Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 1 Post By chan
  • 2 Post By chan

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் ஆளி விதை


Discussions on "உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் ஆளி விதை" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் ஆளி விதை

    உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் ஆளி விதை (Flax seed/linseed)

    பார்பதற்கு ஆளி விதை, கொள்ளு போன்று பிரவுன் நிறத்தில் இருக்கும் .

    பண்டைய காலத்தில் இந்த ஆளிவிதையை உடையாக பலர் அணிந்து வந்திருக்கின்றனர். பருத்தி பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு லினன் துணிகள் இந்த ஆளி விதையில் இருந்து உற்பத்தி செய்யபட்டிருகின்றன.

    பிற தாவர உணவுகளை விட 75 முதல் 800 மடங்குகள் அதிக அளவிலான lignans ஆளி விதையில் உள்ளன.

    ஆளி விதையில் எளிதில் கரையக் கூடிய மற்றும் திடமான நார்ச்சத்துக்களும் நிரம்பியுள்ளன .

    ஆளி விதையில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல்வேறு குணங்கள் உள்ளன அவற்றில் முக்கியமானவை
    ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்பு அமிலங்கள் …இவை இதயத்திற்கு உகந்தவை

    உடலில் தேவையற்ற கொழுப்பை கரைத்து /குறைத்து எடையை சீராக வைக்க உதவுகின்றன .

    ஒரு தேக்கரண்டி ஆளி விதையில் 1.8 கிராம் அளவிற்கு ஒமேகா-3 உள்ளது.

    லிக்னான்ஸ் (Lignans)ஆளி விதையில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆக்ஸிஜன் எதிர்ப்பு குணங்கள் உள்ளன .

    மாதவிடாய் சுழற்சியை சீராக வைக்க உதவுகிறது ஆளி விதை . மேலும் அந்நாட்களில் ஹார்மோன் மாற்றத்தால் பெண்களுக்கு ஏற்படும் எரிச்சல் hot flash ஆகியவற்றை குறைக்கவும்இந்த விதைகள் உதவுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன
    anti inflammatory குணம் என்பது நாளங்களில் கட்டிகள் வாதம் அழற்சி உருவாகாமல் தடுப்பது ..


    மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றை எதிர்த்து செயல்படும் திறன்கள் இந்த ஆளி விதைக்கு உள்ளன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன .

    ஆளிவிதையின் சிறப்பு !
    இதனை ஒன்றிண்டாக உடைத்து மாவாக சமையலில் சேர்த்து சாப்பிட வேண்டும்

    அப்படியே சாப்பிடக்கூடாது .இதனை சமைக்கும்போது பிசுபிசுவென கொழ கொழப்பு தன்மையுடன் வரும்
    இந்த தன்மை குடலுக்கு மற்றும் ஜீரணத்திற்கு மிகவும் நல்லது. எளிதில் சீரணமாகி மலசிக்கல் ஏற்படாமல் மற்றும் கழிவுகளை துப்புரவு செய்து விடுகின்றது .

    இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீர் செய்கிறது .
    இதனை புளியோதரை மற்றும் வற்றல் குழம்பு செய்யும்போது சற்று வறுத்து பொடியாக கலந்து சமைக்கலாம் .

    மேலும் ப்ரெட் செய்யும்போது இதன் அரைத்த மாவை ப்ரெட் மாவுடன் கலந்து ப்ரெட் செய்யலாம் .வெளிநாட்டில் இந்த ரொட்டி பிரபலம் .linseed bread என்பார்கள் .

    சத்து மாவு கஞ்சி செய்யும் போது ஒரு கரண்டி ஆளிவிதைகளை வறுத்து அரைத்து சேர்க்கலாம் .
    முக்கிய குறிப்பு

    எந்த உணவாக இருந்தாலும் அளவுடன் உண்ண வேண்டும் ..புதிய உணவுகளை உண்பதற்கு முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது .

    மேலும் கர்ப்பிணிகள் ,குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் ஈஸ்ட்ரோஜன் அளவை ஆல்டர் செய்யும் குணமுள்ள உணவுகளை தவிர்த்தல் நலம்.




    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் ஆளி விதை-flax-seed.jpg   உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் ஆளி விதை-flax-seed1.jpg  
    kkmathy likes this.

  2. #2
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் ஆளி விதை

    ஆளி விதையின் அற்புதமான மருத்துவ குணங்கள்!


    ஆளி விதையில் ஊட்டச்சத்துடன், மருத்துவ குணங்களும் அதிக அளவில் காணப்படுகின்றன.

    இவை உடலுக்கு சீரான வெப்பம் அளிக்கின்றன. இந்த விதையை பொடி செய்து, போதுமான அளவு நீருடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ஆளி விதை எடுத்துக் கொள்ளும் அளவு, நீங்கள் உண்ணும் உணவின் அளவைப் பொறுத்தது. வறுக்கும் போது இந்த விதைகள் மொறுமொறுப்பான மற்றும் சுவையாக இருக்கின்றன.

    இது உங்கள் பகுதிகளில் உள்ள உள்ளூர் சூப்பர் மார்க்கெட் அல்லது சாலையோர பலசரக்கு கடைகளில் கிடைக்கும்.

    கொழுப்பை குறைக்கும்

    அதிக நார்ச்சத்து கொண்ட ஆளி விதை கொழுப்பைக் குறைக்க பயன்படுகின்றது. உங்கள் இரத்த சர்க்கரை அளவை நிலையாக்கும். குடல்கள் நன்கு செயல்பட உதவும்.

    அதிக அளவில் ஒமேகா-3

    இரண்டு தேக்கரண்டி ஆளி விதை தரும் சிறந்த பரிசு குறுகிய சங்கிலி ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள். பொதுவாக இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மீன் எண்ணெய்யில் உள்ளன.

    இதய நோய், மூட்டுவலியை குணப்படுத்தும்

    ஆளி விதை ஆல்பா லினோயிக் அமிலங்களைக் கொண்டுள்ளது. இந்த அமிலம் நாள்பட்ட இதய நோய், மூட்டுவலி, ஆஸ்துமா, நீரிழிவு நோய் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும்.

    மேலும் இது பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிராக உங்கள் உடலை பாதுகாக்க உதவுகிறது.

    மாதவிடாய் பிரச்சனையை தீர்க்கும்

    ஆன்டி- ஆக்ஸிடன்ட் மற்றும் பைட்டோ-கெமிக்கல் போன்றவை ஆளி விதையில் வளமாக உள்ளது.

    இதனால் இவை கருத்தரிப்பு பிரச்சனைகளை நீக்குவது, மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைப்பது மற்றும் மாதவிடாய் பிரச்சனைகளை குறைக்க பயன்படுகிறது.

    anitprab and Dangu like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter