Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree98Likes

காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables


Discussions on "காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #41
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    கத்தரிக்காய் கொழுப்பை கரைக்கும்



    கத்திரிக்காய் உடல் வலியைப் போக்கும் தன்மையுடையது. காய்ச்சலைப் போக்கக் கூடியது. சோர்வைப் போக்கக் கூடியது. வீக்கத்தைத் தணிக்கக் கூடியது. கொழுப்பைக் குறைக்கக் கூடியது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது. ரத்த அணுக்கள் சேர்க்கையைத் தடுக்கக் கூடியது. கண்களின் ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது. மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவல்லது, ஒவ்வாமையால் ஏற்படும் மயக்க நிலையைத் தடுக்க வல்லது, உறுப்புகளைத் தூண்ட வல்லது. 100 கிராம் கத்திரிக்காயில் 24 கலோரி மட்டுமே ஊட்டச்சத்து அடங்கி இருப்பதால் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள உதவுவதோடு ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புச் சத்தைக் குறைக்கவும் இது மிகவும் உதவியாக உள்ளது.


    புத்துணர்வைத் தரும்


    கத்தரிக்காயின் தோலில் உள்ள ஆன்த்தோ சயனின் என்னும் வேதிப்பொருள் உடலின் சோர்வைப் போக்கிப் புத்துணர்வைத் தரக் கூடியது, அது மட்டுமின்றி ஆன்தோ சையனின் புற்றுநோய் எனப்படும் கேன்சர் செல்களுக்கு எதிராகச் செயல்பட்டு தடுக்க வல்லது. கத்திரி இலைகள் ஆஸ்த்துமா எனப்படும் இறைப்பு நோய், மூச்சுக் குழல் நோய்கள், சுவாச அறைக்கோளாறுகள், வலியுடன் சிறுநீர் வெளியேறுதல் ஆகியவற்றுக்கும் மருந்தாகிப் பயன் தருகின்றது. வாயில் எச்சில் சுரக்கவும் இது பயன்படுகிறது. கத்தரிச் செடியின் வேர் மூச்சிரைப்பு மற்றும் மூக்கில் தோன்றும் புண்களுக்கு மருந்தாகிறது.


    கொழுப்புச் சத்தைக் குறைக்கும்


    வேரின் சாறு காது வலியைப் போக்கப் பயன்படுகிறது. நோய் வாய்ப்பட்டிருக்கும் போது பத்திய உணவில் கத்தரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. கத்தரிக்காயில் இருக்கும் நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து ரத்தத்தில் சேரும் கொழுப்புச் சத்தைக் குறைக்க உதவும் ஓர் உன்னதமான மருந்தாகும். கத்தரிக்காயில் உள்ள நார்ச்சத்து பசியை அடக்கி வைப்பதால் உடல் எடை குறைவதற்கு உதவுகிறது. மேலும் இதயத்துக்கு பலத்தைத் தருவதாக அமைகிறது. கத்தரிக்காயை எண்ணெயிலிட்டுக் காய்ச்சி மேல் பூச்சாகப் பூசுவதால் ரத்தக் கசிவு குணமாகும்.


    நார்ச்சத்து


    கத்தரிக்காயில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு மென்மையும், பலமும் தரவல்லது. கத்தரிக்காய் நார்ச்சத்து மிகுந்து உள்ளதால் மலச்சிக்கலைப் போக்கவல்லது மட்டுமின்றி சர்க்கரை நோயையும் தடுக்க வல்லது. கத்தரிக்காயை அரைத்து தீநீராக்கி வீக்கமுற்ற கால்களின் மீது தேய்த்துவர நாளடைவில் வீக்கம் குறைந்து விடும்.கத்தரிக்காயைச் சாறு பிழிந்து உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் தேய்த்து விட கால்களில் வியர்த்து இடையூறு உண்டாவது தடுக்கப்படும். பழத்தை வேக வைத்து உள்ளுக்குக் கொடுப்பதால் காளான் சாப்பிட்டு ஏற்பட்ட நச்சு முறிந்து விடும். கத்தரிக்காயை வேக வைத்து அத்துடன் போதிய பெருங்காயம், பூண்டு, உப்பு, சேர்த்து சூப் செய்து சாப்பிட வயிற்றில் சேர்ந்து துன்பம் தரும் வாயு கலையும்.


    நல்ல தூக்கத்தை உண்டாக்கும்


    கத்தரிக்காயை வேக வைத்து அத்துடன் போதிய தேன் சேர்த்து மாலை நேரத்தில் சாப்பிட நல்ல தூக்கத்தை உண்டாக்கும் இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை அகலும். கத்தரிக்காயை நெருப்பில் சுட்டு வேக வைத்து போதிய சர்க்கரை சேர்த்து சாப்பிட மண்ணீரல் வீக்கத்தைக் குறைக்கும். காய்ச்சலால் ஏற்பட்ட மண்ணீரல் வீக்கம் குறிப்பாக அகலும் காலையில் வெறும் வயிற்றில் இதைச் சாப்பிடுவது மிக்க நலம் தரும். கத்தரிக்காய் அடிக்கடி உணவில் சேர்ப்பதால் இதயம் மற்றும் ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் மாரடைப்பு தவிர்க்கப்படும். கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் அதிலுள்ள குறைந்த அளவு நிகோட்டின் சத்து புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு துணை செய்யும்.


    இதய பாதுகாப்பு


    கத்தரிக்காயில் அடங்கியுள்ள சத்துப் பொருட்களின் அழிவைத் தடுப்பதோடு மூளைக்கு பலத்தைத் தந்து ஞாபக சக்தியைத் தூண்டி விடுகின்றது. கத்தரிக்காயில் உள்ள வேதிப்பொருட்கள் உடலில் இரும்புச்சத்து உண்டாவதற்கும் அதனால் ரத்தத்தில் உள்ள முக்கிய பகுதியான ஹீமோகுளோபின் அதிகமாவதற்கும் உதவி செய்கிறது. கத்தரிக்காயில் அடங்கியுள்ள நாசுமின் என்னும் வேதிப் பொருள் ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான இரும்புச் சத்தைக் குறைத்து வெளியேற்ற உதவுகிறது. இதனால் மாரடைப்பு தவிர்க்கப்டுகிறது. ரத்தத்தில் சேர்ந்துள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுவதால் இத்தகு பாதுகாப்பு இதயத்துக்கு ஏற்படுகிறது. கத்தரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் செரிமானத்தை அதிகப்படுத்துவதாகவும் துரிதப்படுத்துவதாகவும் அமைகிறது.


    புற்று நோயைத் தடுக்கும்


    கத்தரிக்காய் சீரண உறுப்புகளுக்கு பலம் தருவதாலும் மலத்தை வெளியேற்றுவதாலும் மலக்குடலில் ஏற்படும் புற்று நோயைத் தடுப்பதாக அமைகிறது.கத்தரிக்காய் ஓர் நுண்கிருமிகளைத் தடுக்க வல்லதாகவும் தொற்று நோய்களைத் தவிர்க்க வல்லதாகவும் விளங்குகிறது. இதில் அடங்கியுள்ள விட்டமின் சி சத்து இதற்குத் துணையாகிறது. கத்தரிக்காயில் அடங்கியுள்ள விட்டமின்கள், மினரல்கள், அமினோஆசிட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுவதோடு தோல் ஆரோக்கியத்துக்கும் இது துணை செய்கிறது. தோல் மென்மையும் பளபளப்பும் பெற உதவுகிறது.


    பல்வலி குணமாகும்


    கத்தரிக்காயில் பொதிந்திருக்கும் ஆன்த்தோ சயானின் என்னும் வேதிப்பொருள் வயது முதிர்வைத் தடுத்து இளமைத் தோற்றத்துக்கு வகை செய்கிறது.


    கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் தோலில் ஏற்படும் புற்றுநோயைத் தடுத்து தோல் ஆரோக்கியமாயிருக்க உதவுகிறது. கத்தரிப்பழத்தை ஊசியினால் குத்தித் துளைகள் செய்து நல்லெண்ணெய் இட்டு வறுத்து பல்வலிக்குக் கொடுக்க பல்வலி குணமாகும்.


    Sponsored Links
    spmeyyammaisp06 and jv_66 like this.

  2. #42
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    பச்சைப் பட்டாணி

    பார்வைக்கு மட்டுமின்றி, சமைக்கவும் சுவைக்கவும் அருமையானது பச்சைப் பட்டாணி. பொரியலோ, கூட்டோ, குருமாவோ, சப்பாத்தியோ, பிரியாணியோ... இன்னும் எதனுடனும் இதமான கூட்டணி அமைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது பட்டாணி. சுமாரான எந்த உணவுடனும், கைப்பிடி அளவு பட்டாணி சேர்க்க, சூப்பர் உணவாக மாறும்!


    ‘‘பச்சைப் பட்டாணி சேர்த்த மட்டன் மின்ஸ் என் கணவரின் விருப்பமான பதார்த்தம்... சப்பாத்திக்கு சரியான மேட்ச் இது...’’ - அனுபவம் கலந்த பட்டாணி புராணம் பற்றிப் பேசுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சுரேந்திரன். பட்டாணியில் உள்ள சத்துகள், சமைக்கும் விதம், தேர்வு செய்வது எனப் பல விஷயங்களுடன் தன் வீட்டு ஸ்பெஷல் பட்டாணி ரெசிபிகளையும் பகிர்ந்து கொள்கிறார் அவர்.

    பட்டாணியை சாலட்டாகவும் சூப்பாகவும், பொரியலில் சேர்த்தும், மட்டன், சிக்கன் ஆகியவற்றுடன் சேர்த்தும், வேக வைத்த முட்டையுடனும் கட்லெட்டில் சேர்த்தும் சாப்பிடலாம். இது உணவுப் பதார்த்தங்களுக்கு நிறம், சுவை, மணம் ஆகியவற்றைக் கொடுக்கிறது. குழந்தைகளுக்கு கேரட்டையும் பட்டாணியையும் மசித்து கொடுக்கலாம். இதில் பலவிதமான சத்துகள் அடங்கியுள்ளன.

    பச்சைப் பட்டாணியில் உடலுக்குத் தேவையான சத்துகளை கொடுக்கக்கூடிய phytonutrients, தாதுச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆகியவை அடங்கியுள்ளன. பீன்ஸ், தட்டைப்பயறு ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது பட்டாணியில் கலோரிகள் குறைவு. 100 கிராம் பட்டாணியில் 81 கிலோ கலோரிகள் உள்ளன. கொலஸ்ட்ரால் இல்லை. புரதம் நிறைந்தது.

    கரையும், கரையாத தன்மையுள்ள நார்ச்சத்து உள்ளது. பட்டாணியில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. செல்களுக்கு உள்ளே டி.என்.ஏ. தொகுப்பு இயக்கம் சீராக நடைபெற ஃபோலேட்ஸ் என்கிற பி.காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் அவசியம். ஃபோலேட் அதிகம் உள்ள உணவை கர்ப்பிணிகள் தேவைக்கேற்ப எடுத்துக் கொண்டால், பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்பு மண்டலக் குறைபாடுகள் வராது. பட்டாணியில் நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான வைட்டமின் சி நிறைய உள்ளது.

    பட்டாணியில் உள்ள பைட்டோஸ்டெரால்ஸ் (Phytosterols), உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதில் உள்ள வைட்டமின் கே, எலும்புகளுக்கு தேவையான கால்சியத்தை கொடுக்கிறது. இதில் வைட்டமின் ஏ சரியான விகிதத்தில் அடங்கியிருப்பதால், சளிச் சவ்வுப் படலத்தின் ஆரோக்கியத்துக்கும் சரும ஆரோக்கியத்துக்கும் தெளிவான பார்வைக்கும் உதவுகிறது. பான்டோதெனிக் அமிலம், நியாசின், தயாமின் மற்றும் பைரிடாக்சின் ஆகிய பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களையும் கால்சியம், இரும்புச் சத்து, தாமிரச் சத்து, துத்தநாகச் சத்து மற்றும் மாங்கனீஸ் சத்துகளையும் உள்ளடக்கியது பட்டாணி.

    பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்கள், தேன் முதலியவற்றைக் கூட உண்ணாத ‘வீகன்’ உணவுப் பழக்கமுள்ளவர்களின் புரதத் தேவையை ஈடுகட்டுவதில் சிவப்பரிசிக்கும் பச்சைப் பட்டாணிக் கும் பெரிய பங்கு உண்டு. இவற்றின் மூலம் தரமான, போதுமான புரதச் சத்து கிடைக்கும். முளை கட்டிய பட்டாணி இன்னும் சத்தானது. தினமும் சிறிய அளவில் பட்டாணியை நமது உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தரும்.





    பச்சைப் பட்டாணி மசாலா
    (கேரளா ஸ்டைல்)


    என்னென்ன தேவை?

    பட்டாணி - 250 கிராம்,
    துருவிய தேங்காய் - 5 டேபிள்ஸ்பூன்,
    கறிவேப்பிலை - 1 கொத்து,
    பச்சை மிளகாய் - 2,
    மஞ்சள் தூள் - சிறிதளவு,
    சாம்பார் வெங்காயம் - 5,
    மிளகாய் தூள்- 1/2 டீஸ்பூன்,
    சீரகம் - 1/4 டீஸ்பூன்.

    தாளிக்க...

    கடுகு - 1/2 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - 1 கொத்து,
    தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
    சாம்பார் வெங்காயம் - 1,
    உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 1,
    உப்பு - தேவைக்கு.


    எப்படிச் செய்வது?

    கொதிக்கும் தண்ணீரில் பட்டாணியைப் போட்டு 2 நிமிடம் கழித்து எடுத்து அதை தண்ணீரில் அலசவும். அப்போது பட்டாணி பச்சை நிறம் மாறாமல் இருக்கும்.
    தாளிக்க கொடுத்த பொருட்கள் மற்றும் பட்டாணி தவிர தேங்காய் மற்றும் கொடுக்கப்பட்டுள்ள மற்ற எல்லா பொருட்களையும் அரைத்துக் கொள்ளவும். கடாயில் தேங்காய் எண்ணெய் சூடாக்கி அதில் தாளிக்க கொடுத்தவற்றைச் சேர்க்கவும். பின் வெங்காயத்தை அரைத்த விழுதுடன் சேர்க்கவும். இத்துடன் பட்டாணி சேர்த்து தண்ணீர் கலந்து இதை மூடி கொதிக்க விடவும். நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். இதனை சாதத்துடனும் கிரேவியாகவும் பரிமாறலாம்.


    சில்லி பட்டாணி காளான்

    என்னென்ன தேவை?


    பட்டாணி - 1 கப்,
    காளான் - 1/2 கப்,
    வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
    வெங்காயம் - 1 சிறியது,
    மைதா - 1 டேபிள்ஸ்பூன்,
    திக்கான பால் - 100 மி.லி.,
    உப்பு, மிளகு - தேவைக்கு,
    ஜாதிக்காய் - சிறிதளவு.

    எப்படிச் செய்வது?

    கொதிக்கும் தண்ணீரில் உப்பு, பட்டாணியை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு தண்ணீரை வடித்து பட்டாணியை எடுத்துக் கொள்ளவும். பிறகு வெண்ணெய் சூடாக்கி இத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு வெட்டி வைக்கப்பட்டுள்ள காளான்களை சேர்த்து வதக்கவும். மைதாவை தண்ணீரில் கரைத்து பட்டாணியில் சேர்த்து, பாலும் சேர்த்து சமைக்கவும். இத்துடன் உப்பு, மிளகு சேர்த்து கெட்டியாக வரும் வரை வேக வைக்கவும். இதை டோஸ்ட் செய்த பிரெட் உடன் பரிமாறலாம்.


    பாரம்பரிய ரெசிபி வழங்குகிறார் மெனுராணி செல்லம்



    பட்டாணி சமோசா


    என்னென்ன தேவை?


    மேல் மாவு தயாரிக்க...


    மைதா - 2 கப்,
    சூடான டால்டா அல்லது எண்ணெய் - கால் கப்,
    உப்பு - தேவையான அளவு. இவை அனைத்தையும் சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ளவும்.


    ஸ்டஃபிங் செய்ய....


    வெங்காயம் - 2 கப்,
    வெந்த பட்டாணி - 1/2 கப்,
    உப்பு - தேவையான அளவு,
    சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்,
    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்,
    இஞ்சி, பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 1/2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது),
    சோம்பு - 1/2 டீஸ்பூன்,
    வதக்க எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    கொத்தமல்லி, புதினா - பொடியாக நறுக்கியது,
    பொரிக்க எண்ணெய் - தேவையான அளவு.

    எப்படிச் செய்வது?


    எண்ணெய் காய்ந்ததும் சோம்பு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதங்கியதும், பட்டாணியையும் மசாலாவையும் சேர்த்து வதக்கியபின் உப்பு, கொத்தமல்லி, புதினா சேர்க்கவும். பிசைந்த மாவை சிறு உருண்டைகளாகப் பிரித்து, மெல்லிய அப்பளமாக இட்டு, நுனியில் கட் செய்து, கோன் வடிவில் மடித்து, உள்ளே பூரணம் வைத்து ஒட்டிய பின் எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

    என்ன இருக்கிறது? (100 கிராமில்)

    ஆற்றல் 81 கிலோ கலோரி
    கார்போஹைட்ரேட் 14.45 கிராம்
    புரதம் 5.42 கிராம்
    கொலஸ்ட்ரால் 0 மி.கி.
    நார்ச்சத்து 5.1 மி.கி.

    எப்படி செய்வது? எப்படி பாதுகாப்பது?


    ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும். உள்ளே இருக்கும் பட்டாணி விதைகள் புடைத்துக் கொண்டும் முழுக்க நிரம்பியும் இருக்க வேண்டும். வெடிப்பு விட்டது, மேல்பகுதி முற்றியது, மஞ்சள் நிறம் மாறிய தோலுடன் உள்ளதை நாம் தவிர்க்க வேண்டும்.


    spmeyyammaisp06 and jv_66 like this.

  3. #43
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    வெண்டைக்காய்

    ‘வெண்டைக்காய் சாப்பிட்டா மூளை வளரும். கணக்கு நல்லா போடலாம்...’’ என்று சொல்லிச் சொல்லியே குழந்தைகளுக்கு ஊட்டும் அம்மாக்களைப் பார்க்கலாம். வெண்டைக்காய்க்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடியானத் தொடர்பு இருக்கிறதோ, இல்லையோ அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு, வயிற்றுப் புண், பார்வைக் குறைபாடு என சகல நோய்களையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணி என்பதில் சந்தேகம் வேண்டாம்.


    ‘‘ஆங்கிலத்தில் ‘லேடிஸ் ஃபிங்கர்ஸ்’ என அழைக்கப்படுகிறது வெண்டைக்காய். உலகின் மிக அழகிய பெண்களான எகிப்து நாட்டைச் சேர்ந்த கிளியோபாட்ராவும் சீனாவை சேர்ந்த யாங் குஃபரும் வெண்டைக்காய் பிரியைகள் என்கிறது வரலாறு. அவர்களது அழகு ரகசியங்களில் வெண்டைக்காய்க்கும் முக்கிய இடமுள்ள தாகச் சொல்லப்படுகிற தகவல்கள் ஆச்சர்யமளிக்கின்றன...’’ வெண்டைக்காயைப் பற்றிய வியப்பான தகவலுடன் ஆரம்பிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஷரீஃபா தல்ஹா. வெண்டைக்காயின் மருத்துவக் குணங்கள், தேர்ந்தெடுக்கும் முறை, சமைக்கும் விதம் என சகலத்தையும் பற்றிப் பேசுகிறார் அவர்.

    ‘‘கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசிய மான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறையவே உள்ளது. கர்ப்பத்தில் உள்ள குழந்தையானது உள்ளே நல்லபடியாக வளரவும் முதல் ட்ரைமெஸ்டரின் போதான குழந்தையின் நரம்புக் குழாய்களின் வளர்ச்சிக்கும் இந்த ஃபோலிக் அமிலமானது மிகவும் அவசியம்.

    * வெண்டைக்காயின் சிறப்பே அதன் கொழகொழப்புத் தன்மைதான். ஆனால், அந்தக் கொழகொழப்பு பிடிக்காமலே பலரும் அதை சேர்த்துக் கொள்வதில்லை. உண்மையில் அந்த வழவழப்புத் தன்மையில்தான் வெண்டைக்காயின் அத்தனை மருத்துவப் பலன்களும் மறைந்துள்ளன. இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு அருமருந்து. தவிர, மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்தக் கூடியதும் கூட.

    * ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமுள்ள வெண்டைக்காயை ஹெல்த் டானிக் என்றே சொல்லலாம். இதிலுள்ள கரையும் நார்ச்சத்தானது கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்தைக் குறைக்கிறது. தவிர, இந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், புற்றுநோய்க்குக் காரணமான செல்களின் வளர்ச்சி யையும் தவிர்க்கக் கூடியவை.

    * வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் சி, ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கக் கூடியது. இதில் உள்ள ஃபோலேட், எலும்புகளை உறுதியாக்கி, ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பைக் குறைக்கிறது. ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப் பாட்டில் வைக்கவும் வெண்டைக்காய் உதவுகிறது. அடிக்கடி வெண்டைக்காய் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அடிக்கடி சளி, இருமல் வருவதும் தவிர்க்கப்படுகிறது.

    * எடை குறைப்பு முயற்சியில் இருப்போருக்கு மிகவும் உகந்த ஒரு காய் இது. காரணம், இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்தும் குறைந்த ஆற்றலும். 100 கிராம் வெண்டைக்காயில் இருப்பது வெறும் 35 கிலோ கலோரிகள் மட்டுமே.

    வெண்டைக்காய் சாப்பிட்டால் பார்வைத் திறன் மேம்படும் என்கிற தகவல் பலருக்கும் தெரியாது. வெண்டைக்காயில் உள்ள பீட்டா கரோட்டின், கேட்டராக்ட் மற்றும் க்ளாக்கோமா பிரச்னைகளைத் தவிர்க்கக் கூடியது. வெண்டைக்காய் ரத்த விருத்திக்கு உதவும் என்பதும் கொனோரியா எனப்படுகிற முழங்கால் வளைவுப் பிரச்னைக்கு உதவும் என்பதும் பலருக்கும் புதிய தகவல்களாக இருக்கும். கிளியோபாட்ராவும் யாங்கும் உபயோகித்த வெண்டைக்காய் ஆயிற்றே...

    வெண்டைக்காய்க்கு சரும அழகைக் கூட்டும் குணம் உள்ளதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெண்டைக்காய் சாப்பிடுவதன் மூலம் குடல் சுத்தமாகிறது. அதனால் சருமம் தெளிவாகிறது. பரு வருவது கூட தடுக்கப்படுகிறது. வெண்டைக்காயைக் கொதிக்க வைத்த தண்ணீரில் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கூந்தலை அலசினால் தலைமுடி பளபளப்பாகும்.’’

    வெண்டைக்காய் பச்சடி

    என்னென்ன தேவை?

    வெண்டைக்காய் - கால் கிலோ, வெங்காயம் - 1, தக்காளி - 1, பூண்டு - 6 பல், இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன், மிளகுத் தூள், தனியா தூள், சீரகத் தூள் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், கெட்டியான தேங்காய்ப் பால் - 3 டேபிள்ஸ்பூன், கெட்டியான புளிக்கரைசல் - 1 டேபிள் ஸ்பூன், வெல்லத்தூள் - 1 டீஸ்பூன், உப்பு, கறிவேப்பிலை - தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

    எப்படிச் செய்வது?

    கடாயில் எண்ணெய் சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை தாளிக்கவும். இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வெங்காயம் பொன்னிற மாகும் வரை வதக்கவும். மிளகாய் தூள் சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும். தேங்காய்ப் பால், புளிக்கரைசல், மிளகுத் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் ஆகிய எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும். அதை வெண்டைக்காய் கலவையில் விடவும். உப்பும் வெல்லமும் சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை சமைத்து இறக்கவும்.
    புலாவ், பிரியாணிக்குத் தொட்டுக் கொள்ள ஏற்றது.

    ஸ்டஃப்டு வெண்டைக்காய்

    என்னென்ன தேவை?

    வெண்டைக்காய் - கால் கிலோ, மிளகாய் தூள் - 20 கிராம், மஞ்சள் தூள் - 5 கிராம், இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - சிறிது.

    எப்படிச் செய்வது?


    வெண்டைக்காயை கழுவித் துடைக்கவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி-பூண்டு விழுது, தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும். வெண்டைக்காயை காம்பு நீக்காமல் நீளமாக வகிர்ந்து கொள்ளவும். தயாராக உள்ள மசாலாவை உள்ளே ஸ்டஃப் செய்யவும். கொஞ்சமாக எண்ணெய் விட்டு, வெண்டைக்காய்களை நன்கு வேகும் வரை வதக்கி எடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.

    * மிளகாய் தூளுக்குப் பதில் பச்சை மிளகாய், ஓமம், கொத்தமல்லித் தழை, இஞ்சி-பூண்டு விழுதுக் கலவையை ஸ்டஃப் பண்ணியும் செய்யலாம்.

    எப்படி வாங்குவது?


    வெண்டைக்காயின் நுனிகளை உடைத்தால் பட்டென்று உடைய வேண்டும். அதுதான் ஃப்ரெஷ்ஷானது என்பதற்கான அடையாளம். உடைக்க முடியாமலோ, உள்ளே உள்ள முத்துக்கள் புடைத்துக் கொண்டு வெளியே தெரிந்தாலோ, அதை வாங்க வேண்டாம். முற்றிய வெண்டைக்காய் ருசியாக இருக்காது.

    எப்படிச் சமைப்பது?

    * ஆர்கானிக் வெண்டைக்காய் கிடைத்தால் மிகவும் நல்லது.
    வெண்டைக்காயில் பூச்சிகள் இருக்கும். ஆப்பிள் சிடர் வினிகரும் உப்பும் கலந்த தண்ணீரில் வெண்டைக்காய்களை முழுசாக அப்படியே சிறிது நேரம் போட்டு வைத்திருந்து விட்டு, பிறகு நன்கு அலசி சமைப்பதே சிறந்தது.
    * வெண்டைக்காயை அலசிய பிறகே நறுக்க வேண்டும். நறுக்கிவிட்டு
    அலசினால் கொழகொழப்புத் தன்மையைக் கையாள்வது மிகவும் சிரமமாக இருக்கும்.
    * கூடியவரையில் இதை அரைவேக்காடாக சமைத்து சாப்பிடுவதே சிறந்தது.

    வெண்டைக்காய் மண்டி

    என்னென்ன தேவை?


    எண்ணெய் - அரை கப், தாளிப்பதற்கு- கடுகு, சீரகம், உ.பருப்பு - தலா 1 டீஸ்பூன், சாம்பார் வெங்காயம் - ஒரு கப், வெண்டைக்காய் - 1/2 கிலோ, தக்காளி - 2 பெரியது, கறிவேப்பிலை - ஒரு பிடி, பூண்டு - 6 பல், தனியா தூள், சீரகத் தூள், மிளகாய் தூள் - தலா 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், அரிசி மாவு - 1 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, புளி - சிறிதளவு.

    எப்படிச் செய்வது?

    எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உ.பருப்பு, சீரகம் போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயத்தை வதக்கவும். அத்துடன் கறிவேப்பிலை, பூண்டு சேர்ந்து வதங்கியவுடன் நீளநீளமாக நறுக்கிய வெண்டைக்காய் போட்டு வதக்கவும். பின் மசாலா தூள்களைச் சேர்த்து பொடி வாசனை போனபின், தக்காளியைச் சேர்த்து வதக்கி உப்புப் போட்டு கடைசியில் புளித் தண்ணீரையும் சேர்க்கவும். நிறைய தண்ணீர் சேர்க்க வேண்டாம். தளதளவென்று கொதி வந்தவுடன் அரிசி மாவைத் தண்ணீருடன் கலந்து கொதிக்கும் மண்டியில் விடவும். கெட்டியானவுடன் இறக்கிப் பரிமாறவும். இது இட்லி, தோசை, ஆப்பம் முதலானவற்றுக்கும் சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் ஏற்றது.

    எடை குறைப்பு முயற்சியில் இருப்போருக்கு மிகவும் உகந்தது வெண்டைக்காய். காரணம், இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்தும் குறைந்த ஆற்றலும். 100 கிராம் வெண்டைக்காயில் இருப்பது வெறும் 35 கிலோ கலோரிகள் மட்டுமே!



  4. #44
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    முருங்கை

    எந்த முனைப்பும் கவனிப்பும் தேவையின்றி வீட்டு வாசல்களில் துளிர்த்துக் கிளம்பும் முருங்கையின் முக்கியத்துவம் நம்மில் பலருக்கும் தெரியாது. ஒருநாள் விட்டு ஒருநாள் முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு ரத்த சோகை என்கிற பிரச்னை எட்டிக்கூடப் பார்க்காது.


    முருங்கை மரத்தை அதிசய மரம் என்றே அழைக்கலாம். அந்தளவுக்கு இந்த மரத்தின் ஒவ்வொரு பாகமும் உபயோகமாக உள்ளது. இலைகள் மட்டுமின்றி, வேர்கள், விதைகள் ஆகியவை சமையல் மற்றும் மருத்துவத்துக்கு உபயோகப்படுத்தப்படுகின்றன என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ். முருங்கையில் மறைந்துள்ள மகத்தான குணங்களைப் பற்றிப் பேசுகிறார் அவர்.

    முருங்கையின் உள்ளே உள்ள விதைகள் மற்றும் முருங்கை இலைகள் ஆகியவற்றில் கரோடின், இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின் சி ஆகியவை அடங்கியுள்ளன.

    *இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் சூப் ஆஸ்துமா, மார்புச் சளி மற்றும் காசநோய் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாக உதவுகிறது. முருங்கை இலைச் சாறு பருக்களை அகற்றி முகத்தை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது.

    *முருங்கை இலைச் சாறு எலும்புகளை வலுவாக்குகிறது. முக்கியமாக குழந்தைகளுக்கும் வளரும் பிள்ளைகளுக்கும் உதவுகிறது. சிறுநீரக நோய்களுக்கு மருந்தாகிறது.

    *இலை, பூ மற்றும் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் சூப், எல்லா வகையான தொற்று நோய், குறிப்பாக தோல், தொண்டை பிரச்னைகள் ஆகியவற்றை சரி செய்கிறது.

    *பச்சையான முருங்கைக்காய் இரும்புச் சத்து, வைட்டமின், கால்சியம் ஆகிய சத்துகளைக் கொண்டது.

    *தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் முருங்கை சாப்பிட்டால் நமது எலும்புகள் வலிமை பெறும் என்பது நிரூபணமாகி உள்ளது.

    *இதன் டானிக்கை தொடர்ந்து கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு கொடுத்தால் அவர்களுக்கு தேவையான கால்சியம், இரும்பு, வைட்டமின் ஆகிய சத்துகள் கிடைக்கின்றன. மேலும்
    கர்ப்பப்பையின் மெத்தனத்தை சரி செய்கிறது. பிரசவத்தை எளிதாக்கி, பிரசவத்துக்கு பின்வரும் பிரச்னைகளையும் சரி செய்கிறது. முருங்கைக் கீரை பொரியல் தாய்ப்பால் அதிகமாக சுரக்க உதவுகிறது.

    *இந்தப் பொரியல் தயாரிக்க முதலில் முருங்கை இலைகளை தண்ணீரில் உப்பு சேர்த்து கொதிக்க விடவேண்டும். பிறகு தண்ணீரை வடிகட்டி விட்டு அந்த இலைகளை நெய் சேர்த்து உண்ண வேண்டும்.

    *முருங்கைக்காய் அஜீரணக் கோளாறுகளுக்கு மருந்தாக உதவுகிறது.

    *இலையின் சாறு 1 டீஸ்பூனுடன் தேன் கலந்து இத்துடன் 1 டம்ளர் இளநீர் சேர்த்து 2 அல்லது 3 முறை ஆயுர்வேத மருந்தாக அருந்த காலரா, பேதி, வயிற்றுக் கோளாறுகள் ஆகியவற்றை சரி செய்யும். இது எலும்புகளை வலுவாக்குவதுடன் ரத்தத்தையும் சுத்தப்படுத்தும்.

    *முருங்கைப் பொடி ஆண்மைக் குறைபாட்டை சரி செய்கிறது. செக்ஸ் உறவில் பிரச்னை
    களைத் தீர்க்கவும் உதவுகிறது.

    எப்படி வாங்க வேண்டும்?

    *முருங்கைக்காய் சிறியதாக இருக்க வேண்டும். ஏனெனில் உள்ளே விதைகள் இருப்பதால் முருங்கை சிறிய அளவில் இருத்தல் வேண்டும். மிகவும் முதிர்ந்த காய்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

    *முருங்கைக்காய் நல்ல பச்சை நிறத்துடனும் மேல் காணப்படும் தோல் மிருதுவாகவும் இருக்க வேண்டும்.

    *முருங்கைக்காய் முற்றிய நிலையில் இருந்தால் லேசாக சீவி விட்டோ அல்லது கீறி விட்டோ சமைக்கலாம்.

    *முருங்கைக்காய்களை வாடாமலும் உலர்ந்த நிலையிலும் வைப்பதற்கு பிளாஸ்டிக் பை அல்லது பேப்பரில் சுற்றி வைக்கலாம்.

    ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். ஆனாலும், ஃப்ரெஷ்ஷாக சமைத்து சாப்பிடுவதே ஆரோக்கியமானது.

    எச்சரிக்கை


    *முருங்கைக்காயில் உடம்புக்குத் தேவையான அத்தனை நல்ல சத்துகளும் உள்ளன. இருப்பினும் வேர் பகுதியிலிருந்து பெறப்படும் தூள்களை மருத்துவரை ஆலோசிக்காமல் உண்ணக்கூடாது. ஏனெனில் இதில் விஷத்தன்மை உள்ள வேதியியல் மருந்துகள் காணப்படுகின்றன. இவை பக்கவாதத்தை உண்டு பண்ணலாம்.

    தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் முருங்கை சாப்பிட்டால் நமது எலும்புகள் வலிமை பெறும்! ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ் சொன்ன முருங்கை ரெசிபிகளை செய்து காட்டுகிறார் சமையல் கலைஞர் ஹேமலதா.

    முருங்கைக் கீரை ரசம்

    என்னென்ன தேவை?
    முருங்கைக் கீரை - ஒன்றரை கப், கறிவேப்பிலை - சிறிது, துவரம் பருப்பு - கால் கப், புளி - 1 டேபிள் ஸ்பூன், தக்காளி - 1 (விழுதாக்கவும்), ரசப் பொடி - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, ஃப்ரெஷ்ஷாக பொடித்த மிளகு - கால் டீஸ்பூன்.
    தாளிக்க...

    எண்ணெய் - 1 டீஸ்பூன், பெருங்காயம் - சிறிது,
    கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த சிவப்பு
    மிளகாய் - 1, கொத்தமல்லி - தேவைக்கு.

    எப்படிச் செய்வது?

    புளியை 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். துவரம் பருப்பையும் 15 நிமிடங்களுக்கு ஊற வைத்து, குக்கரில் 4-5 விசில் வரும் வரை வேக விடவும். பின்பு அதிலுள்ள தண்ணீரை வடிகட்டி பருப்பை மட்டும் எடுத்துக்கொள்ளவும். இதற்கிடையில் முருங்கை இலைகளை 4-5 முறை தண்ணீரில் சுத்தப்படுத்தவும். ஒரு கடாயில் 1 கப் தண்ணீர், முருங்கை இலைகள், கொத்தமல்லி இலை சேர்த்து 5 நிமிடங்கள் வேக விடவும். இலைகள் வெந்தவுடன் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.

    புளிக் கரைசலை சேர்த்துக் கொதிக்க விடவும். இதனுடன் ரசப் பொடி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கடாயை மூடி 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். இதில் வெந்த துவரம் பருப்பு தண்ணீர், வெந்த பருப்பு, மிளகுத் தூள் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கவும். மற்றொரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், கொத்தமல்லி, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். தயாரித்து வைத்துள்ள ரசத்தில் இதனை சேர்த்து கொத்தமல்லி இலை சேர்த்துப் பரிமாறவும். மற்றொரு முறை: பருப்பு சேர்க்காமல் வெறும் புளியை வைத்து இந்த ரசத்தை செய்யலாம்.ஒரு டீஸ்பூன் பூண்டும் சேர்த்து செய்வதால் சுவை கூடும்.

    முருங்கைப் பட்டாணி உருளை மசாலா

    என்னென்ன தேவை?

    முருங்கைக்காய் - 1, உருளைக்கிழங்கு - 2, தோலுரித்த பட்டாணி - அரை கப், எண்ணெய் - 5 டீஸ்பூன், வெங்காயம் நறுக்கியது - 2,
    பச்சை மிளகாய் நறுக்கியது - 3, தக்காளி நறுக்கியது - 2, மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், மல்லித்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், கரம் மசாலா - 1 சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப, புதினா அல்லது கொத்தமல்லி - சிறிது.

    எப்படிச் செய்வது?

    கடாயில் எண்ணெயை வைத்து அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். இத்துடன் தக்காளி, மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடத்துக்கு தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கவும். இத்துடன் முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் 4 கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் வைத்துக் கொதிக்க விடவும். இதன் மேலே புதினா மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து சிறிது கரம் மசாலா தூள் சேர்த்து அலங்கரிக்கவும். சப்பாத்தியுடன் பரிமாறலாம்.

    பாரம்பரிய ரெசிபி

    முருங்கைக்காய் பொரிச்ச கூட்டு

    செய்து காட்டுகிறார் மெனுராணி செல்லம்

    என்னென்ன தேவை?

    சிறு துண்டுகளாக நறுக்கிய முருங்கைக்காய் - 2 கப், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், வெந்த பருப்பு (துவரம் பருப்பு (அ) பயத்தம் பருப்பு) - 1 கப், புளி - ஒரு எலுமிச்சை அளவு, உப்பு - தேவைக்கு.
    வறுத்து அரைக்க...துருவிய தேங்காய் - அரை கப், பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், மிளகு - 1/2 டேபிள்ஸ்பூன், சிவப்பு மிளகாய் - 2, தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்.
    இவற்றை ஒவ்வொன்றாக வறுத்து தேங்காயுடன் சேர்த்து அரைக்கவும்.தாளிக்க... கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை - தேவைக்கு.

    எப்படிச் செய்வது?

    நறுக்கிய முருங்கைக்காயை ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நீர், உப்பு, மஞ்சள் தூள் போட்டுக் கொதிக்க விடவும். பாதி வெந்தவுடன் புளியை கரைத்து வடிகட்டி இதில் ஊற்றவும். பின் அரைத்த விழுது, வெந்த பருப்பு முதலியவை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். கடைசியில் நெய்யில் கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்துப் பரிமாறவும். இத்துடன் வெந்த மொச்சைக்கொட்டை சேர்த்தும் பரிமாறினால் இன்னும் அட்டகாசமாக இருக்கும்.


    Last edited by chan; 12th Apr 2015 at 12:42 PM.

  5. #45
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    ரத்த விருத்தி தரும் வாழைக்காய்



    வாழைக்காயில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தை தான் சமைப்பது வழக்கம். அதற்காக மற்ற வகை வாழைக்காய்களை சாப்பிடக் கூடாது என்பது கிடையாது. அவைகள் பரவலாக கிடைப்பதில்லை.


    மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து இருக்கிறது. இதனால் உடல் பருக்கும். உடலுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும். பசியை அடக்கும். இதனுடன் மிளகு சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. வாயால் ரத்தம் கக்குபவர்களுக்கும், கிராணி, நீரழிவு உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக் கச்சல் பயன்படும்.


    வாழைக்காயைச் சமைக்கும்போது மேல் தோலை மெல்லியதாகச் சீவியெடுத்தால் போதும். உள்தோலுடன் சமைப்பதே சிறந்தது. சிலர் இதுபோன்று சீவியெடுத்த தோலை நறுக்கி வதக்கி, புளி, மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள். பொதுவாக கேரளத்தில் இந்தப் பழக்கம் அதிகம் இருக்கிறது.


    இப்படி துவையலாக செய்து சாப்பிடுவதால் ரத்த விருத்தியும், பலமும் உண்டாகும். வாழைக்காய் சாப்பிடு வதால் வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் ஆகியவையும் நீங்கும். ஆனால் வாய்வு மிகும். அதுபோல வாழைப்பிஞ்சு சாப்பிடுவது பத்தியத்திற்கு ஏற்றதுதான் என்றாலும் மலத்தை இறுக்கி விடும்.


    பச்சை வாழைக்காயை சின்ன சின்ன வில்லைகளாக நறுக்கி வெயிலில்; உலர்த்தி மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்.



  6. #46
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    இஞ்சி


    காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் தின்றால் கோலை ஊன்றி குறுகி நடந்தவன் கோலை வீசி குலுக்கி நடப்பான் மிடுக்காய் என்கிறது சித்த மருத்துவம்.

    மருத்துவர்களுக்கு மட்டுமின்றி, சமையல் கலைஞர்களுக்கும் மிகப் பிடித்த ஒரு தாவரம் இஞ்சி. எப்படிப்பட்ட உணவிலும் துளி இஞ்சி சேர்க்க, அதன் சுவையும் மணமும் பன்மடங்கு கூடுவதே காரணம்.

    இஞ்சியின் மகத்துவம் பற்றி நமக்குத் தெரியாத தகவல்களுடன், இஞ்சியை வைத்துச் செய்யக்கூடிய சுவை உணவுகள் மூன்றின் செய்முறையையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் பிரபல சமையல் கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத்.

    உலகெங்கும் உபயோகப்படுத்தும் இஞ்சியின் அளவில் 50 சதவிகிதம் இந்தியாவில் மட்டும் பயிரிடப்படுகிறது. எல்லா நாட்டை யும் விட தரமான இஞ்சி நமது இந்தியாவில்
    பயிரிடப்படுவதுதான்.

    நமது இந்திய சமையலில் இதற்கு மிக முக்கிய இடமுண்டு. வட இந்திய, தென் இந்திய சமையல் எல்லாவற்றிலும் தினமும் உபயோகப்படுத்தும் ஒரு சில உணவுகளில் இஞ்சியும் ஒன்று. இதனுடைய மருத்துவ குணங்களிலேயே இதற்கு மிக முக்கியத்துவம் அக்காலத்திலிருந்தே தரப்பட்டது.

    * இஞ்சியை உலர வைத்தால் சுக்கு. இரண்டு விதமாகவும் நமக்கு பயன்படும்.

    * இஞ்சியில் நார்ப்பொருள் அதிகம் உள்ளதால் சிறிதே உண்டாலும் மலச்சிக்கல் ஏற்படாது.

    * இஞ்சி காரத்தன்மை கொண்ட ஒரு உணவு. அதிக அமிலத்தன்மை உள்ள உணவுகளை உட்கொண்டாலும் சிறிதே இஞ்சி சேர்க்கும்போது அமிலத்தன்மை, காரத்தன்மையாக உடலில் மாற்றப்பட இஞ்சி உதவி செய்யும்.

    * உடலில் அதிகக் கொழுப்பு படியாமல் இருக்க இஞ்சி உதவி புரியும்.

    * வாய்வைப் போக்கும் தன்மை உடையது இஞ்சி.

    *ஆயுர்வேத முறைப்படி நமது நாட்டில் அக்காலத்தில் இருந்தே பசியைத் தூண்டவும், வயிற்று வலியைக் குறைக்கவும், வாய்வுத் தொல்லையை நீக்கவும் மருந்தாகவும் உபயோகித்து பலவிதமாக லேகியம், சூரணம் செய்து பயன் பெற்றார்கள்.

    * இஞ்சியில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் பல நாடுகளில் மதுபானங்கள் தயாரிக்கவும் உபயோகப்படுத்தப்படுகிறது
    (Ginger Beer).

    * இஞ்சியை உலர வைத்து பொடியாக்கியதை பிஸ்கெட், கேக், மிட்டாய் போன்றவற்றிலும் மார்ச்சளிக்கான மருந்துகளிலும் சேர்ப்பதால் இதன் பயன் மிகவும் அதிகம்.

    * இஞ்சி முரப்பா, இஞ்சி மிட்டாய் இன்றும் பல வீடுகளில் இருப்பதைப் பார்க்கலாம்.

    * இஞ்சி, புதினா இரண்டையும் நசுக்கிப் போட்டு வட இந்தியாவில் தினமும் போடப்படும் மசாலா டீயின் ருசிக்கு ஈடு இணையே இல்லை.

    * சுக்கும் கொத்தமல்லியும் சேர்ந்த சுக்கு மல்லிக் காபியை இன்றும் பல கிராமங்களில் காபிக்கு பதிலாக தினமும் குடிக்கின்றனர். இருமல், சளி வராமல் தடுக்கும். வந்த பின் எடுத்துக் கொண்டாலும் நலம் பயக்கும்.

    * ஆயுர்வேதத்தில் மூன்று முக்கிய மருத்துவ குணம் உடைய உணவை திரிகடுகம் என்று கூறுவர். சுக்கு, மிளகு, திப்பிலி இந்த மூன்றையும் பொடி செய்து தினமும் உட்கொண்டால் வாதம், பித்தம், கபம் மூன்றையும் நமது உடலில் சமன்படுத்த உதவும் என்று எழுதி வைத்திருந்ததை உபயோகப்படுத்தி பயன் கண்டவர்கள் கணக்கிலடங்காது.

    * பால் கொடுக்கும்போது தாய்மார்களுக்கு ஜீரணமாகவும், மலச்சிக்கல் ஏற்படாமலும், எடை கூடாமலும் இருக்க செய்யப்பட்ட சூரணம்,
    லேகியங்களில் சுக்கின் பங்கு மகத்தானது.

    * பலவிதமான லேகியங்கள், சூரணங்கள் செய்ய பல நாட்டுச் சரக்குகளுடன் சுக்கும் சேர்க்கப்பட்டது. தீபாவளி மருந்திலும் இஞ்சி/சுக்கு மிக முக்கியமான பொருளானது.

    * வட இந்திய உணவுகளான கிரேவி, மசாலா, குருமா போன்றவையிலும் பிரியாணி, புலாவ் என எல்லாவற்றிலும் இஞ்சி சேர்க்காமல் ருசியே இருக்காது.

    * அசைவம், சைவம் இரண்டு வகை உணவிலும் இஞ்சி இல்லாத இந்திய உணவே இல்லை.

    * தென்னிந்தியாவில் சட்னி, துவையல், குழம்பு, சில வகை ரசம், குருமா வகையில் தினமும் இஞ்சி இருக்கும்.

    இஞ்சி சட்னி

    என்னென்ன தேவை?
    இஞ்சி - 25 கிராம், புளி - எலுமிச்சை அளவு, எண்ணெய் - சிறிது, கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் - தாளிக்கத் தேவையான அளவு, வெல்லம் - ஒரு சிறு கட்டி, சாம்பார் பொடி - சிறிது, உப்பு - தேவைக்கு.

    எப்படிச் செய்வது?
    இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி மிக்ஸியில் சிதைக்கவும். புளியை ஊறவைத்து கரைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து இஞ்சி விழுதைச் சேர்க்கவும். 1/4 கப் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வேக வைக்கவும். அதோடு புளிக்கரைசல், உப்பு, வெல்லம், சாம்பார் பொடி சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.

    * தினமும் செய்யும் தேங்காய் சட்னியில் மிளகாயுடன் இஞ்சி, கொத்தமல்லி சேர்த்து அரைத்தால் நல்ல மணத்துடன் இருக்கும். தேங்காயின் கொழுப்பு உடலில் சேராது. ஜீரணமாகும்.

    பதப்படுத்தப்பட்ட இஞ்சி


    என்னென்ன தேவை?
    இஞ்சி - கால் கிலோ, சிட்ரிக் ஆசிட் - 1 டீஸ்பூன், தண்ணீர் - அரை லிட்டர், சர்க்கரை - அரை கிலோ.
    எப்படிச் செய்வது?
    இளம் இஞ்சியை தோல் சீவி மெல்லிய வட்டங்களாக்கவும். அதோடு தண்ணீர் ஊற்றி 1/2 டீஸ்பூன் சிட்ரிக் ஆசிட் சேர்த்து பிரஷர் குக்கரில் 1 விசில் வரும் வரை வேக வைக்கவும். வடிக்கட்டி துண்டங்களை தனியே வைக்கவும். வடித்த தண்ணீரை ஸ்குவாஷாக செய்யலாம்.
    இஞ்சி துண்டுகளுடன் கால் கிலோ சர்க்கரை கலந்து மூடி வைக்கவும்.

    மறுநாள் அதை அடுப்பில் வைத்து சூடாக்கி சர்க்கரை கரையும் வரை வைக்கவும். துண்டுகளை எடுத்து தனியே வைத்து மீதி 1/4 கிலோ சர்க்கரையுடன் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்ததும் இஞ்சித் துண்டுகளை அதில் சேர்த்து மூடி வைக்கவும்.மூன்றாம் நாள் இஞ்சி துண்டுகளை வடிகட்டி தனியே வைத்து சர்க்கரையுடன் 1/2 டீஸ்பூன் சிட்ரிக் ஆசிட் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விட்டு துண்டுகளை சேர்க்கவும். நன்றாக ஆறவிட்டு டப்பாவில் போட்டு வைத்து உபயோகப்படுத்தவும். 1 வருடம் ஆனாலும் கெடாது.

    இஞ்சி ஸ்குவாஷ்

    என்னென்ன தேவை?
    இஞ்சி வேக வைத்த தண்ணீர் - அரை லிட்டர், சர்க்கரை - 1 கிலோ, சிட்ரிக் ஆசிட் - 10 கிராம், எலுமிச்சைப் பழம் - 5.

    எப்படிச் செய்வது?
    எல்லாவற்றையும் ஒன்றாகக் கொதிக்க வைத்து ஆறியபின் எலுமிச்சைப் பழம் பிழிந்து கலந்து பாட்டிலில் ஊற்றவும். தேவைப்படும்போது 1 பங்கு சிரப்புடன் 3 பங்கு தண்ணீர் ஊற்றி கலந்து பரிமாறவும். இதை குடித்தால் 1/2 மணி நேரத்துக்குள் நன்றாக பசி எடுக்கும்.

    பால் கொடுக்கும்போது தாய்மார்களுக்கு ஜீரணமாகவும், மலச்சிக்கல் ஏற்படாமலும், எடை கூடாமலும் இருக்க செய்யப்பட்ட சூரணம், லேகியங்களில் சுக்கின் பங்கு மகத்தானது!

    என்ன இருக்கிறது? (100 கிராமில்)

    ஆற்றல் 80 கிலோ கலோரி
    கார்போஹைட்ரேட் 17.77 கிராம்
    நார்ச்சத்து 2 கிராம்
    கொழுப்பு 0.75 கிராம்
    புரதம் 1.82 கிராம்
    வைட்டமின் பி6 0.16 மி.கி.
    வைட்டமின் சி 5 மி.கி.
    வைட்டமின் இ 0.26 மி.கி.
    தையமின் 0.025 மி.கி.
    ரிபோஃப்ளேவின் 0.034 மி.கி.
    கால்சியம் 16 மி.கி.
    இரும்பு 0.6 மி.கி.



  7. #47
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலசர்க்கரை நோயாளிக&

    சர்க்கரை நோயாளிகளின் உன்னதமான உணவு வெள்ளரிக்காய்



    வெள்ளரியில் அதிக அளவிலான விட்டமின் கே சத்து அடங்கியிருக்கின்றது. இது எலும்புகளை பலப்படுத்த மிகவும் உதவுகின்றது.

    விட்டமின் கே அல்ஸைமர் என்னும் மறதி நோய் வராத வண்ணம் மூளை நரம்புகளுக்கு ஊட்டசத்தாகவும் விளங்குகின்றது.

    * 100 கிராம் வெள்ளரியில் 96 சதவீதம் அளவுக்கு நீர்ச்சத்து அடங்கியுள்ளது. சாதாரண நீரை விட பல்வேறு ஊட்டசத்துக்களை இது உள்ளடக்கி இருப்பதால் கோடை காலத்தில் ஏற்படும் தாகத்தையும், வியர்வையால் ஏற்படும் சோர்வையும், வெயிலின் கொடுந்தாக்கத்தால் ஏற்படும் மூளை வறட்சி அதனால் உண்டாகும் மயக்க நிலை இவற்றினின்று விடுதலை தரும் வகையில் விரட்டியடிக்கும் வல்லமையைப் பெற்றிருக்கிறது. வயதானவர்களின் மூளை நரம்புகளில் சிதைவு ஏற்பட்டு மறதி நிலை வராத வண்ணம்

    * வெள்ளரிச் சாற்றில் அதிக அளவு “பொட்டாசியம்” மற்றும் “மெக்னீஷியம்”, சிறிதளவே ஆன “சோடியம்” அடங்கியுள்ளது.
    பொட்டாசியம், மெக்னீஷியம், சோடியம் ஆகிய இம்மூன்றும் ஒருசேர நமக்குக் கிடைக்கின்ற போது நமது ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தக் கூடியதாக அமைகின்றது. வெள்ளரியை தாராளமாகப் பயன்படுத்தும் போது ரத்த அழுத்தம் குறைந்த நிலையிலும் ரத்த அழுத்தம் மிகுந்த நிலையிலும் அதைச் சமப்படுத்தும் உன்னத மருந்தாக நமக்குப் பயன்தருகின்றது.

    * வெள்ளரிச் சாற்றில் இயற்கையிலேயே “ஆல்கலைன்” என்று குறிக்கப் பெறும் சுண்ணாம்புச்சத்து மிகுந்துள்ளது. அதில் வழவழப்புத்தன்மை தரும் பல்வேறு தாது உப்புக்கள் அடங்கியுள்ளன. இது அமிலத்துக்கு எதிராக செயல்பட்டு அமிலத் தன்மையின் செயல்திறனை மட்டுப் படுத்தி அதை நீர்மைப்படுத்த உதவுகிறது. இதனால் அமிலச் சுரப்பின் காரணமாகவும், அமிலத் தேக்கத்தின் காரணமாகவும்

    ஏற்படும் குடற்புண்கள் வராத வண்ணம் பாதுகாக்கப்படுகின்றது.

    * வெள்ளரியில் “சிலிகான்” மற்றும் “கந்தகச் சத்துக்களும்” மிகுந்துள்ளன. இவை தலைமுடி வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக விளங்குகின்ற சத்துப் பொருள்கள் ஆகும். கருமையான, செழுமையான, மென்மையான தலைமுடி வளர்ச்சிக்கு மேற்கூறிய “சிலிகான்” மற்றும் “கந்தகச்” சத்துக்கள் தூண்டுதலாக அமைகின்றன. உள்ளுக்கு சாப்பிடுவதாலும் மேலுக்கு உபயோகப்படுத்துவதாலும் இப்பலன் நம்மைச் சேருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

    * வெள்ளரி கணையத்தைச் சரிவர செயல்படுத்துவதற்கும் பயன்தருகின்றது. கணையம் போதிய “இன்சுலின்” சத்தை உற்பத்திசெய்வதால் சர்க்கரை நோயினின்று நமக்கு விடுதலை கிடைக்கின்றது. சர்க்கரை நோயாளிகளின் உன்னதமான உணவுப் பொருளாக வெள்ளரியும் விளங்குகிறது என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

    * வெள்ளரியில் வெகு எளிதில் சீரணமாகக் கூடிய மாவுச் சத்து அமைந்து இருக்கின்றது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சாதகமான உணவாகின்றது.

    * வெள்ளரி உடல் எடையைக் குறைக்கக் கூடிய உணவாகவும் நமக்கு உதவுகின்றது. வெள்ளரி தன்னுள் மிகக் குறைந்த எரிசக்தியையும் மிக அதிகப்படியான நீர் சத்தினையும் பெற்று இருப்பதோடு பல்வேறு ஊட்டச்சத்துக்களும் போதிய பலத்தை உடலுக்குத்தருவதாக அமைந்து தேவையின்றி அதிக உணவு உண்பதைத் தவிர்த்து உடலை இளைக்கச் செய்ய உதவுகின்றது.

    * வெள்ளரியை போதிய அளவு உண்பதினால் ரத்தத்தில் கலந்திருக்கும் “யூரிக் அமிலம்” அளவைக் குறைக்க இயலும் என்று நவீனஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. மேலும் சிறுநீர்ப் பைகளில் இதன் மூலம் உண்டாகும் கற்கள் தவிர்க்கப் பெறுகின்றன.

    * வெள்ளரியின் மேல் படிந்துள்ள தோல் “சிலிகா” என்னும் வேதிப் பொருளையும் “டயட்டரிஃபைபர்” என்னும் நார்ச்த்துப் பொருளையும்
    கொண்டுள்ளது. இதிலுள்ள “சிலிகா” என்னும் சத்து தோலின் திசுத் தொடர்புக்கு மிகவும் உதவியாக விளங்குகிறது. மேலும் நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுப்பதற்கும் உதவுகின்றது.

    ஒரு கப் வெள்ளரி (அ) சுமார் 133 கிராம்
    வெள்ளரியில் புரதச் சத்து 825 மி.கி.,
    நீர்ச்சத்து 126 கிராம்,
    பைட்டோ ஸ்டிரால்ஸ் 19 மி.கி.,
    எரிசத்து 18 மி.கி.,
    கார்போ ஹைட்ரேட் 3.9 கிராம்,
    நார்ச்சத்து 798 மி.கி.,
    மாவுச்சத்து 605 மி.கி.,
    சர்க்கரை 2 கிராம், கொழுப்பு சத்து 180மி.கி.,
    ஒமேகா கொழுப்பு சத்து 24.7 மி.கி.,
    விட்டமின் ‘ஏ’ 118,
    விட்டமின் ‘சி’ 4 மி.கி.,
    விட்டமின் ‘ஈ’ 40 மி.கி.,
    விட்டமின் ‘கே’ 16மைக்ரோ கிராம்,
    ‘தயாமின்’ 39 மை.கி.,
    ரிபோஃப்ளேவின் 39 மை.கி.,
    நியாசின் 90 மி.கி.,
    விட்டமின் ‘பி6’ 61 மை.கி.,
    போலிக் அமிலம் 14மை.சி.,
    “போன்டோதெனிக் அமிலம்“ 332 மை.கி.,
    “தோலின்” 8 மி.கி.,
    ‘கால்சியம்’ 20 மி.கி.,
    இரும்பு சத்து 333 மை.கி.,
    மெக்னீஷியம் 17மி.கி.,
    பாஸ்பரஸ் 30 மி.கி.,
    பொட்டாசியம் 188 மி.கி.,
    சோடியம் 2.7 மி.கி.,
    சிங்க் 246 மை.கி.,
    செம்பு 101 மை.கி.,
    செலினியம் 0.27 மை.கி.,
    ஃப்ளூரைட் 1.7 மை.கி.
    என்னும் அளவில் சத்துக்கள் செரிந்துள்ளன.

    மேற்கூறிய சத்துக்களை வெள்ளரி பெற்றிருப்பதால் சோர்வு ஏற்பட்ட போதெல்லாம் 100 கிராம் வெள்ளரிச் சாறு சாப்பிட்டால்
    உடனடியான புத்துணர்வு ஏற்படும்.

    * வெயில் காலத்தில் வெளியே சென்று சூரியக் கதிர்களின் தாக்கத்தால் தோலின் வெடிப்பு ஏற்படும், கருமை வண்ணம் உண்டாகுதல்,

    சுறுக்கங்கள் தோன்றுதல் என்று எந்த பிரச்சினையானாலும் சிறிது வெள்ளரித் துண்டை புதிதாக எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தின்மேல்
    லேசாகத் தேய்ப்பதால் தோல் பழைய ஆரோக்கியத்தைப் பெறுவதோடு சுறுக்கங்களும் மறைந்து போகும்.

    * வெள்ளரிச் செடியின் இலையை சிறிது சீரகம் சேர்த்துக் கலந்து வறுத்துப் பொடியாக்கி வைத்துக் கொண்டு வெருகடி அளவு உள்ளுக்கு
    சாப்பிட தொண்டைப் புண், தொண்டைக் கட்டு, குரல் கம்மல் போன்ற தொண்டை நோய்கள் குணமாகும்.

    * இரண்டு அல்லது மூன்று வெள்ளரி இலைகளை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து சுவைக்கென போதிய சர்க்கரை சேர்த்துக் குடித்து வர
    சிறுநீரைப் பெருக்கி எளிதில் வெளியேற்றும்.

    * வெள்ளரிப் பிஞ்சுகளை பசுமையாவே உண்பதால் உடலின் வெப்பம் தணிந்து நாவறட்சியும் குணமாகும்.

    * வெள்ளரியின் விதைகளை மேல் தோல் நீக்கிப் பொடித்து வெருகடி அளவு எடுத்து பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர உடலுக்கு
    வன்மையைத் தருவதோடு தாது விருத்தியை அதிகரிக்கச் செய்யும்.

    * வெள்ளரி விதையைத் தோலுடன் சேர்த்துப் பொடித்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து நீரிலிட்டுக் காய்ச்சி தீநீராக்கி சிறிது சர்க்கரைசேர்த்துக் குடிக்க சிறுநீரைப் பெருக்கி வெளித்தள்ளும். இதனால் கை கால்களில் ஏற்படு வீக்கம் தணியும்.

    * வெள்ளரி இலைச்சாறு வாந்தியை உண்டு பண்ணக் கூடியது. குழந்தைகளின் பசியின்மையைப் போக்கிப் பசியைத் தூண்டக் கூடிய விதத்தில் வெள்ளரிச் சாறு 5 முதல் 10 மி.லி. வரை உள்ளுக்குக் கொடுக்க வாந்தியுண்டாகி வயிற்றிலுள்ள அழுக்குகள் வெளியேறி பசி உண்டாகும்.

    * 5 முதல் 10 கிராம் வெள்ளரிக் கொடியின் வேரை எடுத்து பொடித்து நீரிலிட்டுக் காய்ச்சி உடன் தேனோ பனை வெல்லமோ சேர்த்துக்குடிக்க சிறுநீர் தாராளமாய் வெளியேறி வீக்கங்கள் கரையும் சிறுநீரகமும் பலம் பெறும்.

    * வெள்ளரி வித்து 28 கிராம் அளவு எடுத்து நன்கு பொடித்து எவ்வகையிலேனும் உள்ளுக்கு சாப்பிட்டு அதைத் தொடர்ந்து பேதி மருந்தாகஏதேனும் ஒன்றை (விளக்கெண்ணெய் போன்றது) உள்ளுக்குக் கொடுப்பதால் வயிற்றிலுள்ள நாடாப்புழுக்கள், தட்டைப் புழுக்கள்,கீரிப்புழுக்கள் என்று சொல்லக் கூடிய பல்வேறு புழுக்களும் வெளியேறி வயிறு சுத்தமாகி ஆரோக்கியம் பெருகும்.

    * வெள்ளரிக்காயை அன்றாடம் உணவோடு சேர்த்துக் கொள்வதால் ஈரல் பலம் பெறும். உடல் உஷ்ணத்தினால் வரும் காமாலை போன்ற நோய்கள் வாராது தடுக்கப்படும். தோலும் பலம் பெறும், பொலிவு பெறும்.

    * வெள்ளரிக்காயில் சிலிகான் மற்றும் கந்தகச் சத்து மிகுந்து இருப்பதால் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதாலும் அடிக்கடி வெள்ளரிக் காயை அரைத்து தலைக்குத் தேய்த்து மசாஜ் செய்து முப்பது நிமிடங்கள் கழித்துத் தலைக்குக் குளிப்பதால் தலைமுடிகொட்டுவது, பொடுகு, தலைமுடி உடைவது போன்ற குற்றங்கள் நீங்கி தலைமுடி செழுமையாகவும், மென்மையாகவும், முனைகள் உடையா வண்ணமும் தோன்றும்.

    * வெள்ளரிப்பிஞ்சு உண்பதால் எல்லா நலனும் பெருகும். முற்றிய காய்கள் வாதத்தை அதிகரிக்கும், கனிகளோ சீதள சம்பந்தமானநோய்களை விருத்தி செய்யும் என்பதால் இவற்றை மனதில் இறுத்தி அன்றாடம் வெள்ளரியைப் பயன்படுத்தி ஆரோக்கிய வாழ்வுக்கு அடிகோல வேண்டும்.

    Last edited by chan; 14th Apr 2015 at 02:32 PM.

  8. #48
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலசர்க்கரை நோயாளிக&

    மாங்காய்

    சுவைத்தால்தான் என்றில்லை... நினைத்தாலே நாவில் நீர் ஊறச் செய்வது மாங்காயும் மாம்பழமும் மட்டுமே! வருடத்தில் எல்லா நாட்களும் கிடைக்கிற மாங்காயை விட, சீசனில் மட்டுமே கிடைக்கிற மாம்பழங்கள் எப்போதும் கொஞ்சம் ஸ்பெஷல்தான். மாங்காய் சாம்பார், மாங்காய் பச்சடி, மாங்காய் ஊறுகாய் என மாங்காய் சேர்த்த சமையலில் சுவையும் மணமும் தூக்கலாகவே இருக்கும். அது மட்டுமல்ல, மாங்காயில் பலருக்கும் தெரியாத ஆரோக்கியமும் ஒளிந்திருக்கிறது. மாங்காயின் சிறப்புகளை விளக்கி, அதை வைத்து மூன்று சுவையான ரெசிபிகளையும் செய்து காட்டுகிறார் சமையல் கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத்.


    மாம்பழம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது இந்தியாதான். பழங்களின் அரசன் என்று கூறப்பட்டாலும் மாம்பழத்தைப்போல மாங்காய்க்கும் இந்தியாவில் சம முக்கியத்துவம் கிடைத்துள்ளது. முன்பெல்லாம் பருவ காலங்களில் மட்டுமே மாங்காய் கிடைக்கும். இப்போது கிளிமூக்கு மாங்காய் வருடம் முழுவதும் கிடைக்கிறது. இந்தியாவில் 6000 வருடங்களுக்கு முன்பே மாமரங்கள் இருந்ததாக பல குறிப்புகள் உள்ளன. நமது இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்திலும் இதைப்பற்றி எழுதப்பட்டுள்ளது நம் அனைவருக்கும் தெரியும்.



    கல்விக் கடவுளான சரஸ்வதி தேவியை பூஜை செய்ய மாம்பூவை உபயோகப்படுத்தப்பட்ட குறிப்புகள் உள்ளன. வீட்டின் முன் பண்டிகைகளின்போது மாவிலையைக் கட்டும் பழக்கம் இன்றும் உள்ளது. ஹோமங்கள், பூஜைகளின் போதும் கலசத்தின் மீது மாங்கொத்து வைக்கப்படுகிறது. மாமரத்தை கல்ப விருட்சம் என்று கூறுவார்கள். வீட்டின் முன்பு கட்டுவது மங்களகரம் என்றாலும் அதிக அளவு ஆக்ஸிஜனை வெளித்தள்ளும். அதனால் நமக்கு நன்மையே தரும் என்பதுதான் முக்கிய காரணமாக இருக்கலாம். பலவிதமான மருத்துவ குணங்கள் உடையது. பூ, பிஞ்சு, காய், பழம் என்று எல்லாமே நமக்கு பலன் தரும்.

    காளிதாசனின் கவிதைகளிலும் மாம்பூவைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. காஞ்சியில் புத்த ஸ்தூபியில் கூட மாம்பழம்/மாங்காய் கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது. மற்ற பல உலக நாடுகளில் கிடைத்தாலும் இந்தியாவில்தான் மாம்பழத்துக்கும் மாங்காய்க்கும் ஒரு தனி அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. நகைகளில் கூட மாங்காய் மாலை இன்று வரை பலருக்கும் பிடிக்கும் வண்ணம் விதவிதமான டிசைன்களில் செய்யப்படுகிறது. புடவை, பெட்ஷீட், ஜன்னல் திரை என்று எதிலும் நாம் மாங்காயை விட்டு வைக்கவில்லை.மாங்காயைப் போன்ற ருசியான காய் வேறு எதுவும் இல்லை. பலவிதமான ஊறுகாய், சட்னி மட்டுமன்றி பல சமையல் குறிப்புகளிலும் மாங்காயை நாம் உபயோகப்படுத்துகிறோம்.

    சத்துகள் என்னும்போது மாங்காயில் தாது உப்புகள் மிகச்சிறந்த அளவில் உள்ளன. கரோட்டின் எனப்படும் வைட்டமின் - ஏ, தயாமின், ரிபோஃப்ளோவின், நயாசின் எனப்படும் மூன்று பி-வைட்டமின்கள் உள்ளன. இதில் ஓரளவு கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்தும் கொஞ்சமாக இரும்புச்சத்தும் உள்ளன. 100 கிராம் மாங்காயில் 44 கலோரி சக்தி நமக்கு கிடைக்கும். பல உணவுகளில் வைட்டமின் - ஏ இருப்பதாகக் கூறப்பட்டாலும் 100 கிராம் அளவு நம்மால் சாப்பிட இயலாமல் இருக்கும். ஆனால், மாங்காயை நாம் சுலபமாக 100 கிராம் சாப்பிட இயலும். அதில் கிட்டத்தட்ட 99 மைக்ரோ கிராம் அளவு வைட்டமின்-ஏ நமக்கு கிடைக்கும். பலவித உணவுகளோடு சாலட்டில் சேர்த்து சாப்பிடும்போது நமக்குத் தேவையான அளவு சுலபமாகக் கிடைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினருக்கும் மிகவும் பிடித்தமானது. முக்கியமாக கர்ப்பிணிப் பெண்கள் மசக்கையின் போது மாங்காயை உண்ண வேண்டுமென ஆசைப்படுவார்கள்.

    மாங்காயை அப்படியே மெலிதாக அரிந்து உப்பு, காரம் தூவி உண்ணும்போது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ரசித்துச் சாப்பிடும்படி உள்ளது. வடஇந்தியாவின் ஆம் பன்னா எனப்படும் மாங்காய் ஜூஸ் மிகப்பிரசித்தம். வெயில் நாட்களில் எல்லா இடங்களிலும் தாகத்தைத் தணிக்கும் வண்ணம் இது கிடைக்கும்.மாவடுவை தயிர் சாதத்துடன் ஒரு தடவை சுவைத்தவர்கள் அதன் ருசியில் மயங்கி அடிக்கடி கேட்க வைக்கும் அளவு மிகப்பிரபலமானது. ஆந்திராவில் ஆவக்காய், மாங்காய் ஊறுகாய்கள் அதிகம் விரும்பப்படும். வடஇந்தியர்கள் லேசான இனிப்பு கலந்த அந்தா என்றொரு ஊறுகாயை செய்வார்கள்.

    மாங்காயை துருவி சாதமும் செய்யலாம். அடையிலும் போடலாம். இது இல்லாத சுண்டல் ருசியில் குறைவாகவே இருக்கும். நமது வாழ்வில் இன்றியமையாத ஓர் இடத்தைப் பெற்றுள்ளது மாங்காய் என்றால் மிகையாகாது. மாங்காய் சீசனில் கிடைக்கும்போது ஊறுகாய் தவிர நாம் மாங்காய் சாதம் மிக்ஸ் செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் பல மாதங்கள் வரை வைத்திருந்து உபயோகப்படுத்தலாம். காலை நேர அவசரத்தில் சுலபமாக மாங்காய் சாதம்/சேவை செய்து டிபன் பாக்ஸில் கட்டித் தரலாம்.

    இதற்கு கிளிமூக்கு மாங்காயைத் துருவிக்கொள்ளவும். எண்ணெய் அதிகமாக வைத்து கடுகு, உ.பருப்பு, கடலைப் பருப்பு, உடைத்த சிவப்பு மிளகாய் தாளித்து, தேவைக்கேற்ப பச்சை மிளகாய் விழுது, மாங்காய் துருவல் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கலாம். மஞ்சள் தூளையும் அப்போதே சேர்த்து விடலாம். சில நிமிடங்கள் வதக்கி ஆற விட்டு தேவையான பொடி உப்பையும் சிறிது வறுத்த வெந்தயத்தின் தூளையும் கலந்து பாட்டிலில் எடுத்து வைக்கவும். வேண்டுமென்றபோது உடனே உபயோகப்படும். ஆறிய பிறகுதான் உப்பு சேர்க்க வேண்டும். இல்லாவிடில் ஊறுகாய் போல நீர் விட்டு வந்துவிடும். இதை நாம் சுண்டலுக்கு கூட உபயோகப்படுத்தலாம்.

    மாங்காய் அடை

    என்னென்ன தேவை?

    இட்லி அரிசி - 2 ஆழாக்கு,
    இஞ்சி - அரை அங்குலத் துண்டு,
    பச்சை மிளகாய் - 4,
    உப்பு - தேவைக்கேற்ப,
    தேங்காய்த் துருவல் - சிறிது,
    உருளைக்கிழங்கு - 1, கிளிமூக்கு மாங்காய் -1,
    கடுகு - தாளிப்பதற்கு,
    எண்ணெய் - தேவைக்கேற்ப.

    எப்படிச் செய்வது?


    இட்லி அரிசியைக் கழுவி தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து முதலில் அரைத்த பின் இட்லி அரிசியை கரகரப்பாக அரைக்கவும். கடைசி யில் துருவிய தேங்காய், உருளைக்கிழங்கு துருவல், மாங்காய் துருவல் சேர்த்து லேசாக வதக்கி எடுக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து சேர்க்கவும். அரைத்த உடனே அடை சுடலாம். சிறிது கனமான அடைகளாக சூடான தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். மிக ருசியாக இருக்கும்.

    மாங்காய் துவையல்

    என்னென்ன தேவை?

    கிளிமூக்கு மாங்காய் - 1,
    புளி - நெல்லிக்காய் அளவு,
    உப்பு - தேவைக்கேற்ப,
    மஞ்சள் தூள் - சிறிது,
    கொத்தமல்லி - அரை கட்டு,
    பச்சை மிளகாய் - 3, கடுகு, எண்ணெய் - தேவைக்கேற்ப.

    எப்படிச் செய்வது?

    மாங்காயை தோல் சீவி மிகப் பொடியாக நறுக்கவும். ஊற வைத்த புளி, தகுந்த உப்பு, மஞ்சள் தூள், கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். (தண்ணீர் விடாமல் அரைக்கவும்) நறுக்கிய மாங்காயுடன் கலந்துவிடவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து சேர்க்கவும். இதை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் மிக ருசியாக இருக்கும்.

    மற்ற பல உலக நாடுகளில் கிடைத்தாலும் இந்தியாவில் தான் மாம்பழத்துக்கும் மாங்காய்க்கும் ஒரு தனி அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது.

    மா பலவிதமான மருத்துவ குணங்கள் உடையது. பூ, பிஞ்சு, காய், பழம் என்று எல்லாமே நமக்கு பலன் தரும்.



  9. #49
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலசர்க்கரை நோயாளிக&

    சர்க்கரைவள்ளிக் கிழங்கு
    பெயரில் மட்டுமல்ல, குணத்திலும் இனிமையானது சர்க்கரைவள்ளிக்கிழங்கு. டயட் செய்கிறவர்கள், நீரிழிவுக்காரர்கள் போன்றோருக்கு கூடவே கூடாது என அறிவுறுத்தப்படுகிற பட்டியலில் முதலிடம் கிழங்கு வகையறாக்களுக்கே.

    சர்க்கரைவள்ளிக் கிழங்கு மட்டும் விதிவிலக்கு.அப்படியா என அதிசயிக்கிற வர்களுக்கு ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சுரேந்திரன் அடுத்தடுத்து சொல்லப் போகிற தகவல்கள் நிச்சயம் வியப்பைக் கூட்டும்.

    மாவுச் சத்து நிறைந்த வேர் காய்கறியான சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஃப்ளாவனாயிட்ஸ், ஆன்ட்டி ஆக்சிடன்ட், தாதுச் சத்து, நார்ச் சத்து நிறைந்தது. வெப்பமான பகுதிகளில் விளையக்கூடிய இது, பல நிறங்களில் விளைகிறது. மாவுச் சத்தில் கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளாக உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாகவே உயர்த்தும் என்பதால் நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள்கூட குறைந்த அளவு உண்ணலாம்.

    மற்ற கிழங்கு வகைகளைவிட இதில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளதால் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும் செயல்படுகிறது. நரம்பு மண்டலச் செயல்பாடுகளுக்கும் நல்லது. நுரையீரல் மற்றும் தொண்டை புற்று நோயை எதிர்க்கும் தன்மை கொண்டது. இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற உடலுக்கு அவசியமான தாது உப்புக்களும் உள்ளன. இவை புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்களின் வளர்ச்சிதை மாற்றத்தில் பங்கெடுக்கும்.

    கிழங்கைவிட அதன் இலைகள் அதிக ஊட்டச்சத்து நிறைந்தவை. 100 கிராம் புதிய இலைகளில் அதிக அளவில் இரும்பு, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், சோடியம், போரேட் ஆகியவை அடங்கி உள்ளன.

    இன்னும் என்ன சிறப்பு?

    *100 கிராம் கிழங்கில் இருப்பது வெறும் 86 கலோரிகள் மட்டுமே. தவிர, அறவே கொழுப்பற்றது என்பது கூடுதல் சிறப்பம்சம்.

    *உருளைக்கிழங்கில் இருப்பதைவிட, சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அமிலேஸ் அளவு அதிகம். அமிலேஸ் என்பது ரத்தத்தில் சர்க் கரையின் அளவை மிக மெதுவாக அதிகரிக்கக் கூடியது.

    *அத்தியாவசிய வைட்டமின்களான பேன்ட்டோதெனிக் அமிலம், பைரிடாக்சின், தையாமின், நியாசின் மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவற்றை அபரிமிதமாகக் கொண்டது. உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு அவசியம் தேவைப்படுபவை இவை.

    *சர்க்கரைவள்ளிக் கிழங்கில் இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு மற்றும் பொட்டாசியம் போன்றவையும் போதுமான அளவில் உள்ளன.

    *இதில் உள்ள ஆன்த்தோசயானிடின்ஸ், ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடன்ட் மூன்றும் காயங்களை ஆற்றும் குணம் கொண்டவை. இவற்றில் ஆன்த்தோசயானிடின்ஸுக்கு வயிறு, கழுத்து, நுரையீரல் மற்றும் மார்பகப் புற்றுநோய்களுக்குக் காரணமான செல் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் குணமும் உண்டு.

    *ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்வதையும் ரத்தம் உறைவதையும் தடுக்கும் குணமும் இந்தக் கிழங்கில் உண்டு. அதன் தொடர்ச்சியாக இதய நோய்கள் வரும் அபாயங்களும் குறையும்.

    எப்படித் தேர்வு செய்வது?

    *பார்ப்பதற்கு ஃப்ரெஷ்ஷாக, மென்மையான தோல் கொண்டதாக, உறுதியாக இருக்க வேண்டும்.

    *தொட்டால் அமுங்குகிற அளவுக்கு மென்மையான, வதங்கிய வேர்களைக் கொண்ட கிழங்குகளைத் தவிர்க்கவும்.

    *உருளைக்கிழங்கைப் போலவே இதிலும் முளைவிட்ட கிழங்குகள் நல்ல தன்மைகளை இழக்கின்றன.

    *கிழங்கை வாங்கியதும் நிறைய தண்ணீர் விட்டு, மண் போக அலசி, ஈரம் போனதும், காற்றோட்டமான, இருட்டான இடத்தில் பத்திரப்படுத்தப்பட வேண்டும்.

    என்ன இருக்கிறது? (100 கிராமில்)

    ஆற்றல் 86 கிலோ கலோரி
    கொழுப்பு 0
    கொலஸ்ட்ரால் 0
    சோடியம் 55 மி.கி.
    பொட்டாசியம் 337 மி.கி.
    நார்ச் சத்து 3 கிராம்
    சர்க்கரை 4.2 கிராம்
    புரதம் 1.6 கிராம்

    எச்சரிக்கை

    சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள ஆக்சாலிக் அமிலமானது ஆக்சலேட் கற்களாக உருமாறி, கிட்னி ஸ்டோன் பிரச்னைக்கு காரணமாகலாம். எனவே. இந்தக் கிழங்கை எடுத்துக் கொள்ளும் போது கூடவே வழக்கத்தைவிட அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டியதும் அவசியம்.

    மெனுராணி செல்லத்தின் கைவண்ணத்தில் ஒரு பாரம்பரிய ரெசிபி

    சர்க்கரைவள்ளிக் கிழங்கு மசியல்

    என்னென்ன தேவை?

    வேகவைத்து மசித்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 2 கப், புளிக் கரைசல் - (ஒரு
    எலுமிச்சை அளவு புளியிலிருந்து கரைத்தது), உப்பு, மஞ்சள் தூள் - தேவைக்கு, துவரம் பருப்பு - வெந்தது 2 கப்.
    தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, நல்லெண்ணை,
    கடலைப் பருப்பு.

    எப்படிச் செய்வது?


    சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோல் சீவி, பெரிய துண்டுகளாக நறுக்கி வேகவைத்துக் கொள்ளவும். புளி, உப்பு, மஞ்சள் தூள் போட்டு கொதிக்க வைத்த பின் மசித்த கிழங்கு, பருப்பு வகைகளைப் போட்டு நன்கு கொதித்தபின் கீழே இறக்கி வைத்து தாளிக்கவும்.

    ரத்தம் உறைவதையும் தடுக்கும் குணம் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உண்டு. அதன் தொடர்ச்சியாக இதய நோய்கள் வரும் அபாயங்களும் குறையும்.

    டயட் ரெசிபி

    ஷைனி சுரேந்திரன் சொன்ன டயட் ரெசிபிகளை செய்து காட்டியிருக்கிறார் சமையல் கலைஞர் ஹேமலதா

    சர்க்கரைவள்ளிக் கிழங்குசூப்

    என்னென்ன தேவை?

    சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1, வெங்காயம் -1, ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன், துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன், நசுக்கிய பூண்டு - 2 பல், கறி தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், சீரகத் தூள் 1 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன், தேன் - 1 டீஸ்பூன், தேங்காய்ப் பால் - அரை கப், மிளகு - சிறிது, முந்திரி - அலங்கரிக்க.

    எப்படிச் செய்வது?

    சர்க்கரைவள்ளிக் கிழங்கை ஆங்காங்கே குத்திவிட்டு, 10 நிமிடங்கள் வேக விடவும். ஆறியதும் சதைப் பகுதியை மட்டும் தனியே எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம், இஞ்சி-பூண்டை விழுதாக்கி சேர்த்து வதக்கவும். கறி தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள் சேர்க்கவும். கிழங்கு மசியலையும் ஒரு கப் தண்ணீரையும் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். தீயைக் குறைத்து, தேன் மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். தேங்காய்ப் பால் சேர்த்து, 5 நிமிடங்கள் குறைந்த தணலிலேயே வைத்திருக்கவும்.

    சூப் பதத்துக்கு வந்ததும் இறக்கி, மிளகு சேர்த்து, முந்திரியால் அலங்கரித்துப் பரிமாறவும்.

    சர்க்கரைவள்ளிக் கிழங்குதயிர் சாலட்

    என்னென்ன தேவை?

    மீடியம் சைஸ் சர்க்கரைவள்ளிக் கிழங்கு (சுத்தம் செய்து, வட்டமாக ஸ்லைஸ் செய்யவும்) - 1, வெள்ளரிக்காய் (வட்டமாக ஸ்லைஸ் செய்தது) - 1, சிவப்பு குடைமிளகாய் (நீளமாக நறுக்கியது) - 1, கடுகு - 1 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித் தழை மற்றும் புதினா - தலா 1 கைப்பிடி, தயிர் - 300 மி.லி., எலுமிச்சைச் சாறு - சிறிது, உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப.

    எப்படிச் செய்வது?

    கடுகை வெறும் கடாயில் பொரிக்கவும். சர்க்கரை வள்ளிக் கிழங்கை ஆவியில் மெத்தென வேக வைத்து ஆற வைக்கவும். பிறகு அத்துடன் வெள்ளரிக்காய், குடை

    மிளகாய், கடுகு, கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும். பிறகு நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து தயிரும் எலுமிச்சைச்சாறும் சேர்க்கவும். மிளகுத் தூள், உப்பு சேர்க்கவும். தேவையானால் இன்னும் சிறிது தயிர் சேர்த்துப் பரிமாறவும்.


    Last edited by chan; 15th Apr 2015 at 02:32 PM.

  10. #50
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    பீட்ரூட் பியூட்டி & ஹெல்தி!

    உள்ளே.. வெளியே...
    ரத்தச் சிவப்பு காய் என்றதும் நம் நினைவில் வந்து நாக்கில் எச்சில் ஊறவைப்பது பீட்ரூட். அதன் பலன்கள் என்னென்ன?

    உள்ளே...

    பீட்ரூட்டை தோல் சீவி நறுக்கியோ, அரைத்து சாறாகவோ சாப்பிடலாம்.
    ரத்த செல்களின் உற்பத்திக்குத் துணைபுரியும்.
    வைட்டமின் ஏ, சி, சோடியம், மக்னீசியம், கால்சியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் தாது உப்புக்கள் நிறைந்தது.
    புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது.
    நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
    உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றும்.
    எலும்புகளை வலுப்படுத்தும்.

    வெளியே...

    பீட்ரூட் சாற்றை முகத்தில் தடவி, மென்மையாக மசாஜ் செய்வதன் மூலம்...
    தோல் செல்களின் பாதிப்பில் இருந்து காக்கும்.
    பீட்ரூட் ஃபேஸ் பேக் போடும்போது, முகம் பொலிவு பெறும். மற்ற காய்கறி, பழங்கள், தானிய ஃபேஸ் பேக்குடன் பீட்ரூட் சாற்றைச் சேர்த்தும் பூசலாம்.
    முல்தானிமட்டியுடன் சேர்த்துப் பூசினால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.
    பீட்ரூட்டில் உள்ள கரோட்டினாய்ட்ஸ் தலைமுடியின் தரம், ஆரோக்கியம், பொலிவு போன்றவற்றை மேம்படுத்தும்.
    முடியின் வேர்க்கால் பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, வறட்சியைப் போக்கி, ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவும்.
    இயற்கை ஹேர்டையாகச் செயல்படுவதால், ஹென்னாவுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

    Jothimalar likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter