Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree98Likes

காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables


Discussions on "காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #51
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,215

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    தாய்ப்பால் சுரக்கவைக்கும் சுரைக்காய்!

    சுரைக்காய் குடுவையில் நீர் நிரப்பி, குளிர்ச்சியாக குடித்து வந்தனர் நம் முன்னோர். உடலுக்குக் குளிர்ச்சியையும், ஊட்டத்தையும் தரும் சுரைக்காயில் மருத்துவக் குணங்கள் ஏராளம். சுரைக்காயின் பலன்களைப் பற்றி தேனி சித்த மருத்துவர் வே.ஸ்ரீதேவி எடுத்துச் சொல்கிறார்.

    'சுரைக்காய் வெள்ளரிக் குடும்பத்தைச் சேர்ந்த நீர் காய். இனிப்பு, கசப்பு என இரு சுவைகளில் இருந்தாலும், இனிப்பு சுவை கொண்டதையே நாம் அதிகமாகப் பயன்படுத்துகிறோம். ஆண்மைக்குறைபாட்டை நீக்கும் சிறந்த காய் இது. தினசரி உண்டுவந்தால், கல் அடைப்பு நீங்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. சிறுநீர் பெருக்கத்தைத் தூண்டும்; உடலின் வெப்பநிலையையும், பித்தத்தையும் சமநிலைப்படுத்தும். இதனை 'பித்த சமனி’ என்பர்.


    சுரைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி உள்ளன. கை, கால்களில் குறிப்பாகப் பாதங்களில் ஏற்படக்கூடிய எரிச்சல் நீங்க, சுரைக்காயின் சதைப்பகுதியை துணியில் வைத்துக் கட்டினால் எரிச்சல் குணமாகும். சுரைக்காயின் சதைப்பகுதியோடு எலுமிச்சம்பழத்தின் சாற்றினையும் கலந்து தலையில் தேய்த்து குளித்துவந்தால், குளிர்ச்சி ஏற்படும்.

    தினமும் சுரைக்காய் சாறு அருந்திவந்தால், சிறுநீர் பாதையில் ஏற்படக்கூடிய எரிச்சல், பெண்களுக்கு சிறுநீர்ப்பாதை தொற்றுநோயினால் ஏற்படக்கூடிய எரிச்சல் ஆகியவற்றைக் குணப்படுத்தும். குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்கவும், உடல் எடை குறைக்க நினைப்பவர்களும், சுரைக்காயுடன் பாசிப்பயிறு சேர்த்து கூட்டு வைத்து சாப்பிடலாம். உடலில் உள்ள தேவையற்ற நீர்ச்சத்துக்கள் நீங்கி எடை குறையும்.

    சுரைக்காயை அரைத்து உடலில் பூசி வந்தால், உடலின் வெப்பநிலை குறைவதோடு குளிர்ச்சியும் ஏற்படும். சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் தடவிவர, கண் எரிச்சல் குணமாகும். வெயிலில் அதிகமாக அலைவதால் ஏற்படும் தலைவலி, ஒற்றை தலைவலி ஆகியவற்றுக்கு இந்த சுரைக்காயின் சதைப்பகுதியை துணியில் வைத்து கட்டியும், அதனை அரைத்தும் பயன்படுத்தலாம். மெலனின் குறைப்பாட்டினால் ஏற்படும் அல்புனிசம் பாதிப்பு உள்ளவர்களுக்கு (உடலில் ஆங்காங்கே வெள்ளையாக இருக்கும், சூரிய ஒளி பட்டால் எரிச்சல் ஏற்படும்) சுரைக்காயை அரைத்துத் தேய்த்து வந்தால், எரிச்சல் குணமாகும்.



    பொதுவாகச் சுரைக்காய் குளிர்ச்சி தன்மை வாய்ந்தது. இதனை, குளிர்காலத்தில் பயன்படுத்தும்போது சளிபிடிக்க வாய்ப்புள்ளது. எனவே, சுரைக்காயுடன் மல்லி, மிளகுத்தூள், உப்பு ஆகியவை கலந்து சாலட் செய்து சாப்பிடலாம்.

    சுரைக்காய் குடுவையில், தண்ணீரை சேமித்துவைத்துக் குடித்து வந்தால் அதிகப்படியாக ஏற்படும் தாகம் குறையும். அந்தத் தண்ணீரில் உள்ள வைட்டமின் சத்துக்களும் அதிகமாகும். இந்த நீரில் தேனை வைத்து பாதுகாத்தும் உண்டு வரலாம். இந்தச் சுரை ஓட்டினைச் சாப்பிட அல்லது உணவுப்பொருட்கள் வைக்கும் பாத்திரமாகவும் பயன்படுத்தலாம்.' என்கிறார்.

    இனி அனைவரின் வீட்டிலும் சுரைக்காய் சமையல்தானே?

    சுரை இலையும் சத்துதான்!

    சுரைக்காய் இலையுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து கூட்டு வைத்து சாப்பிட்டுவந்தால், நீர் பிணிகள் நீங்கும். உடலில் ஏற்படும் வீக்கங்களையும், நீரேற்ற பிணிகளையும் குறைக்கும். சிறந்த மலமிலக்கியாகவும், சிறுநீர் பெருக்கத்தைத் தூண்டக்கூடிய பொருளாகவும் செயல்படும்.

    இலையுடன் தண்ணீர் சேர்த்துக் கசாயம் தயாரித்து, தேவையான அளவு சர்க்கரை கலந்து சாப்பிட்டால், மஞ்சள் காமாலை சரியாகும்.

    இலைச்சாறுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவைத்து எண்ணெய் தயாரித்துக்கொள்ளலாம். காச நோயினால் ஏற்படக்கூடிய நிணநீர் கோள வீக்கம், அதிகமாகச் சளி பிடிக்கும் குழந்தைகளுக்குக் கழுத்துப் பகுதியில் ஏற்படக்கூடிய கண்டமாலைக் கட்டிகளுக்கு, இந்த எண்ணெயை வெளிப்புறமாகத் தடவி வந்தால், கட்டியின் வீக்கம் விரைவில் குறையும்.


    Sponsored Links
    Last edited by chan; 20th Apr 2015 at 03:36 PM.

  2. #52
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,215

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    மாதவிடாய் கோளாறை சரியாக்கும் முள்ளங்கி!

    குறைந்த விலையில் நிறைந்த சத்துக்களைத் தரும் காய்கறிகளில், முள்ளங்கிக்குத்தான் முதல் இடம். அன்றாட உணவில் தவறாது இடம் பிடிக்கும் காய் இது.

    முள்ளங்கியின் மகத்துவத்தை அறிந்து, பீட்சா, பர்கர், சான்ட்விச் போன்ற வெளிநாட்டு உணவுகளிலும், முள்ளங்கியைத் துருவிப் பயன்படுத்துகின்றனர். முள்ளங்கியின் மருத்துவப் பலன்களைப் பற்றிக் காரைக்குடி சித்த மருத்துவர் சி.சொக்கலிங்கம் பிள்ளையிடம் கேட்டோம்.

    'முள்ளங்கியில் சிவப்பு முள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி, மஞ்சள் முள்ளங்கி, சுவர் முள்ளங்கி



    என நான்கு வகைகள் உண்டு. இதில், நாம் அதிகம் பயன்படுத்துவது வெள்ளை, சிவப்பு முள்ளங்கி. சிறுநீரகக் கல்லடைப்பைப் போக்குவதில் முள்ளங்கிக்கு பெரும் பங்கு உண்டு. தாகத்தைத் தணிக்கும். பெண்களுக்கான மாதவிடாய் பிரச்னையைத் தீர்க்கவல்லது. முள்ளங்கியை சமைக்கும்போது, நாம் பெரும்பாலும் அதனுடைய கீரையைப் பயன்படுத்துவது இல்லை.

    முள்ளங்கி வாங்கும்போதே அதன் கீரையோடு வாங்குவது நல்லது. மதிய உணவில், முள்ளங்கிக் கீரையில் பருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டுவந்தால், மூட்டுவலி, தசைவலி நீர்க் கடுப்பு, எரிச்சலைக் கட்டுப்படும். அதேபோல், மார்பக நோய்களைக் கட்டுப்படுத்தும் தன்மையும் இந்தக் கீரைக்கு உண்டு. சிலர், முள்ளங்கியை பச்சையாகச் சாப்பிடுவார்கள். இதனால், தொண்டையில் எரிச்சல், கரகரப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. வேகவைத்துச் சாப்பிடுவது இந்தப் பிரச்னை வராமல் தடுக்கலாம்.

    ஆண்களுக்கு:

    நீர்த்தடத்தில் ஏற்படக்கூடிய நீர்எரிச்சல், நீர் குத்தல், சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் வெளியேறுதல், உயிரணுக்கள் வெளியேறுவது போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு முள்ளங்கிதான் மருந்து. ஆண்களின் தவறான பழக்கத்தினால் ஏற்படும் மர்ம நோய்கள், சிறுநீருடன் உயிரணுக்கள் அதிகமாக வெளியேறுதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், தகாத உறவினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மீட்டெடுக்க, முள்ளங்கியைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.


    பெண்களுக்கு:

    பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளைப்படுதல், கர்ப்பவாய்ப்புண், மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய அதிக உதிரப்போக்கு ஆகியவற்றைக் கட்டுபடுத்தக்கூடிய தன்மையும் முள்ளங்கிக்கு உண்டு. மேலும் வாதப் பிணி, வயிற்று எரிச்சல், குடல் விருத்தி நோய், கல்லடைப்பு, இருமல், பல்வலி போன்றவற்றுக்கும், முள்ளங்கி சிறந்த ஒரு உணவு.

    தூக்கமின்மையாலும் உடல் மெலிந்து இருப்பவர்கள் தினமும் முள்ளங்கியை உண்டுவர, உடல் வலிமை பெறும். உடலில் உள்ள சத்துக்கள் வெளியேறுவதைத் தடுக்கவும், சிறுநீரை சீராக்கும் தன்மையும் இந்த முள்ளங்கிக்கு உண்டு.

    முள்ளங்கி அல்வா

    முள்ளங்கியை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு அல்வா செய்து கொடுக்கலாம். முள்ளங்கியை நன்றாகத் துருவி குக்கரில் வேகவைக்கவும். இதனுடன் சமஅளவு நாட்டு வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து உரலில் இடிக்கவும். நல்ல மிருதுவாகும். முந்திரிப்பருப்பு, திராட்சை சேர்த்துக் கிளறி இறக்கும்போது, சிறிது ஏலக்காய், நெய் சேர்க்கவும். முள்ளங்கி அல்வா ரெடி.

    டிப்ஸ்...

    இரவில் அதிக தூரம் பயணம் செய்பவர்கள், தண்ணீர் குறைவாக குடிப்பவர்கள், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் முள்ளங்கியுடன் சமஅளவு நெருஞ்சில் வேர் அல்லது முள்ளங்கி மட்டுமேகூட அரைத்து சாறு எடுத்து சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

    சர்க்கரை நோயாளிகள், ஒரு துண்டு முள்ளங்கியுடன் மிதிபாவக்காய் சேர்த்து அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் கட்டுபடும்.

    முள்ளங்கியுடன் கேரட், மிதிபாவக்காய் தலா ஒன்று சேர்த்து அரைத்து சாறு எடுத்து குடித்து வரலாம். அல்லது முள்ளங்கியும் கேரட்டும் அரைத்து ஜீஸ் மாதிரி செய்தும் உண்டுவந்தால் நல்லது.



    Last edited by chan; 20th Apr 2015 at 04:47 PM.
    savithiri and Vaisri02 like this.

  3. #53
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,215

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    புறந்தள்ளும் காய்கறிகளில் உண்டு எல்லையற்ற பலன்கள்

    இன்றைய நவீன உலகில், உணவு கூட சத்தின்றி மாறியுள்ளது. இதனாலேயே பல்வேறு நோய் தாக்குதல்கள் ஏற்படுகிறது. இதில், பெரும்பானவர்களுக்கு உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனாலேயே பல டாக்டர்கள், காய்கறிகளை அதிகளவில் உணவில் சேர்க்க வலியுறுத்துகின்றனர். ஆனாலும், பலரும் சத்தில்லாத காய்கறிகளை மட்டுமே உணவில் சேர்க்கின்றனரே தவிர, சத்தான காய்கறிகளை புறந்தள்ளி விடுகின்றனர். நாம் புறம்தள்ளும் காய்கறிகளில், சத்துகள் மட்டுமல்ல; பல நோய்களுக்கு மருத்துவ சக்தியும் உள்ளது. அந்த வகையில், சில காய்கறிகளும் அதில் உள்ள குணங்களும்:

    கத்திரிக்காய்

    பொதுவாக கத்திரிக்காய் என்றாலே பலருக்கு பிடிப்பதில்லை. சிலருக்கு இது எட்டி காயாக கூட இருக்கலாம். ஆனால், இதில் அரிய குணங்கள் இருப்பது யாருக்கும் தெரியாது. ஆனால், இதை தரம் பிரித்து உண்பதிலும் கவனம் இருப்பது அவசியம் கத்திரிக்காயில் பல வண்ணங்கள் உண்டு, என்றாலும் அனைத்திலும் உள்ள சத்துக்கள் ஒன்றுதான். பிஞ்சு கத்திரிக்காய் சமைப்பதற்கு ஏற்றது. முற்றின கத்திரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி, சிரங்கை ஏற்படுத்தும். இதில், தசைக்கும், ரத்தத்திற்கும் உரம் தரும் வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால், வாயு, பித்தம், கபம் போகும். அதனால்தான், பத்தியத்துக்கு இக்காயை பயன்படுத்துகின்றனர். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

    அவரைக்காய்

    அவரையிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரை பிஞ்சு நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இது சூட்டுடம்புக்கு மிகவும் ஏற்றது. ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் உகந்தது. மேலும், இதில் உள்ள நார் சத்து உடலை வலுவாக்கும் என்பதுடன், அதிக எடை உள்ளவர்கள் இதை உட்கொண்டால், உடம்பு இளைக்கவும் உறுதுணை புரியும்.

    வெண்டைக்காய்


    பொதுவாக வெண்டைக்காயை மூளை வளர்ச்சிக்கு ஏற்றது என்று குறிப்பிடுவது உண்டு. ஆனால், இதன் சுபாவம் குளிர்ச்சி தருவது. இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலை பதப்படுத்தும். இதில் வைட்டமின் சி, பி உயிர்சத்துக்கள் உள்ளன. இதை உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டை தணிக்கும். உஷ்ண இருமலை குணமாக்கும். வெண்டைக்காய் விந்துவை கட்டி போகத்தின் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டை பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினமும் வெறும் வயிற்றில் உண்டால், மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்படும். உடம்பில் வாயு உள்ளவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தும் என்பதில் கவனம் தேவை.

    புடலங்காய்

    நீர் சத்து மிகுந்த காய்களில் இதுவும் ஒன்று. சற்று நீரோட்டமுள்ள காய். சூட்டுடம்புக்கு ஏற்றது. உடம்பின் அலைச்சலை போக்கும். தேகம் தழைக்கும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த கபங்களால் ஏற்படும் திரிதோஷத்தை போக்கும். வயிற்று பொருமல், வயிற்று பூச்சி இவற்றை போக்கும். இதை உண்டால் காமத்தன்மை பெருகும்.

    கொத்தவரங்காய்

    சிறுநீரகத்தை பெருக்கும் தன்மை கொண்டது. இது சூடு தன்மை கொண்டது. இதை தொடர்ந்து உண்டால் சீதம் போக வாய்ப்புண்டு. இது பித்தவாத கடுப்பு, கபம் இவற்றை உண்டாக்கும். அதனால் இது பத்தியத்திற்கு உகந்தது அல்ல. இதன் கெட்ட குணங்களை போக்க இத்துடன் தேங்காய் பருப்பு, இஞ்சி, சீரகம் சேர்த்து சமைக்க வேண்டும்.

    வாழைத்தண்டு

    வாழையை பொறுத்தவரை அடி முதல் நுனி வரை அனைத்தும் மக்களுக்கு பயன்தரக்கூடியது. அதிலும், வாழைத்தண்டு மக்களுக்கு மிகவும் உகந்தது. இதில், நார் சத்து அதிகளவில் உள்ளது. பித்தத்தை தணிக்க கூடியது. சூடு ஏற்படுத்தும் தன்மை இதற்கு உண்டு என்றாலும், சிறுநீரை பெருக்கும். வாழைத்தண்டு பச்சடி உடம்பின் உஷ்ணத்தை போக்கும். வாத பித்தம், உஷ்ணம் முதலியவற்றை தணிக்கும். கபத்தை நீக்கும். இதை உண்டால் குடலில் சிக்கிய முடி, தோல், நஞ்சு ஆகியவை நீங்கும். வாரத்திற்கு ஒரு முறையாவது இதை உண்ணுவது நல்லது.

    தேங்காய்

    உப்பு இல்லாத பண்டம் குப்பையிலேயே என்பதை போல், தேங்காய் இல்லாத சமையலும் சுவைக்காது. கேரள மக்கள் உணவில் அதிகளவில் சேர்த்து கொள்ளும் தேங்காயில் பல நன்மைகள் உண்டு. தமிழகத்தில் கூட சமையலுக்கு மிகவும் பயன்படுகிறது. இதில், ஏ, பி வைட்டமின்கள் சிறிதளவு உண்டு. இது குடல் புண்ணையும் ஆற்றும். இதனால், தாது விளையும். தேங்காய் வழுக்கையில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் மூலச்சூட்டை மாற்றும்.

    சுரைக்காய்

    உடல் சூட்டை தணிப்பதுடன், குளிர்ச்சி தன்மை கொண்டது. இது சிறுநீரை பெருக்கும் தன்மை கொண்டது. உடலை உரமாக்கும். மலச்சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால், பித்த வாயுவை உண்டுபண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால், அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தை போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும் இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மை இழந்தவர்கள், திரும்ப பெறுவர்.


    Vaisri02 likes this.

  4. #54
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,215

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    ப்ராக்கோலி /பச்சைப் பூக்கோசு



    பச்சைப் பூக்கோசு என்று அழைக்கப்படும் ப்ராக்கோலி Brocoli, முட்டைக்கோவா வகையைச் சேர்ந்த ஒரு காய்கறியாகும். உலகிலேயே அதிகமான சத்துள்ள காய்கறிகளில் ஒன்றாக ப்ராக்கோலி கருதப்படுகிறது. அதேபோல் அது நமக்கு அளிக்கும் நன்மைகளும் மிகவும் அதிகமாகும்.

    ஆரோக்கியமான நன்மைகள்

    ப்ராக்கோலியில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்துப் பொருள்கள், நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால்களைக் குறைக்க உதவுகின்றன.ப்ராக்கோலியில் உயிர் வளியேற்ற எதிர்ப் பொருள்கள் நிறைந்து காணப்படுகின்றன.

    ஃப்ளேவோனாய்டுகள், கரோட்டீனாய்டுகள், லூட்டின், பீட்டா-கரோட்டீன் மற்றும் ஸியாஸாந்த்தின் ஆகிய பொருட்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
    நம் வயிற்றில் உள்ள செரிமானப் பாதைகளை நன்றாகச் சுத்தப்படுத்துவதில் ப்ராக்கோலி பெரும்பங்கு வகிக்கிறது.

    உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் அதிகம் இருப்பதும் ஒரு காரணமாகும்.
    ப்ராக்கோலியில் கல்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது. எலும்பு வளர்ச்சிக்கு கல்சியம் நல்லது.

    ப்ராக்கோலியில் உள்ள மினரல்கள், உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்கள் ஆகியவை புற்றுநோயை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தவையாகும்.இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கட்டுக்குள் வைத்திருக்கவும் ப்ராக்கோலியில் உள்ள நார்ச்சத்து உதவுகிறது.

    ப்ராக்கோலியில் உள்ள விட்டமின் C, விட்டமின் K மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை மனநலத்தை அதிகரிக்க உதவுகின்றன. ஞாபகசக்தி அதிகரிப்பதோடு, புத்திசாலித்தனமாக விளங்கவும் இவை உதவுகின்றன.

    பலவிதமான எரிச்சல்களையும், அலர்ஜிகளையும் போக்குவதற்கு ப்ராக்கோலி மிகவும் பயன்படுகிறது. இதில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மற்றும் கேம்ப்ஃபெரால் ஆகியவை தான் அலர்ஜிக்கு எதிராக வேலை செய்கின்றன.ப்ராக்கோலியில் காணப்படும் குளூக்கோராஃபானின், பாதிக்கப்பட்ட சருமங்களுக்குப் பகைவனாக உள்ளது.

    எனவே ப்ராக்கோலியை சாப்பிடுவதால் சரும நோய்கள் விலகும்; தோல் பளபளப்பாகும்.
    பொட்டாசியமும், மக்னீசியமும் ப்ராக்கோலியில் நிறைந்து காணப்படுகின்றன. மத்திய நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்க இவை பெரிதும் உதவுகின்றன.



    Last edited by chan; 22nd Apr 2015 at 05:30 PM.
    savithiri and Vaisri02 like this.

  5. #55
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,215

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    வெயில் காலத்தில் உஷ்ணத்தை தணிக்கும் சுரைக்காய்



    சுரைக்காய் என்பது கொடி இனத்தைச் சார்ந்த ஒரு தாவரம். சுரைக்காய் ஒரு குடத்தைப் போல உருண்டை வடிவுடையதாயும் பருமனாகவும், பளபளப்பாகவும், மேல் தோல் மிகவும் மிருதுவானதாகவும் இருக்கும். உட்பகுதியில் மிக்க சதைப்பற்றோடு விதைகள் வெண்மையாகவும் காணப்படும். சுரைக்காய் மிகுந்த நீர்ச்சத்து உடையது.


    இது சீதளத்தை உண்டாக்க வல்லது. சுரைக் கொடியின் கீரையைக் கூட சமைத்து (கடைந்து) உபயோகப்படுத்துவது உண்டு. இது சீதளத்தை உண்டாக்கக் கூடியது. உடல் உஷ்ணத்தை தணிப்பதற்கென இதை உபயோகப்படுத்தலாம். இது சிறு நீரைப் பெருக்கக் கூடிய சிறந்த உணவுப் பொருள். இதை உணவாகக் கொள்ளும்போது உடலில் நீரேற்றத்தால் வந்த வீக்கத்தை கரைக்க வல்லது.

    தேங்கிய சிறுநீற்றை வெளித்தள்ள உதவுவது. பூசணிக்காயை அல்வா என்னும் இனிப்பு பண்டம் செய்வது போல சுரைக்காயையும் துருவி இனிப்பான அல்வா செய்யப் பயன்படுத்தலாம். வீக்கம், கட்டிகளைக் கரைக்கவும், கொப்புளங்களை ஆற்றவும் இதை நசுக்கி மேற்பற்றாக பயன்படுத்துவர். சுரைக் கொடியின் இலைத் தீநீர் மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகத் தருவதுண்டு.

    சுரை இலையினால் நீர்க்கோவை, உடம்பு வீக்கம், முத்தோஷம் ( வாத, பித்த, சிலேத்தும குற்றங்கள்) போகும். சுரை இலை மலத்தை இளக்கவல்லது என்பதால் மலச் சிக்கல் உடையவர்கள் இதைக் கீரையாகக் கடைந்து சாப்பிடலாம். இது சீரணத்தையும் துரிதப்படுத்த வல்லது. சுரைக்கு பைத்தியத்தை தணிவிக்கும் தன்மையும் உண்டு.

    புதிதாக எடுக்கப்பட்ட 100 கிராம் சுரைக்காயில் கீழ்வரும் சத்துக்கள் அடங்கியுள்ளதாக அமெரிக்கத் தாவர இயல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். எரிசக்தி 14 கலோரி, மாவுச் சத்து 3.39 கிராம், புரதச் சத்து 0.62 கிராம், கொழுப்புச் சத்து 0.02 கிராம், நார்ச்சத்து 0.5 கிராம், விட்டமின்களான போலேட்ஸ் எனப்படும் போலிக் அமிலம் 6 மைக்ரோ கிராமும், நியாசின் 0.320 மி.கிராமு, பேண்டோதெனிக் அமிலம் 0.152 மி.கிராமும், பைரிடாக்ஸின் 0.040 மி.கி., ரிபோஃப்ளேவின் 0.22 மி.கி.,

    தயாமின் 0.29 மி.கி., விட்டமின் ஏ 16 ஐ.யு., விட்டமின் சி 10.1 மி.கி., மற்றும் நீர்ச்சத்துக்களான சோடியம் 2 மி.கி., பொட்டாசியம் 150 மி.கி., தாது உப்புக்களான சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) 26 மி.கி., தாம்பரம் (காப்பர்) 0.034 மி.கி., இரும்புச் சத்து 0.20 மி.கி., மெக்னீசியம் 11 மி.கி., மேங்கனீசு, 0.089 மி.கி., பாஸ்பரஸ் 13 மி.கி., செலினியம் 0.2மி.கி., துத்தநாகம் (ஸிங்க்) 0.70 மி.கி. மேற்கண்டபடி பல்வேறு மருத்துவ வேதிப் பொருட்களை உள்ளடக்கிய உள்ளதால் சுரைக்காய் ஓர் அருமையான மருந்தாக விளங்குகிறது.

    சுரைக்காயின் மருத்துவ குணங்கள்: -

    * சுரைக்காய் தன்னுள் 96 சதவீதம் நீர்ச்சத்தைப் பெற்றிருக்கிறது. இதனால் இதனுடைய சாறு எடுப்பது மிகவும் எளிதாகின்றது. சுரைக்காய்ச் சாறு விட்டமின் சி, விட்டமின் பி, விட்டமின் சி, சோடியம், இரும்பு, பொட்டாசியம் ஆகிய சத்துக்களைப் பெற்றுள்ளதால் புத்துணர்வு தரக் கூடிய, சோர்வைப் போக்கக் கூடிய உணவாகப் பயன்படுகின்றது.

    * ஒரு கப் சுரைக்காய்ச் சாற்றில் 1.8 மி.கி. துத்தநாகச்சத்து இருப்பதால் அது செல்களின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும், உட்சுரப்பிகள் ஒழுக்காகச் சுரப்பதற்கும் உறுதுணையாகின்றது.

    * உடல் பருமன் ஆனவர்கள் சுரைக்காய் சாறு ஒரு கப் அளவு எடுத்து அன்றாடம் காலையில் குடிப்பதால் உடல் எடை குறைந்து அழகான மெலிந்த தேகத்தைப் பெறுவர்.

    * பொட்டாசியம், இரும்புச்சத்து, விட்டமின்கள் ஆகியன செறிந்த சுரைக்காய்ச் சாறு ஒரு ஊட்டசத்து மிகுந்த உணவு மட்டுமின்றி பசியை அடக்கித் தேவையின்றி உணவு உண்பதைத் தவிர்த்து உடலை மெலியச் செய்கிறது.

    * சுரைக்காய் தன்னுள் கரையக் கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்களை அபர்மிதமாகப் பெற்றுள்ளது. இது உணவாகும் போது சீரண உறுப்புகளுக்கு பலம் தந்து அவற்றை செம்மைப் படுத்தி மலச்சிக்கலை மறையச் செய்கின்றது. மலச்சிக்கல் இல்லாதபோது இயற்கையாகவே வயிற்றில் அமிலம் சேர்ந்து புண் ஆகுதல். வயிற்றில் காற்று சேர்ந்து வயிற்றை அடைத்தது போல் தோன்றுதல் ஆகிய பிரச்சினைகள் இல்லாமல் போகும். மலச்சிக்கல் இல்லாத போது ஆசனவாய்ப் புற்று அறவே தடுத்து நிறுத்தப்படுகிறது.

    * சுரைக்காய்ச் சாறு தர்ப்பூசணி சாறு போல கோடைக்கால வெயிலினால் வரும் உஷ்ணத்தைத் தவிர்க்க உதவுகிறது. சுரைக்காயில் 95 விழுக்காடு நீர்ச்சத்து உள்ளதால் இது தாகத்தைத் தணிப்பதோடு உடலிலிருந்து வெளிப்பட்டு வியர்வையாய் சென்ற நீர்ச்சத்துக் குறையை ஈடுகட்டுவதாகவும் உள்ளது.

    * சுரைக்காய் சிறுநீற்றைப் பெருக்க வல்லது. சுரைக்காய் சாறு உடலில் தேங்கிய நீரை வெளித்தள்ளி வீக்கத்தையும் கரைக்க உதவுகிறது. சிறுநீரகத்துக்கும் துணையாய் நிற்கிறது.

    * சுரைக்காய் லேசான உறக்கத்தை வருவிப்பதாகவும் அமைகிறது. இதனால் தூக்கமின்மை, தலைவலி ஆகியன தவிர்க்கப் படுகின்றன.

    * அதிகமான வியர்வை, சோர்வு, மயக்கம், பேதி என ஏதேனும் ஓர் துன்பம் உற்ற போது ஒருகப் சுரைக்காய்ச் சாறு உடனடித் தீர்வாக உதவுகிறது. இழந்த நீர்ச்சத்தை சமன்படுத்துகிறது.

    * சுரைக்காய் சாறு பருகுவதால் ஈரல் வீக்கத்தை தவிர்க்கலாம் என்று ஆயுர்வேத நூல்கள் அறிவுறுத்துகின்றன.

    சுரைக்காய் சாறு தயாரிக்கும் முறை :

    சுமார் 300 கிராம் எடையுள்ள ஒரு சுரைக்காயைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளவும். முற்றாத பழுக்காத ஒன்றைத் தேர்ந்து எடுக்கவும். நன்றாக மேற்புறத்தை நீர்விட்டு சுத்திகரித்துக் கொள்ளவும். மேற்றோலை சீவி நீக்கிவிட்டு சதைப் பற்றை மட்டும் எடுத்து சிறு துண்டுகளாக்கி அதனுடன் 5 அல்லது 6 புதினா இலைகளைச் சேர்த்து மிக்ஸியில் இட்டு மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    இதனோடு சிறிது சீரகப் பொடியையும், ஒரு தேக்கரண்டி அளவு மிளகுப் பொடியையும் சேர்த்துக் கொள்ளவும். இறுதியாக தேவைக்கும் சுவைக்கும் ஏற்ப உப்பு சேர்த்து குளிர்விக்கும் பொருட்டு ஐஸ்கட்டிகள் சிலவற்றை சேர்த்து எடுத்துக் கொள்ளவும். சுரைக்காய்ச்சாறு இப்போது பருகத் தக்கதாக இருக்கும்.

    சுரைக்காய் மருந்தாகும் விதம் :

    * சுரைக்காய் சாறு பசுமையாக எடுத்து அன்றாடம் குடித்து வருவதால் உடல் எடை குறைவதோடு மார்பகத்தைப் பற்றிய நோய்கள் பலவும் மறைந்துவிடும்.

    * சுரை இலையைச் சாறாக்கிக் குடிப்பதாலோ அல்லது தீநீரிட்டு சர்க்கரை சேர்த்துக் குடிப்பதாலோ வாந்தியை உண்டாக்குவதற்கும், மஞ்சள் காமாலை நோயைப் போக்குவதற்கும், ஈரல் வீக்கத்தை வற்ற வைப்பதற்கும் பயன்தருவதாக அமையும்.

    * சுரை இலையை மைய அரைத்து தலையில் நன்றாகத் தேய்த்து வைத்திருந்து இருபது நிமிடங்களுக்குப் பிறகு குளித்து விடுவதால் தலை வழுக்கை தவிர்க்கப் படுவதோடு தலை முடியும் வளரும், தலைவலியும் தணியும்.

    * சுரை விதைகளைக் காய வைத்துப் பொடித்து வைத்துக் கொண்டு ஐந்து கிராம் அளவு எடுத்து தேனுடன் சேர்த்தோ அல்லது நீரிலிட்டுக் காய்ச்சி சர்க்கரை சேர்த்தோ குடிப்பதால் வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியேறிப் போகும்.

    * சுரைக்காய்ச் சாறு அல்சர் என்னும் வயிற்றுப் புண்ணை ஆறச்செய்வதோடு அமிலச் சுரப்பை அடக்கி வைத்து செரிமானத்தைத் தூண்டிவிடும்.

    * சுரைக்காயை நசுக்கிப் பசையாக்கி மேற்பற்றாகப் போடுவதனால் தீக்கொப்புளங்கள், நீர்க்கோர்த்து நோகச் செய்யும் கொப்புளங்கள் வந்த வடு தெரியாமல் விலகிவிடும்.

    * கோடைக்கால வெப்பத்தால் உண்டான தலைவலிக்கு சுரைக்காயை அரைத்து நெற்றிப்பத்தாகப் போட்டு வைக்க குணமாகும்.

    * சுரைக் கீரையோடு பூண்டு சேர்த்து ஒருமண்டலம் சமைத்து சாப்பிட்டு வர நீரேற்றம் கரைந்து போகும்.

    * சுரைக்காய்ச் சாற்றுடன் நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி கண்ட மாலைக்கு மேல் போடக் குணமாகும். சுரைக்காய் விலை மலிவானது உன்னத மருத்துவப் பயன்களை உள்ளடக்கியது.


  6. #56
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,215

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    கோடைகாலத்தில் ஆரோக்கியம் தரும் காய்கறிகள்


    உடல் குளிர்ச்சியுடனும், வறட்சியடையாமலும் இருக்க காய்கறிகள் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள்

    கிடைத்து, உடலில் எனர்ஜி குறையாமல், உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து

    உடலை பாதுகாக்க சில காய்கறிகள் உள்ளன.

    சரி, இப்போது கோடை வெயிலைத் தணிக்கும் காய்கறிகள் என்னவென்று பார்ப்போம்.

    • புடலங்காய் கோடையில் ஏற்படும் உடல் வறட்சியைத் தடுத்து, உடலில் நீர்ச்சத்தின் அளவை அதிகரிக்கும். மேலும் கோடையில்

    ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளையும் குணமாக்க உதவுகிறது. விலை குறைவாக புடலங்காயை தினமும் உணவில்

    சேர்த்துக்கொண்டால் உடல் வறட்சி அடையாமல் பாதுகாக்கும்

    • மஞ்சள் பூசணி கோடையில் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். மேலும் செரிமானத்தை மேம்படுத்தி, வயிற்றில் புழுக்கள்

    சேராமல் தடுக்கும்.

    • சுரைக்காயில் தண்ணீர் சத்து அதிகம் இருப்பதால், இதனை கோடையில் வாங்கி அதிகம் சாப்பிட்டால், உடல் வறட்சி அடைவதைத்

    தடுக்கலாம். மேலும் சுரைக்காய் வயிற்று பிரச்சனைகளாக அல்சர் மற்றும் அசிடிட்டி போன்றவற்றைத் தடுக்கும்.

    • வெள்ளை பூசணியில் நீர்ச்சத்து வளமாக நிறைந்துள்ளது. எனவே இதனைக் கொண்டு வாரம் 2 முறை சாம்பார் செய்து சாப்பிட்டால்,

    உடல் வறட்சியடையாமல் இருக்கும். மேலும் வெள்ளை பூசணியில் உள்ள நீர்ச்சத்தால், உயர் ரத்த அழுத்தம் குறைவதோடு, சிறுநீரக

    கற்கள் ஏற்படுவதும் தடுக்கப்படும்.

    • ஏழைகளின் வள்ளல் வெள்ளரிக்காய். கோடையில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதைப் பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியம்

    இல்லை. அதுமட்டுமல்லாமல், வெள்ளரிக்காய் மிகவும் விலைக் குறைவில் கிடைப்பதால், தவறாமல் வாங்கி சாப்பிட்டால், எண்ணற்ற

    நன்மையைப் பெறலாம்.

    • தர்பூசணி பழம் கோடைகாலத்தில் அதிகளவில் கிடைக்கிறது. தர்பூசணியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இதில்

    நீர்சத்து அதிகளவில் உள்ளது. மேலும் உடலுக்கு குளுமையை தருகிறது.

    - கோடை காலத்தில் இந்த காய்கறிகளை உணவில் அதிகளவில் சேர்த்து கொண்டால் உடலின் நீர்சத்தை பாதுகாத்து உடலை

    ஆரோக்கியமாக வைத்து கொள்ளும்.

    Vaisri02 likes this.

  7. #57
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,215

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    கத்தரிக்காய்

    வெங்காயம், தக்காளிக்கு அடுத்தபடியாக தினப்படி சமையலில் அத்தியாவசியமான ஒரு காய் கத்தரி. சாம்பார், காரக்குழம்பு, வற்றல் குழம்பு என எல்லாவற்றுக்கும் ருசி கூட்டக்கூடிய அற்புதமான காய் இது. சுவையில் மட்டுமின்றி, குணங்களிலும் சிறந்து விளங்கும் கத்தரிக்காயை காய்களின் அரசன் என்றே அழைக்கிறார்கள்.

    கத்தரிக்காயின் சுவை சிலருக்குப் பிடிப்பதில்லை. வாரம் ஒரு முறை அதை சமையலில் சேர்த்துக் கொள்பவர்கள் கூட, அதன் அற்புத குணங்களைப் பற்றித் தெரிந்தால் தினசரி மெனுவில் இடம் கொடுப்பார்கள். கத்தரிக்காய் சுவை பிடிக்காதவர்களுக்கும் அதை முறைப்படி சமைத்துக் கொடுப்பதன் மூலம் கத்தரிக்காய் பிரியர்களாக மாற்ற முடியும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் நித்யா. கத்தரிக்காயின் மருத்துவ குணங்களைப் பற்றி விளக்கமாகப் பேசும் அவர், கத்தரிக்காயில் மூன்று வித்தியாசமான ரெசிபிகளையும் சமைத்துக் காட்டியிருக்கிறார்.

    கத்தரிக்காயை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு பருமன் பிரச்னை பக்கத்தில் வராது என்றால் நம்புவீர்களா? உண்மைதான். 100 கிராம் கத்தரிக்காயில் இருக்கும் ஆற்றல் வெறும் 25 கலோரிகள் மட்டுமே. நார்ச்சத்து மிகுந்த காய் என்பதால் கொஞ்சம் சாப்பிட்டதுமே வயிறு நிறைந்த உணவைத் தந்து, அதிகம் சாப்பிட்டு, பருமன் பிரச்னையை வரவழைத்துக் கொள்வதிலிருந்து காக்கும்.கத்தரிக்காய் இதயத்துக்கு நல்லது. நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி 6 மற்றும் ஃப்ளேவனாயிட்ஸ் போன்ற ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ் ஆகியவை நிறைந்திருப்பதால் இது, இதய நோய்கள் தாக்கும் அபாயத்தை வெகுவாகக் குறைக்கிறது. இதிலுள்ள ஆன்ட்டி ஆக்சிடன்ட்டுகள், ரத்தக் குழாய்களை ஆரோக்கியமாக வைத்து, மாரடைப்பு அபாயத்தைத் தவிர்க்கிறது.

    உடலின் எெலக்ட்ரோலைட் விகிதத்தைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பொட்டாசியம். அது கத்தரிக்காயில் நிறையவே உள்ளது. தவிர இது சோடியத்தின் அளவை சரியான அளவில் வைத்து, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது.நீரிழிவுக்காரர்களுக்கு ஏற்ற காய் கத்தரி. காரணம், இதிலுள்ள அபரிமிதமான நார்ச்சத்து. கத்தரிக்காயில் உள்ள குளோரோஜெனிக் அமிலம், உடலின் கொலஸ்ட்ரால் அளவை எல்லை தாண்டாமல் வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்டாக வேலை செய்யும்.

    கத்தரிக்காய் சாப்பிடுகிறவர்களின் மூளை செல்கள் எப்போதும் துறுதுறுப்புடன் இருக்குமாம். நினைவாற்றலை அதிகப்படுத்துமாம்.
    கத்தரிக்காயில் உள்ள ஊட்டங்களும் நார்ச்சத்தும் வயதாவதன் காரணமாக உண்டாகிற சருமச் சுருக்கங்களை விரட்டி, இளமையுடன் காட்சியளிக்க உதவுமாம்.
    கத்தரிக்காயில் மிகச் சிறிய அளவு நிகோட்டின் உள்ளது என்பதால் புகைப்பழக்கத்தைக் கைவிட நினைப்பவர்களுக்கும் மறை
    முகமாக உதவுகிறது.

    எப்படித் தேர்ந்தெடுப்பது?

    மிருதுவான, பளபளப்பான தோல் கொண்டதாக இருக்க வேண்டும்.
    ஊதாவோ, பச்சையோ, வெள்ளையோ... எந்த நிற கத்தரிக்காயாக இருந்தாலும், அதன் தோலின் நிறம் ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும்.
    உறுதியாகவும் கனமாகவும் இருக்க வேண்டும்.
    தோலின் மீது திட்டுத்திட்டாக இருக்கக் கூடாது.
    தோல் அழுத்தமாக இல்லாமல் மெல்லியதாக இருக்க வேண்டியது அவசியம்.
    சுருக்கமான தோல் கொண்ட காய், பழையது மட்டுமின்றி, சமைத்தால் கசப்புச்சுவையையும் கொடுக்கும்.
    விதைகள் குறைவான காய்களாகத் தேர்ந்தெடுப்பதே சிறந்தது.
    கத்தரிக்காயின் காம்புப் பகுதி ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டியது மிக முக்கியம்.

    எப்படிப் பத்திரப்படுத்துவது?

    கூடியவரையில் கத்தரிக்காயை வாங்கிய உடனேயே உபயோகித்து விட வேண்டும். அது சீக்கிரம் வாடிப் போகக்கூடியது.
    கத்தரிக்காய்க்கு அதிக சூடு, அதிக குளிர் இரண்டும் ஆகாது என்பதால் நீண்ட நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்க முடியாது. வெளியிலும் வைத்திருக்க முடியாது.
    கத்தரிக்காயை நறுக்கி ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. நறுக்கிய உடனேயே அது கறுத்துப் போய், வாடி, வதங்கி விடும். உபயோகிக்கும் போது...
    எப்போதும் கத்தரிக்காயை வெட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கத்தி அல்லது அரிவாள்மனையையே பயன்படுத்தவும். கத்தரிக்காயில் உள்ள ஃபைட்டோகெமிக்கலுடன், வேறு உலோகம் வினைபுரிந்து மாற்றங்களை ஏற்படுத்துவதை இதன் மூலம் தவிர்க்கலாம்.
    கத்தரிக்காயை தோலுடன் சமைத்து சாப்பிடுவதே சிறந்தது.
    கத்தரிக்காயை விருப்பமான வடிவத்தில் வெட்டவும். சிறிது உப்பைத் தூவி, அரை மணி நேரம் அப்படியே வைத்திருந்து சமைத்தால்,
    அதிலுள்ள நீர்ச்சத்து வற்றி, சமைக்கும்போது குறைந்த அளவு எண்ணெய் பிடிக்கும். கசப்புச் சுவையும் குறையும். சமைப்பதற்கு முன் உப்பு போக அலசிவிடவும்.

    யாருக்கு வேண்டாம்?

    அசிடிட்டி பிரச்னை உள்ளவர்கள்.
    சரும அலர்ஜி உள்ளவர்கள்.

    கத்தரிக்காய் ஃப்ரை

    என்னென்ன தேவை?

    கடலை மாவு - 50 கிராம்,
    சோள மாவு - 25 கிராம்,
    அரிசி மாவு - 25 கிராம்,
    பச்சைமிளகாய் - 4,
    வெங்காயம் - 2,
    கொத்தமல்லி - 1 கொத்து,
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
    எண்ணெய் - தேவையான அளவு,
    கத்தரிக்காய் - 100 கிராம்,
    உப்பு - தேவையான அளவு.

    எப்படிச் செய்வது?

    கத்தரிக்காயை நன்கு சுத்தம் செய்து, நான்கு துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள், வெங்காய விழுது, கொத்தமல்லி, பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் கடாயில் எண்ணெய் காய்ந்ததும், நறுக்கிய கத்தரிக்காயை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். சுவையான கத்தரிக்காய் ஃப்ரை தயார், சூடாகப் பரிமாறவும்.

    கத்தரிக்காய் ரோல்

    என்னென்ன தேவை?

    கத்தரிக்காய் - 100 கிராம்,
    வேர்க்கடலை - 50 கிராம்,
    எண்ணெய் - தேவையான அளவு,
    காய்ந்த மிளகாய் - 5,
    கடலைப் பருப்பு - 25 கிராம்,
    வெள்ளை எள் - 25 கிராம்,
    உப்பு - தேவையான அளவு,
    சோள மாவு - 2 டீஸ்பூன்,
    அரிசி மாவு - 2 டீஸ்பூன்,
    கடலை மாவு - 2 டீஸ்பூன்,
    பிரெட் தூள் - தேவையான அளவு.

    எப்படிச் செய்வது?

    கத்தரிக்காய்களை நன்கு கழுவி காம்புடன் குறுக்குவாக்கில் வெட்டி வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் கடலைப் பருப்பு, வேர்க்கடலை, காய்ந்த மிளகாய் மற்றும் எள் ஆகியவற்றை எண்ணெயின்றி வறுத்துக் கொரகொரவென பொடித்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு மற்றும் உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.தோசைக்கல்லில் போதுமான அளவு எண்ணெய் விட்டு வேகவைத்த கத்தரிக்காயில் பொடித்து வைத்த பொடியை கத்தரிக்காயின் நடுவில் பரப்பி மாவில் தோய்த்து பிெரட் தூளில் புரட்டி போட்டு எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.


    கத்தரிக்காய் பொடி சாதம்

    என்னென்ன தேவை?

    கத்தரிக்காய் - 100 கிராம்,
    வேக வைத்த சாதம் - 100 கிராம்.

    பொடி செய்ய...

    தனியா - 25 கிராம்,
    காய்ந்த மிளகாய் - 20 கிராம்,
    வேர்க்கடலை - 50 கிராம்,
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்,
    சோம்பு - 1 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு,
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்.

    எப்படிச் செய்வது?

    கத்தரிக்காயை நன்கு சுத்தம் செய்து நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். கடாயில் தனியா, காய்ந்த மிளகாய், வேர்க்கடலை, சீரகம், சோம்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு சேர்த்து வெட்டிய கத்தரிக்காய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். பிறகு சாதம் மற்றும் பொடி சேர்த்து நன்கு கிளறி, சூடாகப் பரிமாறவும்.

    என்ன இருக்கிறது? (100 கிராமில்)

    ஆற்றல் - 25 கிலோ கலோரிகள்
    கார்போஹைட்ரேட் - 5.88 கிராம்
    நார்ச்சத்து - 3 கிராம்
    புரதம் - 0.98 கிராம்
    கொழுப்பு - 0.18 கிராம்
    வைட்டமின் பி 6 - 0.084 மி.கி.
    வைட்டமின் சி - 2.2 மி.கி.
    கால்சியம் - 9 மி.கி.
    இரும்பு - 0.23 மி.கி.
    பொட்டாசியம் - 229 மி.கி.

    கத்தரிக்காயை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு பருமன் பிரச்னை பக்கத்தில் வராது!

    கத்தரிக்காயை தோலுடன் சமைத்து சாப்பிடுவதே சிறந்தது.


    Vaisri02 likes this.

  8. #58
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,215

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    எலும்புகளுக்கு வலிமை தரும் முருங்கைக்காய் !
    பலரும் விரும்பி சாப்பிடும் முருங்கைக்காயில் ஊட்டச்சத்துக்களானது நிரம்பியுள்ளது. முருங்கைக்காயில் உள்ள அதிக அளவு கால்சியம் சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன.

    அதிலும் இதனை பாலுடன் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து, குழந்தைகளின் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும். முருங்கைக்காய் மற்றும் அதன் இலைகள் இரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மையைக் கொண்டவை. மேலும் இது சிறந்த ஊட்டச்சத்தாகவும் செயல்படும்.

    அதற்கு முருங்கைக்காயை சாப்பிடுவதோடு, அதன் இலையை சாறு எடுத்து, சூப்பாகக் காய்ச்சி குடித்து வந்தால், இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, முகப்பரு மற்றும் இதர சரும பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம். முருங்கைக்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும் சக்தி உள்ளது.

    மேலும் இதனை உட்கொண்டு வந்தால், சிறுநீர்ப்பை நன்கு செயல்பட்டு, இதனால் சர்க்கரை அளவு குறைந்து, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவும். உங்களுக்கு தொண்டைப்புண், சளி அல்லது இருமல் போன்றவை இருந்தால், ஒரு கப் முருங்கைக்கீரை சூப் வைத்துக் குடித்து வந்தால் சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுதலைத் தரும்.

    குறிப்பாக முருங்கைக்காய் மற்றும் முருங்கைக்கீரையை உணவில் சேர்த்து வந்தால், நுரையீரல் நோய்களான ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி, காசநோய் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.



  9. #59
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,215

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    புடலங்காய்


    பத்தியச் சாப்பாடு முதல் பந்தி விருந்து வரை எல்லாவற்றிலும் இடம்பெறக்கூடிய முக்கியமான காய் புடலை. வெள்ளரிக்காய் வம்சத்தைச் சேர்ந்த இது,

    வருடந்தோறும் விளையக்கூடியது.பாம்பு போல நீண்டு வளர்கிற வகை, வெள்ளைக் கோடுகள் கொண்ட ஹைப்ரிட் வகை, குட்டை வகை, வெள்ளைப் புடலை, ஹைப்ரிட் தாய் புடலை எனப் பல வகையான புடலை நமக்குக் கிடைக்கின்றன.

    பொரியலாக, கூட்டாக, சாலட்டாக இன்னும் எப்படி வேண்டுமானாலும், எதனுடன் வேண்டுமானாலும் சமைக்கக்கூடிய காய் இது. சீக்கிரம் வெந்துவிடக் கூடியது. ஒரு பிடி அதிகம் சாப்பிட்டாலும் தன் வேலையைக் காட்டாதது...’’ - புடலங்காயின் புகழுரைகளுடன் ஆரம்பிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ். புடலங்காயின் மருத்துவக் குணங்களுடன், அவற்றை வைத்துச் செய்யக்கூடிய மூன்று சுவையான ரெசிபிகளையும் பகிர்கிறார் அவர்.

    மருத்துவ குணங்கள்

    இயற்கையான ஆன்ட்டிபயாடிக் தன்மை கொண்டது புடலங்காய். இருமலைப் போக்கக்கூடியது. இது மிகச்சிறந்த மலமிளக்கியும்கூட. உடலிலுள்ள கபத்தையும் சீழையும் வெளியேற்றி, நச்சுகளையும் வெளித்தள்ளக்கூடியது.நீரிழிவுக்காரர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிற வெகுசில காய்களில் புடலங்காய்க்கு முக்கிய இடமுண்டு. நவீன சீன மருத்துவத்தில் புடலங்காய் செடியின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு முக்கியமான மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது. நீரிழிவுக்காரர்களுக்கு மற்ற காய்களுக்கெல்லாம் இவ்வளவுதான் அளவு என வரையறுக்கப்படுவது போல, புடலங்காய்க்கு கட்டுப்பாடு ஏதுமில்லை. டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு இது மிகச் சிறந்தது. எடை அதிகரிக்காமலும் தேவையான ஊட்டச் சத்துகள் கிடைக்கும் படியும் பார்த்துக் கொள்வது கூடுதல் சிறப்பு.

    புடலைச் செடியின் இலைகளில் இருந்து பெறப்படும் சாறு இதயக் கோளாறுகளுக்கு நல்லது என்கிறது மருத்துவம். மூச்சிரைப்பு மற்றும் உடற்பயிற்சிக்குப் பிறகு ஏற்படுகிற நெஞ்சு வலிகளுக்கு புடலை சாற்றை தினம் 3 வேளைகளுக்கு 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் கொடுத்தால் நிவாரணம் தெரியும்.புடலை இலைச் சாற்றுடன் தனியா சேர்த்து கொதிக்க வைத்த டிகாக்*ஷன் கலந்து தினம் 3 வேளைகள் குடித்து வந்தால் மஞ்சள் காமாலை கட்டுக்குள் வருமாம். காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதிலும்
    புடலைச் சாற்றுக்கு பெரும் பங்கு உண்டு. காய்ச்சல் கண்டவர்களுக்கு புடலங்காயைக் கொதிக்க வைத்த டிகாக்*ஷனை கொடுத்தால் ஒரே இரவில் காய்ச்சல் தணிந்து, உடல்நலம் இயற்கையாக சீராகத் தொடங்கும்.

    மலச்சிக்கல் மற்றும் செரிமானக் கோளாறு களால் அவதிப்படுவோருக்கும் புடலை மருந்தாகப் பயன்படுகிறது. புடலையின் வேர்ப்பகுதியானது மலமிளக்கியாகவும் புடலை இலையானது குடல் தொடர்பான பிரச்னைகளை சரி செய்யவும் பயன்படுகிறது. மிகவும் தீவிரமான மலச்சிக்கலால் அவதிப்படுவோருக்கு புடலங்காயின் விதைகள் உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    புடலங்காய் தண்ணீர் சத்து மிகுந்த ஒரு காய். கொஞ்சம் சாப்பிட்டதுமே வயிறு நிறைந்த உணர்வைத் தரும். எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைப்போர், புடலங்காயை
    அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.அதிக நீர்ச்சத்துள்ள காரணத்தினால், உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது இது. வெயில் நாட்களில் புடலங்காயை உண்
    பதன் மூலம் வெம்மையின் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

    கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களை அதிகமாகக் கொண்டது புடலை. எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும் உடலின் நிலையை சரிவிகிதத்தில் வைத்திருக்கவும் உதவும்.

    கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் புடலங்காய்க்கு முக்கிய இடமுள்ளது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆலோபேஷியா எனப்படுகிற புழுவெட்டால் பாதிக்கப்பட்டு, முடியை இழப்போருக்கு புடலங்காய் இழந்த முடியை மீட்டுத் தரும். இதிலுள்ள அதிகப்படியான தாதுச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் கரோட்டீன்கள் முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைக் காக்கக்கூடியவை. பொடுகைப் போக்கும் குணமும் இதற்கு உண்டு.வைட்டமின் சி சத்து நிறைந்திருப்பதால் புடலங்காய் நோய் எதிர்ப்பு சக்திக்கும் காரணமாகிறது.

    எப்படி வாங்குவது?

    காய்கள் உறுதியாகவும், முனைகள் வட்டமாகவும் இருக்க வேண்டும்.இதன் நிறமானது மிதமான பச்சை முதல் அடர் பச்சை வரை இருக்கலாம். மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் இருந்தாலோ, ஊதிய மாதிரி உப்பியிருந்தாலோ, நுனிகள் சுருங்கியிருந்தாலோ வாங்க வேண்டாம். மெல்லிய புடலங்காய்களில், கனத்த காய்களைவிட விதைகள் குறைவாக இருக்கும்.

    எப்படிப் பத்திரப்படுத்துவது?

    நீர்ச்சத்துள்ள காய்களை கூடியவரையில் உடனுக்குடன் உபயோகிப்பதே சிறந்தது. என்னதான் ஃப்ரிட்ஜில் பத்திரப்படுத்தினாலும், அதன் நீர்ச்சத்து வற்றி, காய் வதங்கி, பிற சத்துகளையும் இழக்கும். ஒன்றிரண்டு நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.கவனம்!புடலங்காயின் விதைகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை என்றாலும் அவற்றை அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால் வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், வாந்தி மற்றும் வயிற்று வலி உண்டாகலாம். புடலங்காயின் வேர்ப்பகுதிகளும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அளவோடு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். கருவைப் பாதிக்கக் கூடும் என்பதால் கர்ப்பிணிப் பெண்கள், புடலை வேரைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.


    ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ் தந்த சமையல் குறிப்புகளை சுவை மாறாமல் சமைத்துக் காட்டியிருக்கிறார் சமையல் கலைஞர் ஹேமலதா.

    புடலங்காய் கூட்டு

    என்னென்ன தேவை?

    சின்னதாக நறுக்கிய புடலங்காய் - 1 கப்,
    துவரம் பருப்பு அல்லது கடலைப் பருப்பு - அரை கப்,
    இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை,
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 2,
    பச்சை மிளகாய் - 2,
    கடுகு - அரை டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிது,
    தேங்காய்த் துருவல் - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன்,
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப.

    எப்படிச் செய்வது?

    தேங்காய், மஞ்சள் தூள், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும். பருப்பை தனியே பிரஷர் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். இஞ்சி-பூண்டு விழுது, பெருங்காயத் தூள் சேர்க்கவும். புடலங்காய் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும். காய் முக்கால் பாகம் வெந்ததும் பருப்பையும் உப்பையும் சேர்த்து இன்னும் சிறிது வேக விடவும். அரைத்த விழுது சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.

    புடலங்காய் விதை துவையல்

    என்னென்ன தேவை?

    புடலங்காய் - 1,
    எண்ணெய் - 1 டீஸ்பூன்,
    தேங்காய்த் துருவல் - அரை கப்,
    கடுகு - 1 டீஸ்பூன்,
    உளுத்தம் பருப்பு - 3 டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 2,
    உப்பு- தேவைக்கேற்ப.

    எப்படிச் செய்வது?

    புடலங்காயை சுத்தம் செய்து, விதைகள் நீக்கித் தனியே எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்துப் பொன்னிறத்துக்கு வறுத்து ஆறவிடவும். மறுபடி கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடாக்கி, புடலங்காய் விதைகளைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். வறுத்து ஆற வைத்துள்ள மற்ற பொருட்களுடன் சேர்த்து தேங்காய் துருவலும் உப்பும் வைத்துக் கரகரப்பாக அரைக்கவும்.டிபன் மற்றும் சாதம் என எல்லாவற்றுக்கும் பொருத்தமான சைட் டிஷ் இது.

    புடலங்காய் பொரியல்

    என்னென்ன தேவை?

    புடலங்காய் - கால் கிலோ,
    எண்ணெய் - இரண்டரை டீஸ்பூன்,
    மஞ்சள் தூள்- 1 சிட்டிகை,
    உப்பு- தேவைக்கேற்ப.

    தாளிப்பதற்கு...

    கடுகு - 1 டீஸ்பூன்,
    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 3,
    பெருங்காயம் - 1 சிட்டிகை,
    கறிவேப்பிலை- சிறிது.

    எப்படிச் செய்வது?

    புடலங்காயைக் கழுவி, நீளவாக்கில் வெட்டவும். விதைகளையும், உள்ளே உள்ள வெள்ளைநிறப் பகுதியையும் நீக்கி, மெலிதான துண்டுகளாக வெட்டவும்.கடாயை சூடாக்கி, எண்ெணய் விட்டு, கடுகை வெடிக்கச் செய்யவும். உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும். பருப்பு சிவந்ததும், புடலங்காய் சேர்க்கவும். மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறி மூடி வைக்கவும். லேசாக வெந்ததும் உப்பு சேர்க்கவும். தண்ணீர் தெளித்து, மூடி வைத்து வேக விடவும். தண்ணீர் அதிகமானால் காய் குழைந்து சுவையே மாறிப் போகும். அவ்வப்போது திறந்து கிளறி விடவும். தேவைப்பட்டால் இன்னும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கலாம். வெந்ததும் இறக்கி, சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் பரிமாறவும்.


  10. #60
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,215

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    அதலைக்காய்

    மூலிகையின் பெயர் – அதலைக்காய்
    தாவரவியற் பெயர் – Momordica tuberosa
    குடும்பம் – cucurbitaceae
    செடி அமைப்பு – அதலைச் செடிகள் பொதுவாகத் தரையில் படர்பவை. சிலவேளைகளில் வயல் வரப்புகளில் இவற்றை வளர்க்கும்போது வேறு செடிகளிலோ கொம்புகளிலோ பற்றிப் படர்கின்றன. மலர்கள் மெல்லிய மஞ்சள் நிறத்தில் நுனிவளர் தார் அமைப்பில் (racemose) இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்மலரிலும் இரண்டு மகரந்த உறுப்புகள் இருக்கின்றன. பெண் மலர் தார் 28 மி.மீ. நீளத்தில் ஒரே ஒரு மலரைத் தாங்கி நிற்கும். காய்கள் 20-25 மி.மீ. நீளம் வரை இருக்கின்றன. காய்களின் கரும்பச்சை நிறப் புறத்தோலில் எட்டு நுண்ணிய வரிகள் இருக்கும். விதைகள் நீளவாக்கில் 4.6 மி.மீ. அளவில் முட்டை வடிவில்
    வழுவழுப்பாகவும் பளிச்சென்றும் இருக்கின்றன.


    நம் நாவில் பட்டவுடன் முதலில் எந்த உணர்ச்சியை நாவிற்கும், மூளைக்கும் உணர்த்துகிறதோ, அந்த உணர்வே நாம் உட்கொள்ளும் பண்டத்தின் சுவையாகும். இவை நாவிற்கு ருசியை தருவதுடன், உண்பதற்கு இனிமையையும், மனதிற்கு மகிழ்ச்சியும், உடலுக்கு ஊட்டத்தையும், நுண்கிருமிகளுக்கு எதிர்ப்பையும் தருபவையே. கசப்பு சுவை, ஜீரணத்தை அதிகப்படுத்தி, உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் நுண்கிருமிகளை வெளியேற்றி, உடல் எரிச்சலை தணித்து, அதிகரித்த ஹார்மோன்களை கட்டுப்படுத்தும் தன்மை உடையது. அது மட்டுமின்றி, சளி, அஜீரணம் போன்ற நாட்பட்ட தொல்லைகளை நீக்குவதுடன், வாய் மற்றும் உணவுப்பாதைகளிலுள்ள அழுக்குகளையும் கழிவாக வெளியேற்றும் தன்மை உடையன. இதுபோன்ற கசப்பு தன்மையுடைய, மருந்தாக பயன்படும் உணவு தான் அதலைக்காய். ஜீரணத்தை அதிகப்படுத்தி ஹார்மோன்களை கட்டுப்படுத்தும் அதலைக்காயில் கசப்பான கிளைக்கோசைடுகள், மொமார்டிக்கோசைடுகள், இன்சுலினுக்கு இணையான பண்புரதங்கள் பெருமளவு காணப்படுகின்றன.

    அதலைக்காய்களின் ஊட்டச்சத்துகள்
    தோட்டக்கலை ஆய்வாளர்களான பார்வதி, குமார் ஆகியோர் அடங்கிய ஆய்வுக்குழுவினர் தங்களது பல்வேறு ஆய்வுகள் வழியாக அதலைக்காய்களின் கூறுகளைப் பிரித்து அவற்றின் விகித அளவுகளை வெளியிட்டுள்ளனர். இவ்வாராய்ச்சியின் வழியாக அதலைக்காய்களில் உள்ள நீர்ச்சத்து, நார்ச்சத்து, மாப்பொருள், புரதம் போன்றவற்றின் அளவுகள் ஏறத்தாழ கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இக்காயை முழுவதும் எரித்த சாம்பலைக் கொண்டு இவற்றிலுள்ள வேதிப் பொருட்களின் விகிதத்தையும் அளந்துள்ளனர். இதே முறைகளில் முன்னதாக பாகற்காய்களின் மீது நடத்திய ஆய்வு முடிவுகளையும் ஒப்பீட்டுக்காகத் தந்துள்ளனர்.

    அண்மைப் பகுதிக்கூறுகள் (100 கிராமில் பகுதி கிராம்)
    கூறுஅதலைக்காய்பாகற்காய்
    நீர்ச்சத்து – 84.30 – 83.20
    நார்ச்சத்து – 6.42 – 1.70
    மாச்சத்து – 12.60 – 10.60
    புரதம் – 2.15 – 2.10
    உணவு ஆற்றல் (கிலோ காலரி/100g) – 73.00 – 60.00

    ஊட்டப்பொருள் (100 கிராமில் பகுதி மி.கி.)
    கல்சியம் – 72.00 – 23.00
    பொட்டாசியம் – 500.00 – 171.00
    சோடியம் – 40.00 – 2.40
    இரும்பு – 1.70 – 2.00
    செப்பு – 0.18 – 0.19
    மங்கனீசு – 0.32 – 0.08
    துத்தநாகம் – 2.82 – 0.46
    பொஸ்பரசு – 0.46 – 38.00
    உயிர்ச்சத்து C – 290.00 – 96.00
    பீற்ராகரோட்டீன் – 0.01 – 126.00

    மருத்துவகுணங்கள்
    தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் அதலை விளையும் பிற பகுதிகளிலும் நெடுங்காலமாக நீரிழிவு, குடற்புழு போன்றவற்றுக்கான நாட்டுமருந்தாகவும், சில வேளைகளில் கருக்கலைப்புக்கும் அதலைக்காய்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.மருந்தாய்வாளர்கள் இவற்றைக் கொண்டு மாந்தரிலும் பிற விலங்குகளிலும் ஆய்வு செய்துள்ளனர்.நீரில் கரைத்த அதலைக்காய்கள் நீரிழிவுக்கு ஆட்பட்ட முயல்களின் குருதியில் இருந்த குளுக்கோசின் அளவைக் குறைப்பதாக அறியப்பட்டுள்ளது.இச்செடிகளின் கிழங்குகளை அரைத்து எத்தனாலில் கரைத்து எலிகளுக்குப் புகட்டியபோது இதயத்தில் குருதிக்குழாய் அடைப்புகளின் போது ஏற்படும் இழையங்களின் அழிவைக் குறைப்பதாகவும் அறிந்துள்ளனர்.கார்பன் டெட்ரா குளோரைடினாலும், பாராசிட்டமாலினாலும் விளையும் கல்லீரல் பாதிப்பையும் இவை தடுக்க உதவுகின்றன என்று அறியப்பட்டுள்ளது.இவற்றின் இலைகளில் இருந்து பெறப்பட்ட மருந்து யானைக்கால் நோயை உண்டாக்கும் கியூலெக்சு வகை நுளம்புகளை எதிர்க்கவல்லது என்றும் அறிந்துள்ளனர்துவரம்பருப்பு – ஒரு மேசைக்கரண்டி அளவு எடுத்து, குழைய வேகவைத்து கொள்ள வேண்டும். அத்துடன் சிறு, சிறு துண்டுகளாக வெட்டிய அதலைக்காய் – 10 கலந்து கொள்ள வேண்டும். பச்சை மிளகு – 1 தேக்கரண்டி, சீரகம் – கால் தேக்கரண்டி, பூண்டு – 1 பல், தக்காளி –2, சிறிய வெங்காயம் – 5 அனைத்தையும் மைய நசுக்கி, சட்டியில் தேவையான நீர் சேர்த்து நன்கு வேக வைத்து, அத்துடன் பருப்பு மற்றும் அதலைக்காய் கலவையை கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து, இறுதியில் பெருஞ்சீரகம், கறுவாப்பட்டை மற்றும் கறிவேப்பிலையை தாளித்து போட்டு, இறக்கி வைத்து கொள்ள வேண்டும்.வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை இதை குடித்து வர வயிற்றில் நுண்புழுக்கள், குடற்கிருமிகள் ஆகியன நீங்கும். சர்க்கரை அளவு மற்றும் கொழுப்புச்சத்து குறையும். நாட்பட்ட புண்கள் ஆறும்.

    Last edited by chan; 17th Jun 2015 at 03:33 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter