Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree98Likes

காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables


Discussions on "காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #31
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    பச்சைப்பட்டாணி

    பச்சைப் பட்டாணியில் உடலுக்குத் தேவையான சத்துகளை கொடுக்கக்கூடிய phytonutrients, தாதுச்சத்துகள், விட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகியவை அடங்கியுள்ளன.

    பீன்ஸ், தட்டைப்பயறு ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது பட்டாணியில் கலோரிகள் குறைவு. 100 கிராம் பட்டாணியில் 81 கிலோ கலோரிகள் உள்ளன. கொலஸ்ட்ரால் இல்லை. புரதம் நிறைந்தது. கரையும், கரையாத தன்மையுள்ள நார்ச்சத்து உள்ளது.

    பட்டாணியில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. கலங்களுக்கு உள்ளே டி.என்.ஏ. தொகுப்பு இயக்கம் சீராக நடைபெற ஃபோலேட்ஸ் என்கிற Bகாம்ப்ளக்ஸ் விட்டமின்கள் அவசியம்.

    ஃபோலேட் அதிகம் உள்ள உணவை கர்ப்பிணிகள் தேவைக்கேற்ப எடுத்துக் கொண்டால், பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்பு மண்டலக் குறைபாடுகள் வராது. பட்டாணியில் நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான விட்டமின் C நிறைய உள்ளது.

    பட்டாணியில் உள்ள பைட்டோஸ்டெரால்ஸ் (Phytosterols), உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

    இதில் உள்ள விட்டமின் K, எலும்புகளுக்கு தேவையான கல்சியத்தை கொடுக்கிறது.

    இதில் விட்டமின் A சரியான விகிதத்தில் அடங்கியிருப்பதால், சளிச் சவ்வுப் படலத்தின் ஆரோக்கியத்துக்கும் சரும ஆரோக்கியத்துக்கும் தெளிவான பார்வைக்கும் உதவுகிறது.

    பான்டோதெனிக் அமிலம், நியாசின், தயாமின் மற்றும் பைரிடாக்சின் ஆகிய B காம்ப்ளக்ஸ் விட்டமின்களையும் கல்சியம், இரும்புச் சத்து, தாமிரச் சத்து, துத்தநாகச் சத்து மற்றும் மங்கனீஸ் சத்துகளையும் உள்ளடக்கியது பட்டாணி. முளை கட்டிய பட்டாணி இன்னும் சத்தானது. தினமும் சிறிய அளவில் பட்டாணியை நமது உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தரும்.




    Sponsored Links
    Last edited by chan; 11th Mar 2015 at 12:02 PM.
    saidevi likes this.

  2. #32
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் குட மிளகாய்

    சைனீஸ் உணவுகளில் ருசிக்கும், அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் சேர்க்கப்படும் இந்த காய்கறி வகைக்கு இப்போது இந்தியாவிலும்வரவேற்பு மிக அதிகம். இப்போது இந்திய பாரம்பரிய உணவுகளிலும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிறங்களில் கலந்து காணப்படுகிறது. பொதுவாகவே உணவு என்றாலே உப்பு, காரம், புளிப்பு போன்ற சுவையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    காரத்திற்காக பச்சை மிளகாய் சேர்க்கப்படுவதுண்டு. அந்த அளவுக்கு காரமற்றது குடைமிளகாய் என்றாலும், கலர் கலராய் உணவுகளுக்கு அழகூட்டுவது குடைமிளகாயின் சிறப்புத் தன்மை. குடை மிளகாயின் பூர்வீகம் அமெரிக்க நாடுகள். இப்போது இந்தியாவில் அமோகமாக விளைச்சல் செய்யப்படுகிறது.

    இதற்கு ஒரு பொதுப் பெயர் இல்லை. நாட்டிற்கு நாடு இதன் பெயர் மாறுபடுகிறது. இங்கிலாந்தில் சில்லி பெப்பர் என்றும், அமெரிக்கா மற்றும் கனடாவில் பெல் பெப்பர் என்றும், ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய நாடுகளில் காப்சிகம் என்றும் அழைக்கிறார்கள். சுவீட் பெப்பர் என்றும் அழைப்பதுண்டு.

    இதில் இருக்கும் காரத்தன்மைக்கு காரணம், காப்ஸேயில் என்ற ரசாயனம். காரத்தன்மையின் பத்து சதவீதம் குடை மிளகாயின் விதையிலும், தோலின் வெளிப்பகுதியிலும் அடங்கியிருக்கிறது. மீதமுள்ள 90 சதவீத காரத்தன்மை உள்தோல், மத்திய பகுதி, விதையை உற்பத்தி செய்யும் திசுக்கள் அடங்கியுள்ள பகுதிகளில் உள்ளது.

    குடை மிளகாயை உணவில் சேர்ப்பது பல விதங்களில் நமக்கு பலன் அளிக்கிறது. வாதம் தொடர்புடைய நோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவைகளுக்கு எதிராக அது செயல்படுகிறது. கீமோதெரபி, ரேடியோ தெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது வாய்ப்புண் தோன்றும், அவைகளை குடைமிளகாய் கட்டுப்படுத்தும்.

    பல்வலி, மலேரியா, மஞ்சள்காமாலை போன்றவை களை கட்டுப்படுத்தும் சக்தியும் இதில் இருக்கிறது. ப்ராஸ்டேட் புற்று நோயை உருவாக்கும் திசுக்களின் செயல்பாட்டை மந்தமாக்கும் சக்தி கொண்டது என்பது ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

    கொலஸ்ட்ராலையும், சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்துகிறது. உடலில் ஏற்படும் நீர்க்கட்டை குறைக்கும் தன்மையும் கொண்டது. குடைமிளகாயில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைய உள்ளது.
    இவை இரண்டும் சக்திமிக்க ஆன்டி ஆக்சிடென்ட்களாக செயல்பட்டு, உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

    குடைமிளகாய் மஞ்சள், சிவப்பு, பச்சை போன்ற நிறங்களில் அதிகமாக கிடைக்கிறது. பச்சையாகவோ, பாதி வெந்த நிலையிலோ இதை சாப்பிட்டால்தான் கூடுதல் சத்து உடலுக்கு கிடைக்கும்.

    100 கிராம் குடை மிளகாயில் இருக்கும் சத்து:
    புரோட்டின் 0.99 கிராம்.
    சக்தி 31 கலோரி.
    சோடியம் 4 மி.கிராம்.
    கொலஸ்ட்ரால் இல்லை.
    கொழுப்பு 0.3 மி.கிராம்.
    தாதுச் சத்து 6.02 மி.கிராம்.
    பொட்டாசியம் 211 மி.கிராம்.
    மெக்னீசியம் 12 மி.கிராம்.
    வைட்டமின் ஏ 3131 ஐ.யூ.
    வைட்டமின் சி 127.7 மி.கிராம்.
    கால்சியம் 7 மி.கிராம்.
    இரும்பு 0.43 மி.கிராம்.




  3. #33
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    வாழைப்பூ
    மருத்துவக் குணமும் மகத்தான மணமும் கொண்டது வாழைப்பூ. ஆனாலும், அது சமையலில் அரிதாகவே இடம்பெறுகிற ஒன்றாக இருக்கிறது. வாழைப்பூவை சமைக்கத் தெரியாதவர்கள் ஒரு பக்கம் என்றால், வாழைப்பூவை ஆய்ந்து, சுத்தப்படுத்தி சமைப்பதற்கு அலுத்துக் கொண்டு அதைத் தவிர்ப்பவர்கள் இன்னொரு பக்கம். அறியாமையையும் அலுப்பையும் தவிர்த்து வாழைப்பூவை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்கிறவர்களின் வீடுகளில் ஆரோக்கியம் தாண்டவமாடும் என்பதில் சந்தேகமில்லை. வாழைப்பூவின் குணநலன்களை விளக்குவதோடு, அதை வைத்து சூப்பர் உணவுகளையும் செய்து காட்டுகிறார் சஞ்சீவனம் ஆயுர்வேத தெரபி மையத்தின் மருத்துவ அதிகாரி விஜயகுமார்.




    ‘‘நமது உணவில் காய்கறிகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்திய உணவு வகைகளில் எப்போதுமே காய்கறிகள் ஒரு பகுதியாவது இடம்பெறுகின்றன. பெரும்பாலும் நமது உணவில் ஒன்றுக்கும் மேற்பட்ட காய்கள் இடம்பெறுகின்றன. காய்கள் சேர்ந்த உணவுக் கலவை அல்லது தொட்டுக்கொள்ளும் ஒரு உணவாக காய்கறி இடம்பெறுகிறது. சில காய்கறிகள் பொதுவாக நமது உணவில் வழக்கமாக தினசரி இடம் பெறுகின்றன. சில காய்கறிகள் பொதுவாக சமைக்கப்படுவதே கிடையாது.

    வாழைப்பூ, பெரும்பாலான வீடுகளில் விரும்பப்படும் உணவாகும். இருப்பினும் மற்ற காய்கறிகளான கேரட், முட்டை கோஸ், பீட்ரூட், பாகற்காய் உள்ளிட்ட காய்களைப் போல இது பயன்படுத்தப்படுவதில்லை. வாழைப்பூவில் என்ன சமைப்பது என்று பலருக்குத் தெரியாததுதான் காரணமாகும். சமையல் பயன்பாட்டுக்கு அப்பால், உணவு வகைகள் சிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்டதாகவும் திகழ்கின்றன. வாழைப்பூவில் சில உணவு வகைகள் தயாரிக்கத் தெரிந்து கொள்வதற்கு முன்பாக வாழைப்பூவில் உள்ள உடலுக்கு நன்மை தரும் விஷயங்களை தெரிந்து கொள்வோம்.

    ஆயுர்வேத மருத்துவத்தில் பல காய்கறிகள் பற்றிய குறிப்புகள் இருந்தாலும், அவற்றில் முதன்மையானதாக ‘கதளி’ எனப்படும் வாழைப்பூ முக்கிய இடம் பிடித்துள்ளது. இதில் உள்ள நன்மை தரும் விஷயங்களால் இதை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. வாழைப்பூவில் அதிக காரம் மற்றும் மசாலா பொருட்கள் சேர்க்காமல் சமைத்துச் சாப்பிடுவது மிகவும் பயனளிக்கக் கூடியது.

    குளிர்ச்சி தரும்... நார்ச்சத்து நிறைந்தது! வாழைப்பூ சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். ஆயுர்வேதத்தில் இது ‘பித்த சம்ஹா’ (உடலில் பித்தத்தைத் தணிக்கும் குணம் கொண்டது) எனப்படுகிறது. இதை உரிய வகையில் சமைத்து சாப்பிடும்போது உஷ்ணத்தால் ஏற்படும் பலவித நோய்களை - அதாவது, சிறுநீர் சார்ந்த நோய்கள், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் உள்ளிட்டவற்றைக் குணப்படுத்த உதவுகிறது.

    வாழைப்பூவில் அதிக நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. கொழுப்புச் சத்து குறைவாக இருப்பதால் ஆரோக்கியமான உடல் எடை அதிகரிப்புக்கு உதவுகிறது. மருந்து தயாரிப்பில் வாழைப்பூ ஆயுர்வேத மருத்துவ தயாரிப்புகளில் குறிப்பாக கதளி கல்ப ரசாயனம் தயாரிக்க - அதாவது, பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பமேகம், மாதவிடாய் பிரச்னைகள் குணமாக பரிந்துரைக்கப்படுகிறது. இது உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டிய பொருளாகும். ‘கடல்யாடி கிரிதம்’ எனப்படும் சிறப்பு எண்ணெய் தயாரிப்பில் வாழைப்பூ பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது.

    இந்த எண்ணெய் சர்க்கரை நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் நோய்களைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. பெண்களுக்கு நல்லது
    கெட்டித் தயிருடன் சேர்த்து எடுக்கப்பட்ட வாழைப்பூ ஜூஸ் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் பிடிப்புகளுக்கு நிவாரணமாகும். அத்துடன் அப்போது ஏற்படும் அதிகபட்ச உதிரப் போக்கைக் கட்டுப்படுத்தவும் பரிந்துரைக்கப்படுகிறது. மகளிர் சார்ந்த பல்வேறு உடல் உபாதைகளுக்கு மிகச்சிறந்த தீர்வாக வாழைப்பூ இருப்பதால், பெண்கள் இதை தங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவு நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவாக வாழைப்பூ கருதப்படுகிறது. சர்க்கரை நோய் மற்றும் அதனால் ஏற்படும் குடல் புண், சிறுநீர் பிரச்னைகளுக்கு இது மிகச் சிறந்த நிவாரணம் அளிக்கக்கூடியது. வேகவைத்த வாழைப்பூ பொரியல் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவாகும். இதில் உள்ள ஹைபோகிளைசிமிக் எனும் ரசாயனம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்தது. வாழைப்பூ சூப் சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

    அத்துடன் வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கும் ஏற்றது. சில எச்சரிக்கைகள் வாழைப்பூ வீட்டில் சமைக்கப்பட்டதாக இருத்தல் அவசியம். ஒருவேளை இது ஒரு உணவாக இருந்தால், ஏற்கனவே தயாரிக்கப்பட்டு அதை சாப்பிட்டு நல்ல வரவேற்பைப் பெற்றதாக இருக்க வேண்டும். அதேபோல எந்த உணவும் அளவோடு சாப்பிட்டால்தான் அதன் முழுப் பலனும் கிடைக்கும். அந்த விஷயத்தில் காய்கறிகளையும் அளவோடு சாப்பிட வேண்டும். உடலுக்கு நல்லது என்று பரிந்துரை செய்துவிட்டார் டாக்டர் என்பதற்காக அதை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது கூடாது.

    எப்படித் தேர்ந்தெடுப்பது?


    வாழைப்பூ புதிதாக மலர்ச்சியுடன் இயற்கை தன்மை கெடாமல் இருக்க வேண்டும். வெளிப்பகுதி மிகவும் வழவழப்பாக இருத்தல் வேண்டும். தோலிலிருந்து வாழைப்பூ இதழ்களை எடுப்பது சிரமமாக இருத்தல் கூடாது. உள்புற இதழ்கள் நன்கு மூடியிருந்தால் அது சிறந்த வாழைப்பூவாகும்.

    வாழைப்பூ தோரண்


    என்னென்ன தேவை?


    வாழைப்பூ - 6,
    தேங்காய் - 250 கிராம்,
    பச்சை மிளகாய் - 20 கிராம்,
    மஞ்சள் தூள் - 10 கிராம்,
    சீரகம் - 20 கிராம்,
    தேங்காய் எண்ணெய் - 25 மி.லி., கறிவேப்பிலை - 5 கிராம்,
    உப்பு - தேவையான அளவு.

    எப்படிச் செய்வது?


    வாழைப்பூவை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பிறகு அத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடிப்பாகம் செம்பிலான பாத்திரத்தில் (காப்பர் பாட்டம்) நன்கு வேகவைத்து மூடி வைக்கவும் இத்துடன் சிறிதளவு மஞ்சள் தூள், கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைத்து ஆற விடவும்.
    தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை கொர கொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    இந்த கலவையை வேகவைத்த வாழைப்பூவுடன் சேர்த்து கலக்கவும்.பிறகு அதன்மீது சிறிதளவு தேங்காய் எண்ணெயை மணத்துக்காக ஊற்றவும். (அடுப்பில் இருந்து இறக்கி பிறகு). மகளிர் சார்ந்த பல்வேறு உடல் உபாதைகளுக்கு மிகச் சிறந்த தீர்வாக வாழைப்பூ இருப்பதால், பெண்கள் இதை தங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    வாழைப்பூ கட்லெட்


    என்னென்ன தேவை?

    ஆய்ந்து சுத்தம் செய்து நறுக்கிய வாழைப்பூ - 100 கிராம்,
    உருளைக்கிழங்கு - 50 கிராம்,
    வெங்காயம் - 50 கிராம்,
    பச்சை மிளகாய் - 10 கிராம்,
    இஞ்சி - 10 கிராம், பிரெட் தூள் - 5 கிராம்,
    உப்பு - தேவையான அளவு,
    கரம் மசாலா - 2 கிராம்,
    மிளகுத்தூள் - 5 கிராம்,
    நல்லெண்ணெய் - 20 மி.லி.,
    சீரகத் தூள் - 10 கிராம், மஞ்சள் தூள் - 2 கிராம்,
    கறிவேப்பிலை - அரைக் கைப்பிடி அளவு,
    கொத்தமல்லி - சிறிது.

    எப்படிச் செய்வது?

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும் அதில் மிளகாய், வெங்காயம், மஞ்சள் தூள், இஞ்சி, சீரகத் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து, உப்பு, வாழைப்பூவை சேர்க்கவும். இத்துடன் வேகவைத்திருந்த உருளைக்கிழங்கை மசித்துப்போடவும். இந்த கலவையை நன்கு கிளறி உருண்டைகளாக செய்து அதை பிரெட் தூளில் தோய்த்துக் கொள்ளவும்.

    பிறகு இதை கனமானதாக தட்டி அதை நான் ஸ்டிக் கல்லில் இருபுறமும் சிவக்கும்படி பொரிக்கவும். பிறகு இதன் மீது கொத்தமல்லி இலை தூவி, புதினா சட்னி
    அல்லது தக்காளி சாஸுடன் சாப்பிட பரிமாறவும்.

    வாழைப்பூ இலை அடை

    என்னென்ன தேவை?


    அடை தயாரிக்க...


    கோதுமை மாவு - 150 கிராம்,
    எண்ணெய் - 5 கிராம்,
    உப்பு - தேவையான அளவு,
    தண்ணீர் - 150 மி.லி.

    பூரணத்துக்கு...

    வாழைப்பூ - 300 கிராம்,
    வெங்காயம் - 50 கிராம்,
    பச்சை மிளகாய் - 10 கிராம்,
    இஞ்சி - 5 கிராம்,
    மஞ்சள் தூள் - 5 கிராம்,
    கொத்தமல்லி தூள் - 5 கிராம், நல்லெண்ணெய் - 10 மி.லி.,
    உப்பு - தேவையான அளவு.

    எப்படிச் செய்வது?

    கோதுமை மாவுடன் உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும் அதில் பச்சை மிளகாய், வெங்காயம், மஞ்சள் தூள், இஞ்சி, கொத்தமல்லி தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். அத்துடன் உப்பு, நறுக்கிய வாழைப்பூவை சேர்த்து வதக்கி பூர்ணம் தயாரிக்கவும். அடை தயாரிக்க பிசைந்த கோதுமை மாவை சரி பகுதிகளாக பிரித்து வைக்கவும். கோதுமை மாவை வாழை இலையில் தட்டவும். அத்துடன் பூரணத்தை சேர்த்து பாதியாக மூடவும். இதை 20 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும். சூடாக இலையுடன் பரிமாறவும்.

    வாழைப்பூவில் அதிக காரம் மற்றும் மசாலா பொருட்கள் சேர்க்காமல் சமைத்துச் சாப்பிடுவது மிகவும் பயனளிக்கக் கூடியது.


    Last edited by chan; 21st Mar 2015 at 03:12 PM.

  4. #34
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    சர்க்கரை வள்ளிக்கிழங்கு இதயத்துக்கு நல்லது!

    சர்க்கரை வள்ளிக்கிழங்கு, இதய நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அதை ஒரு உணவாக மட்டுமே சுவைத்து பழகியவர்களுக்கு, இந்த தகவல் பயன் உள்ளது தான்.

    பெயருக்கு ஏற்ப இனிப்பு சுவை உள்ள கிழங்கு இது. இந்த கிழங்கை சாதாரணமாக தண்ணீரில் கொஞ்சம் உப்பு போட்டு வேக வைத்து, தோலை மட்டும் உரித்து அப்படியே சாப்பிடலாம். மிகவும் தித்திப்பாக இருக்கும். பசி தாங்க கூடியது. பல சத்துக்களும், மருத்துவ குணமும் அதில் உள்ளது. பொதுவாக மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகள், வாயு தொல்லை தரக்கூடியது என்ற கருத்து உள்ளது.

    ஒரு வகையில் அது உண்மை என்றாலும், எல்லா கிழங்குகளும் அவ்வாறு வாயு தொல்லையை தருவதில்லை. சிலரின் உடல் வாகைப் பொறுத்து, இப்பிரச்னை வருவதுண்டு. ஆனால், சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அப்பிரச்னை இல்லை. அனைத்து வயதினரும் சாப்பிடலாம். இதயத்தின் செயல்பாட்டிற்கு மிகவும் நல்லது. இதில் நிறைய ஸ்டார்ச் சத்தும், நோய் எதிர்ப்பும் உள்ளது. மாவுச்சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கில், நிறைய ஊட்டச்சத்து உள்ளது. 100 கிராம் கிழங்கில், 70 முதல், 90 கலோரி ஆற்றல் கிடைக்கும்.

    மிக குறைந்த அளவே கொழுப்பு உள்ளது. இதில், நிறைய நார்ச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தி, வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன. மாவுச்சத்தில் கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளாக இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாக உயர்த்தும்.

    எனவே நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த அளவு உண்ணலாம். மற்ற கிழங்கு வகைகளை விட இதில், அதிக அளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளன. இவை இயற்கை நோய் எதிர்ப்பு கொண்டதாகும்.

    உடலில் வைட்டமின் ஏ ஆக மாறி, தேக ஆரோக்கியம் மற்றும் தோல் நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு உதவும். நுரையீரல் மற்றும் தொண்டை புற்று நோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது. இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற,
    உடலுக்கு அவசியமான தாது உப்புக்களும் உள்ளன.

    இவை புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்களின் வளர்ச்சிதை மாற்றத்தில் பங்கெடுக்கும். நொதிகளின் செயல்பாட்டிற்கும் உதவும். கிழங்கை விட அதன் இலைகள், அதிக ஊட்டச்சத்து நிறைந்தது.

    100 கிராம் புதிய இலைகளில் அதிக அளவில் இரும்பு சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், சோடியம், போரேட் ஆகியவை அடங்கி உள்ளன. சக்கரை வள்ளிக்கிழங்கை மாதத்தில் இரண்டு அல்லது மூன்று முறை உணவாக கொள்ளலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.



    Attached Thumbnails Attached Thumbnails காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables-e_1426494401.jpeg  

  5. #35
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    காளான்

    நூறு சதவிகித அசைவ உணவுப் பழக்கமுள்ளவராக இருந்த சிலர், திடீரென சில பல காரணங்களுக்காக சைவத்துக்கு மாறலாம். அசைவம் வேண்டாமென மனசு சொன்னாலும் நாக்கு கேட்காது. சைவம் சாப்பிடத் தயார்... ஆனால், அசைவ மணமோ ருசியோ இருந்தால் போதும் என்கிறவர்களும் உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு காளான் சரியான சாய்ஸ். காளான் சேர்த்துத் தயாரான உணவுகளுக்கு நட்சத்திர ஓட்டல் அந்தஸ்தே உண்டு. விலையும் எக்கச்சக்கம். அதனால், மிகச் சுலபமாக அவற்றை வீட்டிலேயே வளர்த்து, அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    காளானின் மகத்துவங்களைப் பற்றிய தகவல்களுடன், அதை வைத்துத் தயாரிக்கக் கூடிய 3 சுவையான உணவுகளையும் செய்து காட்டுகிறார் சமையல்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத்.காளான் என்கிற போதே பலரும் அசைவ உணவா என சந்தேகம் கொள்கின்றனர். இது 100% சைவ உணவு. மழைக்காலத்தில் அங்கங்கு முளைப்பது நாய்க்குடை எனப்படும் பூஞ்சைக் காளான். நாம் இதை உட்கொள்ளக் கூடாது. உலகில் நூற்றுக்கணக்கான காளான் வகைகள் உள்ளன. எல்லாவற்றையும் உட்கொள்ள இயலாது.

    சமையலுக்கு என்று தனியாக வளர்த்து கடைகளில் விற்பதை மட்டுமே உபயோகிக்க வேண்டும். தமிழ்நாட்டில் மொட்டுக் காளான் (Button Mushrooms) மற்றும் சிப்பிக் காளான் (Shell Mushrooms) என இரண்டு வகை மட்டுமே கிடைக்கின்றன. இதனுடைய வடிவத்திற்கேற்பவே பெயரும் அமைந்தது.

    காளான்களுக்கு அதிக முக்கியத்துவம் வந்ததற்கு காரணம் இதில் உள்ள மிகக்குறைவான கலோரிகள். சிறந்த புரதச் சத்தைக் கொண்டது. குறைவான கொழுப்பு உடையது. அதுவும் உடலுக்கு நன்மை தரும் கொழுப்பு கொண்டதால், எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உண்ண நினைக்கும் உணவு.

    காளான் எளிதில் ஜீரணமாகக் கூடியது. சமைப்பதற்கு மிகக்குறைவான நேரம்தான் ஆகும். இதில் அதிகமான பொட்டாசியமும் குறைவான சோடியமும் உள்ளதால் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்ல உணவாகக் கருதப்படுகிறது. புரதம் அதிகமாகவும் நார்ச்சத்தும் உள்ளதால் நீரிழிவு உள்ளவர்களும் இதைப் பயன்படுத்தலாம்.

    இதில் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களில் பாந்தியானிக் ஆசிட், பி2, பி3, பி6 மற்றும் ஃபோலிக் ஆசிட் ஆகியன உள்ளன. மினரல்களில் காப்பர் அதிக அளவு உள்ளது. பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் ஒரே உணவில் இத்தனை இருப்பது அரிது. இதைத் தவிர கேன்சர் வராமல் பாதுகாக்கக்கூடிய சக்தி இதில் உண்டு என்பது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

    காளானை வாங்கியதும் எத்தனை நாள் வரை வைத்திருக்கலாம்?குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் 3 நாட்கள் வைத்திருந்து உபயோகப்படுத்தலாம். ஃப்ரீஸரில் வைக்கக் கூடாது. பிசுபிசுப்பாக மாறினால் உபயோகப்படுத்தக் கூடாது. கவரைத் திறந்து பாதியை உபயோகப்படுத்தி மீதியை வைத்தால் கருத்து விடும்.

    காளானை எப்படிக் கழுவுவது?

    காளான் அதிகத் தண்ணீரை சீக்கிரம் உறிஞ்சும் தன்மை உடையது. ஒரு அகலப் பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக் கொண்டு சீக்கிரமாக அலசி எடுக்கவும். இரண்டாம் தடவை தண்ணீரில் சிறிது எலுமிச்சைச்சாறு பிழிந்து அதில் அலசி எடுத்தால் சீக்கிரம் நிறம் மாறாது. அலசிய பின் ஒரு துணியின் மீது பரப்பி அதிகப்படியான ஈரம் உறிஞ்சப்பட்டபின் தேவைக்கேற்ப வெட்டவும். இப்படிச் செய்யாவிடில் வதக்கும் போது தண்ணீர் விட்டுக் கொள்ளும். வதங்குவதற்குப் பதில் வேகுமென்பதால் ரப்பர் போன்ற தன்மை வரும் வாய்ப்புகள் உள்ளன.

    காளானை எப்படி சமைப்பது?
    பொதுவாக இதை தண்ணீர் விட்டு வேக வைத்தால் அவ்வளவு ருசியாக இருக்காது. சீக்கிரமே வதங்கும் தன்மை உள்ளதால் சிறிதே எண்ணெய் விட்டு வதக்கினாலே போதுமானது.

    காளானை உபயோகப்படுத்தி என்னென்ன உணவுகளை சமைக்கலாம்?
    சூப், பொரியல், குழம்பு, மசாலா, குருமா, பிரியாணி, சாண்ட்விச்சின் மத்தியில் வைக்கும் மசாலா, சாப்ஸ் மசாலா, கட்லெட், பக்கோடா, மஞ்சூரியன் வகை உலர் மசாலா, ஊறுகாய், ஸ்டஃப்டு சப்பாத்தி, ஆம்லெட்டுடன் கலந்து மசாலா ஆம்லெட் செய்ய என பலவகை உணவுகளை மிக ருசியாக சமைக்கலாம். காளான் அசைவ உணவு உண்பவர்களுக்கு கிட்டத்தட்ட அதன் ருசியை ஒத்து வருவதால் மிகுந்த விருப்பத்துக்குரியது. சைவ உணவு உண்பவர்களுக்கும் இதன் சுவை மிகவும் பிடிக்கும். செய்யும் பக்குவம்தான் முக்கியம்.


    காளான் பக்கோடா
    மிக ருசியாக இருக்கும். செய்வதும் மிக எளிது. கட்டாயம் உங்களுக்கு பாராட்டும் கிடைக்கும்!

    என்னென்ன தேவை?

    மொட்டுக் காளான்/சிப்பிக் காளான் - தேவைக்கேற்ப,
    பிரெட் - 6 ஸ்லைஸ்,
    கடலை மாவு - 1 கப்,
    அரிசி மாவு 1/2 கப்,
    மிளகாய் தூள் - தேவைக்கேற்ப,
    பச்சை மிளகாய் - 2,
    இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
    உடைத்த முந்திரி - 10,
    சோம்பு - 1/2 டீஸ்பூன்,
    பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2,
    எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப,
    நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
    சமையல் சோடா - 2 சிட்டிகை.

    எப்படிச் செய்வது?

    காளானை கழுவிய பின் பொடியாக நறுக்கவும். பிரெட்டை பிய்த்து மிக்ஸியில் போட்டு பொடி செய்யவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
    1 டேபிள்ஸ்பூன் நெய்யை ஒரு அகலக் கிண்ணத்தில் போட்டு, 2 சிட்டிகை சமையல் சோடா போட்டு தேய்க்கவும். அதோடு மாவு வகைகள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து விரல்களால் பிசறி விடவும். அதோடு கூறியுள்ள மற்ற பொருட்கள் சேர்த்து கலந்து விடவும். சிறிதே தண்ணீர் தெளித்து, சூடான எண்ணெயில் பக்கோடா போல கரகரப்பாக பொரித்தெடுக்கவும். மிக ருசியாக இருக்கும்.

    மஷ்ரூம் மசாலா தோசை
    இட்லி மாவு அல்லது தோசை மாவை உபயோகப்படுத்தி இந்த மசாலா தோசை செய்யலாம். இந்த மசாலாவை சைனீஸ் முறைப்படி செய்தால் குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள்.

    என்னென்ன தேவை?

    காளான் - 1 பாக்கெட்,
    பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
    குடை மிளகாய் - 1,
    அஜினோமோட்டோ- சிறிது,
    உப்பு, மிளகுத் தூள்- தேவைக்கேற்ப,
    செஷ்வன் சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் - தேவைக்கு.

    எப்படிச் செய்வது?


    காளானைக் கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். சிறிது எண்ணெயை கடாயில் ஊற்றி சூடாக்கவும். நறுக்கிய வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து வதக்கவும். வதக்கும் போது அஜினோமோட்டோ தூவலாம். அதோடு காளானையும் சேர்த்து நல்ல தணலில் ஈரம் வற்றும் வரை வதக்கி உப்பு, மிளகுத்தூள், செஷ்வன் சாஸ் கலந்து இறக்கவும். (செஷ்வன் சாஸ் இல்லாவிடில் 4 நீள மிளகாயை தண்ணீரில் ஊற வைத்து 3 பல்லு பூண்டுடன் அரைத்துச் சேர்க்கலாம்.) தோசையை மெலிதாக ஊற்றி வெந்ததும் இந்த மசாலாவை தோசை முழுவதும் பரப்பி விருப்பப்பட்டால் சிறிது துருவிய சீஸ் தூவி முக்கோணமாக மடித்து பரிமாறவும்.


    ஆரோக்கிய ரெசிபி பாலக் சேமியா காளான்

    என்னென்ன தேவை?

    காளான் - தேவைக்கேற்ப,
    வெங்காயம் - 2,
    பச்சை மிளகாய் - 3,
    பூண்டு - 5 பல்,
    பாலக் கீரை - 1 கட்டு,
    வறுத்த சேமியா - 2 கப்,
    தக்காளி சாஸ், மிளகுத் தூள், கரம் மசாலாத் தூள் - சிறிது,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.

    எப்படிச் செய்வது?

    காளானை அலசிக் கழுவி துணியின் மீது பரப்பி சிறிது நேரம் கழித்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டவும். பூண்டை பொடியாக நறுக்கவும். பாலக் கீரையைக் கழுவி மெலிதாக நறுக்கவும். 2 கப் வறுத்த மெல்லிய சேமியாவுக்கு 3 கப் தண்ணீர் தேவை.

    ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டு, பச்சை மிளகாய், வதக்கி நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் நிறம் மாறியதும் அரிந்த காளான் சேர்த்து நன்கு சுருங்கும் வரை வதக்கவும். அதோடு நறுக்கிய கீரை சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கியதும் அளந்த தண்ணீர் ஊற்றி உப்பு சேர்க்கவும்.

    கொதிக்கும் போது சேமியா சேர்த்து கலந்து மூடி வைக்கவும். தணலைக் குறைத்து வைக்கவும். ஈரம் வற்றியதும் கரம் மசாலாத் தூள் தூவி, மிளகுத் தூள், தக்காளி சாஸ் சேர்த்து கலந்து சூடாகப் பரிமாறவும்.



    Last edited by chan; 24th Mar 2015 at 04:09 PM.

  6. #36
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    காய்கறியில் என்ன இருக்கு?



    வாழைத் தண்டு: கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுக்கள், வைட்டமின் பி, சி ஆகியவை உள்ளன. இது சிறுநீர் பாதையில் கல் அடைப்பு இருந்தால் கரைக்க உதவும்.

    வாழைப்பூ: கால்ஷியம், பாஸ்பரஸ், புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி உள்ளன. மலச்சிக்கலை போக்க உதவும்.

    வாழைக்காய்: இரும்புச் சத்து, போலிக் ஆசிட், வைட்டமின் ஏ, பி, சி உள்ளன. கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ரத்தசோகையைத் தடுக்க உதவும்.

    பீட்ரூட்: இதில் துத்தநாகம், கால்ஷியம், சோடியம், பொட்டாஷியம் ஆகியவை உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும். உடல் வளர்ச்சிக்கு ஏற்றது.

    உருளைக்கிழங்கு: இதில் மாவுச்சத்து அதிகமாக உள்ளது. வைட்டமின் ஏ, சி மற்றும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன.

    பாகற்காய்: இந்த காயில் வைட்டமின் சி, ஏ, பி, பாஸ்பரஸ், கால்ஷியம் உள்ளன. இந்த காயை சாப்பிடுவதன் மூலம் பசி அதிகரிக்கும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும்.

    கேரட்: இதில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. குழந்தைகளின் உணவில் அதிகமாக சேர்த்தால், பிற்காலத்தில் பார்வை கோளாறு எதுவும் வராது. மாலைக்கண் நோயை கட்டுப்படுத்தவும் உதவும்.

    கத்தரிக்காய்: பாஸ்பரஸ், போலிக் ஆசிட், வைட்டமின் பி, சி உள்ளன. ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

    வெண்டைக்காய்: போலிக் ஆசிட், கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து உள்ளது. மூளை வளர்ச்சிக்கு உதவும், குழந்தைகள் விரும்பி சாப்பிடும். தினமும் வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கில் புலி ஆகலாம்.

    பீன்ஸ்: புரதச்சத்து, கால்ஷியம், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, பி, சி உள்ளன. எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.

    புடலங்காய்: வைட்டமின் ஏ, பி, இரும்புச் சத்து, தாமிரம், கால்ஷியம் உள்ளன. எலும்பு உறுதிக்கு இதை சாப்பிடலாம்.

    அவரைக்காய்: புரதச்சத்து, நார்ச்சத்து உள்ளன, உடல் வளர்ச்சி பெறும், மலச்சிக்கலை போக்கும்.

    முருங்கைக்காய்: வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளன. ஆண்களுக்கு விந்து அதிகரிக்க உதவும், பெண்களுக்கு உதிரப் போக்கை கட்டுப்படுத்தும்.

    வெங்காயம்: இரும்புச்சத்து, கால்ஷியம் உள்ளன. தினமும் சாப்பாட்டில் வெங்காயம் சேர்த்தால், உடல் கொழுப்பை கரைக்க உதவும்.

    சுண்டைக்காய்: புரதச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ ஆகியவை உள்ளன. எலும்புகளுக்கு வலு சேர்க்கவும், ரத்தசோகை வராமல் தடுக்கவும் உதவும்.

    கருணைக் கிழங்கு: கால்ஷியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி ஆகியவை உள்ளன. இதை சாப்பிட்டால், உடல் வளர்ச்சிக்கு நல்லது. மூல நோய் வராமல் தடுக்கவும், மூலத்தை கட்டுப்படுத்தவும் உதவும்.

    தக்காளி: வைட்டமின், ஏ, பி, சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. உடல் உறுதிக்கும், ரத்தவிருத்திக்கும் உதவும்.

    Jothimalar likes this.

  7. #37
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    கண்டிப்பாக சாப்பிட வேண்டிய காய்கறிகள் என்னென்ன?






    அன்றாடம் வாழ்வில் காய்கறிகளை சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியமான வாழ்வு நிச்சயம்.
    அவ்வாறு காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளும் நாம் அதன் பயன்களை அறிந்துகொள்வது நல்லது.

    வாழைக்காய்
    இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது, மலச்சிக்கலை தீர்க்கும்.

    மாங்காய்
    மாங்காயில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ உள்ளது. சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இது சூட்டைக் கிளப்பும்.
    மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும். செரிமானத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும், பசியைத் தூண்டும்.

    பாகற்காய்
    பாகற்காயில் பாலிபெப்டுடைட் எனும் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் வேதிப்பொருள் நிறைந்துள்ளது.
    சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் சிறந்த உணவாகும்.
    வேறு அலோபதி மருந்துகள் சாப்பிடும்போது இதனை சாப்பிடக்கூடாது. மருந்தின் தன்மையை முறியடிக்கும், அடிக்கடி சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும்.
    தொற்று நோய்களை தடுத்து கிருமிகளை அழிக்கும், வயிற்றில் பூச்சிகள் சேராமல் தடுக்கும்.
    பூசணிக்காய்
    பூசணிக்காயில் புரதம், கொழுப்பு உள்ளது, ஆஸ்துமா, தலைவலி, சைனஸ் நோயாளிகள், உடல் பருமனானவர்கள் இதனை சாப்பிடக் கூடாது.
    குழந்தைகளுக்கும், மூலச்சூடு நோய் உள்ளவர்களுக்கு மிகமிக நல்லது.
    நரம்புகளுக்கு வலுவூட்டும், வயிற்றுப் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது.

    காரட்
    வைட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், தாது உப்புகள், மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள் இவற்றில் உள்ளன.
    குழந்தை பேறு இல்லாதவர்கள் அதிகம் சேர்க்க வேண்டாம். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது.
    கண் பார்வைக்கு உகந்தது, காரட் சாறுடன் பத்து மிளகு சேர்த்து சாப்பிட்டுவர உடல் கழிவுகள் வெளியேறும்.

    காலிஃபிளவர்
    காலிஃபிளவரில் பொட்டாசியம், சோடியம், இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம், விட்டமின் ஏ, இ உள்ளன.
    புற்றுநோயால் அவதிப்படுபவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை அளித்து புற்றுநோய் வளர்ச்சியை கட்டுப்படுத்தும்.
    மலச்சிக்கலை போக்கி உடலை இளைக்கச் செய்யும்.

    சுண்டைக்காய்
    வைட்டமின் சி அதிகம் உள்ளது, சிறுவர்கள் வாரம் இருமுறை சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி சேராது. ஆஸ்துமா நோயாளிகள் தினசரி சாப்பிட மூச்சுத்திணறல் குறையும்.
    கர்ப்பிணிப் பெண்கள் மாதம் ஒருநாள் சாப்பிடலாம்.
    கிருமிகள், வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும். நுரையீரலுக்கு செயல்திறன் தரும், சளியைக் கரைக்கும் தன்மை கொண்டவை



    Last edited by chan; 30th Mar 2015 at 08:30 PM.

  8. #38
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    வெள்ளரிக்காய்

    பசியோடு இருப்பவருக்கு வயிற்றை நிரப்பும். பசியே இல்லாதவருக்கு பசியைத் தூண்டும். தேவைக்கேற்ப இரண்டாகவும் செயல்படுகிற குளுகுளு காய் வெள்ளரி. பருமன் பிரச்னை, நீரிழிவு என நோய் பாதித்த வர்களுக்கும், சரும அழகையும் இளமையையும் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிற அழகுப் பிரியர்களுக்கும் முதல் சாய்ஸ் வெள்ளரிக்காய். ‘சமைக்க வேண்டாம்... அப்படியே சாப்பிடலாம்’ என்பது இதன் சிறப்பாக இருந்தாலும், வெள்ளரிக்காயை முழுமையாக சமைத்தும் உண்ண முடியும் என்பது பலரும் அறியாத சேதி.

    வில்லங்கமே இல்லாத வெள்ளரிக்காயின் அற்புதப் பலன்களைப் பற்றிப் பேசுவதுடன், அதை வைத்துச் செய்கிற சுவையான 3 ரெசிபி களையும் செய்து காட்டுகிறார் டயட்டீஷியன் ஷைனி எஸ்தர்.

    ‘‘வெள்ளரிக்காயை பெரும்பாலும் பச்சையாகவே உண்ணுவார்கள். இதை சாலட், ரைத்தா மற்றும் குழம்புகளில் சேர்த்துக்கொள்ளலாம். வெள்ளரிக்காய் ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய காய். இதன் விதை குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. வெள்ளரிக்காயில் இதய நோய் மற்றும் புற்றுநோய் அபாயம் வரும் வாய்ப்புகளை குறைக்கும் தன்மை உள்ளது என்று வலுவான ஆராய்ச்சி செய்யப்பட்டிருக்கிறது. வெள்ளரிக்காய் உடல் சூட்டை உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் குறைக்கும் திறன் கொண்டது. இதில் உள்ள நீர் உள்ளடக்கம் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும்.

    வெள்ளரிக்காயில் Cucurbitacins என்னும் தாவர ஊட்டச்சத்துகள் உள்ளன. சிறுநீரக கற்களைக் கரைக்கும் திறன் கொண்டது வெள்ளரிக்காய். மற்ற காய்களுக்கு தரும் முக்கியத்துவத்தை யாரும் வெள்ளரியின் நன்மைகளுக்கு தருவ தில்லை. இதில் தனித்தன்மையான ஊட்டச்சத்து கலவை உள்ளது. வெள்ளரிக்காயின் தாவர ஊட்டச்சத்தின் பட்டியலில் Cucurbitacins, Lignans மற்றும் Flavonoids ஆகியன முதல் இடத்தில் உள்ளன. இந்த மூன்று தாவர ஊட்டச்சத்துகள் ஆன்ட்டிஆக்ஸிடன்ட் (Antioxidant), Antiinflam matory மற்றும் Anticancer திறன் கொண்டவை.

    ஊட்டச்சத்துகள் நிறைந்த வெள்ளரிக்காய்வெள்ளரிக்காய் குறைந்த கலோரிகள் கொண்டது. இதில் பொட்டாசியம் அதிகம். பொட்டாசியம் உடலுக்கு மிகவும் தேவையானது. இது இதயத்துக்கு நன்மை செய்யக்கூடியதுமான எலெக்ட்ரோலைட். இதனால் இது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். பீட்டா கரோட்டின் (Beta Carotene), வைட்டமின் A, C, Zeaxanthin, லியுடின் (leutin) ஆகிய சத்துகளையும் கொண்டது. இதில் எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவையான அளவுக்கு வைட்டமின் ரி உள்ளது. அல்சீமர் நோய் உள்ளவர்களுக்கு மூளையில் ஏற்படும் நரம்பு சேதத்தைக் குறைக்கும்.

    ஆரோக்கிய நலன்கள்

    உடல் குளிர்ச்சி: வெள்ளரிக்காயில் 95% தண்ணீர் உள்ளது. இது உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும். இதனால் உடலில் உள்ள தேவை இல்லாத நச்சுப் பொருட்கள் வெளியேறும். ஒரு நாளைக்குத் தேவையான எல்லா வைட்டமின்களும் இதில் உள்ளன. வெள்ளரிக்காயின் தோலில் அதிகளவு வைட்டமின் சி உள்ளதால், தோலுடன் உண்ணுவது நல்லது. தொற்று நோய்களை வர விடாமல் தடுக்கும் தன்மையும் இதற்கு உள்ளதாக பல ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மூளை ஆரோக்கியம்

    வெள்ளரிக்காயில் fisetin என்னும் என்சைம் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கு தேவையானது. இது நரம்பு அணுக்களைப் பாதுகாத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும். இது ஞாபக மறதியைத் தடுக்கும்.

    வாய்க்கு புத்துணர்வு

    வெள்ளரித் துண்டை வாயின் மேல் பகுதி யில் வைத்தால், அது தேவை இல்லாத கிருமி களை கொன்று வாய் துர்நாற்றத்தை தடுக்கும்.

    மன அழுத்தத்துக்கு...

    வெள்ளரிக்காய் பி வைட்டமின்கள் நிறைந்தது. வைட்டமின் பி1, வைட்டமின் பி5 மற்றும் பயோடின் (Biotin) நிறைந்தது. இந்த வைட்டமின்கள், பதற்றம் போன்ற உணர்வுகளை குறைத்து, மன அழுத்தத்துக்கு காரணமான சேதத்தைத் தவிர்க்கும்.

    ஜீரணத்துக்கு...

    வெள்ளரிக்காய், தண்ணீர் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. இவை இரண்டும் ஆரோக்கியமான செரிமானத்துக்கு தேவையானவை. வயிற்றின் அமிலத்தன்மையை குறைக்க ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் போதும். அதை போலவே வெள்ளரிக்காய் பணிபுரியும். வெள்ளரிக்காயின் தோலில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல்
    பிரச்னையை தடுக்கும். இதனால் உணவு சரியாக ஜீரணமாகும்.

    ஆரோக்கியமான எடையை பராமரிக்க...

    வெள்ளரியில் குறைந்த கலோரிகளே உள்ளது. அதனால் இது வயிற்றை நிறைக்கும் சிற்றுண்டி. இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானமாவதற்கு அதிக நேரம் எடுப்பதால் வயிறு காலியாக இருக்காது. எனவே நாம் வேறு எதுவும் உண்ண மாட்டோம். இது உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது.

    எலும்பு ஆரோக்கியம்

    வெள்ளரிக்காயில் சிலிக்கா உள்ளது. இது மூட்டு வலியை தடுத்து மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை தடுக்கும். உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை குறைத்து மூட்டு வலி வராமல் தடுக்கும்.

    சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்துக்கு...

    வெள்ளரிக்காயின் தோலை, சருமத்தில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம். வெள்ளரிக்காயில் தோலுக்கு தேவையான மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் சிலிகான் போன்ற தாதுப் பொருட்கள் நிறைந்து உள்ளன. வெள்ளரிக்காய் இறந்த தோலுக்கு மீண்டும் உயிர் தரும் திறன் கொண்டது. இது தோலை உறுதியாக்கும் தன்மை கொண்டது. தோலை வெண்மையாக்கும் திறன் மற்றும் பளபளப்பாகும் திறன் கொண்டது. வெள்ளரிச் சாறு மற்றும் எலுமிச்சைச்சாறு இரண்டையும் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரத்துக்கு பிறகு முகத்தை கழுவினால், முகம் புத்துணர்வான தோற்றம் பெறும். வெள்ளரிக்காய் துண்டை கண்களில் சிறிது நேரம் வைத்தால், கண்களில் வீக்கம் குறைந்து விடும்.

    இதில் உள்ள சிலிகான், சல்பர், சோடியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் முடி வளர்ச்சியை தூண்டி, முடியை உறுதியாக்கும். ஒரு கிளாஸ் வெள்ளரிச் சாறு ஒரு நாளைக்கு பருகி வந்தால் அது முடி உதிர்வதைக் குறைக்கும். முடியை வெள்ளரிச் சாறில் கழுவினால், அது கூந்தலுக்கு மென்மையான மற்றும் பளபள தோற்றத்தை தரும்.

    பக்க விளைவுகள்

    வெள்ளரிக்காயை அளவுக்கு மீறி உட்கொண்டால் அது, வாயை சுற்றி ஒவ்வாமை, அரிப்பு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். வெள்ளரியில் உள்ள ஒருவித என்சைமான Cucurbitacinஐ அதிகமாக உட்கொண்டால் வாயு மற்றும் அஜீரணப் பிரச்னை களைத் தரும். வெள்ளரியை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், அது உடலில் நச்சுத்தன்மையை அதிகரித்துவிடும். இதனால் முடி உதிர்தல் ஏற்படும்.

    எப்படித் தேர்வு செய்வது?/ பத்திரப்படுத்துவது?

    வெள்ளரியின் நிறம், பச்சையாக இருக்க வேண்டும். அது உறுதியாகவும் எந்தக் கீறலும் இல்லாமலும் இருக்க வேண்டும்.வெள்ளரி மஞ்சள் நிறமாகவோ அல்லது அதில் புள்ளிகள் இருந்தாலோ, அதனை வாங்கக்கூடாது. வெள்ளரியை குளிர்சாதனப் பெட்டியில் ஒரு வாரம் வரை வைக்கலாம். வெள்ளரியின் தோலை சீவிய பிறகு காற்று புகாத பாத்திரத்தில் வைக்க வேண்டும். வெள்ளரியில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால், அதனை வாங்கிய இரண்டு நாட்களுக்குள் உண்ண வேண்டும்.

    Last edited by chan; 2nd Apr 2015 at 11:46 AM.

  9. #39
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    மஞ்சள் பூசணிக்காய்
    (பரங்கிக்காய்)

    மார்கழியை நினைவுபடுத்துகிற முக்கியமான அடையாளங்களில் ஒன்று கோலங்களை அலங்கரிக்கிற பரங்கிப்பூ. அதிகாலையில் வாசல் தெளித்து மெழுகி, பெரிய பெரிய கோலங்கள் இட்டு, நடுவில் சாணம் வைத்து, அதில் பரங்கிப்பூவை செருகி வைப்பது வழக்கம். சாணம் என்பது கிருமிநாசினி. அதன் நடுவில் வைக்கப்படுகிற மஞ்சள்நிற பரங்கிப்பூவானது மங்கல அடையாளம். மலர்ச்சியை வரவேற்கும் வழி என்பது நம்பிக்கை.பரங்கிப்பூவைப் போலவே பரங்கிக்காய்க்கும் நல்ல குணங்கள் உள்ளன. ‘மஞ்சள் பூசணி’ என்று அழைக்கப்படுகிற பரங்கிக்காயின் அருமை பெருமைகளை அள்ளி வழங்குகிறார் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.


    மலையாளிகள் சமூகத்தில் ‘மஞ்சள் பூசணிக்காய் எரிசேரி’ என்பது மிகவும் பிரபலமான ஓர் உணவு. வெளிர் ஆரஞ்சு நிறமுள்ள இந்த பதார்த்தம் பண்டிகை நாட்களின் ஸ்பெஷல் தயாரிப்பு. இது மிகவும் சுவையாக இருக்கும். பிராமண வீடுகளில் தயாரிக்கப்படும் பரங்கிக்காய் சாம்பார் மிகவும் சுவை நிரம்பியது. இந்த காயின் வெளிர் ஆரஞ்சு நிறம் பீட்டா கரோட்டீன் கொண்டது. இது நம் உடலுக்குத் தேவைப்படும் போது கல்லீரலுக்கு வைட்டமின் ஏ-வாக மாற்றிக் கொடுக்கும்.

    தோற்றம்

    பரங்கிக்காயின் பூர்வீகம் வட அமெரிக்கா. பரங்கி என்பது ஒரு தாவரத்தின் பெயர். சமையலுக்கு மட்டுமல்ல... விதையாகவும் எண்ணெயாகவும் கூட இது பயன்படுகிறது.

    குணங்கள்

    பரங்கி பரவலாக விளையக்கூடிய ஒரு காய். இது அளவிலும் நிறத்திலும் வடிவத்திலும் வேறுபட்டது. மெகா சைஸ் பரங்கிக்காய் 4-6 கிலோ எடை கூட இருக்கும். இது பொதுவாக ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதற்கு இப்படியொரு நிறத்தைக் கொடுப்பது, அதன் தோல் மற்றும் உள்ளே உள்ள சதைப் பகுதி. இதன் தோல் பகுதி அழுத்தமாகவும் எடையற்றதாகவும் இருக்கும்.

    ஆழமான இதன் உள் பகுதியில், சின்ன சின்ன வெள்ளை நிறமுடைய விதைகள் ஒன்றோடு ஒன்று வலைபோலப் பின்னிப் பிணைந்திருக்கும்.

    பயன்கள்

    மிகக்குறைவான கலோரி கொண்ட காய் இது. 100 கிராம் காய் 26 கலோரிகள் கொண்டது. இதில் கொழுப்பும் (Fat), கொலஸ்ட்ராலும் இல்லை. இதில் செரிமானத்துக்கான நார்ச்சத்து, ஆன்டிஆக்சிடென்ட், தாதுச்சத்து மற்றும் வைட்டமின் ஆகியவற்றைக் கொண்டது. குறிப்பாக இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை அதிகம்.

    வைட்டமின் ஏவை அபரிமிதமாகக் கொண்ட இது, உடலுக்குத் தேவையான இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட்டாக செயல்படுகிறது. சரும ஆரோக்கியத்தையும் சளி சவ்வுப் பகுதிகளையும் (Mucous Membrances) பாதுகாக்கிறது. பார்வைத்திறன் மேம்படவும் உதவுகிறது.

    இது ஆல்ஃபா, பீட்டா கரோட்டின், லூட்டின் மற்றும் ஸியாக்ஸான்தின் ஆகியவற்றைக் கொண்டது. Zeaxanthin என்பது இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட். இது வயது முதிர்ந்த காலத்தில் ஏற்படும் தசை நோய்களைத் தடுக்கிறது. பரங்கியில் கெராட்டினாயிட்ஸ் (Carotenoids) அதிகம் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது. ஃபோலேட், நியாசின், வைட்டமின் பி6, தையாமின் மற்றும் பான்டோதெனிக் அமிலம் போன்ற பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் இதில் அதிகம். தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவற்றை சிறந்த அளவில் உள்ளடக்கிய காய்.

    பரங்கி விதைகளில் நார்ச்சத்தும், ஒற்றை - நிரம்பாத கொழுப்பு அமிலமும் (Monounsaturated fatty acid) உள்ளன. இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதில் ட்ரிப்டோஃபன் எனப்படுகிற அமினோ அமிலம் உள்ளது. 1 டீஸ்பூன் பரங்கி விதையை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் நமது முழு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மலச்சிக்கலை விரட்டுகிறது.

    பரங்கியில் நமது சருமத்துக்குத் தேவையான நல்ல கொழுப்பு அமிலமும் உள்ளது. சருமப் பளபளப்புக்குக் காரணமான வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் மக்னீசியமும் உள்ளது. பரங்கியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சருமத்தில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படுவதுடன் மேலும் பாக்டீரியா தொற்றுக்கு எதிராகப் போராடவும் செய்கிறது. பரங்கியில் உள்ள வைட்டமின் ஈ, சருமக் குறைபாடுகளை சரி செய்கிறது.

    பரங்கியில் எல்லா விதமான மருத்துவ குணங்களும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் வாயு தொந்தரவு, செரிமான கோளாறு மற்றும் அல்சர் ஆகியவையும் சரி செய்யப்படுகிறது.

    என்ன இருக்கிறது?

    (100 கிராம் அளவில்)
    ஆற்றல் - 26 கிலோ கலோரி
    புரதம் - 1 கிராம்
    கொழுப்பு - 0.1 கிராம்
    கொலஸ்ட்ரால் - 0 கிராம்

    எப்படித் தேர்ந்தெடுப்பது? பத்திரப்படுத்துவது?

    பரங்கி வருடம் முழுவதும் எளிதாக கிடைக்கக் கூடியது. அது வெட்டுப்பட்டுள்ளதா, நிறம் மாறுபட்டுள்ளதா, ஏதேனும் கோடுகள் உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும். வெட்டி வைக்கப்பட்ட பரங்கியை குளிர்பதனப் பெட்டியில் வைத்தால் சில நாட்கள் வரை பாதுகாக்கலாம்.

    பரங்கியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சருமத்தில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படுவதுடன் மேலும் பாக்டீரியா தொற்றுக்கு எதிராகப் போராடவும் செய்கிறது.

    மஞ்சள் பூசணி சூப்


    என்னென்ன தேவை?

    பரங்கிக்காய் - 1 கப் (சின்னச் சின்னதாக சதுரங்களாக வெட்டியது),
    சின்னதாக நறுக்கிய வெங்காயம் - 2,
    வெங்காயத் தாள் - 1 கட்டு,
    சிறியதாக நறுக்கிய கேரட் - 1,
    வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
    கருப்பு மிளகு - ருசிக்கு,
    உப்பு, தண்ணீர் - தேவைக்கு.

    எப்படிச் செய்வது?

    கடாயை சூடேற்றி அதில் வெண்ணெயையும், நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிற மாகும் வரை வதக்கவும். அதில் பரங்கிக்காய், கேரட், சிறிது வெங்காயத் தாள் சேர்த்து வதக்கவும். இத்துடன் உப்பு, தண்ணீரும் சேர்த்து சமைக்கவும்.பிறகு இதனை ஆறவைத்து நன்கு மசிக்கவும். சாப்பிடும் முன் சூடுபடுத்தவும். மிளகு மற்றும் வெங்காயத் தாள் சேர்த்து அலங்கரிக்கவும்.

    பரங்கிக்காய் சாலட்

    என்னென்ன தேவை?


    பரங்கிக்காய் - 250 கிராம்,
    கெட்டித் தயிர் - 1 கப்,
    சீரகம்- 1/2 டீஸ்பூன்,
    கொத்தமல்லி இலை - 1/4 டீஸ்பூன்,
    மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    எப்படிச் செய்வது ?


    பரங்கிக்காயை சீவி வேக விடவும். கடாயை சூடாக்கி எண்ணெய் விடாமல் மிளகு, சீரகம் சேர்த்து 2 நிமிடங்கள் வறுத்துத் தூளாக்கவும். இவை எல்லாவற்றையும் கலந்து குளிர்பதனப் பெட்டியில் வைத்துப் பரிமாறவும்.

    பரங்கிக்காய் பச்சடி

    என்னென்ன தேவை?

    பரங்கிக்காய் - 1 பெரிய பத்தை,
    புளி - எலுமிச்சை அளவு,
    பொடித்த வெல்லம் - 3 டேபிள்ஸ்பூன்,
    சாம்பார் தூள் - 1 டீஸ் பூன்,
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்.

    தாளிக்க...

    எண்ணெய் - 1 டீஸ்பூன்,
    கடுகு - 1/2 டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - 1 துளி,
    கறிவேப்பிலை - சிறிது,
    உப்பு - தேவைக்கு.

    எப்படிச் செய்வது?

    பரங்கிக்காயின் தோலையும் விதை களையும் நீக்கி விட்டு சின்னச் சின்னதாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பரங்கி துண்டுகளை போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு இத்துடன் சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பரங்கிக்காய் நன்கு வேகும் வரை கொதிக்க விடவும். புளியை கரைத்துக் கொள்ளவும். இதனை கொதிக்கும் பரங்கிக்காயில் சேர்த்து இத்துடன் வெல்லத்தை சேர்த்து நன்கு கொதித்தவுடன் ஆற வைத்து மசிக்கவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து கறிவேப்பிலை சேர்க்கவும்.

    Moderator Note:

    This Article has been published in Penmai eMagazine Nov 2016. You Can download & Read the magazines HERE.

    Last edited by sumathisrini; 21st Mar 2017 at 02:39 PM.

  10. #40
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    முள்ளங்கி

    முள்ளங்கியில் உள்ள சத்துகளையும் நல்ல விஷயங்களையும் பற்றி அறிந்தால், அது அத்தனை பேரின் உணவிலும் தினசரி இடம் பெறும் அவசியக் காயாக மாறும்.‘‘வாசனை பிடிக்காமல் முள்ளங்கியை வெறுப்பவரா நீங்கள்? தலை முதல் கால் வரை உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் நன்மை செய்கிற முள்ளங்கியை வாசனைக்காக ஒதுக்குவது எத்தனை பெரிய தவறு தெரியுமா?’’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ்.


    ‘‘குறுக்கு வெட்டுக் காய்கறிகளில் முக்கியமானது முள்ளங்கி. வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ அதிகம் கொண்ட காய். இதிலுள்ள ஃபோலேட், நார்ச்சத்து, தாதுச்சத்து, ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ் ஆகிய அனைத்தும் முதுமைத் தோற்றத்துக்குக் காரணமான விஷயங்களில் இருந்து நம்மைக் காக்கக்கூடியவை. புற்றுநோய்க்கு எதிராகப் போராடக்கூடிய குணம் முள்ளங்கியில் உள்ளது.

    முள்ளங்கியை பச்சையாகவோ, சமைத்தோ எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். மாவுச்சத்து இல்லாத காய் இது என்பது குறிப்பிடத் தக்கது. சாலட்டுகளில் சேர்க்கும் போது, ஒருவித காரத் தன்மையுடன், நறுக்கென்ற ருசியையும் கொடுக்கக்கூடியது. நீரிழிவு உள்ளவர்களும் அல்லது எப்போது வேண்டுமானாலும் நீரிழிவு வரலாம் என்கிற நிலையில் இருப்போரும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உச்சத்துக்குப் போகாமலிருக்க மாவுச்சத்து இல்லாத காய்கறிகளை சேர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள். முள்ளங்கிக்கு அதில் முதலிடம். ஆனால், ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை முள்ளங்கியை சாப்பிட்டு மட்டுமே சரிக்கட்ட முடியாது என்பதும் முக்கியமான தகவல்.

    குளிர்ச்சியானதுமுள்ளங்கி குளிர்ச்சியான தன்மை கொண்டது. அதனுடைய கடுமையான வாசனையும் குளிர்ச்சியான தன்மையும் சீன மருத்துவத்தில் கொண்டாடப்படுபவை. வெயில் அதிகமுள்ள மாதங்களில் ஏற்படுகிற வெம்மையைத் தணிக்கும் மருந்தாகவே அங்கு முள்ளங்கியைப் பயன்படுத்துகிறார்கள்.

    தொண்டைக்கு இதமானதுமுள்ளங்கியின் காரத்தன்மையும் வாடையும் உடலிலுள்ள அதிகப்படியான சளியை விரட்டி, ஜலதோஷம் பிடிக்காமலிருக்க உதவும். சைனஸ் தொந்தரவிலிருந்து விடுதலை கொடுத்து, கரகரப்பான தொண்டைக்கு இதமும் தரக்கூடியது முள்ளங்கி. செரிமானத்தை சீராக்கும்
    இயற்கையாக ஜீரண மண்டலத்தை சுத்திகரிக்கக்கூடிய இயல்பு இதற்கு உண்டு. பல வருடங்களாக உடலில் படிந்த உணவு நச்சுகளையும் கழிவுகளையும் வெளியேற்றக் கூடியது.

    வைரஸ் தொற்றைத் தவிர்க்கும்இதிலுள்ள இயற்கையான சுத்திகரிப்புத் தன்மையும் அதிக அளவிலான வைட்டமின் சி சத்தும் வைரஸ் தொற்று ஏற்படாமல் காக்கக்கூடியவை.நச்சுகளை வெளியேற்றும் சீன மற்றும் ஆயுர்வேத மருத்துவங்களில் முள்ளங்கிக்கு நச்சுகளை முறிக்கிற தன்மை உள்ளதாகவும் புற்றுநோய்க்குக் காரணமான தன்மைகளை வெளியேற்றும் குணம் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

    புற்றுநோயுடன் போராடும்பிராக்கோலி, முட்டைகோஸ் போன்ற குறுக்கு வெட்டுக் காய்கறிக் குடும்பத்தைச் சேர்ந்ததால் முள்ளங்கியில் உள்ள ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ், தாதுச்சத்துகள், வைட்டமின்கள் போன்றவை புற்றுநோய்க்கு எதிராகப் போராடக் கூடியவையாக இருக்கின்றன.அஜீரணத்துக்கு மருந்தாகும்
    வயிற்று உப்புசத்தைப் போக்கி, வயிற்றுப் பொருமலை சரியாக்கி, இதமான உணர்வைக் கொடுக்கக் கூடியது.

    குறைந்த கலோரியும் அதிக ஊட்டமும் கொண்டது ஒரு கப் முள்ளங்கி எடுத்துக் கொண்டாலுமே அதில் 20க்கும் குறைவான கலோரிகளே இருக்கும் என்பதால்,
    எப்போதும், எந்த உணவுடனும் இதைச் சேர்த்து உண்ணலாம். குறைந்த கலோரி கொண்டதானாலும் அதிக ஊட்டச்சத்துகளை உள்ளடக்கியது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

    உடல் வறட்சியை விரட்டும்முள்ளங்கியில் நீர்ச்சத்தும், வைட்டமின் சி சத்தும், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகச் சத்தும் அபரிமிதமாக உள்ளன. இது திசுக்களுக்கு ஊட்டமளிக்கவும் உடல் வறண்டு போகாமலும் சருமம் ஆரோக்கியமாக இருக்கவும் உதவும். முள்ளங்கியின் மகத்துவம் பற்றிப் பேசுகிற மீனாட்சி, அதை வைத்துச் செய்கிற சுவையான 3 உணவுகளின் செய்முறைகளையும் தந்துள்ளார்.


    முள்ளங்கி பக்கோடா

    என்னென்ன தேவை?

    முள்ளங்கித் துருவல் (உப்பு சேர்த்து, தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்) - 1
    கடலைப் பருப்பு - 1 கப்,
    அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்,
    துருவிய பனீர் - கால் கப்,
    பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
    பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2,
    கரம் மசாலா தூள் - 2 சிட்டிகை,
    சோம்புத் தூள் - அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - பொரிப்பதற்கு,
    உப்பு - தேவைக்கேற்ப.

    எப்படிச் செய்வது?

    கடலைப் பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்துக் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் அத்துடன் சேர்த்துப் பிசையவும். எண்ணெயைக் காய வைத்து, சின்னச் சின்னதாகக் கிள்ளிப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.தயிர் அல்லது தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.முள்ளங்கி குறைந்த கலோரி கொண்டது என்றாலும், அதிகஊட்டச்சத்துகளை உள்ளடக்கியது.


    முள்ளங்கி பரோட்டா


    என்னென்ன தேவை?

    கோதுமை மாவு - கால் கப்,
    முள்ளங்கித் துருவல் (உப்பு சேர்த்து, தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்) - சிறிது,
    பொடியாக நறுக்கிய முள்ளங்கிக் கீரை (நறுக்கியதும், தண்ணீரை வடித்து வைக்கவும்) - சிறிது,
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - கால் டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப,
    கரம் மசாலா தூள் - 2 சிட்டிகை,
    பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - காரத்துக்கேற்ப,
    பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப்,
    ஓமம் - 2 சிட்டிகை,
    எண்ணெய் - தேவைக்கேற்ப.

    எப்படிச் செய்வது?

    கடைசியாகக் கொடுத்துள்ள எண்ணெய் தவிர்த்து மற்ற எல்லா பொருட்களையும் கோதுமை மாவுடன் சேர்த்துப் பிசையவும். தேவையானால் மட்டும் சிறிது தண்ணீர் தெளித்துப் பிசையவும். சப்பாத்திக்குத் தேவையான அளவு உருண்டைகளாக உருட்டி, கனமான சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு,
    சுற்றிலும் எண்ணெய் விட்டு, வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும்.


    முள்ளங்கிக் கீரை மசாலா


    என்னென்ன தேவை?

    கீரையுடன் இருக்கும் முள்ளங்கி - பெரிதாக 2,
    உப்புத் தண்ணீரில் வேக வைத்து எடுத்த முள்ளங்கிக் கீரை - 1 கப்,
    எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப,
    பெருங்காயம் - கால் டீஸ்பூன்,
    கடுகு - 1 டீஸ்பூன்,
    சீரகம் - கால் டீஸ்பூன்,
    மிளகாய் தூள் - அரை
    டீஸ்பூன், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
    சர்க்கரை - அரை டீஸ்பூன்,
    ஆம்சூர் தூள் - 1 டீஸ்பூன்
    அல்லது எலுமிச்சைச்சாறு - அரை டீஸ்பூன்,
    கரம் மசாலா - 1 சிட்டிகை.

    எப்படிச் செய்வது?


    முள்ளங்கியை சின்னத் துண்டுகளாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போடவும். முள்ளங்கிக் கீரையையும் நறுக்கி அதில் சேர்க்கவும். உப்பு சேர்த்துப் பிசறி சிறிது நேரம் வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம், சீரகம் தாளிக்கவும். தயாராக வைத்துள்ள முள்ளங்கி மற்றும் அதன் கீரைத் துண்டுகளை அதில் சேர்க்கவும். நன்கு கலந்து வேக வைத்துள்ள முள்ளங்கிக் கீரையையும் சேர்த்துக் கிளறவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு வேக விடவும். 4 நிமிடங்கள் வெந்ததும், சர்க்கரை மற்றும் ஆம்சூர் தூள் அல்லது எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். முள்ளங்கி நன்கு வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.


    என்ன இருக்கிறது?

    (100 கிராம் அளவில்)

    ஆற்றல் - 16 கிலோ கலோரிகள்
    கார்போஹைட்ரேட் - 3.4 கிராம்
    புரதம் - 0.68 கிராம்
    தயாமின் - 0.012 மி.கி.
    ரிபோஃப்ளோவின் - 0.039 மி.கி.
    நியாசின் - 0.254 மி.கி.
    வைட்டமின் பி6 - 0.071 மி.கி.
    வைட்டமின் சி - 14.8 மி.கி.
    கால்சியம் - 25 மி.கி.
    இரும்பு - 0.34 மி.கி.
    மக்னீசியம்- 10 மி.கி.
    மாங்கனீசு - 0.069 மி.கி.
    பொட்டாசியம் - 233 மி.கி.
    துத்தநாகம் - 0.28 மி.கி.


    Last edited by chan; 5th Apr 2015 at 12:16 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter