Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree47Likes

Medicinal Benefits of Cereals and Grains - தானியங்கள் மற்றும் பருப்புகளின்


Discussions on "Medicinal Benefits of Cereals and Grains - தானியங்கள் மற்றும் பருப்புகளின் " in "Healthy and Nutritive Foods" forum.


 1. #31
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: தானியங்கள் மற்றும் பருப்புகளின் மருத்&

  ஆளி விதை
  ஆளி விதை பெயரிலேயே விதை என்பது தெரிந்தாலும் எண்ணெய் வித்துக்களில் முக்கியமான ஒன்று என்பதை வெளிநாட்டினர் கண்டுபிடித்து சொன்ன பிறகே இங்கு பிரபலமாகி வருகிறது. இதன் ஆங்கிலப் பெயர் ‘லின் சீட்ஸ்’ (Lin seeds) .

  நம் நாட்டில் எப்போதோ நமது முன்னோர்கள் உபயோகப்படுத்தி வந்ததுதான்.இப்போதும் பல கிராமங்களில் இந்த விதையை செக்கில் ஆட்டி எண்ணெய் எடுத்து சமையலுக்கு உபயோகப்படுத்தும் பழக்கம் உண்டு. ‘ஃப்ளெக்ஸ் சீட்’ என்பதற்கு லத்தீனில் ‘மிகவும் பயனுள்ளது’ என்று அர்த்தம்.

  அவர்கள் பாஷையில் அதை ‘லினியம் யுஸிடாட்டிஸஸிமம்’ (Linum usitatissimum) என்று கூறுவர். உலகத்திலேயே மிகவும் பழமை வாய்ந்த அதிக நார்ச்சத்து மிகுந்த உணவாக உலக அளவில் கருதப்படும் உணவு. பழங்கால எகிப்து, சைனாவில் அதிகம் பயிரிடப்பட்டது.

  இதனுடைய பயன்கள் அளவிட முடியாதவை. லத்தீனில் அரசர் சார்லே மாக்னே என்பவர் 8ம் நூற்றாண்டில் இதனுடைய முக்கியத்துவத்தை அறிந்து தனது அரசவையில் இருப்பவர்களுக்கு தினமும் கொடுத்தார். பிறகு தனது நாட்டில் எல்லோரும் சாப்பிட வேண்டும் என்று சட்டத்தையே கொண்டு வந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதைப் பற்றி இப்போது பலநாடுகளில் பலவிதமாக ஆராய்ச்சிகள் செய்தும் வருகிறார்கள். பல விஞ்ஞானி கள் இதைப் பலருக்கும் கொடுத்து ஆய்வு செய்து முடிவுகளையும் வெளியிட்டுள்ளனர்.

  தமிழில் ஆளி விதை எனப்படும் இந்த விதை தெலுங்கில் ‘அவிஸி கிற்சலு’, மலையாளத்தில் ‘செருவுசான வித்து‘, கன்னடத்தில் ‘அகஸி’, ஹிந்தியில் ‘அல்ஸி‘, பெங்காலியில் டிஷி (ஜிவீsலீவீ) என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு இன்னொரு பெயர் இடாஸி. ஆனால், நம் நாட்டில் ‘லின் சீட்ஸ்’ என்பதே ஆங்கிலத்தில் பழக்கத்தில் இருந்தது. இப்போது பலரும் பெயர் தெரியாததால் வேற்றுநாட்டு மொழியில் கூறப்பட்டதையே ஆங்கிலத்தில் கூறுகின்றார்கள்.

  100 கிராம் அளவு ஆளி விதையில் இருக்கும் சத்துகள்

  புரதச்சத்து - 20.3 கிராம்
  கொழுப்பு - 37.1 கிராம்
  நார்ச்சத்து - 40.8 கிராம்
  மாவுச்சத்து- 28.9 கிராம்
  சக்தி - 530 கி.கலோரிகள்
  கால்சியம் - 170 மி.கிராம்
  பாஸ்பரஸ் - 370 மி.கிராம்
  இரும்புச்சத்து - 2.7 மி.கிராம்
  இது மட்டுமல்ல கரோட்டீன் (வைட்டமின் - ஏ) தயாமின், ரிபோஃப்ளோவின், நயாஸின் (4.4 மி.கி.), ஃபோலிக் ஆஸிட் மிகச்சிறந்த அளவில் உள்ளன.
  இதில் புரதச்சத்தின் முக்கியக்கூறான 12 அமினோ அமிலங்களும் உள்ளன. அதனால் இதை ஒரு ‘முழுமையான உணவு’ என்று கூறலாம்.
  நமது ஆரோக்கியத்தில்ஆளி விதையின் பங்கு

  *இதில் உள்ள ஆல்பா லினோலியிக் ஆஸிட் என்னும் கொழுப்பைத்தான் ‘ஒமேகா-3’ கொழுப்பு என்றும் கூறுவர். இது மிக முக்கிய கொழுப்புச்சத்து. ரத்தக் குழாய்களில் மற்ற கொழுப்புகள் படியாமலிருக்க செய்யும். அதனால் மாரடைப்பு வராமலிருக்க உதவும். ஆஸ்துமா, பார்க்கின்ஸன்ஸ் எனப்படும் சீக்கிரம் வயதான தோற்றமளிக்கும் வியாதியைத் தடுக்கும் பல முக்கிய சத்துகளைக் கொண்டது. இதில் உள்ள ‘லிக்னன்‘ என்னும் கொழுப்பு உதவி புரியும் என்பதை பல விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர். அதில் முக்கியமானது ‘பிட்ஸ் பேட்ரிக்’ என்னும் விஞ்ஞானி செய்த ஆய்வு.

  *பெண்கள் மாதவிடாய் நிற்கும் காலங்களில் திடீரென உடல் சூடாவது போலவும் குளிர்வது போலவும் அதிகம் வியர்ப்பது போலவும் உணர்வர். இதை ஆங்கிலத்தில் ‘ஹாட் ஃப்ளஷஸ்’ என்று கூறுவர். உடலில் ‘ஈஸ்ட்ரோஜன்’ என்னும் ஹார்மோனின் சுரப்பில் வித்தியாசம் ஏற்படும் போது இதைப்போல உணர்வர். இந்த ஆளி விதையில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் இதைப் போல வருவதைக் குறைக்கும் என்றும் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தினமும் 2 டேபிள்ஸ்பூன் அளவு பல விதமாக உணவுகளில் சேர்க்கும் போது பாதிக்குப் பாதி குறைகிறது என்பதை 2007ல் நடந்த ஆய்வு கூறுகிறது.

  *இதில் கரையும் தன்மை உள்ள நார்ச்சத்து, கரையும் தன்மை அற்ற நார்ச்சத்து இரண்டுமே பல வகைகளில் நமக்கு நன்மை செய்யும். கொலஸ்ட்ராலை குறைக்கும். மலச்சிக்கல் ஏற்படுத்தாது. சர்க்கரை வியாதியைக் குறைக்கும். க்ளைஸிமிக் இன்டெக்ஸ் குறைவு.

  *இதில் அதிக அளவு உயிர்வளித் தாக்க எதிர்க்காரணிகள் (Anti Oxidants) உள்ளதால் பிராஸ்டேட் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், மலக்குழாய் புற்றுநோய் போன்றவை வராமல் பாதுகாக்கும். தினமும் உட்கொண்டால் புற்றுநோய்க் கட்டிகள் உருவாகாது. வந்தவர்கள் உட்கொண்டால் கட்டிகள் மேலும் பெருகாது என ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

  *தினமும் ஆளி விதை உட்கொண்டால் மூட்டுவலியைக் குறைக்கும். சருமத்துக்கும் நமது தலைமுடிக்கும் மினுமினுப்பைத் தரும்.

  *இந்த ஆளி விதையையும் அதன் செடியையும் பசுக்களுக்கு உணவாகத் தரும் போது அது சுரக்கும் பாலும் அதிக சத்துள்ளதாக இருக்கும்.

  இத்தனை நற்குணங்கள் கொண்ட இந்த ஆளி விதையை நாம் பலவிதமாக உணவில் சேர்க்க இயலும்.

  *ஆளி விதையை வெறும் கடாயில் மிதமான தணலில் நல்ல மணம் வரும் வரை வறுத்தால் நாம் அப்படியே உண்ண முடியும்.

  *இதைப் பொடியாகச் செய்து வைத்துக் கொண்டால் பழங்களில் இருந்து செய்யும் ‘ஸ்மூத்தி’, மில்க் ஷேக், தயிர், லஸ்ஸி, கஞ்சி போன்றவற்றில் சேர்க்கலாம்.

  *கேக், பிஸ்கெட், பிரெட், பன் போன்றவற்றிலும் சேர்க்க இயலும்.

  *இதில் துவையல், பொடி வகைகள், கலவை சாதங்கள் செய்தால் ருசியாக இருக்கும்.

  *வெல்லம் சேர்த்து செய்யும் சில இனிப்பு களோடு சேர்த்தும் செய்யலாம். உலர்பழ லட்டு, எள் பர்பி, எள் உருண்டை போன்றவற்றுடன் சேர்க்கலாம்.

  *சாண்ட்விச், தோசையின் மேல் பூசும் மசாலாவின் மீது, ஸ்டஃப்டு சப்பாத்தி என்று பலவற்றிலும் சேர்க்க இயலும்.

  *உலர்பழ வகைகளில் பேரீச்சம்பழம், திராட்சை, அக்ரோட், அத்தி, பாதாம் போன்றவற்றுடன் சேர்த்து வெல்லமே சேர்க்காமல் பர்பி, லட்டு செய்யலாம்.நான் செய்து ருசித்த, பின்வரும் உணவுகளை செய்து பாருங்கள்.

  1. ஆளி விதை சாதம்

  1 ஆழாக்கு சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைக்கவும். 4 சிவப்பு மிளகாய், 1லு டேபிள் ஸ்பூன் உளுந்து, 1லு டேபிள் ஸ்பூன் ஆளி விதை தனித்தனியாக வறுத்து ஒன்றாக பொடி செய்யவும். சாதத்தில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரி, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இந்தப் பொடியைத் தூவி தகுந்த உப்பு சேர்த்து கலந்து பரிமாறவும். மிக ருசியாக இருக்கும்.

  2. எள், ஆளி விதை லட்டு

  1/4 ஆழாக்கு எள்ளை நிறம் மாறும் வரை தனியே வறுக்கவும். 1/4 ஆழாக்கு ஆளி விதையை பொரிந்து, நல்ல மணம் வரும் வரை வறுக்கவும். இரண்டையும் மிக்ஸியில் போட்டு விட்டு இயக்கவும். பொடியானதும் சம அளவு துருவிய வெல்லம், ஏலத்தூள் சிறிதளவு சேர்த்து ஒரு தடவை மிக்ஸியை இயக்கி சேர்ந்து கொண்டதும் தட்டில் கொட்டவும். சிறிய உருண்டைகளாகச் செய்யவும். தினமும் 2 உருண்டை எல்லோரும் சாப்பிட இயலும்.

  3. ஆளி விதை துவையல்

  ஆளி விதை 2 டேபிள்ஸ்பூன் வறுத்து எடுத்துக் கொள்ளவும். சம அளவு கொள்ளைத் தனியே வறுக்கவும். 5 சிவப்பு மிளகாயை ஒரு சொட்டு எண்ணெய் விட்டு வறுக்கவும். ஆற விட்டு இதோடு சிறிது ஊற வைத்த புளி, 3 பல் பூண்டு, தகுந்த உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கலாம். சாதத்துடனும் பரிமாறலாம். இட்லி, தோசைக்கு சட்னியாகவும் கொடுக்கலாம்.

  இதில் உள்ள ‘ஒமேகா-3’ என்கிற முக்கிய கொழுப்புச்சத்து, ரத்தக் குழாய்களில் மற்ற கொழுப்புகள் படியாமலிருக்கச் செய்யும்.
  அதனால் மாரடைப்பு வராமலிருக்க உதவும்.

  ஒரு முக்கியக் குறிப்பு

  கர்ப்பிணிகள் இதை உணவில் அதிகம் சேர்க்க வேண்டாமென கூறியுள்ளார்கள். அதிக நார்ச்சத்து இருக்கும் போது சரியாகத் தண்ணீர் அருந்தாவிட்டால், குழந்தை அழுத்தும் போது குடலில் இருந்து சீக்கிரம் வெளித்தள்ளப்படாமல் போகலாம். முன்பிருந்தே சாப்பிடாமல் திடீரென தினமும் உட்கொண்டால் வயிறு உப்புசம், வயிற்றில் சிறு வலி, ஒரு சிலருக்கு வாந்தி, பேதி அல்லது மலச்சிக்கல் வரலாம்.

  இது கர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டுமே கூறப்பட்டுள்ளது.இதில் ஈஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோனை போன்ற ஒன்று இருப்பதால் கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது. எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என சொல்ல இயலாது. ஒரு சிலருக்கு ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.
  Sponsored Links
  Last edited by chan; 21st Mar 2015 at 01:33 PM.

 2. #32
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: தானியங்கள் மற்றும் பருப்புகளின் மருத்&

  கோதுமை

  உலகம் முழுவதும் உபயோகப்படுத்தும் தானியங்களில் முதலிடம் கோதுமைக்கே. கோதுமையில் பல வகைகள் இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். நமது நாட்டில் வட இந்தியர்கள் சப்பாத்திக்கு பஞ்சாப் கோதுமையையும், பூரிக்கு சம்பா கோதுமையையும் அதிகம் உபயோகப்படுத்துகின்றனர்.

  பஞ்சாப் கோதுமையில் ‘க்ளூடன்’ எனப்படும் ஒரு வகைப் புரதம், மற்ற கோதுமையை விட அதிகமாக இருப்பதால் பிசைந்த மாவு நன்கு நெகிழும் தன்மையுடன் இருக்கும். அதனால் சப்பாத்தியும் நன்கு வரும். சம்பா கோதுமையில் இருந்து தயாரிக்கும் ரவையையும் (நாட்டு ரவை) மாவையும் தமிழ்நாட்டில் அதிகமாக உபயோகப்படுத்துகிறோம்.
  முன்பெல்லாம் வட இந்தியர்தான் ‘சப்பாத்தி’, தென் இந்தியர் அரிசி சாதம், அரிசியில் செய்த சிற்றுண்டிகளையும் அதிகம் விரும்பி சாப்பிட்டனர். இப்போதோ, தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் சப்பாத்தி சாப்பிடு பவர்கள் அதிகமாகி விட்டனர்.

  கோதுமையை நாமே வாங்கி மெஷினில் திரித்து மாவாக்கி உபயோகிக்கும் போது மாவு சிறிதே அடர்த்தியாக இருக்கும். திரித்தபின் 1 கிலோவுக்கு 5 ஆழாக்குதான் வரும். ஆனால், கடைகளில் விற்கும் மாவு லேசாக இருக்கும். அளக்கும் போது அதிக மாவு இருக்கும்.

  கோதுமை மாவை தயாரிக்கும் பெரிய ஃபேக்டரியை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்த போது நான் பல விஷயங்களை புரிந்து கொண்டேன். முதலில் கோதுமையின் கல், தவிடு நீக்கப்படும். (மெஷினின் உதவியால் தான்). அதன் பிறகு தண்ணீர் ஸ்பிரே செய்யப்பட்டு 1 நாள் முழுவதும் வைக்கப்படும்போது லேசாக கோதுமை உப்பும். அதன் பிறகு அது உலர வைக்கப்படும் இடத்துக்கு மெஷினின் மூலமே கொண்டு செல்லப்படும். பெரிய அளவில் இருக்கும் ஓவனின் உள்ளே சென்று வெளிவரும்போதே உலர்ந்து விடும்.

  அடுத்த மெஷினில் அதனுடைய மேற்பாகம் உடைக்கப்பட்டு ரவையாக்கப்படும். உள்ளே இருக்கும் பகுதி மைதாவாகப் பிரிக்கப்படும். இரண்டுக்கும் மத்தியில் உள்ளது ஆட்டாவாக வெளிவரும். ‘க்ளூடன்’ அதிகம் இருக்கும் பகுதி தான் மைதாவாக வரும். அதனுடைய வெண்மை நிறம் கிடைக்க செயற்கை ரசாயனங்கள் சேர்க்கப்படும். கோதுமையின் எந்த பகுதியும் வீணாவதில்லை. கோதுமைத் தவிடும் பலவித பிஸ்கெட் தயாரிக்கும் உணவுத் தொழிற்சாலைகளுக்கும், தீவனங்கள் தயாரிக்கவும் வாங்கிச் செல்லப்படுகிறது.

  முக்கியப் பகுதியான ‘வீட்ஜெர்ம்' எல்லா இடங்களிலும் பிரிக்க மாட்டார்கள். ஒரு சில இடங்களில் பிரிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு பாட்டில்களில் விற்கப்படும். இதில் உள்ள அதிக நார்ச்சத்து, புரதம், இரும்புச் சத்துக்காக இதை தனியே வாங்கி உணவில் சேர்ப்பவர்களும் உண்டு.வட இந்திய வீடுகளில் பார்த்திருக்கிறீர்களா? ஒரு சிறிய மாவு அரைக்கும் இயந்திரம் வைத்திருப்பார்கள். 3லிருந்து 5 கிலோ வரை சுலபமாக வீட்டிலேயே திரித்துக் கொள்வார்கள். இதைப் போல திரிக்கும் போது வேறு மாவு எதுவும் கலக்காது. சலிக்காமல் முழு கோதுமை மாவாக உபயோகப்படுத்தும் போது கோதுமையின் சத்துகள் அதிகம் வீணாகாது. ஒரு சிலர் அதோடு 1 கிலோ மாவுக்கு 1/2 ஆழாக்கு கடலைப் பருப்பும் சேர்த்து அரைப்பார்கள். ருசியுடன் கடலைப்பருப்பில் இருக்கும் சத்துகளும் கூடும்.

  நாம் மாவு மெஷினில் அரைக்கக் கொடுத்தால் 1 கிலோவுக்கு 1 ஆழாக்கு சோயா, 1/2 ஆழாக்கு கடலைப் பருப்பை சேர்த்து அரைக்கலாம். சோயாவை லேசாக வறுத்து அரைக்க வேண்டும். இப்போது பல தானியங்கள், பருப்புகள் கலந்து மல்ட்டி கிரெயின் கோதுமை மாவு பிரபலமாக ஆரம்பித்திருக்கிறது. அதில் அவர்கள் 80% கோதுமையுடன் ராகி, பார்லி, ஓட்ஸ், கடலைப் பருப்பு, சோயா என்று மற்ற தானியங்கள், பருப்பு வகைகளை 20% சேர்க்கின்றனர்.

  கோதுமையில் என்னென்ன சத்துகள்?

  கலோரிகளை பொறுத்தவரை அரிசியில் உள்ள அதே அளவுதான் கோதுமையிலும் உள்ளது. 100 கிராம் அளவுக்கு 346 கிலோ கலோரிகள் கிடைக்கும். முழு கோதுமையில் 100 கிராம் அளவில்...புரதம் - 11.8 கிராம், கொழுப்பு - 1.5 கிராம், தாதுக்கள் - 1.5 கிராம், நார்ச்சத்து - 1.2 கிராம், மாவுச் சத்து - 71.2 கிராம், கால்சியம் - 41 மி.கி., பாஸ்பரஸ் - 306 மி.கி., இரும்புச் சத்து -
  5.3 மி.கி., ஜெரோட்மின் - 64 மைக்ரோ கிராம், தயாமின் - 0.45 மி.கி., ரிபோஃப்ளோவின் - 0.17 மி.கி., நயாசின் - 5.5 மி.கி., ஃபோலிக் ஆசிட் - 142 மைக்ரோ கிராம் அளவு உள்ளது.
  இந்த புரதத்தில் எல்லா முக்கிய அமினோ அமிலங்களும் உள்ளன. இதைத் தவிர எல்லா தாது உப்புகளுமே உள்ளன. காப்பர், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், மாங்கனீசு, துத்தநாகம், சல்ஃபர், குரோமியம் என எந்த சத்துமே இல்லை எனக் கூற இயலாது.

  இப்படி எல்லா சத்துகளும் நிரம்பியுள்ளதால் தான் இதற்கு வேறு எந்த தானியத்துக்குமே தராத அளவு முக்கியத்துவம் இன்றும் உள்ளது.மெல்லிய சிரோட்டி ரவை, மைதா, பம்பாய் ரவை, நாட்டு ரவை, சேமியா, பாஸ்டா, கோதுமை மாவு என்று பலவிதமாகவும் கிடைப்பதால் நாமும் வித விதமான டிபன் வகைகளை செய்வது மட்டுமின்றி இன்னமும் புதிது புதிதாக கண்டுபிடித்துக் கொண்டே வருகிறோம்.இனிப்பு, காரவகைகள், பொரித்த உணவுகள், பேக்கிங் செய்யும் கேக்குகள், பிஸ்கெட்டுகள் என்று இதில் இருந்து செய்யும் உணவு வகைகள் ஏராளம்.

  இந்தியாவில் ‘க்ளூடன்’ அலர்ஜி குறைவு. அமெரிக்க நாடுகளில் மிக அதிகம். அவர்கள் உணவுப் பழக்கமும் காரணமாக இருக்கலாம். அவர்கள் மைதாவாக உபயோகப்படுத்துவது தான் அதிகம். பிரெட், பீட்சா, நூடுல்ஸ், பன், பர்கர், கேக், குக்கீஸ் என்று மற்ற நாடுகளில் அவர்கள் விரும்பும் உணவுகளை இன்று நம் நாட்டிலும் உண்ணும் பழக்கம் அதிகமாகி விட்டது. இந்தத் தலைமுறையினர் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு நம் நாட்டு நல்ல விஷயங்களை மறக்காமல் இருக்க வேண்டும். மைதாவை இப்போது தவிர்க்கச் சொல்வதற்கு காரணம் அதில் உபயோகப்படுத்தப்படும் ரசாயனங்கள்தான்!

  எல்லாவற்றையும் நாமும் உண்ணலாம். தவறில்லை. என்றாவது ஒரு நாள் மிதமாக உண்ணும் போது ஆரோக்கியக் குறைபாடுகள் குறைவாகவே இருக்கும். நமது உடல் உழைப்புக்கேற்பவும், வயது, பால், செய்யும் வேலை இதற்கேற்ப நமது நாட்டில் இந்திய கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் பரிந்துரை செய்யப்பட்டுள்ள அளவின்படி நாம் உண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்.

  சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்களுக்கும் கூட கோதுமை பரிந்துரை செய்யப்படக் காரணம், அதன் நார்ச்சத்துக்காகவும் மற்ற சத்துகளுக்காகவும்தான். உடலில் குளுக்கோஸை மெதுவாக ரத்தத்தில் தள்ள இதில் உள்ள நார்ச்சத்து பயன்படும். ‘க்ளைசெமிக் இண்டெக்ஸ்’ அரிசியை விட கோதுமையில் குறைவு.

  மைதாவை இப்போது தவிர்க்கச் சொல்வதற்கு காரணம் அதில் உபயோகப்படுத்தப்படும் ரசாயனங்கள்தான்!

  சம்பா ரவை ரொட்டி

  சம்பா ரவையை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். மாலையில் செய்ய காலையிலேயே ஊற வைக்க வேண்டும். சிறிதளவு புளிக் கரைசலும் சேர்க்கலாம். செய்வதற்கு முன் சிறிய வெங்காயம் 3, பச்சை மிளகாய் 1, உப்பு சேர்த்து லேசாக அரைத்து, ஊற வைத்த ரவையைப் போட்டு லேசாக ஒரே தடவை (விப்பரில் போட்டு) மிக்ஸியில் சுற்றி எடுக்கவும். அதிகம் அரைபட்டால் கொழ கொழப்பாகி விடும். இதை கையளவு எடுத்து சூடான தோசைக்கல்லில் சிறிதே கனமான ரொட்டி போல் தட்டி எண்ணெய் விட்டு இருபுறமும் திருப்பி விட்டு சுட்டு எடுத்து பரிமாறவும். மிக ருசியாக இருக்கும். இதற்கு தொட்டுக் கொள்ள தொக்கு போதுமானது.

  பிரக்கோலி ஸ்டஃப்டு பராத்தா

  காலிஃப்ளவரை போல பச்சை நிறத்தில் இருக்கும் பூவை பிரக்கோலி எனக் கூறுவர். இதை சிறிது நேரம் உப்பு கலந்த நீரில் ஊறவைத்து பிறகு நன்றாகக் கழுவி சிறிய துண்டங்களாக்கவும். பிறகு மிக்ஸியில் போட்டு இயக்கினால் தூளாகும். ஒரு கடாயில் சிறிதே எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து இஞ்சி, பச்சை மிளகாய் விழுது சேர்த்து பிரக்கோலியை போட்டு நன்கு வதக்கவும். அடுப்பை அணைத்தபின் உப்பு சேர்த்து கலக்கவும்.

  1 ஆழாக்கு கோதுமை மாவுடன் 1/4 ஆழாக்கு மைதா சேர்த்து உப்பு போட்டு சிறிதே தளர்த்தியான மாவாக பிசையவும். ஒரு ஸ்டஃப்டு சப்பாத்திக்கு இரண்டு சிறிய உருண்டை தேவை. சிறிதே கனமாக 3 அங்குல கனத்துக்கு இடவும். ஓரங்களை ஈரம் தொட்டுத் தடவி மத்தியில் சிறிது பிரக்கோலி கலவையை வைத்து மேலே இன்னொரு சப்பாத்தியால் மூடி ஒட்டி மெல்லியதாக இடவும். சூடான தோசைக்கல்லில் சிறிதே எண்ணெய் விட்டு சுட்டால் ருசியாக இருக்கும்.


  Last edited by chan; 24th Mar 2015 at 02:06 PM.

 3. #33
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: தானியங்கள் மற்றும் பருப்புகளின் மருத்&

  கேழ்வரகு

  பல காலமாக ஏழைகளின் உணவாகவே பார்க்கப்பட்ட கம்புக்கும் கேழ்வரகுக்கும், இப்போது நட்சத்திர அந்தஸ்து கிடைத்திருக்கிறது. ஆமாம்... நட்சத்திர ஓட்டல்களின் மெனுபட்டியலில் இடம்பெறுகிற அளவுக்கு இவற்றின்அந்தஸ்து உயர்ந்திருக்கிறது இன்று.கையேந்தி பவன்களில் தொடங்கி கார்பரேட் கம்பெனிகளின் உணவுத் தயாரிப்புகள் வரை எல்லா இடங்களிலும் சிறுதானியங்களைப் பற்றிய விழிப்புணர்வைப் பார்க்க முடிகிறது. நோயற்ற வாழ்க்கைக்கும் நீடித்த இளமைக்கும் சிறுதானியங்களில் தீர்வு இருப்பது நிரூபிக்கப்பட்ட உண்மை!

  சிறுதானியங்களின் சிறப்புகளையும் அவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய முறை களையும் பற்றி, இனி ஒவ்வோர் இதழிலும் பேசப் போகிறார் பிரபல சமையல்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத்! நமது உடல் நன்றாக இயங்குவதற்கு ஊட்டச்சத்துகள் மிகவும் முக்கியம். சிறு குழந்தை முதல் வயதானவர் வரை எல்லோருக்கும் அந்தந்த வயதில் தேவையான சத்துகளில் முக்கியமானவற்றை கேழ்வரகில் இருந்து பெற இயலும்.

  அரிசி சாதம் புழக்கத்தில் வருவதற்கு முன், நமது தமிழ்நாட்டில் கம்பையும் கேழ்வரகையும்தான் தினமும் உண்டார்கள். அவற்றில் நமது உடலுக்குத் தேவையான எல்லாச் சத்துகளுமே கிடைத்தன. அதிக நேரம் பசிக்காமலும் இருந்தது. ஆரோக்கியமாக இருந்தார்கள். காரணம், இதில் உள்ள அபரிமிதமான சத்துகள்!

  புரதம்

  பிறந்தது முதல் உடல் வளர்ச்சியடைய, திசுக்கள், செல்கள் உருவாக, எலும்புகள் பலமுடன் இருக்க, மூளை நன்றாக இயங்க புரதச்சத்து மிக அவசியம். பல முக்கிய அமினோ அமிலங்களின் சேர்க்கையையே புரதம் என்கிறோம். பொதுவாக ‘முழுமையான புரதம்’ என்பது சைவ உணவில் கிடைப்பது கடினம். கேழ்வரகிலோ மற்ற தானியங்களை விட புரதம் சிறந்த சேர்க்கையில் உள்ளது.

  கேழ்வரகை முளைகட்டும் போதும், வறுக்கும் போதும் புரதம் சுலபமாக ஜீரணமாகும் அளவில் மாற்றப்படுகிறது. 9 முக்கிய அமினோ அமிலங்களும் ஒரே உணவில் கிடைக்கும்போது கேழ்வரகை முழுமையான உணவு என்றுதானே சொல்ல வேண்டும்? இந்த அமினோ அமிலங்கள் இருக்கும் போது, பிற அமினோ அமிலங்களை நமது உடலே உற்பத்தி செய்து கொள்ளும்.

  மாவுச்சத்து

  நமது உடல் நன்றாக வேலை செய்ய தேவையான சக்திக்கு ஆதாரமாக உள்ளது மாவுப்பொருளே. ‘கார்போஹைட்ரேட்’ எனப்படும் இந்த மாவுப் பொருள் வேறு பல தானியங்களில் ‘குளூட்டன்’ (Gluten) எனும் பசைத் தன்மை உடையதாக இருக்கிறது. இது அதிகம் இருக்கும் போது சுலபமாக எடை கூடி விடும் (தேவைக்கு அதிகமாக உண்ணும்போது, இந்த மாவுச்சத்து கொழுப்பாகசுலபமாக மாற்றப்படும்).

  கேழ்வரகிலோ இதுபோன்ற மாவுச்சத்து அறவே இல்லை. எடையை அதிகரிக்கச் செய்யாத நல்ல மாவுச்சத்தை நாம் சிறுதானியங்கள் மூலம் பெற இயலும். கேழ்வரகில் இருக்கும் மாவுச்சத்து கரையும் தன்மை உடைய நார்ப்பொருளுடன் கூடி இருப்பதால், ரத்தத்தில் குளூக்கோஸை மெதுவாகவேஏற்றும்.

  கொழுப்பு

  வைட்டமின்கள் உட்கிரகிக்கப்படுவதற்கு மட்டுமல்ல... பல முக்கிய வேலைகள் நன்கு நடைபெறத் தேவையான நல்ல கொழுப்பும் கேழ்வரகில் இருக்கிறது.

  வைட்டமின்கள்நீரில் கரையும் வைட்டமின்களான - பி காம்ப்ளெக்ஸில் முக்கியமான - தயாமின், ரைபோஃப்ளேவின், நயாசின், ஃபோலிக்அமிலம் போன்றவை கேழ்வரகில் உள்ளன. நரம்புகளின் உறுதிக்கும், உடலில் மாவுச்சத்து சீராக பயன்படுத்தப்படுவதை கவனிக்கும் பணிக்கும், பல முக்கிய வேதிவினைகள் நடைபெறவும், செரிமானக் கோளாறுகள் ஏற்படாமல் இருக்கவும் இந்த வைட்டமின்கள் அவசியம்.கேழ்வரகை முளைகட்டும்போதுவைட்டமின் ‘சி’ கிடைக்கும். நோய் எதிர்ப்புத் திறனுக்கும், உடலில் இரும்புச் சத்து உட்கிரகிக்கப் படுவதற்கும் இந்த வைட்டமின் தேவை.

  தாது உப்புகள்

  கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளிட்ட பல முக்கிய தாது உப்புகள் கேழ்வரகில் உள்ளன.

  கால்சியம்

  நமது ஒரு நாளையத் தேவை 400 மில்லிகிராம் கால்சியம். 100 கிராம் கேழ்வரகில் 350 மில்லி கிராம் கால்சியம் நிறைந்துள்ளது. எலும்பின் வளர்ச்சிக்கும் அடர்த்திக்கும் பலமான பற்கள் வளருவதற்கும் கால்சியம் முக்கியமாகத் தேவை. தாய்ப்பாலுக்கு அடுத்து நல்ல கால்சியத்தை பெறுவதற்கு கேழ்வரகுதான் நமது முன்னோருக்குஉதவியது.

  பால் அலர்ஜி உள்ள குழந்தைகளுக்கு கேழ்வரகை ஊறவைத்து, பாலெடுத்து வடிகட்டி, தண்ணீர் ஊற்றி காய்ச்சி தரும்போது, அவர்களுக்குத் தேவையான கால்சியம் சுலபமாகக் கிடைக்கும். பிறந்து 28 நாட்களே ஆன குழந்தைகளுக்குக்கூட இதைத் தரலாம். 6 மாதம் ஆன குழந்தைகளுக்கு கேழ்வரகு சத்துமாவு ஒரு முழுமையான உணவாக அமைகிறது.

  கர்ப்பம் தரித்த பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், அதிக அளவில் கால்சியம் தேவைப்படும் நிலையில் இருப்பவர்களுக்கு கேழ்வரகு மிகவும் உதவியாக இருக்கும். மாதவிடாய் நின்ற பிறகு பெண்களுக்கு கால்சியம் சுலபமாக உறிஞ்சப்படாமல் இருக்கும். கேழ்வரகில் இருந்து பெறப்படும் கால்சியம் நன்கு உறிஞ்சப்படும். இதை வாரம் 3 நாட்களாவது உட்கொண்டால், ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படும் எலும்புகள் பலமிழந்த நிலையைத் தவிர்க்க இயலும்.

  இரும்புச்சத்து

  உடலில் ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாவதற்கும் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைத் தரும் ‘ஹீமோகுளோபின்’ குறைபாடு ஏற்படாமல் இருக்கவும் இரும்புச்சத்து மிக அவசியம். இந்த தானியத்தோடு இணை உணவுகளை சேர்த்து தயாரிக்கும் போது சுலபமாக உட்கிரகிக்கப்படும் நிலையில் நமக்கு இரும்புச்சத்து கிடைக்கும். ரத்தசோகை வராது.

  பாஸ்பரஸ்

  நமது உடலில் திசுக்கள் உருவாகி இயங்கவும், எலும்புகள் மற்றும் பற்களின் உருவாக்கத்துக்கும் அவசியமான பாஸ்பரஸ் சத்து கேழ்வரகில் தேவையான அளவு கிடைக்கிறது.

  நோய் நீக்கும் தானியம்!

  இப்போது மிகவும் பரவலாக இருக்கும் உடல் இயக்கக் குறைபாடுகள் வராமல் இருக்க உதவி புரியும் கேழ்வரகை நாம் அடிக்கடி உண்ண வேண்டும். நோய்களை விட இந்தப் பிரச்னைகள் உள்ளவர்களே அதிகம். வராமல் தடுப்பது நாம் தேர்ந்தெடுத்து உண்ணும்உணவில்தான் இருக்கிறது. இந்த உடல் இயக்கக் குறைபாட்டில் மிகவும் அதிகமாக உள்ளது நீரிழிவு.

  * நீரிழிவு (சர்க்கரை நோய்)க்கு...

  ரத்தத்தில் குளுக்கோஸை உடனே உயர்த்தாமல் மெதுவாக ஏற்றும் தன்மை கேழ்வரகில் உள்ளது. ‘க்ளைஸிமிக் இண்டெக்ஸ்’ (Glycemic index) மிகக்குறைவாக உள்ளதால், சர்க்கரை நோயாளிகளுக்கு இது மற்ற தானியங்களுக்கு நல்ல மாற்றாக அமையும்.

  * உடல் எடை குறைய...

  இதில் உள்ள ட்ரிப்டோபன் (Tryptophan) என்னும் அமிலம் பசியைத் தூண்டும் உணர்ச்சியை குறைக்கும்.

  * கொலஸ்ட்ரால் குறைய...

  இதிலுள்ள லெசிதின், மித்யோனைன் எனப்படும் அமினோ அமிலங்கள்கொலஸ்ட்ராலை குறைக்கும்.

  * கொழுப்பு படியாத கல்லீரலுக்கு...

  இதிலுள்ள த்ரியோனைன் எனப்படும் அமினோ அமிலம் கல்லீரலில் கொழுப்பு படியும் தன்மையை குறைப்பதால் ‘கொழுப்பு படிந்த கல்லீரல்’ எனப்படும் பிரச்னை வராமல்
  இருக்கும்.

  * பக்கவாதம், உயர் ரத்த அழுத்தத்துக்கு...

  ரத்தக்குழாயில் படியும் கொழுப்பை குறைக்கும் தன்மை உள்ளதால் உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் வராமல் தடுக்கும்.

  * தூக்கமின்மை, மனச் சோர்வுக்கு...


  இதில் உள்ள ‘ட்ரிட்டோபன்’ என்னும் அமினோ அமிலம் மூளைக்குச் செல்லும் செல்களுக்கு நல்ல சக்தியைத் தரும். அதனால் உடல் சோர்வு, மனச் சோர்வு, தூக்கமின்மை குறையும்.

  * யாருக்கு ஓ.கே? யாருக்கு நோ?

  கோதுமை அலர்ஜி, பால் அலர்ஜி உள்ளவர்கள் அதற்குப் பதிலாக கேழ்வரகை தினமும் உண்ணலாம். பாதிப்பு ஏற்படாது. சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் இந்த தானியத்தை அதிகமாகவும் தினமும் சாப்பிடக் கூடாது.

  கேழ்வரகு பெருமைகள் கேளீர்!

  கேழ்வரகு பயிரிட அதிகத் தண்ணீர் விட தேவையில்லை. பஞ்ச காலங்களில் கூட பயிரிட இயலும். வருடம் முழுவதும் சுலபமாக வளரும் தன்மை உடையது. உடலில் கட்டிகள் வராமல் பாதுகாக்கும் தன்மை கேழ்வரகுக்கு உண்டு.அதிகமாக வியர்க்கும் தன்மை உடையவர்கள் கேழ்வரகை அடிக்கடி சேர்ப்பதால் குணம் தெரியும். அதிகம் வியர்க்காது. வாதம், பித்தம், கபம் போன்ற மூன்று தோஷங்களையும் சமன்படுத்தும் திறன் உடையது கேழ்வரகு. வெயில் காலத்தில் அடிக்கடி உண்ணலாம். குளிர்ச்சியை தரக்கூடிய உணவு.

  கி.மு. 2300க்கு முன்பிருந்தே இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் கேழ்வரகை உண்டார்கள்.கேழ்வரகு கர்நாடகாவில் அதிகம் பயிரிடப் படுகிறது. கேழ்வரகின் மேல் தோலை மற்ற தானியங்களைப் போல் நீக்க இயலாது. பாலீஷ் செய்ய இயலாது. கேழ்வரகு மாவை சலிக்காமல் பயன்படுத்தும் போது முழுமையாக நார்ச்சத்து கிடைக்கும்.

  100 கிராம் கேழ்வரகில் உள்ள சத்துகள் கலோரிகள் (ஆற்றல்) - 336 கிராம், மாவுச் சத்து - 72.6 கிராம், புரதம் - 7.7 கிராம், நார்ச்சத்து - 3.6 கிராம், கொழுப்பு - 1.5 கிராம், கால்சியம் - 350 கிராம், இரும்புச்சத்து - 3.9 மில்லி கிராம், நயாசின் - 1.1 மில்லி கிராம், தயாமின் - 0.42 மில்லி கிராம். ரிபோஃப்ளோவின் - 0.19 மில்லி கிராம்.

  சத்துமாவு செய்வது எப்படி?

  1 கிலோ கேழ்வரகை முளை கட்டி, நிழலில் உலர்த்தி, கடாயில் நல்ல மணம் வரும் வரை வறுக்கவும் (கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வறுக்க வேண்டும்). 200 கிராம் பஞ்சாப் கோதுமையை நன்றாக வறுக்கவும். 50 கிராம் பொட்டுக்கடலை, 200 கிராம் பயத்தம் பருப்பை தனியாக நன்கு வறுக்கவும். இவை எல்லாவற்றையும் ஒன்றாக மாவாக அரைக்கவும். இனிப்புச் சுவையுடன் பால் சேர்த்து அருந்துபவர்களானால் இதோடு பாதாமும் குங்குமப்பூவும் சேர்க்கலாம். கஞ்சியாகக் காய்ச்சி உப்பும் மோரும் கலந்தும் குடிக்கலாம்.


  மல்லிகா பத்ரிநாத் 4. #34
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: தானியங்கள் மற்றும் பருப்புகளின் மருத்&

  வெள்ளை சோளம்

  வெள்ளை சோளத்தை ஆங்கிலத்தில் Great millet (கிரேட் மில்லெட்) என்று அழைப்பார்கள். பெயருக்கேற்றபடியே சிறுதானியங்களில் சிறப்பான இடம் உண்டு இதற்கு. இதன் இன்னொரு பெயர் சொர்கம் (Sorghum). ‘மைலோ’ என்றாலும் வெள்ளை சோளத்தைத்தான் குறிக்கும். இதை தெலுங்கில் - ஜொன்னலு, இந்தியில் - ஜோவர், கன்னடத்தில் - ஜுலா என்றும் அழைப்பார்கள்.


  பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்களுக்குப் பரிச்சயமானவை சிறுதானியங்கள் மட்டுமே. மிகவும் சுலபமாக வளரக்கூடியவை. 1966ம் ஆண்டுதான் ‘பசுமைப் புரட்சி’ என்ற பெயரில் அரிசி, கோதுமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். சிறுதானியங்கள் பயிரிட்ட 44 சதவிகித இடங்களில் இதை பயிரிட்டார்கள்.

  உலக உற்பத்தியில் 42 சதவிகித சிறுதானியங்கள் இந்தியாவில் மட்டுமே பயிரிடப்படுகின்றன. இந்த சிறுதானியங்களை பயிரிடும்போது அரிசி, கோதுமையைப்போல அதிக தண்ணீர் பாய்ச்சத் தேவையில்லை. வாழை, கரும்பு பயிரிடும்போது உபயோகப்படுத்தும் தண்ணீரில் கால் பங்கு இருந்தாலே போதும். அதிக ஆழம் உழத் தேவையில்லை.

  அதிக உரமும் போட வேண்டிய அவசியமில்லை. இதற்கு ரசாயன உரம் போடாமல் இயற்கை உரத்தை மட்டுமே போட்டால் போதும். ஊடு பயிராக பயிரிட இயலும். இதற்கு புழு, பூச்சி, வண்டுகள் வராது. பாசனத்துக்காக மற்ற வேலைகள் செய்ய ஆட்களை கூலிக்கு அமர்த்த வேண்டியதில்லை. மணற்பாங்கான இடத்திலும் வளரும்.

  மற்ற தானியங்களுக்கு அரசாங்கம் உரத்துக்காக மானியம் தருகிறார்கள். அதற்குப் பதில் சிறுதானியங்களை அதிகம் சாப்பிடும்போது, விவசாயிகள் அதிகம் பயிரிடுவார்கள். அரசாங்கம் மானியம் தருவதையும் வெகுவாக குறைக்க இயலும். பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற வறண்ட இடங்களில் வெள்ளை சோளத்தை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

  கோதுமையைவிட சோளத்தை அதிகம் பயிரிடுகிறார்கள்.அரிசி, கோதுமையைவிட மூன்றிலிருந்து ஐந்து மடங்கு புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் அதிகம் உள்ளவை சிறுதானியங்கள். நம் நாட்டில் சத்துகள் உள்ள உணவை உண்ணாமல் இருக்கும் சிறு குழந்தைகள் மிகவும் அதிகம். இவர்களுக்காக உலக சுகாதார நிறுவனம் பலவித உதவிகள் செய்கிறது. இவர்களுக்கு அளிக்கப்படும் சத்துமாவுக் கஞ்சியில் முக்கியமான இடம் வெள்ளை சோளத்துக்குத் தரப்படுகிறது.

  இதைக் கொண்டு உணவு தயாரிக்கும்போது, உடன் வைட்டமின் ‘சி’, ‘ஏ’ இருக்கும்படி தேர்ந்தெடுத்தாலே போதும். மற்ற சிறுதானியங்களைவிட சோளத்தில் தோல் அதிக கடினமாக இருக்காது. பலவிதமான உணவுகளை சுலபமாக சமைக்க இயலும். இது முழு சோளமாகவும், உடைத்த ரவை போலவும், மாவாகவும் கிடைக்கிறது. இதில் இட்லி, தோசை, பணியாரம், சத்து மாவு, ரொட்டி, பானம் போன்றவற்றை தயாரிக்கலாம். பிரியாணி, புலவு போன்றவை நன்றாக வராது.

  இனிப்பு வகைகளும் செய்ய இயலும். பாலெடுத்து காய்ச்சி பாதாம் சேர்த்தும் குழந்தைகளுக்குத் தரலாம். முளை கட்டியும் பயன்படுத்தலாம்.பஞ்சாபிகள் அரைத்து வைக்கும் தானிய மாவின் அளவைத் தருகிறேன். இதை அரைத்து வைத்துக்கொண்டால் தினமும் ‘ரொட்டி’ செய்ய இயலும். இப்போதும் பஞ்சாப் கிராமங்களில் உள்ளவர்கள் இதை உபயோகித்து மூன்று வேளையும் ரொட்டி செய்து சாப்பிடும் பழக்கம் உள்ளது.

  நம் நாட்டில் சத்துகள் நிறைந்த உணவை உண்ணாமல் இருக்கும் சிறு குழந்தைகள் மிகவும் அதிகம். இவர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்து வழங்கும் சத்துமாவுக் கஞ்சியில் முக்கியமான இடம் வெள்ளைசோளத்துக்கு உள்ளது.

  வெள்ளை சோள அடை

  என்னென்ன தேவை?

  வெள்ளை சோளம் - 2 ஆழாக்கு, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுந்து மூன்றும் சம அளவில் கலந்து - ž ஆழாக்கு, இஞ்சி -  அங்குலத் துண்டு, பச்சை மிளகாய் - 3, உப்பு - தேவைக்கு, துருவிய தேங்காய் -  கப்.

  எப்படிச் செய்வது?

  பருப்போடு சோளத்தையும் சேர்த்து ஒன்றாகவே 2 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை முழுவதும் வடித்து விடவும். மிக்ஸியில் முதலில் இஞ்சி, மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து ஊறியதைப் போட்டு கரகரப்பாக அரைக்கவும். கடைசி யில் தேங்காய் சேர்த்து லேசாக ஒரு தடவை திருப்பிக் கலந்தெடுக்கவும். இதை கனமான அடையாக சிறிதே எண்ணெயை விட்டு சுட்டு எடுக்கவும். சில மணி நேரம் முன் அரைத்தால் போதும். புளிக்க வைக்க வேண்டியதில்லை. இதிலேயே மற்ற சத்துகளைப் பெற பொடியாக நறுக்கிய கீரை, துருவிய கேரட், தேங்காய், சீஸ், பனீர் என குழந்தைகள் விரும்பும்படி கலந்தும் அடை செய்யலாம்.

  வெள்ளை சோள இட்லி

  என்னென்ன தேவை?

  வெள்ளை சோளம் 1 ஆழாக்கு, இட்லி அரிசி 1 ஆழாக்கு, வெள்ளை உளுந்து ஆழாக்கு, உப்பு - 1 டீஸ்பூன்.

  எப்படிச் செய்வது?

  மூன்றையும் தனித்தனியாக ஊற வைக்கவும். ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நுரைக்க அரைக்கவும். ஊறிய சோளத்தை முதலில் கிரைண்டரில் போட்டு லேசாக அரை பட்டதும் அரிசி சேர்த்து பதமாக எடுக்கவும். இரண்டு மாவையும் ஒன்றாக உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். மறுநாள் காலை இட்லி வார்க்கலாம். மிக ருசியாக இருக்கும்.
  மெத்தென்றும் வரும்.

  பஞ்சாபி தானிய ரொட்டி

  மாவு திரிக்க... என்னென்ன தேவை?

  வெள்ளை சோளம் - 2 கிலோ, கோதுமை - 1 கிலோ, கடலைப்பருப்பு -  கிலோ, கம்பு -  கிலோ, சோயாபீன்ஸ் -  கிலோ. எல்லாவற்றையும் ஒன்றாக
  மிஷினில் கொடுத்து மாவாகத் திரிக்கவும். சலிக்க வேண்டாம்.

  ரொட்டி செய்ய...

  தேவையான அளவு மாவை ஒரு அகலக் கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு சிறிதே உப்பு சேர்த்து இளம் சூடான தண்ணீர் ஊற்றிப் பிசையவும். சிறிது தளரப் பிசையவும். கைகளால் பெரியதாக உருட்டி நேரடியாக சூடான தோசைக்கல்லில் கனமான ரொட்டியாகத் தட்டவும். மத்தியில் மூன்று இடத்தில் துளையிட்டு சிறிது நெய் விட்டு சுடவும். மூடியால் மூடி வைத்து ஒரே புறம் சுடவும். திருப்பிப் போட வேண்டாம். மிதமான தணலில் நன்கு வேகும் வரை வைத்து சுட்டுப் பரிமாறவும்.

  வெள்ளை சோளத்தில் இருக்கும் சத்துகள்

  (100 கிராம் அளவில்)

  புரதம் - 10.04 கிராம்,
  கொழுப்பு - 1.9 கிராம்,
  தாதுக்கள் - 1.6 கிராம்,
  நார்ச்சத்து - 1.6 கிராம்,
  மாவுச்சத்து - 72.6 கிராம்,
  சக்தி - 349 கிலோ கலோரி,
  கால்சியம் - 25 மி.கிராம்,
  பாஸ்பரஸ் - 22 மி.கிராம்,
  இரும்புச்சத்து - 4.1 மி.கிராம்,
  வைட்ட மின் - ‘ஏ‘ கரோட்டின் - 47 மைக்ரோ கிராம்,
  தயாமின் - 0.37 மி.கிராம்,
  ரிபோஃப்ளோவின் - 0.13 மி.கிராம்,
  நயாசின் - 3.3 மி.கிராம்,
  ஃபோலிக் அமிலம் - 20.0 மி.கிராம்.

  இதில் இருக்கும் புரதம் முழுமையானது. 12 முக்கிய அமினோ அமிலங்களும் வெள்ளை சோளத்தில் உள்ளன.

  இதை தினமும் உண்ணும்போது நல்ல செல்கள் உற்பத்தியாகும். மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும். உடலில் உள்ள எலும்புகள் நல்ல பலத்துடன் இருக்கும். எடை போடாது. ரத்த அணுக்கள் உற்பத்தி சரிவர இருக்கும். சீக்கிரம் சோர்வடையாமல் இருக்கும் அளவுக்கு நல்ல மாவுச்சத்தும் நார்ச்சத்தும் கொண்டது. கர்ப்பிணிகளுக்கு மிக முக்கியத் தேவையான ஃபோலிக் அமிலம், புரதம், இரும்புச்சத்து எல்லாமும் ஒன்றிலேயே உள்ளது.


  Last edited by chan; 6th Apr 2015 at 12:30 PM.
  rsakthi1974 likes this.

 5. #35
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: தானியங்கள் மற்றும் பருப்புகளின் மருத்&

  வாவ் வரகு!

  3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வரகு என்கிற வரகரிசி இந்தியாவில் பயிரிடப்பட்டு வந்த சிறுதானியம். அப்போது நம் நாட்டில் இப்போது உள்ளதைப்போல
  எல்லோரும் சுற்றிலும் அமர்ந்து சாப்பிடுவதைப் போன்ற சாப்பாட்டு மேஜை பழக்கங்கள் கிடையாது. ஆங்கிலேயர் வந்த பிறகே இந்தப் பழக்கம் வந்தது.  மத்திய தரக் குடும்பங்களில் கீழே அமர்ந்து சாப்பிடும் பழக்கமே இருந்தது. ஓரளவு செல்வந்தர்கள், ஜமீன்தார்கள் போன்றவர்கள் மட்டும் தனித்தனி மேஜை நாற்காலிகளில் அமர்ந்து சாப்பிடுவர். ஓட்டல் என்று இல்லாதபோதும், வேறு விதமான உணவகங்கள் வந்தது எல்லாமே 17ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான். அப்போதே சிறுதானியங்கள் இருந்தன. அவற்றை உண்ட நம் முன்னோர் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.

  கைக்குத்தல், புழுங்கல் அரிசியை உண்டு ஆரோக்கியமாகவே வாழ்ந்தனர். விஞ்ஞான முன்னேற்றம் கண்ட பிறகு, பன்னாட்டு உணவுகள் நம் வீட்டு மேஜையை ஆக்கிரமித்த போது, விதவிதமான உணவுகளை ஓட்டல்களின் மூலம் உண்ண ஆரம்பித்த பிறகே, சிறிது சிறிதாக ஆரோக்கியக் குறைபாடுகள் வரத் தொடங்கின.இயற்கை முறையில் விவசாயம் குறைந்து பலவிதமான பூச்சிக்கொல்லிகள், ரசாயன உரங்கள் வந்தபின் மக்களின் ஆரோக்கியம் மேலும் சீரழிந்தது.


  உடல் உழைப்பு குறைந்தது. எப்போதும் ஒரே ஓட்டம். அதனால் மன அயற்சி, மன அழுத்தம் எல்லாம் அதிகமானதும் சிறுவயதிலேயே நீரிழிவு, இதய நோய்கள், கேன்சர் போன்ற கொடிய நோய்கள் அதிகரித்துவிட்டன. இதற்கு ஒரே தீர்வு நமது சாப்பாட்டு மேஜையில் அரிசி உணவைக் குறைத்து சிறுதானியங்களை உண்ண ஆரம்பிப்பதே! வரகை வரவேற்போம்!

  *வரகும் மற்ற சிறுதானியங்களைப்போல விதைப் பகுதிதான். இந்த சிறுதானியத்தை சுலபமாக நம் வீட்டுத் தோட்டத்திலேயே வளர்க்கலாம். அதிகத் தண்ணீரும் தேவையில்லை. புழு, பூச்சிகள் சீக்கிரம் வராது. இதற்காக தனியாக உரங்கள் போட வேண்டிய அவசியமில்லை.

  *தமிழில் வரகு, கன்னடத்தில் ஹர்கா, மலையாளத்தில் கூவரகு, ஹிந்தியில் கோட்ரா, தெலுங்கில் அறிகெலு, ஆங்கிலத்தில் கோடோமில்லெட் (Kudo millet) என்றும் அழைக்கப்
  படுகிறது.

  *வரகரிசியை அரிசிக்குப் பதிலாக சாதமாக வடித்து குழம்பு, ரசம், பொரியல், தயிர் சேர்த்து சாப்பிடலாம். 1 பங்கு வரகரிசிக்கு மூன்றிலிருந்து மூன்றரை பங்கு தண்ணீர் தேவைப்படும்.
  தண்ணீரை சூடாக்கிய பின் கொதி வரும்போது கழுவிய வரகரிசியை (தோல் நீக்கி சுத்தம் செய்யப்பட்டது) போட்டு, கலந்து விட்டு, மறுகொதி வரும்போது தணலைக் குறைத்து,
  மூடி, 7லிருந்து 10 நிமிடங்கள் வைத்தால், நன்கு வெந்துவிடும்.

  *அரிசியை பாலீஷ் செய்யும்போது பி-காம்ப்ளக்ஸ் நீங்கிவிடும். கீழே இருக்கும் விதைப்பகுதி நீக்கப்படும் என்பதால் நமக்கு வெறும் மாவுச்சத்து மட்டுமே கிடைக்கிறது. இந்த மாவுச்சத்து அதிகமாக உண்ணும்போது ‘டிரைகிளிசைரடு’ எனும் கொழுப்பாக மாற்றப்படும்போது சுலபமாக ரத்த அடர்த்தி ஏற்பட்டு இதய நோய்க்கும் அடி கோலுகிறது.

  வரகரிசியிலோ குறைவான மாவுச்சத்துதான். பசைத் தன்மை அறவே இல்லாதது. கொழுப்பை அதிகமாக்காது. நல்ல கொழுப்பைக் கொண்டது. அதனால்
  நீரிழிவும் இதய நோயும் வராமலிருக்க உதவி புரியும்.

  *அரிசியை பயன்படுத்திச் செய்யும் எல்லாவற்றையும் வரகில் செய்யலாம். ருசியாகவே இருக்கும். இட்லி, தோசை, அடை, பொங்கல், பணியாரம், சேவை, கலவை சாதங்கள், பிரியாணி, புலவு போன்றவை, பல வகை இனிப்புகள், லட்டு, அல்வா, பாயசம், அதிரசம், பொரித்த உணவுகளான முறுக்கு, வடை, பூரி, தட்டை உள்பட பல உணவுகளை செய்ய இயலும். வேற்று நாட்டு உணவுகளையும் வரகரிசியில் செய்ய இயலும்.

  *100 கிராம் தானியத்தில் நார்ச்சத்து கிட்டத்தட்ட 9 கிராம் அளவு உள்ளது. இந்த நார்ச்சத்து மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க உதவுவதோடு, மாதவிடாய் நின்ற பிறகு பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்று நோய் வராமலிருக்கவும் துணைபுரியும் என்பதை பரிசோதனைகள் மூலம் நிரூபித்துள்ளனர்.

  வெளிநாடுகளில் மலக்குழாயில் ஏற்படும் புற்றுநோய் அதிகம். அதைக் குறைக்க பலரும் இப்போது பலவித சிறு தானியங்களை உண்ண ஆரம்பித்துவிட்டனர். கல்லீரலில் படியும் கொழுப்பைக் குறைக்கும் தன்மை உடையது இந்த நார்ச்சத்து.

  *முக்கிய 12 அமினோ அமிலங்களில் 11 வரகில் உள்ளன. இந்த அமினோ அமிலங்கள்தான் புரதம் என்று சொல்லப்படுகின்றன. எப்போதும் தானியங்களுடன் பயறு / பருப்பு வகைகள் சேர்ந்தால்தான் முழுமையான புரதம் கிடைக்கும். அந்தப் புரதமும் அமிலத்தன்மையுடன் இருக்கும்போது அதிகமான நச்சுப்பொருட்களும் உடலில் உண்டாகும். கழிவுகளாக வெளியேற்ற உடல் அதிக வேலை செய்ய வேண்டும். ரத்தத்தில் உறிஞ்சப்பட காரத்தன்மையாக மாற்றப்படும்.

  ஆனால், சிறுதானியங்களில் உள்ளது காரத்தன்மை வாய்ந்தது. சுலபமாக ஜீரணமாகி ரத்தத்தில் சேரும். இந்த அமினோ அமிலங்களின் பங்கு மகத்தானது. மூளையின் செல்கள் நன்கு வேலை செய்ய, ரத்தத்தில் நைட்ரஜனை சரியான படி வைக்க, தசைகள், சதைகள் உருவாக, எலும்பு, மஜ்ஜை, பல்லின் எனாமல் உருவாக உதவுகிறது.

  தூக்கமின்மை, தலைவலி வராமலிருக்க உதவி புரியும். உடல் வளர்ச்சியில் இதன் பங்கு மிக அதிகம். உடலில் பல வேலைகள் நன்கு நடைபெற, கொலஸ்ட்ரால் குறைக்க, கொழுப்பு படிவதைத் தடுக்கவும் வல்லது.

  *நமது உடலில் சிறுகுடல், பெருங்குடலில் நன்மை தரும் நுண்ணுயிர் கிருமிகள் உள்ளன. அவற்றை அழிக்காமல் நன்மை தரும் குணம் வரகரிசிக்கு உள்ளது.

  *அதிக உயிர்ச்சத்துகள் கொண்டதால் சிறு குழந்தைகளுக்கும் நன்மை தரும்.

  * மாதவிடாய் பிரச்னை களை குறைக்கும். மூட்டுவலி, உடல் வலி வருவதை தடுக்கும். கண்களுக்கும் நன்மையே செய்யும்.

  *வரகில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான தயாமின், ரிபோஃப்ளோ வின், நயாசின் ஆகியன உள்ளன.

  *நயாசின் - ரத்தத்தின் அடர்த்தியை குறைக்கும். கொலஸ்ட்ரால் உருவாகாமல் தடுக்கும். மக்னீசியமும் நயாசினும் சேர்த்து ரத்தக்குழாய்க்கு விரிந்து சுருங்கும் தன்மையை அளிப்பதால் உயர் ரத்த அழுத்தம் வராமலிருக்க உதவும். மிக முக்கியமான ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளதால் செல்களின் அழிவைக் குறைத்து, கேன்சர் முதலான நோய்கள் வராமலிருக்க உதவுகிறது.

  *ஆஸ்துமா போன்ற அலர்ஜி ஏற்படாமல் தடுக்கிறது.

  *வரகில் உள்ள புரதம் தினையைவிட நல்ல புரதமாக கருதப்படுகிறது.

  இத்தனை நற்குணங்கள் உடைய வரகில் பலவித உணவுகளை சமைத்து, நமது சாப்பாட்டு மேஜையில் அதிக ஆரோக்கியமான, ருசியான உணவுகளைப் பரிமாறி நமது குடும்பத்தினர் என்றும் ஆரோக்கியமாக இருக்க உதவிடுவோம்!

  அரிசி பயன் படுத்திச் செய்யும் எல்லாவற்றையும் வரகில் செய்ய லாம். ருசியாகவே இருக்கும்.

  வரகரிசி வெந்தய தோசை

  என்னென்ன தேவை?

  வரகரிசி - 1 கப், புழுங்கலரிசி - 1 கப், உளுந்து- 1/4 ஆழாக்கு, வெந்தயம் - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - சுடுவதற்கு.

  எப்படிச் செய்வது?

  வரகரிசியையும் புழுங்கலரிசியையும் கழுவி தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும். வெந்தயத்தையும் உளுந்தையும் தனித்தனியே ஊற வைக்கவும் (5 மணி நேரம் முன்பே ஊற வைத்தல் நலம்). வெந்தயத்தை அரைக்கும் போதே கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீரை சேர்த்துக் கொண்டே நுரைக்க அரைக்கவும். கிட்டத்தட்ட 2 டம்ளர் தண்ணீர் ஊற்றலாம். உளுந்தைப்போல நன்றாக நுரைத்த பின் கிரைண்டரில் இருந்து வழித்தெடுக்கவும். வரகரிசியைத் தனியாக கரகரப்பாக அரைக்கவும். இரண்டையும் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

  *இதையே மறுநாள் வரை புளிக்க வைத்தால் இட்லியாக வார்க்கலாம்.

  *தோசைக்கு சிறிதே புளித்த தயிர் கலந்தால் 3 மணி நேரம் கழித்தபின் ஊற்றலாம். சிறிது கனமான ஊத்தப்பம்போல ஊற்றி சிறிதே எண்ணெய் விட்டு ஒரே பக்கம் மூடி வைத்து சுடவும்.
  மெத்தென்று மிக ருசியாக இருக்கும்.

  வரகரிசி பிரியாணி

  என்னென்ன தேவை?

  வரகரிசி - 1 ஆழாக்கு, தண்ணீர் - 2 டம்ளர், தயிர் - ரு கப், வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கவும்) உரித்த பூண்டு - 4, பச்சை மிளகாய் - 1, நீளவாக்கில்
  நறுக்கிய காய்கறிகள், உருளைக்கிழங்கு - 1, கேரட் - 1, பீன்ஸ் - 5, காலிஃப்ளவர் - ரு கப், உரித்த பட்டாணி - 50 கிராம், அரிந்த தக்காளி - 1, எண்ணெய் - தேவைக்கேற்ப, பிரியாணி இலை - 1, பட்டை, கிராம்பு, மராட்டி மொக்கு, அன்னாசிப்பூ - வகைக்கு 2, உப்பு - தேவைக்கு.தயிரோடு கலப்பதற்கு...

  தனியாத் தூள் - 1லு டீஸ்பூன், சீரகத் தூள் - லு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, மிளகாய்த் தூள் - லு டீஸ்பூன், மஞ்சள் தூள் - ரு டீஸ்பூன்.

  எப்படிச் செய்வது?

  1. தயிரைக் கடைந்து கூறப்பட்டுள்ள பொருட்களை அதில் கலந்து வைக்கவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கரம் மசாலாப் பொருட்கள் சேர்த்தபின் பூண்டு, மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. அதோடு நறுக்கிய தக்காளி, காய்கறிகள் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
  4. தயிரை சேர்த்து நன்கு கலந்துவிட்ட பின் அளந்த தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.
  5. கொதித்ததும் லேசாக வறுத்த வரகரிசி சேர்த்து கலந்து மூடி வைக்கவும்.
  6. குறைந்த தணலில் 7 நிமிடங்கள் வைத்தபின் மூடியைத் திறக்க, ஈரம் போகும்வரை வைத்திருந்து பிறகு சூடாக தயிர்ப் பச்சடியுடன் பரிமாறவும்.

  வரகில் மிக முக்கியமான ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளதால் செல்களின் அழிவைக் குறைத்து, கேன்சர் முதலான நோய்கள் வராமலிருக்க உதவுகிறது.

  வரகரிசி சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாதம்

  ஒரு பங்கு வரகரிசிக்கு 3 பங்கு தண்ணீரில் வேக வைத்து ஆறிய பின் உதிர்த்து விடவும்.சர்க்கரைவள்ளியை தோல் சீவி, துருவி, தண்ணீரில் போட்டு அதில் உள்ள மாவுத் தன்மையை நீக்க நன்கு அலசவும். சிறிதே எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்தால் நிறம் மாறாது.

  ஒரு கடாயில் தேவையான எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரி, கறிவேப்பிலை, 2 உடைத்த சிவப்பு மிளகாய், 1 அரிந்த பச்சை மிளகாய் சேர்த்து, துருவிய சர்க்கரைவள்ளியை தண்ணீரில் இருந்து நன்கு பிழிந்தெடுத்து துணியின் மீது பரப்பி அதிகத் தண்ணீரை நீக்கி இதில் சேர்க்கவும். நன்றாக வதங்கியதும் வேக வைத்த வரகரிசி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து சூடானதும் இறக்கவும். ருசியாக இருக்கும்.


  Last edited by chan; 7th Apr 2015 at 01:57 PM.

 6. #36
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal Benefits of Cereals and Grains - தானியங்கள் மற்றும் பருப்புகளின

  உடலுக்கு ஏற்ற ஒன்பது தானியங்கள்  நெல்:-


  உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகிறோம். அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்பவை குறிப்பிடத்தக்கவை. பச்சரிசி என்பது நெல்லைக் குத்தி அரிசி எடுத்து அப்படியே பயன்படுத்துவதாகும். நெல்லை முறையாக அவித்து குத்தி பெறுவது புழுங்கலரிசி.


  பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும். இதனால் உடல் பருமனாகும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.


  புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது. சம்பா அரிசி வகையில் சீரகச்சம்பா ஆரம்பநிலை வாத நோய்களை போக்க வல்லது. பசியை ஊக்குவிக்கும். ஈர்க்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம்கூடும். குண்டு சம்பா, மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ் சம்பா போன்றவை மருத்துவகுணம் நிறைந்தவை.


  சோளம்:-
  சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். மூலநோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.


  கம்பு:-
  கிராமங்களில் கம்பங்கஞ்சியும், கம்பஞ் சோளம் சாப்பிட்டவர்கள் மிக அதிகம். இது தாய் மார்களுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும்.


  கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. அரிசியைவிட பல மடங்கு சத்து மிகுந்த உணவு, ஜீரண சக்தி அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும்.


  சாமை:-
  சாமை உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்றது. மலச்சிக்கலைப் போக்கும். வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது. நீரிழிவு நோயாளிகள் கூட சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.


  வரகு:-
  நவதானிய வகைகளில் வரகும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.


  கேழ்வரகு:-
  தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. ராகி என்றும் சொல்வர். இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன.


  இது உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.


  கோதுமை:-


  அரிசியைவிட கோதுமையில் அதிகமான சத்துகள் உள்ளன. வட இந்திய மக்கள் சோதுமையை முழுநேர உணவாகப் பயன்படுத்துகின்றனர். எண்ணை நெய்விடாது சப்பாத்தியாக செய்து சாப்பிடுவது நல்லது. உடல் நலனுக்கு உகந்ததாகும்.


  கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது.


  பார்லி:-
  குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி. நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பர், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது. நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலை தடுக்கும். வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரிய உதவும். குடல் புண்ணை ஆற்றும். இருமலைத் தணிக்கும். எலும்புகளுக்கு உறுதி தரும்.


 7. #37
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal Benefits of Cereals and Grains - தானியங்கள் மற்றும் பருப்புகளின&

  தானியங்களின் மருத்துவ பயன்கள்:-


  பச்சரிசி :- இது பலத்தைத் தரும். பித்தத்தை தணிக்கும். வாதத்தை விருத்தி செய்யும். பத்தியத்திற்குதவாது.

  புழுங்கலரிசி :- இது பாலர்முதல் முதியவர் வரை அனைவருக்கும் நோயாளிகளுக்கும் பொருத்தமான உணவாகும். பத்தியத்திற்காகும்.

  கோதுமை :- இது பலம், சுக்கிலம், பித்தம் இவைகளை விருத்தி செய்யும். வாதத்தையும், பிரமேகத்தையும் நீக்கும். ஷயம் மது, மேகம் முதலிய நோயினருக்கு நல்ல உணவாகும்.

  சோளம்:- தினவு, வீரணம், கரப்பான் முதலியன அதிகரிக்கும் நல்ல மருந்தும் கெடும் .

  கேழ்வரகு:- இது வாதம் அல்லது பித்தவாதத்தை உண்டாக்கும். பலம் எற்படும். இது கபதேகிகளுக்கு சிறந்த உணவாகும்.

  கம்பு:- இதனால் சொரி, சிரங்கு உண்டாகும். ஆனால் உடலுக்கு பலத்தைதரும். சரீரத்தின் வெப்பத்தைத்தணிக்கும் குளிர்ச்சி என்பர்.

  கடலை :- இது வயிற்றுவலி வயிற்றுப்புரம்,மந்தம், கிரகணி, மயக்கம், மூலவாயு முதலியவைகளை உண்டாக்கும். மருந்தின் குணத்தை கெடுக்கும்.

  உளுந்து :- இது பித்தாதிக்கம், எலும்புறுக்கி முதலியவைகளை நீக்கும். கபவாதம் இடுப்பிற்கு பலம். வீரியவிருத்தி முதலியவைகளை உண்டாக்கும்.

  துவரை :- இது சாதாரணமாக உடலுக்கு பலத்தைத்தருவதுடன் இது சிறந்த பத்திய உணவாகும்.இது சுரம், சன்னி , முதலிய நோயிலும் , மிக மெலிந்தவர்களுக்கும், கடும் பத்தியர்களுக்கும் உதவும்.

  பச்சைப்பயறு:- இது பித்தத்தை நீக்கும், வாய்வை உண்டாக்கும் சீதளமென்பர்.

  பட்டாணி :- இது நுரையீரலுக்கும், இருதயத்திற்கும் வலிவைத்தரும். ஆனால் வாய்வையும்,மந்தத்தையும், உண்டாக்கும்.

  மொச்சை :- திரிதோஷணங்களை விருத்தி செய்யும். உஷ்ணத்தை தணிக்கும், மலத்தைப்பெருக்கும்.

  பார்லியரிசி:- இது சிறுநீரைப்பெருக்கும், மந்தபேதியைக்கட்டும், பசியைத்தணிக்கும். சுரம் முதலிய நோயாளிகளுக்கு கஞ்சிக்கு உதவும்.


 8. #38
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Medicinal Benefits of Cereals and Grains - தானியங்கள் மற்றும் பருப்புகளின&

  உளுந்து

  உளுந்தை ஆங்கிலத்தில் பிளாக் கிராம் (Black gram) என்று சொல்வார்கள். அதையே தோல் நீக்கி இரண்டாக உடைத்தபின் டிஹஸ்க்டு (Dehusked) என்று கூறுவதை விட்டு விட்டு பலரும் ஹிந்தியில் கூறப்படும் ஊரத் (Urad) என்று அழைக்க ஆரம்பித்து விட்டனர். மேலே கருப்பு நிறமாக இருப்பதனால் இந்தப் பெயரும் சொல்லப்பட்டது. இதுவும் பருப்பு வகையைச் சார்ந்தது. சுண்டல் வகையைச் சேராது. ஆங்கிலத்தில் பல்ஸஸ் (Pulses) என்று சொல்வார்கள்.
  லெக்யூம்ஸ் (Legumes) என்பது சுண்டல் வகையைச் சாரும்.

  உலகின் பல நாடுகளில் உளுந்தைப்பற்றி தெரியாது. இந்தியாவில் எத்தனைநூற்றாண்டுகளாக உபயோகிக்கிறோம் என்பதற்கான குறிப்பே இல்லை. உளுந்து இல்லாமல் ‘இட்லி’யை நினைக்கஇயலுமா? வடைக்கு சமமான ஒன்றை எங்காவது பார்க்க முடியுமா?நமது முன்னோர் வழிவழியாககற்றுக் கொடுத்ததைத்தான் நாம்இன்றும் செய்கிறோம். இட்லியைப் போல மிகவும் ஆரோக்கியமான உணவை உலக அளவில் எங்குமே காண இயலாது. மிகச்சிறிய குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை சுலபமாக ஜீரணமாகும் உணவு. இதற்குக் காரணம் இதில் உள்ள உளுந்துதான்.

  நம் முன்னோர் பெண் குழந்தைகள் பூப்படையும்போது உளுந்தைத்தான் கொடுத்தார்கள். சிறந்த கரு உருவாக தேவையான எல்லாமே உளுந்தில்இருந்ததை அவர்கள் உணர்ந்தார்கள். ‘உளுந்தங்களி’யை தமிழ்நாட்டைத் தவிர, வேறு எங்கும் யாரும் கண்டுபிடிக்கவில்லை. பூப்படைந்த பெண்களுக்கு மாதாமாதம் மாதவிலக்கு சரியானபடி வருவதற்கு உதவி புரியும் என்பதால் இப்பழக்கம் இருந்தது. மாதவிடாயில் எந்தப் பிரச்னையும் நமது நாட்டில் பெண்களுக்கு எப்போதும் அதிகம் இருந்தது இல்லை. இப்ேபாது இப்பழக்கம் அறவே நின்று போனதால், சிறு வயதிலேயே பூப்படைந்த பின்னும், திருமணமாவதற்கு முன்பே பலருக்கும் கர்ப்பப்பையில் கோளாறு வருவதைப் பார்க்கிறோம்.

  உளுந்தில் கால்சியம், புரதம்,இரும்புச்சத்து ஆகியவற்றோடு, கரையும் தன்மை உள்ள நார்ச்சத்து, நல்ல கொழுப்பு, எல்லாவிதமான தாதுக்கள், பி-காம்ப்ளெக்ஸ், வைட்டமின்-‘ஏ’ மட்டுமல்ல... ஃேபாலிக் ஆஸிட், கோலின் போன்ற முக்கிய வைட்டமின்கள் உள்ளன.தோலுடன் கருப்புஉளுந்தாக இருக்கும்போது கரையும் தன்மை உள்ள நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இதயத்துக்கும் நீரிழிவுக்காரர்களுக்கும் நல்லதே செய்யும். கொலஸ்ட்ரால் குறைக்கும் நல்ல கொழுப்பு இதிலும் உண்டு.
  நமது வீட்டுப் பெரியவர்கள் கருப்பு உளுந்தை ஊற வைத்து தோலெடுத்து பிறகே இட்லிக்கு அரைத்தார்கள். அந்த தோலை வீட்டிலே வளர்க்கும் கால்நடைகளுக்கும் தந்ததால் பாலும் அதிகமான கால்சியம், புரதம் நிறைந்ததாக இருந்தது.

  மற்ற பருப்பு வகைகளுக்கு இல்லாத ஒன்று... இதில் உள்ள அராபினா கேலக்டான் என்ற அரிய சர்க்கரை. ஊற வைக்கும்போதே காற்றுக்குமிழ்களை சிறைப்
  படுத்தும் திறன் உடையது. மாவை அரைத்தபின் காற்றை அதிலேயே தக்க வைத்துக் கொள்ளும். அதற்குத் தேவையான ஒரு பாக்டீரியா இதில் இயற்கையாகவே
  உள்ளது. இட்லி பூப்போல மெத்தென்று வருவதற்கும் வடை மிருதுவாக வருவதற்கும் இந்த பாலிமர்தான் காரணம்.

  கருப்பு உளுந்தில் இது அதிகம். தோல் நீக்கி கிடைக்கும் உளுந்தில் இத்திறன் கொஞ்சம் குறையும். அதனாலேயே இட்லி, தோசைக்கு முன்பைவிட அதிகம் போட வேண்டி உள்ளது.தோசை கண்கண்ணாக வருவதற்கும் இந்தத் தன்மைதான் காரணம்.உளுந்தைத் தவிர வேறெந்த பருப்பைசேர்த்து அரைத்தாலும் இத்தன்மை இல்லாததால் நன்றாக வராது. நம் நாட்டு சீதோஷ்ணநிலையில்தான் உளுந்துநன்றாக வளரும். வட இந்தியர் அவர்களது சோள ரொட்டிக்கு உளுந்து சேர்த்த ‘தால்’ செய்வது இன்றும் பழக்கமாகஉள்ளது. சிறிதே உண்டாலும் மதியம் வரை நன்றாக வேலை செய்ய இது உதவும்.

  ஆந்திராவில் ‘மின்னப்ப சுண்ணுண்டலு’ எனப்படும் கருப்பு உளுந்தில் செய்யும் லட்டு மிகவும் பிரசித்தம். அதோடுவெல்லமும் சேர்த்து செய்யும்போது
  இரும்புச்சத்தும் அதிகமாவதால், ரத்த சோகை வராமலிருக்க இதைத் தரலாம். கால்சியம் சத்துக்குறைவால் எலும்புகள் பலமிழந்த நிலை இப்போது மிக அதிகமாகி விட்டது. இதைப் போன்ற நல்லஉணவுகளை சரியாக எடுத்துக் கொள்ளாததும் ஒரு காரணம். காபி, டீ, மதுபானங்கள், சிகரெட், கோக் போன்ற பானங்கள்
  அதிகம் எடுத்துக் கொள்ளும்போது கால்சியம் சரிவர உறிஞ்சப்படாமல் போகிறது. சரியான நேரத்தில் சரியான உணவைத்தேர்ந்தெடுத்து சாப்பிடும்போது இது போன்ற பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

  உளுந்தை ஊற வைத்து அரைத்து இட்லி, தோசைக்கு புளிக்க வைக்கும்போது பி-காம்ப்ளெக்ஸ் சத்து அதிகமாகிறது. புரதம் சுலபமாக ஜீரணமாகும் நிலைக்கு வரும். இத்தனை நற்குணங்கள் நிறைந்த உளுந்துக்கு ஈடு இணையான உணவுப்பொருள் வேறு எங்குமே இல்லை. இதை சரிவரப் பயன்படுத்தி முழுப் பயனையும் பெறலாமே!

  உளுந்தங்களிபூப்படைந்த பெண்கள் மட்டுமின்றி வீட்டில் உள்ள அனைவருமே இதைஅடிக்கடி சாப்பிடலாம்.முழு கருப்பு உளுந்து 1/2 ஆழாக்கு, 1/2 ஆழாக்கு குண்டு வெள்ளை உளுந்து இரண்டையும் சேர்த்து கடாயில் சிவக்கும் வரை வறுக்கவும். அதோடு, 1 டேபிள்ஸ்பூன் லேசாக வறுத்த பச்சரிசியைச் சேர்த்து மாவாகத் திரித்து சலிக்கவும். இந்த மாவில் இருந்து 1½ மேஜைக்கரண்டி அளவை எடுத்து, 1 டேபிள்ஸ்பூன் நெய்யில் நன்கு வறுக்கவும். கூழ் போன்ற பதத்தில் வரும். இன்ெனாரு பக்க ஸ்டவ்வில்2 சுக்கு கருப்பட்டியைத் தூளாக்கி 1 டம்ளர் (200 மி.லி.) தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். நன்கு கொதித்த பிறகு வறுத்த மாவில் ஊற்றி அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும்.

  தேவைப்பட்டால் நெய்/நல்லெண்ெணய் சேர்க்கலாம். நன்றாக வெந்ததும் பளபளவென அல்வா பதத்தில் இருக்கும்போது இறக்கிப் பரிமாறவும்.

  நம் முன்னோர் பெண் குழந்தைகள் பூப்படையும்போதுஉளுந்தைத்தான் கொடுத்தார்கள். சிறந்த கரு உருவாக தேவையான எல்லாமே உளுந்தில் இருந்ததை அவர்கள் உணர்ந்தார்கள்.‘உளுந்தங்களி’யை தமிழ்நாட்டைத் தவிர, வேறு எங்கும் யாரும் கண்டுபிடிக்கவில்லை!

  (சத்துகள் பெறுவோம்!)மின்னப்ப சுண்ணுண்டலு (முழு கருப்பு உளுந்து லட்டு)1 ஆழாக்கு தலைதட்டிய கருப்பு உளுந்துடன் 1 டேபிள்ஸ்பூன் வெள்ளை குண்டு உளுந்தைச் சேர்த்து கடாயில் சிவக்கும் வரை வறுக்கவும். (கருப்பு உளுந்தை மட்டும் போடலாம். ஆனால், வறுக்கும்போது பதம் சரிவர தெரியாமல் போகலாம்) நல்ல மணம் வரும் போது இறக்கி ஆறவிட்டு மிக்ஸியில் பொடி செய்யவும். 1/2 ஆழாக்கு சர்க்கரையுடன் 1/2 ஆழாக்கு மெலிதாக சீவிய வெல்லம் சேர்த்து மிக்ஸியில் ஒன்றாகப் பொடிக்கவும். இதை உளுந்து மாவுடன் சேர்த்து உருக்கிய நெய்யைத் தேவைப்படும் அளவில் ஊற்றி உருண்டைகள் செய்யவும்.

  பொதுவாக இதோடு கொட்டை வகைகளைச் சேர்ப்பது இல்லை. விருப்பப்பட்டால் பொடியாக அரிந்த பாதாம், உரித்த வெள்ளரி விதையை நெய்யில் வறுத்துச் சேர்த்தால் அதிக ருசியுடன் இருக்கும்.

  மலாய் தால்

  முழு கருப்பு உளுந்து 1 ஆழாக்குகோபுரமாக அளந்து எடுக்கவும். 7 பல்லு பூண்டு உரிக்கவும். 1 அங்குலத்துண்டு
  இஞ்சியைத் தோலெடுத்து ெல்லிய நீளத்துண்டுகளாக நறுக்கவும். உப்பு, மிளகாய்தூள் அவரவர் விருப்பப்படி சேர்க்கலாம்.பிரஷர் பானில் சிறிது நெய் விட்டு பூண்டை வதக்கிய பின் தண்ணீர் விட்டு இஞ்சி, கழுவிய உளுந்து சேர்க்கவும். உப்பு, மிளகாய் தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் மூடியை மூடி வெயிட் வைத்து முதல் விசில் வந்ததும் தணலைக் குறைக்கவும்.

  15 நிமிடங்கள் வெந்தபின் அடுப்பை அணைக்கவும். மூடியைத் திறந்த பிறகு சிறிது நேரம் கொதிக்கவிட்டு நன்கு மசிக்கவும். நன்கு விழுதானபின் சிறிதளவு கடைந்த பாலேடு சேர்த்து 2 நிமிடங்கள் அடுப்பில் வைத்து நன்கு கலந்து விட்டு இறக்கவும்.பொடியாக நறுக்கிய வெங்காயம்,2 பச்சை மிளகாய் (வட்ட வடிவில் நறுக்கியது) மற்றும் சிறிது சீரகத்தை நெய்யில் தாளித்து வதக்கி பருப்பில் கொட்டவும். சூடாகப் பரிமாறவும். எலுமிச்சைப் பழத் துண்டங்கள், பொடியாக அரிந்த வெங்காயத்துடன்
  பரிமாறலாம்.

  ஹோட்டலில் எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் இந்த ‘தால்’ செய்வது எளிது. சப்பாத்தி, நாண், குல்ச்சாவுடன் பரிமாறலாம்.
  இந்த பருப்பிலேயே ஊற வைத்த ராஜ்மா பீன்ஸ், கருப்பு மசூர் தால், பாசிப்பயறு சேர்த்து செய்வதை ‘தால் மக்கானி’ என்று கூறுவர். இதற்கு வதக்கும்போதும், கடைசியிலும் வெண்ணெய் சேர்ப்பர்.loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter