Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree98Likes

காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables


Discussions on "காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #61
    janu23 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    New Delhi
    Posts
    323

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    Thanks for sharing such a wonderful information. Here we don't get this vegetable


    Sponsored Links
    chan likes this.

  2. #62
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    சிறுநீரகத்தில் வீக்கமா? இதோ சூப்பர் மருந்து



    பொதுவாக பழங்கள் என்பது நம் ஆரோக்கியத்தில் அதிக பங்கை வகிக்கின்றன.
    பழங்களில் பல வகை இருந்தாலும் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது பரங்கிக்காய் மட்டும் தான், இது இனிப்பாக இருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்று சொல்கிறோம்.

    மணற்பாங்கான இடங்களில் விளையும் பரங்கிக்காய் மிகவும் சுவையாக இருப்பதுடன் கெட்டியாகவும் இருக்கும்.

    பரங்கிக்காயில் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் “ஈ”, வைட்டமின் “பி” மற்றும் இரும்பு, துத்தநாகம், மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், பொட்டாசியம், நியாஸின், ஃபோலிக் அமிலம், கொழுப்பற்ற அமினோ அமிலங்கள் அதிகமாக உள்ளன.

    பரங்கிக்காயுடன் பருப்பு சேர்த்து கூட்டு மாதிரி செய்து சாப்பிடலாம். கறி செய்வதற்கும், சாம்பாரில் சேர்ப்பதற்கும் கூட இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    பரங்கிக்காயின் மகத்துவங்கள்

    பித்தம் போகும், பசியை தூண்டும், சிறுநீர் பெருகும், இது வீரியபுஷ்டியை ஏற்படுத்துவதுடன் மேக நோயையும் நீக்கும் தன்மை உடையது.

    மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும்.

    உடலில் கெட்ட ரத்தத்தைத் தோற்றுவிக்கக் கூடியது.

    பரங்கிக் கொடியின் நுனியில் காணப்படும் தளிர்களை கறி செய்து சாப்பிட்டால், வயிற்றுப் பையில் காணப்படும் பொருமல் வாய்வு, குன்மம், வறட்சி முதலிய குறைகள் நீங்கப்பெற்று நல்ல பசி உண்டாகும்.

    பரங்கிக்காயின் விதைகளை உலர்த்தி எடுத்து உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி ஆகும்.

    பரங்கிக்காய் தொக்கு

    முதலில் பரங்கிக்காயை தோல் சீவி, துருவிக் கொள்ளவும்.

    வாணலியில் வெந்தயத்தை வறுத்து பொடித்துக் கொள்ளவும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகை பொரிய விடவும்.

    இதில் கொஞ்சம் பெருங்காயமும், துருவி வைத்த பரங்கிக்காயையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

    பிறகு பொடிகளான மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.

    சூடு ஆறியதும் வெந்தயப் பொடியைச் சேர்த்து கிளறி விட்டால் சுவையான பரங்கிக்காய் தொக்கு தயார்.

    பயன்கள்

    உடலில் கட்டி இருந்தால் அதன் மீது இந்த தொக்கை பூசுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்

    இதை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் வயிற்று கோளாறுகள் மற்றும் சிறுநீர் கோளாறு பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

    பரங்கிக்காய் சூப்

    பரங்கிக்காயை தோலை சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். இதோடு வெங்காயம் மற்றும் பூண்டை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி மற்றும் பரங்கிக்காயை சேர்த்து போட்டு வதக்கவும்.

    நன்றாக வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும். நன்கு வெந்ததும் இறக்கி ஆற வைத்து அரைத்து கொள்ளவும்.

    பிறகு அரைத்ததை வேறு பாத்திரத்தில் போட்டு பால் ஊற்றி கொதிக்க வைத்து மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லி தூவினால் ஆரோக்கியமான “பரங்கிக்காய் சூப்” தயார்.

    பயன்கள்

    இதை வாரம் இரு முறை சாப்பிட்டு வந்தால் நீர்ப்பை கோளாறுகள் மற்றும் குடல் புழுக்கள் நீங்கும்.

    வாத நோய், தீக்காயங்கள் சிறுநீரக வீக்கம் மற்றும் சிறுநீர் எரிச்சல் ஆகிய கோளாறுகளை இந்த சூப் குறைக்க வல்லது.



  3. #63
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    தேவையற்ற கொலட்ஸ்ராலை குறைக்கும் குடைமிளகாய்




    குடைமிளகாயில் வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துகள் உள்ளது.


    இங்கிலாந்தில் ‘சில்லி பெப்பர்’ என்றும், அமெரிக்கா மற்றும் கனடாவில் ‘பெல் பெப்பர்’ என்றும், அவுஸ்திரேலியா மற்றும் ஆசிய நாடுகளில் ‘காப்சிகம்’ என்றும் அழைக்கிறார்கள்.

    குடைமிளகாய் காரமற்றது என்றாலும், கலர் கலராய் உணவுகளுக்கு அழகூட்டுவது குடைமிளகாயின் சிறப்புத் தன்மை.

    குடைமிளகாயின் பயன்கள்

    வாதம் தொடர்புடைய நோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவைகளுக்கு எதிராக செயல்படுகிறது.

    கீமோதெரபி, ரேடியோ தெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது வாய்ப்புண் தோன்றும், அவைகளை குடைமிளகாய் கட்டுப்படுத்தும்.

    பல்வலி, மலேரியா, மஞ்சள்காமாலை போன்றவைகளை கட்டுப்படுத்தும் சக்தியும் குடைமிளகாயில் இருக்கிறது.

    குடைமிளகாயில், ப்ராஸ்டேட் புற்று நோயை உருவாக்கும் திசுக்களின் செயல்பாட்டை மந்தமாக்கும் சக்தி கொண்டது என்பது ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

    இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, நீரிழிவையும் கட்டுப்படுத்துகிறது.

    இதில் கலோரிகள் மற்றும் கொழுப்பு ஆகியவை குறைவாக இருப்பதால், தேவையில்லாத கொலஸ்ட்ராலின் அளவுகளும் அதிகரிக்காமல் இருக்கும்.

    குடைமிளகாயில் உள்ல கேயீன் என்னும் வேதிப்பொருள், பலவிதமான உடம்பு வலிகளைக் குறைக்கிறது.

    100 கிராம் குடை மிளகாயில் இருக்கும் சத்துக்கள்

    புரோட்டின் – 0.99 கிராம்.

    சக்தி – 31 கலோரி.

    சோடியம் – 4 மி.கிராம்.

    கொலஸ்ட்ரால் – இல்லை.

    கொழுப்பு – 0.3 மி.கிராம்.

    தாதுச் சத்து – 6.02 மி.கிராம்.

    பொட்டாசியம் – 211 மி.கிராம்.

    மெக்னீசியம் – 12 மி.கிராம்.

    வைட்டமின் சி – 127.7 மி.கிராம்.

    கால்சியம் – 7 மி.கிராம்.

    இரும்பு – 0.43 மி.கிராம்.

    குடைமிளகாய் சாதம்

    முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் வெண்ணெய் போட்டு உருகியதும், சீரகம், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.

    பின்னர் பட்டை மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட்டு, பின் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை போட்டு, தீயை குறைவில் வைத்து 4 நிமிடம் வதக்க வேண்டும்.

    பின்பு அதில் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறி, பின் சாதம் மற்றும் முந்திரியைப் போட்டு, நன்கு 2 நிமிடம் வதக்கி விட்டு, இறுதியில் தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான வெண்ணெய் மற்றும் குடைமிளகாய் சாதம் ரெடி.

    பயன்கள்

    உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    எளிதில் வயதான தோற்றத்தை தருவதையும் தடுக்கும்.

    Last edited by chan; 22nd Jun 2015 at 02:21 PM.

  4. #64
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    மாதவிலக்கின்போது பெண்கள், வாழைப்பூ சமைத்து சாப்பிட்டால் . . .

    நம் முன்னோர்கள் வாழையை பெண் தெய்வமாக வழிபட்டனர். மணவிழா, மங்கள விழாக்களில் வாழை முக்கிய இடம்பெற்றிருக்கும். வாழையின்
    அனைத்து


    பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டுள்ளன. இந்த வாழையின் ஒரு அங்கமாக விளங்கும் வாழைப் பூவில் இருக்கும் மருத்துவ குணங்களில் ஒன்றினை இங்கு காண்போம்.பெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.

    மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகும். அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண் மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங் கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும்.

    உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும். மேலும் அச்சமயத்தில் ஏற்படும் வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவர்கள் வாழைப்பூவை இரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.


    Last edited by chan; 22nd Jun 2015 at 02:41 PM.

  5. #65
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    காய்கறிகளில் வைரம் பீர்க்கங்காய்



    இயற்கையின் உன்னத படைப்பில் காய், கனிகள் விளைகின்றன. பீர்க்கங்காய், பீட்ரூட், பாகற்காய், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகளில் அதிக சத்துக்கள் உள்ளன. இதில் முக்கிய இடத்தை பீர்க்கங்காய் பிடிக்கிறது. இயற்கை சத்துக்கள் நிறைந்துள்ளதால், சந்தையில் இதற்கு கிராக்கி அதிகம். பீர்க்கங்காயில் குறைவான கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புச் சத்து உள்ளது.

    இதில் நன்மை தரும் நார்ச்சத்து, வைட்டமின் சி, ரைபோபிளேவின், துத்தநாக சத்து, இரும்பு சத்து மற்றும் மெக்னீசியம் உள்ளது.ரத்தத்தை சுத்தகரிக்கும் தன்மை உள்ளது. இதில் உள்ள இயற்கை சத்துக்கள் ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது.

    பீர்க்கங்காயில் உள்ள பீட்டா குரோடீன் கண் பார்வைக்கு ஊட்டம் தரும்.

    இதில் உள்ள செல்லுலோஸ் மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றை சீராக வைக்கும். பித்தப்பையை சுத்தப்படுத்தி, உடலில் ஆல்கஹால் இருந்தால், அதன் நச்சு முறிக்கும் அருமருந்து. உடல் எடையை குறைக்க உதவும். தோல் வியாதிகளான சோரியாஸிஸ் மற்றும் எக்ஸீமா ஆகியவற்றை குணப்படுத்த பயன்படுகிறது.

    பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும். உடலுக்கு உரம் ஏற்றும். இந்தக் காய் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும். வயிற்று தொந்தரவு களை நீக்குவதுடன், எளிதில் ஜீரணமாகி வீரிய விருத்தியை உண்டாக்கும். பீர்க்கு இலைச் சாறு பித்தத்துக்கு கை கண்ட மருந்து. இது ரத்தத்தில் உள்ள அசுத்தத்தைப் போக்கும். பெரிய வர்கள் ஒரு வேளைக்கு அரை அவுன்சும், குழந்தைகள் கால் அவுன்சும் உட்கொள்ளலாம். பீர்க்கு இலைக் கஷாயத்தைக் கூட இதுபோன்று பயன்படுத்தலாம்.

    பீர்க்கங்காயை சீவியெடுக்கும் தோலை துவையல் செய்து சாப்பிடுவதும் உண்டு. இந்த துவையல் நாக்கின் ருசியற்ற தன்மையைப் போக்கி ஜீரண சக்தியை அதிகமாக்கும். சிறிது உஷ்ணத்தையும் கொடுக்கும். ஆனால் வாத உடம்புக்காரர்களுக்கு இது பொருத்த மானதாக இருக்காது. அவர்களைத் தவிர மற்றவர் களுக்கு சிறந்தது. பீர்க்காங்காயை அதிகமாக சாப்பிட்டால் மந்தம் உண்டாகும். அதனால் ஏற்படும் தீமைகளுக்கு கரம் மசாலாவும், நெய்யும் மாற்றாக அமையும்

    • பீர்க்கங்கா யில், நிறைவு கொழுப்பு மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளது. நார்ச்சத்து உணவு, வைட்டமின் சி, ரிபோப்லாவின், துத்தநாகம், தயாமின், இரும்பு, மக்னீசியம் மற்றும் மாங்கனீசு அதிகமா உள்ளது.

    • இரத்தம் சுத்தப்படும் பண்புகள் உள்ளது.

    • இது இன்சுலின் போன்ற புரதக்கூறுகளுடன், ஆல்கலாய்டுகள் மற்றும் சரந்தின் கொண்டுள்ளது, இது அனைத்தும் அதிகரிக்கும் இரத்த இன்சுலின் அளவுகளை அதிகரிக்காவும், ரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரை அளவுகளை குறைக்க ஒன்றாக செயல்படுகிறது.

    • இதில் உயர் பீட்டா கரோட்டின் உள்ளது, அது கண்களை நல்லது.

    • பீர்க்கங்காய் வயிற்றுக்கு நல்லது, அதில் ஸெல்யுலோஸ் இருப்பதால் மலச்சிக்கலை தவிர்க்க உதவும்.

    • குடிப்தால் ஏற்படும் கல்லீரல் பதிப்பை தூய்மைப்படுத்துவதற்கு, மீட்டெடுக்க மற்றும் உணவூட்டுக்கு உதவுகிறது.

    • இது உடல் எடை குறைக்க உதவுகிறது.


    • இது படை, தடிப்பு தோல் அழற்சிக்கு எதிராக தோல் பராமரிப்பு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.

    • மூல வியாதி குணப்படுத்தும்.

    • காலையில் பீர்க்கங்காய் சாறு ஒரு க்லாஸ் குடிப்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் எந்த வித நோய் தோற்றி ஏற்படாமல் பாதுகாக்கும்.

    நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாகவும் இதைச் சேர்த்துக்கொள்ளலாம். இதன் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையே. இதன் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.

    சொறி, சிரங்கு, நாட்பட்ட புண்கள், காய்ச்சல் ஆகியவை குணமாகப் பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். மேலும் இதன் இலைகளை அரைத்துப் புண்கள் உள்ள இடங்களில் கட்டினால் போதும். சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது. இரத்த சோகை நோயாளிகளும், தோல் நோயாளிகளும் இதன் வேரைத் தண்*ணீர் விட்டுக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடி கட்டி அருந்தி வர வேண்டும். இதன் மூலம் இரத்த விருத்தி ஏற்படும்.

    பீர்க்கை தோல் நோய்க்கிருமிகளை அழித்துவிடும். முத்திய பீக்கங்கையின் நரம்பு கூடு குளிக்கும்போது அழுக்கு தேய்க்கும் சிறந்த இயற்கை பொருள்.

    கண் பார்வை தெளிவு, நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றையும் வழங்கும் பீர்க்கங்காயை அடிக்கடி தேடிப்பிடித்து உண்ண வேண்டும்.

    Last edited by chan; 12th Jul 2015 at 03:46 PM.
    janu23 and Uma manoj like this.

  6. #66
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    duplicate post sorry



    Last edited by chan; 29th Jul 2015 at 10:22 PM.
    balamurugan n likes this.

  7. #67
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables




    சவ்சவ்


    ‘சமைக்க வேண்டாம்... அப்படியே சாப்பிடலாம்’ என்கிற வகையறா காய்கறிகளில் ‘சவ்சவ்’ என்கிற பெங்களூரு கத்தரிக்காயும் ஒன்று. ஆனால், அந்தத் தகவல் பலரும் அறியாதது. சமையலறை மெனுவில் கூட்டு இடம் பெறுகிற நாட்களில், அதிலும் வேறு எந்தக் காயும் சிறப்பாக அமையாத பட்சத்தில்தான் சவ்சவ்வின் பக்கம் பலரது பார்வையும் திரும்பும். அன்றாடம் சேர்த்துக் கொள்ளக்கூடிய அவசியமான காய்களில் சவ்சவ்வும் ஒன்று!

    டயட் செய்கிறவர்களுக்கு சவ்சவ் மிக அருமையான ஒரு காய். தினசரி சவ்சவ்வை உணவில் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு சீக்கிரமே உடல் கொழுப்பு குறைந்து, சரியான வடிவத்துக்குத் திரும்பும்...’’ என்கிறார் டயட்டீஷியன் நித்ய. சவ்சவ்வின் மகத்துவம் மற்றும் மருத்துவத் தகவல்களுடன், சூப்பரான 3 ஆரோக்கிய ரெசிபிகளையும் செய்து காட்டியிருக்கிறார் அவர்.லேசான இனிப்புச் சுவையுடன் கூடிய சவ்சவ், கலோரி குறைந்த ஒரு காய். நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்சிடன்ட் என எல்லாம் நிறைந்தமுழுமையான காயும்கூட.

    ஒரு கப் வேக வைத்த சவ்சவ்வில் இருப்பது வெறும் 38 கலோரிகள் மட்டுமே. சவ்சவ்வில் மருந்துக்குக்கூட கொலஸ்ட்ராலோ, சாச்சுரேட்டட் கொழுப்போ கிடையாது. இதில் உள்ள நார்ச்சத்தானது எடையைக் குறைக்க உதவுவதுடன், ரத்தத்தில் சர்க்கரையின்அளவையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது. இதில் அதிக அளவு வைட்டமின் சி, ஃபோலேட், தயாமின், ரிபோஃப்ளோவின் உள்ளன.இதிலுள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம், ரத்த அழுத்த அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

    எடைக் குறைப்புக்காக உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்கிறவர்கள் எந்தஉணவுடனும் சவ்சவ்வை சேர்த்துக் கொள்ளலாம். இதிலுள்ள நார்ச்சத்தானது கொஞ்சம் சாப்பிட்டதுமே வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுப்பதுடன், உணவு இடைவேளைகளுக்கு இடையில் எதையாவது கொறிக்கிற உணர்வையும் தடுக்கும்.

    மலச்சிக்கல் பிரச்னைக்கு சவ்சவ் மிகச் சிறந்த மருந்து. தொடர்ந்து இதை உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு குடல் தொடர்பான கோளாறுகளும் குணமாகும். தவிர, இது உடலிலுள்ள கெட்ட கொழுப்பை நீக்கி, நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகிறது.

    ரத்த அழுத்தப் பிரச்னையால் அவதிப்படுவோருக்கு அதைக் கட்டுக்குள் கொண்டு வரும் சவ்சவ். இதிலுள்ள அதிக பொட்டாசியமானது, சோடியம் சமநிலைமையின்மையை சரிப்படுத்தி, அதன் விளைவாக உயர் ரத்த அழுத்தம் வராமல் காக்கும்.ரத்தத்தில் Homocysteine என்கிற அமினோ அமிலம் அதிகமானால் இதய நோய்களும் பக்கவாதமும் வரும் அபாயம் அதிகரிக்கும். சவ்சவ்வில் உள்ள வைட்டமின் பி9, இந்த அமினோ அமிலத்தை சேரவிடாமல் தடுக்கிறது.

    சவ்சவ்வில் உள்ள வைட்டமின் பி9 சத்தானது கர்ப்பிணிகளுக்கு மிகவும்அவசியமானது. கர்ப்ப காலத்தில் இந்தச் சத்து குறையும். அப்படிக் குறைவதால் பிறக்கும் குழந்தை கை வளர்ச்சிக் குறைபாடு, இதயக் கோளாறு உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு உள்ளாகலாம். கர்ப்பிணிகள் சவ்சவ்வை முறையாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் வைட்டமின் பி9 சத்துக் குறைபாடு ஏற்படாமல் காத்துக் கொள்ளலாம்.

    ரத்தசோகைக்குக் காரணமான இரும்புச்சத்துக் குறைபாடு மற்றும் வைட்டமின் பி2 குறைபாடு இரண்டையும் ஈடுகட்டி, ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அதன் மூலம் ஹீமோகுளோபின் அளவையும் கூட்டும் சக்தி கொண்டது சவ்சவ்.

    எப்படித் தேர்வு செய்வது?

    அளவில் சின்னதாக, உறுதியாக, பச்சை ஆப்பிளின் நிறத்தில் இருக்க வேண்டும். பெரிய காய்கள் முற்றியிருக்கலாம். அதில் சுவை இருக்காது. இளசான காய் என்றால் அதன் தோலைக்கூட நீக்கத் தேவையில்லை. சவ்சவ்வின் தோலிலும் ஏராளமான சத்துகள் இருக்கின்றன. பேப்பர் பையில் சுற்றி, 2 வாரங்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.

    என்னவெல்லாம் சமைக்கலாம்?

    வேக வைக்கலாம். பேக் செய்யலாம். பச்சையாக வெட்டிப் போட்டு காய்கறி மற்றும் பழ சாலட்டுடன் சேர்த்து சாப்பிடலாம். சவ்சவ்வில் சூப், குழம்பு, சாம்பார், கூட்டு, பொரியல், பஜ்ஜி, பச்சடி, துவையல், ஸ்டஃப்டு புரோட்டா என எது வேண்டுமானாலும் சமைக்கலாம். இயல்பிலேயே லேசான கசப்புச் சுவையுடைய சவ்சவ், சமைத்ததும் லேசான இனிப்புச் சுவைக்கு மாறும்.

    என்ன இருக்கிறது? (100 கிராம் சவ்சவ்வில்)

    ஆற்றல் 19 கிலோ கலோரிகள்
    கார்போஹைட்ரேட் 4.51 கிராம்
    சர்க்கரை 1.66 கிராம்
    நார்ச்சத்து 1.7 கிராம்
    புரதம் 0.82 கிராம்
    வைட்டமின் சி 7.7மி.கி.
    வைட்டமின் கே 4.1 மி.கி.

    சவ்சவ் கேசரி

    என்னென்ன தேவை?

    சவ்சவ் - 100 கிராம்,
    பாசிப் பருப்பு - 100 கிராம்,
    நெய் - 100 மி.லி.,
    முந்திரி - 25 கிராம்,
    ஏலக்காய் - 2,
    பால் - 200 மி.லி.,
    பாதாம் - 25 கிராம்.

    எப்படிச் செய்வது?

    சவ்சவ்வை தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக வெட்டி, தண்ணீரில் வேக வைத்து மசித்து வைக்கவும். பாசிப் பருப்பை கடாயில் வறுத்து பொடி செய்து கொள்ளவும். பாலை முக்கால் பாகமாக சுண்டும் வரை காய்ச்சவும். அதில் வறுத்துப் பொடி செய்த பாசிப் பருப்பு பொடியை சேர்த்து நெய் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு சவ்சவ் மசியலை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும். நன்கு கெட்டியானதும் வறுத்த முந்திரி, பாதாம் சேர்த்து ஏலக்காயை பொடித்து தூவி இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.

    சவ்சவ் பாயசம்

    என்னென்ன தேவை?

    சவ்சவ் - 100 கிராம்,
    பால் - 200 மி.லி.,
    சர்க்கரை - 100 கிராம்,
    முந்திரி - 5-10,
    திராட்சை - 10,
    நெய் - 100 மி.லி.,
    கன்டென்ஸ்டு மில்க் - 50 மி.லி,
    ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை.

    எப்படிச் செய்வது?

    சவ்சவ்வை சுத்தம் செய்து தோல் நீக்கி துண்டுத் துண்டுகளாக வெட்டி, வேக வைத்துக் கொள்ளவும். பிறகு கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து வைக்கவும். பாலை சுண்டக் காய்ச்சி அதில் வேக வைத்த சவ்சவ்வை மசித்து சேர்க்கவும். நன்கு கொதித்தவுடன் சர்க்கரை, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கன்டென்ஸ்டு மில்க், ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும்.சுவையான சவ்சவ் பாயசம் தயார்.

    சவ்சவ் கட்லெட்

    என்னென்ன தேவை?

    சவ்சவ் - 100 கிராம்,
    கேழ்வரகு மாவு - 100 கிராம்,
    வெங்காயம் - 50 கிராம்,
    பச்சை மிளகாய் - 2-3,
    எண்ணெய் - தேவையான அளவு,
    சீரகம் - 1 டீஸ்பூன், சோம்பு - 1 டீஸ்பூன்,
    சோள மாவு - 1 டீஸ்பூன்,
    பிரெட் தூள் - 50 கிராம்,
    கறிவேப்பிலை - சிறிது.

    எப்படிச் செய்வது?

    சவ்சவ்வை தனியாக வேக வைத்து மசித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில்எண்ணெய் சேர்த்து சூடானதும் சீரகம், சோம்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு அத்துடன் சவ் சவ், கேழ்வரகு மாவு, சோள மாவு சேர்த்துக் கிளறி கட்லெட் போன்று தட்டி தவாவில் போட்டு பொரித்தெடுக்கவும். தேவைக்கேற்ப வட்டம், சதுர வடிவில் மாவை தயாரித்து பிரெட் தூளில் புரட்டி எடுத்து பொரித்தால் சூடான கட்லெட் தயார்.


    கர்ப்ப காலத்தில் வைட்டமின் பி9 சத்து குறையும். அப்படிக் குறைவதால் பிறக்கும் குழந்தை கை வளர்ச்சிக் குறைபாடு,இதயக் கோளாறு உள்ளிட்ட
    பல பிரச்னைகளுக்கு உள்ளாகலாம். கர்ப்பிணிகள் சவ்சவ்வை முறையாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்தச் சத்துக் குறைபாடு ஏற்படாமல்
    காத்துக் கொள்ளலாம்.




    Last edited by chan; 29th Jul 2015 at 10:16 PM.
    balamurugan n likes this.

  8. #68
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    கொத்தவரங்காய்!-கொத்துக் கொத்தாக சத்து

    இப்படியொரு காய் இருப்பதே இந்தத் தலைமுறைக் குழந்தைகள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பெயருக்கேற்றபடி கொத்துக் கொத்தான சத்துகளை, ஆரோக்கியத்தை உள்ளடக்கியது கொத்தவரங்காய். பீன்ஸ் குடும்பத்தைச் சேர்ந்தது!

    கிராமத்துக் காய்கறிகளில் கொத்தவரங்காய்க்கு மிக முக்கிய இடமுண்டு. வற்றலாக, குழம்பாக, கூட்டாக, பொரியலாக எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடக் கூடிய கொத்தவரங்காய், கிராமத்து மக்களின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது’’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ்.கொத்தவரங்காயின் நல்ல தன்மைகளை விளக்குவதுடன், அதை வைத்துச் செய்யக்கூடிய 3 ஆரோக்கிய ரெசிபிகளையும் சொல்கிறார் அவர்.

    ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியமான புரதம், நார்ச்சத்து இரண்டையும் அபரிமிதமாகக் கொண்ட ஒரு காய் கொத்தவரை. வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகியவற்றையும் அதிகம் கொண்டது. பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்துகள் நிறைந்தது. கொத்தவரங்காயைஏன் அடிக்கடி சாப்பிட வேண்டும்?

    சில கிலோ எடை குறைக்கிற முயற்சியில் இருப்பவர்கள், வாரத்தில் 3 நாட்கள் கொத்தவரங்காயை சேர்த்துக் கொண்டால் பயனடைவார்கள். குறைந்த கலோரியும், அதிக தாதுக்கள் மற்றும் வைட்டமின்களையும் கொண்டது என்பதால் ஆரோக்கியமான முறையில் எடை குறைக்க நினைப்போருக்கு பெஸ்ட் சாய்ஸ். ரத்த சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும் கிளைகோநியூட்ரியன்ட்ஸ் கொத்தவரங்காயில் அதிகம் உள்ளது. கொத்தவரங்காய் லோ கிளைசெமிக் இண்டக்ஸ் கொண்டது என்பதால் இதை அடிக்கடி உண்பதால், ரத்த சர்க்கரை அளவில் அடிக்கடி ஏற்படுகிற ஏற்ற, இறக்கங்களை சமன்படுத்தக்கூடியது. நீரிழிவுக்காரர்கள் பாகற்காய்க்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கொத்தவரங்காய்க்குக் கொடுக்கலாம்.

    கால்சியம் அதிகமுள்ளதால், எலும்பு களின் ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம் தருகிறது. கொத்தவரங்காயில் உள்ள பாஸ்பரஸ் எலும்புகளை பலமாக்க உதவுகிறது.ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கக்கூடியது என்பதால் கொத்தவரங்காய் இதயத்துக்கும் இதமானது. இதிலுள்ள பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் ஃபோலேட் மூன்றும் இதயக் கோளாறுகளுக்கு எதிராகப் போராடக்கூடியவை.

    கொத்தவரங்காயில் உள்ள ஹைப்போ கிளைசெமிக் மற்றும் ஹைப்போலிபி டெமிக் குணங்கள், ஹைப்பர் டென்ஷனால் பாதிக்கப்பட்டிருப்போருக்கான இயற்கையான மருந்து. நீரிழிவும், இதய நோயும் இருப்பவர்களுக்கு ஹைப்பர் டென்ஷன் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம். அதைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியத்துக்கு உதவுகிறது கொத்தவரங்காய்.

    கர்ப்பிணிகள் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டியவற்றில் கொத்தவரங்காய் தவிர்க்கக் கூடாதது. இதிலுள்ள இரும்புச்சத்தும் கால்சியமும் கர்ப்ப காலத்தில் அவர்கள் சந்திக்கிற சத்துக்குறைபாடுகளை சரி செய்யும். கொத்தவரங்காயில் உள்ள அதிகபட்ச ஃபோலிக் அமிலமானது, குழந்தை குறைகளின்றி பிறக்கவும், கர்ப்ப கால சிக்கல்களைத் தவிர்க்கவும் உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின் கே, கருவிலுள்ள குழந்தையின் ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.

    கொத்தவரங்காயிலுள்ள இரும்புச்சத்தானது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக நடைபெறச் செய்கிறது. இதிலுள்ள ஃபைட்டோகெமிக்கல், ஆக்சிஜன் சப்ளையை தூண்டி, அதன் மூலமாகவும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

    செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்னைக்கு மருந்தாகக்கூடியது கொத்தவரங்காய். வயிற்றில் சேரும் தேவையற்றநச்சுகளை வெளியேற்றி, செரிமான
    மண்டலம் தொடர்பான நோய்கள் வராமல் காக்கவும் உதவக்கூடியது.இதிலுள்ள ஹைப்போகிளைசெமிக் தன்மையானது நரம்புகளின் ஆரோக்கியத்துக்கும் நல்லது செய்யக்கூடியது. அது படபடப்பு, பதற்றம், டென்ஷன் போன்றவற்றைக் குறைத்து மனதை அமைதியாக வைத்திருக்க மறைமுகமாக உதவுகிறது.

    கொத்தவரையில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியைஅதிகரிக்கக்கூடியது.ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகளையும் அதிகம் கொண்டது. திசுக்களின் சேதாரத்தைத் தடுத்து, சருமம் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது.

    இதயத்துக்கு இதமான கொத்தவரங்காய் சப்ஜி

    என்னென்ன தேவை?

    பொடியாக நறுக்கிய கொத்தவரங்காய் - இரண்டரை கப்,
    பொடியாக நறுக்கிய பரங்கிக் காய் - இரண்டரை கப்,
    சீரகம் - ஒன்றே கால் டீஸ்பூன்,
    ஓமம்-கால் டீஸ்பூன்,
    மிளகாய் தூள் - ஒன்றே கால் டீஸ்பூன்,
    பெருங்காயம்-1 சிட்டிகை,
    மஞ்சள் தூள் - சிறிது,
    பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் - ஒன்றரை டீஸ்பூன்,
    கரம் மசாலா- கால் டீஸ்பூன்,
    உப்பு-தேவைக்கேற்ப.

    எப்படிச் செய்வது?

    கடாயில் எண்ணெய் சூடாக்கி, சீரகம் தாளிக்கவும். அது வெடித்ததும் ஓமம், பெருங்காயம் சேர்க்கவும். கொத்தவரங்காய், பரங்கிக்காய், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 3 நிமிடங்களுக்கு வதக்கவும். 2 கப் தண்ணீர் சேர்த்து பிரஷர் குக் செய்யவும். அல்லது சாதாரண பாத்திரத்திலேயே கொத்தவரங்காய் வேகும் வரை சமைக்கவும். பரங்கிக் காயை நன்கு மசித்துவிட்டு, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

    கொத்தவரங்காய் பருப்பு உசிலி

    என்னென்ன தேவை?

    பொடியாக நறுக்கிய கொத்தவரங்காய்- 2 கப்,
    உப்பு - தேவைக்கேற்ப,

    கொரகொரப்பாக அரைப்பதற்கு...

    துவரம் பருப்பு-1/8 கப்,
    கடலைப் பருப்பு- 1/8 கப்,
    காய்ந்த மிளகாய்-2.

    தாளிப்பதற்கு...

    எண்ணெய்- 1 டீஸ்பூன்,
    கடுகு- 1 டீஸ்பூன்,
    உளுத்தம் பருப்பு -அரை டீஸ்பூன்,
    கறிவேப்பிலை-1 ஆர்க்கு,
    மஞ்சள் தூள்-1 சிட்டிகை,
    பெருங்காயம்-1 சிட்டிகை.

    எப்படிச் செய்வது?

    கொத்தவரங்காயை சுத்தப்படுத்தி, பொடியாக நறுக்கி, போதுமான தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து வேக வைக்கவும்.துவரம் பருப்பையும் கடலைப் பருப்பையும் 1 மணி நேரம் ஊற வைத்து, மிளகாயுடன் சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த விழுதை ஆவியில் வேக வைத்து, ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். பிறகு அரைத்த விழுது சேர்த்துப் பொன்னிறமாகும்வரை வதக்கவும். பிறகு வேக வைத்துள்ள கொத்தவரங்காய் சேர்த்து தேவையானால் இன்னும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

    கொத்தவரங்காய் மசாலா

    என்னென்ன தேவை?

    நறுக்கிய கொத்தவரங்காய்-2 கப்,
    பொடியாக நறுக்கிய வெங்காயம்-1,
    தேங்காய்த் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,
    வறுத்துப் பொடித்த வேர்க்கடலை-2 டேபிள்ஸ்பூன்,
    மிளகாய் தூள்-2 டீஸ்பூன்,
    சர்க்கரை-அரை டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப,
    கடுகு-அரை டீஸ்பூன்,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
    எண்ணெய் -3 டீஸ்பூன்.

    எப்படிச் செய்வது?

    கொத்தவரங்காயை அளவாக தண்ணீர்விட்டு, உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். தண்ணீரை வடிகட்ட வேண்டாம். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு,சீரகம், மஞ்சள்தூள் சேர்க்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும்வரை வதக்கவும். கொத்தவரங்காயை சேர்த்து வதக்கவும். மிளகாய் தூள் சேர்க்கவும். வேர்க்கடலை பவுடரும் தேங்காயும் சர்க்கரையும் சேர்த்துக் கிளறவும். கொத்தவரங்காய் வேக வைத்த தண்ணீரையும் சேர்க்கவும். மூடி வைத்து சமைக்கவும். சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்




  9. #69
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    அவரைக்காய்-ஒட்டு மொத்த உடலுக்கும் உன்னதம்

    ஒவ்வொரு காயிலும் ஏதோ ஒரு மருத்துவ குணம் இருக்கும். அவரைக்காயை ‘ஒட்டுமொத்த உடலுக்குமான உன்னத மருந்து’ என்றே சொல்லலாம். ஆனாலும், அவரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்பவர்களைவிட, அரிதாக, விரத நாட்களில் சமைத்து சாப்பிடுகிறவர்களே அதிகம். நினைவாற்றலைப் பெருக்குவதில் தொடங்கி, முதுமை நோய்களை விரட்டுவது வரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் என எல்லோருக்குமான ஏற்றம் மிகுந்த காய் இது. அவரைக்காயின் அற்புதங்களையும் மருத்துவகுணங்களையும் விளக்கமாகப் பேசுவதுடன், அவரைக்காயை வைத்து செய்யக்கூடிய 3 சுவையான உணவுகளையும் செய்து காட்டுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் நித்யஸ்ரீ.



    ``இடம், பொருள், ஏவல் எல்லாம் பார்க்காமல் எந்த மண்ணிலும் எந்த தட்பவெப்ப நிலையிலும் எளிதில் வளரக் கூடியது அவரைக்காய். அனைத்து வயதினருக்கும் அவசியமான அத்தனை சத்துகளையும் தன்னகத்தே கொண்ட அரிய காய்கறிகளில் அவரைக்கு முதலிடம். அவரைப் பிஞ்சு சுவையிலும் மருத்துவ குணங்களிலும் சிறந்தது. புரதச் சத்தையும், நார்ச்சத்தையும் அதிகம் கொண்டது. ஆரோக்கியமாக வாழ ஆசைப்படுகிற யாரும் அவரையை அலட்சியப்படுத்தக் கூடாது.



    * இதய ஆரோக்கியம் மேம்பட...

    ரத்தத்தில் கொழுப்பைக் கட்டுப்படுத்துவதிலும் ரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் நார்ச்சத்து மிகுந்த உணவுகளுக்கு முக்கிய இடமுண்டு. அவரைக்காய் இந்த இரண்டுக்கும் உத்தரவாதம் தருகிறது. எல்.டி.எல். (low densitylipo protein) எனப்படுகிற கெட்ட கொழுப்பைக் குறைக்கிற நார்ச்சத்து அவரைக்காயில் அதிகமுண்டு.

    * எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க...

    கால் கப் அவரைக்காயில் 10 கிராம் அளவு புரதம் உள்ளது. இது ஒட்டுமொத்த பருமனைக் குறைத்து, கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர உதவுகிறது. என்ன
    செய்தும் எடையைக் குறைக்க முடியாதவர்கள், அவரைக்காய் வைத்தியத்தை முயற்சி செய்து பார்க்கலாம். வேக வைத்த அவரைக்காயை பிரெட், சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடுவது பயன் தரும்.

    * சத்துக் குறைபாட்டை சரி செய்ய...

    வைட்டமின் பி1, இரும்புச் சத்து, தயாமின், தாமிரம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் என எல்லா சத்துகளையும் உள்ளடக்கிய காய் இது. வைட்டமின் பி 1 சத்து நரம்பு மண்டல இயக்கத்துக்கும் வளர்சிதை மாற்றத்துக்கும் அவசியமானது. இரும்பும், தாமிரமும் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவும். தவிர, தாமிரச் சத்தானது எலும்புகளின் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ளும். பாஸ்பரஸும் மக்னீசியமும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கின்றன.

    * ரத்தசோகையை விரட்ட...

    ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும் ரத்த சோகையிலிருந்து தப்பிக்கவும் போதுமான அளவு இரும்புச்சத்து அவசியம். ரத்த சோகைக்குக் காரணமான ஹீமோகுளோபின் குறைபாட்டை குணப்படுத்தக்கூடியது அவரைக்காய். நுரையீரல் மூலமாக உடலின் மற்ற செல்களுக்கும் ஆக்சிஜனை கொண்டு செல்ல ஹீமோகுளோபின் மிக அவசியம்.

    *பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு அவசியமான கால்சியம் சத்தையும் அபரிமிதமாகக் கொண்டது அவரை.

    *நார்ச்சத்து அதிகம் உள்ளது என்பதால் மலச்சிக்கல் வராமலும், ஏற்கனவே பல நாட்களாக மலச்சிக்கலால் அவதிப்படுவோருக்கும் அவரைக்காய் மருந்தாகிறது.

    *நோய் எதிர்ப்பு சக்திக்கு அத்தியாவசியத் தேவையான வைட்டமின் சி சத்து நிரம்பியது அவரைக்காய். புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடியது.

    *அவரைக்காயின் பொட்டாசியத்தில் உள்ள எலெக்ட்ரோலைட்ஸ், உடலின் தண்ணீர் அளவையும் அமில அளவையும் சரியான விகிதத்தில் வைத்திருக்க உதவுகிறது. எலெக்ட்ரோலைட் எனப்படுவது வியர்வையின் மூலம் தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருக்கும். அந்த இழப்பு அவ்வப்போது ஈடுகட்டப்பட வேண்டும்.

    *இவை தவிர, பார்வைத் திறனுக்கும் சரும ஆரோக்கியம், எலும்புகளின் பலத்துக்கும் தேவையான வைட்டமின் ஏ, சி ஆகியவையும் இதில் உள்ளன. அவரைக்காயில் உள்ள L-dopa என்கிற ஒருவித அமினோ அமிலமானது, மன அழுத்தம் மற்றும் அடிக்கடி ஏற்படுகிற மனநிலை மாற்றங்களையும் சரிப்படுத்தக்கூடியது. பார்க்கின்சன்ஸ் டிசீஸ் எனப்படுகிற நோய் வராமல் காக்கும் தன்மையும் அவரைக்காயில் உள்ளது.

    * எப்படித் தேர்ந்தெடுப்பது?

    *இளம் பச்சை நிறத்தில் உறுதியாகவும் பிஞ்சாகவும் இருக்க வேண்டும். லேசாக தொய்வடைந்தோ, பழுப்பு நிறப் புள்ளிகள் இருந்தாலோ வாங்க வேண்டாம்.
    *தொட்டுப் பார்த்தால் உள்ளே வெறும் காற்றடைத்த மாதிரியான காய்களையும் தவிர்க்கவும்.
    *பிஞ்சு அவரைக்காய் என்றால் தோலுடன் அப்படியே சமைத்து சாப்பிடலாம். முற்றிய காய்கள் என்றால் தோலை நீக்க வேண்டியது அவசியம்.
    *துளையிட்ட பைகளுக்குள் போட்டு, 5 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.
    *காயவைத்த அவரை விதைகளும் சத்துகள் நிரம்பியவையே. அவற்றை முதல் நாளே ஊற வைத்து, வேக வைத்து சமைக்க வேண்டும்.

    * எப்படி சமைப்பது?

    *வேக வைத்த அவரைக்காயை துருவிய கேரட் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்துப் பச்சடியாக சாப்பிடலாம்.
    *அவரைக்காயை பீன்ஸ், கொத்தவரங்காய் உள்ளிட்ட அதே குடும்பத்துக் காய்கறிகளுடன் சேர்த்தும் சமைக்கலாம்.
    *அவரைக்காயை சிவப்பரிசியுடன் சேர்த்து புலாவ் மாதிரி சமைக்கலாம்.
    *இளசான பிஞ்சு அவரைக்காயில் நார்ச்சத்து மிக அதிகமானது என்பதால் கூடியவரையில் அதையே சமையலுக்குப் பயன்படுத்தவும்.
    *ரொம்பவும் பிஞ்சு அவரைக்காய் என்றால் பச்சையாகவே சாப்பிடலாம். ஆவியில் வேக வைப்பதன் மூலம் வைட்டமின் சி அழியாமல் காக்கலாம்.
    *அவரைக்காயை வேக வைத்து மசித்து க்ரீம் அல்லது வெண்ணெயுடன் சேர்த்து `டிப்’ ஆகவும் பயன்படுத்தலாம்.
    *ஆலிவ் ஆயில் சேர்த்து சமைத்த அவரைக்காயை காலை நேர சிற்றுண்டியாகவே சாப்பிடலாம்.

    அவரைக்காய் மேமோஸ்

    என்னென்ன தேவை?

    பொடியாக நறுக்கிய அவரைக்காய் - 100 கிராம், பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் - 50 கிராம், பொடியாக நறுக்கிய கேரட் - 25 கிராம், துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 4, வெங்காயம் - 2, எண்ணெய் - 2 டீஸ்பூன், மைதா - 100 கிராம், உப்பு - தேவைக்கேற்ப.

    எப்படிச் செய்வது?

    மைதாவில் உப்பு, எண்ணெய், போதுமான தண்ணீர் சேர்த்து மிருதுவான மாவாகப் பிசைந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் வைத்து, நறுக்கிய வெங்காயம், அவரைக்காய், முட்டைகோஸ், கேரட், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவை சிறிது எடுத்து சின்னதாகத் திரட்டி, நடுவில் காய்கறிக் கலவையை வைத்து கொழுக்கட்டை செய்வது போல மூடி 15 நிமிடங்களுக்கு ஆவியில் வேக வைக்கவும். சாஸ் உடன் சூடாகப் பரிமாறவும்.

    அவரை புலாவ்

    என்னென்ன தேவை?

    அவரைக்காய் - 100 கிராம், அரிசி - 100 கிராம், தேங்காய்ப்பால் - 200 மி.லி., வெங்காயம் (விழுதாக அரைத்தது) - 1, பச்சை மிளகாய்- 4, உப்பு - தேவைக்கேற்ப, சோம்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன்.

    எப்படிச் செய்வது?
    குக்கரில் எண்ணெய் ஊற்றி, சோம்பு, பச்சை மிளகாய், வெங்காய விழுது சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய அவரைக்காய் சேர்த்து வதக்கவும். அரிசியும் தேங்காய்ப் பாலும் சேர்த்து உப்பு கலந்து பிரஷர் குக் செய்து பரிமாறவும்.

    அவரை வடை

    என்னென்ன தேவை?

    கடலைப் பருப்பு - 100 கிராம், அவரைக்காய் - 100 கிராம், வெங்காயம் - 50 கிராம், பச்சை மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிது, சோம்பு - அரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - பொரிப்பதற்கு.

    எப்படிச் செய்வது?

    கடலைப் பருப்பை ஊற வைத்து அரைத்து உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். அவரைக்காய், வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி, மாவுடன் கலக்கவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, அரைத்த கலவையை வடைகளாகத் தட்டிப் பொரித்தெடுக்கவும். புதினா சட்னியுடன் பரிமாறவும்.


    Vaisri02 likes this.

  10. #70
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

    பீர்க்கங்காய்-மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்

    ஆந்திராவில் பீர்க்கங்காயில் செய்கிற காரசார துவையல், கேரளாவில் பருப்பும் பீர்க்கங்காயும் சேர்த்துச் செய்கிற கூட்டு, கர்நாடகாவில் பீர்க்கங்காய் பஜ்ஜி, மகாராஷ்டிராவில் வறுத்துப் பொடித்த வேர்க்கடலை சேர்த்துச் செய்கிற பீர்க்கங்காய் ஃப்ரை... இப்படி இந்தியா முழுக்க பிரபலம் பீர்க்கங்காய்.

    இது மட்டுமா? வியட்நாமில் பீர்க்கங்காயை சூப்பில் சேர்த்துக் குடிக்கிறார்கள். சீனா, இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்சில் அன்றாட சமையலில் அவசியம் இடம்பெறுகிற காய் இது.

    கனடாவும் ஸ்பெயினும்கூட பீர்க்கங்காயின் பெருமையை பேசுகின்றன. இப்படி உலகம் முழுக்க வலம் வருகிற புகழ் பீர்க்கங்காய்க்கு மட்டுமே உண்டு. 'அத்தனைக்கும் காரணம் பீர்க்கங்காயில் மறைந்திருக்கிற மருத்துவ குணங்கள்’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரி. பீர்க்கங்காயின் பயன்களைப் பட்டியலிடுவதுடன், அதை வைத்து சமைக்கக்கூடிய ஆரோக்கிய ரெசிபியை பகிர்கிறார் அவர்.

    "பீர்க்கங்காயின் பெருமைகளைப் பற்றிப் பேச பக்கங்கள் போதாது. நார்ச்சத்து மிகுந்த இந்தக் காய், குறைந்த கலோரிகளை கொண்டது. ஆரோக்கியத்துக்கு அவசியமான அத்தனை உயிர்ச்சத்துகளையும் உள்ளடக்கிய காய் இது. வைட்டமின் சி, துத்தநாகம், இரும்பு, ரிபோஃப்ளோ வின், மெக்னீசியம், தயாமின் உள்ளிட்ட அனைத்துச் சத்துகளும் இதில் உள்ளன.

    செல்லுலோஸ் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய் என்பதால் மலச்சிக்கலுக்கும், மூல நோய்க்கும் மாமருந்தாக உதவுகிறது. பீர்க்கங்காயில் உள்ள பெப்டைட் மற்றும் ஆல்கலாயிட் என்கிற இரண்டும் இயற்கையான இன்சுலினாக செயல்படுவதால், ரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. பீர்க்கங்காயில் உள்ள அதிகளவிலான பீட்டாகரோட்டின், பார்வைக் கோளாறுகள் வராமலும், பார்வைத் திறன் சிறக்கவும் உதவுகிறது. ரத்தத்தை சுத்திகரிப்பதிலும் பீர்க்கங்காயின் பங்கு மகத்தானது. கல்லீரல் ஆரோக்கியம் காப்பதிலும், குடிப்
    பழக்கத்தால் பாதிக்கப்பட்ட கல்லீரலைத் தேற்றுவதிலும் கூட பீர்க்கங்காய் பயன்படுகிறதாம்.

    மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது. தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

    தொடர்ந்து பீர்க்கங்காய் சாப்பிடுகிறவர்களின் சருமம் பருக்களோ, மருக்களோ இல்லாமல் தெளிவாகிறது. சரும நோய்கள் இருப்பவர்களுக்கு ரத்தத்தை சுத்தப்படுத்தி, நோயைக் கட்டுப்படுத்துகிறது. வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாவதைத் தடுத்து, புண்கள் வராமலும் காக்கும். ஒட்டுமொத்த உடலையுமே குளிர்ச்சியாக வைத்திருக்கக் கூடியது. சிறுநீர் கழிக்கும் போது உருவாகும் எரிச்சலைக் கட்டுப்படுத்தக்கூடியது. எடை குறைக்க முயற்சி செய்கிறவர்களுக்கு பீர்க்கங்காய் மிக அவசியம். நீர்ச்சத்து அதிகம் என்பது முக்கிய காரணம். பீர்க்கங்காய் சேர்த்த உணவுகளை உண்ணும்போது நீண்ட நேரத்துக்குப் பசி எடுப்பதில்லை.

    எப்படி வாங்குவது?

    அடர் பச்சை நிறத்தில், இறுக்கமான தோல் கொண்ட காயாக இருக்க வேண்டும். காம்புப் பகுதியும் பசுமையாக இருக்க வேண்டும். கனமானதாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும். தோல்களில் வெடிப்போ, நிறமாற்றமோ இருந்தால் வாங்கக்கூடாது.

    எப்படி பத்திரப்படுத்துவது?

    பீர்க்கங்காய் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த ஒரு காய் என்பதால் உடனுக்குடன் சமைத்து விடுவது சிறந்தது. அதிகபட்சம் 3 நாட்களுக்குள் உபயோகித்துவிட வேண்டும்.

    எப்படியெல்லாம் சமைக்கலாம்?

    கூட்டாக, பொரியலாக, மசாலாவாக, துவையலாக எப்படி வேண்டுமானாலும் சமைக்கலாம். சாம்பாரில் சேர்க்கலாம். பீர்க்கங்காயின் தோல்கூட மருத்துவ குணம் வாயந்தது என்பதால் அதையும் துவையலாக அரைக்கலாம். பீர்க்கங்காயை வில்லைகளாக வெட்டி, பஜ்ஜி செய்யலாம். வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை வதக்கி, அத்துடன் பீர்க்கங்காய் துண்டுகளும் சேர்த்து வதக்கி, உப்பு, காரம் சேர்த்து, தொக்காக செய்து சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுக்குத் தொட்டுக் கொள்ளலாம்.

    பீர்க்கங்காயின் பிற பயன்கள்
    பீர்க்கங்காயைக் காய வைத்து உள்ளே இருக்கும் நார்ப் பகுதியைப் பதப்படுத்தி, உடம்பு தேய்த்துக் குளிக்கும் நார் செய்யப்படுகிறது. பீர்க்கை நார் சருமத்தை சுத்தப்படுத்தவும், இறந்த செல்களை நீக்கி, ஆரோக்கியமாக வைக்கவும் கூடியது. பீர்க்கை இலைகளை அரைத்து, சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்களில் பற்று போட்டால் அவை சீக்கிரமே குணமாகும்.

    ஆரோக்கிய ரெசிபி

    கொங்கு பீர்க்கங்காய் கடைசல்

    என்னென்ன தேவை?
    பீர்க்கங்காய் - 1 கப், பெரிய தக்காளி - 1, பெரிய வெங்காயம் - 1 கப் (எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும்.) உப்பு, எண்ணெய் - தேவைக்கு, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, சாம்பார் பொடி - 1 டீஸ்பூன், துவரம் பருப்பு, பாசிப்பருப்பு - தலா 1/4 கப். தாளிக்க: கடுகு - 1 டீஸ்பூன், மோர் மிளகாய் வற்றல் - 3, உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், பெருங்காயம் - மிளகு அளவு, நெய் - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது.

    எப்படிச் செய்வது?
    துவரம் பருப்பு, பாசிப் பருப்பை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நீர் விட்டு குழைய வேகவிட்டுக் கொள்ளவும். மத்தால் கடைந்து கொள்ளவும். இந்த பருப்பு கடைசலை தனியாக வைக்கவும். தாளிக்க வேண்டியதை எண்ணெயில் தாளித்து பருப்பில் கொட்டவும். கடாயில் எண்ணெய் சிறிது விட்டு வெங்காயம், அரிந்த தக்காளி மற்றும், பீர்க்கங்காயை வதக்கி தாளித்து கொட்டிய பருப்பு கடைசலை விட்டு, சாம்பார் பொடி சேர்த்து நன்கு கொதி வந்ததும் இறக்கவும். இதை குக்கரில் மாற்றி ஒரு விசில் விட்டும் இறக்கலாம். கடைசியாக நெய்யில் 1 டீஸ்பூன் சீரகம், கறிவேப்பிலை தாளித்து இந்த கடைசலில் கொட்டவும்.

    பீர்க்கங்காய் தோல் துவையல்

    என்னென்ன தேவை?
    பீர்க்கங்காய் தோல் - 1 கப், புளி விழுது - 20 கிராம், தேங்காய் துருவல் - 3 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - ஒன்றரை டீஸ்பூன், பெருங்காயம் - 1 சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.

    எப்படிச் செய்வது?
    பீர்க்கங்காயைக் கழுவி, தோலை சீவி, சின்னதாக நறுக்கித் தனியே வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் வைத்து பீர்க்கங்காய் தோலை, காய்ந்த மிளகாய், தேங்காய் சேர்த்து வதக்கவும். ஆறியதும் உப்பு, புளி சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். கடைசியில் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்துச் சேர்த்துப் பரிமாறவும்.

    பீர்க்கங்காய் பால் கூட்டு

    என்னென்ன தேவை?
    பீர்க்கங்காய் - 1 கப் (சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்), மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்ப் பால் - 1/2 கப், கடுகு - 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு, பச்சைமிளகாய் - 2, சோம்பு - 1 டீஸ்பூன், பட்டை - 1 சிறிய துண்டு, அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன், பால் - 1/2 கப், சர்க்கரை - 1/2 டீஸ்பூன்.

    எப்படிச் செய்வது?
    பீர்க்கங்காயை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நீர் சேர்த்து வேக விட்டு கொள்ளவும். கடாயில் எண்ணெய் சிறிது விட்டு கடுகு தாளித்து சோம்பு, பட்டை போட்டு வதக்கி பச்சை மிளகாய் கீறிப் போட்டு தாளிக்கவும். இதில் வெந்த பீர்க்கங்காய் போட்டு பிரட்டி அரிசி மாவை பாலில் கரைத்து ஊற்றவும். இரண்டு கொதி வரவும் சர்க்கரை சேர்க்கவும். இறக்கும் போது தேங்காய்ப் பால் இட்டு கிளறி இறக்கவும். பீர்க்கங்காய் பால் கூட்டு தயார். சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.




    Last edited by chan; 22nd Aug 2015 at 03:07 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter