Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree28Likes

Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்


Discussions on "Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #31
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்

    சுகப்பிரசவம் ஆக

    முடக்கற்றான் இலையைத் தேவையான அளவுகொண்டு வந்து அதைக் காரமில்லாத அம்மியில் வைத்து மை போல்அரைத்து, பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில் கனமாகப் பூசிவிட்டால் கால் மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஏற்படும். கஷ்டமோ, களைப்போ தோன்றாது. மருத்துவமனை அருகிலில்லாத கிராமங்களில் உள்ள மருத்துவம் பார்க்கும் பெண்களும், பாட்டி மார்களும் இந்த முறையையே கையாண்டு வருகின்றனர். இது கைகண்ட முறையாகும்.

    மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக
    மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம்,மலச்சிக்கல் சம்பந்தப்பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.

    முடக்கற்றான் இரசம் தயாரிக்கும் முறை
    ஒரு கை பிடியளவு முடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளரளவு தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி இரசம் வைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு, சீரகம் சேர்த்து இரசம் தயாரிக்க வேண்டும்.

    பாரிச வாய்வு குணமாக
    கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை நைத்து ஒரு சட்டியில் போட்டு அதேயளவு வேலிப்பருத்தி இலையையும், சூரத்து ஆவரையிலையையும் சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக வடிகட்டிக் காலைவேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் கொடுத்து வந்தால் பாரிச வாய்வு குணமாகும். தேவையானால் மூன்று நாட்கள் இடைவெளிவிட்டு, மறுபடி 3 நாளாக மூன்று முறை கொடுத்து வந்தால், பாரிசவாய்வு பூரணமாகக் குணமாகும்.

    சுக பேதிக்கு
    ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை ஒருசட்டியில் போட்டு, வெள்ளைப் பூண்டு பற்களில் ஐந்து நைத்து இதில் போட்டு அரைத்து தேக்கரண்டி அளவு மிளகை ஒன்றிரண்டாக உடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சிய கஷாயத்தை வடிகட்டி விடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். அதிகமான பேதியினால் ஒரு எலுமிச்சப் பழசாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும். இரசம் சாதம் மட்டும் சாப்பிடலாம். இரவு தேவையான பதார்த்தம் சாப்பிடலாம்.
    முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் இட்டுக் காய்ச்சி மூட்டு வலிகளுக்குப் பூசினால் நீங்கும்.

    இதன் இலையை இடித்துப் பிழிந்துஎடுத்த சாற்றினை இரண்டு துளிகள் காதில் விட்டுவர காதுவலி, காதில் இருந்து சீழ் வடிவது முதலியவை நீங்கும்.

    முடக்கற்றான் இலையையும், வேரையும் குடிநீரிட்டு மூன்று வேளையாக அறுபது மில்லி வீதம் தொடர்ந்து அருந்திவர நாள்பட்ட இருமல் குணமாகும்.

    க மாதவிலக்கு ஏற்படாது. இவர்கள் முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாதவிலக்கு ஒழுங்காக வரும்.

    முடக்கற்றான் இலையை உலர்த்தி எடுத்த பொடியுடன், சித்திரமூல வேர்பட்டை, கரிய போளம் இவைகளையும் பொடி செய்து குறிப்பிட்ட அளவு மூன்று நாள் அருந்தி வர மாதவிலக்கு ஒழுங்காக வரும்.

    முடக்கற்றான் கொடி மல மிளக்கி செய்கை உடையது. இதன் கொடியை முறைப்படி குடிநீரிட்டு அத்துடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து அருந்த மலத்தைக் கழிக்கச் செய்யும்.

    முடக்கற்றான் வேரை உலர்த்தி பின்னர் முறைப்படி குடிநீர் அருந்திவர நாள்பட்ட மூலநோய் குணமாகும்.

    முடக்கத்தான் கீரை 61 கலோரி வெப்ப ஆற்றலைக் கொடுக்கிறது. இதன் இலைகளை சிறிது எடுத்து துவரம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வர, கை, கால் வலி, மூட்டுவலி தீரும். நரம்பு சம்பந்தமான நோய்கள் தீரும். தசை நாரும் நரம்பும் வலுப்பெறும்.

    கைப்பிடியளவு முடக்கத்தான் கீரையை பொடியாக நறுக்கி, அரைத்த புழுங்கல் அரிசி மாவுடன் சேர்த்து, உப்பு தேவையான அளவு சேர்த்து, அடையாக சுட்டு காலை, மாலை இரண்டு அடை வீதம் சாப்பிட்டு வர உடல் வலி நீங்கும்.

    இதன் இலைகளை மூன்று விரல் அளவு எடுத்து, மிளகு ரச மசாலுடன் தட்டிப் போட்டு ரசம் செய்து சாப்பிட்டு வர கீல்வாதம், மூட்டுப் பிடிப்பு, இடுப்புப் பிடிப்பு போன்ற நோய்கள் தீரும். மலச்சிக்கல் தீரும். வாய்வு சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.

    இதன் இலைகள் நான்கு விரல் அளவு எடுத்து, வெங்காயம் சிறிது கூடுதலாக நறுக்கிப்போட்டு, மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து எண்ணெயில் பொரித்து சில நாட்கள் சாப்பிட்டு வர கழுத்துவலி, இடுப்பு வலி, முடக்குவாதம் போன்ற நோய்கள் தீரும்.
    இதன் இலைகளை அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து காலையில் சாப்பிட்டு வர, காசம், சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற நோய்கள் தீரும்.

    இதன் இலைகளை விளக்கெண்ணெய் விட்டு அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து, அதனுடன் கருப்பட்டி சேர்த்து உண்டுவர குடலிறக்க நோய் தீரும்.

    இதர கீரைகளை சமைப்பது போலவே முடக்கற்றான் கீரையை சாப்பிட்டு வரலாம். இலை, வேர் இவற்றை சம பாகமாக எடுத்து, இஞ்சி, மிளகு, சீரகம், தண்ணீர் சேர்த்து, கஷாயமாக, காய்ச்சி, அந்த எண்ணையை வலியுள்ள இடங்களில் பூசலாம். இதற்கு நல்லெண்ணையை பயன்படுத்தலாம்.

    இந்த மூலிகை செறிந்த எண்ணைப்பூச்சு, கீல்வாத வலிகளை போக்கும். வாத வீக்கங்களுக்கு, முடக்கற்றான் தண்டு, இலைகளை, பாலுடன் அரைத்து தடவ, வீக்கங்கள் குறையும்.





    Sponsored Links

  2. #32
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்

    முடக்கற்றானை உபயோகிப்பதால் கால்களின் ஏறி வரும் விறைப்புத் தன்மை (அதுவும் காலை நேரங்களில் ஏற்படும்) போகும். உடல் வலிகளுக்கு, இலைகளை கடலை எண்ணையில் அரைத்து, வெளிப்பூச்சாக வலிக்கும் இடங்களில் தடவலாம்.

    கீல் பிடிப்பு, கீல் வாதம், கால்களை நீட்டவோ, மடக்கவோ முடியாமல் போதல், நடக்க முடியாமல் போதல், இவற்றுக்கு முடக்கற்றான் கீரையை சமைத்து சாப்பிட்டுவர நல்ல குணம் தெரியும்.

    இதன் இலைகளை அரைத்து, பூண்டு, சீரகம், கருமிளகு, உப்பு, வெங்காயம் இவற்றை சேர்த்து, ரசம் போல் தயாரித்து, ஒரு நாளைக்கு இரண்டு வேளை குடிக்க, ருமாடிஸம், சுளுக்கு, மலச்சிக்கல் இவை மறையும்.

    இலைகளை நெய்யில் வதக்கி, கூட இஞ்சி, கொத்தமல்லி, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சட்னி போல அல்லது துவையல் போல தினமும் சாப்பிட்டு வர மூட்டு நோய்கள் தீரும்.

    இதன் இலைகள் மூன்று விரல் அளவு எடுத்து, வெல்லம் சேர்த்து நெய்விட்டு வதக்கி உண்டு வர, கண் வலி தீரும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் பல குணமாகும்.

    இதன் இலைகளைப் பாலுடன் சேர்த்து அரைத்து, கொப்புளங்களுக்குத் தடவி வர குணம் கிடைக்கும்.

    ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலைகளை இடித்து, ஒரு பழகின மண்பானையில் இட்டு, அரைப்படி நீர் விட்டு அரைக் கால் படியாக சுண்டக்காய்ச்சி, வடிகட்டி ஒரு வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் இரண்டுவேளை மூன்று நாள் அருந்த நரம்புகள் சம்பந்தமான மேக வாய்வு, மூச்சுப் பிடிப்பு, மூலம், கபம் சம்பந்தமான இருமல், மலச்சிக்கல் ஆகியவை தீரும்.

    தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாட்கள் முடக்கத்தான் கீரைதோசை சாப்பிடுவார்கள். நாமும் அதைக் கடைப்பிடித்தால் நமக்கு மூட்டு வலிகள் வராது.


    முடக்கத்தான் தோசை

    தேவையான பொருட்கள்

    புழுங்கல் அரிசி – 1 கப்
    முடக்கத்தான் இலை – 2 கப்
    வெந்தயம் – 1 தேக்கரண்டி

    செய்முறை
    அரிசியையும், வெந்தயத்தையும் ஊற வைத்து தோசை மாவுக்கு அரைப்பது போலவே அரைத்து, அதனுடன் முடக்கத்தான் இலையையும் நன்கு கழுவிப் போட்டு அரைத்து விடவும். மூன்றையும் ஒன்றாகவே போட்டு அரைக்கலாம். மிகவும் நைசாக முதல் நாள் இரவே அரைத்து வைத்து விடவும். மறுநாள் தோசைக்கல்லில் தோசை போல வார்க்கவும். இதற்கு தேங்காய் சட்னி, பூண்டுச் சட்னி இரண்டுமே நன்றாக இருக்கும்.

    மூட்டு வலியை நீக்கும், முடக்கத்தான் கீரை இடலை இட்லி

    தேவையானவை:

    இட்லி அரிசி – 3 கப், முழு உளுந்து – அரை கப், வெந்தயம் – ஒரு கைப்பிடி, முடக்கத்தான் கீரை (ஆய்ந்தது) – 2 கப், வாழை இலை – 1, நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு.

    செய்முறை:

    அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் தனித்தனியே ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் முதலில் வெந்தயத்தைப் போட்டு சுமார் ஐந்து நிமிடங்கள் அரைத்து, முடக்கத்தான் கீரையைச் சேர்க்கவும். பிறகு உளுந்து, அரிசியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    இந்த மாவில் உப்பு சேர்த்துக் கரைத்து–வைத்த ஆறு மணி நேரத்தில் மாவு பொங்கி இருக்கும். இடலைத் தட்டு அல்லது இட்லித் தட்டில் வாழை இலையை வைத்து, சிறிது நல்லெண்ணெய் தடவி மாவை அகலமாக கொஞ்சம் தடிப்பாக ஊற்றவும். இடலைத் தட்டை மூடிவைத்து ஆவியில் வேகவிடவும். 10 நிமிடங்களில் வாழை இலை மணத்துடன்… சுடச்சுட சுவையான, சத்தான முடக்கத்தான் இடலை இட்லி தயார்.





  3. #33
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்

    Very useful information about கீரைகளின் மருத்துவ பலன்கள்!!!!!!!! Thank you!




    chan likes this.

  4. #34
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்

    முத்தான பலன்கள் தரும் முருங்கைக் கீரை!

    தமிழர் உணவில் தொன்றுதொட்டு இடம்பெறும் முக்கியமான கீரைகளுள் முருங்கைக் கீரையும் ஒன்று. முருங்கை மரத்தின் எல்லா பாகங்களுமே மருத்துவப் பலன்கள் நிறைந்தவை. முக்கியமாக, முருங்கைக் கீரையும் முருங்கைக்காயும் தனித்துவம் வாய்ந்தவை.

    1.முருங்கைக் கீரையில் இரும்பு, கால்சியம், வைட்டமின் ஏ, பி1, பி2 மற்றும் சி உள்ளிட்ட சத்துக்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. குறைந்த கலோரி மட்டுமே கொண்டது. எனினும், இதனை அளவாகவே உட்கொள்ள வேண்டும். பல்வேறு அமினோ அமிலங்கள் நிறைந்து இருப்பதால், உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களைச் சீர்செய்யும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். எலும்புகள் பலப்படும். ஆண்களுக்கு விந்து கெட்டிப்படும்.


    2.முருங்கைக் கீரையைக் கடைந்தோ, பொரியலாகவோ, வதக்கியோ சாப்பிடுவது நல்லது. நார்ச்சத்து நிறைந்தது என்பதால், சீரான இடைவெளியில் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், மலச்சிக்கல் தீரும். முருங்கைக் கீரையை நெய்யில் வறுத்து, வளரும் குழந்தைகளுக்கு உணவுக்கு முன் கொடுத்துவந்தால், ரத்த சோகையைத் தடுக்கலாம்.


    3.வைட்டமின் - ஏ சத்து அதிகம் இருப்பதால், பார்வைத் திறனை அதிகரிக்கும். முருங்கைக் கீரையை அரைத்து, சாறு பிழிந்து கண்ணில்விட்டால், கண் வலி நீங்கும். தேனுடன் சேர்த்துக் கண் இமைகளில் தடவிவந்தால், கண் நோய்கள் குணமாகும்.


    4.முருங்கை இலையுடன் மிளகை சம அளவு எடுத்து, நசுக்கிச் சாறு பிழிந்து, தலையில் வலி உள்ள இடத்தில் பற்று போட, தலைவலி குணமாகும்.


    5.கீரையை அரைத்து வீக்கமுள்ள பகுதிகளில் பற்று போடலாம். பூண்டு, மஞ்சள், உப்பு, மிளகு இவற்றுடன் முருங்கை இலை சேர்த்து, அம்மியில் நசுக்கிச் சாப்பிட்டால், நாய்க்கடி நஞ்சு நீங்கும். இதையே நாய் கடித்த புண்ணில் பற்று இட்டால், விரைவில் குணமாகும்.


    6.பருப்புடன் சேர்த்துச் சாப்பிட்டால், வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்றவை தடுக்கப்படும். முடி வளர்ச்சிக்கும் உதவும்.


    7.மூட்டு வலி இருப்பவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரையைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.


    8.ஆஸ்துமா, மார்புச்சளியால் அவதிப்படுபவர்களுக்கு, முருங்கைக் கீரை சூப் செய்துகொடுக்கலாம். ரத்த விருத்தி அதிகரிக்கும்.


    9.முருங்கைக் கீரை செரிமானமாவது கடினம். எனவே, இரவு வேளைகளில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது அவசியம்.



    vijivedachalam likes this.

  5. #35
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்

    அகத்தி கீரையின் மருத்துவம்


    அகத்தி கீரை = அகம்+தீ+கீரை என்றால் பித்தம் போக்க கூடியது.

    * இதில் வைட்டமீன்கள், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, உயிர் சத்து, தாது பொருட்கள் அதிகமாக உள்ளது.

    * குழந்தை பெற்ற தாய்மார்கள் அகத்தி கீரையை அடிக்கடி சாப்பிட்டால் நிறைய பால் சுரக்கும்.

    * கண் எரிச்சல், கண் வலி, கண்ணில் நீர் வடிதல் ஆகிய நோய்களுக்கு அகத்திப்பூவை கண்ணில் வைத்து கட்டிக்கொண்டால் சரியாகும்.

    * அகத்தி கீரையை அடிக்கடி சேர்த்து கொண்டால் எலும்பும், பல்லும் உறுதியாகும்.

    * இந்த அகத்தி கீரையானது வயிற்றில் இருக்கும் புழுவை நீக்கும். மலச்சிக்கலையும் நீக்கும்.

    * இந்த கீரையின் சாறில் 2 சொட்டு எடுத்து நமது மூக்கில் விட்டால் சுரம் போய்விடும்.

    * வாய்ப்புண், குடல்புண், தொண்டைப்புண் ஆகிறவற்றை இது நீக்கும்.
    * அகத்திகீரை தொடர்ந்து சாப்பிட்டால் மூளைக் கோளாறு சரியாகும்.

    * வேறு மருந்து சாப்பிடும்போது இக்கீரையை சாப்பிட்டால் மருந்தின் வீரியம் குறைந்துவிடும். அதனால் மருந்து சாப்பிடும் காலங்களில் இந்த கீரையை சாப்பிடக்கூடாது.

    * இக்கீரையை அடிக்கடி சாப்பிட்டால் இரத்தம் கெட்டுப் போக வாய்ப்புண்டு. சொறியும், சிரங்கும் வரலாம். இரத்த சோகையும் வரலாம். வயிற்று வலியும் பேதியும் வரலாம்.

    * இது வாயு கோளாறை உருவாக்கும். அதனால் வாய்வுக் கோளாறு இருப்பவர்கள் இந்த கீரையை சாப்பிடக் கூடாது.

    ஆண்மையை அதிகரிக்க அகத்தி கீரைஇக்கீரை சற்று தித்திப்புச் சுவையுடையது. உஷ்ண சக்தி கொண்டது. அரைக்கீரையுடன் சிறிது நெய் சேர்த்து உண்டால் உஷ்ணத்தை உண்டாக்காது. மருந்துகள் உண்ணும் காலத்தில் இக்கீரை தவிர்க்கப்படுகிறது.

    அரைக்கீரையைத் தொடர்ந்து உண்டு வந்தால் ஜலதோஷம், சளி, இருமல், கப ஜீரம், குளிர் ஜீரம், வாத ஜீரம், ஜன்னி, பாத ஜீரம், போன்றவை குணமாகும்.அரைக்கீரை தேகத்தில் அழகை அதிகரித்து பொலிவுறச் செய்யும். தாது விருத்தி ஏற்பட்டு ஆண்மை அதிகரிக்கும். உடலுக்கு வலிமை சேர்க்கும். அரைக்கீரையை நெய்யில் வதக்கி நாள்தோறும் காலை ஒரு வேளை மட்டும் தொடர்ந்து உண்டு வந்தால் நாற்பது நாட்களில் ஆண்மை பெருகும்.

    நரம்புத் தளர்ச்சி நீங்கும். நோய் நீங்கிய பின் உடலில் இருக்கும் பலவீனத்தை அகற்றி, புது ரத்தம் பெருக அரைக்கீரை உதவும். வாத நீர்களைக் கட்டுப்படுத்தும் இக்கீரை நரம்புகளையும் பலப்படுத்தும். உடல்வலி நீக்கும். நீர்க் கோர்வை, சளிப்பிடிப்பு, இருமல் விலகும்.

    பெண்களுக்குத் தலைமுடியை நன்றாகக் கருத்தும், அடர்த்தியாகவும் வளரச் செய்யும். இளநரையை நீக்கும். இக்கீரையுடன் புளி சேர்த்து சாப்பிட நாக்கிற்கு நல்ல ருசி ஏற்படும். பசி மந்தமும் நீங்கும்.


    Last edited by chan; 16th Apr 2015 at 08:39 PM.

  6. #36
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்

    உடலுக்கு குளுமை தரும் அரைக்கீரை



    மிகவும் குளிர்ச்சித்தன்மை வாய்ந்தது. எந்த வகை நோயாளிகளுக்கும் ஏற்றது. இலைகளுடன் தண்டுகளையும் சேர்த்து சாப்பிடலாம். சத்துக்கள்: புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் நிறைவாக உள்ளது.


    உடல் சூடு உள்ளவர்கள் இந்த கீரையை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பலன்கள்: உடல் வலுப்பெறும். ரத்தத்தை அதிகரிக்கும். பிரசவித்த பெண்களுக்கு உடனடி ஊட்டத்தை அளிக்கும். பால் அதிகம் சுரக்கச் செய்யும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். சோர்வு, உடல் வலியைப் போக்கி புத்துணர்வு தரும். ரத்த நாளங்கள் நன்கு செயல்படும்.

    வாயுப் பிரச்னையைப் போக்கும். டிப்ஸ்: சின்ன வெங்காயம், தக்காளியை வதக்கி கீரை சேர்த்து வெந்ததும், உப்பு, புளி சேர்த்துக்கொள்ளவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து, எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, துவையலாக அரைத்தும் சாப்பிடலாம். கவனிக்க: குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகள் என அனைவருமே சாப்பிடலாம்.


  7. #37
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்

    இரும்புச்சத்து நிறைந்த புளிச்சகீரை




    தமிழ்நாட்டில் புளிச்ச கீரை Hibiscus cannabinus என்றும் ஆந்திரா மக்களால் கோங்குரா என்றும் அழைக்கப்படும் இந்த கீரை பெயரைப் போலவே புளிப்புத்தன்மை உடையது. இதில் விட்டமின் சத்துக்களுடன் இரும்புச்சத்து மற்றும் தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, மத்தியபிரதேசம், அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் புளிச்சகீரை அதிக அளவில் நார்களுக்காக பயிரிடப்படுகிறது.

    புளிச்சகீரையின் இலைகள், மலர்கள் மற்றும் விதைகள் உள்ளிட்டவை மருத்துவ பயன் உடையவை.
    புளிச்சகீரை செடியின் மலர்களில் இருந்து கன்னாபினிடின், கன்னாபிஸ்சிட்ரின், கன்னாபின்னின், ஆகியவை எடுக்கப்படுகின்றன. கரிம அமிலங்களான லினோலியிக் ஒலியிக், பால்மிடிக் அமிலங்கள் விதைகளில் உள்ளன. இலைகளில் ப்ரக்டோஸ், குளுக்கோஸ், மானேஸ் சர்க்கரைகளும், லிக்னோசெரிக், வனிலிக், சிரோடிக் அமிலங்களும் பிரித்தெடுக்கப்படுகின்றன.

    உடலை வலுவாக்கும் விட்டமின் மற்றும் இரும்புசத்து நிறைந்த புளிச்சகீரை உடலை வலிமையாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
    சத்து குறைவினால் நோஞ்சானாக தெரியும் குழந்தைகளுக்கு இந்த கீரையை தினமும் உணவோடு சேர்த்து கொடுத்து வர அவர்களின் உடல் புஷ்டியாகும்.

    வாத நோய்களை குணமாக்கும் தன்மை புளிச்ச கீரைக்கு உண்டு. சொறி சிரங்கு உள்ளவர்கள் இந்த கீரையை சட்னியாக செய்து சாப்பிட்டால் தோல் தொடர்பான நோய்கள் குணமடையும். ஆந்திராவில் கோங்குரா சட்னி மற்றும் கோங்குரா ஊறுகாய் பிரசித்தி பெற்றது. இந்த கீரையின் மகத்துவம் உணர்ந்த ஆந்திரா மக்கள் இதனை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்கின்றனர்.


    இலைகள் வயிற்றுப்போக்கை தூண்டும். கனிகளின் சாறுடன் சர்க்கரை மற்றும் மிளகைச் சேர்த்து உண்டால் மலச்சிக்கல் மற்றும் வயிற்று நோய்கள் குணமடையும்.
    விதைகள் பால் உணர்வு தூண்டுகின்றன.காகாசநோய் உள்ளிட்ட பல நோய்களை குணப்படுத்தும்.புளிச்சகீரை உடல் உஷ்ணத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. இரத்தத்தை சுத்திகரிக்கிறது.

    அதனால்தான் இந்த கீரையை உடலையும் குடலையும் குணமாக்கும் கீரை என்கின்றனர்.
    இது பித்தத்தை அதிகப்படுத்தும் தன்மையுடையது என்பதால் பித்தம் சம்பந்தமுடையவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.உணவில் அதிக அளவு கீரைகள் சேர்ப்பது நல்லது.

    இரவில் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. இரவில் கீரையைச் சேர்த்துக் கொண்டால் குளிர்ச்சியாலும், தூக்கத்தினாலும் சீரண சக்தி குறைந்து செரிமானம் பாதிக்கப்படும். இதனால் கீரைப் பூச்சிகள் வயிற்றில் வளர்ந்து பெரும்பாலோருக்கு வயிற்றுப் பொருமல், வயிற்று உப்பிசம், வயிற்றிரைச்சல் போன்றவை ஏற்படும்.



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter