிவப்பு கீரை புற்றுநோயை தடுப்பதோடு மட்டுமல்லாமல் கீரையில் நார்சத்துகள் கொண்டுள்ளதால் மலச்சிக்கல், செரிமான கோளாறுகளையும் நீக்குகிறது. அதிக வெப்பத்தில் கீரையை சமைக்கும் போது கீரை சேதமடையாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம்.

  கீரை வேகவைக்கும் போது சேதமடைந்தால் கீரையில் உள்ள பெஸ்பன் பொருட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு போதை மருந்தாக செயல்படும். நார்சத்து உணவான கீரை பெருங்குடல், புற்றுநோய், நீரிழிவு, அதிக கொழுப்பு, எடைகுறைத்தல் போன்றவைக்கு சிவப்பு கீரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..

  ரத்தசோகை உள்ளவர்கள் சிவப்பு கீரையை சுத்தம் செய்து உப்பு சேர்த்த வேக கைவைத்து ஜீஸ் செய்து சாப்பிடலாம். நோய் வராமல் தடுக்க தினமும் 100 கிராம் கீரையை ஒரு வேளையாவது உணவில் சேர்த்து உடல் நலத்தை பாதுகாத்து கொள்வோம்..

  ஏதேனும் நோய் இருந்தாலும் கூட கீரையை உணவில் எடுத்துக்கொள்வதால் நோயிலிருந்து விடுதலை பெறலாம்.
  Sponsored Links
  Attached Thumbnails Attached Thumbnails Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்-f4effbf1-9288-4733-bfbf-fcff9139d78e_s_secvpf-300x225.jpg  

 2. #22
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்

  நீண்ட காலம் வாழ மணத்தக்காளிக் கீரை

  உடல் ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்த கீரைகளுள் இதுவும் ஒன்று.
  குளிர்ச்சியை சுபாவமாகக்கொண்ட இக்கீரை வறண்ட பகுதிகளிலும் விளையக்கூடியது. வீட்டிலும் விளைவிக்கலாம். எல்லாக் காலங்களிலும் ஒரளவுக்கு கிடைக்கக்கூடியது.இக்கீரையின் காய் பச்சைமணியைப் போல இருக்கின்றபடியால் மணித்தக்காளி என்ற அழைப்பார்கள். மிளகுபோல இருப்பதால் மிளகு தக்காளி என்றும் சொல்வார்கள்.
  Bot- Name- Solanum Nigrum

  வறண்ட இடத்திலும் விளையும் இக்கீரை, நீருள்ள இடங்களிலும் ஏராளமாய் செழித்து வளரும். வெள்ளை நிறத்தில் பூக்கள் பூக்கும். இந்தக் கீரையின் ஒவ்வொரு பாகமும் மருத்துவப் பயன்கொண்டது. இலை, தண்டு, காய், கனி, வேர் அனைத்துமே உபயோகப்படக்கூடியது.

  கசப்புத்தன்மை கொண்டது இக்கீரை. இதனால் பெரும்பாலோர் தொடுவதில்லை நீண்ட காலம் வாழ மிகவும் உதவும் கீரை என்பதை மறவாதீர்.

  இக்கீரையின் அனைத்துப் பகுதிகளும் உண்பதற்கு ஏற்றவையே இதில் புரதம்,மாவுச்சத்து, தாது உப்புக்கள் நிறைந்துள்ளன. இக்கீரையைப் பருப்ப சேர்த்து கூட்டு. பொரியல், குழம்பு வைக்கலாம்.


  மலமிளகுத் தானே மகா கபமும் போகும்

  பல மிகுந்த வாதம்போம் பார்க்குள் - மலைபோற்
  பணைத்துப்பூ ரித்தமுலைப் பாவாய்கேள்! நல்ல
  மணத்தக்கா ளிக்காயை வாழ்த்து.

  இன்னொரு பாடல்,

  காய்க்கு கபந்தீருங் காரிகையே! அவ்விலைக்கு
  வாய்கிரந்தி வேக்காடு மாறுங்கண். - (பதார்த்த குணசிந்தாமணி)

  வாய்ப்புண், அச்சரம் மற்றும் கால்சியம் குறைபாடுகளுக்கு இந்தக் கீரை மிகவும் நல்லது. உடல் உறுப்புகளில் எங்கு புண் இருந்தாலும் ஆற்றும் வல்லமை இதற்கு உண்டு. இந்தக் கீரையைத் தொடர்ந்து 48 நாள்கள் சாப்பிட்டால் சோரியாசிஸ் எனப்படும் தோல் நோய் முற்றிலும் குணமாகும்.

  வாய்ப்புண் நாக்குப்புண் குணமாக:

  கையளவு மணத்தக்காளிக் கீரையுடன் 4 சிட்டிகை மஞ்சளையும் சேர்த்து கொதிக்கவைத்துச் சாப்பிட்டால் வாய்ப்புண், நாக்குப்புண் போன்றவை குணமாகும்.

  வாத நோய்:

  மணத்தக்காளிக் கீரையுடன் சிறிதளவு உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட வாத நோய்கள் தீரும்

  தொண்டைப்புண், வயிற்றுப்புண்:

  ஒரு கைப்பிடி மணத்தக்கரிளக் கீரையுடன் ஒரு மாசிக்காயை சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.

  நீர்ச் சுருக்கு, நீர் எரிச்சல்:

  ஒரு கைப்பிடி அளவு மணத்தாளிக் கீரையுடன் ஒரு ஸ்பூன் பார்லி, நான்கு சிட்டிகை மஞசள் ஆகியவற்றைச் சேர்ந்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு, நீர் எரிச்சல், சிறுநீர் பிரியாமை போன்ற குறைபாடுகள் சரியாகும்.

  இளைத்த உடல் பருக:

  மணத்தக்காளிக் கீரையில் இருந்து சாறு எடுத்து. அதைத் தேனோடு சேர்த்து சர்பத் போல் காய்ச்சிஈ தினமும் சாப்பிட்டு வந்தால் இளைந்த உடல் பருக்கும்.


  Attached Thumbnails Attached Thumbnails Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்-.jpg  

 3. #23
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்

  100 கிராம் மணத்தக்காளிக் கீரையில் உள்ள சத்துக்கள்:


  நீர்ச்சத்து - 82.1 கிராம்
  புரதம் - 5.9 கிராம்
  கொழுப்பு - 1.0 கிராம்
  தாது உப்புகள் - 2.1 கிராம்
  சர்க்கரைச்சத்து - 8.9 கிராம்
  சுண்ணாம்புச்சத்து - 410 மிகி
  பாஸ்பரஸ் - 70 மி;கி
  இரும்பு - 20.5 மிகி
  ரிபோஃபிளேவின் - 0.59 மி.கி
  நியாசின் - 0.9 மி.கி
  வைட்டமின் சி - 11 மி.கி

  குளிர் ஜன்னி:

  ஒரு கைப்பிடி மணத்தக்காளிக் கீரையோடு மிளகு (10 எண்ணிக்கை), திப்பில் (3 எண்ணிக்கை), நான்கு சிட்டிகை மஞசள் ஆகியவற்றைச் சேர்ந்து விழுதாக அரைத்து அதில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால்ஈ சளி,இருமல் போன்ற கப நோய்கள் குணமாகும். குளிர் ஜன்னிக்கு அற்புதமான மருந்து இது

  உடல் சூடு:

  மணத்தக்காளிக் கீரையில் இருந்து சாற எடுத்து 30 மி.லி. அளவுக்குத் தினமும் மூன்னு வேளையும் சாப்பிட்டால், சிறுநீர் தாரளமாகப் பிரியும். பெருவயிறு, வாய்ப்புண், உடல் சூடு போன்றவை குணமாகும்.

  இதய நோய்:

  ஒரு கைப்பிடி மணத்தக்காளிக் கீரையோடு, பூண்டு (4பல்) நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.

  இனிய குரல் வளம்:


  மணத்தக்கரிளக் கீரையில் இருந்து சாறு எடுத்து அதில் அதிமதுரத்தை ஊறவைத்து உலர்த்தி தூள் செய்து, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வ்நதால் தொண்மைச் சதை குணமாகும். இனிய குரல் வளமும் உண்டாகும்.

  உடல எடை, பெருவயிறு குறைய:

  மணத்தக்காளிக் கீரையைச் (100 கிராம்) சுத்தம் செய்து, கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு எடு;த்து அதில் எலுமிச்சம் பழத்தைப் (பாதி அளவு) பிழிந்து, சின்ன வெங்காயத்தை (2) அரிந்துபோட்டு அரைத்துச் சாறு எடுக்கவும் இதைக் காரைல உணவுக்குப் பிறகு சாப்பிட்டால் உடல் எடை, பெருவயிற போன்றவை குறையும்.

  காயின் குணங்கள்:


  உடல் வலி தீரும்
  களைப்பை அகற்றும்
  உடலிலுள்ள நச்சுநீரை வெளியேற்றும்
  வாந்தியைப் போக்கும்
  இக்காயை வற்றலாக்கி வறுத்து உண்ணலாம்.

  பழம் தரும் பயன்கள்:


  காது வலியைப் போக்கும்
  வயிற்றுப் பொருமலை தணிக்கும்
  காய்ச்சலைப் போக்கும்
  கருப்பப்பைக்கு வலிமை தரும்
  பிரசவத்தை எளிமையாக்க உதவுகிறது

  வேரின் பயன்கள்:
  மலச்சிக்கலைப் போக்கும்
  இக்கீரையின் வேர், மூலிகை மருந்துகள் தயாரிக்க பெரும் பங்காற்றுகிறது

  பொதுவாய் மணத்தக்காளிக் கீரையை அவ்வப்போது சாப்பிட்டுப் வந்தால் உடல் நலம் பெறுகிறது. எனவே இக்கீரையை அடிக்கடி பயன்படுத்துங்கள்


  Attached Thumbnails Attached Thumbnails Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்-29.jpg  

 4. #24
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்

  நோய் தொற்றுகளில் இருந்து உடலை காக்கும் தண்டுக்கீரை

  உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை நிற்பவை கீரைகள். பல வகை கீரைகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டாலும், தண்டுக்கீரைக்கு தனி மகத்துவம் உண்டு. இதில் செங்கீரை, வெண்கீரை என்று இரண்டு வகை உண்டுவிதை, தண்டு, இலை என எல்லா பாகங்களும் ருசிக்கப்படும் ஒரே கீரை வகை இதுதான். சமைத்த தண்டுக்கீரையில் வைட்டமின்- ஏ மற்றும் வைட்டமின்-சி சத்துக்கள் கணிசமாக நிறைந்துள்ளன.

  பி-குழும வைட்டமின்களான தயமின், நியாசின் மற்றும் ரீபோபிளேவின் போன்றவை அதீத அளவில் உள்ளன. இவை உடலுக்கு சக்தியை அளிப்பதுடன் உடலில் தங்கும் தேவையற்ற கொழுப்பு பொருட்களை வெளியேற்ற உதவுகின்றன.

  கல்சியம், இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம், மங்கனீசு போன்ற அத்தியாவசிய தாது உப்புகளும் இதில் உள்ளன. இவை உடலை நோய் காரணிகளிடமிருந்து காப்பதுடன், பல்வேறு சத்துக்களை வழங்கி உடல்செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.
  லியூசின் மற்றும் திரியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் தண்டுக்கீரையில் காணப்படுகின்றன. இவை உடலில் புரதப் பொருளை சீரான விகிதத்தில் அதிகரிக்கச் செய்கின்றன.

  உடலின் பருமனை அதிகரிக்கச் செய்யும் காரணிகளான சர்க்கரை (1.69 கிராம்) மற்றும் கார்போஹைட்ரேட் (62.25 கிராம்) குறைவான அளவுகளிலே உள்ளன. இதனால் தண்டுக் கீரையை தினசரி உணவோடு சேர்த்துக் கொள்வதால் மாரடைப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள்
  கட்டுப்படுத்தப்படுகின்றன.

  நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் பல்வேறு ‘ஆன்டி-ஆக்ஸிடெண்ட்’ பொருட்கள் இதில் இருக்கின்றன. இவை ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களை வளப்படுத்துவதன் மூலம் நோய் தொற்றுகளில் இருந்து உடலை காக்கின்றன.
 5. #25
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்

  ஆண்களின் மலட்டுத் தன்மையை போக்கும் “பொன்னாங்கண்ணி”

  பொன்னாங்கண்ணி கீரையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் பொதிந்து கிடக்கிறது.

  பொன்னாங்கண்ணி ஓர் அற்புதமான உடற்தேற்றி என்று கூறலாம்.

  உடல் வலியைப் போக்கக் கூடியது மட்டுமின்றி உடலுக்கு பலத்தையும் தரவல்லது.

  பல்வேறு நரம்பு நோய்களையும் குணப்படுத்தும் வல்லமை படைத்தது.

  பொன்னாங்கண்ணி ஞாபக சக்தியைத் தூண்டக் கூடியது. கண்களுக்கும், மூளைக்கும் குளிர்ச்சி தரவல்லது.

  தலைவலி, மயக்கத்தை தணிக்க கூடியது. பொன்னாங்கண்ணி சாறு பாம்புக் கடி விஷத்தை முறிக்கும் தன்மை உடையது.

  பொன்னாங்கண்ணிக் கீரை ஆண்களின் மலட்டுத் தன்மையையும் இயலாமையையும் போக்க கூடிய அற்புதமான மருந்தாகும்.

  பொன்னாங்கண்ணிக் கீரையை உள்ளுக்கு சாப்பிட்டுவதாலும் எண்ணெயில் இட்டு நன்கு காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டு தலைக்குத் தடவுவதாலும் தலைமுடி நன்கு செழுமையாக வளரும்.

  பொன்னாங்கண்ணியை மேற்பூச்சு மருந்தாகப் பயன்படுத்தும் போது முகப்பருக்கள் போவதோடு கரும்புள்ளிகளும் காணாமற் போகும். முகம் பொலிவுடன் திகழும்.

  பொன்னாங்கண்ணி சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் சத்து நிறைந்த உணவாகி அவர்களின் சோர்வைப் போக்குவதோடு சர்க்கரை நோய்க்கும் ஓர் துணை மருந்து ஆகிறது.

  ரத்தத்தில் சேரும் சர்க்கரை மற்றும் கொழுப்புசத்தை குறைக்க வல்லது.  Attached Thumbnails Attached Thumbnails Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்-ponankanni_002-300x151.jpg  
  ashsuma likes this.

 6. #26
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்

  கீரைகளின் அரசி – Kale

  கீரைகள் என்றாலே சத்து டானிக் என்று சொல்வது மிக பொருத்தமாக இருக்கும். அதிலும் கீரைகளின் ராணி என்று ஒரு கீரையை அழைக்கிறார்கள். அது தான் ஆங்கிலத்தில் Kale என்றும் தமிழில் பரட்டைக் கீரை என்றும் அழைக்கப் படுகிறது. பார்ப்பதற்கு தலை விரிக் கோலத்துடன் இருப்பதால் இந்த பரட்டை என்ற திருநாமத்தை பெற்றிருக்கலாம்.

  இதில் காணப்படும் அளவில்லா சத்துக்கள் காரணமாகவே கீரைகளின் ராணி என்ற பெயர் பெற்றுள்ளது. குறைந்த கலோரி ,நிறைய நார்ச்சத்து ,பூச்சியம் அளவு கொழுப்பு சத்து நிறைந்தது இக்கீரை .  உடல் எடை பராமரிக்க விரும்புவோர் தினமும் இக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்கும் இக்கீரை
  அதிக நார்ச்சத்து இருப்பதால் எளிதில் ஜீரணமாகும் உணவு .ஜீரணக்கோளாறு மலச்சிக்கல் ஆகிய பிரச்சினைகள் இருப்பவர்கள் அடிக்கடி இந்த கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்
  இரும்புசத்து அத்கம் கொண்டது. உதாரணமாக சொல்லவேண்டுமென்றால் மாட்டு இறைச்சியில் இருப்பதை விட மிக அதிகளவு இரும்பு சத்து இதில் இருக்கிறது.

  ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் இதில் நிறையவே இருக்கு.
  ஈரல் ,புற்றுநோய் ,எலும்பு குறைபாடு ,ஆஸ்துமா போன்ற பல நோய்கள் வராம தடுக்க கூடியது .

  பார்வை தெளிவாக இருக்க தினமும் கேல் உணவில் சேர்க்க வேண்டும். அன்றாடம் நமது உடலுக்கு வேண்டிய வைட்டமின் சி ,வைட்டமின் A…..மற்றும் வைட்டமின் K கால்சியம் எல்லாம் இந்த கீரையில் இருக்கிறது.

  பசலைக்கீரையை விட அதிக அளவு விட்டமின் c இதில் காணப்படுகிறது . பாலில் இருப்பதைவிட அதிக அளவு கால்சியம் இதில் இருக்கிறது.

  இந்த கீரை சுவையில் முருங்கை இலையின் சுவையை ஒத்திருக்கிறது. இதனை பொரியலாக செய்தும் மற்றும் பச்சை கீரையை அரைத்து ஜூஸ் போலவும் அருந்தலாம்
  .
  தமிழ்நாட்டின் சென்னை தி.நகர் பகுதி சூப்பர்மார்கெட்டுகளில் கிடைகிறது, வாங்கி பயனடையுங்கள்.  Attached Thumbnails Attached Thumbnails Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்-kale1.jpg   Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்-kale.jpg  

 7. #27
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்

  சைனஸ்க்கு 'பை'சொல்லும் அகத்தி !

  தமிழ்நாட்டில் எளிதில் கிடைக்கும் கீரைகளில் முக்கிய மானது அகத்திக் கீரை. அகத்தியில் சிற்றகத்தி, பேரகத்தி, செவ்வகத்தி, சீமை அகத்தி எனப் பல வகைகள் உள்ளன. பொதுவாக அதிகம் கிடைப்பது சிற்றகத்தி கீரை.
  அகத்திக்கீரை வைட்டமின் -ஏ, அயோடின் சத்து நிறைந்தது. புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் நுரையீரல் தொந்தரவுகளுக்கு, அகத்திக்கீரை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

  உடல் உள்சூட்டை (பித்தம்) தணிக்கும் மாமருந்து. தொடர்ந்து, சீரான இடைவெளியில் சாப்பிட்டுவர, மலச்சிக்கல் பிரச்னை முற்றிலும் நீங்கும்.  பருப்புடன் சேர்த்துக் கீரைக் கூட்டாகச் செய்து சாப்பிடலாம். செரிமானத் தொந்தரவுகள் அகலும். வயிற்றில் இருக்கும் புழுக்களை நீக்கும்.
  அகத்திக்கீரைச் சாற்றை, இரண்டு மூன்று சொட்டுகள் மூக்கினுள் விட்டு உறிஞ்சினால், மூக்கடைப்பு, தலைவலி, அடிக்கடி வரும் காய்ச்சல் (Periodic fever) நீங்கும்.

  அகத்திக்கீரைச் சாற்றை தலையில் தேய்த்துக் குளிக்க, மனநிலை பாதிப்புகள் குணமாகும்.

  ஒரு பங்கு அகத்திக் கீரைச் சாறுடன், ஐந்து பங்குத் தேன் சேர்த்து, நன்றாகக் கலந்து, தலை உச்சியில் விரலால் தடவ, குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்க்கோவை (சைனஸ் பிரச்னைகள்) சரியாகும்.

  சீமை அகத்திக் கீரையின் சாற்றை, வயிறு மற்றும் தொடைப் பகுதியில் ஏற்படும் படர்தாமரை மீது தடவி வந்தால், விரைவில் குணமாகும்.
  கை கால்களில் காயம் ஏற்பட்டால், அதன் மீது அகத்திக்கீரையை வைத்துக் கட்டினால், காயம் ஆறிவிடும்.

  அகத்திக் கீரையை அடிக்கடி சாப்பிடக் கூடாது. வயிற்றுப்போக்கு மற்றும் சொறி, சிரங்கு முதலான பிரச்னைகள் வர வாய்ப்புகள் அதிகம்.

  நன்றி டாக்டர் விகடன்  Attached Thumbnails Attached Thumbnails Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்-p37b.jpg   Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்-p37a.jpg  
  Last edited by chan; 6th Mar 2015 at 01:45 PM.
  ashsuma likes this.

 8. #28
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்

  தண்டுக்கீரை


  கீரைகளில் தண்டும் கீரையும் தனித்தனியாக சமையல்களில் பயன்படுத்துவது தண்டுக்கீரையை மட்டும்மான். ஆனால் தண்டுக்கீரை ஆடி மாதங்களில் மட்டுமே மார்க்கெட்டுகளில் கிடைக்கும். மற்ற கீரைகளை 1 முதல் 2 மாதங்களில் அறுவடை செய்யலாம். தண்டுக்கீரை அறுவடைக்கு கூடுதலாக சில நாட்கள் பொறுத்திருக்க வேண்டும். அதனால் வியாபார நோக்கத்தில் அது உதவாது. அதனால்தான் ஆடிமாதங்களில் கூழ் சமைக்கும்போது கூட சமைக்கப்படும் காரக்குழம்பில் போடுவதற்காக தண்டுக்கீரை விற்பனை செய்கிறார்கள். ஆனால் வீடுகளில் தொட்டிகளில் வளர்க்க ஏற்றக் கீரை வகையில் இதற்கு முதலிடம் தரலாம். சிறுகீரை,முளைக்கீரை உள்ளிட்ட கீரைகள் முளைத்து வளர்ந்தவுடன் அறுவடை செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது இவற்றின் பயன்பாடு ஒரே ஒரு முறை மட்டுமே.
  இலைகளைக் கிள்ளிக் கொண்டு, தண்டை விட்டால் பெரிதாக இலைகள் முளைத்து பயன்தராது. ஆனால் நன்கு வளர்ந்த தண்டுக்கீரை இலைகளை பறித்துக் கொண்டு, தண்டை மட்டும் விட்டால் ஒரே வாரத்தில் இலைகள் முளைத்து செழித்து வளர்ந்து நிற்கும். இப்படி ஒரே செடியில் ஆறு முறைக்கும் குறையாமல் இலைகளைப் பறிக்கலாம்.

  * தண்டுக்கீரை அமரன்தாசியீயா என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் அம ரன்தஸ் ஸ்பைனஸ் ஆகும். தண்டுக்கீரையில் 70-க்கும் அதிகமான வகைகள் உலகமெங்கும் விளைகிறது.

  * சமைத்த தண்டுக்கீரையில் வைட்டமின்- ஏ மற்றும் வைட்டமின்-சி சத்துக்கள் கணிசமாக நிறைந்துள்ளன.
  * பி-குழும வைட்டமின்களான தயமின், நியாசின் மற்றும் ரீபோபிளேவின் போன்றவை அதீத அளவில் உள்ளன. இவை உடலுக்கு சக்தியை அளிப்பதுடன் உடலில் தங்கும் தேவையற்ற கொழுப்பு பொருட்களை வெளியேற்ற உதவுகின்றன.

  * கால்சியம், இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு போன்ற அத்தியாவசிய தாது உப்புகளும் இதில் உள்ளன. இவை உடலை நோய் காரணிகளிடமிருந்து காப்பதுடன், பல்வேறு சத்துக்களை வழங்கி உடல்செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.

  * லியூசின் மற்றும் திரியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் தண்டுக்கீரையில் காணப்படுகின்றன. இவை உடலில் புரதப் பொருளை சீரான விகிதத்தில் அதிகரிக்கச் செய்கின்றன.
  * உடலின் பருமனை அதிகரிக்கச் செய்யும் காரணிகளான சர்க்கரை (1.69 கிராம்) மற்றும் கார்போஹைட்ரேட் (62.25 கிராம்) குறைவான அளவுகளிலே உள்ளன. இதனால் தண்டுக் கீரையை தினசரி உணவோடு சேர்த்துக் கொள்வதால் மாரடைப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

  * நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் பல்வேறு 'ஆன்டி-ஆக்ஸிடெண்ட்' பொருட்கள் இதில் இருக்கின்றன. இவை ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களை வளப்படுத்துவதன் மூலம் நோய் தொற்றுகளில் இருந்து உடலை காக்கின்றன.

  தண்டுக் கீரையில் நாம் பொதுவாக இரு வகைகளைப் பார்க்கிறோம். ஒன்று வெளிர் பச்சை நிறமுடையது, மற்றொன்று சிவப்பு நிறம் உடையது. இதில் சிவப்பு நிறக் கீரை சுவை மிக்கது என்று நாம் அறிவோம், அது உடல் நலத்திற்கு ஏற்றதும் கூட.
  குடல் புண், அல்சர் உள்ளவர்கள் இந்தக் கீரையை மசியலோ அல்லது லேசாக வதக்கியோ உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது.

  பெண்களுக்கு மாதவிடாய் காலக் கட்டம் மிகவும் வேதனை தருவது. அதிலும் குறிப்பாக வலி நிறைந்த மாதவிடாயாக இருந்தால் சிவப்பு நிறத் தண்டுக்கீரை எடுத்துக் கொள்ளலாம். மேலும் கருப்பை கோளாருகளுக்கும் இந்த வகைக் கீரை நல்லது.
  தண்டுக்கீரை வகைகளில் இரும்புச் சத்தும், கால்சியம் சத்தும் அதிகம் உள்ளது. இது உடலுக்கு குளிர்ச்சி அளிப்பது. இதனால் மூல நோய் உள்ளவர்கள் இதனை உணவுடன் எடுத்துக் கொள்ளலாம்.  ashsuma likes this.

 9. #29
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்

  முடக்கறுத்தான் கீரையின் மகிமை

  நம்மில் பலரும் மூட்டுவலியினால் (ஆர்த்ரைடிஸ்-Arthritis) அவதிப்படுகிறோம். இதற்கான மூலகாரணம் நாம் அறிய வேண்டியது ஒன்று நாம் சிறுவயதில் ஓடிஆடி விளையாடுகிறோம். சிறுவயதில் சிறுநீர் கழிக்க வேண்டுமானால் உடனடியாக செய்துவிடுகிறோம். வயதானால் நல்ல கழிவறை அல்லது வேறு பல காரணங்களால் அடக்கிக் கொள்கிறோம். சிறுநீரகங்களில் சிறுநீர் நிரம்பி இருந்தாலும், நாம் சரியான இடத்திற்காக, நேரத்திற்காக அடக்கி வைக்கிறோம் இந்த நிலை பெண்களுக்கு 10 வயது முதலும், ஆண்களுக்கு 18 வயது முதலும் ஆரம்பிக்கும். இந்த நேரங்களில் நமது சிறுநீரகங்கள் சிறுநீரை வெளியேற்ற இயலாமல் தவிக்கிறது.

  அப்பொழுது மூளையிலிருந்து செல்லும் உத்தரவு மூலமாக தற்காலிகமாக சிறுநீரகம் தன் வேலையை நிறுத்தி வைக்கிறது. இதனால் நம் உடலில் ஓடும் ரத்தம், சிறுநீரை வெளியேற்றாமல் அப்படியே எல்லா இடங்களுக்கும் செல்கிறது.

  அவ்வாறு செல்லும்போது இரத்தத்தில் உள்ள யூரிக் ஆசிட் கிறிஸ்டல்ஸ் (uric acid crystals) மூட்டுகளில் படிந்து விடுகிறது. இந்தச் சிறுசிறு கற்கள் சுமார் சினோரியல் மெம்கிரேம் (நமது மூட்டுகள் நம் எண்ணத்திற்கு ஏற்ப அசைவதற்கு உதவும் ஒரு தசை) என்னும் இடத்தில் உட்கார்ந்து விடுகிறது. இது பல வருடங்களாக தொடர்ந்து நடைபெறுகிறது.

  சிலருக்கு 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். இதுதான் ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின் (rheumatoid arthritis) ஆரம்ப நிலை.

  இந்தியாவில் 65 சதவிகித மக்கள் இந்த வகை மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 85 சதவிகிதம் பெண்கள். பலவிதமான மருத்துவ முறைகளில் இந்த நோய்க்கு மூலகாரணம் கண்டுபிடித்து மருந்து அளிப்பதில்லை. நம் முன்னோர்கள் 2000 வருடங்களுக்கு முன்பே இயற்கை மருத்துவ குணம் கொண்ட கீரையை நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதுதான் முடக்கத்தான் கீரை.

  ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் யுனிவர்சிட்டியிலிருந்து இந்தியாவின் சில மூலிகைகளை காப்பாற்றியும், அதில் உள்ள மருத்துவக் குணங்களையும், எந்த மூலக்கூறு ஒவ்வொரு மூலிகையிலும் எந்தெந்த வியாதிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது என்பதைப் பற்றியும் கூட்டு முயற்சியில் செயல்பட்டார்கள்.

  அப்போது முடக்கத்தானிலுள்ள தாலைட்ஸ் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை அறிந்து, மேலும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள். இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறுநீரகத்திற்கு எடுத்துச்சென்று விடும். இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது.

  இது ஒரு மிக முக்கியமான இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது.

  முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். அந்தக் கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும்.

  மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய* கீரையாகும்.
  ashsuma likes this.

 10. #30
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்

  முடக்கு+அறுத்தான்= முடக்கறுத்தான்

  மூலிகையின் பெயர் – முடக்கறுத்தான்
  தாவரவியற்பெயர் - Cardiospermum halicacabum
  வேறுபெயர்கள் – முடக்கற்றான், முடர்குற்றான், மொடக்கொத்தான்
  சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
  காலைத் தொடுவலியுங் கண்மலமும் சாலக்
  கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு
  முடக்கற்றான் தனை மொழி- சித்தர் பாடல்
  கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடுமாம்.

  வளரியல்பு – முடக்கற்றான் கொடிவகையைச் சேர்ந்தது. இது ஏறுகொடியாக சுமார் 3.5 மீ. அளவு படரும். இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது. குளிர்ந்த ஈரச்சத்துள்ள இடத்தில்தான் முடக்கற்றான் பயிராகும். தோட்டங்கள், வீட்டு வேலி இவைகளிலுள்ள பெரிய செடிகளின்மேல் படர்ந்து வளரும். உஷ்ண பிரதேசங்களில் முடக்கற்றான் கொடியைப் பார்க்கமு டியாது. வளமான இடங்களில் இந்தக் கொடிசற்று பெரிய இலைகளுடன் செழிப்பாகப் படரும்.

  இந்தக் கொடியின் தண்டும் இலைக் காம்பும் மெல்லியதாகவே இருக்கும். இதன் தண்டுகள் கம்பி போன்று மெல்லியதாகவும், வலிமையாகவும் இருக்கும். இலைக் காம்பு நீண்டு இருக்கும். இதன் தண்டு, இலை, காம்பு எல்லாம் நல்ல பச்சை நிறமாகவே இருக்கும்.

  ஒவ்வொரு இலைக் காம்பும் மூன்று பிரிவாகப் பிரிந்து, ஒவ்வொரு பிரிவுக்கும் மூன்று இலைகள் வீதம் மொத்தம் ஒன்பது இலைகள் இருக்கும். அதாவது ஒவ்வொரு இலைக் காம்பும் ஒன்பது கூட்டிலைகளைக் கொண்டிருக்கும்.

  கம்பி போன்ற காம்பின் நுனியில் வெண்ணிறப் பூக்களும் காய்களும் இருக்கும். அந்தக் காய்கள் மிருதுவான தோல்களால் முப்பட்டை வடிவமாக மூடிக்கொண்டும், பலூன் போன்று உப்பிக் கொண்டும் இருக்கும்.

  இதன் காய் மூன்று பிரிவாகப் பிரிந்து உப்பலான மூன்று தனித்தனி அறைகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வோர் அறையிலும் ஒரு விதை வீதம் ஒரு காயில் மூன்று விதைகள் இருக்கும். காயைப் பறித்துத் தோலை உரித்தால் உள்ளே மிளகளவு, பச்சை நிறமான விதைகள் இருக்கும். அதன் ஒரு பகுதியில் நிலாப்பிறைபோல் ஒரு வெண்ணிறக் குறி தோன்றும். விதைகள் நன்கு முற்றிக் காய்ந்தவுடன் உருண்டையாக, கறுப்பு நிறமாக இருக்கும். இந்த விதைகளே சிதறி முளைக்கிறது.

  இதன் காய் முற்றியபின் பழுப்பு நிறமாக மாறிக் காய்ந்து விடும். இதை மற்ற கீரைகளுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம், தனியாக மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

  இலையில் ஈரப்பதம்-83.3, புரதச்சத்து-4.7, கொழுப்புச் சத்து 0.6, மாவு சத்து 9.1, தாது சத்து 2.3, சக்தி-6 கலோரி முதலிய சத்துக்கள் அடங்கியுள்ளது.

  முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் / முடக்கற்றான். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும் மூட்டு வாதநோயை அகற்றுவதால் முடக்கற்றான் எனப் பெயர் பெற்றது.

  குழந்தை பிரசவிக்கும் நேரத்தில் ஒரு சில பெண்கள் ரொம்ப கஷ்டப்படுவார்கள் இவர்கள் வேதனையைக் குறைத்து, சுகமாக சுலபமாக பிரசவிக்கச் செய்ய இந்த முடக்கற்றான் நன்கு பயன்படுகிறது.
loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter