Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree47Likes

Medicinal Benefits of Cereals and Grains - தானியங்கள் மற்றும் பருப்புகளின்


Discussions on "Medicinal Benefits of Cereals and Grains - தானியங்கள் மற்றும் பருப்புகளின் " in "Healthy and Nutritive Foods" forum.


 1. #21
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal Benefits of Cereals and Grains - தானியங்கள் மற்றும் பருப்புகளின

  தினையை எப்படி சமைப்பது?

  1 கப் தினைக்கு மூன்றரை கப் தண்ணீர் தேவை. தண்ணீரை அளந்து ஒரு அடி கனமான பாத்திரம் அல்லது கடாயில் ஊற்றி, கொதி வந்ததும் கழுவிய தினையை சேர்க்கவும். கலந்துவிட்டு மேலும் ஒரு கொதி வந்ததும் தணலைக் குறைத்து மூடி வைக்கவும். 7 நிமிடங்களில் வெந்துவிடும். ஈரம் வற்றிய பிறகு மெதுவாகக் கலந்துவிட்டு பரிமாறும் கிண்ணத்துக்கு மாற்றவும். பிரஷர் குக்கரில் வைத்தால் குழைந்துவிடும்.

  தினை-கொள்ளு சத்துமாவு

  1 கப் தினை, 1 கப் கொள்ளு தனித்தனியே மணம் வரும் வரை வறுக்கவும். அதோடு 1 கப் பொட்டுக்கடலை சேர்த்து மிக்ஸியில் மாவாக்கி சலித்து வைக்கவும். இந்த சத்து மாவில் இருந்து தேவையான போது ஒன்றரை டேபிள்ஸ்பூன் பொடி எடுத்துக்கொண்டு, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, நன்கு வேக வைத்து ஆறியபின் உப்பு, மோர் கலந்து குடிக்கலாம்.

  குறிப்பு: கொள்ளுக்குப் பதில் ஓட்ஸை வறுத்துச் சேர்க்கலாம். கஞ்சி காய்ச்சியபின் பால், சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்குத் தரலாம். மிக வயதானவர்கள், பலவித உணவை சாப்பிட இயலாதபோது இதைப்போன்ற கஞ்சி பலன் தரும். தினையுடன் கொள்ளும் பொட்டுக் கடலையும் சேரும்போது இரும்புச்சத்தும் கிடைக்கும். தினையில் இல்லாத மற்ற பல உயிர்ச்சத்துகள் கிடைப்பதால் ஒரு முழுமையான உணவாகும். 8 அல்லது 9 மாதத்தில் இருந்து குழந்தைகளுக்கு கஞ்சியாக காய்ச்சித் தரலாம்.

  தினை பால் பாயசம்

  கால் ஆழாக்கு தினையை லேசாக வறுத்து 2 டம்ளர் பால் ஊற்றி நேரடியாக பிரஷர் பானில் 2 விசில்கள் வரும் வரை வேக விடவும். மூடியைத் திறந்ததும் மீதி உள்ள பால், அரிந்த பாதாம், குங்குமப்பூ சேர்த்து கொதிக்க விடவும். முக்கால் கப் சர்க்கரை / வெல்லம், சிறிதே தண்ணீர், பால் விட்டு தனியே சூடாக்கி கரைந்ததும் வடிகட்டி வைக்கவும். தினை வெந்து நன்கு பாயசம் பதத்துக்கு வந்ததும், தீயை முழுவதும் குறைத்தபின் வெல்லக் கரைசல் சேர்க்கவும். அடுப்பை அணைத்து நன்கு கலந்துவிட்டு பரிமாறவும். வெல்லம் சேர்த்தபின் கொதிக்க விட்டால், பால் திரிந்தாற்போல ஆகக்கூடும்.

  என்னை வைத்து எதையெல்லாம் சமைக்கலாம்?

  தினையாக தோல் நீக்கிய பிறகு சாதம்போல வேக வைத்து குழம்பு, பொரியல், ரசம் போன்றவற்றுடன் பரிமாறலாம். கலவை சாதங்கள், பிரியாணி, புலவு போல சுலபமாக செய்ய இயலும். தோலுடன் ஊற வைத்து, முளை கட்டி வறுத்து மால்ட் செய்யலாம். சாலட் போன்றவற்றில் உபயோகிக்கலாம். வறுத்து மாவாக்கியபின் லட்டு, மோதகம், அப்பம், அதிரசம், அல்வா போன்ற பலவிதமான இனிப்புகள் செய்யலாம். மாவுடன் காய்கறிகள், கீரை சேர்த்து சூடான தண்ணீர் விட்டு கலந்து ரொட்டி சுடலாம். தோசை, வடை, அடை, இட்லி, உப்புமா, கட்லெட், களி, சத்துமாவு போல பலவித காலை உணவுகளை ருசியாகவும் விரைவாகவும் செய்ய இயலும். மற்ற சிறுதானியங்களை விட மிகவும் ருசியுடன் இருப்பேன்
  Sponsored Links
  Attached Thumbnails Attached Thumbnails Medicinal Benefits of Cereals and Grains - தானியங்கள் மற்றும் பருப்புகளின் -1.jpg  
  rsakthi1974 and Dangu like this.

 2. #22
  sudharani is offline Newbie
  Gender
  Female
  Join Date
  Oct 2014
  Location
  chennai
  Posts
  41

  Re: தானியங்கள் மற்றும் பருப்புகளின் மருத்&

  paneer reicpe
  for marination:


  • 200 grams paneer/cottage cheese
  • 3 tbsp rice flour
  • 1 tbsp besan/gram flour
  • 2 tbsp corn starch
  • 1 tsp green chili paste
  • 1 tsp garlic paste
  • 1 tsp ginger paste
  • ½ tsp red chili powder or kashmiri red chili powder
  • ¼ to ½ tsp garam masala powder
  • ¼ tsp lime juice or add as required
  • 4 tbsp water
  • 5 tbsp oil for frying
  • salt as required

  for paneer 65 tempering:

  • 3 tbsp chopped onions
  • 2 to 3 green chilies, sliced diagonally
  • ½ tsp chopped ginger/adrak
  • ½ tsp chopped garlic/lahsun
  • 6 to 7 curry leaves/kadi patta
  • 1 to 2 dry red chilies
  • ½ tsp mustard seeds (optional)
  • ¼ tsp sugar or add as per taste (optional)
  • 2 to 3 pinches of salt
  • 2 tsp oil  [COLOR=#615940 !important]INSTRUCTIONS
  preparing the marination:

  1. take 3 tbsp rice flour, 1 tbsp besan/gram flour and 2 tbsp corn starch in a mixing bowl. you can
  2. also take corn meal or maize flour (makki ka atta) instead of corn starch.
  3. add the following spices & herbs - 1 tsp green chili paste, 1 tsp garlic paste, 1 tsp ginger paste, ½ tsp red chili powder, ¼ to ½ tsp garam masala powder and ¼ tsp lime juice. also add salt as required.
  4. add 4 tbsp water. whisk to a smooth paste. you can also add a few drops of natural color. i used orange natural color extract.
  5. add the paneer cubes.
  6. gently mix the paneer cubes with the batter. cover and allow to marinate for about 15 to 20 minutes at room temperature.

  shallow frying & preparing paneer 65:

  1. heat 5 tbsp oil in a pan. the oil should be medium hot. coat the paneer cubes with the batter and add them to the hot oil. keep some space between the paneer cubes so that they don't stick.
  2. once the base is done, flip and fry the other side. flip for a couple of times all the paneer cubes and fry till the outsides become crisp and golden. remember not to over fry the paneer cubes as then they become dense.
  3. drain the fried paneer cubes on kitchen paper towels to remove excess oil.
  4. in the same pan, heat 2 tsp oil. add ½ tsp mustard seeds.
  5. after the mustard seeds, crackle, add ½ tsp chopped ginger, ½ tsp chopped garlic, 2 green chilies chopped diagonally, 1 to 2 dry red chilies and 6 to 7 curry leaves. stir well.
  6. then add 3 tbsp chopped onions. stir and saute the onions till they turn translucent.
  7. add salt and ¼ tsp sugar. you can skip sugar if you want. i added a bit of sugar as then the paneer dish tastes good.
  8. stir well. add the fried paneer cubes.
  9. mix and toss the paneer cubes with the rest of the sauteed ingredients. check the taste and add more salt or green chilies if required. switch off the flame.
  10. lastly add chopped coriander leaves. stir.
  11. serve paneer 65 hot plain as as a starter or with some chapatis, naan or tandoori rotis.

  [/COLOR]

  chan likes this.

 3. #23
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: தானியங்கள் மற்றும் பருப்புகளின் மருத்&

  சிறப்புமிக்க சிறுதானியங்கள்: குதிரைவாலி

  அளவில் சிறியது பயன்களோ அளவில்லாதது!

  தாய்ப்பாலில் இருந்து திட உணவுக்கு மாற, பலவிதமான சத்துமாவுகள் செய்ய சிறுதானியங்களை நம் முன்னோர் அதிகம் உபயோகித்தனர். இப்போது சிறு வயதிலேயே ஆரோக்கியக் குறைபாடுகள் வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் நல்ல சத்தான உணவை கொடுக்காததும் ஒரு காரணம். ஒரு கட்டிடத்துக்கு நல்ல அடித்தளம் எவ்வளவு முக்கியமோ, அதைப் போல ஆரோக்கியமாக வாழ சிறு வயதில் இருந்தே அடிப்படையான, ஆரோக்கியமான, சத்தான, உயிர்ச்சத்துகள் நிறைந்த உணவு மிக அவசியம். அப்படிப்பட்ட உணவையே நமது முன்னோர் சிறுதானியங்கள் மூலம் சத்துமாவு தயாரித்து குழந்தைகளுக்கு கஞ்சியாக தந்தனர். இப்போது பலரும் சிறுதானியங்களுக்கு மாற ஆரம்பித்திருப்பது வரவேற்கத் தகுந்தது.

  குதிரைவாலி மற்ற சிறுதானியங்களைவிட அளவில் மிகமிகச் சிறியது. தோல் நீக்கப்பட்டு கிடைக்கிறது. மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் குதிரைவாலி.

  குதிரைவாலி மற்றும் பல சிறு தானியங்களை எப்படி பாதுகாப்பது?

  அதிக வெப்பமற்ற, இருண்ட அறையில் வைத்தால் பல மாதங்கள் வரை நன்றாக இருக்கும். அந்தக் காலத்தில் ‘குதிருக்குள்’ போட்டு வைப்பார்கள். ‘குதிரைவாலி’ என்னும் குருதவல்லியை ஆங்கிலத்தில் பார்ன்யார்டு மில்லெட் (Barnyard millet) என்றும் சான்வா மில்லெட் (Sanwa millet) என்றும் அழைக்கிறார்கள்.

  என்னென்ன சத்துகள்? (100 கிராம் தானியத்தில்)

  இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் குறிப்பிட்டுள்ளபடி... புரதம் - 6.2 கிராம், கொழுப்பு - 2.2 கிராம், தாதுக்கள் - 4.4 கிராம், நார்ச்சத்து - 9.8 கிராம், மாவுச்சத்து - 65.5 கிராம், ஆற்றல் - 307 கிலோ கலோரிகள், கால்சியம் - 20 மி.கி., பாஸ்பரஸ் - 280 மி.கி., இரும்புச் சத்து - 5.0 மி.கி.

  வைட்டமின்கள், தாதுக்கள்?

  100 கிராம் தானியத்தில் வைட்டமின்கள்...


  தயாமின் - 0.33 மி.கி., ரிபோஃப்ளோவின் - 0.10 மி.கி., நயாசின் - 4.2 மி.கி.

  தாதுக்கள்...

  மக்னீஷியம் - 8.2 மி.கி., தாமிரம் - 0.60 மி.கி., மாங்கனீசு - 0.96 மி.கி., துத்தநாகம் - 3.0 மி.கி., குரோமியம் - 0.90 மி.கி.

  என்ன உணவுகள்?

  அரிசி சாதத்துக்குப் பதிலாக மதிய உணவுக்கு சமைக்கலாம். ஒரு பங்கு குதிரைவாலிக்கு 2 பங்கு அல்லது 2 1/4 பங்கு தண்ணீர் ஊற்றி நேரடியாகவே பாத்திரத்தில் வேக வைக்கலாம். பிரஷர் குக்கர் தேவையில்லை. சீக்கிரம் வெந்து விடும்.

  காய்கறிகளை வதக்கி வெஜிடபிள் உப்புமா செய்தால் மிக ருசியாக இருக்கும். கொஞ்சமாக எண்ணெய் விட்டால் போதும். கீரை, காளான், சோயா போன்றவற்றுடனும் சேரும். சாலட் / தயிர் பச்சடியில் மற்ற காய்கறிகளுடன் இதை வேக வைத்துச் சேர்க்கலாம்.

  காய்கறிகளுடன் இதையும் சிறிதே சூப்பில் போடும் போது வயிறு நிறையும். எடை குறைக்க நினைப்பவர்கள், ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தருபவர்கள் இதைப் போல வாரம் 3 முறை அருந்தலாம்.

  காலை உணவான இட்லி, தோசை, பணியாரம், ரொட்டி, பொங்கல் போன்றவற்றையும் குதிரைவாலி கொண்டு தயாரிக்கலாம். சத்துமாவாகத் தயாரித்து கஞ்சி, கூழ் காய்ச்சி பெரியவர் முதல் குழந்தைகள் என எல்லோருக்கும் ருசியாகத் தரலாம். குதிரைவாலியை வறுத்து, ஒரு பங்குக்கு ஏதாவது ஒரு பருப்பு / பயறு கால் பங்கு வறுத்துச் சேர்த்து பொடி செய்யலாம். பொட்டுக்கடலை, வறுத்த வேர்க்கடலை சேர்க்கலாம்.

  மற்ற முளைகட்டிய தானியங்களோடு வறுத்து ‘மால்ட்’ செய்யும் போதும் சேர்க்கலாம். இதில் தயிர் சாதம் போல தாளித்து கலந்தால் மிக ருசியாக இருக்கும். அதிக சத்துகள் சேர துருவிய கேரட், கிஸ்மிஸ், திராட்சை, மாதுளை முத்து, கொத்தமல்லி கலந்து தரலாம். பிரியாணி, புலாவ், கலவை சாதங்கள், சாம்பார் சாதம் செய்தால் மிக ருசியாக இருக்கும்.சர்க்கரைப் பொங்கல், அல்வா, லட்டு, அதிரசம் போன்ற பலவித தென்னிந்திய இனிப்புகள் செய்யலாம்.

  பிஸ்கெட், கேக், மஃபின்ஸ் போன்றவற்றில் கோதுமை மாவுடன் சம அளவு குதிரை வாலி மாவு கலந்து செய்யலாம். ஆரோக்கியத்துக்கு உகந்தது. மேலைநாட்டு உணவுகள் பலவற்றை நாமும் குதிரைவாலி பயன்படுத்தி ருசியாக சமைக்க இயலும். அதை நம் மக்களின் ரசனைக்கேற்ப மாற்றி சமைக்கவும் முடியும்.  Attached Thumbnails Attached Thumbnails Medicinal Benefits of Cereals and Grains - தானியங்கள் மற்றும் பருப்புகளின் -.jpg  
  Dangu likes this.

 4. #24
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal Benefits of Cereals and Grains - தானியங்கள் மற்றும் பருப்புகளின

  ஸ்பெஷல் ரெசிபி

  குதிரைவாலி பால்கோவா பாத்


  ஒரு ஆழாக்கு குதிரைவாலியைக் கழுவி, 2 1/2 கப் பால் ஊற்றி, அதில் கேசரி கலர் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் 50 கிராம் உதிர்த்த சர்க்கரை இல்லாத பால்கோவா, 1/2 டின் கன்டென்ஸ்டு மில்க், சிறிது குங்குமப்பூ, சிறிது நெய், மெலிதாக சீவிய பிஸ்தா, பாதாம் சேர்த்து ஈரம் வற்றி நன்கு வேகும் வரை மிதமான தணலில் வைத்து கலந்து விட்டுப் பரிமாறவும். மிக ருசியாக இருக்கும்.

  குதிரைவாலி - பீட்ரூட் தோசை

  ஒரு ஆழாக்கு குதிரைவாலியைக் கழுவி, தண்ணீர் ஊற்றி, 2 மணி நேரம் ஊற வைக்கவும்.பாதி பீட்ரூட்டை தோல் சீவி துருவவும். அத்துடன் 6 சிவப்பு மிளகாய், 1/2 டீஸ்பூன் சீரகம், உப்பு, 1 வெங்காயம், சிறிது தேங்காய்த் துருவல், குதிரைவாலி சேர்த்து நைசாக அரைக்கவும். புளிக்க வைக்க தேவையில்லை. மெல்லிய தோசைகளாக வார்க்கவும். மேலே மூடி வைத்து சுடவும். சிறிதே எண்ணெய் விட்டு இருபுறமும் திருப்பிப் போட்டு எடுத்து பரிமாறவும். பீட்ரூட்டுக்கு பதில் கேரட்டும் சேர்க்கலாம்.

  சர்க்கரைவள்ளிக்கிழங்கு -குதிரைவாலி அடை

  1/4 கிலோ சர்க்கரைவள்ளியை குக்கரில் 1 விசில் வரும்படி வேக வைத்து, தோல் உரித்து மசிக்கவும். 1/2 ஆழாக்கு குதிரைவாலியை 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். 3 பச்சை மிளகாய், 1 சிறு துண்டு இஞ்சி, உப்பு சேர்த்து அரைக்கவும். பொடியாக அறிந்த வெங்காயம், துருவிய கேரட், துருவிய கோஸ் சேர்த்து எல்லாவற்றையும் பிசையவும். அத்துடன் சர்க்கரைவள்ளி, அரைத்த குதிரைவாலியுடன் 1/4 கப் அரிசி மாவு சேர்த்து கலந்து விட்டு சிறிய அடைகளாகத் தட்டி சூடான தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு இருபுறமும் நன்கு சுட்


  Attached Thumbnails Attached Thumbnails Medicinal Benefits of Cereals and Grains - தானியங்கள் மற்றும் பருப்புகளின் -1.jpg  
  Dangu likes this.

 5. #25
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: தானியங்கள் மற்றும் பருப்புகளின் மருத்&

  அரிசியின் வகைகளும் அவற்றை உண்பதால் ஏற்படும் நன்மை தீமைகளும்.

  கருங்குருவை-

  விரண தோல் நோய்களையும், குறிப்பிட்ட விஷத்தையும் போக்கும். யோக சக்தியையும் தரும்.

  மாப்பிள்ளை சம்பா-
  இது புரதம், நார், தாது, உப்புச்சத்து நிறைந்தது. இதன் நீராகாரத்தை சாப்பிட்டால் நரம்புகள் வலுப்படும். ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்.

  கைகுத்தல் புழுங்கல் அரிசி-
  low glycemic தன்மை கொண்டது. அது இரத்ததில், சர்க்கரை அளவினை மெதுவாக ஏற்றி சர்க்கரை நோயாளிக்கு திடீர் சர்க்கரை உயர்வைத் (hyper glycemia) தடுக்கும். குழந்தைகள், வாத இருப்பவர்கள், அரும்பத்தியம் இருப்பவர்களுக்கு உதவும்.

  புழுங்கல் அரிசி எல்லா வயதினருக்கும், எல்லா தரத்தினருக்கும் உகந்தது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு இது மிகவும் ஏற்றது. அரிசியின் முழுச் சத்தும் வீணாகாமல் தருவது புழுங்கல் அரிசிதான். மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள் சாப்பிட உகந்தது புழுங்கல் அரிசிதான்.

  காட்டுயானம்- ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும். டைப் 2 சக்கரை வியாதி நோயாளிகளுக்கு உகந்தது.

  அன்னமழகி-
  மிகவும் இனிப்பு சுவையுள்ள அன்னமழகி அரிசி சகல சுரங்களையும், பித்த வெப்பத்தையும் போக்க கூடியது. உடலுக்கு சுகத்தை கொடுக்கும்.

  இலுப்பைப் பூச்சம்பா-
  பித்தத்தினால் விளையும் சிற்சில ரோகம், சிரஸ்தாபம், உபசர்க்கதாகம், உஷ்ணம் ஆகியவற்றை உண்டாக்கும்.

  கல்லுண்டைச்சம்பா- இதை உண்பவர்களுக்கு மல்யுத்தக்காரரும் எதிர்க்க இயலாத தோள் வலிமையை தரும். மிகுந்த வார்த்தை வளமும் உண்டாக்கும்.

  காடைச்சம்பா-
  இந்த அரிசி பிரமேக சுரமும், குறிப்பிட்ட நோய்களையும் நீக்கும். விந்து விருத்தியும், அதிக பலமும் உண்டாகும்.

  காளான் சம்பா-
  உடலுக்கு மலை போன்ற உறுதியையும், சுகத்தையும் தரும். சில வாத ரோகத்தையும் குறைக்கும்.

  கிச்சிலிச்சம்பா-
  பலம், உற்சாகம், உடல் பளபளப்பு ஆகியவற்றை உண்டாக்கும். தேறாத உடல் தேறும்.

  குறுஞ்சம்பா-
  பித்தம், கரப்பான் நீங்க விந்து விருத்தியை உண்டாக்கும். வாத நோயைநீக்கும்.

  கைவரை சம்பா-
  உடலுக்கு அதிக வலிமையும், சுகமும் உண்டாக்கும். இதில் சிறிது பித்தமும் அதிகரிக்கும்.

  சீதாபோகம்-
  உடல் பலம், தேக பளபளப்பு, விந்து விருத்தி உண்டாகும். அஜீரணத்தை குறைக்கும்.

  புழுகுச்சம்பா-
  இந்த அரிசியை உண்பவர்களுக்கு வனப்பும், அமைதியும், பசியையும், பலமும் உண்டாக்கும். தாகம் நீங்கும்.

  மணக்கத்தை-
  தோல் நோய்கள் அனைத்தையும் போக்கும். புண்கள், ரணங்கள் ஆகியவற்றை குறைக்கும்.

  மணிச்சம்பா-
  அளவுக்கு அதிகமாக சிறுநீரை குறைக்கும். குழந்தை, முதியவர்களுக்கு அதிகசுகத்தை உண்டாக்கும்.

  மல்லிகை சம்பா-
  நாவிற்கு மிகவும் ருசியானது. தேகத்திற்கு சுகத்தையும், உறுதியையும் தரும். கரப்பான், பிரமோகம், உடல் வெப்பம் ஆகியவற்றை போக்கும்.

  மிளகு சம்பா-
  உடலுக்கு சுகத்தை தரும். பசியை உண்டாக்கும். வாதம் போன்ற பல விதமான ரோகத்தை போக்கும்.

  மைச்சம்பா-

  வாதம், பித்தம் போன்ற கோளாறுகளை குறைக்கும். வாத கோபம்,வாந்தி போன்றவற்றை போக்கும்.

  வளைத்தடிச் சம்பா-
  வாத, பித்த தொந்தரவு, வயிற்று உப்புசம், வயிற்று இரைச்சல், கரப்பான் ஆகியவற்றை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம்.

  வாலான் அரிசி-
  மந்தம், தளர்ச்சி முதலியவை குறையும். உடலுக்கு அழகும், கொழுமையும் உண்டாக்கும்.

  மூங்கில் அரிசி-
  மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்கும். இந்த பூவிலிருந்து வரும் காய்கள் தான் நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். மூங்கிலிலிருந்து பெறப்படும்

  மூங்கிலரிசியைச் சமைத்து உண்டு வர, உடல் திடம் உண்டாகும், உடல் இறுகும், கொடிய நோய்களெல்லாம் நெடுந்தூரம் ஓடிவிடும்.

  பழைய அரிசி- பாலர், முதியோர்களுக்கு மிகவும் உகந்தது. பசியும், உடலுக்கு குளிர்ச்சியும் உண்டாகும். சில நோயும், கபமும் குறையும்.

  கார் அரிசியை நமது உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நல்ல உறுதியடையும். தசைகள் நல்ல முறையில் வளர்ச்சி பெறும்.

  உடலின் தோற்றத்திலும் கவர்ச்சி தோன்றும். சருமம் மெம்மையாகவும் பட்டுப் போலவும் அமையும்.

  குண்டு சம்பா அரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் நாவறட்சியைத் தீர்க்கும். ஆனால் இந்த வகை அரிசி கரப்பான் பினியை உண்டாக்கக் கூடும். பசியை மந்திக்கச் செய்யும்.

  குன்றுமணிச் சம்பா அரிசியில் வாதக் குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு. விந்தைப் பெருக்கும். உடல் வன்மையைப் பெருக்கும்.

  சீரகச் சம்பா சிறுவாத நோய்களைக் குணமாக்கும், பசியை அதிகரிக்கும்.

  கோடைச் சம்பா அரிசி வாதப்பித்த நோய்களைக் குணப்படுத்தும். உடலிற்கு நல்ல குளிர்ச்சி இயல்பைத் தரும்.

  ஈர்க்கு சம்பா சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். கண்களின் நலனுக்கு இது மிகவும் சிறந்தது. சிறிதளவு பித்தக் கோளாறுகளை உண்டாக்கக் கூடும்.

  பச்சரிசியைச் சாப்பிட்டால் வாதக் குறைபாடுகள் உண்டாகக்கூடும். பக்கவாதம், உடல் உறுப்புகளில் சுரணையற்ற தன்மை ஏற்படக்கூடும். பித்த எரிச்சலை விலக்கும், உடல் வன்மையைப் பெருக்கும்.

  தினை அரிசியும் புன்செய் தானியம்தான். சளித்தொற்றை போக்கும். காய்ச்சல் வேகத்தைத் தணிக்கும். இரத்த சோகையை அகற்றும், ஆனால் அதிகம் சேர்த்துக்கொண்டால் பித்தம் அதிகரிக்கும்.

  உடலுக்கு ஆரோக்கியமான அரிசியை மட்டும் சாப்பிட்டு நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோம்.

  Last edited by chan; 22nd Feb 2015 at 08:13 PM.
  Dangu likes this.

 6. #26
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: தானியங்கள் மற்றும் பருப்புகளின் மருத்&

  மூங்கில் அரிசி

  40 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும். மூங்கில் பூவிற்குள் அரிசி இருக்கும். இந்த அரிசி பார்ப்பதற்கு கோதுமை போல் இருக்கும். பின்னர் மூங்கில் பட்டுவிடும்.

  மூங்கில் அரிசி பற்றி நம்மில் பலபேர் கேள்விப்பற்றிருப்போம், சில பேர் மட்டும் தான் பார்த்திருப்போம், அதில் ஒரு சிலர் மட்டுமே அதை ருசித்திருப்போம்.அந்த ஒரு சிலரில் நாமும் என்பதில் மகிழ்ச்சி.

  காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணமான உணவு வகையில் இந்த மூங்கில் அரிசியும் முக்கியமான ஒன்று.

  மூங்கிலரிசியைச் சமைத்து சாப்பிட்டு வர உடல் இறுகி உடல் திடம் பெரும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதால் நோய்கள் நம்மை அண்டாது.

  சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்தவர்கள் கூட சீரான உடலமைப்பை பெற மூங்கில் அரிசி உதவும்.மக்கட்பேறு உருவாக்குவதில் கூட முக்கிய பங்கு வகிக்கிறது.பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களில் மக்கட்பேறு இல்லாமல் யாரும் இருக்க மாட்டார்கள் இதற்கு மூங்கில்அரிசியும் ஒரு காரணம் .

  மூட்டுவலியை குணமாக்கும் மூங்கில் அரிசி கஞ்சி
  பத்துப் படிகள் ஏறினாலே, மூச்சு வாங்குகிறது; முட்டி வலிக்கிறது. ஆனால், நம் முன்னோர்கள், பல மைல் தூரங்களை நடை பயணமாகவே கடந்தவர்கள். உரமேறிய அந்த உடல்வாகிற்கான அடிப்படைக் காரணம் சத்துமிக்க உணவுப் பழக்கம்தான். மறந்துபோன அந்த மருத்துவ உணவு

  மூங்கில் அரிசிக் கஞ்சி ;
  தேவையானவை: மூங்கில் அரிசி, நொய் அரிசி – தலா 150 கிராம், சீரகம், ஓமம் – தலா அரைத் தேக்கரண்டி, பூண்டு – 6 பல், சுக்கு – ஒரு துண்டு, நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி, உப்பு – தேவைக்கு.

  செய்முறை: மூங்கில் அரிசி, நொய் அரிசி, சுக்கு ஆகியவற்றைத் தனித்தனியே ஒன்றிரண்டாகப் பொடித்து எடுக்கவும். பொடித்த சுக்குடன் சீரகம், ஓமம் சேர்த்து வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். அதில், நல்லெண்ணெய் ஊற்றி, பொடியாக அரிந்த பூண்டைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். முதல் கொதி வந்ததும் மூங்கில் அரிசியை அதில் கொட்டவும். அடுத்த கொதி வந்ததும் நொய் அரிசியையும் அதில் போட்டுக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்து கஞ்சி பதம் வந்ததும், தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து இறக்கவும்.

  மருத்துவப் பயன்:
  மூட்டு வலி,
  மூட்டில் நீர் கோத்துக்கொள்ளுதல்,
  முதுகெலும்பு வலி,
  இடுப்பு வலி,
  கழுத்து வலி,
  உடல் பலவீனம்
  போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும்.
  உடலில் உள்ள சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கும்

  மூங்கில் அரிசியின் பயன்கள் :

  மூங்கில் அரிசி நார்ச்சத்து மிக்கது.
  உடல் வலிமை பெறும்.
  சர்க்கரை அளவை குறைக்கும்.
  எலும்பை உறுதியாக்கும்.
  நரம்புத் தளர்ச்சியை சீர் செய்யும்.  Dangu likes this.

 7. #27
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: தானியங்கள் மற்றும் பருப்புகளின் மருத்&

  சர்க்கரை நோயாளிக்கு சிறந்த உணவாகும் சோளம்

  நகரமயமாக்கல் சூழலில் மேற்கத்திய கலாச்சர தாக்குதலால் சத்து மிகுந்த உணவு பொருட்கள் பயன்பாடு குறைந்தது. ஆனால் இப்போது உணவு பொருட்கள் மூலம் பெருகி வரும் நோய்களால் பண்டைய உணவு பொருட்களுக்கு ஏங்கி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. சமீபகாலமாக கம்பு, ராகி போன்ற தமிழர்களின் பண்டைய சிறு தானியங்களை வாங்கி வைத்து பயன்படுத்துவது நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகிறது.

  சிறுதானியங்களில் பல வகைகள் இருந்தாலும் சோளம் முதன்மையான உணவு பொருளாக கருதப்படுகிறது. சோள உற்பத்தியில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஆந்திரபிரதேசம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சோளம் பயிரிடப்படுகிறது. சோளத்தில் ரொட்டி, கஞ்சி, கூழ், சாதம் போன்றவை மட்டும் தயாரிக்கப்பட்டு வந்த நிலை மாறி தற்போது, இட்லி, தோசை, ஊத்தாப்பம், பணியாரம், ரொட்டி, பரோட்டா, அப்பம், அடை, உப்புமா, கேசரி, வடகம், முறுக்கு, பிஸ்கட், சோள பொரி லட்டு, சேமியா, கொழுக்கட்டை மிக்ஸ், பணியார மிக்ஸ், சமோசா மிக்ஸ் உள்ளிட்ட பல உணவு வகைகள் சோளத்தில் தயாரித்து பயன்படுத்தலாம்.

  தற்போது சோள தானியங்களுக்கு நகர்ப்புறங்களில் அதிக கிராக்கி ஏற்பட்டு வருகிறது. மழை வளம் குறைந்து வரும் சூழலில், குறைந்த நீர் தேவையுள்ள சோளப்பயிர்களை விவசாயிகள் உற்பத்தி செய்வது மூலம் நல்ல லாபத்தையும் ஈட்ட முடியும். சோளத்தில் அதிகளவு மாவுசத்து, நார்சத்தும் அடங்கியுள்ளதால் இது ஒரு சக்தி தரும் உணவாக திகழ்கிறது. குலூட்டான் எனும் வேதிப்பொருள் சோளத்தில் இல்லாத காரணத்தால் கோதுமை ஒவ்வாமை உள்ளவர்களும் சோளத்தை சாப்பிடலாம்.

  கோதுமையில் உள்ள புரோட்டீனை விட சோளத்தில் உள்ள புரோட்டீன் சிறப்பு வாய்ந்தது. பட்டை தீட்டப்படாத சோளத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால் இது மலச்சிக்கலுக்கு ஏற்ற உணவாகவும் உள்ளது. சர்க்கரையைக் குறைக்கும் தன்மை கொண்டதால் இன்சுலின் சாரா சர்க்கரை நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகும்.

  இட்லி, தோசை, ஊத்தாப்பம், பணியாரம், ரொட்டி, பரோட்டா, அப்பம், அடை, உப்புமா, கேசரி, வடகம், முறுக்கு, பிஸ்கட், சோள பொரி லட்டு, சேமியா, கொழுக்கட்டை மிக்ஸ், பணியார மிக்ஸ், சமோசா மிக்ஸ் உள்ளிட்ட பல உணவு வகைகள் சோளத்தில் தயாரித்து பயன்படுத்தலாம்.

  "நல்ல உணவே மருந்து... தவறான உணவே நோய்..."
  உணவை சரி செய்தால் மட்டுமே உடலை சரி செய்ய முடியும்...
  "உடல் ஆரோக்கியம் தான் மன ஆரோக்கியம்..."
  எனவே, அனைத்துக்கும் அடிப்படையான உணவை சரி செய்வோம்...  Dangu likes this.

 8. #28
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal Benefits of Cereals and Grains - தானியங்கள் மற்றும் பருப்புகளின

  Thank u @Dangu sir

  Dangu likes this.

 9. #29
  Dangu's Avatar
  Dangu is offline Ruler's of Penmai
  Gender
  Male
  Join Date
  Oct 2014
  Location
  CHROMEPET
  Posts
  10,950

  Re: Medicinal Benefits of Cereals and Grains - தானியங்கள் மற்றும் பருப்புகளின

  Attached pdf of all the above posts. This may be useful to our friends/members.

  Attached Files Attached Files
  salma likes this.

 10. #30
  salma's Avatar
  salma is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2011
  Location
  u.s
  Posts
  5,997

  Re: Medicinal Benefits of Cereals and Grains - தானியங்கள் மற்றும் பருப்புகளின

  Chan, Dangu Thanx for the effort..

  Dangu likes this.
  Sal

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter