Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree98Likes

காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables


Discussions on "காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #21
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    உடல் சோர்வு போக்கும் கத்தரிக்காய் மருத்துவம்

    கத்தரிக்காய் ஒரு மூலிகை என்பது பலருக்கு தெரியாது. எனவே தான் சித்தர்கள் மரியாதையுடன் பத்தியக் கறி என்று இதனை அழைக்கிறார்கள். நம் இலக்கியங்களில் இதுவே வழுதுணங்காய் என அழைக்கப்படுகிறது. ஆஸ்துமா, ஈரல் நோய், காசம் போன்ற தீவிரமான நோய்களுக்கு இலக்கானவர்களுக்கு வலிமை தரக்கூடியது இது. இதனை வற்றல்போல் செய்து நல்லெண்ணெயில் பொறித்து உண்டால் உடலுக்குத் தேவையான வெப்பசக்தி கிடைக்கும். தாது பலவீனமாகி, இல்வாழ்வில் உடல்சோர்வை போக்கும். ஈரல் வலிமை குன்றி இருந்தால், ஈரல் சோர்வைப் போக்கும்.

    கத்தரிப்பழத்தை ஊசியினால் குத்தி நல்லெண்ணெயில் வதக்கி மிளகுத்தூள், உப்பு தூவி உண்டால் பல் நோய்கள், அஜீரணம் நீங்கும். வாய்வுக் கோளாறு குறையும். பித்தம் போகும். மனிதர்களுக்கு மட்டுமின்றி, மாடுகளுக்கு வரும் வயிற்று வலி, வயிற்றுப்புழுக்கள், வயிறு உப்புசம் ஆகியவற்றுக்குக் கத்தரிக்காயைத் தணலில் சுட்டுச் சிறிது பெருங்காயம் கூட்டி மாடுகளுக்குக் கட்டினால், அந்நோய்கள் விலகும்.

    தோல் சம்பந்தப்பட்ட நோய் உடையவர்கள் மட்டும் கத்தரிக்காயைச் சேர்க்கக்கூடாது. தோல் நோய்க் காரணங்களை இது மிகுவிக்கும். மூர்த்தி சிறியதாயினும், கீர்த்தி பெரியது என்னும் பழமொழிக்குச் சரியான எடுத்துக்காட்டு கத்தரிக்காய். நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன.

    வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று. கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது. முற்றிய பெரிய காய்களைச் சாப்பிட்டால் உடம்பில் அரிப்பு ஏற்படும். குறிப்பாக, வீட்டிலே வளர்த்துப் பிஞ்சாகப் பறித்துச் சாப்பிட வேண்டிய காய்களுள் இதுவும் ஒன்றாகும்.

    முற்றிய காய்கள் உடல் வளர்ச்சிக்குப் பயன்படும். காரணம், இவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் இருக்கிறது. ஆனால், அளவாகத்தான் பயன்படுத்தவேண்டும். இதனால் கண்பார்வைத் திறனும் அதிகரிக்கும். உடலுக்கு சூடு தரும் காய்கறி இது. எனவே, மழை நேரத்தில் கூட இரவு நேரத்தில் உடல் கதகதப்பாய் இருக்கக் கத்தரிக்காய் குழம்பு சமைத்து உண்ணலாம்.

    கத்தரி வற்றலும் உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். நீர்க்கனத்தைக் குறைக்கும். உடல் பருமனைக் குறைக்கும். உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயைத் தவிர்ப்பது நல்லது. உடலுக்குச் சூடு தரும் காய் என்பதால் அரிப்பை உண்டு பண்ணிப் புண்கள் ஆற அதிக நாள் ஆகும். மற்றவர்கள் மருந்தைப்போல் கத்தரிக்காயை உணவில் சேர்த்து உடலுக்கு நன்மை பெற வேண்டும். இக்காய் இளம் பிஞ்சாய் இருந்தால், சமையலில் சேர்த்து நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் விரைந்து சிதைந்து சத்தாக உடலுக்குக் கிடைக்க இது பயன்படும். வீட்டில் நன்கு உரமிட்டு வளர்க்கப்படும் கத்தரிச்செடியில் உள்ள பிஞ்சு உடலுக்கு வளத்தையும் வலிமையையும் தவறாமல் தரும்.



    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables-1.jpg  
    Dangu likes this.

  2. #22
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    நீரிழிவு நோயால் அவதியா? கோவைக்காய் சாப்பிடுங்கள்

    சமையலுக்கு பயன்படுத்தும் கோவைக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.

    வெள்ளரிக்காய் குடும்பத்தை சேர்ந்த இவற்றின் தண்டு, கனிகள், இலைகள், வேர் என அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.

    கோவைக்காயின் பழங்கள் சிவப்பு நிறமுடையவை, இவற்றை உண்டால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும்.

    வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண்

    கோவைக்காய் சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகு, சீரகம், இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து உண்ண வேண்டும்.

    இதனை வாரம் இரண்டு நாள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும். பச்சையாகவே கோவைக்காயை மென்று உண்டால் வாய்ப்புண் ஆறிடும்.

    வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை உண்ணலாம். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.

    சரும நோய்க்கு மருந்தாகும்

    கோவை இலையானது இருமல், வாதநோய், பெருவிரணம், சிறு சிரங்கு, உடல் சூடு, நீரடைப்பு போன்றவற்றை நீக்கும்.

    கோவை இலையை கொதிக்கின்ற வெந்நீரில் போட்டு பதினைந்து நிமிடம் கழித்து வடிகட்டி கொடுக்க உடல்சூடு, சொறி சிரங்கு, நீரடைப்பு, இருமல் நீங்கும்.

    இலையை காயவைத்து பொடி செய்து, மருந்தாக கொடுத்தாலும் இந்த நோய்கள் நீங்கும்.

    கோவை இலையை எண்ணெயில் கொதிக்க வைத்து படை, சொறி, சிரங்கு போன்றவைக்கு பூசலாம் சருமநோய்கள் குணமாகும்.

    நீரிழிவு மற்றும் தோல் நோய்களுக்கு தீர்வு

    பண்டைய காலத்திலிருந்தே, கோவைக்காய் நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று.

    கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகள் அதிகம் ஏற்படுவதில்லை, நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.

    பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.

    கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும். மேலும் தோல்நோய்களை குணப்படுத்த உதவும்.

    கோவைக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் நல்ல மருந்தாகும்.

    கோவை இலைச் சாறு, பித்தம், மூல நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படும்.



    Dangu likes this.

  3. #23
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்,வெள்ளை வெங்காயம் : மருத்துவ குணங்கள்..!

    சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்,வெள்ளை வெங்காயம் - வாங்கலையோ...!

    வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது பலருக்கு தெரியும். அதேபோல வெள்ளை வெங்காயம் என்று ஒன்றும் இருக்கு.

    இவைகள் மருத்துவ குணம் நிறைந்தது… சின்ன வெங்காயம்தான்! ஜலதோஷம் வந்தாள் ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்று , வெந்நீர் குடித்தால் … ஜலதோஷம் குறையுறதோட தும்மலும் நின்றுவிடும். கூடவே… நீர்க்கடுப்பு, நீர்எரிச்சல் இதெல்லாமும் குணமாகும்.

    நெஞ்சு படபடப்பு வந்தாலும், சின்ன வெங்காயத்தை தின்னு வெந்நீர் குடித்தால் , உடம்பு சமநிலைக்கு வந்துடும். இதய நோயாளிகளுக்கு இப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்போது… முதலுதவி சிகிச்சையாக இதை செய்யலாம். பொடியாக நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் … ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.

    மூல நோயால் அவதிப்படுறவங்க சாப்பாட்டில் அதிகமாக சின்ன வெங்காயம் சேர்த்துக்கறது நல்லது. நீர்மோர்ல சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடித்தாலும் பலன் கிடைக்கும். வெளிமூலம் உள்ளவங்க, சின்ன வெங்காயத்தை வதக்கி, பிரச்னை உள்ள இடத்துல வைத்துகொண்டால் … பலன் கிடைக்கும் (வெள்ளை வெங்காயத்தை அப்பப்போ நல்லெண்ணய் விட்டு வதக்கிச் சாப்பிட்டாலும் மூல உபத்திரவம் குறையும்).

    பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல் என்று அவதிப்படுறவங்களுக்கும் சின்ன வெங்காயம் நல்ல பலன் தரும். சின்ன வெங்காயத்தை மையா அரைச்சுக்கோங்க. இதை, நாட்டுக்கோழி முட்டையோட வெள்ளைக்கருவுல சேர்த்து, ஆம்லெட்டுக்கு அடிக்கிற மாதிரி நல்லா அடிச்சுக்கணும்.

    இல்ல, மிக்ஸியில போட்டு ஒரு சுத்து சுத்தினாலும் சரி. இப்படி செய்றப்ப… ஷாம்பு மாதிரி பொங்கி வரும். அதை அப்படியே தலையில தேய்த்து, அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணியில குளிக்கணும். முட்டை நாத்தம் போகறதுக்கு, நல்ல சிகைக்காய் பவுடரை போட்டு தேய்த்து குளிக்கணும். வாரத்தில் ஒருநாள் வீதம், இரண்டு மாசத்துக்கு இப்படி செய்தால் … தலைமேல் பலன் கிடைக்கும்.

    தேள் கொட்டின இடத்தில் வெங்காயச்சாறை தேய்த்தால் விஷம் ஏறாது. தலை பகுதியில சொட்டை விழுந்து முடி முளைக்காமல் இருந்தாலும் சின்ன வெங்காயத்தை தேய்த்து வந்தால் … காலப்போக்கில் முடி முளைக்கும். ஆம்பளைங்களுக்கு மீசை பகுதியில இப்படி சொட்டை இருந்தாலும், இதே வைத்தியத்தை செய்யலாம்


    Dangu likes this.

  4. #24
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    முள்ளங்கியின் முத்தான நன்மைகள்
    இன்றைய காலகட்டத்தில் காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்ளாமல் துரித உணவுகளிலேயே மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    பிறகு வயிற்றில் பிரச்சனை, சிறுநீரக்கத்தில் கல் என தினந்தினம் மாத்திரைகளை சாப்பிடும் நிலை தான் ஏற்படுகிறது.

    ஆனால் ஆரோக்கியமாய் வாழ வேண்டும் என்றால் ஒரே வழி காய்கறிகள் தான், அதிலும் முள்ளங்கி சாப்பிடுவதால் நாம் ஆரோக்கியமாய் இருப்பது மட்டுமின்றி உடல்நலம் பற்றிய பயம் இல்லாமலும் வாழலாம்.

    முள்ளங்கியில் இரண்டு வகை உண்டு.

    1.சிகப்பு முள்ளங்கி
    2.வெள்ளை முள்ளங்கி.



    இதில் சிகப்பு முள்ளங்கியைப் பொறுத்தவரை, கிழங்கு, இலை, விதை மூன்றுமே மருத்துவக் குணமுள்ளவை.
    வெள்ளை முள்ளங்கி மருந்தாகவும், உணவாகவும் சாப்பிட ஏற்றது. மேலும் சுவைக்காக சேர்க்கப்படுவது.

    முள்ளங்கியின் மகத்துவங்கள்
    முள்ளங்கியை உணவில் அதிகம் சேர்ப்பதால், உடலில் தாதுபலம் அதிகரிக்கும்.

    சிறுநீரக்கத்தில் சேரும் கற்களைக் கரைத்து விடும்.

    நரம்புத் தளர்ச்சியைப் போக்கி உடலுக்கு அதிக சக்தியை கொடுக்கும்.
    முடி உதிர்வதைத் தடுத்து, நன்கு வளர்ச்சியடைய உதவும்.

    இரைப்பை வலி, வயிற்று வலி, வயிற்று எரிச்சல் ஏற்பட்டால் முள்ளங்கியைச் சாப்பிட்டால் குணமாகி விடும்.

    முள்ளங்கியை அவ்வப்போது சமைத்து உண்டுவந்தால், தொண்டை சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கி விடும், குரல் இனிமையாகும்.

    முள்ளங்கியைத் தட்டிச்சாறெடுத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கல் அடைப்பு வியாதி குணமாகிவிடும்.




    Dangu likes this.

  5. #25
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    தண்ணீர் முட்டான் கிழங்கு -Asparagus

    ஆஸ்பாரகஸ் கிழக்கு மத்தியதரைகடல் பகுதியை சார்ந்த நாடுகளில் மிக பிரபலமான மரக்கறி உணவு. சீனா தாய்லாந்திலும் அதிகமாக உண்ணபடுகின்றது. இப்போது நம்ம இந்தியாவிலும் கிடைக்கின்றது

    ஆஸ்பரகசில் மூன்று வகை உண்டு
    * பச்சை நிற வகை , இது பெருவாரியாக விளையும் வகை
    * பழுப்பு வெள்ளை நிற வகை, சற்றுசுவை குறைந்த தன்மையுள்ளது. ஜெர்மனியில் மிக பிரபலம், எந்த அளவுக்கு பிரபலம் என்றால் ஜெர்மனியின் பல பகுதிகளில் இந்த ஆஸ்பாரகஸ் அறுவடை செய்யப்படும் கிராமங்களில் திருவிழா நடத்தி அந்த ஊர் அழகிக்கு ASPARAGUS QUEEN என்ற பட்டமும் வழங்கப்படுகின்றது. திருவிழாவின்போது சிறந்த ஆஸ்பரகஸ் விளைவித்த விவசாயிகளுக்கும் பரிசும் கிடைக்கும்



    *கத்திரிபூ /ஊதா நிற ஆஸ்பாரகஸ். இது பழத்தின் சுவை கொண்டது
    செங்குத்தாக நிலையாக வளருவதால் இதற்கு ஸ்பியர்ஸ் /ஈட்டி என்ற பெயருமுண்டு

    அஸ்பாரகசில் உள்ள பல நன்மை தரும் சத்துக்கள்
    மாவுசத்து ——- 4.2 கிராம்
    நீர்ச்சத்து ——- 92 %
    கொழுப்பு ——–0.3 கிராம்
    புரதம் ——-2.6 கிராம்
    கலோரி ——–100 கிராம் அளவில் 24 கலோரிகள்
    அதிக அளவு இரும்புசத்து மற்றும் தாமிர சத்துக்கள் ஆஸ்பாரகசில் உண்டு .
    பொட்டாசியம், தையமின், போலிக் அமிலம், வைட்டமின் A, C, E, K, B6, RIBOFLAVIN ஆகியன இந்த மரக்கறியில் உள்ளன ..
    பார்வைக் குறைபாடுகள் வராமல் காக்கின்றது,

    நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுப்பொருள் .

    ஆஸ்பாரகஸ் எளிதில் சிறுநீர் பிரிவதற்கு உதவுகிறது.

    மேலும் உடலிலுள்ள நச்சுக்களை எளிதில் வெளியேற்றும்
    Detoxifyingஏஜெண்டாகவும் பயன்படுகிறது .

    உயர் இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்துகின்றது
    இரத்தத்தில் அமிலத்தன்மையை குறைக்கின்றது .

    இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கின்றது .

    சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க வல்லது.

    இருதய சம்பந்தமான நோய் அண்டாமல் காக்கின்றது.

    புற்றுநோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுப்பொருள் .

    இது ஒரு சிறந்த மலமிளக்கி ..இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்து ,உணவு ஜீரணமாவதற்கு உதவுகிறது .

    சமைக்கும் முன் மேற்புறத் தோலை சீவி எடுத்து பிறகு இதனை நீரில் வேக வைத்தோ ,அல்லது ஆவியில் வேகவைத்தும் மற்றும் பீன்ஸ் போன்ற காய்களை சமைப்பது போலவும் தயாரித்து உண்ணலாம் …
    குறைந்த நேரத்தில் சமைத்து விடலாம் .

    Last edited by chan; 3rd Mar 2015 at 01:32 PM.
    Dangu likes this.

  6. #26
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    மலட்டுத்தன்மை போக்கும் Asparagus-(தண்ணீர் முட்டான் கிழங்கு)

    பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் உயிர்வாழத்தேவையான உணவுகளை இயற்கை வழங்கியிருக்கிறது. நம் கண்ணெதிரே காணப்படும் செடி கொடிகள் கூட மூலிகைத் தன்மை உடையதாகவும், மருந்துப்பொருளாகும் பயன்படுகிறது. அந்த வகையில் தண்ணீர்முட்டான் கிழங்கு எனப்படும் மருத்துவ குணம் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இத்தாவரம் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மித வெப்ப மண்டல பகுதிகளைச் சார்ந்தது.

    இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. மெல்லிய ஆனால் கெட்டியான தண்டுடைய பல பருவச்செடி. இரண்டு மீட்டர் உயரம் வளரக்கூடியது. சதாவேரி, நீலிசெடி, அம்மைக்கொடி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. எகிப்திய கல்லறை சித்திரங்களின் அடிப்படையில் இத்தாவரம் கி.மு. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரியவந்துள்ளது. இது கசப்பானது, மலமிளக்கி, தூக்கத்தை தூண்டும்.

    இந்திய மருத்துவத்தில் குளிர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகிறது. பால் உணர்வு தூண்டுவி. வலுவேற்றி, தசை சுருக்கத்திற்கு எதிரான செயல்திறன் கொண்டதாக கருதப்படுகிறது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இத்தாவரத்தில் ஸ்டிராய்டல்,குளுக்கோசைட்டுகளான அஸ்பரகோசைடுகள், கசப்பு குளுக்கோசைடுகள்,அஸ்பராகைன் மற்றும் ஃபிளேவனாய்டுகள் காணப்படுகின்றன.

    சிறுநீர் நோய்களை குணமாக்கும் இத்தாவரம் சிறுநீர் போக்கினை தூண்டும். பலவிதமான சிறுநீர் கோளாறுகள் மற்றும் சிறுநீர்ப்பை குறைபாடுகளை குணப்படுத்த உதவுகிறது. மூட்டுக்களில் சேரும் கழிவுப் பொருட்களை சிறுநீர் மூலம் வெளியேற்றி கீழ் வாதத்தினைத் தீர்க்கும்.

    கி.பி முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க மருத்துவர் டயாஸ்கொரிடஸ் இத்தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் கசாயத்தின் மருத்துவ குணம் பற்றி குறிப்பிட்டுள்ளார். சிறுநீர்ப்போக்கினைச் சீர்படுத்தவும், சிறுநீரக கோளாறுகள், மஞ்சள்காமாலை மற்றும் தொடை நரம்பு வலி போக்கவும் இதனை சிபாரிசு செய்துள்ளார்.


    நரம்பு மண்டல நோய் இது தைலங்கள் தயாரித்தலில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இவை மூட்டுவலி, கழுத்து சுளுக்கு, நரம்பு மண்டல நோய்களை நீக்க பயன்படுத்தப்படுகிறது. குடல்வலி,வயிற்றுப்போக்கு மற்றும் பசியின்மை போன்றவற்றை போக்கவும் பயன்படுகிறது.

    வேர் கிழங்கு வெல்லப்பாகுடன் சேர்த்து இனிப்பாக தயாரிக்கப்படுகிறது. புதிய வேரின் சாறு தேனுடன் கலந்து சுகமளிக்கும் மருந்தாகிறது. பட்டை நச்சுத்தன்மை கொண்டது. மலட்டுத்தன்மை போக்கும் இத்தாவரத்தில் இருந்து பல வகையான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றுள் சதாவேரி கிரிதா, ஃபாலகிரிதா, நாராயணதைலம், விஷ்ணுதைலம்,பிரமேக மிகிர தைலம் ஆகியவை முக்கியமானவை. இத்தாவரத்தின் சாறுடன், வெண்ணெய், பால் ஆகியவை கலந்து கொதிக்க வைக்கப்பட்டு சதாவேரி கிருதா தயாரிக்கப்படுகிறது.

    இத்துடன் வால்மிளகு,தேன் மற்றும் சர்க்கரை சேர்த்து பால் உணர்வு தூண்டும் வலுவேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. சதாவேரி சாறுடன் வெண்ணெய், பசுவின் பால் ஆகியவற்றுடன் வேறுசில மருந்துகள் மிகச்சிறிய அளவில் கலந்து ஃபாலகிரிதா தயாரிக்கப்படுகிறது.

    இது விந்து சுரப்பினை அதிகரிக்கப்பயன்படுத்தப்படுகிறது. பெண்களின் மலட்டுத்தன்மையை நீக்கி பெண்குறி கோளாறுகளைப் போக்கவும் உதவுகிறது. பால்வினை நோயான கோனேரியாவுக்கு பாலுடன் கலந்து தரப்படுகிறது.



    Dangu likes this.

  7. #27
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    பெரிய’ பலன் தரும் சின்ன வெங்காயம்

    டாக்டர் ச.இளங்கோ, சித்த மருத்துவர், வேலூர்

    தினமும் சாப்பிடவேண்டிய காய்கறிகளில் சின்ன வெங்காயத்துக்குத்தான் முதல் இடம். ஆனால், உரிக்க சோம்பல்பட்டு பலரும் பெரிய வெங்காயத்தையே நாடுகின்றனர்.
    உணவில் ருசியைக் கூட்டி, வாசனையைச் சேர்க்கும் சின்ன வெங்காயம் அதிக மருத்துவக் குணங்களைக்கொண்டது.

    சின்ன வெங்காயத்தை 15 நாட்களுக்கு ஒருமுறை நெய் அல்லது எண்ணெயில் வதக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையுடன் இருக்கலாம்.

    உடல் சூட்டைக் குறைக்கவல்லது வெங்காயம். பழைய சாதத்தில் மோர் விட்டு, நான்கு சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சாப்பிடலாம். உடலின் வெப்பம் தணியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

    கணையத்துக்கு உள்ளே இருக்கும் செதிலில் பசை அல்லது அழுக்கு சூழப்பட்டு இருந்தால், இன்சுலின் சுரக்காது. இதனை இயல்பான நிலைக்கு மாற்றி சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க சின்ன வெங்காயம் உதவுகிறது.

    கல்லீரலில் இருக்கும் பித்தத் திரவம் அதிகமாக சுரந்தால், காமாலை வரும். இந்த பித்தத் திரவத்தை இயல்பான நிலையில் சுரக்கவைப்பது சின்ன வெங்காயம்.

    வயிற்றுப்புண், வெள்ளைப்படுதல், கண் நோய் போன்ற பாதிப்பிலிருந்து விடுபட, தினமும் உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பது அவசியம்.
    வடகம் கெட்டுவிடாமல் பதப்படுத்திப் பாதுகாக்க, சின்ன வெங்காயம் சேர்த்துத் தயாரித்தால் போதும்.

    அம்மை நோய் வராமல் தடுக்கவும் வந்தால் சீக்கிரம் குணமாகவும் சின்ன வெங்காயம் உதவுகிறது. ஆண் பிள்ளைகளுக்கு அம்மை வந்தால், அதன் பிறகு இனப்பெருக்க மண்டலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனைத் தடுக்க அம்மை ஏற்பட்ட நாளில் இருந்து மூன்று மாதங்கள் சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்துவந்தால் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.





    Dangu likes this.

  8. #28
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    உடல் எடையை குறைக்கும் கொத்தவரங்காய்

    கொத்தவரங்காய் சத்தான உணவு மட்டுமல்லாமல், பல நன்மைகளையும் அளிக்கிறது.

    1. கர்ப்பிணி பெண்கள் இதை உண்பதன் மூலம் அவர்களது குழந்தை கருவில் நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகிறது. பிறப்பினால் ஏற்படும் பிரச்சனைகளை இதன் மருத்துவ குணம் குறைக்கிறது. ஆகையால் இதை நிச்சயம் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்க வேண்டும்.

    2. கலோரி அளவுகளில் மிக குறைந்த உணவாக இருந்தாலும், வைட்டமின்களையும் மற்றும் தாதுக்களையும் அதிகமாக கொண்டிருக்கும் உணவு இது. ஆகையால் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதை ஒரு உணவாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    3. இரத்தச் சோகை இருப்பவர்கள் இதை சாப்பிடும் போது அதிக இரத்தம் சுரக்கும். இது இரத்த பற்றாக்குறையை நீக்கி உடலை நல்ல நிலைமைக்கு கொண்டு வருகிறது.

    4. இதில் உள்ள நார்ச்சத்து உடம்பில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றது.

    மேலும் அதிக அளவில் உள்ள புரதச்சத்துகள், கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள் மற்றும் கரையக் கூடிய நார்ச்சத்துகளை கொண்டிருப்பதால் கொத்தவரங்காய் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

    5. கொத்தவரங்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

    6. சருமப் பிரச்சனைகளுக்கு மிகுந்த உதவி செய்கிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சேதமடைந்த திசுக்களை சருமத்திலிருந்து நீக்க உதவுகின்றன. இதனால் கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை தடுக்கப்படும்.





    Dangu likes this.

  9. #29
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    மிளகாயின் மருத்துவ குணங்கள்

    மிளகாய் நாம் அன்றாடம் உணவுக்கு சுவை சேர்ப்பதற்காக காரத்தை தருவதற்காக என்றுதான் அறிந்திருப்போம். மிளகாயில் உணவுப் பொருள்களோடு உன்னதமான மருத்துவப் பயன்களும் அடங்கியுள்ளன என்பதைப் பலரும் அறிந்திருக்க மாட்டோம்.
    நாம் தெரிந்திராத மிளகாயின் வகைகள்: சாதாரண சமையல் மிளகாய், சிவப்பு மிளகாய், பச்சைமிளகாய், கொள்ளி மிளகாய், சீமை மிளகாய், காந்தாரி மிளகாய், சீனத்து மிளகாய், ஈரமிளகாய், சீமைபச்சை மிளகாய், ஊசி மிளகாய், ஈரமிளகாய், வெண்டுமிளகாய், குண்டு மிளகாய், கருங்குண்டு மிளகாய் என மிளகாயின் வகைகளை அகராதி கூறும்.

    இவற்றுள் ஊசி மிளகாயை மிகவும் உறைப்பான மிளகாய் என்றும் நாம் சூரிய கிரணத்தினை உட்கொள்ளும் என்றும் கருங்குண்டு மிளகாய் ஆகாயத்தை நோக்கிக் காய்த்து சூரிய கிரணத்தைப் புசிப்பதால் மிகவும் உறைப்பாய் இருக்கும் என்றும் தமிழ் மருத்துவ அகராதி தெரிவிக்கின்றது.

    மேற்கூறியவற்றுள் நாட்டு மிளகாய் மற்றும் பறவைக் கண் போன்ற உருவமுடைய சிறு மிளகாய் இரண்டுமே பெரும்பாலும் உணவுக்குப் பயன்படுகின்றன. அனைத்து மிளகாயின் இலைகளும் உணவாகப் பயன்படுகின்றன. மிளகாயின் இலையிலேயும் மருத்துவ குணங்கள் மலிந்துள்ளன. இலைகள் சற்று கசப்பு சுவையுடையவை. காயைப்போல உஷ்ணத் தன்மையைப் பெற்றவை அல்ல.

    * மிளகாயில் ஒரு பெரிய இரசாயனப்பொடி பட்டியலே அடங்கி இருக்கிறது எனலாம். இவை அத்தனையுமே நோய் எதிர்ப்பு சக்தியைக் தருவதாகவும் ஆரோக்கியத்தினை அதிகரிக்கச் செய்வதாகவும் உதவுகின்றன.

    * மிளகாயில் கேப்ஸைசின் என்னும் வேதிப்பொருள் மிகுந்துள்ளது. இதுவே மிளகாய் காரமானதாகவும் சுவாசத்தில் எரிச்சலூட்டும் தன்மை உடையதாகவும் இருக்கின்றது.

    * இந்த கேப்ஸைசின் என்னும் சத்து நுண்கிருமிகளை அழிக்க வல்லது எனவும் புண்களை உண்டாக்கி புற்றுநோய்க்கு ஏதுவாகும் கிருமிகளைத் தடுக்க வல்லதாகவும், வலியைப் போக்கக் கூடியதாகவும், சர்க்கரை நோய்க்கு எதிரானதாகவும் விளங்குகிறது என ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. மேலும் இது எல்.டி.எல் என்று குறிக்கப்பெறும் கெட்ட கொழுப்புசத்தைக் குறைக்கக் கூடியது என்றும் தெரிவிக்கின்றது. மிளகாயில் விட்டமின் சி சத்து அதிகமாக அடங்கியுள்ளது.

    விட்டமின் சி சத்து கொல்லாஜென் என்று சொல்லப்பெறும் உடல் ஆரோக்கியத்துக்குவேண்டிய மிக முக்கியமான ஓர் சத்துக்கு அடிப்படையாகத் திகழ்கிறது. திசுக்கள் ஆரோக்கியம் பெற்று இரத்த நாளங்கள், தோல் உட்சுரப்பிகள், எலும்புகள் ஆகியவை செம்மை பெற இந்த கொலாஜன் என்னும் சத்து உபயோகமாகின்றது.

    விட்டமின் சி செரிந்த உணவுப் பொருட்கள் தொற்று நோய்களைத் தடுத்து நிறுத்துகிறது. எலும்புகளுக்கு பலத்தை தருகிறது. உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை குறிப்பாக புற்று நோய்க்கு காரணமாய் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகின்றது. மிளகாயில் விட்டமின் ஏ, ஃப்ளேவனாய்ட்ஸ் அதாவது பீட்டா கரோட்டின் ஆல்ஃபா கரோட்டின் போன்றவற்றிற்கு லூட்டின் சியாசாந்தின் மற்றும் கிரிப்டோ சாந்தின் போன்ற புத்துணர்வு தரும் வேதிப் பொருட்களும் வெகுவாக உள்ளன.

    * காய்ந்த மிளகாய் வற்றலை நீரிலிட்டு கொதிக்கவைத்து குடிநீரிட்டு 2 அல்லது 3 வேளை உள்ளுக்குக் கொடுக்க மார்பு நோய், வயிற்று நோய், சீரணமின்மை, வயிற்றுப் போக்கு, காய்ச்சல், குமட்டல், வாந்தி ஆகியன குணமாகும்.

    * மிளகாயை அரைத்து பசையாக்கி துணியின் மேல் தடவி வீக்கம் கண்ட இடத்தின் மேல் பற்றாகப் போட்டு வைக்க அந்த இடத்தில் கொப்புளங்கள் தோன்றி நீர்வெளியேறி வீக்கம் குறைந்து போகும்.

    * மிளகாய் வற்றல் 2 அல்லது 3 எடுத்து பழைய மண் பாத்திரத்தில் இட்டு அதனுடன் சில துளிகள் நெய் விட்டு கருக்கி சுண்டைக்காய் அளவு கற்பூரம் சேர்த்து அதனுடன் 500மி.கி நீரும் சேர்த்து உடன் ஒரு கைப்பிடி அளவு நெற்பொரி சேர்த்து நன்கு காய்ச்சி இறக்கி வைத்துக் கொண்டு ஊழிப் பெருநோய் என்றும் காலரா என்றும் சொல்லப்படுகின்ற வாந்தியும் பேதியும் அடிக்கடி வந்து துன்புறுத்துகின்ற வேளையில் ஒரு அவுன்ஸ் அளவு உள்ளுக்குக் கொடுத்து வர விரைவில் அச்சுறுத்தும் வாந்திபேதி எனப்படும் காலரா நோய் குணப்படும்.

    * மிளகாய் வற்றலை மைபோல அரைத்து அடிப்பட்ட காயங்களின் மீது வைத்துக் கட்ட காயங்கள் சீழ் பிடிக்காமல் விரைவில் ஆறிவிடும். எரிச்சல் தருகின்ற துன்பத்தை சற்று பொருத்துக் கொண்டால் இம்மருத்துவ முறை வெகு விரைவில் குணம் தரக் கூடிய ஓர் முறை ஆகும்.

    * காய்ந்த மிளகாயை அரைத்து தொண்டை மேல் பூசி வைக்க தொண்டைக்குள் எழும்பி துன்பம் தருவதாய் இருக்கும் கட்டிகள் உடைந்து குணமாகும்.

    * நாட்பட்ட முதுகுவலி, பிடரி இசிவு என்கின்ற கழுத்து வலி, நாட்பட்ட வலி மற்றும் வீக்கங்கள் ஆகியவற்றுக்கு மிளகாயை பூண்டு மற்றும் மிளகோடு சேர்த்து அரைத்து தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயில் கலந்து பூச மேற்சொன்ன நோய்கள் அத்தனையும் விலகி ஓடும்.

    * மிளகாய் வற்றலுடன் பெருங்காயம், கற்பூரம் இரண்டையும் சேர்த்து எலுமிச்சை சாற்றால் அரைத்து சிறு சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் கொண்டு வாந்தி பேதி என்னும் ஊழிப் பெரு நோய்க்குக் கொடுக்க விரைவில் குணம் தரும்.

    * ஒரு மிளகாய் வற்றலோடு நீர் சேர்த்து தீநீராகக் காய்ச்சி எடுத்த நீரில் சிறிது இஞ்சிச் சாறு சேர்த்து உடலுக்கு தக்க அளவு கொடுக்க வயிற்றில் வாய்வு சேர்ந்து விளைந்த வயிற்று உப்புசம், கடுமையான வயிற்று வலி, செரியாமையால் ஏற்பட்ட மந்த நிலை அத்தனையும் மறைந்து போகும்.

    * மிளகாய் பொடியுடன் சர்க்கரை சமன் சேர்த்து வேலம் பிசின் தூள் சேர்த்து உருண்டையாக செய்து வைத்துக் கொண்டு (சுண்டை அளவு) தேவையான போது வாயிலிட்டுச் சுவைக்க தொண்டைக் கம்மல், தொண்டைக் கட்டு குணமாகும்.

    * சீமை மிளகாய், காந்தூரி மிளகாய், ஊசி மிளகாய் என்று சொல்லக் கூடிய சிறு மிளகாயை உள்ளுக்கு உபயோகப்படுத்துவதாலும், செரியாமை, மாந்தக் கழிச்சல், மார்பு நோய், கீல்வாதம் சூதக வலி என்னும் மாதவிடாய்க் காலவலி ஆகியன குணமாகும்.

    * 200 கிராம் மிளகாய் தூளோடு 100கிராம் மிளகுத் தூள் சேர்த்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக காய்ச்சி வடிகட்டி அத்துடன் பால், நல்லெண்ணெய் வகைக்கு அரை லிட்டர் சேர்த்து தைல பதமாகக் காய்ச்சி வாரம் ஒரு முறை தலை முழுகி வர அனைத்து விதான தலை வலிகளும் தீர்ந்து போகும்.

    * மிளகாயில் காரம் மிகுந்திருப்பினும் கனிவுடன் பல்வேறு நோய்களையும் அது போக்கவல்லது.

    ‘நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்’
    விஷ உணவுகளுக்கு விடை கொடுப்போம் !
    பாரம்பரிய உணவுகளுக்கு உயிர்கொடுப்போம் !!





  10. #30
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    பலன் தரும் பலாக்கொட்டை.

    நாம் தூக்கி எறியும் பழங்களின் தோல், கொட்டை ஆகியவற்றில் ஏராளமான அத்தியாவசிய சத்துக்கள் உள்ளதால், இவற்றை விதவிதமான உணவாக சமைத்து உண்பது நம் பாரம்பரிய வழக்கம். அசைவ உணவை போன்ற ருசியைத் தரும் காளான், சோயா மற்றும் பட்டர்பீன்ஸ் போன்றவை பெருமளவு விரும்பி உண்ணப்படுகின்றன.

    பழங்களைவிட ஒரு மரத்தையே உருவாக்கும் பழக்கொட்டையில் உளள மரபணு கூறுகள் நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகம் பெற்றிருப்பதுடன், செல்களை அழிவிலிருந்து காக்கும் ஆற்றலையும் உடையது. இவற்றை உண்பதற்கு ஏற்றவாறு ருசியாக சமைத்து சாப்பிட்டால் உணவே மருந்தாகும். அதுபோன்ற அற்புத ஆற்றல் தரும், ஆண்களின் வலிமையைப் பெருக்கும் தன்மை உள்ளதுதான் பலாக்கொட்டை.”அர்டோகார்பஸ் இன்டிகிரிபோலியா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட மொரேசியே குடும்பத்தைச் சார்ந்த பலாப்பழத்தின் கொட்டை மருத்துவ ரீதியாக உட்கொள்ள ஏற்றது.

    100 கிராம் பலாக்கொட்டையில் 135 கிலோ கலோரி சத்து உள்ளது. இவற்றில் உள்ள கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் ஏ, பி, சி போன்ற வைட்டமின்கள், கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற தனிமங்கள் உள்ளன. இவற்றில் காணப்படும் லிக்னான்கள், ஐசோபிளேவோன்கள், சப்போனின்கள் புற்றுநோய், செல் முதிர்ச்சி, செல் அழிவு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் தன்மை உடையவை. இவற்றிலுள்ள பிளேவனாய்டுகள், ஆர்டோகார்பெசின் மற்றும் நார்ஆர்டோ கார்பெடின் போன்றவை வீக்கத்தைக் கரைக்கக்கூடியவை. அதிக ரத்த அழுத்தம் மற்றும் குடற்புண்களை ஆற்றும் தன்மையும் பலாக்கொட்டைக்கு உண்டு. இவற்றை நன்கு வேகவைத்து உருளைக் கிழங்கிற்கு பதில் உட்கொள்ளலாம்.

    பலாக்கொட்டையை வறுத்தோ, வேகவைத்தோ உட்கொள்ளலாம். விதைகளை நன்கு உலர்த்தி, மைய அரைத்து, கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தியாகவோ, ரொட்டியாகவோ செய்தும் சாப்பிடலாம்.

    தோலுரித்து கழுவி, ஒன்றிரண்டாக இடித்த

    பலாக்கொட்டை-10, பட்டர்பீன்ஸ்-20,
    உருளைக்கிழங்கு-1, பச்சைப்பயறு-100 கிராம் ஆகியவற்றை நீரில் ஊறவைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ள வேண்டும்.

    தேங்காய், மிளகாய்தூள், மஞ்சள்தூள், பூண்டு, புளிச்சாறு ஆகியவற்றை நீர்விட்டு மைய அரைத்து, வெந்த பலாக்கொட்டை கலவையுடன் சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்கவைத்து, கறிவேப்பிலை, கடுகு, மிளகாய் சேர்த்து தாளித்து குழம்பு பதத்தில் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

    இதனை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட உடலுக்கு வலிமையும் குளிர்ச்சியும் உண்டாகும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும். பலம் உண்டாகும். பலாக்கொட்டையை மட்டும் தனியாக அதிகம் உட்கொண்டால் உஷ்ணம் அதிகரித்து, மார்பு மற்றும் வயிற்றில் கடும் வலி, முதுகுப்பிடிப்பு ஏற்படும் என சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே இதனை உணவாக சமைத்து உட்கொள்வதே நல்லது.






loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter