Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree98Likes

காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables


Discussions on "காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #11
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    thagavaluku nandri.


    Sponsored Links
    sumitra likes this.

  2. #12
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    You have shared wonderful information about காய்களின் மருத்துவ பலன்கள் !!!!!! thank you!


    chan likes this.

  3. #13
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    கொழுப்பை குறைக்கும் முட்டைக் கோஸ்

    உருண்டு திரண்ட முட்டைக்கோஸ், சத்துக்கள் நிறைந்தது. சீனர்களின் சுறு சுறுப்புக்கு அவர்கள் தங்கள் உணவில் முட்டைக்கோஸை முக்கிய உணவுப் பொருளாக சேர்ப்பது ஒரு காரணம் எனலாம்

    உலகம் முழுவதும் விளையும் காய்கறிகளில் ஒன்றான முட்டைக்கோஸ் தன்னிடத்தில் அடக்கியுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்...


    பல அடுக்கு இதழ்களைக் கொண்டது முட்டைக்கோஸ். பச்சை, பழுப்பு, சிவப்பு என பல நிறங்களில் முட்டைக்கோஸ்கள் விளைகிறது.


    பச்சை முட்டைக்கோஸ் இணையற்ற சத்துக்கள் கொண்டது. குறைந்த கலோரி ஆற்றல் வழங்கக் கூடியது. கொழுப்பும் குறைந்த அளவே உள்ளது. 100 கிராம் முட்டைக்கோஸில் 25 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.


    தயோசயனேட், கார்பினால், லுடின், ஸிசாந்தின், சல்பராபேன், இசோதயோ சயனேட் போன்ற ரசாயன மூலக்கூறுகள் முட்டைக்கோஸில் உள்ளது. இவை பல்வேறு உடற்செயல்களில் பங்கெடுக்கின்றன. குறிப்பாக நோய் எதிர்ப் பொருட்களாக செயல்படுகின்றன. மார்பகம், தொண்டை, குடற் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படும். கெட்ட கொழுப்புகளான எல்.டி.எல். கொழுப்புகளை குறைக்கும்.


    முக்கியமான நோய் எதிர்ப்பொருளான 'வைட்டமின் சி', முட்டைக்கோசில் மிகுந்துள்ளது. 100 கிராம் கோஸில் 36.6 மில்லிகிராம் 'வைட்டமின் சி' கிடைக்கிறது. தொடர்ச்சியாக 'வைட்டமின் சி' உடலில் சேர்த்துக் கொள்வது அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும்.


    தீங்கு விளைவிக்கும் 'பிரீ-ரேடிக்கல்'களை சுத்தப்படுத்தும் தன்மை 'வைட்டமின் சி'-க்கு உண்டு. ஆக்சிஜன் பிரீ ரேடிக்கல்களை உறிஞ்சி அகற்றும் அளவை கணக்கிட்டால், 100 கிராம் பச்சை முட்டைக்கோசானது, 508 மைக்ரான் ரேடிக்கல்களை விரட்டி அடிக்கிறது. சிவப்பு முட்டைக்கோஸில் 2 ஆயிரத்து 252 மைக்ரான் அளவு ரேடிக்கல்களை சுத்தப்படுத்தும் சக்தி கிடைக்கிறது.


    வைட்டமின் பி-5, வைட்டமின் பி-6, வைட்டமின் பி-1 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும் முட்டைக்கோஸில் நிறைந்துள்ளது. இவை உணர்வுக்கும், இதர உடற்செயல்பாட்டிற்கும் உறுதுணை செய்யக்கூடியவை.


    பொட்டாசியம், மாங்கனீசு, இரும்பு, மக்னீசியம் போன்ற தாதுஉப்புக்கள் முட்டைக்கோசில் உள்ளது. பொட்டாசியம் உடற்செல்கள் மற்றும் சருமம் வளவளப்புடன் இருக்க துணை செய்யும். இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பங்கெடுக்கும். மாங்கனீசு, நோய் எதிர்ப்பு நொதிகள் செயல்பட துணைக் காரணியாக விளங்கும். இரும்புத் தாது, சிவப்பு ரத்த செல்கள் உருவாக்கத்தில் பங்கெடுக்கிறது.


    முட்டைக்கோஸில் 'வைட்டமின் கே', நிறைய அளவில் உள்ளது. எலும்பு வளர்ச்சிதை மாற்றத்தில் இது பங்கெடுக்கும். அல்சீமர் மற்றும் நரம்பு வியாதிகளின் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றலும் 'வைட்டமின் கே' -விற்கு உண்டு



    Attached Thumbnails Attached Thumbnails காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables-.jpg   காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables-.jpg  
    Dangu likes this.

  4. #14
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    தாய்ப்பால் சுரக்கவைக்கும் சுரைக்காய்

    சுரைக்காய் குடுவையில் நீர் நிரப்பி, குளிர்ச்சியாக குடித்து வந்தனர் நம் முன்னோர். உடலுக்குக் குளிர்ச்சியையும், ஊட்டத்தையும் தரும் சுரைக்காயில் மருத்துவக் குணங்கள் ஏராளம்.

    'சுரைக்காய் வெள்ளரிக் குடும்பத்தைச் சேர்ந்த நீர் காய். இனிப்பு, கசப்பு என இரு சுவைகளில் இருந்தாலும், இனிப்பு சுவை கொண்டதையே நாம் அதிகமாகப் பயன்படுத்துகிறோம். ஆண்மைக்குறைபாட்டை நீக்கும் சிறந்த காய் இது. தினசரி உண்டுவந்தால், கல் அடைப்பு நீங்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. சிறுநீர் பெருக்கத்தைத் தூண்டும்; உடலின் வெப்பநிலையையும், பித்தத்தையும் சமநிலைப்படுத்தும். இதனை 'பித்த சமனி’ என்பர்.


    சுரைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி உள்ளன. கை, கால்களில் குறிப்பாகப் பாதங்களில் ஏற்படக்கூடிய எரிச்சல் நீங்க, சுரைக்காயின் சதைப்பகுதியை துணியில் வைத்துக் கட்டினால் எரிச்சல் குணமாகும். சுரைக்காயின் சதைப்பகுதியோடு எலுமிச்சம்பழத்தின் சாற்றினையும் கலந்து தலையில் தேய்த்து குளித்துவந்தால், குளிர்ச்சி ஏற்படும்.

    தினமும் சுரைக்காய் சாறு அருந்திவந்தால், சிறுநீர் பாதையில் ஏற்படக்கூடிய எரிச்சல், பெண்களுக்கு சிறுநீர்ப்பாதை தொற்றுநோயினால் ஏற்படக்கூடிய எரிச்சல் ஆகியவற்றைக் குணப்படுத்தும். குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்கவும், உடல் எடை குறைக்க நினைப்பவர்களும், சுரைக்காயுடன் பாசிப்பயிறு சேர்த்து கூட்டு வைத்து சாப்பிடலாம். உடலில் உள்ள தேவையற்ற நீர்ச்சத்துக்கள் நீங்கி எடை குறையும்.

    சுரைக்காயை அரைத்து உடலில் பூசி வந்தால், உடலின் வெப்பநிலை குறைவதோடு குளிர்ச்சியும் ஏற்படும். சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் தடவிவர, கண் எரிச்சல் குணமாகும். வெயிலில் அதிகமாக அலைவதால் ஏற்படும் தலைவலி, ஒற்றை தலைவலி ஆகியவற்றுக்கு இந்த சுரைக்காயின் சதைப்பகுதியை துணியில் வைத்து கட்டியும், அதனை அரைத்தும் பயன்படுத்தலாம். மெலனின் குறைப்பாட்டினால் ஏற்படும் அல்புனிசம் பாதிப்பு உள்ளவர்களுக்கு (உடலில் ஆங்காங்கே வெள்ளையாக இருக்கும், சூரிய ஒளி பட்டால் எரிச்சல் ஏற்படும்) சுரைக்காயை அரைத்துத் தேய்த்து வந்தால், எரிச்சல் குணமாகும்.

    பொதுவாகச் சுரைக்காய் குளிர்ச்சி தன்மை வாய்ந்தது. இதனை, குளிர்காலத்தில் பயன்படுத்தும்போது சளிபிடிக்க வாய்ப்புள்ளது. எனவே, சுரைக்காயுடன் மல்லி, மிளகுத்தூள், உப்பு ஆகியவை கலந்து சாலட் செய்து சாப்பிடலாம்.

    சுரைக்காய் குடுவையில், தண்ணீரை சேமித்துவைத்துக் குடித்து வந்தால் அதிகப்படியாக ஏற்படும் தாகம் குறையும். அந்தத் தண்ணீரில் உள்ள வைட்டமின் சத்துக்களும் அதிகமாகும். இந்த நீரில் தேனை வைத்து பாதுகாத்தும் உண்டு வரலாம். இந்தச் சுரை ஓட்டினைச் சாப்பிட அல்லது உணவுப்பொருட்கள் வைக்கும் பாத்திரமாகவும் பயன்படுத்தலாம்.' என்கிறார்.

    இனி அனைவரின் வீட்டிலும் சுரைக்காய் சமையல்தானே?

    சுரை இலையும் சத்துதான்!




    சுரைக்காய் இலையுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து கூட்டு வைத்து சாப்பிட்டுவந்தால், நீர் பிணிகள் நீங்கும். உடலில் ஏற்படும் வீக்கங்களையும், நீரேற்ற பிணிகளையும் குறைக்கும். சிறந்த மலமிலக்கியாகவும், சிறுநீர் பெருக்கத்தைத் தூண்டக்கூடிய பொருளாகவும் செயல்படும்.

    இலையுடன் தண்ணீர் சேர்த்துக் கசாயம் தயாரித்து, தேவையான அளவு சர்க்கரை கலந்து சாப்பிட்டால், மஞ்சள் காமாலை சரியாகும்.

    இலைச்சாறுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவைத்து எண்ணெய் தயாரித்துக்கொள்ளலாம். காச நோயினால் ஏற்படக்கூடிய நிணநீர் கோள வீக்கம், அதிகமாகச் சளி பிடிக்கும் குழந்தைகளுக்குக் கழுத்துப் பகுதியில் ஏற்படக்கூடிய கண்டமாலைக் கட்டிகளுக்கு, இந்த எண்ணெயை வெளிப்புறமாகத் தடவி வந்தால், கட்டியின் வீக்கம் விரைவில் குறையும்.



    Attached Thumbnails Attached Thumbnails காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables-.jpg   காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables-2.jpg  
    Dangu likes this.

  5. #15
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    காலிஃப்ளவர் : இதயநோய்க்கு சிறந்தது

    காய்கறி இனத்தைச் சேர்ந்த காலிஃப்ளவர்

    ஒருவகையான பூ வகையைச் சேர்ந்தது. இதில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் மூலிகையாகவும் கருதலாம்.முட்டைக்கோஸும், காலிப்ளவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை.இது சாதாரணமாக வெள்ளையாகவோ, இளம் மஞ்சளாகவோ காணப்படும். காலிப்ளவரில் பொட்டாசியம், விட்டமின் B6 ஆகியவை உள்ளன. இதில் விட்டமின் C மிக அதிகமாக உள்ளது. ஒரு கப் நறுக்கிய பூவில் கலோரி 24, புரதம் 2 கிராம், மாச்சத்து 5 கிராம், விட்டமின் C 72 மில்லி கிராம், ஃபோலாசின் 66 மைக்ரோ கிராம், பொட்டாசியம் 355 மில்லி கிராம் அடங்கி உள்ளது.

    இந்தக் காய்கறியை அதிகமாக வேகவைக்க கூடாது. சத்துக்கள் கரைந்துவிடும். இதில் ஒருவித தாவர அமிலம் உள்ளது. வேகும் போது கந்தகக் கலவையாக மாறி வாசனை வருகிறது. அதிக நேரம் வேக வைத்தால் வாசனை அதிகமாகும். சத்தும் வீணாகும்.

    அலுமினியம், இரும்பு பாத்திரத்தில் வேக வைக்கக்கூடாது. இதிலுள்ள கந்தகக் கலவை அலுமினியத்துடன் சேர்ந்தால் பூ மஞ்சளாகிவிடும்.

    இரும்பு இதை மண்ணிறமாக்கி விடும்.
    காலிஃப்ளவரில் உள்ள விட்டமின் C யும், மக்னீசியமும் உடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகும். மேலும் ஊட்டச்சத்து அதிகம் கொண்ட காலிஃப்ளவரை, உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலை தாக்கும் புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் பல்வேறு தொற்று நோய் மற்றும் மன அழுத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.

    இதைத் தண்ணீரில் வேகவைப்பதை விட நீராவியில் வேகவைக்கலாம். விட்டமின் C சத்து அதிகரிக்கும். மேலும் காலிஃப்ளவர் கொழுப்பு சத்து இல்லாத காய்கறி. குறைந்த கலோரிகள் கொண்டது. இதனால் இதயநோய்க்கு இதமான காய்கறி இது.

    காலிப்ளவருக்கு புற்று நோயை தடுக்கும் சக்தி உள்ளது. பூ வேகும் போது Isothiocyantes என்னும் இரசாயனம் வெளிவருகிறது. இது உடலினுள் சென்று உடல் தானாக உற்பத்தி செய்யும் phase II என்ற புற்றுநோய் தடுக்கும் பொருளை அதிகமாக சுரக்கச் செய்கிறது.

    இது இடுப்பில் ஏற்படும் கருப்பு தழும்புகளைப் போக்கவல்லது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
    மேலும் இது நார்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறியாகும்.

    நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமானத்திற்கு உதவுகின்றது. ஒரு கப் காலிஃப்ளவருக்கு, சுமார் 3.35 அளவில் நார்சத்து உள்ளது. நார்சத்து உடலுக்கு மிகவும் தேவை. ஏனெனில் இவையே செரிமானத்தை சரி செய்கின்றது.

    எனவே காலிஃப்ளவரை உணவில் சேர்த்து, செரிமானத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
    காலிஃப்ளவர் குறைவான கலோரிகள் கொண்டது. ஒரு கப் காலிஃப்ளவரில் 28-52 அளவு கலோரிகளே உள்ளது.இதை உட்கொள்வதால் உடலில் அதிக அளவில் கொழுப்பு சேர்வதில்லை.

    மேலும் உடல் எடையையும் குறைத்துக் கொள்ள முடியும்.
    காலிஃப்ளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும், விட்டமின் K யும் நிறைந்துள்ளதால், இது உடலில் ஏற்படும் அழற்சியை நீக்குகின்றது. தினமும் இதை உணவில் சேர்த்துக் கொண்டால் கீல்வாதம், உடல் பருமன், நீரிழிவு நோய், அல்சரேட்டிவ் கொலிட்ஸ்(ulcerative colitis
    ) மற்றும் குடல் பிரச்சனைகள் போன்ற அழற்சித் தரும் நோய்களை தடுக்க முடியும்.

    காலிஃப்ளவரில் குளுக்கோசினோலேட் என அழைக்கப்படும் பைட்டோ சத்துக்கள் பெருமளவில் உள்ளதால், உடலின் நச்சுத் தன்மையை நீக்கி, புற்றுநோய் போன்ற நோய்கள் நெருங்காமல் பார்த்துக் கொள்கின்றது.

    அன்டி-ஒக்ஸிடண்ட் மற்றும் அழற்சி நீக்கும் காரணிகள் உள்ளதால், காலிஃப்ளவர் இதய நோய்களை தடுக்க உதவுகின்றது. இதில் அல்லிசின் அதிகமாக இருப்பதால், இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், பக்கவாதம் மற்றும் பல இதய கோளாறுகள் தீண்டாமல் காத்துக் கொள்ள முடியும்.

    காலிஃப்ளவரில் உள்ள பொட்டாசியம் சத்து, உடல் செயல்பாடுகளை சீராக்குவதுடன், நீர் அருந்துதலை அதிகப்படுத்தி, உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல், உடலை காக்க உதவுகின்றது.காலிஃப்ளவரிடம் இருக்கும் மற்றொரு ஆரோக்கியமான செய்தி என்னவென்றால், இதில் இருக்கும் போலேட்folate
    மற்றும் விட்டமின் B சத்துக்கள் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் நரம்பு குழாய் சம்பந்தப்பட்ட குறைபாடுகளை நீக்கி, குழந்தை ஆரோக்கியமாக பிறக்க உதவுகின்றது.

    காலிஃப்ளவரில் சல்போராபேன் மற்றும் இண்டோல்-3-காஃபினோல் போன்ற கலவைகள் இருப்பதால், இது புற்றுநோயை எதிர்க்கும் சக்தி கொண்டுள்ளது. அதிலும் கர்ப்பப்பை வாய்,பெருங்குடல், மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய்களை எதிர்த்து, ஆரோக்கியமாக வாழ வழி செய்கின்றது.



    Last edited by chan; 5th Feb 2015 at 08:17 PM.
    Dangu likes this.

  6. #16
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    முருங்கைக்காய் பயன் அறிந்து சாப்பிடுவோம் யாருக்கு நல்லது யாருக்கு நல்லதல்ல !!

    அனைவரும் விரும்பிச் சாப்பிடும் முருங்கைக்காயில் எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. ஆனால் நாம் அறிந்திருப்பதோ சில பயன்களை மட்டுமே. பயன்களை அறிந்து காய்கறிகளை சாப்பிடுவோமே பகுதியில் இன்று நாம் பார்க்க விருப்பது முருங்கைகாய்.

    முருங்கைகாய்.

    என்ன சத்துகள் இருக்கு: தினமும் முருங்கைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துகள். பொதுவாக முருங்கைக்காயில் கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து மற்றும் விட்டமின் ஏ, சி இருக்கிறதை தெரிந்துகொள்ள வேண்டும்..

    மேலும் புரதம் 2.5 கிராம், கார்போஹைட்ரேட் 3.7 கிராம்,தண்ணீர் 86.9%,
    கலோரி 26,ஃபைபர் 4.8 கிராம்,கொழுப்பு 0.1 கிராம்,விட்டமின் ஏ 0.11 மிகி,வைட்டமின் பி (கோலைன்) 423 மி.கி,வைட்டமின் பி 1 (தயாமின்) 0.05 மி.கி, விட்டமின் பி2 (ரிபோப்லாவின்) 0.07 மி.கி,வைட்டமின் பி3 (நிகோடினிக் அமிலம்) 0.2 மிகி,கால்சியம் 30 மில்லி கிராம்,மெக்னீசியம் 24 மில்லி கிராம் கொண்டுள்ளது.

    யாருக்கு நல்லது :

    குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும், மலச்சிக்கலால் அவதி படுபவர்கள், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சளி பிரச்சனை உள்ளவர்கள், ரத்தசோகை,வயிற்றில் புழு பிரச்சனை உள்ளவர்கள், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்கள் சாப்பிடலாம்.

    யாருக்கு நல்லதல்ல:


    முதியவர்கள், இதய நோயாளிகள், மூட்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. ஏனெனில் வாயுப் பிடிப்பை ஏற்படுத்தும்.

    பலன்கள்:

    நரம்பு மண்டலங்களுக்கு ஊக்கம் தரும். முருங்கைகாயை வாரத்தில் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் வயிறு வலி குணமாகும் மேலும் மூலம் தலைவலி, இரத்த நுகர்வு, சிறுநீர் நீர் சுத்திகரிப்பு, உடல், எரிவாயு பிரச்சினைகள் நீங்கும் உடலில் வெப்பநிலை அதிகம் கொண்டவர்கள் முருங்கைகாய் சாப்பிட்டு வந்தால் உயர் வெப்பநிலை குறையும்.

    கர்ப்பிணி பெண்கள் முருங்கைகாய கண்டிப்பாக சாப்பிட வேண்டும், ஏனெனில் பிரவசத்திற்கு முன்பும் பிரவசத்திற்கு பின்பும் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை முருங்கைகாய் நீக்குகிறது.

    பிரசவத்திற்கு பின்னர் முருங்கைகாய் சாப்பிடுவதன் மூலம் தாய்க்கு பால் அதிகரிக்கும். சளியைப் போக்கும். காய்கள் காய்ச்சலுக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானவை.




    Attached Thumbnails Attached Thumbnails காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables-images.jpg  
    kiruthividhya and Dangu like this.

  7. #17
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    பூசணிக்காயின் மகத்துவம்

    பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது. பல்வேறு மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

    காய்கறி வகைகளில் ஒன்றான இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். உடல் சூட்டைத் தணிக்கும், சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை

    அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும்.


    புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.


    மருத்துவத்தில் பூசணிக்காயின் நீர்விதை பயன்படுத்தப்படுகின்றது. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது


    ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்றவற்றை குணப்படுத்த வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.


    வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும், இரத்தசுத்தியாகும்.


    பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது இரத்தக்கசிவு ஏற்பட்டால் இரத்தக்கசிவை நிறுத்திவிடும்.


    பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும்.


    பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும். சிறுநீரில் ஏற்படும் இரத்தம், சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும்.


    பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டும்(தோல், பஞ்சுப் பகுதி நீக்கி) சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவேண்டும். வெந்தபின் இதை எடுத்து சாற்றைப் பிழிந்து நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2, 3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.


    பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும்.



    Dangu likes this.

  8. #18
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    செளசெள ஆச்சரியப்படுத்தும் உடல்நல நன்மைகள்

    செளசெள இதய நோயாளிகளுக்கு நல்லது, மற்றும் புற்றுநோய் வராமல் காக்கும்.செளசெள பொதுவாக ஒரு காய்கறி போன்றே தயார் செய்யப்படுகிறது என்றாலும், அது உண்மையில் ஒரு பழம் ஆகும். இதில் மிகவும் முறுமுறுப்பான சதைப்பற்று இருப்பதால் சமைத்தும் சாப்பிடலாம், பச்சையாகவும் சாப்பிடலாம்.

    1. இதயத்திற்கு நல்லது
    Homocystein ஒரு அமினோ அமிலம் ஆகும், இது இரத்தத்தில் அதிகமா இருந்தால் இதயநோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன, இப்படிப்பட்ட அமினோ அமிலம் வளர்வதை விட்டமின் B தடுக்கிறது. இந்த Folate எனப்படும் விட்டமின் B செளசெளவில் நிறைந்து இருக்கிறது.

    2.புற்றுநோயை தடுக்க உதவுகிறது(விட்டமின் C)
    விட்டமின் C, ஒரு சக்திவாய்ந்த ஆண்டி-ஆக்ஸிடெட்ஸ்(antioxidants) ஆகும். நம் உடலில் ஏற்படும் திசு சிதைவுகளை சரிசெய்யும் அது மற்றும் இன்றி இந்த ஆண்டி-ஆக்ஸிடெஸ் மெதுவாக அல்லது சாத்தியமான வகையில் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. செளசெளவில் விட்டமின் C (17%) ஒரு நல்ல மூலமாகும்.

    3. உடலின் ஆற்றல்/சக்தி உற்பத்தியை அதிகரிக்கும் (Manganese)
    செளசெள முட்டை போடிமாஸ்யை காலை உணவாக உண்ணுங்கள், நாள் முழுவதும் உங்கள் உடல் ஆற்றல் / சக்தியுடன் இருக்கும். இதில் மங்கனீசு உள்ளடக்கம் அதிகம் உள்ளதால் அந்த நாளில் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் புரதம் மற்றும் கொழுப்பை சக்தியாக மாற்றும்.

    4. மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது (Fiber)
    குடல்பகுதியை முறைப்படுத்தி ஊக்குவிக்க, உங்கள் உணவில் செளசெளவை தினமும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    5. தைராய்டு(thyroid) ஆரோக்கியமாக வைத்திருக்கும்(Copper)
    தைராய்டு வளர்சிதையை கட்டுப்படுத்த அயோடின், தாமிரம்(Copper) உதவுகிறது. அயோடின் என்பது தைராய்டு வளர்சிதை பரிணாமத்துடன் குறிப்பாக ஹார்மோன் உற்பத்தியில் மற்றும் உட்கிரகிப்பிற்கும் சம்பந்தப்பட்டு இருக்கும் ஒரு தாது.

    6. ஆண்மை அதிகரிக்க மற்றும் முகப்பரு தடுக்க உதவுகிறது (Zinc)
    செளசெள துத்தநாகம் ஒரு நல்ல மூலமாகும். தோல் எண்ணெய் உற்பத்தி கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை ஊக்குவிக்கும். ஆண்மை அதிகரிக்க மற்றும் மலட்டுத் தன்மையை போக்கும்.

    7. எலும்பு இழப்பு தடுக்க உதவுகிறது (Vitamin K)
    உங்கள் வீட்டில் இருக்கும் வயதானவர்களை செளசெள சாப்பிட சொல்லுங்கள், அதில் இயற்கை விட்டமின் K இருக்கிறது. விட்டமின் K மற்றும் எலும்பு இடையே ஒரு தொடர்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    8. இரத்தஅழுத்தம் குறைக்க உதவுகிறது (Potassium)
    செளசெள உங்கள் உடலின் தினசரி பொட்டாசியம் தேவையை பூர்த்தி செய்யும், இந்த தாது இரத்தஅழுத்த அளவுகளை குறைக்க உதவுகிறது.

    9. மூளை வளர்ச்சிக்கு நல்லது (Vitamin B6)
    ஆய்வின் பங்கேற்பாளர்கள் சில குறிப்பிட்ட வயதில் உள்ளவர்களுக்கு மூளை நினைவக திறனை ஊக்குவிக்கும் என்று நம்புகிறார்கள்

    10. கால் தசைப்பிடிப்புக்களை தடுக்க உதவுகிறது (Magnesium)
    ஒரு எலக்ட்ரோலைட் மற்றும் கனிமம் தசைப்பிடிப்பை தடுக்கும் உதவும்.


    Dangu likes this.

  9. #19
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    வெண்டைக்காயை மருந்தாகப் பயன்படுத்துவது எப்படி?

    3 முதல் 5 வரை எண்ணிக்கையிலான பசுமையான ‘வெண்டைக்காய்களைத் தேர்ந்து எடுத்து அவற்றை நன்றாக நீரிட்டுக் கழுவி எடுத்துக் கொண்டு அதன் மெல்லிய முனைப் பகுதியில் சிறிதளவும், அதன் அடிப்பகுதியில் சிறிதளம் துண்டித்துவிட்டு வெண்டைக்காய் ஒவ்வொன்றையும் நீளவாக்கில் இரு துண்டாக வெட்டி ஒரு பாத்திரத்தில் இட்டு 500மி.லிட்டர் நீர் விட்டு அடுப்பேற்றி சிறு தீயில் கொதிக்கவிட்டு 3-ல் 2 பங்கு நீர் வற்றியதும் இறக்கி வைத்து ஒரு பாத்திரத்தில் மூடி இரவு முழுவதும் விட்டுவிடவும்.

    காலையில் எழுந்ததும் அந்த காய்களைத் தின்று விட்டு நீரையும் குடித்து விடவும். இது ஒரு சிரமமான செயல்தான் என்றாலும் மூட்டு தேய்வு, மூட்டு வலி, வீக்கம் ஆகியவற்றினின்று விடுதலை கிடைக்கும்.

    சர்க்கரை நோயாளிகள் தினம் இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களை மேற்சொன்ன வகையில் சுத்திகரித்து குறுக்கே துண்டித்து ஒரு தம்ளர் நீரில் விட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

    காலையில் எழுந்து வெறும் வயிற்றில் நீரை மட்டும் தெரிவிறுத்திக் குடித்து விடவும். இப்படி அன்றாடம் குடித்து வரும் போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு நாளடைவில் குறைந்து விடும். இம்முறை புற்று நோய் உள்ளவர்ககளுக்குக் கூட ஒரு துணை மருந்தாக உதவும்.

    இதய நோய் உள்ளவர்கள், மாரடைப்பு என்ற துன்பத்துக்கு ஆளானவர்கள் வெண்டைக் காயை மேற்சொன்ன வகையில் உண்டுவர ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தை (சீரம் கொலஸ்ட்ரால்) குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்துக்கு துணை நிற்கிறது.

    வெண்டைக்காயை பிஞ்சுகளாகத் தேர்ந்தெடுத்து 150 கிராம் அளவுக்கு எடுத்து 700 மி.லி. நீர்விட்டு பாதி அளவாக சர்க்கரை அல்லது தேன் சேர்த்து 50 முதல் 70 மி.லி. வரை எடுத்து 4 மணி நேரத்துக்கு ஒருமுறை உள்ளுக்குக் கொடுக்க வெள்ளைப் போக்கு (ஆண், பெண் இருபாலர்களும்), இருமல், நீர்க்கடுப்பு வயிற்றுப்போக்கு ஆகியவை குணமாகும்.

    இரண்டு மூன்று வெண்டைக் காய்களைத் துண்டித்து 500 மி.லி. நீரில் இட்டு கொதிக்க வைத்து அதில் இருந்து வரும் ஆவியை சுவாசிக்க இருமல், தொண்டைப்புண், தொண்டைக் கம்மல், தொண்டைக்கட்டு, தொண்டை எரிச்சல் ஆகியன குணமாகும். தொடர்ந்து சில நாட்கள் செய்வது நல்லது.

    உடலில் எங்கேனும் புண்ணோ, வீக்கமும் வலியும் கொண்ட கட்டியோ இருந்தால் இளம் வெண்டைக் காய்களையாவது வெண்டைச் செடியின் இலையையாவது நன்றாக பசை போல அரைத்து புண்களின் மீதோ கட்டிகளின் மீதோ வைத்து கட்டி வர புண்கள் விரைவில் ஆறும். கட்டிகளும் சீக்கிரத்தில் பழுத்து உடைந்து உள்ளிருக்கும் முளை வெளிவந்து வேதனை தணியும்.

    இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களைத் துண்டு துண்டுகளாக நறுக்கி 200 மி.லி. நீரிலிட்டு நன்கு கொதிக்க விட்டு எடுத்து ஆறவிட்டு சிறிது சர்க்கரை சேர்த்து குடித்து வர வயிற்றை வலிக்கச் செய்து வெளியாகும் நினைக் கழிச்சல் பெருங்கழிச்சல், குருதிக் கழிச்சல் (ரத்த சீதபேதி) ஆகிய நோய்கள் குணமாகும்.

    இளம் கர்ப்பிணிப் பெண்கள் வெண்டைக்காயைத் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நரம்பு மண்டலக் கோளாறுகள் தவிர்க்கப்படும்.

    வெயில் மிகுந்த போது வெயிலின் தாக்கத்தால் மயக்க நிலை வருமோ என அஞ்சுபவர்கள் அல்லது ஏற்கனவே அதை அனுபவத்தில் கண்டவர்கள் இரண்டு மூன்று வெண்டைக்காய்களை நறுக்கி நீரிலிட்டு கொதிக்க வைத்து எடுத்து வடிகட்டி சர்க்கரை போதிய அளவு சேர்த்து குடித்து வருவதால் வெயிலின் தாக்கம் (சன்ஸ்ட்ரோக்) தணிக்கப்படும்.

    வெண்டைக்காயை நசுக்கி தலைக்குத் தேய்த்து வைத்திருந்து அரை மணிநேரம் கழித்து தலைக்குக் குளிக்க பொடுகு (டேன்ட்ரப்) குணமாகும். இத்துணை மருத்துவ குணங்கள் கொண்ட வெண்டைக்காயை உணவில் சேர்ப்பதன் மூலம் மருத்துவ செலவையும் குறைத்து ஆரோக்கியத்தையும் பெருக்கலாம்.



    Attached Thumbnails Attached Thumbnails காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables-.jpg  
    Dangu likes this.

  10. #20
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    மூளைக்கு முட்டை கோஸ்!

    முட்டைகோஸுக்கும் முட்டைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குதுங்களா?

    'மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுற மாதிரிதான் இது. முட்டை மாதிரி வெள்ளையா உருண்டு திரண்டு இருக்கறதால இப்படியரு பேரை வெச்சிருப்பாங்க'னு சொல்லிட்டு கமுக்கமாயிடாதீங்க...

    பெரியவங்க எதைச் செய்தாலும் அதுக்கு ஒரு காரணமிருக்கும்ங்கறதை நிரூபிக்கற விஷயங்கள்ல இந்த முட்டைகோஸும் ஒண்ணுனு சொல்லலாம். அட ஆமாங்க... முட்டையில் இருக்கற சத்துக்கள்ல பலவும் அப்படியே முட்டை கோஸுக்குள்ளும் இருக்குதுங்கோவ்!

    அதுமட்டுமில்லீங்க... மீனுக்குள்ள ஒமேகா-3னு ஒரு சத்து விஷயம் இருக்கு. இது மூளை வளர்ச்சியைத் தூண்டற சமாச்சாரம். இது அப்படியே முட்டைகோஸுக் குள்ளவும் சம்மணம் போட்டு உட்கார்ந்திருக்கு. ஆக, வெண்டைக்காய் மாதிரியே முட்டைகோஸும் மூளைக்கு தோழன்.

    சரி, அதோட வரலாறை கொஞ்சம் பார்ப்போம்...

    முட்டைகோஸ்... மனித இனத்துக்கு முதலில் அறிமுகமான காய்கறிகளில் ஒன்று. கி.மு. 200-ம் ஆண்டில் கிரேக்கர்களும், ரோமானியர்களும் முட்டைகோஸை பல்வேறு காரணங்களுக்கு பயன்படுத்தியிருப்பது வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.

    உணவு உண்பதற்கு முன்பாக முட்டைகோஸ் உண்ணும் பழக்கம் ரோமானியர்களிடம் இருந்திருக்கிறது. ரோமானிய அரசப் பிரதிநிதிகளின் ஒருவராக இருந்த கேட்டோ, 'முட்டைகோஸுக்கு பசியை தூண்டும் தன்மை உண்டு' என தன்னுடைய குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார்.

    நம்நாட்டில் 'குடிகார குப்பன்'களை போதையிலிருந்து தெளிய வைக்க எலுமிச்சை பழச்சாறு பயன்படுத்துவது வழக்கம். இந்த விஷயத்துக்கு எகிப்தில் கைகண்ட மருந்து... முட்டைகோஸ். அந்தக் காலத்தில், போதை ஆசாமிகளுக்கு முட்டைகோஸை சாப்பிடக் கொடுத்து தெளிய வைப்பார் களாம்.

    மாமிசம் போன்ற உணவுப் பொருட்கள் கெட்டுவிடாமல் இருக்க, முட்டைகோஸ் இலை களில் அவற்றைச் சுற்றி வைத்து பாதுகாக்கும் வழக்கம் செவ்விந் தியர்களிடம் இருந்திருக்கிறது. உலகில் முதன் முதலில் அடை யாளம் காணப்பட்ட மலை முட்டைகோஸ், சுமார் 15 முதல் 20 அங்குல அகலமுடைய பெரிய இலைகளை கொண்ட தாம். அது செவ்விந்தியர்களுக்கு வசதியாக இருந்திருக்கிறது.

    கி.பி. 5-ம் நூற்றாண்டு துவக்கத்தில் சீனா மற்றும் போலந்து ஆகிய நாடுகளை எட்டிப்பார்த்த முட்டைகோஸ், அங்கேயும் மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறது. எகிப்து, லெபனான் என்று 11-ம் நூற்றாண்டுக்குள் ஒரு வலம் வந்துவிட்டாலும், இந்திய மக்களுக்கு அறிமுகமானது என்னவோ 1794-ம் ஆண்டில்தான். முட்டைகோஸ் பற்றி பரவிக்கிடந்த தவறான தகவலே இந்த தாமதத்துக்குக் காரணம்.
    'முட்டைகோஸ் வெறுமனே இலைகளால் ஆன ஒரு காய். அதைச் சாப்பிடுவதால் உடலுக்கு எந்தவிதமான சத்தும் கிடைக்காது' என்கிற கருத்து உலக அளவில் பரவியிருந்தது. ஆனால், பெரும்பாலான நாட்டில் இதை நம்பாமல் கொஞ்சம் கொஞ்சமாக முட்டைகோஸை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். நம்மவர்கள் மட்டும் ரொம்பவே யோசித்து 18-ம் நூற்றாண்டில் தான் அதை பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.

    படுதாமதமாக இந்தியாவுக்கு வந்து சேர்ந்திருந்தாலும் இன்று உலகளவில் முட்டைகோஸ் உற்பத்தியில் முதலிடம் வகிப்பது நாம்தான். இமாச்சல பிரதேசம், தமிழகம் இங்கெல்லாம் முட்டைகோஸ் அதிகமாக பயிரிடப்படுகிறது.

    முட்டைகோஸில் உள்ள இரும்புச்சத்து வைட்டமின் பி1, பி2, பி3 மற்றும் டி ஆகியவை அதிகமாக உள்ளதால் குடல் புற்றுநோய்க்கு சிறந்த மருந்து என உலகளவில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய பிரிவு, 'மனிதனின் ஆரோக்கியமான வாழ்வுக்கு அவசியம் பயன்படுத்தப்பட வேண்டிய இருபது வகை காய்கறிகளில் முட்டைகோஸும் ஒன்று' என 1984-ம் ஆண்டு முதல் சிபாரிசு செய்து வருகிறது.

    இதைக் கேட்டதும் பாய்ந்தோடி முட்டைகோஸை ஒரு கை பார்த்துவிட மனது துடித்தாலும்... காலிஃபிளவரைப் போலவே, முட்டைகோஸும் சில இடங்களில் பூச்சி மருந்து கலந்த தண்ணீரில் முக்கியெடுத்தே மார்க்கெட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன என்பதுதான் ஆரோக்கிய வாழ்வை பயமுறுத்துகிறது.

    இயற்கை விவசாயத்தில் விளைந்த முட்டைகோஸ் பரவலாக கிடைக்கும்போது இந்த பயம் அற்றுப் போகக் கூடும்!
    நன்றி: விகடன்


    Attached Thumbnails Attached Thumbnails காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables-.jpg  
    Dangu likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter